Monthly Archives: ஒக்ரோபர் 2007

இந்த வருடத்தின் சிறந்த வலைப்பதிவு எது? (பரிந்துரைகள்)

தற்போதைக்கு சில பரிந்துரைகள் (விடுபட்டவை கூட்டப்படும்; தவறவிட்டதை பின்னூட்டத்தில் சுட்டலாம்)

 1. தமிழன்
 2. – அட்சய பாத்திரம்

 3. இன்று – Today
 4. – சரக்கு தீர்ந்து போச்சா?

 5. ஓசை செல்லாவின் ‘நச்’ ன்னு ஒரு வலைப்பூ
 6. – இளைஞர்களின் நாடித்துடிப்பு

 7. கூமுட்டை என்னா சொல்றாருன்னா…..
 8. – யூ ட்யூப் வரும் முன்னே; பின்னூட்டம் வராது பின்னே.

 9. தமிழில் பங்குவணிகம்
 10. – படித்தால் மட்டும் பணம் வருமா?

 11. தாளிக்கும் ஓசை
 12. – பார்த்தால் பசி எடுக்கும்

 13. எண்ணப் பரிமாணங்கள்
 14. – பெரிய விஷயம்

 15. புரட்டிப் போட்டப் படைப்புகள்
 16. – படித்துவிட்ட மேதை

 17. உண்மைத் தமிழன்
 18. – சுருக்கெழுத்து பயிலாதவர்

 19. தனிமையின் இசை
 20. – ஏதோ சொல்ல வருவதாக எண்ணவைப்பவர்

 21. இனியது கேட்கின்
 22. – எனக்கு சண்டையும் வேண்டாம்; சந்நிதியும் வேண்டாம்

 23. நாஞ்சில் மைந்தன்
 24. – No gas; Just hot!

 25. செப்புப்பட்டயம்
 26. – ரொம்ப காலமா எழுதியும் அலுக்கவைக்காதவர்

 27. உள்ள(த்)தை எழுதுகிறேன்.
 28. – அசராமல் ஆடினாலும் டெண்டுல்கர் ஆகாதவர்

 29. கபீரின் கனிமொழிகள்
 30. – மனசுக்கு ஹார்லிக்ஸ்

 31. கப்பி பய
 32. – விஷயம் இல்லாவிட்டால் எழுதாமல் இருப்பவர்

 33. வினையான தொகை
 34. – எல்லா சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தி வருபவர்

 35. மொழியும் நிலமும்
 36. – எல்லா சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தி வந்து ஐ.எஸ்.ஐ. சான்றிதழும் பெற்றவர்.

 37. குப்பை வலை
 38. – பூசி மெழுகி பினாயில் தெளித்து பாசி பிடிக்க செய்யாதவர்

 39. கென்
 40. – கவிப்பேரரசு; பா. விஜய்யாக மாறாதவர்

 41. BLOGESWARI
 42. – தமிழென்றால் ஆங்கிலம் உண்டல்லோ!

 43. மிதக்கும் வெளி
 44. – தூசி புகாத எழுத்தும் சிந்தனையும்

 45. Tamilgossips(All in one page)
 46. – என்னாத்த சொல்வேனுங்கோ?

 47. மங்கை
 48. – பெண்ணே கொஞ்சம் கோபப்படு

 49. சிறு முயற்சி
 50. – வாழ்க்கைத்தடம்

 51. வலைச்சரம்
 52. – வலைத்தடம்

 53. கையேடு
 54. – சுருங்கச் சொல்

 55. வாழ்க்கைப் பயணம்
 56. – ரொம்ப தூரம் கூட்டிண்டு போவார்

 57. Perspective of Raja Chockalingam
 58. – ஆவின் பாகெட் மணம் மாறா பால்மனம்

 59. ஞாயிறு தபால்
 60. – அனுபவம் பழசு; எழுத்து புதுசு

 61. மலர்வனம்
 62. – படித்ததில் பிடித்தது

1. சென்ற வருடத்துக்கான பதிவு (2006)

2. தமிழ்ப்பதிவுகளில் கவனிக்கத்தக்க முப்பது பட்டியல்: Tamil Blog 30 – Index « Snap Judgment

பஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு

செய்தி: மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி உறுதிபடத் தெரிவித்தார்.

