Monthly Archives: மார்ச் 2021

தாசி? விலைமகள்? பணிப்பெண்?

அந்த 96 பேர்களை விட யுயுத்ஸுக்குக் கூடுதல் ஸ்தானம் கதையிலும் கிட்டுகிறது.

அவனும் மறக்கப்பட்டிருப்பான். ஆனால் பிற்பாடு அவன் பாண்டவர் பக்கம் போரிட்டதனாலும், பரீட்சித்தின் ராஜ்யபரிபாலனனாகவும் வரப்போகிறானே.. அதனால் அவனைச் சொல்லித்தானே ஆகவேண்டும்.

ஆனால் அவனுடைய அம்மா? அவன் பெயரை முதலில் குறிப்பிடப் பட்டதோ அல்லது யாரானும் கூட்டத்தில் கேள்வி எழுப்பியதில் சேர்க்கப்பட்டதோ தெரியாது. இன்னும் ஒவ்வொருவர் அவள் பெயரை வேறு வேறு விதமாகத்தானே சொல்கிறார்கள் – சுகதா, ப்ரகதி, சௌவாலி என்று

சரித்திரத்தின் பக்கங்களிலும், தொன்மங்களிலும் என்றும் பலசாலிகளும், வெற்றியாளர்களும், உயர்ந்த பிறப்புள்ளவர்களுமே கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், இந்தவகைகளில் இருப்பினும் கூட ஒரு வகையினருக்கு இந்தத் தகுதி கிடைத்ததில்லை- பெண்கள்! கண்ணனின் உயிர் சினேகிதிதான் – ஆனால் ராதையைப் பற்றி நாம் என்ன அறிவோம்?

மறைந்த அரசனின் விதவைகள் – ஆனால் அம்பிகைக்கும், அம்பாலிகைக்கும் வியாசருடன் உறவு கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று கேள்விகேட்க யாருக்காவது தோன்றியதா? அவர்கள் குலவாரிசை சுமக்கும் கர்ப்பப்பைகள் மட்டுமேதானா? மகான் எனப் போற்றப்படும் விதுரனின் தாய் – அவள் பெயர் என்ன? அவளுக்கு வாழ்க்கை பற்றிய வேறு கற்பனைகள் இருந்தனவா?  

காந்தாரியின் கர்ப்பம் முழுமை அடையவே அடையாதோ என்ற பயத்தில் திருதராஷ்டிரன் உறவு கொண்ட தாசிப்பெண்- தந்தைக்கு இறுதியில் கொள்ளி வைத்த புத்திரன் யுயுத்ஸுவின் தாய் – அவள் பெயர் என்ன? தந்தையால் அங்கீகரிக்கப் படாத தாசிமகன் செய்யும் ஈமச்சடங்கில் திருதிராஷ்டிரனின் ஆத்மாவுக்கு முக்தி கிடைத்ததா? பிள்ளை பெறுவதற்காக மட்டுமே உறவு வைக்கப்பட்டு பின் ஒதுக்கப்பட்ட அந்தப் பெண் திருதிரஷ்டிரனின் இறப்புக்குப் பின் தன்னைக் கைம்பெண் என கருதிக் கொள்ளவேண்டுமா?

வங்காளத்தின் சில எழுத்தாளர்கள் இத்தகைய பெயர் தெரியாத, மறக்கப்பட்ட விளிம்புப் பாத்திரங்களைப் பற்றி கதைகளிலும் நாடகங்களிலும் கேள்விகள் எழுப்புகிறார்கள். அவற்றில் ஒன்று மஹாஸ்வேதா தேவியின் சௌவாலி

மற்றொன்று புத்ததேப் பாஸுவின் சிறு நாடகம் “ஆனாம்னி அங்கனா

சொல்வனத்தில் வங்கச் சிறப்பிதழின் இரண்டாவது பகுதியில் இவற்றைப் படிக்கலாம்.

