Tag Archives: Party

2 நாள் அகில இந்திய வேலைநிறுத்தம்: பாரத் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்திரமான பென்சன் + ஜாலியான சீட் தேய்ப்பு உத்தியோகம் + வேளா வேலைக்கு கை நிறைய சம்பளம் என்று இருந்தாலும் ஒழுங்காக உழைக்கும் கால் செண்டர்காரர் மேல் பொறாமை + பிசினெஸ் துவங்க இயலாத கையாலாகாத்தனம் + பங்குச்சந்தை விளையாடத் தெரியாத பயம் எல்லாம் இன்னொரு ஸ்டிரைக்கிற்கு கால்கோள் இட்டிருக்கிறது.

இரண்டு நாள் விடுமுறை… அப்படியே வாரயிறுதி! இந்தியா ஒரு கொண்டாட்டம்.

முன்பு எழுதிய பதிவுகளில் இருந்து:

1. நியு யார்க் நகரில்: கார் கண்ணாடி மீது ஓங்கித் தட்டுகிறார்களே, என்று அகஸ்மாத்தாக் கவிழ்ந்த தலை கலவரத்துடன் தூக்கினால், மிக மோசமாக பிறப்பை குறித்துத் திட்டப்படுவீர்கள். ‘உன்னால் என்னை வசை பாடத்தானே முடியும்!‘ என்று அலட்சிய புன்னகை தவழ்ந்த மேலாளர் ஒருவரின் ஹ்யுண்டாய், ‘7-ஜி ரெயின்போ காலனி‘யில் கிழிப்பாரே… அந்த மாதிரி கூரிய கத்தியால் உரசப்பட்டது. யூனியனின் சக்தியை நம்பும் போலிஸ் காரர்களும், உள்ளே இருக்கும் நபரை கிழிக்காதவரை, ‘உனக்கு வேணும்டா‘ என்று பரபிரும்மமாக இருப்பார்.

மேலும்


2. ஃப்ரான்ஸ் அமெரிக்க ஸ்டைல் பொருள்முதல்வாதத்தை முன்னிறுத்துவதில்லை. தொழிலாளர்களுக்கு ‘உறுதியான நிலையான நீடித்த வேலை’ என்று நிறுவனங்களை அச்சுறுத்துவதால், புதியவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள மேலாளர்கள் தயங்குகிறார்கள்.
தேவையான போது தொழிலாளர்களைக் கூட்டவும், குறைக்கவும் அமெரிக்காவில் இருக்கும் சட்டங்கள் எளிதாக உள்ளன. ஆனால், ·ப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இந்த வசதி இல்லாததால், நிறுவனங்களுக்கு கடும் மனத்தடை ஏற்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ந்தாலும் தொழிலாளர்களை நீக்க முடியாத நிலை. நீக்கினால், நஷ்ட ஈடாக பெரும்பணம் கொடுத்தனுப்பவேண்டிய மொகஞ்சதாரோ காலத்து சட்டதிட்டங்கள்.

மேலும்


3. காலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.

இப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்?

ஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.

நான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.

இப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்?

அதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க டாலரில் 100,000தான் கிடைக்கிறது.

மேலும்

படத்தொகுப்பு

Cartoons: Last Week News

This gallery contains 9 photos.

How to make Badri Seshadri a Tamil Nadu politician?

பத்ரியை பதிவுலகில் அறியாதவர் இலர். அவரை தமிழக அரசியல்வாதி ஆக்குவது எங்ஙனம்?

1. வண்ணச் சொக்காயை விட்டு வெள்ளை சட்டை; அரைக்கால் டவுசரை விட்டு, கரை வேட்டிக்கு மாறவேண்டும்.

2. புதிய தலைமுறை, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சன் செய்திகளில் வரவைத்துக் கொள்ள வேண்டும்.

3. அதன் தொடர்ச்சியாக புதிய சேனல் துவங்க வேண்டும்.