கேள்வி:

 1. 1995 -இல் தலித் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்து கழகம் நிறுவுவதால் சாதிப்பிரச்சினை வரும் என்று அண்ணா முதல் பல்லவன் வரை மாற்றியது மட்டும் ஏன்?
 2. பேருந்தை எரிப்பது எளிது; விமானத்தை எரிப்பதற்கு பாதுகாப்பு சோதனை, கடவுச்சீட்டு எல்லாம் தேவையாக்கலாம் என்பதாலா?
 3. சுப்பிரமணிய சாமியின் கோரிக்கையை நிறைவேற்றுவது, இராமர் பாலத்திற்கான சமரசமா?

தொடர்புள்ள பதிவுகள்:

1. அசுரன்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்

2. உலகின் புதிய கடவுள்: 136. தேவர் திருமகன்

3. ரோசாவசந்த்: தேவர்ஜெயந்தி விழா வழிபாடு

4. List of renamed public places in Tamil Nadu – Wikipedia, the free encyclopedia

5. At a crossroads: “When the Tamil Nadu government announced its decision to name a transport corporation after an 18th century Dalit warrior, Sundaralingam, caste-Hindu mobs went on the rampage and burnt down buses. When the buses were renamed as planned, caste-Hindu drivers refused to drive the vehicles and caste-Hindu passengers refused to board them. Finally, the government found a solution by dropping the practice of naming transport corporations after leaders.”

6. The Pattern of Abuse – Broken People: Caste Violence Against India’s “Untouchables” (Human Rights Watch Report, 1999)

7. ஆறாம்திணை: வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் துவங்கிய நிகழ்வு. தலித் அல்லாத மற்றவரின் மனம் புண்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக விழா கூட எடுக்காமல் ஓசையின்றி அப் போக்குவரத்துக் கழகத்தைத் தமிழக அரசு துவக்கியது. ஆனால், இக் கழகப் பேருந்துகளை இயக்க விடாமல் ஆதிக்கச் சாதியினர் வன்முறையில் இறங்கினர். தாழ்த்தப்பட்டோர் ஒருவர் பெயரில் உள்ள பேருந்தில் ஏற முடியாது என்று விதண்டாவாதம் செய்தனர்.

இப் பிரச்சினையில் உரிய முறையில் தீர்வு காணத் தவறிய தமிழக அரசு ஒட்டுமொத்தமாக மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு இடப்பட்டிருந்த அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் முடிவை எடுத்தது. ஒரு தலித் சுதந்திரப் போராட்ட வீரருக்குச் சாதி முத்திரை குத்தப்படுவதைத் தி.மு.க. அரசு சகித்துக் கொண்டது.

8. Dalithmurasu | Azhakiya Periyavan | India | Freedom | Caste System: “சாதிய தேசியப் போர் :: அழகிய பெரியவன்”

9. மிதக்கும் வெளி: சிக்கன்பிரியாணியும் முரளிமனோகர்ஜோஷியும்- ஒரு உரையாடல்: “வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

10. நிறப்பிரிகை :: ஸ்ரீதர் (கல்பாக்கம்): “எல்லாத்தையும் ஒண்ணாக்கி வீரன் சுந்தரலிங்கம் பெயருக்கு எதிரான போராட்டத்தை ஒட்டிய கலவரமா சொல்வது தப்பு.

பி.யூ.சி.எல் சார்பாக நாங்கள் மம்சாபுரம், திருத்தங்கல், கோவில்பட்டி முதலான இடங்களுக்குச் சென்று வந்தோம். ஒப்பீட்டளவில் இடையங்குளத்தில் இருக்கிற பள்ளர்கள் மம்சாபுரத்தில் இருக்கிற மறவர்களைக் காட்டிலும் வசதியாக இருக்கிறார்கள்.

இந்த வளர்ச்சிக்குக் காரணம் ‘ரிசர்வேஷன்தான்‘ என்கிற தவறான கருத்து மறவர்களிடம் இருக்கிறது. மம்சாபுரத்தில் கடந்த 30 வருட வரலாற்றில் பள்ளர்களுக்கும் மறவர்களுக்கும் மோதல் நடந்ததில்லை. நடந்ததெல்லாம் நாடார்களுக்கும் மறவர்களுக்கும் ஒரு மோதல் – ஒரு கோயில் தகராறை ஒட்டி. அப்புறம் பிள்ளைகளுக்கும் செட்டியார்களுக்கும் நிலத் தகராறு காரணமா ஒரு மோதல். பொதுவான மனப்போக்கு என்ன என்றால் பள்ளர்களுக்கும் மறவர்களுக்கும் மோதல் வரும்போது நாடார்கள் மனரீதியாகப் பள்ளர்களை ஆதரிக்கின்றனர்.

