Monthly Archives: மார்ச் 2006

March: patterns, trends and news

மார்ச் மாத முக்கிய நிகழ்வுகள்:

1. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய சுற்றுலா
2. நிதிநிலை தாக்கல்கள் – ப சிதம்பரம் & லாலு பிரசாத் யாதவ்
3. வைகோ இன்ன பிறரின் தமிழகத் தேர்தல் கூட்டணி நிலை
4. விடுதலைப் புலிகள் குறித்த கனடாவின் ஊடக அலசல்
5. மாயாவதி சொத்துக் குவிப்பு வழக்கு
6. வாரனாசியில் குண்டு வெடிப்பு
7. இங்கிலாந்து கிரிக்கெட்
8. திமுக கூட்டணி ஆட்சி & ஸ்டாலின் தகுதி
9. மகளிர் வேட்பாளர்கள் – சட்டசபைத் தேர்தல் 2006
10. காமன்வெல்த் விளையாட்டு

கொசுறு:

a) ஆஸ்கார் விருது
b) ஈரான் அணு பேச்சுவார்த்தை
c) ப்ரான்ஸில் வேலையில் இருந்து நீக்கப்படும் பயத்தில் இளைய சமுதாயம்


தமிழ் வலைப்பதிவுகளில்:

1. சுஜாதா குறித்த அழகிய பெரியவன் & திலகவதியின் கருத்து
2. தமிழ்மணத்திற்கு புதிய நிர்வாகி
3. ப்ளாக்தேசம் துவக்கம்
4. தேன்கூட்டில் ‘கில்லி’யின் செய்தியோடை
5. இலக்கியமான கவிதைகளின் மழை
6. தம்பி, பட்டியல் திரைப்பட விமர்சனம்
7. ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா விளையாட்டு
8. கானா உலகநாதன்
9. ரஜினியின் குரல்சக்தி – தேர்தல் 2006
10. நான்கு நான்கு நான்கு நான்கு


மேலதிகப் பட்டியல்களுக்கு:

  • Zeitgeist: கூகிள்
  • buzz log : What the world is searching for…
  • Yahoo! India – அதிகம் மின்மடலில் பகிரப்பட்ட செய்திகள்
  • கடந்த முப்பது தினங்களில் The New York Times-இல் அதிகம் பரிந்துரை செய்யப்பட்டவை
  • BBC News-இல் அதிகம் பார்வையிடப்பட்டவை
  • CNN.com-இல் அதிகம் கவனிக்கப்பட்டவை

    உங்களுடைய பார்வையில் முக்கியமான நிகழ்வு யாது? நான் தவறவிட்டவை எவை…


    | |

  • Nagas Chokkan’s Chutti Vikatan Thodar 

    Nagas Chokkan’s Chutti Vikatan Thodar Posted by Picasa

    Chokkan’s Sutti Vikadan Thodar on FIFA in Germany …

    Chokkan’s Sutti Vikadan Thodar on FIFA in Germany Posted by Picasa

    Social Computing Trademarks 

    Social Computing Trademarks Posted by Picasa

    Social Computing – Forrester Research 

    Social Computing – Forrester Research Posted by Picasa

    இது சாத்தியமா?

    இன்னமும் 40 நாட்களில் தெரிந்துவிடும் தமிழகத்தினை யார் ஆளப்போகிறார்கள் என்பது. அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் தற்போதைக்கு நிலை ஆதரவாக இருக்கிறது என்பது குமுதம் சர்வேயில் தெரிகிறது. ஆனாலும், சொல்லமுடியாது. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தப் போது, தி.மு.க தலைமையின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியினை தெரிவித்தார், ஆனாலும், ரஜினி போல, இன்னொரு முறை பிரச்சனைகள் இல்லாமல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கான ஒட்டுமொத்த ஆப்பு என்ற கருத்தினையும் முன்வைத்தார். எது எப்படியோ, ஏதோ ஒரு கூட்டணி வரப்போகிறது. ஆனால், முக்கியமாக அந்த கூட்டணி தமிழகத்தினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுமா என்பதை இப்போது சொல்லமுடியாது.

