Monthly Archives: திசெம்பர் 2006

Merry Christmas & a very Happy New Year wishes – 2007

Song Lyrics – ‘Everybody’s Free (to wear sunscreen)’

Ladies and gentleman.

Wear sunscreen.

If I could offer you only one tip for the future, sunscreen would be it. The long-term benefits of sunscreen have been proved by scientists, whereas the rest of my advice has no basis more reliable than my own meandering experience. I will dispense this advice now.

Enjoy the power and beauty of your youth. Oh, never mind. You will not understand the power and beauty of your youth until they’ve faded. But trust me, in 20 years, you’ll look back at photos of yourself and recall in a way you can’t grasp now how much possibility lay before you and how fabulous you really looked. You are not as fat as you imagine.

Don’t worry about the future. Or worry, but know that worrying is as effective as trying to solve an algebra equation by chewing bubble gum. The real troubles in your life are apt to be things that never crossed your worried mind, the kind that blindside you at 4pm on some idle Tuesday.

Do one thing every day that scares you.

Sing.

Don’t be reckless with other people’s hearts. Don’t put up with people who are reckless with yours.

Floss.

Don’t waste your time on jealousy. Sometimes you’re ahead, sometimes you’re behind. The race is long and, in the end, it’s only with yourself.

Remember compliments you receive. Forget the insults. If you succeed in doing this, tell me how.

Keep your old love letters. Throw away your old bank statements.

Stretch.

Don’t feel guilty if you don’t know what you want to do with your life. The most interesting people I know didn’t know at 22 what they wanted to do with their lives. Some of the most interesting 40-year-olds I know still don’t.

Get plenty of calcium. Be kind to your knees. You’ll miss them when they’re gone.

Maybe you’ll marry, maybe you won’t. Maybe you’ll have children, maybe you won’t. Maybe you’ll divorce at 40, maybe you’ll dance the funky chicken on your 75th wedding anniversary. Whatever you do, don’t congratulate yourself too much, or berate yourself either. Your choices are half chance. So are everybody else’s.

Enjoy your body. Use it every way you can. Don’t be afraid of it or of what other people think of it. It’s the greatest instrument you’ll ever own.

Dance, even if you have nowhere to do it but in your living room.

Read the directions, even if you don’t follow them.

Do not read beauty magazines. They will only make you feel ugly.

Get to know your parents. You never know when they’ll be gone for good. Be nice to your siblings. They’re your best link to your past and the people most likely to stick with you in the future.

Understand that friends come and go, but with a precious few you should hold on. Work hard to bridge the gaps in geography and lifestyle, because the older you get, the more you need the people who knew you when you were young.

Live in New York City once, but leave before it makes you hard. Live in Northern California once, but leave before it makes you soft.

Travel.

Accept certain inalienable truths:

  • Prices will rise.
  • Politicians will philander.
  • You, too, will get old. And when you do, you’ll fantasise that when you were young, prices were reasonable, politicians were noble and children respected their elders.

    Respect your elders.

    Don’t expect anyone else to support you. Maybe you have a trust fund. Maybe you’ll have a wealthy spouse. But you never know when either one might run out.

    Don’t mess too much with your hair or by the time you’re 40 it will look 85.

    Be careful whose advice you buy, but be patient with those who supply it. Advice is a form of nostalgia. Dispensing it is a way of fishing the past from the disposal, wiping it off, painting over the ugly parts and recycling it for more than it’s worth.

    But trust me on the sunscreen.

    புத்தாண்டு & கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
    பாலாஜி

  • Year in Reviews – 2006

    1. Best (and Worst) Ads of ’06 – WSJ.com: அமெரிக்க விளம்பரங்களைக் குறித்த பட்டியல் : சிறப்பு & மோசம் இரண்டையும் இட்டிருக்கிறார்கள்

    2. Google Press Center: Zeitgeist: 2006இல் அமெரிக்காவால் அதிகம் தேடப்பட்டதை தலை பத்தாக கொடுக்கிறார்கள். rebelde தெரியுமா என்று கேட்டால், ftw சொல்லத் தெரிய வேண்டும்.