ஆனா ‘கல்ச்சுரல்’ ஆக பள்ளர்கள் தாழ்வாக மதிக்கப்படுகின்றனர். அப்புறம் ஆள் பலி. இது தேவர்களுக்குத்தான் அதிகம்.

உண்மையில் சுந்தரலிங்கம் பிரச்சினைக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. கோவில்பட்டியை மானம், மரியதை, உரிமை சம்பந்தப்பட்ட ஒரு போராகத்தான் பார்க்குறாங்க. சுந்தரலிங்கம் பிரச்சினை எதேச்சையாக நடந்த ஒரு விசயம்.

11. Swamy claims Central nod to rename Madurai Airport @ NewKerala.Com News Channel: “Janata Party president Subramanian Swamy today claimed that he had obtained the Centre’s permission to name the Madurai airport as ‘Muthuramalinga Thevar International Airport’, but it was opposed by the then Tamil Nadu Chief Minister O Panneerselvam.”

Quotable Quote – தமிழக காங்கிரஸ் பெருமிதம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல்

காங்கிரஸில் கோஷ்டி பூசல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற கொலை முயற்சி தாக்குதலில் ஒரு போதும் ஈடுபடமாட்டார்கள். – சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம்

செய்தி: தகவலறிந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் மருத்துவமனைக்கு வந்து காங்கிரஸ் கட்சியினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கருத்து: தமிழக காங்கிரஸின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருமகன் அன்புமணி, மாமனார் இராமதாஸ் வந்து பார்த்தாங்களா?

புதுமை பூக்கும் புடவைகள்

சிறப்புக் கட்டுரை: நவீன புடைவைகள் பானுமதி (இந்தியா டுடே)
RMKV Sarees Nagasu Pattu Silk Pudavai 83 Diwali Special

ஐந்தரை மீட்டர் புடவையின் நிறத்தையும் டிசைனையும் மாற்றுவதைத் தவிர வேறு என்ன புதுமை செய்யமுடியும் என்று நினைப்பவர்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

ஆர்.எம்.கே.வி முன்பு ரிவர்சிபிள் புடவையையும், 50,000கலர் பட்டுப்புடைவையையும் அறிமுகப்படுத்தியது. ஐந்து மாடி ஸ்ரீகுமரன் ஸ்டோர்ஸும் ‘டூ இன் ஒன்’ புடவைகளை அறிமுகப்படுத்தியது.

சமீபத்தில் ஐந்து மாடி ஸ்ரீகுமரன் ஸ்டோர்ஸ் ஜிப் அன்ட் மேட்ச் புடவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வகை புடவையோடு நான்கு பல்லுக்களைத் (முந்தானைகள்) தருகிறார்கள். எந்த பல்லு வேண்டுமோ அந்தப் பல்லுவை ஜிப் மூலம் புடவையுடன் இணைத்து அணிந்து கொள்ளலாம். ஜிப் அண்ட் மாட்ச் புடவைகள் ரூ. 20,000லிருந்து கிடைக்கிறது.

போத்தீஸ் நிறுவனம் பரம்பரா பட்டு, சாமுத்ரிகா பட்டு என்று அறிமுகப்படுத்தியது. ஸ்ரீகுமரனோ நிறம் மாறும் மாயப்புடவை, த்ரீ டி புடவை, டெனிம் பட்டு, ஜோடிப்பட்டு என்று புதுவரவுகள் பட்டுச்சந்தையை வண்ணமயமாக்குகின்றன.

மாயப்புடவை அணிந்துகொண்டு வெயிலில் சென்றால் புடவை வித்தியாசமான வண்ண நிறம் கொன்டதாகத் தெரியும். வீட்டுற்குள் வந்தால் அல்லது நிழலுக்கு வந்தால் அந்த வண்ணம் மாறித் தெரியும். இந்த மாயப்புடவைகள் ரூ.4,500லிருந்து ரூ.7,500 வரையிலான விலைகளில் கிடைக்கிறது.