    தமிழக அரசியலில் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகளுக்கு மாற்றாக ஒரு மூன்றாம் கூட்டணி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளும் வீணாய்போயின. ஆக இருப்பதில் ஏதோ ஒரு கூட்டணி தான் வரப்போகிறது. ஆனால், இந்த முறை எந்த கூட்டணி வந்தாலும் அவர்களை பொதுமக்களாகிய நாம் எப்படி தட்டிக் கேட்கப் போகிறோம்.

    இன்றளவும் ஒரு குடிமகனாய், என்னுடைய தொகுதி கவுன்சிலருக்கான கடமைகள் என்ன, என்னென்ன கேள்விகளை நான் கவுன்சிலரை எதிர்த்து கேட்க முடியும், என்னுடைய தொகுதிக்கு என்ன திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, அவற்றுக்கான ஆதாரபூர்வமான கணக்குகளை பரிசோதிக்க முடியுமா, என்னுடைய தொகுதிக்கான விஷயங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பார்க்க முடியுமா என்று நிறைய கேள்விகள் எழுகின்றன. Accountability இல்லாமல் இருப்பதால் தான் அரசியல்வாதிகளால் ஊழல்கள் செய்யமுடிகிறது. இனியொருமுறை இம்மாதிரி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். மணிரத்னம் படங்கள் போல இண்டர்வேலுக்கு மேல் நான் மந்திரியாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ முடியாது. இந்திய சனநாயக தேர்தல் முறைகளில் நம்பிக்கைகள் இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதை கையிலெடுத்துக் கொண்டு எனக்கான, மக்களுக்கான வசதிகளையும், கேள்விகளையும் கேட்டு பெற்றுத்தர என்ன செய்ய முடியும் என்று தான் யோசிக்கிறேன்.

    தகவல் அறியும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்று நினைக்கிறேன் [?!] எந்த விதமான தகவல்கள என்னுடைய தொகுதி பற்றிய, உறுப்பினர்கள் பற்றிய, எம்.எல்.ஏ, கவுன்சிலர், எம்.பி பற்றிய, திட்டங்கள், அரசு ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும் ? இதில் இவை அடங்குமா? ஒரு வாக்காளனை ஒரு கட்சிக்கு ஒட்டுப் போடச் சொல்வது பிரச்சாரம். ஆனால், அவனுக்கும் போதிய அரசியல் அறிவினை கொடுத்தால் கையில் காசு வாங்கிக் கொண்டு, குடம்,சொம்பு, 500 ரூபாய் லட்டு மோதிரம் வாங்கினாலும், நாளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை கேள்விக் கேட்க ஏதுவாக இருக்கும். இனியும், இந்திய அரசியல் சட்டம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, சட்டத்தின் ஒட்டைகளை, மக்களின் அறியாமையினை முதலீடாகக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அவர்களின் வழியிலேயே போய் சட்டத்தினை தெரிந்து கொண்டு கேள்வி கேட்டு சட்டத்தின் முன் நிறுத்துவது தான் ஒரே வழி.