    3. Yahoo! Top Searches of 2006 – Top Ten Lists: டென்மார்க் கார்ட்டூன் கதை முதல் ஷகிரா வரை யாரெல்லாம் பெரிதும் அறிந்துகொள்ள விரும்பினார்கள் என்று பட்டியலிடுகிறது. சூரி, ஷிலோ, என்று குழந்தைப் பெயர்களைத் தெரிய, தேடிய பட்டியலும் உண்டு.

    4. Batteries, Wii, spam: you must remember 2006 | Technology | Guardian Unlimited Technology: தொழில் நுட்பத்தில் தவறவிடக் கூடாத நிகழ்வுகளை ஆராய்கிறார்கள். விஸ்டா, அஜாக்ஸ், எம்பி3 திருட்டு, நீலக்கதிர் தகடு (Blu-ray Disc) என்று நிறைய சுவாரசியங்கள்

    5. InfoWorld Year in Reviews 2006 in Summary: சென்ற வருடத்தில் என்ன நிரலி வெளியானது? எவ்வளவு பயனுள்ளது? எதற்கு உபயோகம்? அதே துறையில் இருக்கும் மற்ற மென்கலன்களோடு எவ்வாறு ஒப்பிடுகிறது? மிக முழுமையான அலசல் & மென்கலன் பட்டியல் (பயனராக இருத்தல் அவசியம்; அமெரிக்கவாசியாக இருந்தால், இன்ஃபோவோர்ல்ட் இலவசமாக – சந்தா கட்டாமலே, வாராவாரம் வீடு தேடி வரும் உருப்படியான பத்திரிகை.)

    6. What were the notable political moments? – National Journal – MSNBC.com: அமெரிக்காவில் ஆட்சி கட்சி மாறிய ஆண்டு. தலைவர்களுக்கொரு பயோடேட்டா, சறுக்கிய நிகழ்வுகளுக்கொரு நினைவூட்டல்.

    7. ESPN.com – TENNIS – DeSimone: Sharapova wins, wails, whines in year in review: பெண்கள் டென்னிஸ் குறித்த மிக சிறப்பான பருந்துப் பார்வை. சானியா மிர்சாவும் இருக்கிறார்.

      “Whatever your limitations might be, don’t let them define you. I didn’t let it define me.” — Navratilova

    8. FOXNews.com – Twilight of the Idols: The Information Technology Year in Review – Technology News | News On Technology: என் தொழில் கணினி சார்ந்தது என்பதால், கணிப்பொறி சார்ந்த செய்திகளைத் தொகுத்து வழங்கும் இந்த சுட்டிக்கும் ஒரு சுட்டு.

    9. Hour.ca – Film – Year in Review: Film: ஹாலிவுட் படங்கள் குறித்த மாற்றுப் பார்வை.

    10. Boston’s Weekly Dig: Movies: International Film Roundup: மீத உலகத் திரைப்படங்கள் குறித்த ஆண்டு நிறைவு நினைவுப் பதிவு

    11. Boston’s Weekly Dig: Movies: The Year in Film: மாதவாரியாக ஆங்கிலப் படங்கள் குறித்த கலக்கல் அலசல்.

    12. Hour.ca – Books – Year in Review: The year in books: புத்தகங்கள் குறித்த சுஜாதா-ish (செப்புப்பட்டயம் – “அவார்டுகள் அள்ளிக்கோ”) சுருக் விமர்சனப் பட்டியல்.
    13. Hour.ca – News – The Year in Review: Top 50 freakouts: என்னதான் நடக்கும்… நடக்கட்டுமே… நடந்த கதைகள்.
    14. Year in Review: Quotes, Pictures, Top Videos and News Stories from 2006 | Reuters.com: கடைசியாக இட்டிருந்தாலும் பலே பலே பட்டியல். புகைப்படங்கள், மேற்கோள்கள், செய்தி, அரசியல், பொருளாதாரம், சினிமா, இலக்கியம், கலை, உலகம் என்று பகுதிவாரியாக சொல்கிறார்கள்.


    | | | | | | |

    Who is the most popular film actor in Tamil Nadu? – The Hindu Survey

    லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புகளில் ரொம்ப நாளாக எனக்கு சந்தேகம் இருந்தது. தாடி வைத்து, தொப்பி போட்டு ‘சிவப்பதிகாரம்‘ ரகுவரன் மாதிரி பேராசிரியர் ‘இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி ஜெயிக்கும்’ என்று அடிக்கடி சன் டிவி செய்திகளில் ஊடக உரையாடுவார்.

