Monthly Archives: ஓகஸ்ட் 2007

Hat-tips, Pointers, Must read articles

பரிந்துரைக்கென்றே பல பதிவுகள் வைத்திருக்கிறேன். இருந்தாலும், படித்ததன் பயன் கருதி சில…

1. The internet | Who’s afraid of Google? | Economist.com: “The world’s internet superpower faces testing times”

One obvious strategy is to allay concerns over Google’s trustworthiness by becoming more transparent and opening up more of its processes and plans to scrutiny. But it also needs a deeper change of heart. Pretending that, just because your founders are nice young men and you give away lots of services, society has no right to question your motives no longer seems sensible. Google is a capitalist tool—and a useful one.

Some users now keep their photos, blogs, videos, calendars, e-mail, news feeds, maps, contacts, social networks, documents, spreadsheets, presentations, and credit-card information—in short, much of their lives—on Google’s computers. And Google has plans to add medical records, location-aware services and much else.

ஒருவன் ஒருவன் முதலாளி! Monopoly- ஆக இருந்தால் வரும் பிரச்சினைகள்.

2. The Next Generation of Online Shorthand – Pogue’s Posts – Technology – New York Times Blog

The problem with these online abbreviations, however, is that they’re absolutely ancient; entire generations of teenagers have learned and outgrown LOL and OMG. The world desperately needs a new set of acronyms more relevant to today’s online chat participants.

* GI — Google it
* IIOYT — is it on YouTube?
* DYFH — did you Facebook him/her?

* 12OF — twelve-o’clock flasher (refers to someone less than competent with technology, to the extent that every appliance in the house flashes “12:00″)

* SML — send me the link
* RHB — read his/her blog
* KYST — knew you’d say that

* CMT (CMF, CMM, CMB) — check my Twitter (Facebook, Myspace, blog)
* CYE (CYF, CYM, CYB)–check your email (Facebook, Myspace, blog)

Finally, it occurred to me: Why should the convenience of online shorthand be the province of teenagers and twentysomethings? There ought to be a list that we, their parents and employers, can use, too. And now there is:

* WIWYA — when I was your age
* YKT – you kids today

* WDO? — what are you doing online?

* NIWYM — no idea what you mean
* NCK — not a chance, kid
* B2W — back to work

அப்படியே தமிழுக்கு யோசிக்கலாம்:

  • எ.தா.அ./க. – என் தாழ்மையான அபிப்ராயம்/கருத்து
  • நா.அ.வ/ம – நான் அறிந்த வரையில்/மட்டும்
  • எ.க.எ. உ.க.உ. – என் கருத்து எனக்கு. உங்கள் கருத்து உங்களுக்கு
  • பொ.பா. – பொதுவாக பார்த்தால்
  • வா.த.பி.ந. – வாங்க… தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி
  • ஏ.ப.எ.வி.இ.என்.எ.ப.வை.அ. – ஏற்கனவே பலர் எழுதி இருந்தாலும் என் எண்ணங்களை பதிந்து வைத்தல் அவசியம்

மூளை ப்ளாங்க். இப்போதைக்கு இவ்வளவுதான் தோன்றியது.

3. BBC NEWS | Technology | Bloggers battered by viral storm – முதல் செய்திக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு உண்டு. கூகிளின் ப்ளாகர் சேவையை பிளவர்கள் ஆட்கொண்டு, எரிதம் அனுப்புகிறார்கள். கபர்தார்!

உங்கள் கணினியும் கொந்தர்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கலாம்?

4. BBC NEWS | Science/Nature | World facing ‘arsenic timebomb’: “About 140 million people, mainly in developing countries, are being poisoned by arsenic in their drinking water, researchers believe.”

இந்தியாவில் விளைந்த நெல்லை சோறாக்கி உட்கொள்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு புற்றுநோய் முதல் சகலவிதமான நோய்களும் வரக்கூடிய ஆபத்து என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

4. BBC NEWS | South Asia | Stellar hopes of Indian reality show student: “Winning a reality talent hunt show on an Indian television channel has given Arvind an opportunity to study engineering at Warwick University. The Indian television channel, NDTV, conducted the show – called Scholar Hunt, Destination UK.”

அட… வாழ்த்துகள்!

5. A Reporter at Large: The Black Sites: Reporting & Essays: The New Yorker: “A rare look inside the C.I.A.’s secret interrogation program.”