Saravana Stores Atchaya Pattu Gold in Saree Deepawali Specialபண்களின் பட்டுப்புடவையில் செய்திருக்கும் அதே ம்பிராய்டரி டிசைனை ஆண்களுக்கான பட்டுச் சட்டையில் டிசைன் செய்து ஒரு செட்டாக ‘ஜோடிப்பட்’டை விற்கிறார்கள். எம்பிராய்டரி செய்யப்பட்ட பட்டு வேஷ்டியும் விற்பனைக்கு வந்திருக்கிறது. புடவை, வேஷ்டி, சட்டை கலெக்சன் ரூ. 12,000லிருந்து ஆரம்பிக்கிறது.

தமிழகத்தில் சேலை விற்பனை பற்றி எம்.பி.ஏ மாணவர்கள் பல மார்க்கெடிங் கேஸ் ஸ்டடிகள் செய்யுமளவிற்கு வருடாவருடம் பல உத்திகளைக் களமிறக்குகிறார்கள்.

அடுத்து ஸ்விட்சைத் தட்டினால் டிசைன் மாறும் டிஜிட்டல் புடவை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி: இந்தியா டுடே (செப்., 19, 2007)

Suda Ragunathan Parampara Pattu Silk Sari Deepavali 2007

1000 மலர்களுடன் பரம்பரா பட்டு (தினமணி)ஆயிரம் அரிய மலர்களைக் கொண்ட பரம்பரா பட்டுச் சேலையை, போத்தீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Sudha Raghunathan Parampara Pattu Silk Sarees Diwali 2007இதுகுறித்து, போத்தீஸ் நிறுவனத்தின் பங்குதாரரான ரமேஷ், சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலத்தின் போது, புதுரக பட்டுச் சேலையை போத்தீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு 1000 பூக்கள் கொண்ட பட்டுச் சேலையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதற்காக, 5 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர் குழு, ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தது.

இதன்பின்பு, கடந்த 6 மாதங்களாக பட்டுச் சேலை தயாரிப்புப் பணி நடைபெற்றது. 1 சேலை தயாரிக்க 40 நாள்கள் ஆனது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சம்பந்தம் என்பவர் தலைமையிலான 7 பேர் குழு நெசவுப் பணிகளை மேற்கொண்டது.

சேலையின் விலை ரூ.40,000. அதன் எடை 1 கிலோ 40 கிராம். இதுவரை பரம்பரா சேலைக்கு 10 பேர் ஆர்டர் செய்துள்ளனர். இதில், 9 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார் ரமேஷ்.

———————————————————————————————————————————————————————-

எங்கு பார்த்தாலும் புடவை கடைகளாகவே இருக்கு. ஆனால் புடவை கட்டுறவங்க

“”எங்கு பார்த்தாலும் புடவை கடைகளாகவே இருக்கு. ஆனால் புடவை கட்டுறவங்க ளைத்தான் காணோம். முன்பெல்லாம் சினிமாவில்தான் புடவை கட்றவங்க காணாமப் போயிருந் தாங்க… இப்போது ரோட்டிலேயும்…” என்று கலகல வென கமெண்ட் அடித்தபடியே சென்னை தி.நகர் ஐந்து மாடி குமரன் ஸ்டோரில் நுழைகிறது ஓர் இளை ஞர் கூட்டம். அவர்கள் பின்னாலேயே நுழைந்த நாம், இந்தக் கமெண்ட் பற்றி குமரன் ஸ்டோர்ஸின் பங்குதா ரர்களில் ஒருவரான ரவியிடம் கேட்டபோது, “”இரண்டு, மூன்று வருஷங்களுக்கு முன்னால் இந்த கமெண்ட்டில் நியாயம் இருந்தது. இப்போது இது பொருந்தாது.
எந்தத் தொழிலாக இருந்தாலும் புதுப்புது தாக்கங் கள் வருகிறபோது பழைய முறைகளின் பழைய பொருள்களின் மீதுள்ள மவுசு குறைந்ததுபோல் தோன்றும். ஆனால் மீண்டும் பழைமையே புகழ்பெ றும். அதைப்போலத்தான் புடவை விற்பனையும். சுரி தார், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் ஆடைகள் வந்தபோது சிறிது பின்னடைவு இருந்தது என்பது உண்மைதான்.