  It is believed that the Mahabharatha has been modified many times. It is possible that a closer to our times version was written a few hundred years back. There is a netflix series called Dharmakshetra where the various significant characters of the mahabharath are put on stand in the court of chitraguptha. In one episode Bhisma is questioned why he did not consider Vidura as a possible king as both his step brothers were not fit for the role. The obvious answer is that he was a dasiputra. It seems dasis and dasiputras didn’t enjoy much of a status in Duryodhana’s mind.  See how he acts when Draupadhi becomes his “dasi”.

Yuyutsu was taunted by Duryodhana and his brothers for being friendly with the Pandavas and  for pointing out their misdeeds.  They did not think of him as one of the kauravas. As a mother this must have irked Sugadha / Sauvali as in reality Yuyutsu was second in line to the throne. She must have felt exploited and  marginalised. Mahasweta devi is trying to imagine her feelings on being treated thus. I think the focus is more on the exploitation of the servant class . On how they used them as they pleased hardly regarding their desires and expectations. Wonder what might have happened if Gandhari had a miscarriage!

Anamni Angana deals with a similar issue with respect to Vidura’s mother. She had her simple desires and dreams which were teampled upon for the convenience of The royal household. Maybe Vidura got treated better because he was Satyavati’s grandson too. Most books refer to yuyutsu’s mother as Sugadha  incl. WIKI. In Jeyamohan’s book she is referred to as  and a favorite of Dritharastra as they were connected through a shared interest in music. In his version she remains close to him till the end . She even takes Yuyutsu to task after the vastrapaharan for not taking an open stand like Vikarna. In Jeyamohan’s version of the epic the mother’s name is Pragathi.

குரு வம்சத்து ஆட்சி தலைமகன் வழியே மாற்றப்படுவது. அதனால்தான் கௌரவர்களில் துரியோதனனுக்கும், பாண்டவர்களில் யுதிஷ்ட்ரனுக்கும் பதவி போகிறது. பாண்டவர்கள் ஐந்தே பேர் என்பதாலும், சிலருடைய சாதிப்புகள் அபாரமானவை என்று கதை போவதாலும் நாம் அதிகமாக அர்ஜுனனையும், பீமனையும் பற்றிக் கேள்விப்படுகிறோம், ஆனால் யுதிஷ்ட்ரரோ, நகுல சகதேவர்களோ அதிகம் கவனிக்கப்படுவதில்லை. இது இலக்கிய உத்தி.

நாயகர்களைத் தவிர மற்றப் பாத்திரங்கள் நிழலிருட்டில் இருப்பது அனேகமாக எல்லா நாட்டு நாடகங்கள், இலக்கியத்திலும் பொது உத்தி. 

இருப்பினும் கௌரவர்களில் தலைமகன் துரியோதனன், பாண்டவர்களில் யுதிஷ்ட்ரன் என்பதால் அவர்கள் இருவருக்கும் பதவி போகிறது என்றாலும், இருவருக்கும் தனித்தனியே சில தகுதிகளும் உள்ளதாகக் கதை அமைக்கப்படுகிறது. பீமனுக்கு நிகர் பலமும் யுத்தத் திறனும் கொண்டவன் துரியோதனன் என்று நாம் அறிகிறோம். விதுரனுக்கு நிகர் ஞானமும், தர்ம சிந்தனையும் உள்ளவனாக யுதிஷ்ட்ரன் அறியப்படுகிறான். 

கதைப்படி யுயுத்ஸு துரியோதனனுக்கு அடுத்துதான் பிறக்கிறான். அதனால் அவனுக்கு பீஷ்மருக்குக் கிட்டும் தலைமகன் என்ற ஹோதா கிட்டுவதில்லை. பீஷ்மர் தன் ஆட்சி உரிமையைத் தானம் செய்து விடுகிறார். அதனாலும், அவருடைய அபார போர்த்திறமைகளாலும் அவருக்கு ஏதோ பீடம் கிட்டுகிறது. விதுரன் அத்தனை பீடமேற்றப்படாவிடினும், தர்ம நியாயக் கேள்விகளுக்கு அவர் அணுகப்படுவதாகக் கதை அமைகிறது. அவரும் அலட்சியம் செய்யப்படவில்லை. 