சமீபத்தில் பதவியிழந்த ஆல்பர்ட்டோ கொன்சாலஸில் துவங்குகிறது. அல் க்வெய்தாவின் முக்கிய தலைகளில் ஒருவரான காலித் ஷேக் முகமதுவின் வீரதீர பிரதாபங்களை பிரஸ்தாபிப்பதில் தொடர்கிறது. இரகசியங்களை வெளிக்கொணர்கிறேன் என்று கொடூரமான சித்திரவதைகளில், இரகசிய சிறைச்சாலைகளில் சி.ஐ.ஏ ஈடுபடுவதை அலசும் கட்டுரை.

6. NPR : Detainees at Guantanamo Bay: க்வான்டானமோ சிறையில் இருப்பவர்களுக்கு வாதாடச் சென்ற கதை. வழக்கு எப்பொழுது எடுக்க இருக்கிறார்கள் என்பதை கடைசி நிமிடத்தில் தெரிவிப்பதன் மூலம், வழக்கறிஞர்களை வரவிடாமல் தடுக்கிறார்கள். அவகாசம் இருந்தாலும், விமானப் பயணச்சீட்டு கிடைப்பதில்லை. பொதுநலனுக்காக இலவசமாக சேவை செய்ய முன்வந்தாலும், ‘யார் குற்றஞ்சாட்டப்பட்டவர்?’ என்பதற்கு தெளிவான தகவல் கிடைப்பதில்லை. A Few Good Men (1992) -இன் ஜாக் நிக்கல்சன் நினைவுக்கு வருகிறார்.

7. The CIA | On top of everything else, not very good at its job | Economist.com: “The United States has not, even in the eyes of well-disposed critics, been well served by its main intelligence agency”

சிஐஏ அத்துமீறுவதை பறைசாற்றுபவர்கள் பல. அத்துமீறினாலும், செய்யவேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்து முடிக்க துப்பு கெட்டவர்கள் என்று ஆதாரம் கலந்த அலசல்களுடன் குற்றப்பத்திரிகையை நிரூபிக்கிறாராம்.

8. Diary of a Bad Year | Review | Guardian Unlimited Books: “In this extract from JM Coetzee’s latest novel, an eminent, elderly writer is compiling short essays on political themes. Simultaneously, he scribbles down his feelings for a young and beautiful neighbour”

நோபல் பரிசு பெற்றவரின் புத்தம்புதிய நாவல்.

9. Choosing Sides: On Nick Cohen’s What’s Left? :: Dissent Summer 2007 Issue – இது புத்தக விமர்சனம்.

Taking Issue: Nick Cohen on What’s Left :: Dissent Fall 2007 Issue – இது ஆசிரியரின் பதில்

Taking Issue: Johan Hari Responds to Nick Cohen:: Dissent Fall 2007 Issue – இது விமர்சகரின் மறுமொழி

Is Nick Cohen right about the left? His critics reply | By genre | Guardian Unlimited Books – ‘எது இடதுசாரி?’ புத்தகத்திற்கு வல்லுநர்களின் கருத்துக்களைத் தொகுக்கிறார்கள்.

Guardian Unlimited | Comment is free | This duplicitous liberal-left is nothing but a straw man: “The claim by pro-war writers and their neocon allies that the left dumped its principles to embrace ‘islamofascism’ is absurd”

The Spectator.co.uk – The new anti-Islamist intelligentsia – இடதுசாரிகளின் குணாதிசயங்கள்

10. sp!ked review of books | Towards an age of abundance: “Ignore the critics of economic growth who claim that prosperity makes us unhappy. We need to win the war against scarcity once and for all, so that everyone can enjoy the benefits of longer, healthier and wealthier lives.”

சொர்க்கம் என்பது நமக்கு சுகாதாரமான பூமிதான்!

11. The Smart Set: A Dilettante’s Guide to Art – August 22, 2007: “1001 Paintings You Should See Before You Die acknowledges the question ‘What is Painting?’ The answer: ‘Who cares?'”

12. The Peace Racket by Bruce Bawer, City Journal Summer 2007: “An anti-Western movement touts dictators, advocates appeasement—and gains momentum.”

Sign and Sight

நண்பர் பரிந்துரைத்த தளம். அமெரிக்காவில் இருந்து கொண்டு ஐரோப்பாவை அறிந்து கொள்ள, பல இதழ்களின் முக்கிய கட்டுரைகளை அறிய பயன்படும். ஜெர்மனியில் இருந்து வெளியாகிறது.