இப்போது அப்படியில்லை. புடவைகளின் விற்பனை தான் அதிகமாக இருக்கிறது. கல் லூரிப் பெண்கள்கூட விழாக் கள் என்றால் புட வைதானே கட்டுகிறார்கள்” என்றவரிடமிருந்து விலகி கடையை வலம் வந்தோம்.

பட்டாசையே கொளுத்திப் போட்டாலும் பதறமாட் டோம் என்பதுபோல கடையே புரட்டிப்போட்டு புடவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.

“”எடுக்கப் போறது ஆயிரம் ரூபாய் சில்க் புடவை தான். இருந்தாலும் பத்தாயிரம் பதினைந்தாயிரம் ரூபாய் புடவையெல்லாம் புரட்டிப் பார்க்கணும். கட் டிப் பார்க்கணும். இந்த சான்ûஸவிட்டா கிடைக்குமா? ” என்று தோழிகளிடம் கமெண்ட் அடித்தபடியே ஒரு காலேஜ் பெண் கடைக்காரர் எடுத்துப் போடப் போட புடவை எடுத்து மேலே கண்ணாடியில் பார்ப்பதும், பிடிக்காததுபோல உதட்டைப் பிதுக்கி நடிப்பதையும் பார்த்தபோது சிரிப்பு வந்தது. கை நோக எடுத்துப் போட்ட கடைக்காரரைப் பார்க்கத்தான் பாவமாக இருந்தது.

“ஜிப் அண்ட் மேட்ச்’ என்று வந்துள்ள புடவையைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஒரு புடவையில் நான்கு முந்தானை. ஒரே நாளில் நாலு புட வைகளைக் கட்டிய சந்தோஷத்தை இந்த ஒரு புடவை யைக் கட்டுவதன் மூலம் பெறலாம். இதன் விலை இரு பதாயிரம் ரூபாய். இதைப்போல ஃப்ளோரா என்கிற பெயரிலான எம்ப்ராய்டரி புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. மூவாயிரம் ரூபாயி லிருந்து இந்தப் புடவையின் விலை தொடங்குகிறது.

வெளிநாட்டிலிருந்து வந்து புடவை கட்டத் தெரியா மல் கதாநாயகி முழிப்பார். அப்படி இப்படி என்று கதா நாயகன் புடவை கட்டிவிடுகிற காட்சி பத்துநிமிடம் ஓடி பாடல் ஓடத் தொடங்கும். இக்காட்சி இல்லாப் படங்கள் குறைவாகத்தான் இருக்கும். இயக்கு நர்களின் வழக்கமான இந்தக் கற்பனைக்கு முடிவு கட்டுகிறாற்போல் ஒரு புடவை வந் திருக்கிறது. அந்தப் புடவையின் பெயர் “ஒன் மினிட்’ புடவை. இது ரெடிமேட் புடவை. மடிப்பு பி டி க் க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. மடிப்போடு தயாராக இருக்கும். புடவை கட்டத் தெரியாத பெண்க ளுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புடவையை ஃபாரின் பெண்கள் சிலர் வாங்கிச் சென்றபோது, “தீபா வளி சீசன் பாதிப்பா? புடவை பாதிப்பா?’ என்று புரிய வில்லை.

நல்லி சில்க்ஸில் நுழைந்தோம். மற்ற கடைகளில் கிடைப்பதுபோல போலியான “தாம்தூம்’ வரவேற்பு நுழைகிறபோது கிடைக்காது. ஆனால் புடவைகளில் தரம் நமத்துப் போகாத லட்சுமி பட்டாசுபோலவே இருக்கும்.

ஏகப்பட்ட டிசைனர் கலெக்ஷன் புடவைகள் இருக் கின்றன. தீபாவளியையொட்டி பிரத்யேக டிசைனர்க ளைக் கொண்டு புதுப்புது டிசைன்களைத் தருவித்தார் கள். எல்லாம் அசத்துகிற டிசைன்கள். ஐநூறு அறுநூறு புடவைகளிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பட்டுபுடவைகள் வரை அனைத்திலும் வித்தியாசம்.

கடையில் பெயருக்கேற்ப சில்க் புடவைகளே இங்கு களை கட்டியது.