    1. உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் என்னென்ன ?
    2. உங்களுக்கு தெரிந்து அவர்களின் சொத்து மதிப்பு அவ்வளவுதானா. அப்படியில்லையென்றால், ஆதாரங்களுடன், தேர்தல் கமிஷனரிடத்தில் இதை கொண்டு செல்ல இயலுமா?
    3. வட்டம், தொகுதி, மாவட்டம் என்ற வரையறையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அரசால் ஒதுக்கப்பட்ட திட்டத்தின் நகலோ, திட்டத்தினை நிறைவேற்றுபவர்களின் [கவுன்சிலர், கமிஷ்னர், கலெக்டர், காண்ட்ராக்டர்கள் ] பற்றிய தகவல்கள் பொதுவாக தமிழக அரசு இணணயதளத்தில் இருக்குமா?
    4. அவ்வாறு இருப்பின், திட்ட மதிப்பீடுகளையும், திட்டகாலம், தொடக்கம், முடிவு, பணி நேரங்கள் பற்றிய விவரங்களை பொதுவாக அறிவிக்க முடியுமா? தொகுதியின் வரவு,செலவு நிதியாதரங்களைக் கொண்டு பாலன்ஸ் ஷீட் தாக்கல் செய்ய நிர்பந்திக்க முடியுமா?
    5. எந்த விஷயங்களை ஒரு எம்.எல்.ஏவிடம் நேரடியாக கேட்க முடியும்? எவற்றினை அரசு அலுவலகங்களில் கேட்டு பெற முடியும்? [ஆட்டோ வீட்டுக்கு வராமல்]
    6. சட்ட மன்ற தொடர் இல்லாத காலகட்டங்களில் ஒரு எம்.எல்.ஏவின் பணியென்ன?
    7. சட்ட மன்றத்தில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ என்ன கேள்விகள் கேட்டார், அதற்கு அவர் பெற்ற பதில்கள் பற்றிய விவரங்கள் இணையத்திலோ, பத்திரிக்கைகளிலோ கிடைக்குமா?
    8. ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியே ஆறுமாததிற்கோ, ஒரு வருடத்திற்கோ ஒரு முறை unaudited financial report செய்யும்போது மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசு ஏன் வெறுமனே பட்ஜெட் வரவு செலவுகளோடு நிறுத்திவிடுகிறார்கள் ? பொதுமக்களின் பார்வைக்கு ஏன் அரசின் வருடாந்திர/காலாண்டு திட்ட நிதி வரவு/செலவு விஷயங்களை வைக்கக்கூடாது?
    9. இவற்றினை சட்டரீதியாக கொண்டு வரமுடியுமா? அப்படியில்லையெனில் இவற்றில் பெரும்பாலானவற்றினை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல என்ன செய்ய வேண்டும் ?

    அழுகிற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும். கேள்வி கேட்காமல் நியாயங்கள் கிடைக்காது. அச்சமின்றி கேள்வி கேட்கவும், அதற்கு ஒரு உறுப்பினரை பதில் சொல்ல வைக்கவும் சட்டம் தெரிய வேண்டும். ஒரு சாதாரண குடிமகனுக்கு அவனுடைய உரிமைகள், கடமைகள் பற்றிய விஷயங்கள் தெரியாமல், தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ “புரட்சி” வெடிக்காது. ஆக, வெறுமனே பதிவுகளில் ஜல்லியடிக்காமல், தமிழ்நாட்டின் ஒரு ஏழை வாக்காளனுக்கு நான் என்ன செய்யப் போகிறோம், நம் “அறிவுஜீவித்தனங்களையும், புத்திசாலி கணக்குகளையும்” வைத்துக் கொண்டு ?

    இங்கே பதியும் நண்பர்களில் வழக்குரைஞர்கள், சட்டமறிந்தவர்கள் இருப்பின் நான் ஏன் தமிழகம் முழுவது கட்சி சார்பில்லாமல், ஒரு குடிமகனின் உரிமைகளை எடுத்துரைக்ககூடாது. நாளைய தமிழகத்தின் வாழ்வும்,தாழ்வும் நம்மிடத்திலும் இன்னமும் 41/2 கோடி மக்களிடத்திலும் இருக்கிறது. இதை மாற்ற என்ன செய்யப் போகிறோம்?