Wants for Sale

அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்தால் இப்படித்தான் இருக்கும்.

உங்களுக்கு என்ன வேண்டுமோ வரைந்து கொடுங்கள்; ஓவியம் வாங்கப்படும். வேண்டியது கிடைக்கப்பெறுவீர்.

ஒருவருக்கு ஐ-போன் வேண்டும். $649.17 க்கு ஓவியத்தை கடை விரித்திருக்கிறார். இன்னொருவருக்கு ஜூலை மாச வாடகைதேவை.

இந்தத் தளத்தை ஆரம்பித்தவர்கள், ஏற்கனவே நியுயார்க் நகரத்தின் குப்பைகளைப் பொறுக்கியெடுத்து, அவற்றை குப்பியில் வெளித்தெரியுமாறு கலைநயத்தோடு அடைத்து ஐம்பது டாலருக்கு விற்றவர்.

உங்களுக்கு என்ன வேணும்?

How to find ‘News’ – Satrumun Special

சற்றுமுன்‘ தளத்திற்காக செய்தி சேகரிப்பில் ஈடுபாடு. அதன் பயனாக கிடைத்த துப்புகள் (டிப்ஸ்):

1. என்னுடைய நேரம் (அமெரிக்க கிழக்குக் கடற்கரை) மதியம் மூன்றரை மணியளவில் தினமணி நாளிதழ் வெளியாகும். தலைப்புகள் அனைத்தையும் மேய்ந்து விடுங்கள். பிடித்த, பகிரத்தக்க, கவர்ச்சியான (!?) செய்திகளை புது tabகளில் திறந்து வைத்துக் கொண்டே போகவும்.

2. சுரதா ‘பொங்குதமிழ்’ எழுத்துரு மாற்றி மூலம், விருப்பமான செய்திகளை மாற்றி, வலைப்பதிவில் பகிரவும்.

3. அலுவல் வேலைகளை முடித்து வீட்டுக்குக் கிளம்பி விடவும். காரில் சென்றால் என்.பி.ஆர். கேட்கவும். கேட்டதை வீட்டுக்கு சென்று, சிரம பரிகாரம் செய்தவுடன், கேட்டதை செய்தியாகக் கோர்க்கவும்.

4. காரில் செல்லாமல், இருவுள் (ட்ரெயின்) பாதைப் பயணம் என்றால், அன்றைய செய்தித்தாளைப் புரட்டவும். செய்தி விமர்சனங்களைத் தலையங்களைப் படித்தால் தங்களின் பிரத்தியேக பதிவுக்கு பிரயோசனம். நான்கைந்து வரித் துணுக்கு செய்திகளையும், தலைப்புகளை மட்டும் படித்தால் சற்றுமுன்னுக்கு பிரயோசனம்.

5. தூங்கப் போவதற்கு முன் ‘சன் டிவி’ செய்திகள் பார்க்கவும்.

6. துயில் கலைந்த பின் அமெரிக்க செய்திகளைப் பார்க்கவும். இந்தியக் கன்னல் (சேனல்) ஹெட்லைன்ஸ் டுடேயும் அமெரிக்காவில் சல்லிசாகக் கிடைக்கிறது. நேரடி ஒளிபரப்புல் ஆகிறது.

7. காலைக் குளம்பியுடன் மாலைமலர் செல்லவும். இந்தியாவின் மாலை; அமெரிக்காவின் காலை. பரபரப்பான செய்திகளின் தாயகம் மாலை நாளிதழ்கள். ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி, காபி/பேஸ்ட் செய்யவேண்டும்.

8. அலுவல் நுழைந்து, அன்றாட மண்டகப்படி நிறைந்தவுடன், கூகிள் செய்திகளை நாடவும். கூகிள் செய்திகளை நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு வளைத்து நெளிக்க முடியும். எவ்வாறு என்பதை அறிய இங்கு செல்லவும்.

9. அடுத்ததாக மின்மடலில் ‘சற்றுமுன்’ நிகழ்ந்தவற்றை அறியும் வசதியை ஏற்படுத்தவும். அமெரிக்காவுக்கு ‘சி.என்.என்.‘; ஐரோப்பாவுக்கு பி.பி.சி.. ப்ரேகிங் நியூஸ் கொடுக்க இது அவசியம்.