4. குஷ்பு போல் புரட்சிகரமான கருத்துகள் சொன்னால் போதாது; திருமா போன்றவர்களிடமிருந்து மிரட்டல்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

5. நல்ல தமிழில் பேசுவதிற்கு பதிலாக பக்கா லோக்கல் தமிழில் பண்பாட்டுடன் உரையாட வேண்டும்.

6. அலைக்கற்றை, அயோத்தியா என்று இதுவரை எழுதியவற்றை அழித்துவிடவேண்டும்.

7. அழித்தவுடன், அதன் துணுக்குகளை வெகுசன ஊடகங்களான விகடன், குங்குமத்தில் வரவைக்க வேண்டும்.

8. தமிழ் பேப்பரை மாலை நாளிதழாக்கி மாயவரத்தாரையோ மருதரையோ மாஸ் தலைப்பு தூண்டில் உற்பத்தியாளராக்கி தேநீர் நிலையங்களில் சூடு பறக்க வேண்டும்.

9. ’அரசியல்வாதி ஆவது எப்படி’ என்று புத்தகம் அச்சிடக் கூடாது.

 

Party with Superstar Rajinikanth: 80s Actor, Actress Alumini Meet

வாலிபம் – வளப்பம் – வணிகம்

அமெரிக்காவின் புதிய தலைமுறைபணக்காரரின் அலுப்பு :: The Phoenix > Lifestyle Features > Living beyond their means?: “The go-go ’80s have receded into the oh-no aughties, but not everyone has gotten the memo.”

ஏற்றிவிடுவதில் அமெரிக்காவின் கெட்டிக்காரத்திற்கு நிகர் கிடையாது. இந்தியாவில் காதலில் மட்டுமே ஊக்க வார்த்தை கொண்டு நிரப்பும் நண்பர் உலகம் என்றால், இங்கே பள்ளியில் துவங்கி பெற்றோர் வரை எல்லோருமே ‘உன்னால் முடியும் தம்பி’ உதயமூர்த்திகள். இப்படி உசுப்பேற்றியே உருப்படாமல் போனதின் குணச்சித்திரமாக Seinfeld தொடரின் ஜார்ஜ் பாத்திரம், நடப்பு ஆண்டில் பட்டதாரியானவரின் முன்னோடியாக காணப்படுகிறார்.

இந்த வருடம் கல்லூரியை முடித்தவர் என்ன செய்கிறார்?

  • ஃப்ளிக்கரில் புகைப்படம் ஏற்றி, ட்விட்டரில் இருக்கும் இடத்தை சொல்லி, நாளொன்றுக்கு எட்டு டாலர் பொக்கீடில் உலகம் சுற்றக் கிளம்புகிறார்.
  • இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி, மேற்படிப்புக்கு சென்று விடுகிறார்.
  • முதலீட்டு தேவதைகளின் துணை கொண்டு, சொந்தமாக வெப் 3.0 நிறுவனம் துவங்குகிறார்.
  • அப்பாவின் கோடை வாசஸ்தலத்தில் ஆறு மாசம்; அம்மாவின் இரண்டாவது விவாகரத்தில் கிடைத்த ஐரோப்பிய வீட்டில் ஆறு மாசம் தங்க ஆரம்பிக்கிறார்.
  • மருத்துவத்துறையில் நர்ஸ், உள்நாட்டு பாதுகாப்பு, ஆசிரியப் பயிற்சி என்றெல்லாம் சீக்கிரமே அலுக்கும் வேலையைப் புறக்கணித்து, சிரம பரிகாரம் எடுக்கிறார்.

மேற்கத்திய உலகில் வேலை எப்போதுமே அவசியமாக ஒன்றாக இருந்ததில்லை. சமூக அந்தஸ்து செய்யும் தொழிலினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பொருளாதார அந்தஸ்து என்பது ரஜினி படம் மாதிரி – சில சமயம் அமோகமாக சோபிக்கும்; சில சமயம் பாபா ஆகி விடும்.