    CPIM – வேட்பாளர்கள் பட்டியல்

    1. சிங்காநல்லூர் – அ. சவுந்தரராசன்

    2. சிதம்பரம் – கே. பாலகிருஷ்ணன்

    3. மதுரை கிழக்கு – என். நன்மாறன்

    4. பெரம்பூர் (தனி) – எஸ்.கே. மகேந்திரன்

    5. திண்டுக்கல் – கே. பாலபாரதி

    6. திருப்பூர் – சி. கோவிந்தசாமி

    7. நாகப்பட்டினம் – வி. மாரிமுத்து

    8. வாசுதேவநல்லூர் (தனி) – ஆர். கிருஷ்ணன்

    9. திருப்பரங்குன்றம் – சு. வெங்கடேசன்

    10. திருவட்டாறு – ஆர். லீமாரோஸ்

    11. விளவங்கோடு – ஜி. ஜான்ஜோசப்

    12. குடியாத்தம் – ஜி. லதா

    13. அரூர் (தனி) – பி. டெல்லிபாபு

    Varanasi – Visitor Tips

    காசி – சில டிப்ஸ்

    P1010629

    1. காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் திடகாத்திரமான உடல்நிலை தேவை. கடைசி காலம் வரை காத்திருக்காமல், காலும் உடலும் ஒத்துழைக்கும் வயதிலேயே காசிக்கு விஸிட் அடிப்பது உங்களுக்கு நல்லது.
    2. விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாஷி கோவில்களுக்கான வழி, ஸ்கூட்டர்களுக்கு right of way கொடுக்கும் சந்து பொந்துகள் நிறைந்தது. ஆங்காங்கே எச்சில் துப்பல், மனித சாணம், மாடு போல் முட்டும் மனிதர்கள், மனிதர் போல் வழிவிடும் கூர்கொம்பு P1010629மாடுகள் கொண்டவை. கொஞ்சம் அலங்காநல்லூர் அனுபவம் இருந்தால் உதவலாம்.
    3. தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை‘ என்று சொல்லுமளவுக்கு வடமொழியை பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
    4. கங்கையை அடைய உதவும் படிக்கட்டுகள் வழுக்கும். மற்றவர்களின் கையைப் பிடித்துக் குளிக்க உதவுவதற்குமுன் இன்னொருவரின் உதவியை நாடுவதற்கு கூச்சப்பட வேண்டாம்.
    5. வாரநாசியில் இருந்து கிளம்பும் விமானங்கள் தாமதமாகவேக் கிளம்பும் P1010629என்பதை அனுசரித்தே திட்டமிடுங்கள்.
    6. சென்னை விமான நிலைய ப்ரீ-பெய்ட் வாடகை வண்டிகளை நாடாமல், குடிமகன்களின் ரதமான ஆட்டோவைப் பிடியுங்கள்.
    7. விமானத்திற்கு செல்வதானால் சாப்பிடாமல் செல்லவும். ‘அந்நியன்‘ அம்பி இருவுள் வாயில் சாப்பாட்டுக்கு தண்டனைக் கொடுப்பார் என்னும் பயத்தாலோ என்னவோ… ஒரு மணி நேரப்பயணத்திற்குக் கூட அறுசுவை கொடுக்கிறார்கள். கூடவே சோமபானமும் கொடுத்தால் முக்தி கிட்டும்.
      P1010629
    8. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்று சீஸன். மகேஸ்வரி வேண்டுமானால் நனையலாம். ஆனால், கங்கைப் பெருக்கெடுத்து ஓடுவாள். கொசுறு துப்பு: கறந்த பாலை கங்கையில் கொட்டினால் வெள்ளம் வடிந்துவிடும்.
    9. விடியற்காலையில் சாரநாத் புத்தாவைப் பார்ப்பது நிம்மதியைக் கொடுப்பது போன்ற பிம்பத்தை ஏபடுத்தி விடலாம்.

