Monthly Archives: ஜூன் 2007

Happy Independence Day (US) – July 4th Movies

இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?

ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?

பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கண்ணடித்து என்ன பயன்?

சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்?

நான்கு முக்கியமான படங்கள் வெளியாகிறது.

 1. ராட்டடூயி (மீண்டும் சிறாராக மாற)
 2. ஈவினிங் (சேரியமாய் மாலையை புத்தகப் படத்துடன் கழிக்க; மெரில் ஸ்ட்ரீப் தாய் எட்டடியுடன் மகளையும் காண)
 3. சிக்கோ (மைக்கேல் மூரின் கனடா கிட்டப்பார்வை & லண்டன் குறும்பார்வை; புலம்பல் + கண்டனம்)
 4. டை ஹார்ட் 4 (ஹாலிவுட் ரஜினியின் ‘சிவாஜி’)

அதிரவில்லை!

குருஜியின் அரசியல் வம்பு தும்பு…

From Dinamani

“அதிருதில்ல…?”

“எங்கே சிஷ்யா அதிருது, பட்டணத்தில் அதுவும் பெரிய மல்ட்டிப்பிளக்சில்தான் அதிருதே தவிர மற்ற இடங்களிலெல்லாம் காற்றல்லவா அடிக்குது…?”

“அதைத்தான் சொல்ல வருகிறேன் குருவே..போட்ட முதல் கிடைக்காது என்று புலம்பித் தீர்க்கிறார்கள் நூற்றுக்கணக்கான திரையரங்க உரிமையாளர்கள். பத்தாவது நாளே முக்கால்வாசி தியேட்டர்கள் காற்றடிக்கத் தொடங்கி விட்டதாம். இவர்களது கூக்குரலால் திரையரங்க வட்டாரமே அதிருதுன்னுதான் சொல்ல வந்தேன்..’

“எப்படியும் ஓட்டுவார்கள் என்று சொல்லு..”

“அவரவர் திரையரங்குகளில் ஓட்டிக் கொள்ளலாம். மற்றவர்கள் பாவம் ஓடத்தான் வேண்டும் போலிருக்கிறது. சூப்பர் என்றார்கள். ஒரு முறை பார்க்கலாம் என்றார்கள். இப்போது ஓசையே அடங்கிவிட்டது போலிருக்கிறது.”
Continue reading

Tamil Blog 30 – Index (Jun 28)

மார்ச் 29 அன்று பிள்லையார் சுழி போட்டது. கொஞ்சம் மாற்றங்களுடன்…

டௌ ஜோன்ஸ், FTSE மாதிரி தமிழுக்கு ஒரு 30 போட்டால் (எந்த வரிசையும் இல்லை)

க்வாண்டிடி & க்வாலிட்டியை முன்வைத்து இந்த முப்பதைத் க்வார்ட்டருக்கு ஒரு தடவையாவது தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க எண்ணம்.

USA Primary & Presidential Series – 4: ThinkProgress & Vote-Smart

தேர்தல் குறித்த தகவல்களை, அதிகம் பிரபலமாகக் கூடாத விஷயங்களை அறிய, பின்னணி காய்நகர்த்தல்களை தெரிந்து கொள்ள இரண்டு வலையகங்கள்:

1. Think Progress

சிறு சிறு தகவல். அதன் தொடர்பான விழியம் என்று வல்லுநர்கள் முதல் வாக்காளர் பட்டியலில் இல்லாத என்னைப் போன்றோர் வரை அனுதினமும் பார்வையிடும் தளம்.

அமெரிக்காவில் என்ன பிரச்சினைகள் முக்கியமானவை என்று அறிய நேரிடும்போது இரத்தக்கொதிப்பு அதிகமாகலாம்.

2. Project Vote Smart – American Government, Elections, Candidates and Voting

ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றரை வருடம் இருந்தாலும், பிரச்சாரம் அனல் பறக்கிறது. அன்றைய தேதியில் என்ன சொன்னார்கள், எப்படி எதிர்வினைத்தார்கள், எங்கே நானூறு டாலரில் சிகையலங்காரம் நடந்தது என்பதுதான் தெரிகிறது.

இவர்கள் வேட்பாளர்களின் ஜாதகத்தை கொடுக்கிறார்கள். சட்டசபையில் எப்படி வாக்களித்திருக்கிறார், தற்போதுள்ளதாக பறை சாற்றும் கொள்கைப்பிடிப்புக்காக எந்த அளவு கொடி பிடித்திருக்கிறார், தேர்தல் நிதியை எங்கிருந்து கையேந்துகிறார், யாருக்கு விசுவாசமாக வாலாட்டுவார என்றெல்லாம் அறிய முடியும்.