    முந்தாநேற்று கூட ‘இன்றைய தேதியில் ஆளுங்கட்சிக்கு அபார ஆதாரவு இருக்கிறது. நாளைக்கு ஏதாவது தேர்தல் வந்தால், திமுக முழுமையாக ஆட்சியைப் பிடிக்கும்’ என்று பேசிக் கொண்டிருந்தார்.

    அதே Loyola College’s School of Media Studies நடத்திய சினிமா ரசிகர் கேள்வி பதிலின் முடிவுகள்:

    அதிகம் கவர்ந்த நடிகர்:

    ரஜினிகாந்த் – 15.6 %

    விஜய் – 14.2 %

    விஜய்காந்த் – 12.6 %

    அஜீத் – 11.1 %

    கமல் ஹாசன் – 8.3 %

    பெரிதினும் பெரிதாக பிடித்த நடிகை:

    அசின் – 14.1 %

    ஜோதிகா – 11.8 %

    சிநேகா – 8.9 %

    த்ரிஷா – 7.5 %

    சிம்ரன் – 6.1 %

    சர்வேயில் பங்குபெற்றோர்: 2,945

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. : )

    செய்தி: தி ஹிந்து


    | | | | | | |

    கலர்ஃபுல் மலேசியா

    வருவான் வடிவேலன் பாடலைக் கேட்க விரும்புவோர் பி சுசிலா பாடல் பக்கம் செல்லலாம்.

    இது கடந்த வாரத்தில் என் கண்ணில் பட்ட மலேசியச் செய்திகள்:

    Petronas Towers1. Malaysian politician proposes ‘shouting therapy’ room for onery lawmakers: “மலேசிய நாட்டின் போர்னியோ தீவின் சட்டசபை மீன் சந்தை போல் சத்தக் கடையாகி விட்டது. உரத்து குரல் எழுப்பி, கவனம் கோருபவர்களை இனிமேல் தனி அறையில் போடப் போகிறோம்.”

    அங்கு அவர், ஆசை தீர, எதைத் திட்ட வேண்டுமோ அதைத் திட்டி, எப்படி கைவரிசை காட்ட வேண்டுமோ அப்படி கோபித்து தன் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறார்கள்.

    2. Malaysia mulls Internet laws against bloggers: ‘அமைதியைக் குலைக்கும் வண்ணம் செய்திகளைப் பரப்புவது, குழப்பத்தை விளைவிக்கும் தகவல்களை வெளியிடுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைத் தருவது போன்றவற்றை கணினிக் குற்றங்களின் கீழ் கொண்டு வரப் போகிறோம்’ என்று மலேசியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மிரட்டியுள்ளார்.
    Sunset Storm over Kuala Lumpur
    ‘இருவர்’ திரைப்படத்தில் வரும் ‘உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே’ காட்சியைப் போல் புகைப்படம் ஒன்றை வலைப்பதிவர் வெளியிட்டிருக்கிறார்.

    படத்தில் வீடு; இங்கு ஹோட்டல் அறை.
    அங்கு தபூ; இங்கு மலேசியாவின் சட்டசபை உறுப்பினர்.
    இருவரில் பிரகாஷ்ராஜ்; இங்கு மணமாகாத ஆடவன்.

    நிக்காவிற்கு முன் இந்த மாதிரி உறவு சரியல்லவே (Proxemics – Khalwat) என்னும் விவாதம் எழுந்திருக்கிறது.