போர்க்களத்தில் திறனுள்ளவர்களுக்கே அந்தக் கதையிலும், அந்தக் கால கட்டத்திலும் மதிப்பு இருந்தது என்று நாம் ஊகிக்கலாம். ஏனெனில் இன்னமும் காட்டை அழித்து நாட்டைக் கட்டிப் பரப்பும் நிலையில்தான் நாகரீகம் இருக்கிறது. இன்னமும் பெரும்பாலான பாரத நிலம் கடக்க முடியாத வனப் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இத்தனைக்கும் இது ராமாயணத்துக்கு மிகப் பிந்தி வந்த காலம். 

வியாசர் நடப்பை எழுதினார் என்றே வைத்துக் கொண்டாலும், அவர் ஒருவரே எழுதினார், மற்றதெல்லாம் பிற்சேர்க்கைகள் என்று கூட அனுமதித்தாலும், வியாசர் ஒரு காவியத்தைத்தான் எழுதுகிறார். அதாவது அது தகவலை ‘அப்படியே’ எழுதியதல்ல. நாடகப்படுத்தப்பட்ட ‘கதை’. சிலப்பதிகாரக் கதையை நடந்த வரலாறு என்று எண்ணி நாம் பேசினால் அது பொருந்தாது. அது அன்றைய சமுதாயப் போக்குகளின் ஒரு சித்திரம். அதிலும் இளங்கோ ஒரு நூலாசிரியனாக மட்டும் இருக்கிறார். அரசவையில் பங்கேற்பதாகக் கூடக் கதையில் இல்லை என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் பெயரே சொல்வது போல அவர் இளைய அரசன். 

யுதிஷ்ட்ரருக்குக் கிட்டிய ஹோதாவை விட துரியோதனனுக்குக் கூடுதலாகவே அந்தஸ்து கிட்டுகிறது. புராணத்திலும் கவனிப்பு நிறைய குவிக்கப்படுகிறது. இருப்பினும் துரியோதனனும் கூட பீஷ்மருக்கோ, கர்ணனுக்கோ, அர்ஜுனனுக்கோ, பீமனுக்கோ, திரௌபதிக்கோ கிட்டும் கவனிப்பை விடக் குறைவாகவே பெறுகிறான். கதையின் மையத்தில் இருப்பதையும், அது நிகழும் தருணங்களின் எண்ணிக்கையையும் வைத்துச் சொல்கிறேன். 

இதர கௌரவர்களில் துஷ்சாஸனனைத் தவிர, விகர்ணனைத் தவிர வேறெந்த கௌரவரை நமக்குப் பெயர் கூடத் தெரியும்? பட்டியலில் படிக்கலாம் அவ்வளவுதான், இல்லையா? அந்த 96 பேர்களை விட யுயுத்ஸுக்குக் கூடுதல் ஸ்தானம் கதையிலும் கிட்டுகிறது. கதையின் வருணிப்பிலும் அவனுக்கு மஹாரதன் என்ற பட்டம்தான் உண்டு. மறக்கப்பட்ட ஒருவனால் மஹாரதனாக ஆவது இயலாதது. வெறும் வில்வித்தையைத் தானே கற்று அர்ஜுனனையும் தோற்கடிக்கும் திறன் கொண்டதால் ஏகலைவனுக்கு விரல் வெட்டு நேர்கிறது என்றால், யுயுத்ஸுவுக்குக் கிட்டுவது ‘மறக்கப்படுவது’ இல்லை. மஹாரதனாக ஆகக் கொடுக்கப்படும் பயிற்சிகளும் சாதாரணர்களுக்குக் கிட்டுவனவாக இருந்திராது. 