அடுத்து நாம் நுழைந்தது போத்தீஸ். சாமுத்திரிகா லட்சணத்தோடு சாமுத்திரிகா பட்டைக் கட்டிக் கொண்டு மீரா ஜாஸ்மின் தெருவில் உள்ள பேனர்க ளில் உட்கார்ந்து கொண்டிருக்க, கடைகளில் மீரா ஜாஸ்மின் கனவோடு பல பெண்கள். பத்தாயிரத்திலி ருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை இந்தப் புடவைகளின் விலை இருந்தாலும் குறைவில்லாக் கூட்டம். இதைப் போல வஸ்தரக்கலா பட்டு, சுபமங்கலா சில்க்ஸ், காஞ் சிபுரம் சில்க்ஸ், முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போகிற போது கட்டிக் கொள்வதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட புடவைகள் பக்கமும் கூட்டம் அலை மோதுகிறது.

புடவை எடுக்கிற பெண்கள் உடன் வந்திருக்கும் பெண் குழந்தைகள் தமக்கும் புடவை வேண்டும் என்று தொந்தரவு கொடுப்பதைப் பார்த்திருப்போம்.

இங்கு போனால் பெண் குழந்தைகளுக்கும் புடவை எடுத்துக் கொடுக்கலாம். இதுவும் ஐந்து கஜம் புடவை.
அம்மாக்கள் தாங்களே கட்டிக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். சிறு குழந்தைகள் கட்டிக் கொள் வதற்கென்றே தயாரிக்கப்பட்ட புடவைகள். விலை நாலாயிரத்திலிருந்து இருக்கிறது.

போத்தீஸ் கடையில் உள்ள மற்றொரு சிறப்பு. ஒரு நாள் என்ன இரண்டு மூன்று நாள்கூட மனைவிகள் தொடர்ந்து புடவை தேடிக் கொண்டிருந்தால்கூட கண வர்கள் கவலைப்படாமல் கூலாக இருப்பதற்கு ஏற் பாடு செய்திருக்கிறார்கள். நீர்மோர், பாதம்கீர் போன் றவை இலவசமாகவே கொடுக்கிறார்கள். சிலநேரங்க ளில் வெண்பொங்கல்கூட கிடைக்கிறது. அடுத்து நாம் சென்றது ஆர்எம்கேவி.
56 ஆயிரம் வண்ணங்கள் புடவை, ரிவர்ஸிபல் புடவை எனச் சாதனைப் புடவைகளைத் தயாரித்து சாதனை படைத்த கடைக்காரர்களின் புது வரவு நகாசு எம்போஸ் பட்டு. புடவையில் பொறிக்கப்பட்டிருக்கிற பூக்களைத் தடவிப் பார்க்கிறபோது நிஜப் பூக்களையே தொடுவது போன்ற உணர்வைக் கொடுக்கும். இந்தப் புடவை வாங்குகிறவர்களின் எண்ணிக்கையேபோல வெறுமனே தொட்டுப் பார்த்துவிட்ட செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தக் கடைகள்போலவே நாயுடு ஹால், விபா, கோ-ஆப்டெக்ஸின் கடைகளில் பெருத்த கூட்டம் மோதிக்கொண்டே இருக்கிறது.
“பேண்ட், சர்டோடு எங்களுடைய பர்சேஸ் முடிந் துவிடுகிறது. உனக்கு புடவை, ஜாக்கெட், பொட்டு, வளையல், நகை என எவ்வளவு வாங்க வேண்டியி ருக்கிறது…” என்று மனைவியை ஒரு கடை வாயிலில் ஒருவர் திட்டிக்கொண்டிருந்தார்.
“”வருஷத்துக்கு ஒருதரம்தான் நாங்க எடுக்கிறோம்.

நீங்க வருஷம்பூரா எடுக்கிறீங்க… ஏன் உங்க அம்மா வுக்கு எடுத்துக் கொடுக்கலை…?” என்று மனைவி பட் டாசாய் வெடித்துக் கொண்டிருந்தார். வீட்டு ஞாபகம் வர விட்டோம் ஜூட்! பெயல்

An Indispensable Guide to Equity Investment in India – Facts and Forecasts

VC Equity IPO Deals Merger Acquisitions Statistics Research Money

விலாவாரியாகத் தெரிந்து கொள்ள

Abiyum Naanum – Movie Posters

Abiyum Naanum Radha Mogan Prakash Raaj Moser Baer Duet Movies ChildrenAbhiyum Nanum Radha Mohan Prakash Raj Moser Baer Duet Movies Kids

இன்னொன்று.