    தொடர்புள்ள செய்தி: Malaysian news blogs are Warned

    IMG_4781gangpg3. 70 Hindu Temples to be destroyed in Malaysia: “மலேசியாவில் 70 இந்து கோவில்களை இடித்து அகற்ற உத்தரவு”

    நூற்றுக்கணக்கான கோவில் கள் சாலை ஓரங்களில் உள்ளன. பூங்காக்களில் உள்ள மரங்களை இணைத்தும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் அனுமதி பெறா மல் கட்டப்பட்டவை ஆகும். தற்போது சாலை மேம்பாடு பணி நடந்து வருவதால், விதி முறையை மீறி கட்டப்பட்ட இந்து கோவில்களை இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    திருமண மண்டபத்தை இடிப்பதால் விஜயகாந்த்துக்கு ரூ.8.55 கோடி (Vijayganth’s Marriage Hall demolition to make way for Traffic Congestion – Rs 8.55 Crores compensation to be paid) நஷ்டஈடு வழங்கப்படுவது போல் ஆலய நிர்வாகிகளுக்கு மானியம் வழங்கப்படுமா என்று தெரியவில்லை.


    | | | | | | |

    Mottai Superstar – Rajini shaves head for Sivaji

    படம் இங்கே:

    செய்தி அங்கே: சூப்பர் ஸ்டாருக்கு ‘மொட்டை’


    | | | | | | |

    Pokkiri – Song Lyrics

    போக்கிரி
    இசை: மணி ஷர்மா
    இயக்கம்: பிரபு தேவா

    போக்கிரி படத்தின் இசையும் வரிகளும் குறித்த டாகுமெண்டேசன். விரிவான ‘போக்கிரி’ பாடல் அனுபவங்களைப் படிக்க இங்கே செல்லவும்: Pokkiri – Album Review

    1. என் செல்லப் பேரு ஆப்பிள் – ஏவி ரமணண் & சுசித்ரா : பா விஜய்

    பா விஜய்க்கு தேசிய விருது கிடைக்குமா?

    (ஆண்)
    ஏ ரோஸி
    மை செக்ஸி
    ஐ லைக் யுர் டோண்ட் கேர் பாலிசி
    என் ராசி
    சிம்ம ராசி
    நானொரு காதல் சன்னாசி

    (பெண்)
    இங்கிலாந்தில் பெண்களும்
    இந்தியாவில் ஆண்களும்
    அட
    ஆசைகள்
    அடங்காத ஆட்கள்

    (ஆண்)
    ஓ மேரா
    புல்புல் தாரா
    என் முன் ஆடும் எல்லோரா
    ஆவாரா
    ஆடிப்போறா
    ஆசை நூறா
    ஐநூறா?

    2. வசந்த முல்லை – ராகுல் நம்பியார், வி கிருஷ்ணமூர்த்தி : நா முத்துக்குமார்

    அசல் பாட்டும் வருகிறது. படுத்தியிருக்க வேண்டாம்.

    குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன்
    கண்ண நிமிர்ந்துதான் பார்க்கிறேன்

    காதல் என்பது காப்பியைப் போலே
    ஆறிப் போனா கசக்கும்
    காஞ்சிப் போன மொளகா பஜ்ஜி
    … போலவே இனிக்கும்

    தாடி வச்சிருக்கோம்
    கேடி ரவி முகம்

    3. டோல் டோலு – ரஞ்சித், சுசித்ரா : பா விஜய்

    வைரமுத்து மட்டுமே காப்பிரைட் வாங்கிய அறிவியல் துளிகளை உல்டாவாக்கி எழுதும் வித்தையை பா விஜய்யும் தொடர்கிறார். சிவப்பதிகாரத்தின் ‘அற்றைத் திங்கள்’ போல் ஹஸ்க்கி பாடல். திரையாக்கம் அடல்ட்ஸ் ஒன்லி?

    வலப்பக்கம் சுழலும் பூமிப் பந்து திரும்பி
    இடப்பக்கம் சுழலுது உன்னாலே

    கைப்பிடி அளவில் இருக்கின்ற இதயம்
    விரிந்தது குடை போலே

    4. மாம்பழமாம் மாம்பழம் – சங்கர் மகாதேவன், கங்கா : சிநேகன்

    ‘வடுமாங்கா ஊறுதுங்கோ’ நடையில் துள்ளல் கானம்.