பாரதத்தின் பல நூறு பாத்திரங்களில் அனைவருக்கும் ஒரே கவனம் கொடுக்கப்படுவது நேர ஒரு சாத்தியப்பாடும் இல்லை. உபகதைகள் என்று நாம் அறிவன பலவும் பிற்சேர்க்கை என்று இன்று சொல்லப்படுகின்றன. அவை எல்லாம் ‘ஸ்மிருதி’ என்று நீங்கள் வருணிப்பது போன்றவை என்றால், அவற்றின் நோக்கம் பரவலாகத் தெரிய வந்த ஒரு பெருங்கதையில் சேர்வதன் மூலம் அவை சமூகத்தின் ஒழுங்கமைப்புக்கு ஏதோ விதங்களில் கருத்துகளை முன்வைப்பதாக இருக்கலாம். குறைந்த பட்சம் கெடுமதிக்குத் தண்டனை இக பரத்தில் கிட்டும் என்ற மிகச் சாதாரண தர்ம பரிபாலனமாகவாவது நோக்கமாக இருக்கும்.

சிலவற்றுக்குத் தத்துவார்த்த நோக்கங்களும் இருக்கும். ‘கொக்கென நினைத்தாயா கொங்கணவா’ என்று தமிழில் சொல்லப்படும் சம்பவம், வடமொழிப் பிரதிகளில் குடும்பஸ்த்ரீகளுக்குத் தெரிந்த பிரம்ம ஞானம், காட்டில் உடல் வருத்தித் தவம் புரிந்தவனுக்கும் இல்லை. என்ன உடல் வருத்தம் புரிந்தாலும், எத்தனை துறவறமும் ஞானத்தைத் தராமல் போகலாம். எத்தனை சாதாரணக் குடும்பப் பாரம் சுமத்தலும் புத்தித் தெளிவுக்குத் தடை இல்லை என்ற ‘சமாதான’ அறிவுறுத்தலோடு, ஓரளவு கூரிய விமர்சனமும் அதில் இருக்கிறது. இது பௌத்தம், சமணம் ஆகியவற்றின் துறவே, துறப்பே விடுவிப்புக்கு வழி என்ற போதனையை மறுக்கும் கதை கூட. 

யுயுத்ஸுவின் அம்மாவுக்கு மறக்கப்படுவது நேர்ந்திருக்கலாம். அதுபற்றி எனக்கு விவர ஞானம் இல்லை. 

ஆனாலும் சாதாரணத் தர்க்கப்படி நோக்கினால், சுகதா என்ற பெயர் கதையில் பேசப்படுவதே கவனிப்புதான். பாரதத்தில் அத்தனை பாத்திரங்கள் உண்டு என்கையில் பெயர் சொல்லப்படுவதே ஒரு அளவு பிரதான்யம் கிட்டுவதுதான். பெருங்கதை என்பதாலும், அன்றைய உலக இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான தன்மைகள் என்று பார்ப்பதாலும் நமக்குத் தெரிவது ஒன்று. பாத்திரங்களின் மனப்பாங்குகளை விலாவாரியாக வருணித்து, சர்ச்சித்து, எதிரும் புதிருமாகப் பேசி விவரிப்பதெல்லாம் இந்தக் காவியங்களில் அரிதாகத்தான் காணப்படுகின்றன. அவை எல்லாமே அந்தந்தப் பிரதேச, குறுங்குழு மக்களின் விவரணைக்குத் திறப்புகள் கொடுப்பதோடு, காலத்துக்கேற்ற மறு தைப்புக்கு (டெய்லரிங்) இடம் கொடுக்கின்றன. 

