Monthly Archives: ஒக்ரோபர் 2006

Loosu Penney – Vallavan Inspired

லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே
லூசுப்பையன் உன் மேலதான் லூசா சுத்தறான்
காதல் வராதா காதல் வராதா
என் மேல் உனக்கு காதல் வராதா?

என்னும் பாடல் உல்டா பாடலுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்கள் பொருந்தியது. காதல் என்பதற்கே உரித்தான அடைமொழியான லூசு என்னும் பதத்தை வாங்குபவராக பெண்ணையும் கொடுப்பவராக ஆணையும் கருவாக அமைத்த கவிதை.

முதலில் களத்தைத் தேர்ந்தெடுக்கவும். காட்டாக இந்திய கிரிக்கெட் வீரன். அடைமொழியாக அவுட்.

மட்டைவீரனே மட்டைவீரனே மட்டைவீரனே
மடையன் உன் மேலதான் மப்பா இருக்கறான்
ஆட மாட்டியா ஆட மாட்டியா
என்னிக்காவது உனக்கு ஆட வராதா?

இன்னும் சில முயற்சிகள்:

வாக்குப்பெட்டி வாக்குப்பெட்டி வாக்குப்பெட்டி
வாக்காளன் உன் மேலதான் வாக்கா போடுறான்
மாற்றம் வராதா மாற்றம் வராதா
ஆட்சியிலதான் மாற்றம் வராதா?

ஆட்சென்ஸே ஆட்சென்ஸே ஆட்சென்ஸே
ஆட்பையன் உன் மேலதான் Ad-ஆ போடறான்
காசு வராதா காசு வராதா
ப்ளாக் மேல் எனக்கு காசு வராதா?

சந்திரமுகியே சந்திரமுகியே சந்திரமுகியே
சாந்திக்காரன் உன்னத்தான் ரீலா சுத்தறான்
நிறுத்த மாட்டானா நிறுத்த மாட்டானா
ஓட்டறத என்னிக்காவது நிறுத்த மாட்டானா ?
(தொடர்பான சுட்டி: Voice of Rajinifans :: சந்திரமுகி – 560)

பேப்பர்காரனே பேப்பர்காரனே பேப்பர்காரனே
ப்ளாக்ப்பையன் உன்னத்தான் பேப்பரா புரட்டுறான்
நியூசு கிடைக்காதா நியூசு கிடைக்காதா
ப்ளாகில் போட எனக்கு நியூசு கிடைக்காதா?

இவ்வளவுதாங்க தோணிச்சு. உங்களுக்குத் தோணினதையும் சொல்லுங்க…

லூஸு முயற்சி இல்லாமல், சேரிய முயற்சியைப் படிக்க இங்கு செல்லலாம்: அன்புத் தோழி தயா: –>சுட்டிப்பெண்ணே…


| |

Each week, we provide a cartoon in need of a capti…

Each week, we provide a cartoon in need of a caption. You, the reader, submit your caption below, we choose three finalists, and you vote for your favorite. Finalists for this week’s cartoon will appear online Monday, November 6th, and in the November 13th issue of The New Yorker. Any U.S. resident age eighteen or older can enter.
 Posted by Picasa

21ts Birthday Greetings to Asin

அசின் பிறந்த நாள்.
அகிலமெங்கும் ஆதுரம் அடைந்த அசின் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.

  • E – T a m i l : ஈ – தமிழ் – 1105 அஸினின் வளைவுகள் (சென்ற வருட வாழ்த்து அட்டை, பதிவு)
  • First Look: Asin’s birthday: இன்றைய தினத்தை 92.7 பண்பலையில் சேவா சக்கர (Seva Chakkara Samajam) சிறார்களுடன் கொண்டாடியிருக்கிறார்.
  • Asin’s 20th birthday plans: இது சென்ற வருடம்
  • கார்த்தியின் கனவுலகம்: அசினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்: நினைவூட்டிய தமிழ் வலைஞர்.
  • Asin Thottumkal – Wikipedia

    ‘எவ்வலையகம் சுட்டாருக்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
    விக்கியகம் சுட்டா மகற்கு’