      P1010629

    10. கயாவில் எச்சரிக்கையாக உடைமைகளைப் பாதுகாக்கவும். பீஹாரில் பொதுவுடைமைக் கொள்கை தீவிரமாக இருப்பதால், ‘பர்ஸ் கயா‘ என்று விட்டுவிடலாம்.
    11. வெளிநாட்டவராக அல்லாமல், திரிவேணி சங்கமம் வரை சென்றுவிட்டு, தலையில் மட்டும் தண்ணீரைத் தெளித்துக் கொண்டு படகில் இருந்தே படம் பிடித்துக் கொண்டிருந்தால், விநோத ஜந்துவைப் பார்ப்பது போல் விமர்சிக்கப்படுவீர்கள்.
      P1010629
    12. திராவிடத் திருநாட்டில் வளர்ந்ததால், வயோதிகர்களுக்கு இருக்கை தராமலோ, முண்டியடித்து தரிசனம் செல்ல முயன்றாலோ, அரிதாகிப் போய்விட்ட உகந்தப் பழக்கவழக்கங்களிலும் குட் மேனர்ஸ்களிலும் பாடம் எடுக்கப்படும்.
    13. பணம் கறப்பதற்காகவே ‘இராமர் ஆலயம்’ கடைகளாக விரிக்கப்பட்டிருக்கும். முக்கிய கோவில்களின் பிரகாரங்களிலும் வழிபாதைகளிலும் நூதனப் பிச்சையாக காசிகயிறு கட்டுவது, நெற்றிச்சாந்து இடுவது, முதுகில் தட்டி அருள்பாலிப்பது, பூச்சூட்டுவது நடைபெறும்.
      P1010629
    14. தங்களின் இரக்கத்தை உழைப்பாளிகளும், தொணதொணப்பிற்கு சுணங்குவதைப் பிச்சைக்காரர்களும், கடவுள் அலட்சியத்தை வியாபாரிகளும், உடல் பருமனை ரிக்சாக்காரர்களும், தெய்வ அவமதிப்பாக எண்ணவைக்கலாம்.

    | |

    Madras Meetings

    சென்னை சந்திப்புகள்

    நான்கு சந்திப்புகள் கிடைத்தது. திலகபாமா ஏற்பாடு செய்திருந்த ‘பகிர்வு‘ குறித்து சேரியமாய், விரிவாய் பின்பு எழுத உத்தேசம்.

    சனிக்கிழமைதான் சந்திக்க முடியும் என்று அடம் பிடித்தாலும் பா. ராகவன் அலுவலகத்துக்கே வருமாறு சொல்லியிருந்தார். சென்ற முறைக்கு இந்த முறை இரட்டித்திருந்தார். ‘கெட்டிமேளம்‘ நன்றாகப் போகும் சந்தோஷமாக இருக்கலாம். மேஜையில் மருத்துவ மலர்கள், அனுமான் பஞ்சரத்னா, முதல் பதிப்பு 18-வது அட்சக்கோடு, எஸ்.வி ராஜதுரையின் ‘நிலமெல்லாம் இரத்தம்‘ விமர்சனம் தாங்கிய இந்தியா டுடே என்று வெரைட்டியான வலைப்பதிவுக்கான காத்திரமான ரெஃபரன்ஸ் போன்ற புத்தகங்கள்.

    வழக்கமான ‘வலைப்பதிவை விட்டுட்டு உருப்படற வழியப் பாருடா‘ போன்ற ஆத்மார்த்தமான வேண்டுகோள்களுக்குப் பிறகு கொஞ்சம் இலக்கிய நிகழ்வுகள், அரசியல் வம்புகள், ‘ரெண்டு’ தொடர்கதை, கிழக்கு பதிப்பகத்தின் பு(து)த்தகங்கள் என்று பேச்சு தொடர்ந்தது.

    நீண்ட நாளாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த ரஜினி (ராம்கிதான்) தரிசனமும் கிடைத்தது. கடந்த சில வருடங்களில் பலமுறை கற்பகாம்பாள் நகர் அலுவலகம் சென்றிருந்தாலும் பத்ரியையும் இப்பொழுதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். பிஸிக்கு நடுவில் ஒரு சின்ன ‘Hi’, நலம் விசாரிப்புக்குப் பிறகு பாரா-வையும் அவர் வேலையில் முடுக்கிவிட, ஆதவன், ‘சண்டக்கோழி’ எஸ். ராமகிருஷ்ணன் தொகுப்புகள், சில பல சிறுகதைத் தொகுப்புகள், தமிழோவியம் கணேஷ் சந்திராவுக்காக ‘சந்திரபாபு வாழ்க்கை வரலாறு‘ எல்லாம் வாங்கிக் கொண்டு நடையை ஏறக்கட்டினேன்.