[போர்ஹெஸின் கதையை இங்கு நினைவு படுத்துகிறேன். வரைபடம் நிலப்பரப்பாகுமா என்றால் ஆகாது. அப்படி ஆனால் என்ன ஆகும்? நிலப்பரப்பு மறக்கப்பட்டு வரைபடம் எதார்த்தமாகி விடுமா என்று அவர் கேட்டு ஒரு விசித்திரக் கதை எழுதுகிறார். இது பற்றிப் பின்னால் எழுதுகிறேன்.]

யுயுத்ஸு இறுதியில் இந்திரப்ரஸ்தத்தின் மன்னனாக மகுடாபிஷேகம் பெறுகிறான். பரீட்சித்து குழந்தை என்பதால் அவனுக்குப் பதில் குரு வம்சத்து ராஜ்யத்தை ஆள்பவனும் அவனே. இது கிட்டத் தட்ட பீஷ்மர் நிலைக்கு யுயுத்ஸு உயர்த்தப்படுவது போன்றது. பீஷ்மரும், குருடனான, சிறுவனான தன் தம்பிக்குப் பதில் ராஜ்யத்தை ஆள்கிறார். அவரும் குலம் இன்னதென்று அறியாத ஒரு பெண்ணுக்குப் பிறந்தவர்தான். 

அடுத்து ஒரு சொல்லின் பயன்பாட்டைப் பற்றிய கேள்வி. தாசி என்ற சொல் அன்று வேலையாள் என்ற பொருளில் பயன்பட்டிருக்கலாம். ஆனால் இன்று தமிழில் அந்தச் சொல்லுக்கு அதை விடப் பல மடங்கு கேவலமானது. விலைமகள் என்று பெரும்பாலான தமிழர் புரிந்து கொள்வர். சுகதா/ சௌவாலி விலைமகள் இல்லை. அவள் ஒரு வைசிய குலப் பெண். அரண்மனையில் பணிப்பெண்ணாகச் சேர்க்கப்பட்டவள். அத்தனை நூறு பெண்கள் நடுவே இவள் திருதராஷ்ட்ரனின் வாரிசுக்குக் காரணமாகிற அளவுக்கு இருந்தால், நிச்சயம் காந்தாரிக்கு நெருங்கிய குழுப் பணிமகளில் ஒருத்தியாக இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.  

நாம் இந்தப் பெண்ணுக்குத் தாசி என்ற சொல்லைப் பயன்படுத்துவதை விட பணிமகள் அல்லது வேறேதாவது பொருத்தமான வேலை வருணனைச் சொல்லைப் பயன்படுத்துதல் நல்லது. 

விதுரரின் தாயார் – வங்க நாடகம்

அங்கனா என்பது இந்தப் பெண்ணுக்குக் காரணப் பெயர்தானாம். அவள் முற்றத்தில் (ஆங்கனில்) இருக்கும் வகுப்புப் பெண்களைச் சார்ந்ததினால் அவள் பெயரைக் கூட அறியாமல் அங்கனா என அவளை அழைக்கிறார்கள். worse form of discrimination. NO identity.

இது கூம்கூம் ராய் கட்டுரையில் சொல்லப்படவில்லை. நான் அவள் பெயரே அங்கனா என நினைத்திருந்தேன்.

ஜெயமோகன் (வெண்முரசு) அவள் பெயரை சிவை என்கிறார். இது வடமொழியில் சிவா என்றிருந்திருக்கலாம். விக்கி அவள் பெயர் பரிஸ்ரமி என்கிறது

It is believed that the Mahabharatha has been modified many times. It is possible that a closer to our times version was written a few hundred years back.

Anamni Angana deals with Vidura’s mother. She had her simple desires and dreams which were teampled upon for the convenience of The royal household. Maybe Vidura got treated better because he was Satyavati’s grandson too.

குரல் கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை – அனாம்னி அங்கனா வும் அதற்கப்பாலும்
கூம் கூம் ராய்
தமிழில்: முத்து காளிமுத்து