10. கொஞ்சம் ஆறின கஞ்சியைப் பொறுமையாகத் தெரிந்து கொள்ள, மின்னஞ்சலில் செய்தித் தொகுப்புகளைப் பெற்றுக் கொள்ளவும். பிபிசி, கார்டியன், இன்டெர்னேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் போன்றவை உலக நடப்புகளுக்கும்; என்.டி.டிவி இந்தியாவிற்கும்; நியு யார்க் டைம்ஸ் அமெரிக்காவிற்கும் உபயோகமாகும்.

11. அன்றைய தேதியில் அதிகம் பார்வையிடப்பட்டவற்றை அறிந்து கொள்ளவும். பிபிசி, நியு யார்க் டைம்ஸ், கார்டியன் முக்கியமானவை.

12. தமிழில் படிப்பவர்களுக்கு உள்ளூர் செய்திகள்தான் மதிப்பு. எனவே, தினத்தந்தி (மாலை மலரின் காலைப் பதிப்பு), தட்ஸ்தமிழ், தினமலர், தினகரன், தினபூமி ஆகிய தினசரிகளையும் பார்த்து விடவும்.

13. எல்லா ஊர் செய்திகளையும், அனைத்து செய்தித்தாளிலும் பார்த்தால் கடுப்பாகலாம். எனவே, ‘எங்க ஏரியா… நான் மாமூலாப் பார்த்துக்கறேன்’ என்று அமெரிக்கா, பிரான்சு என்று தொகுதி வாரியாகவோ; தினமணி, பிபிசி என்று கட்சி வாரியாகவோப் பிரித்து, ஒவ்வொரு வட்ட செயலாளரை ஒதுக்கவும்.

14. மிள்காய், இட்லி-வடை, பத்ரி போன்ற செய்திப்பதிவுகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வரவும்.

15. தமிழ் சிஃபி, வெப்துனியா, பரபரப்பு போன்ற இன்ன பிறரையும் விட்டு விடாதீர்கள்.

16. க்ளீவேஜ் காட்டாத சினிமா ஹீரோயின், சன் டிவி சீரியலில் தஞ்சம் புகுவார் என்னும் பழமொழி போல் புகைப்படங்கள் இல்லாத செய்தி நறுக்குகள், மக்கள் மனதில் தஞ்சம் புகா. நிழற்படங்களுக்கு என்றே பிபிசி போல் பலரும் சிறப்பு பக்கம் கொடுக்கிறார்கள். கவனிக்கவும்.

17. சரி… (ஆங்கில/புகழ்பெற்ற) வலைப்பதிவுகளில் எங்கு செய்தி கிடைக்கிறது? தனிப் பதிவுதான் இட வேண்டும்.

நேரம் கிடைக்கும்போது விட்டதைத் தொடரலாம்.

எனக்கு மறந்து போனதை, உங்களுக்குப் பயனுள்ளதாக படுவதை, நீங்கள் அனுதினமும் தவறவிடாமல் பின்பற்றுவதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

métier or Tamil blogging guide for dummies இன் தொடர்ச்சியாக இதை வைத்துக் கொள்ளலாம்.

Masthana… Masthana – Sun TV’s Dancing With the Stars

அமெரிக்காவில் கொஞ்ச காலமாக நிஜத்தை நாடகமாக்கி தொலைக்காட்சியில் ரியாலிட்டியைப் பார்க்கும் ஆர்வம். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு சாகசங்கள் புரிவதை Fear Factor, Survivor என்றார்கள். பெண்களும் பார்க்கவேண்டும் என்று சுயம்வரத்தை Bachelor, Fantasy Island ஆக்கினார்கள். Who wants to be a Millionaire, Are you smarter than a Fifth Grader என்று தொடர்ச்சியாக வினா விடை நேரங்களும் வந்தது.masthana masthana sun TV

பரிணாம வளர்ச்சியில் வந்த இன்னொரு நிகழ்ச்சி Dancing With the Stars. பெனலப் க்ரூசும் டாம் ப்ரேடியும் வருவார்கள் போல என்று தடுக்கி விழுந்ததில், ஐம்பதிலும் ஆசை வந்தவர்கள் ஆடல் கலை பழகினார்கள்.

கிட்டத்தட்ட அதே போல், விஜய் டிவியில் ‘ஜோடி #1’ துவங்க, சன் டிவியும் தொன்றுதொட்டு காப்பியடிக்கும் மரபில், சீரியல்களில் வளைய வருபவர்களை வைத்து ‘மஸ்தானா… மஸ்தானா‘ தொடங்கியிருக்கிறார்கள்.