மாகாணவாரியாக உள்ளூர் பிரச்சினைகளைக் குறித்தும் விரிவான அறிமுகம் கிடைக்கிறது.

USA Primary & Presidential Series – 3: Bloomberg as Independent

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் குட்டையை குழப்புவதற்கு புதியதாக ப்ளூம்பர்க் குதித்திருக்கிறார். தற்போது நியு யார்க் நகரத் தந்தை (மேயர்) பதவி. நாளைக்கு சுயேச்சை வேட்பாளர்?

இந்த தடவை நியு யார்க் நகரை சேர்ந்தவர்களின் ஆக்கிரமிப்பு பரவலாகக் காணப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் ஹில்லரி க்ளின்டன். தற்போது நியுயார்க்கில் இருந்து செனேட்டராக இருக்கிறார்.

எதிர் கட்சியை சேர்ந்த முன்னணி வேட்பாளர் ரூடி ஜியூலியானி முன்னாள் நகரத் தந்தையாக இருந்தவர். அவருக்கு இருக்கும் USP-ஏ 9/11 அன்று மேயராக இருந்ததுதான்.

‘்தன்னாததன்னால் இன்னொருத்தரின் வெற்றி வாய்ப்புக்கு பங்கம் வந்தால் நிச்சயம் போட்டியிட மாட்டேன்’ என்னும் வாக்குறுதியுடன் வாக்காளர்களின் நாடித்துடிப்பை மோப்பம் பிடிக்க ஆரம்பித்துள்ளார் ப்ளூம்பெர்க். ஆல் கோர்-இன் வெற்றி வாய்ப்பை நோகடித்து, ‘எனக்கு ஒரு கண் போனால், சுதந்திரக் கட்சிக்கு ரெண்டு கண் பணால்!’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த ரால்ப் நாடருக்கு இந்த மேற்கோள் சமர்ப்பணம் என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.

பத்மா சொன்னது போல் ஆல் கோர் துணை ஜனாதிபதியாக ஒத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால், நியூஸ்வீக் போன்ற பத்திரிகைகள், ப்ளூம்பர்க் கட்சி சார்பற்றவராக ஆனதற்கு முழு முதல் காரணமே இதற்காகத்தான் என்று மெழுகுவர்த்தி அணைத்து சத்தியம் செய்கிறார்கள்.

1. George F. Will: Bloomberg to the Rescue? – Newsweek George F. Will – MSNBC.com: He is said to represent ‘post-partisanship,’ but if so—if he is not a partisan of any large, controversial causes—why is he needed?

2. Michael Bloomberg’s Knightly Ambitions

3. Alter: The Mayor’s Veep Scenario – Between the Lines: “Alpha males always rule out running for vice president when the subject comes up. But they almost always wind up signing on.”

கடைசியாக தற்போதைய கருத்துக் கணிப்பு நிலவரம்: Poll: June 22, 2007 – Newsweek Politics

கொசுறு: டெமொக்ராட்ஸ் சார்பாக ஹில்லாரி வேட்பாளரானால், ப்ளூம்பர்க் ஒண்டிக் கொண்டு துணை ஜனாதிபதியாக முடியாது. இருவரும் நியு யார்க் மாகாணத்தை சேர்ந்தவர்கள். ஆனால், வேறு எவர் நின்றாலும், (முன்னாள் நகரத் தந்தை ரூடி ஜியுலியானி உட்பட) இவரை சகாவாக சேர்த்துக் கொள்ள முடியும்.

Communist Condemnations & Nuclear Energy or Political Bombs

ஏப்ரல் 26, 2006 செர்னோபில் அணுஉலை வெடிப்பின் 20வது ஆண்டு. சாவுக்கணக்குகள் பற்றி பல்வேறு தகவல்கள் இருக்க கிரின்பீஸ் அறிக்கையின் படி 92,000 பேர் கொல்லப்பட்ட இவ்விபத்தில் உருவான கதிரியக்க மேகங்கள் ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் உக்ரைனிலும் பத்து நாட்கள் வரை நீடித்தது. நார்வேயின் இறந்துபோன மானின் இறைச்சியில் கதிரியக்க பாதிப்பு இருந்தது.