  • Tamil Actress Asin – அதிகாரபூர்வ வலையகமாமே?

    | |

  • Vijayganth Dialogues – Cricket Betting – MP Gas Leak – Tourist Election Observers

    பேசும் செய்தி – 4 (நன்றி: திண்ணை)

    Do Aana1. “தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார்”: முன்னாள் அமைச்சரும், தே.மு.தி.க. அவை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் “கருணாநிதி வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் தோல்வியை கண்டவர்தான். 1980-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதேபோல் ஜெயலலிதாவும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். நானும் கூட பணம் கொடுத்து தோல்வியை சந்தித்தவன் தான். இருக்கிறவர்கள் கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வாங்கி கொள்கிறார்கள். பணம் கொடுப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தம் இருப்பது இல்லை.”

    என்னிடம் தனியே சொல்லியிருக்க வேண்டியதை அறிக்கையாகவே விட்டிருந்த பண்ருட்டியாருக்கு தொலைபேச எண்ணியவுடன், நேரிலேயே ஆஜரானார். “சும்மாத்தானே இருக்கிறேன். எதற்கு செல்பேசி செலவு? மதுரையில் தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக 5300 ஓட்டுகள் கிடைத்தது. விஜய்காந்த்தின் ‘பேரரசு’ வெற்றிதான் இதற்கு காரணம். அடுத்த படத்தில் சம்பளம் கூடுதலாகத் தருகிறார்கள். அதன் எதிரொலியை, கணிசமான அளவுக்கு, கவுன்சிலர்களையும், வார்டு உறுப்பினர்களையும் பணம் கொடுத்து பெற்றதன் மூலம் நிரூபித்திருக்கிறோம்” என்றார்.

    பண்ருட்டியாரின் வேட்டிமுனையை பிடித்துக் கொண்டிருந்த விஜய்காந்த்தின் கண்கள் சிவந்தது. “இவருக்கும் இனிமேல் லியாகத் அலிகான் தான் வசனம் எழுதித் தரப் போகிறான். பழுத்த அரசியல்வாதியாச்சே என்று நினைத்தேன். ஆனால், கூட இருப்பவர்களுக்கு பழுத்து விடுவதால்தான் இந்தப் பெயர் வந்தது என்பது இவரின் அறிக்கைகளில் இருந்து எனக்குப் புலப்பட்டது. படம் கெட்டபின் திரை விமர்சனம்; கண் கெட்டபின் சூர்ய நமஸ்காரம் என்பார்கள்! தேர்தலில் தோற்றபின் உதயசூர்ய நமஸ்காரம் என்பது அரசியல் வாக்கு” என்று கடுப்பானார்.


    Social Security2. இந்தியா-இங்கிலாந்து போட்டி: ரூ.80 லட்சத்துக்கு கிரிக்கெட் சூதாட்டம்: வெறும் எண்பது லட்சம்தானா என்னும் ஆச்சரியத்துடன் உள்ளூர் ஹவாலா ஏஜண்ட்களை அணுகினேன். விரிவாக தங்கள் குறைகளைப் பகிர ஆரம்பித்தார். “தம்பீ… உன் நினைப்பு சரிதான். முப்பது பேர் சம்பந்தப்பட்ட ஆட்டத்தில் ஆளுக்கு 6,000 டாலர் என்னும் ரேட்டு ரொம்ப கம்மி. இப்ப காலம் கெட்டுக் கெடக்கு. பாகிஸ்தானின் அப்துல் கான் அணுகுண்டு தயாரிச்சு மாட்டிண்ட்டான். நார்த் கொரியாவும் சக்ஸஸ்ஃபுல்லா குண்டு போட்டுப் பார்த்துடுச்சு. இப்போதைக்கு ஆஃப்ரிகா மட்டும்தான் ஹாட். மிச்ச மார்க்கெட்டெல்லாம் டல்லடிக்குது. ‘ஹவாலா ஏஜெண்ட்ஸ் அசோசியேசன்’ சார்பா சில கோரிக்கை வெச்சிருக்கோம்.