தெரிந்த முகமாக இருவர். ‘செல்வி’ தேவிப்ரியா & ‘நினைவுகள்’ அம்மு.

நிகழ்ச்சி தேவலாம் என்பது ஒரு வரி விமர்சனம்.

என்றாலும்…

சன் டிவி தன் பார்வையாளர்கள் யார் என்பதைத் தெளிவாக புரிந்து, அவர்களை மட்டுமே எதிர்நோக்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை ‘அரசி’, கோலங்கள் பார்ப்பவர்களை நிலை நிறுத்த மட்டுமே பாடுபடுகிறது. நடன நிகழ்ச்சி என்றவுடன் கல்லூரியில் ஜாஸ், ஜைவ், டாங்கோ, வால்ஸ் பயில ஆரம்பித்தது பலருக்கும் நினைவுக்கு வந்து போகும்.

அதன் தொடர்ச்சியாக, ‘ஊ…ல.லா…’வின் நீட்சியாக மாணவர்களை, இளைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கலாம். இந்த மாதிரி மூச்சு வாங்கும் பாட்டன்களையும் குண்டு கத்தரிக்காய் வில்லிகளையும் கலந்து, மும்தாஜ் ஆட்டங்களைத் தொட்டு, சன் டிவி சீரியலில் வரும் ஜோடிகளின் வார இறுதியைப் பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக, புதுமைக்கு கால்கோள் இட்டிருக்கலாம்.

‘மஸ்தானா… மஸ்தானா’ ஆடல் அமைப்பில் வித்தியாசம் எதுவும் இல்லை. புகழ் பெற்ற பாடல்கள். தொப்புள் காட்டிய நாயகிகளுக்கு பதிலாக, விரசம் இல்லாத ஆடைகள். அதற்கு பரிதோஷமாக அபிநயங்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் உரசல்கள்.

ஊ…ல…லா‘விற்கும் மஸ்தானாவிற்கும் ஆக்கபூர்வமான வேறுபாடு என்று பார்த்தால் நடுவர்கள்.

மீனாவாகட்டும்; தருண் மாஸ்டராகட்டும். பளிச்சென்று பட்டதை, மனம் புண்படாமல், நகைச்சுவை உணர்வோடு போட்டு உடைக்கிறார்கள்.

சிவமணி போல் ‘ஆல் தி பெஸ்ட்’ தவிர உங்களுக்கு சொல்வளமே கிடையாதா என்று பெருமூச்ச விடாமல், குறைகளை உள்ளங்கோணாத வண்ணமும், பிறர் பின்பற்ற வேண்டிய நிறைகளைப் பாராட்டியும் மிக சிறப்பாக செய்கிறார்கள்.

இதுகாறும் பிணக்குகளை பிலாக்கணம் செய்ய வைத்து ஐந்து நாள்களை ஓட்டியவர்கள், நெடுந்தொடர் ஜோடிகளை பின்னிப் பிணைய வைத்து ஞாயிற்றுக்கிழமையை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

Dog Fightings, ASPCA, Euthanasia

தமிழ், ஹிந்தி, ஆங்கில சினிமாக் காட்சிகளுடன் பதிவுகளுக்கு பிள்ளையார் 786ப்பது சாஸ்திரோப்தமாக சிலாக்கியம்.

இராணுவ வீரன்‘ படத்திற்கு வில்லன் சிரஞ்சீவி, தேசிய நாட்டம், மேலாக்குப் போடாத ஸ்ரீதேவி எல்லாம் காவியமோ என்று மெச்சும் அளவுக்கு பண் பாடவைப்பார்கள். கள்ளோ என்று மிரளும் அளவுக்கு மதுவருந்திய சேவல் சண்டைகளும் நிறைந்த படம்.

“Part of the psychology of dog fighting is the same as other forms of animal cruelty – a lot of it is about power and control. The dog fighter sees his dog’s victory as having a direct reflection on his strength and manliness, which I think is one of the reasons that we see brutal treatment of animals that don’t perform well.”