    (ஆண்)
    எங்கே நான் தொடங்கணும்
    எங்கே நான் மடங்கணும்
    எங்கே நான் அடங்கணும்
    சொல்லிக் கொடுடி

    (பெண்)
    ஈசானி மூலையெல்லாம் என்கிட்டதான் இல்லடா
    என்ன நீ நெனக்கிறியோ பூந்து விளையாடுடா


    பாடலாசிரியர்: கபிலன்

    (ஹீரோ)
    ஆடுங்கடா என்ன சுத்தி
    நான் அய்யனாரு வெட்டுக் கத்தி

    பாடப்போறேன் என்னப் பத்தி
    கேளுங்கடா வாயப் பொத்தி

    கடா வெட்டிப் பொங்கல் வச்சா
    காளியாத்தா பொங்கலடா

    துள்ளிக்கிட்டு பொங்கல் வச்சா
    ஜல்லிக்கட்டுப் பொங்கலடா

    அடியும் உதையும் கலந்து வச்சு
    விடிய விடிய விருந்து வெச்சா
    போக்கிரிப் பொங்கல்

    இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு
    அடுப்பில்லாம எரிய வச்சா
    போக்கிரிப் பொங்கல்

    ———
    (பெண் குழு)
    போக்கிரியக் கண்டாலே சூடு
    இவன் நின்னாலே அதிரும்டா ஊரு

    அட…
    கைத்தட்டி கும்மாளம் போடு
    கொண்டாட்டாம் நீ…
    இருக்கும் வரைக்கும் நிலைக்கும்!

    அவன் வந்தாலே விசிலடிக்கும் பாரு
    என்னாளுமே பறக்கும்…
    அதுதான் கலக்கும்

    ———

    (ஹீரோ)
    பச்சப்புள்ள பிஞ்சு விரல்
    அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா

    முந்தானையில் தூளி கட்டும்
    தாய்மாரை நீ கொஞ்சம் தள்ளி வச்சா

    ஆத்தா உன்ன மன்னிப்பாளா?
    தாய்ப்பால் உனக்கு கோக்கோ கோலா!

    தாயும் சேயும் ரெண்டு கண்ணு
    காலத் தொட்டு பூச பண்ணு

    நான் ரொம்ப திருப்பு
    என்னோட பொறப்பு
    நடமாடும் நெருப்பு

    ———

    மழைக்காலத்தில் குடிசையெல்லாம் கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்
    வெயில்காலத்தில் குடிசையெல்லாம் அணையாமல் எரிகின்ற காட்டுமரம்

    சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேரப்புள்ள
    பட்டதெல்லாம் எடுத்து சொல்ல பட்டப்படிப்புத் தேவையில்ல

    தீப்பந்தம் எடுத்து
    தீண்டாமை கொளுத்து
    இதுதான் என் கருத்து!


    | | | | | | |

    Tamiloviam – G.Ragavan

    அக்டோபர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியில் வென்ற கோ. இராகவனை சிறப்பாசிரியராகக் கொண்ட தமிழோயவியத்தில் இருந்து…

    • (புகைப்) படமும் விமர்சனமும்

      மயிலார் : பார்க்கப் பார்க்க அலுக்காதவைன்னா…அங்கயே இருக்க வேண்டியதுதான. திரும்ப பெங்களூருக்கு எதுக்கு வந்தானாம்?

    • கோழியும் பூசணியும் கலந்த உணவு: கோசணி (சமையல் ரெசிபி)

      இது முழுக்க முழுக்க என்னுடைய மண்டையில் உதித்தது. செய்தும் உண்டது. நண்பர்களிடம் பாராட்டும் வாங்கியது.

    • அருட்பெருங்கோ: கவிதைக் குளியல்

      “முத்தம் வேண்டுமா?” – சொற்சுவை.
      “இச்” – “பொருட்”சுவை.

    • திருக்குற்றாலக் குறவஞ்சி

      இது முருகன் கவுண்ட் டவுன். 12-இல் ஆரம்பித்து ஒன்று வரை அந்தக் காலத்திலேயே எண்களைக் கொண்டு எண்ணங்களை சிலிர்க்க வைத்த பாடல் குறித்த முத்திரை ரசனை.

    • காட்டு வளம்

      காதலன் முத்தமிட்டும் நாணமில்லாமல் நிலமகள் கிடப்பதைப் பார்த்தால் இது நெடுநாள் காதல் போலத் தெரிகின்றது.

      இரவில் ஒரு காதலன். பகலில் ஒரு காதலன். நிலமகளே நீ பொல்லாதவள்.