  • புதுப்படம் ரிலீஸான முதல் வாரம் எம்புட்டு வேணும்னா டிக்கெட் விலை வெச்சுக்கலாம்கிற மாதிரி, ஸ்டார் ப்ளேயர்ஸ் மேல் எவ்வளவு வேணும்னாலும் பெட்டு கட்டலாம்.
  • சுதான், சியரா லியோன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐ.நா. அமைதிப்படை ஒதுங்கிக் கொள்ளணும்.
  • போதை வர்த்தகத்தைப் பெருக்க பள்ளிக்கூடங்களின் கஃபேயிலேயே விற்பனை துவங்கணும்.
  • கென்னத் லே, என்ரான் மாதிரி காசு அடிக்கிறவங்களை அநியாயத்துக்கு, 65 கூட முடியாத சின்ன வயசுல போய் சேர்ந்துடறாங்க; அவங்க நல்லா இருக்க உடல்நல மற்றும் சேமநல திட்டங்கள் ஆரம்பிக்கணும்.

    குறைந்தபட்சமாக இவற்றை நிறைவேற்றாவிட்டால், தோனிக்கும் சேவாகுக்கும் சம்பளத்தை கட் பண்ணிடுவோம்” என்று மிரட்டினார்.


    Abandoned3. 6 கிராமங்களில் விஷவாயு வெளியேறியது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு: மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் உம்ராகஞ்ச் பகுதியில், திடீர் என்று விஷவாயு பரவியது. இந்தவிஷவாயு எங்கிருந்து வெளியேறியது என்பது மர்மமாக இருக்கிறது. இந்த விஷவாயு 6 கிராமங்களுக்கு பரவியதால் 1500 பேர் மூச்சுதிணறல், வாந்தி , மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் தகவல் அறிய களத்தில் இறங்கினேன். அப்பொழுதுதான் அச்சுக்கோர்ப்பில் பிழை இருப்பது எனக்குத் தெரியவந்தது. ‘6 கிராமங்களில் விஷவாயு வெளியேறிய செய்தி வெளியானது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு’ என்பதே ஊடக வன்முறையாக திரித்து வெளியிடப்பட்டது தெரியவந்தது. மத்திய பிரதேச அரசைத் தொடர்பு கொண்டு விசாரணையை மேலும் முடுக்கினேன். “இருபத்தி இரண்டு வருடமாக நடத்தும் விசாரணையே முடிஞ்சபாடில்லை. எனவே, நீங்கள் அச்சுப்பிழையை பொருட்படுத்த வேண்டாம்” என்று என் கவலையை துடைத்தெறிந்தார்.

    தீவிர ஆராய்ச்சியின் முடிவில் கோகோ கோலா தொழிற்சாலையில் இருந்து கோக் வழிந்தோடியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதாக அறியப் பெறுகிறேன். கோக் நிறுவனத்தின் மேலாளர், ‘இனி இவ்வாறு தளும்பல்கள் நிகழாது. பாட்டிலுக்குள்ளேயே கோக் உறையும்!’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.


    4. மத்திய தொகுதியில் வன்முறை நடந்தபோது தேக்கடிக்கு சுற்றுலா சென்ற தேர்தல் பார்வையாளர்கள்: பரபரப்பு தகவல்: தேர்தலை கண்காணிக்கவும், செலவு விபரங்களை கணக்கிடவும் சஞ்சீவ்குமார், மீனா ஆகிய இரண்டு பார்வையாளர்களை மத்திய தேர்தல் ஆணையம் மதுரைக்கு அனுப்பி வைத்தது. அடிதடி நடந்த தேதி சஞ்சீவ்குமார் தன் உதவியாளருடன் விடுமுறை எடுக்காமல் அலுவலக காரிலேயே கேரளாவில் உள்ள தேக்கடிக்கு சுற்றுலா சென்றதாக தெரிய வந்துள்ளது. தேர்தல் செலவு கணக்கை பார்வையிட வந்த மீனாவும் அதே நாளில் ராமேசுவரம் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர் செப்டம்பர் மாத இறுதியிலும் இதுபோல ராமேசுவரத்துக்கு சென்று வந்தார்.