BBC NEWS | Americas | Brutal culture of US dog fighting

‘இராணுவ வீரன்’ ரஜினி போல் ஸ்ரீதேவி ரம்பைகளை கவர் செய்ய நினைத்தோ; சிரஞ்சீவி சகாக்களைப் பந்தாட நினைத்தோ; மில்லியன் மட்டுமே வருமானமாகக் கொண்டதை உடைத்து சூதாட்டங்களின் மூலம் பில்லியனாக்க மேற்படியை எதிர்பார்த்தோ; அமெரிக்க கால்பந்து வீரர் மைக்கேல் விக் நாய்களுக்கிடையே இல்லாத கொம்பை சீவிவிட்டு புல் டாக் பந்தயம் நடத்தி வந்து மாட்டிக் கொண்டும் விட்டார்.

செய்திகளும் தொடர்பான அலசல்களும் படித்தவுடன் எழுந்த கேள்விகள்:

  1. குதிரைகளை ஓட்டப்பந்தயத்தில் ஓட விடுகிறார்கள். ஓடி ஓடி களைத்துப் போய் அசந்தர்ப்பமாக கால் முறிந்தால் தீர்த்துக் கட்டும் குதிரை உரிமையாளர்களுக்கும் இந்த மாதிரி நாய்ச்சண்டை ரசிப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
  2. விதவிதமாக மார்பு, கை, கால் என்று வறுத்து, அவித்து ருசித்து சாப்பிடுவதற்காகவே கோழிப்பண்ணை வைத்திருப்பவர்களுக்கும்; ரசனைக்காக மோதவிட்டு வேடிக்கை பார்த்து குதூகலிப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
  3. நிறைய செல்லப்பிராணிகளை மீட்டெடுத்து விட்டால், அனைத்தையும் பராமரிக்கப் போதிய இடம்/பொருள்/ஏவல் இல்லாததால் கருணைக் கொலை செய்வதைப் பரிந்துரைக்கும் மனேகா காந்தி/அமலா க்ரூப்புக்கும் விக் போன்ற விளையாட்டுப் பிள்ளைகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

அவங்க ‘அச்சச்சோ… பாவம்’னு கத்தி போடுகிறார்கள். இவர்கள் ‘ஆஹா… கலக்கல்’னு பேஷ் கொட்டுகிறார்கள்.
தமிழ், ஹிந்தி, ஆங்கில சினிமாக் காட்சிகளுடன் பதிவுகளுக்கு கைநாட்டு இலச்சினையிடுவது ‘மண் வாசனை’ விஜயனுக்கு வைராக்கியம்.

நாங்கோரி என்ற உறுப்பினர் – ஆபிதீன்

  • நெருங்கிய நண்பனொருவனால் திடீரென நான் படுகுழியில் தள்ளப்பட்டு, அதிலிருந்து மேலேற முயற்சிக்கும்போது என் தலையில் குட்டியவர்களைத் திட்டியவர் இந்த மாக்கான். குட்டியவர்களின் நோக்கம் உண்மையிலேயே என்னைத் திருத்துவதுதான் என்று நான் சொன்னபோது அன்பின் மிகுதியால் , ‘துப்பு கெட்டவன்’ என்று என்னையும் திட்டியவர்.
  • ‘நீ துப்புன எச்சிலை நான் முழுங்கிட்டேன். எச்சில் எச்சிலோட போச்சு. நமக்குள்ள சண்டை வாணாம்’ என்று வீரத்தோடு பின் தங்கியவனுக்குத்தானே துப்பு கெட்டவன் என்று பெயர்
  • கிளப்கள் தொலையட்டும், இத்தனை வருடங்களுக்குப் பிறகு வலைப்பதிவுகள் எத்தனை சுதந்திரவெளி கொண்டதாக மாறிவிட்டது. எந்தப் பெரிய பத்திரிக்கையின் தயவும் தேவையில்லாமல், தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிடும் விதமாய் எவ்வளவு பேர் அற்புதமாக எழுதுகிறார்கள். இந்த அ, த, சு, வெ மற்றும் அந்த க,பெ,ர,சியின் தமிழும் பன்முகத் திறமையும் மலைக்க வைக்கிறது. காலை எழுந்ததுமே தன் கடன்களைக் கூட முடிக்காமல் கருத்து சொல்ல புறப்பட்டு விடும் வெட்டி வீரர்களைப் போலல்லாமல் விஷய ஞானத்தோடு எழுதுகிறார்கள். பிறமதத்தினரை மதிக்கும் இவர்கள் மேல் பெரும் மரியாதை வருகிறது. இவர்கள் தொடாத துறையும் இல்லை.