Thuglaq Cover Cartoon – India & US Nuclear Accord Withdrawl

Thuglaq Manmohan Pranab US India Nuclear Accord Withdrawl Sonia

மதி கந்தசாமியின் அமைகையைத் திருடிய தினமணி வெள்ளிமணி?

1. இது தினமணி:

Dinamani Vellimani Image Female Copyright Violationssmall_shakthy_profile_image_copy_paste.jpg

பெரிய படமாகப் பார்க்க இ-பேப்பர் செல்லவும்.

2. இது மதி கந்தசாமியின் ப்ளாக்ஸ்பாட் பக்கதோற்ற வடிவம்

Mathy Kandasamy Profile Image Shakthi Blogspot

அசல் பார்க்க ப்ளாகர் செல்லவும்.

தினமணி (தானே?) காப்பியடித்திருக்கிறது.

என்னுடைய மிகக் கடுமையான கன்டனங்கள் என்று பன்மையிலோ கண்டனம் என்று ஒருமையிலோ அழைக்கப்படும் சமாச்சாரங்கள்.

மாற்று – ஆலோசனை (aka) விழைப்பட்டியல் (aka) அடுத்த கட்டம்

தமிழில் எழுதும் பதிவுகளில் சுவையானதை மாற்று தவறாமல் சேமித்து வருகிறது. பல விஷயங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை இப்போது பட்டியல் போடும் எண்ணம் இல்லை.

மாற்று அல்லது மாற்று போன்ற புதிய தளங்கள் எதை நிறைவேற்றலாம்?

1. மாற்று! குறித்து, கொள்கைகள் போன்றவை ‘வலைப்பக்கம் காணக்கிடைக்கவில்லை‘ என்று பிழை காட்டுகிறது. வலையகத்திற்கு முதன்முறையாக வருபவர்கள் ‘about us’ படிக்க விரும்புவார்கள்.

2. பங்களிப்பாளர்களின் இடுகைகளைக் குறிப்பிடாமல் தவிர்க்கிறார்கள். ‘பரஸ்பர முதுகு சொறிதலை இந்த கொள்கை தவிர்க்கிறது‘ என்பதற்காக இருக்கலாம். இருந்தாலும், ஏதோ இடறுகிறது. பதிவை எழுதியவரே, சுட்டிக் கிடங்கில் சேர்த்தால் கூட பொருத்தமானதாக இருந்தால்தான் சேர்ப்பார் என்னும் நம்பிக்கை வேண்டும்.

3. சுட்டியின் மேல் எலியைக் கொஞ்ச நேரம் உட்காரவிட்டால், எந்த ‘வகை’யில் சேர்த்திருக்கிறார்கள் (டூல்டிப்ஸ்) என்பதை அறிய முடிகிறது. அதனுடன் பதிவின் முதல் வரிகளையும் கூட சேர்த்து காண்பித்தால், முன்னோட்டமாக இருக்கும். இதன் மேர்சென்று விருப்பங்களைத் தேர்வு செய்து பயனர் கணக்கு (preferences, personalization & customization) கொணரலாம்.

4. ‘சூடான இடுகைகள்‘ போல் எத்தனை பேர் மேற்சென்று க்ளிக் செய்து, படித்தார்கள் என்பதை அறியத் தரலாம். ‘நட்சத்திர தாரகைகள்’ என்பது பகிர்பவரின் விருப்பம் என்றால், மெய்யாலுமே வாசகரின் மவுஸ் எங்கே செல்கிறது என்பதை அறிய முடியும்.

5. புகைப்படங்கள்: பதிவுகளில் வந்த நிழற்படங்களின் சுருக் வடிவத்தைக் கொடுத்து தூண்டில் இட வேண்டும்.

6. கடந்த முறை நான் வந்தபோது கடைசியாக வந்திருந்த பதிவு எது? நினைவில் வைத்திருந்து வேறுபடுத்தி காட்டினால் பயனாக இருக்கும்.

7. திண்ணை, நிலாச்சாரல், தென்றல், ஆறாம்திணை, தமிழோவியம், பதிவுகள், பூங்கா எக்ஸ்க்ளூசிவ்கள், கீற்று, அப்புசாமி ஆகிய இதழ்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். (ஏற்கனவே வரலாறு.காம் போன்றவை அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.)

