இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? ஏன் மாயாவதிக்கு அந்த நாற்காலி கிடைக்கும்? எப்படி பொருத்தம்?
காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையிலான அணிகளுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்கிய இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை மட்டும் சேர்ப்பது என்ற பழைய பாணியைக் கைவிட்டுவிட்டு, பாரதிய ஜனதா + காங்கிரசின் தோழமைக் கட்சிகளையே ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் இழுத்துள்ளனர்.
- கடந்த தேர்தலில் 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இப்போது ஒரு கை விரல்கள் கூட காணாத அளவு சுருங்கி விட்டது. பாஜக கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாது.
- முலாயம் சிங் யாதவ் குறித்து நீங்கள் அறிவீர்கள் அல்லவா? XLRI Alumna takes on Mulayam Singh Yadav « Gautam’s Net
மாவட்ட தேர்தல் அதிகாரியை மிரட்டிய சமாஜ்வாடி கட்சி
நீங்கள் ஒரு பெண் அதிகாரியாக இருப்பதால் என்னை நானே கட்டுப் படுத்திக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் பெண்ணாக இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வந்திருக்கும். – ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய முலாயம்சிங்
நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, விஷம்போல் ஏறும் விலைவாசி
- சாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார கொள்கையில் எத்தகைய மாற்றத்தையும் பாஜக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
வேலையில்லாத் திண்டாட்டம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேக்க நிலை, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு
- பொருளாதார கொள்கையை வகுப்பதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அவை பின்பற்றிய கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கு சாதகமானவையாகும். இவ்விரு கட்சிகளும் தொழில் நிறுவனங்களின் நிதியை சார்ந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
சட்டம்- ஒழுங்கு சீரழிவு
- இவ்விரு கட்சிகளின் ஆட்சியில் எல்லையை கூட பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
சமூக சீர்திருத்தம்
- பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கை: உத்தரப் பிரதேசத்தில் அரசு நிறுவனங்கள் தனியார் வசம் கொடுக்கப்பட்டால் கூட இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வழங்கும்.
- தங்கள் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர்வகுப்பினருக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாயாவதி குறிப்பிடுகிறார்.
- பாரதிய ஜனதாவுடன் நட்புறவு: உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் மாயாவதி. அந்த மூன்று முறையுமே பாரதிய ஜனதாவின் உதவியால்தான் அவர் முதல்வர் ஆனார். பாரதிய ஜனதாவின் லால்ஜி தாண்டனைத்தான் மாயாவதி அண்ணனாகக் கருதுகிறார்.