முழுக்கதையும் படிக்க

Tom Tancredo for President of USA

1. Tancredo Takes a Tough Stance – The Caucus – Politics – New York Times Blog: “Tancredo said that the United States should reserve the right to bomb Islam’s two holiest sites, Mecca and Medina, in retaliation for a major terrorist attack on American soil. “If it is up to me, we are going to explain that an attack on this homeland of that nature would be followed by an attack on the holy sites in Mecca and Medina,” Mr. Tancredo told Iowa voters last week.”

2. Tom Tancredo’s final solution. – By Timothy Noah – Slate Magazine: “Meet the biggest fool running for president.”

3. Raymond J. Learsy: The Madness of Congressman Tancredo’s Fulminations Threatening Mecca and Medina – Politics on The Huffington Post

A Life In Books: Jon Krakauer – Newsweek

It isn’t libelous to say that Jon Krakauer likes to get high. Before he was anacclaimed journalist, he was a revered rock climber, having challenged peaks like Mount Everest. Here are the books he revisits most often when he’s closer to sea level.

The Dead Father” by Donald Barthelme. A breathtakingly original meditation on the volatile bond between fathers and sons.

Against Love” by Laura Kipnis. A provocative deconstruction of modern marriage presented with magnificent wit.

House” by Tracy Kidder. The exquisitely written account of building a home. It made me yearn to become an accomplished writer.

The Journalist and the Murderer” by Janet Malcolm. An exceedingly unflattering look at journalism’s underbelly.

For the Time Being” by Annie Dillard. The most engaging book I’ve encountered about the nature of evil and other great mysteries.

A Certified Important book you still haven’t read:

Principia Mathematica” by Alfred North Whitehead and Bertrand Russell. I bet fewer than 5 percent of the people who claim to have read this actually have.

A classic that, upon rereading, disappointed:

In Cold Blood” by Truman Capote. After I learned of his boast that he wrote all the dialogue from memory, much of it struck me as having been invented.

Ooh.. La La… – Sun TV ‘Reality Show’ on Music Group Selections

நாலைந்து வாரமாக வரும் ‘ஊ..ல..லா…‘வின் ஒன்றிரண்டு வாரங்களைப் பார்க்க முடிந்தது.

இத்தனை பேர் விண்ணப்பித்ததில் வெரைட்டியாக தேர்ந்தெடுப்பது கஷ்ட காரியம். ஏற்கனவே பாடியதை சிடியில் பதிந்து தர வேண்டும் போன்ற விதிமுறைகளால், சன் டிவி தேர்வாளர்கள் குழுவிற்கு வேலை குறைந்திருக்கும்.

ஏ ஆர் ரெஹ்மான் பங்குபெற்ற ம்யூசிக் க்ரூப்பின், ‘தலை’யாக பால் ஜேக்கப் இருந்திருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். அன்று தலைவராக இருந்தவர், இன்று வாலாக இருக்கிறார். அப்பொழுது ஓரமாய் போஸ் கொடுத்த ரெகுமான், இன்று நடுநாயகமாக வளர்ந்திருக்கிறார்.

நிகழ்ச்சியை compere செய்யும் இருவருமே செம இளமை & துள்ளல். பின் வழுக்கையைத் தடவிப் பார்த்து, நரையை மறைத்துக் கொண்டாலும், மெட்ரோ அடுத்த ஜெனரேஷனைப் பார்க்கும்போது, வாழ்க்கை/வேலை/இறப்பு என்று பயம் எட்டிப் பார்த்து, ‘ஹெட்லைன்ஸ் டுடே’விற்கு கன்னல் மாற்றிவிட்டு, சோபாவில் சாயத் தூண்டுகிறது.

ஹெட்லைன்ஸ் டுடே குறித்துப் பேச்சு எழும் சமயத்தில், தெளிவாகப் பேசும் பிரண்ணாய் ராயும், புரியாத ஹிந்தியைக் கூட எளிமையாக்கும் துபேயும் கொண்ட தூர்தர்ஷன் காலங்கள் நினைவுக்கு வரும். ‘என்னதான் இவ்வளவு நியுஸ் சேனல் வந்தாலும், அந்தக் கால அலசல் போல் வருமா?‘ என்று ஹெட்லைன்ஸ் டுடே அங்கலாய்க்க வைக்கிறது.