  • தைராய்டு சுரப்பியின் கோளாறுகள்,
  • புற்றுநோய்,
  • ரத்தப் புற்று

  உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்ட பல நாட்டு மக்களை இன்னமும் வாட்டுகிறது. கதிரியக்கம் 1600கி.மீ. சுற்றளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கதிரியக்கத்தின் விளைவாக சாவுகள் இன்றும் தொடர்கின்றன.

  1. அணு ஆயுத கப்பலை எதிர்க்க வாருங்கள்! & அமெரிக்க அணு அரக்கனே சென்னைக்குள் நுழையாதே!
  2. சீன அதிபரின் இந்திய விஜயம் (நவம்பர் 20, 2006): ஹூவின் வருகைக்குச் சரியாக 5 தினங்கள் முன்பு, சீனத் தூதர் சன் யுக்ஸி ‘அருணாசலப் பிரதேசம் சீனாவிற்குச் சொந்தமானது’ என்கிறார்.
  3. அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா (மே 27, 2007): வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது.
  4. கேரளாவில் மார்க்சிஸ்டுகளின் மூளைச்சலவை (காலச்சுவடு கடிதம்)
  5. சமூக சேவகி மேதா பட்கர் கைது: அன்றைய ஜெயலலிதாவின் காவல்துறையையும், நரேந்திர மோடியின் காவல்துறையையும் விட புத்ததேவின் காவல்துறை நடவடிக்கை மோசமானது.
  6. கலியுகக் கண்ணன்‘ ஜோதிபாசு: மகாபாரதத்தில் கிருஷ்ணன் எப்படியோ அதுபோல மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலைவர் ஜோதிபாசு கலியுகக் கண்ணனாக இருக்கிறார்.
  7. வஞ்சித்த செர்னோபில் :: அசுரன் (விழிப்புணர்வு & கீற்று)
  8. அணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி – 24.06.2007) – ஜி.எஸ்.எஸ்.
  9. அணுசக்தி உடன்பாடும் தாராப்பூர் அணுமின் நிலையமும் (சந்திப்பு & தீக்கதிர்): யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்கவும் அமெரிக்கச் சட்டம் இடம் தராது; ரஷ்யாவிடமிருந்து வாங்கினால் அது உடன்பாடு மீறல்; வாங்காவிட்டால் தாராப்பூர் அணுமின் நிலையத்தை மூடவேண்டியதுதான்.
  10. ‘இருளாற்றலை’ விளக்கும் புதிய அறிவியல் கொள்கை :: சி.இ. சூரியமூர்த்தி

  Political, Topical & Other Cartoons – Dinamani

  communists prediction prathibha ghost belief dinamani 28 adade

  Azhagiri madurai elections victory Adade30

  Continue reading

  Chewing now… Pondering later

  • Never confuse motion with action – Benjamin Franklin
  • Before we set our hearts too much on anything, let us examine how happy are those who already possess it.
  • A friend to all is a friend to none.
  • A great many people mistake opinions for thoughts.
  • Speak not of my debts unless you mean to pay them.
  • Before you criticize someone, walk a mile in his shoes. That way, if he gets angry, he’ll be a mile away, and barefoot.
  • When I die, I want to go like my grandfather did, peacefully in his sleep, not yelling and screaming, like all the passengers in his car.
  • The more you know, the less you understand.
  • To let a fool kiss you is stupid, to let a kiss fool you is worse.
  • War doesn’t decide who’s right, only who’s left.

  Eight Random Facts Meme

  தற்புகழ்ச்சியில் கூட தன்னடக்கத்துடன் பட்டியலிட்ட வெங்கட், என்னையும் அழைத்து இருக்கிறார். தீக்குச்சியைக் காட்டினால் கை பொத்துப்போகும் அளவு பொறாமை எழ இகாரசும் தொடர்ந்திருக்கிறார்.

  நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.

  1. மைலாப்பூரில் இருக்கும் வீட்டில் இருந்து 5-கே பிடித்தால் தரமணி செல்லும். அங்கேதான் சி.எஸ்.ஐ.ஆர். இருக்கிறது. இரண்டு மாச ப்ராஜெக்ட். ஊழியம் செய்பவர்களே உல்லாசமாக இருப்பதால், விருப்பபட்டதை செய்து முடித்தால் போதும். எனினும், நிறைய சாதிக்க வேண்டும் என்னும் வெறி. பெரிய நூலகம். மேல் அடுக்கில் தேவைப்படும் புத்தகத்தை எடுக்க ஐந்தடி ஐந்தங்குலத்தில் இருந்தாலும், உச்சாணிக் கொம்பில் ஏறும் மன உறுதியுடன் தாவி எடுத்ததில் பாண்ட் ‘டர்’ சத்தம் போட்டது.