    முதலில் சஞ்சீவ்குமாரைத் தொடர்பு கொண்டேன். “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவோம் என்று திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி பேசினார்கள். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு கேரளாவில் ஆட்சி செய்கிறது. மார்க்சிஸ்ட்களுக்குள்ளே முரண்பாடு தரும் ‘இத்தகைய போக்கை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது’ என்று பா.ம.க. தலைவர் இராமதாஸ் அறிக்கை விட்டிருந்தார். இதன் தொடர்பாகத்தான் தேக்கடி சென்று ‘இவர்கள் சொல்வதில் உண்மையுள்ளதா’ என்று யானைகளிடமும் மரஞ்செடிகொடிகளிடமும் விசாரித்தேன்” என்றார்.

    தலைசுற்றினாலும், இரண்டு பாரசிடமாலை முழுங்கிக் கொண்டு மீனாவையும் பிடித்து விட்டேன். “நமச்சிவாய நாமம் வாழ்க; நாதன் தாள் புகழ் வளர்க!! அந்த செய்தித்தாள் முழுமையானத் தகவலைக் கொடுக்கவில்லை. செப்டம்பர் மாத இறுதியில் ராமேசுவரத்துக்கு சென்றது உண்மை. ஆனால், அங்கிருந்து நேரடியாக காசி விஸ்வநாதரை தரிசிக்க சென்றேன். காசிக்கு சென்றால் மீண்டும் ராமேசுவரத்துக்கு மீண்டும் ஷேத்ராடனம் செய்ய வேண்டும் என்பதை ஆன்மீக அன்பர்கள் அறிவார்கள். அதன்படியே அடுத்த விஸிட்டாக ராமேசுவரத்துக்கு வந்தேன். நடுவில் வாரணாசிக்கு சென்றதை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். இத்தனையும் நல்லபடியாக தேர்தல் நடக்க வேண்டும் என்னும் வேண்டுதலை முன்வைத்தே, சுயலாபநோக்கு ஏதுமின்றி பற்றற்ற முறையில் நிறைவேற்றினேன். தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!” என்று திருநீறு வழங்கினார்.


    | |

  • Games & Minds – Block

    நினைவு கூர்தலை சரி பார்ப்பதற்கான விளையாட்டு. நானும் என் ஆறு வயது மகளும் ஆடுகிறோம். தரையில் உட்கார்ந்து பல்லாங்குழி ஆடுவது போல் கீழே அமர்ந்திருக்கிறோம்.

    முன்னே அட்டையில் விதவிதமான சின்னங்கள். ஒவ்வொரு சின்னமும் இரு முறை இடம் பிடித்திருக்கிறது. எல்லா சின்னமும் மூடியிருக்கும்.

    ஒன்றைத் திறக்க வேண்டும்; அடுத்து இன்னொன்று; இரண்டும் ஒரே சின்னமாக இருந்தால், எடுத்தவருக்கு இரண்டு வாக்கு. மற்றொரு வாய்ப்பும் உண்டு. இரண்டும் ஒத்துப் போகா விட்டால், எடுத்த இடத்திலேயே, காய்களை மீண்டும் வைத்து விட வேண்டும். எதிராளி ஆடத் தொடங்குவார்.

    காலையில் ஏழு மணிக்கு எழுந்த களைப்புடன் என் மகள். அலுவலில் மேலாளர் இல்லாத குறையுடன் ஓய்வெடுத்த புத்துணர்வுடன் நான். முப்பத்தி மூன்றுக்கும் ஆறுக்கும் போட்டியில், இரண்டு முறை ஆறு வயது தோற்று விட்டது. முப்பத்தி மூன்றுக்கு விட்டுக் கொடுக்காமல் வளர்ந்த சுபாவம். சின்னக் குழந்தையோடும் வெற்றிக் கொடி கட்டும் ஆசை. கணினியில் ஆடி பழக்கம். (தேட: கூகிள் :: memory blocks game)

    tha 11105நினைவில் நிறுத்துவதற்கு சூட்சுமங்களை சொல்லித் தரப் பார்க்கிறேன். எவ்வாறு காய்களை எடுத்து அவதானிக்க வேண்டும்? அடுத்தவருக்கு எப்படி துப்புகள் கொடுக்காமல் ஆடுவது? வலதுகை ஓரம், இடதுபக்க நடு, என்றெல்லாம் குறியீடுகள் கொள்ள சொல்கிறேன்.