      ஒருவரோடு நீ கூடிக்கிடக்கும் வேளையில் மற்றவர் வந்தால் உன்னை எச்சரிக்க எத்தனை ஒற்றர்கள்.

    • நான் பூத்த வலைப்பூக்கள்

      பாண்டி பஜாரில் விஜய டி.ராஜேந்தர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கனவில் வந்து சொன்ன கதை, 2006லாவது இலங்கைக்குப் போவோம்


    | |

    Tamil Blogs – 2006

    முந்தைய பரிந்துரைகள், பாராட்டுகள்:

    ஜூலை 2005 பதிவு: அகப்பாடு பத்து

    டிசம்பர் 2005 வலைப்பதிவுகள் – 2005

    ஆகஸ்ட் 2006 : What are the Top Tamil Blogs

    தொடக்கத்திலேயே இருவருக்கு நன்றியை சொல்லி விடுகிறேன்.

    1. சும்மா டைம் பாஸ் மச்சி….. &
    2. வெட்டிப்பயல்

    ஒருவர் பின்னூட்டமாகவும், மற்றொருவர் தனியாகவும் கேட்டுக் கொண்டு, இந்தப் பதிவை எழுதுவதற்கு ஊக்குவித்தார்கள். இந்தப் பதிவுக்கு காரணகர்த்தாவாக இருந்த பாவத்தினால், இவர்களுக்கு, எந்தப் பட்டியலிலும் இடம் கிடையாது 🙂

    இந்த வருடத்தின் மிகச் சிறந்த பத்து பதிவுகளாக நான் இவற்றை சொல்கிறேன்:

    இவர்கள் தவிர ஏழு நாள்களுக்கு ஒன்றாக எழுச்சியூட்டும் எழுவர்:

    கடைசியாகத் தலைப்பை கடன் வாங்கி விருதுகள்:

    1. Best Humanities தமிழ் பதிவு – என்றால் என்ன – கார்திக்வேலு
    2. Best Entertainment தமிழ் பதிவு – கார்த்தியின் கனவுலகம்
    3. Best Science/Technology தமிழ் பதிவு – சுந்தரவடிவேல்
    4. Best தமிழ் பதிவு directory/service/clique/network – கில்லி – Gilli
    5. Best Topical தமிழ் பதிவு – ஊசி aka pin
    6. Best Designed தமிழ் பதிவு – பொன்ஸ் பக்கங்கள்
    7. Most Humorous தமிழ் பதிவு – பினாத்தல்கள்
    8. Best Travel தமிழ் பதிவு – தேசிகன் பக்கம்
    9. Best New தமிழ் பதிவு – rajavanaj
    10. Best Group/Community Blog – சென்னபட்டிணம்
    11. தமிழ் பதிவு of the year எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் | எண்ணங்களை எழுதுகிறேன்

    நன்றி: The Indibloggies » Indibloggies 2006 ~ The Award Categories


    | | | | | |

    Tamil Film Songs – 2006 Best

    என்றும் கேட்கலாம் பத்து

    1. லேலாக்கு :: ஆதி (வித்யாசாகர்)
    2. கோலிகுண்டு கண்ணு :: எம் மகன் (வித்யாசாகர்)
    3. சித்திரையில் என்ன வரும் :: சிவப்பதிகாரம் (வித்யாசாகர்)
    4. ரகசியமானது காதல் :: கோடம்பாக்கம் (சிற்பி)
    5. ஏதோ நினைக்கிறேன் :: தலைநகரம் (டி இமான்)
    6. ஆணும் பெண்ணும் :: உயிர் (ஜோஷுவா ஸ்ரீதர்)
    7. கண்ணனை நினைக்காமல் :: நீ வேணுண்டா செல்லம் (தினா)
    8. சரச லோக :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)
    9. கண்கள் தேடுதே :: மனதோடு மழைக்காலம் (கார்த்திக் ராஜா)
    10. உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே :: வெயில் (ஜிவி பிரகாஷ் குமார்)

    ஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)