  பாதுகாப்பான இடத்துக்கு சென்று, ஆராய்ந்ததில் கிழிந்தது தெளிந்தது. காலை பத்து மணிக்குக் கிழிந்த கால்சட்டையுடன் மாலை ஐந்து மணி வரை நாசூக்காக, எவருக்கும் வெளிக்காட்டாமல் பணியகத்தில் காலந்தள்ளியது முதற்கட்ட சாதனை. அதன் தொடர்ச்சியாக பேருந்து நிறுத்தத்தில் கடைசியாக ஏறி, ப்ரொஃபஷனலாக சாய்ந்து அட்ஜஸ்ட் செய்து, மயிலை குளத்தில் ஸ்டைலாக இறங்கி. புத்தகத்தை பின்வாக்காக வைத்து, மறைத்து, சீட்டியடித்து வீட்டுக்கு வந்தது பெருஞ்சாதனை.

  2. வீடு வாங்கினால் தோட்ட வேலை, களை பிடுங்கல், தண்ணீர் பாய்ச்சல், மராமத்து பார்த்தல், பனி நீக்கல், இலை திரட்டல் என்று வீட்டு வேலை குவியும். அதைத் தவிர்க்க டிமாண்ட் x சப்ளை, பூம் x பஸ்ட் என்று தேவையான அளவில் மேக்ரோ, மைக்ரோ பொருளாதாரத்தை வாதிட்டு மனைவியை பயமுறுத்தி, வாடகை வீட்டிலேயே அமர்த்தியது முதல் சாதனை.

  நாளிதழ் படித்து, நாட்டுநடப்பு ஆராய்ந்து மனைவிக்கு பொருளியல் கொள்கைகளில் எதிர் கருத்துக்களை வைக்கத் தெரிந்தவுடன் ‘ஃப்ளாட்’ வாங்கி, எல்லாவற்றையும் அவுட்சோர்ஸ் செய்துவிட்டு, தொடர்ந்து வலைப்பதிவதற்கு சால்ஜாப்பு கண்டுபிடிப்பது பெருஞ்சாதனை.

  3. ‘இந்தியன்’ படம் பார்த்தால் இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் எப்படி வழங்கப்படுகிறது என்று தெரியும். இண்டெர்நேஷனல் ட்ரைவிங் லைசன்சும் அப்படித்தான் கைக்கு கிடைத்தது. சைக்கிள் ஓட்டத்தெரியாது. பைக் பின்னாடி உட்கார கூட பயம். சாலை விதிகள் எல்லாம் நடராஜாவாக மட்டும் அறிவேன். ஸ்டியரிங் தெரியும்; ப்ரேக் தெரியும். அதை வைத்து நியுஜெர்சியில் இருந்து, நூறு மைல் தூரம் தள்ளியுள்ள நியு யார்க் மாநகரம் வழியாக லாங் ஐஸ்லண்ட் செல்ல முடிவெடுத்தது முதல் சாதனை.

  வண்டியை நெடுஞ்சாலையில் இருந்து வேகத்தைக் குறைத்து வெளியேற்றத் தெரியாமல், விளக்குக் கம்பத்தில் மோதி, டயர் பஞ்சரான பிறகும், வெறும் சக்கரத்தின் துணையோடு, தீப்பொறி பறக்க, சுற்றி ஓட்டுபவர்கள் கதிகலங்க, அஞ்சாநெஞ்சனாக, இலக்கை அடையும் வரை காரையும் உயிரையும் கையில் பிடித்து ஓட்டிசென்றது பெருஞ்சாதனை.

  4. பின் லாடன் செப் 11 அரங்கேற்றி வேலை வாய்ப்பைக் குறைத்த காலம். எச்-1பி விசாவில் இருந்தேன். 9-5 என்று செக்காட்டியது போதும் என்று கழற்றி விட்டார்கள். தொலைத்தொடர்புத்துறை படுத்துக் கொண்ட நேரம். அந்தத் துறையில் இயங்கிய என் நிறுவனமும் திவால் ஆகியது. பழைய கம்பெனியில் என்னுடைய புத்தம்புதிய நிரலியின் ஐந்து நிமிட சேமிப்பினால் 9,600,000 டாலர் சேமிப்பு ஏற்பட்டது என்று கணக்கு காட்டியது சாதனை.