இந்தியாவிலும் இந்தத் தலைமுறையினரின் எண்ணம் இவ்வாறே உள்ளது. “என் அண்ணனைப் போல் எனக்கு குழந்தை, குட்டி கிடையாது. அப்பாவை போல் பிடிக்காத வேலை செய்யப் போவதில்லை. வாலிபம் இருக்கும்போதே வளப்பமாக இல்லாவிட்டாலும், ஆடிப் பாடி கொண்டாடுவோம்” என்னும் நிகழ்காலத்தைக் கொண்டாடுபவர்கள்.

எனக்குக் கிடைக்கும் ஊழியத்தை விட, மாதா மாதம் சம்பளம் தரும் சம்பாத்தியத்தை விட, நான் விரும்பி செய்ய நினைப்பதை — அன்றாடம் பணியாக அமைவதே லட்சியம் என்கிறார்கள்.

நாலு நாள் குண்டி காஞ்சா பவுசும் பராக்கிரமும் தெரியவரும்.

வறுமையின் நிறம் சிகப்பு நிஜ வாழ்க்கையின் பகிடி :: iowahawk: Hot New Trend: Carefree Hipsters Go For Funemployment, Starve-cation: Jobless jitters? Not for these young folks, who are embracing idleness and finding fulfillment in local Del Taco dumpsters.

தொடர்புள்ள முந்தைய பதிவு: வேலையில்லாதவன்தான்! வேலை தெரிஞ்சவன்தான்?

கொடூர மொக்கை

Irrestible-billboard-Ads-Banners-Posters-Glade-detergent-scent-Catchyநன்றி: குங்குமம்

ஒருத்தருக்கு பெரிய வயறு.

அதுக்காக டாக்டர்கிட்ட போறாரு.

டாக்டர் அவரை சொட்டுநீலம் குடிக்கச் சொல்றாரு.

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்னா சொட்டு நீலம் குடிச்சா, பல் எல்லாம் நீலமா மாறும். அதாவது ப்ளூடூத்!

ப்ளூடூத்ங்கறது ‘வயர்’லெஸ் ஆச்சே!

Campaign Biodata: Tamil Murasu Thala Datasheets

பெயர் : சிரஞ்சீவி
பிறந்த தேதி : 22-8-1955 (வயது 53)
தலைவர் : பிரஜா ராஜ்யம்
கட்சி தோற்றம் : 100 நாளை தாண்டிவிட்டது
மாநிலம் : ஆந்திரா
இதற்கு முன் : நடிகர்
பட்டம் : மெகா ஸ்டார்
1978 : முதல் சினிமா
திருமணம் : 1980
பிடித்த ஹீரோயின் : ஹேமமாலினி
அதிக படங்களில்
ஜோடி : விஜயசாந்தி (19 படம்)
திருப்பம் : அரசியலில் குதிப்பு
தேர்தலில் : தனித்து போட்டி
களம் : சட்டசபை, மக்களவை
நடிகை ரோஜா : அன்று கதாநாயகி, இன்று வில்லி
நம்புவது : சினிமா கவர்ச்சி
எதிர்பார்ப்பு : முதல்வர் பதவி
முன்னுதாரணம் : என்.டி.ஆர்.
கடந்தகாலம் : படப் பெட்டியில்
எதிர்காலம் : ஓட்டுப் பெட்டியில்
ரிலீஸ் : 16ம் தேதி


தல!
பெயர் : நிதிஷ்குமார்
பிறந்த தேதி : 1-3-1951 (வயது 58)
கட்சி : ஐக்கிய ஜனதா தளம்
மாநிலம் : பீகார்
சின்னம் : அம்பு
இதற்கு முன் : 6 முறை எம்.பி.,
மத்திய அமைச்சர்,
முதல்வர்
இப்போது : முதல்வர்
2004 தேர்தலில் : 8 எம்.பி.க்கள்
சாதனை : 15 ஆண்டு லாலு
ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
இருப்பது : தே.ஜ. கூட்டணியில்
போட்டி : 25 தொகுதியில்
லட்சியம் : லாலு அண்ட் கோவை வீழ்த்துவது
பிரதமர் பதவி : இருப்பதில்
நீடித்தால் போதும்