8. வகைவாரியாக பார்க்க முடிவது போல், தேதிவாரியாக புரட்ட வசதி செய்து தரலாம். அன்றாட வாரத்தின் தாரகைகளுக்கு முகப்பு பக்கத்தில் இடம் கொடுக்கலாம். மாதம்/வாரம்/நாள்வாரியாக #4 கணக்கை காட்டி, வாசகரின் தானியங்கித் தேர்வுகளை காட்டலாம்.

9. தேடலை விரிவாக்குதல்: பதிவர் பெயர் தவிர, தலைப்பு, குறிச்சொற்கள் ஊடாக தேடுவது, உரலைப் பொறுத்து தேடுவது என்று ஆடம்பர (அட்வான்ஸ்ட்) வசதிகள் செய்து தரலாம்.

10. விளம்பரங்கள்: எம்.எஸ்.என். தமிழ், யாஹூ தமிழ், தினமலர் போன்ற தளங்களில் விளம்பரம் தந்து மாற்று.காம் முகவரியை பிரபலப்படுத்தலாம்.

கடைசியாக, கடந்த சந்திப்பில் மாற்று குறித்த விமர்சனமாக நண்பர்கள் சொன்னது:

அதிகம் அறியப்பட்ட, குறிப்பிட்ட சில பதிவர்கள்தான் திரும்பத் திரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டு பகிரப்படுகிறார்கள். இதுதான் வரும் என்பது போல் கணிக்கமுடிந்ததையே வெளியிடுகிறார்கள்.

இதற்கு பதிலாக இரண்டு வழிகளை சொன்னேன்:

(i) தற்போது உள்ளது போலவே தொடர்வது: ஆனால், தமிழ்மணம்/தேன்கூடு/வோர்ட்பிரெஸ் மூலமாக புதிதாக எழுத ஆரம்பித்த பதிவர்களை இன்னும் நிறைய கோர்க்கலாம்.

(ii) சற்றுமுன்னின் ‘அறிவியல் இன்று’, மா சிவக்குமார், மதி, பத்ரி போன்ற எப்போதும் வருபவர்களை பாப் யூரெல்ஸ்ஸில் வருவது போல (quickies என்னும் தலைப்பில்) இணைப்பது. தவறவிடக்கூடாதவர்களுக்கு இந்த செமி-நிரந்தர இடம். ஓடையைப் பொறுத்து தீர்மானிக்கும்படி செய்யலாம்.் க்வாலிடி குறைந்தால், மற்றவர்கள் போல் ஆக்கிவிடலாம்.

தொடர்புள்ள ஆங்கில வலையகங்கள், திரட்டிகள், சேமிப்புக் கிடங்குகள், பரிந்துரை பக்கங்கள், வலைப்பதிவுக் களங்கள்:

டி ஆர் பாலுவும் தமிழ் 99-ம்

உரிமைத் துறப்பு (டிஸ்க்ளெய்மர்): இந்தப் பதிவு உங்கொப்புரான் சத்தியமாக ‘எண் ஜோதிடத்தை’ நக்கல் செய்யத்தான். தமிழ் 99 தாக்கப்பட்டிருந்தால் அது தற்செயலானதே.

இட்லி-வடை மூலம் வீராசாமி, வீராஸ்வாமி ஆனதும்; பாலு, பாலு ஆனதும் தெரிய நேர்ந்தது.

ஒரு வேளை, தமிழ் 99 விசைப்படி மாறியிருக்கிறார்களோ என்னும் சந்தேகத்தில் தட்டச்சி பார்த்தேன். இல்லை… அப்படியும் மாற்றலாம் என்று ஜோதிடர்கள் கண்ணில் பட்டால், Vijaya T Raajendaerr எவ்வாறு உருப்பெறுவார் என்பது வீட்டுப்பாடமாகத் தரப்படுகிறது.

பாலு – jqnd

ஆர்காடு வீராசாமி –qmfhqod vwmq[qks

நான் இப்போதைக்கு ரேபிடெக்ஸ் வழி தமிழ் தட்டுவதிலேயே குதிரை ஓட்டலாம் என்று எண்ணம்.

பின்குறிப்பு: வெட்டி, ஒட்டுவதற்கு விசை எந்த வழியாக இருந்தால் என்ன என்று பின்னூட்ட வேண்டாம் 😛