  அதை நம்பி வேலைக்கு எடுத்துக் கொண்ட இடத்தில் இன்னும் காலந்தள்ளுவது பெ.சா.

  5. லண்டனுக்கு இதுவரை சென்றதில்லை. ஹீத்ரோவில் கால் மட்டுமே பதித்திருக்கிறேன். ஹனிமூனுக்கு எங்கு செல்லலாம் என்று தோழி வினவுகிறாள். கிறிஸ்துமஸ் சமய லண்டனை விவரிக்க ஆரம்பிக்கிறேன். அவளுக்கு என்னைத் தெரியும். புதுகணவன் ‘எத்தனை முறை சென்றிருக்கீங்க?’ என்று கேட்டது சா.

  இன்றளவும் ஆஸ்திரேலியா, அமேசான் என்று அனைவருக்கும் வாய்ப்பந்தலிலே திட்டம் தீட்டித் தருவது பெ.சா.

  6. பேய்கள் என்றால் பயமில்லை (E – T a m i l : ஈ – தமிழ்: ஆவியுலக அனுபவங்கள்) என்று சொல்லிவிட்டு மூன்றடுக்கு வீட்டில் தன்னந்தனியாக ‘பூத்’ பார்க்க விழைகிறேன். இருபது இன்ச் டிவி ரொம்ப பயமுறுத்தவில்லை. நடுநிசி வரை நிம்மதியாகப் பார்த்து முடித்துவிட்டு, வராத ஜி-மெயில்களை மீண்டும் எதிர்நோக்கி சரிபார்த்து, தூங்கப் போவதற்கு முன் பாத்ரூமில் நுழைய கதவைத் திருகினால் ‘ஷாக்’.

  கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருக்கிறது. வீட்டிற்குள் எவரும் வந்திருக்க வாய்ப்பே இல்லை. வாசற்கதவிற்கு அருகே தேவுடு காத்து, சோபாவில் இருந்திருக்கிறேன். வெலவெலத்தாலும், பூட்டை வெளியில் இருந்து திறந்து, தெரிந்த எல்லா சுலோகங்களும் முனகிக் கொண்டே, ‘காற்று பலமா அடிச்சிருக்கணும்!’ என்று அறிவியல்பூர்வமாக தெளிந்தது சா.

  பாத்ரூமுக்கு வந்த காரியத்தை முடித்துவிட்டு, கண்ணாடியில் இன்னும் சிலர் தெரிவது போல் தெரியும் என்று அனுமாணித்து, மூக்குக்கண்ணாடியைக் கழற்றி வைத்து -5 பவர் கொண்ட் அரைக்கண்ணுடன் முகக்கண்ணாடி தரிசித்து, வீட்டிற்குள் ஏதாவது இருக்குமோ என்று பயத்தில் சிறப்பு சாமிகளை அழற்றிவிட்டு, உறங்கிப் போனது பெ.சா.

  7. மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்து, அடுத்த நாள் மதியம் ஒன்றரை வரை நித்திரை பயின்றது கல்லூரி சா.

  குளிர்காலத்தில், தண்ணீரை வெந்நீராக்கி, அந்த வெம்மை அரை நிமிடத்தில் காற்றில் கரைவதற்குள் குளிக்கப் பொறுமையின்று பதினேழு நாள் முழுகாமல் இருந்து, ஆஃப்டர் ஷேவ் மட்டும் ப்ரோஷணம் செய்து மணம் பரப்பியது பெ.சா.

  8. எண்ணி ஒரு குறிப்பிடத்தக்க செயலை விளையாட்டிலோ, சமூகத்திலோ, படிப்பிலோ, தொழிலிலோ, குடும்பத்திலோ பாடல் பெறுமளவு சாதனை செய்யாமலே எட்டைப் பட்டியலிடுவது சா.

  ‘இவன் இயல்பாகவே அவையடக்கமும் கூச்சமும் கொண்டவன் போல’ என்னும் இமேஜை பாதுகாப்பது பெ.சா.

  இனி ஆட்டத்துக்கு அழைக்கும் எட்டு பேர்.

  1. இலவசகொத்தனார்
  2. ஜி
  3. பொன்ஸ்
  4. பத்மா அர்விந்த்
  5. சோடா பாட்டில்
  6. நிர்மல்
  7. கப்பி
  8. வெட்டி

  விளையாட்டின் விதிகள்:

  1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

  2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

  3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

  US Elections – Recap (2004 & 2006)