இந்த கருத்துக்கும் விக்கியின் தமிழ்ப்பதிவர்கள் குறித்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. தலைப்புச் செய்திகள் இடும்போது பின்னணி இசை போடுவதில் குழப்பம்; செய்திகளை சகஜமாகத் தருகிறேன் என்று அரட்டை பாணியில் கொடுக்க முனைவது சரி – ஆனால், தத்துபித்து மொழியில் வளமும் இன்றி, ஆராய்ச்சியில் ஆழமும் இன்றி, பரப்பில் அகலமும் இன்றி, ‘முருகா… என்ன கொடுமை இது’ என்று சொல்லும் ‘ஹெட்லைன்ஸ் டுடே’ கண்டால் சன் செய்திகளின் தரம்/மணம்/குணம் மெச்சுவது சர்வ நிச்சயம்.

மீண்டும் ‘ஊலலா’விற்கே கன்னல் மாற்றிக் கொள்வோம்.

திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை என்று சென்னை தவிர்த்த கிராமங்களுக்கும் சென்று தோண்டித் துழாவியதை பெரிதாக பிரஸ்தாபித்தார்கள். வியாபார காரணமோ அல்லது நவநாகரிக மயக்கமோ அல்லது பாப் கலாச்சார மோகமோ… ‘யாமறியேன் அல்லாவே!’ ஒரு குத்துப் பாட்டுக் குழு, நாட்டுப் புற இளையராஜா மெட்டமைப்பு, வில்லுப்பாட்டு வேலன்கள், வேட்டி கட்டிய வெள்ளந்திகள் எல்லாரையும் ஒதுக்கி அறவே புறந்தள்ளி விட்டு, டிஸ்டில்ட் வாட்டரில் ஸ்ட்ரா போட்டு அருந்துபவர்கள் மட்டுமே தேர்வானார்கள்.

அங்கேயே சப்.

அதற்கடுத்ததாக பேசத் தெரியாத மூவர் அணியாக நடுவர் குழு அடுத்த சப்.

பால் ஜேக்கப் மண்டையாட்டுவார். கையை அசைப்பார். காலைத் தூக்கி நின்றாடுவார். கைலியை ஃபேஷனாக முண்டாசு தட்டுவார். மைக் கொடுத்தால் மௌனியாவார்.

சிவமணி குளிர் கண்ணாடியில் தஞ்சம் அடைந்திருக்கிறார். ஆங்கிலத்துக்கு நடுவே தமிழ் வார்த்தைகள் வருவது ஒகே. அதுவும் வராத நேரங்கள் அதிகம்.

இருப்பதற்குள் வசுந்தரா தாஸ் தேவலாம். மனதில் பட்டதைப் போட்டுடைக்கிறார். நல்ல கணிப்புகள். ஆனால், கூட கம்பெனிக்குத்தான் ஆள் லேது.

ஊலலா பங்கேற்பாளர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்களாகவோ, கல்லூரி மாணவர்களாகவோ இருப்பவர்கள். அல்லது அவ்வாறு காட்டிக் கொள்பவர்கள். பணத்தின் கருக்கு கலையாதவர்கள்.

பாடல் வரிகள் என்றால் ‘நடுநடுவே ரெண்டு மானே போட்டுக்க… தேனே சேர்த்துக்க’ என்னும் அலைவரிசையில் இருப்பவர்கள். வெற்றி பெறத் தேவையான பாடகரை அமுக்கும் பயிற்சியில் கைதேர்ந்தவர்கள். கீபோர்டிந் சூட்சுமங்களும், எலெக்ட்ரிக் கிடாரில் அபிநயமும் பிடிக்கத் தெரிந்த நண்பர்கள் கொண்டவர்கள். நாதஸ்வரமும் கடமும் மோர்சிங்கும் ஜலதரங்கமும் அலர்ஜியானவர்கள்.

சுயம்புவாக திறமை கொண்டவர்களையும் வார்ப்புரு எஞ்சினுக்குள் அடைத்து, பால் ஜேக்கப் ஆலையில் உருமாற்றி, ‘இப்படித்தான் இருக்க வேணும் ட்ரூப்பு’ என்று சீன தொழிற்சாலை தயாரிப்பு போல் வெளியாக்கும் ‘பழைய ட்யூன்; புதிய க்ரூப்’ வித்தை – ஊ… லலா…

1. Band Hunt with AR Rahman – Oohlalala Official Site

2. Music « Sun rises.. Sun sets… – Episode Experiences