பெயர் : ராமதாஸ்
கட்சி : பா.ம.க.
தொழில் : அரசியல்
கொள்கை : சூழ்நிலையை பொறுத்து
எப்போதும் : கூட்டணி
இருப்பதில்லை : ஒரே அணி
சென்னை வரை : அன்பு சகோதரி
டெல்லி வரை : அன்பு மணி
நிரந்தர முகவரி : தைலாபுர தோட்டம்
தற்காலிக முகவரி : போயஸ் தோட்டம்
பிடித்த நிறம் : பச்சை
பிடித்த கேம்ஸ் : லாங்க் ஜம்ப்
பிடித்த சினிமா : குரு என் ஆளு
பிடித்த பாட்டு : மாம்பழமாம் மாம்பழம்…
(சினிமா பாட்டல்ல)
பிடித்த சபா : ராஜ்யசபா
2004 தேர்தலில் : சூரியனோடு
2009ல் : இலையோடு
நம்புவது : இலங்கையை
நம்பாதது : கையை
எலக்ஷனில் : நிற்பதில்லை
மகனை : நிறுத்துவதில்லை
சாதனை : தாவுவதில்
தவறு : மரம் வெட்டியது
பரிகாரம் : செடி நடுவது
லட்சியம் : அணிமாறுவதில் கின்னஸ்



பெயர் : சந்திரசேகர ராவ்
பிறந்த தேதி : 17-2-1954 (வயது 55)
மாநிலம் : ஆந்திரா
தாய் வீடு : தெலுங்கு தேசம்
தனிக்குடித்தனம் : தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி
காரணம் : தெலுங்கானா
சின்னம் :கார்
இதற்கு முன் : எம்.எல்.ஏ., மத்திய அமைச்சர்
2004 தேர்தலில் : காங்கிரஸ் கூட்டணி
கிடைத்தது : 5 எம்.பி., 26 எம்.எல்.ஏ.
ஆட்சியில் பங்கு : மத்தியிலும், மாநிலத்திலும்
13-9-2006 : ஆதரவு வாபஸ்
காரணம் : தெலுங்கானா
2009 தேர்தலில் : மூன்றாவது அணி
எத்தனை சீட்? : கிடைத்த வரை லாபம்
சாதனை : பிரிந்து வந்த கட்சியுடன் கூட்டு
மகா சாதனை : விஜயசாந்தி கட்சி இணைப்பு
காரணம் : தெலுங்கானா

India Elections 2009: Cartoons: The New Yorker

Therthal 2009: Our Next PM – Mayavathy

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? ஏன் மாயாவதிக்கு அந்த நாற்காலி கிடைக்கும்? எப்படி பொருத்தம்?

காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையிலான அணிகளுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்கிய இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை மட்டும் சேர்ப்பது என்ற பழைய பாணியைக் கைவிட்டுவிட்டு, பாரதிய ஜனதா + காங்கிரசின் தோழமைக் கட்சிகளையே ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் இழுத்துள்ளனர்.

mayavathy-deve-gowa-tdp-trs-third-front-alliance

  • கடந்த தேர்தலில் 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இப்போது ஒரு கை விரல்கள் கூட காணாத அளவு சுருங்கி விட்டது. பாஜக கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாது.
  • முலாயம் சிங் யாதவ் குறித்து நீங்கள் அறிவீர்கள் அல்லவா? XLRI Alumna takes on Mulayam Singh Yadav « Gautam’s Net

up-corruption-samajwadimulayamundisclosedassets

மாவட்ட தேர்தல் அதிகாரியை மிரட்டிய சமாஜ்வாடி கட்சி

நீங்கள் ஒரு பெண் அதிகாரியாக இருப்பதால் என்னை நானே கட்டுப் படுத்திக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் பெண்ணாக இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வந்திருக்கும். – ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய முலாயம்சிங்

நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, விஷம்போல் ஏறும் விலைவாசி

point-blank-blogspotrisingfoodprices

  • சாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார கொள்கையில் எத்தகைய மாற்றத்தையும் பாஜக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேக்க நிலை, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு

  • பொருளாதார கொள்கையை வகுப்பதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அவை பின்பற்றிய கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கு சாதகமானவையாகும். இவ்விரு கட்சிகளும் தொழில் நிறுவனங்களின் நிதியை சார்ந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

சட்டம்- ஒழுங்கு சீரழிவு

  • இவ்விரு கட்சிகளின் ஆட்சியில் எல்லையை கூட பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

சமூக சீர்திருத்தம்

  • பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கை: உத்தரப் பிரதேசத்தில் அரசு நிறுவனங்கள் தனியார் வசம் கொடுக்கப்பட்டால் கூட இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வழங்கும்.
  • தங்கள் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர்வகுப்பினருக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாயாவதி குறிப்பிடுகிறார்.

bsp-mayawati-uttar-pradesh-elephant-dalits-polls

  • பாரதிய ஜனதாவுடன் நட்புறவு: உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் மாயாவதி. அந்த மூன்று முறையுமே பாரதிய ஜனதாவின் உதவியால்தான் அவர் முதல்வர் ஆனார். பாரதிய ஜனதாவின் லால்ஜி தாண்டனைத்தான் மாயாவதி அண்ணனாகக் கருதுகிறார்.

adade-1mathy-third-mayavathy-pawar-jj-admk

முத்துக்குமாரும் காந்தியும்: கேள்விகள்

1: தற்கொலை குறித்து உங்கள் கருத்தென்ன?

2. உயரிய லட்சியங்களுக்காக தன்னை வருத்திக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் அதற்கு வீரவணக்கம் செய்வதும் பாராட்டுக்குரிய செயலா?

3. அடைய வேண்டிய இலக்கிற்காக வழிமுறையில் சில சமரசங்களை செய்து கொள்ளலாமா?

4. கணவன் இறந்தவுடன் மனைவியையும் தீக்குளிக்க வைப்பது சரிதானா?

5. வாழ்க்கையின் பாரத்தைத் தாங்க இயலாதவர்கள் தற்கொலை மேற்கொள்கிறார்களா?

6. மற்றவர் மேல் எல்லா சுமையையும் போட்டுவிட்டு, தான் தீக்குளித்து விடுதலைப் பெற்றுக் கொள்கிறார்களா?

7. கிறித்துவத்தில் பாவமன்னிப்பு; பௌத்தத்தில் கர்மா; இஸ்லாமின் சொர்க்கம் போல் இல்லாமல் இந்து மதத்தில் மறுபிறவி போன்ற கருத்தாக்கங்கள்தான் தியாகத்தின் சின்னமாக அர்ப்பணிக்க வைக்கிறதா?

8. உயரிய இடங்களை அடைய முடியாதவர், மற்றவரைக் கண்டு பொறாமைப்படுபவர், அடுத்தவரின் மதிப்பிற்கு ஆசைப்படுபவர்களை எல்லாம், இந்த வீரவணக்க நிகழ்வுகள் உயர்வு நவிற்சிக்கு வித்திட வைத்து, தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்துகிறதா?

9. வீரம் என்றால் கத்தி கொண்டு போரிட்டு சண்டையில் எதிரியை வீழ்த்துவதா?

10. தற்கொலையும் கூடாது; உண்ணாவிரதத்திலும் பயனில்லை; அப்படியானால் அறப்போராட்டங்களைத் துவக்கி, பெருமளவில் மக்களிடம் கொண்டு சென்று, ஆட்சியார்களிடம் மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது?

11. ஒபாமா போல் பெரிய அளவில் துவக்க கால பணசேமிப்பு இல்லாமல், சுய ஆர்வத்தை வித்தாக வைத்து, பலரை ஈர்த்து, மாற்றங்களுக்கு கால்கோள் இடுவது எங்ஙனம்?

12. திருவிழா கொண்டாட்டம் போல் வீரவணக்கமும் குழுவாகக் கூடி கூத்து போட்டு, கும்பலாக ஒன்றுசேர்ந்து, கூட்டம் பார்த்து பிரமித்து, மகிழ்ச்சியைப் பகிரும் தருணங்கள்தானா?