    சனி மாலை கடும் வெயில் நேரம் கொடுக்கும் சூரியன் டாடா காட்டியபின் அடையாரின் புனிதத்தலமாக ‘ரைஸ் பௌல்’-ஐ அடையாளம் காட்டி கருப்பு சட்டையுடன் வெளியில் காத்திருந்தார் ரோஸா வசந்த். ஒடிசலான தேகம். நேரில் பார்த்தால் 25 வயதுதான் மதிப்பிட முடிகிறது. குரல் மட்டும் கொஞ்சம் வயசை முப்பதுகளுக்குத் தூக்கி செல்கிறது. பாந்தமாக வரவேற்று அங்கதத்துடன் இயல்புக்குக் கொண்டு வருகிறார்.

    ஆங்கிலம் கலக்காமல் தமிழ் சரளமாக புரளுகிறது. எல்லாரும் கேட்கும் ‘நீங்க என்.வி. சாப்பீடுவீங்களா?‘ அல்லது ‘Do you take chicken, beef?‘ போன்றவற்றைத் தவிர்த்து ‘நீங்க புலால் உண்பீர்கள் இல்ல?‘ என்று விழுகிறது.

    சனி இரவு என்பதால் மதுவரங்கம் நிரம்பி வழிகிறது. நுனி நாக்கு ஆங்கிலத்தில் எங்களைக் காத்திருக்குமாறு பணிக்கத் தொடங்கும் வரவேற்பாளனை, இணையத்தில் ஒவ்வாத கருத்தை முன்வைப்போனை இடைமறிக்கும் அதே லாவகத்துடன் தடுத்தாட்கொண்டு, ‘ஐயா… எனக்கு ஆங்கிலம் வராது! தங்களுக்குத் தமிழ் தெரியுமானால் உரையாடுங்கள்; அல்லது தமிழ் தெரிந்தவரை எங்களிடம் அனுப்புங்கள்‘ என்று மெல்லிய சிரிப்புடன், மரியாதை குறையாமல், மரியாதை வரவைக்குமாறு சொல்வது சொந்த வாழ்விலும் சமரசங்களை செய்து கொள்ளாததை அடையாளம் காட்டுகிறது.

    நிறையப் பேசுகிறோம். தமிழ்மணத்தின் லிஸ்டிங் போல் ஐந்து விநாடிக்கொருமுறை தலைப்பும் வாதங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே போகிறது. Continous partial attention கொடுத்து வலைப்பதிவர்கள், மனுஷ்யபுத்திரன், சொந்த வாழ்க்கை, ராயல் சாலெஞ்ச், ‘உருப்படாதது’ நாராயணுக்கு வழி, நெத்திலி மீன் என்று சுழல்கிறது.

    நிழல்கள் ஹரன்பிரசன்னாவும் ஸ்வஸ்திக் பிச்சைபாத்திரம் சுரேஷ் கண்ணனும் வந்து சேர்கிறார்கள். என்னுடைய இலக்கற்ற கருத்தாடலுக்கு லகான் போட்டு, சுரேஷ் கண்ணன் இலக்கியத்துக்கு கலந்துரையாடலை முன் நகர்த்துகிறார். மரவண்டு கணேஷுக்குத்தான் சிறப்பு நன்றிகளை சொல்ல வேண்டும். இருவரையும் தொலைபேசியில் பிடித்து, சந்திப்புக்கு வரவழைத்த பெருமை மரவண்டு கணேஷையே சேரும்.

    நீல. பத்மநாபன், திருநெல்வேலி வீதிகள், ஹேவர்ட்ஸ் 5000, கோவில்களில் பெண்களை கவனித்தலின் உளவியல் அலசல்கள், கோபி மன்சூரியன், நாராயணின் மென்சிரிப்புடன் விடை பெறுகிறோம்.