    இரண்டாவது ஆட்டம் முடிந்தவுடன் என்னிடம் கோரிக்கை வைத்தாள்.

    “அப்பா… இதுவரை இருவரும் வேகவேகமாக அடுக்கியது போல் இல்லாமல், இந்த முறை காய்களை நான் அடுக்கப் போகிறேன். நீ திரும்பி உட்கார்!”

    உள்ளாட்சித் தேர்தல் நினைவுக்கு வந்தது.

    இறுதியாட்டத்தில் சுளுவாக வெற்றி பெற்றாள். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆழ்துயில் பயிலச் சென்றோம்.


    | | |

    Books

    சமீபத்தில் என்னைக் கவர்ந்த சில ஆங்கிலப் புத்தகங்கள்:

    1. The God Delusion: Richard Dawkins: கடவுள், மதம், அறிவியல், சொந்தக் கதை, நல்ல எழுத்து, புரிகிற நடை எல்லாவற்றையும் கலந்து கட்டினால் எப்படி இருக்கும்?

      தொடர்பான சுட்டிகள்:

    2. Not So Funny When It Happened: Tim Cahill: The Best of Travel Humor and Misadventure (Travelers’ Tale)
    3. The Four Agreements: Don Miguel Ruiz: A Practical Guide to Personal Freedom, A Toltec Wisdom Book

      Be Impeccable With Your Word: Speak with integrity. Say only what you mean. Avoid using the word to speak against yourself or to gossip about others. Use the power of your word in the direction of truth and love.

      Don’t Take Anything Personally: Nothing others do is because of you. What others say and do is a projection of their own reality, their own dream. When you are immune to the opinions and actions of others, you won’t be the victim of needless suffering.

      Don’t Make Assumptions: Find the courage to ask questions and to express what you really want. Communicate with others as clearly as you can to avoid misunderstandings, sadness, and drama. With just this one agreement, you can completely transform your life.

      Always Do Your Best: Your best is going to change from moment to moment; it will be different when you are healthy as opposed to sick. Under any circumstance, simply do your best, and you will avoid self-judgment, self-abuse, and regret.

    4. Mountain Man Dance Moves: The McSweeney’s Book of Lists
    5. The Best American Nonrequired Reading 2006
    6. Trivia Lovers’ Lists of Nearly Everything in the Universe: Barbara Ann Kipfer: 50,000+ big & little things organized by type and kind

    | |

    Tamil Nadu Local Body Elections – Civic Poll Resul…

    Tamil Nadu Local Body Elections – Civic Poll Results : Final Tally Posted by Picasa

    சல்பேட்டாத்துவம்

    பொழிவுக்கும் கழிவுக்கும் ஓரெழுத்துதான் வித்தியாசம்!
    எழுதறதெல்லாம் பதிஞ்சா கழிவு!!
    எழுதறத சிந்திச்சா பொழிவு!!!


    வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடலாம்!
    வாழ்க்கையே கண்ணாமூச்சியா ஆகிடக்கூடாது!!


    .NET செர்டிஃபேகேசன் வைத்திருந்தாலும் வேலை செய்தால்தான் வாய்க்கரிசி.


    நீ எழுதறது உனக்குப் புரியலேன்னா அது பரவாயில்ல;
    நீ எழுதினத, மத்தவங்களுக்கு விளக்கலேன்னா – அதுக்குப் பேரு குப்பை.

    நீ எழுதறது பலருக்குப் புரியலேன்னா அதுக்குப் பேரு கவிதை;
    நீ எழுதின கவிதை, விமர்சகனுக்கு விளங்கலேன்னா – அதுக்குப் பேரு இலக்கியம்.


    கொல்லங்குடியில் ஊசி விற்க முடியுமா?
    வலைப்பதிவில் மாற்றுக்கருத்து வாதிட முடியுமா?


    கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் கால் போடலாம்;
    கிறிஸ்துமசுக்கு சாண்டா வரலாம்;
    லீவு விட்டாத்தான் நான் வீட்டுக்குப் போகலாம்.


    எதை வேணா கிறுக்கிட்டு, ‘இது கிறுக்கல்’னு டிஸ்கெளெய்மர் போட்டுக்கிட்டா, தமிழ்மணத்தில் இருக்கற jobless கூட சீந்த மாட்டாங்க;

    அதுக்காக, யோசிச்சு அனைத்து கோணமும் பார்த்து எழுத வலைப்பதிவு, ஆயிரம் காலத்துப் பயிரா என்ன?


    நல்ல இயக்குநருக்கு அழகு சரியான நேரத்தில் ‘வணக்கம்’ போட்டு, டைட்டில் கார்டு ஓட்டறது.
    நல்ல மேனஜருக்கு அழகு, வேலை முடிக்காத நேரத்தில் மீட்டிங் கூப்பிட்டு, ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்காமல் இருப்பது!
    நல்ல பதிவனுக்கு அழகு, ‘பதிவு எப்படா சாமீ முடியும்?’ என்று நினைக்க வைக்காமல், சுந்தரி படம் போடுவது.



    | |

    US Markets: Dow’s First Close at 12000

    அமெரிக்கப் பங்குச்சந்தைக்கு இது மகிழ்ச்சியான தருணம். வட்டி விகிதம் ஏறாமல் இருக்கிறது. கடன் கிடைப்பது கஷ்டமாக இல்லை. நத்தார் தினம் வரப்போகிறது. மக்களும் நிறைய செல்வழிக்கிறார்கள். நிறுவனங்களும் வஞ்சனையில்லாமல் வருவாய் காட்டுகிறார்கள்.

    எல்லாம் சேர்ந்து டௌ ஜோன்ஸ் குறியீடு பன்னிரெண்டாயிரத்தைத் தாண்டியது. 11,000த்தில் இருந்து 12-க்கு செல்ல ஆறு வருடம் எடுத்துக் கொண்டிருக்கிறது.


    செய்திப்படம் நன்றி: Today’s Markets – WSJ.com

    அமெரிக்கப் பங்குச்சந்தையையே ஒட்டுமொத்தமாக டௌ ஜோன்ஸ் குறியீடு அளப்பதில்லை. இருப்பதிலேயே பெரிய, மாட்சிமை பொருந்திய மகாகனம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ராஜாதிராஜர்களைக் கொண்டது டௌ 30.

    அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், போயிங், சிட்டி க்ரூப், எக்ஸான் மோபில், டிஸ்னி, வால்-மார்ட், மைக்ரோசாஃப்ட், மெக்டோனால்ட்ஸ் போன்ற முப்பது நிறுவனங்களை அறிய :: Dow Jones Industrial Average – Wikipedia

    கட்டுப்பெட்டியான வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கடைக்கண் எப்போது கூகிள், அமேசான் மேல் பரிபாலிக்கப்படும் என்பதை அறிய இயலாது.


    | |

    Deepavali Greetings

    நண்பர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    சென்ற வருடத்திய பதிவுகளில் இருந்து:

  • தீபாவளி மலர்கள்: என்னுடைய கதைகள் வெளியான செய்தியைப் பகிர்கிறேன்.
  • தீபாவளி வாழ்த்துக்கள்: சுயபுராணத்தில் ஆரம்பம்; ஜெயமோகன் பேட்டி துணுக்கு; எம்.எஸ்.என் தேடல்; சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’.
  • தீபாவளிப் படங்கள்: 2004-இல் வெளியானவை குறித்த குட்டி குறிப்புகள்.
  • தீபாவளி வாழ்த்துகள்: ஏபிசிடிக்கு சொன்ன தீபாவளி/தஸரா கதை + புகைப்படங்கள்
  • தமிழோவியம் தீபாவளி மலர் – விமர்சனம்: காசி (தமிழ்மணம்) பேட்டி, ஆதவன் தீட்சண்யா கவிதை, காத்தாடி ராமமூர்த்தி சந்திப்பு… வலையில் இன்னும் பத்திரமாக இருக்கிறது!

    | |