    ஞாயிறு மதியம் மூன்றரைக்கு சந்திப்பதாக சொல்லிவிட்டு நான்கரை மணிக்குத் தலையை காண்பிக்கிறேன். பொறுமையாக சென்னை வுட்லண்ட்ஸ் வாசலில் ஐகாரஸ் பிரகாஷ், நேசமுடன் வெங்கடேஷ், சுபாஷிதம் மதுமிதா, ஒலிக்கும் கணங்கள் நிர்மலா காத்திருக்கிறார்கள். மீண்டும் மரவண்டு கணேஷுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைப் பதிகிறேன். மதுமிதா மற்றும் நிர்மலாவுடன் தொலைபேசி வரவழைத்திருந்தார். அவரும் கவிஞர் ப்ரியனும் சிறிது நேரத்தில் சிறிது நேரத்துக்கு இணைந்து கொள்கிறார்கள்.

    மதுரபாரதியின் ‘புத்தம் சரணம்‘ குறித்த வாசக அனுபவத்தை பகிர்கிறார் மதுமிதா. ‘நீங்க எப்படி ‘புத்தம் சரணம் கச்சாமி‘ எழுதறீங்க’ என்று என்னைப் பார்த்து நம்ப முடியாமல் மூன்று தடவை வினவுகிறார். அரசு ஸ்டைலில் ‘ஹி… ஹி…’ என்பதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. (நண்பர் பிகேயெஸ் சொன்ன பகிடி நினைவுக்கு வருகிறது: ‘மனைவி வீட்டில் இருந்தால் ‘புத்தம் சரணம் கச்சாமி எழுதுவாய்’ ஊருக்குப் போயிட்டால் மரையா ஷரபோவா படம் போடுவாய்‘).

    காசி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நிர்மலா லஸ்ஸி சாப்பிட கதையையும் லஸ்ஸி உண்டாகும் விதங்களையும் வர்ணித்தவுடன் வட நாட்டு லஸ்ஸி ருசிக்கும் ஆர்வம் மீண்டும் எழுகிறது.

    கொஞ்ச நேரத்தில் ரஜினி ராம்கியும் வந்து சேருகிறார். காரசாரமான அரசியலுக்கு பேச்சு தாவுகிறது. வெங்கடேஷ் தன்னுடைய கணிப்புகளை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறார். எல்லோரும் வாய்பிளந்து கேட்கிறோம். தொகுதி மோதல்கள், கூட்டணி ஆட்சி, ஸ்டாலின் கருணாநிதி முதல்வர் ஆருடங்கள், மூன்றாவது அணி, தேதிமுக, திண்டிவனத்தார் என்று சகலத்தையும் ஐகாரஸும் ராம்கியும் வெங்கடேஷுடன் விவாதிக்கிறோம்.

    யார் ஒட்டுக் கேட்டு வெங்கடேஷின் வண்டியை ரிப்பேர் செய்தார்களோ… விடை பெறும் நேரத்தில் வெங்கடேஷின் வண்டி நகர மறுக்கிறது. கில்லியைக் குறித்து ஐகாரஸுடன் சில நிமிடம் பேசி விட்டு, அடுத்த முறை விட்டுப் போனவர்களையும் சந்தித்தவர்களையும் இன்னும் நிறைவாக சந்திக்கும் எண்ணத்துடன் கிளம்பினேன்.


    | |

    திமுக தேர்தல் அறிக்கை

    2 ரூபாய்க்கு அரிசி: திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி
    திமுக தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். அதில் விவசாயிகள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 29, 2006: சென்னை:

    தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • காலியாக உளள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
  • மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
  • கிலோ 2 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கப்படும்.
  • வீடு தோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்க வகை செய்யப்படும்.
  • ஏழை, எளிய தாய்மார்களுக்கு எரி வாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.
  • சிறு குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • நிலமற்ற ஏழை விவசாயிகளுககு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

    courtesy: Thatstamil

    Idlyvadai