    1. கற்க கற்க :: வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)
    2. காதலைப் பிரிக்க காதலர் போடும் திட்டம்தான் :: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (யுவன் ஷங்கர் ராஜா)
    3. வாள மீனுக்கும் :: சித்திரம் பேசுதடி (பாபு)
    4. ஏதேதோ எண்ணங்கள் வந்து :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
    5. நெஞ்சாங்கூட்டில் :: டிஷ்யூம் (விஜய் ஆண்டனி)
    6. தையத்தா :: திருட்டுப் பயலே (பரத்வாஜ்)
    7. கண்ணை விட்டு :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
    8. பூப்பறிக்க நீயும் :: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (தேவி ஸ்ரீபிரசாத்)
    9. இது என்ன வாழ்க்கை :: ஆச்சார்ய (ஸ்ரீகாந்த் தேவா)
    10. லூசுப் பெண்ணே :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)

    ஆடலுடன் பாடலும் சுகம் பத்து

    1. நம்ம காட்டுல :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
    2. எம்மாடி ஆத்தாடி :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)
    3. அருவா மினுமினுங்க :: வெய்யில் (ஜிவி பிரகாஷ் குமார்)
    4. எங்க ஏரியா :: புதுப்பேட்டை (யுவன் ஷங்கர் ராஜா)
    5. சங்கு தாரை தப்பட்ட :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)
    6. ஆ சொன்னா அயனாவரம் :: கொக்கி (தினா)
    7. ஒரே முறை தப்பு :: (ஸ்ரீகாந்த் தேவா)
    8. நூறு நூறு :: தலைமகன் (பால், ஸ்ரீகாந்த் தேவா)
    9. ஒவ்வொரு பிள்ளையும் :: வட்டாரம் (பரத்வாஜ்)
    10. நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே ::வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)

    ஆறுதல் பரிசுகள்

    1. கீரை வெதப்போம் :: திருப்பதி (பரத்வாஜ்)
    2. நியூ யார்க் நகரம் :: சில்லென்று ஒரு காதல் (ஏ ஆர் ரெஹ்மான்)
    3. சுடும் நிலவு :: தம்பி (வித்யாசாகர்)
    4. கிங்கிணி மிங்கிணி :: கிழக்குக் கடற்கரை சாலை (பால்)

    Top 10 Movie Songs: “திரைப்பாடல்கள் – 2005”

    இசையமைப்பாளர்களும் இடம் பெற்ற எண்ணிக்கையும்

    1. யுவன் ஷங்கர் ராஜா – 7
    2. வித்யாசாகர் – 4
    3. பரத்வாஜ் – 3
    4. ஸ்ரீகாந்த் தேவா – 3
    5. பால் – 2
    6. ஹாரிஸ் ஜெயராஜ் – 2
    7. தினா – 2
    8. ஜிவி பிரகாஷ் குமார் – 2
    9. சபேஷ் – முரளி – 2
    10. பாபு – 1
    11. தேவி ஸ்ரீபிரசாத் – 1
    12. விஜய் ஆண்டனி – 1
    13. சிற்பி – 1
    14. டி இமான் – 1
    15. ஜோஷுவா ஸ்ரீதர் – 1
    16. கார்த்திக் ராஜா – 1
    17. ஏ ஆர் ரெஹ்மான் – 1

    | | | | | | |

    H1-B Skil Issue & Indian Strikes

    அமெரிக்க அச்சம் & அரசு ஊழியர் வேலை நிறுத்தம்

    பொருளாதார வளர்ச்சி காணாத நாடுகளிடம் அவுட்சோர்ஸிங், எச்1-பி ஆவதைக் கண்டு அமெரிக்கர்கள் பயப்படுகிறார்கள்:
    1. Immigration is beneficial — if it’s legal

    2. Programmers Guild fears lame duck Congress will pass the Skil Bill

    3. The SKIL Bill and Your Local Elementary School

    மேற்கத்திய உலகைக் கண்டு இந்திய அரசு ஊழியர்கள் தங்கள் வேலைக்கு உலையோ என்று அச்சம் கொள்கிறார்கள்:
    Dinamani.com – TamilNadu Page :: தொழிலாளர் விரோதப்போக்கு மற்றும் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து பொது வேலை நிறுத்தம்: மத்திய – மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் துறை உள்பட பல்வேறு அரசு துறையினர், தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் அன்றாடப் பணிகள் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியத்தை தனியார் மயமாக்க மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பது உள்பட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    தொலைபேசி ஊழியர்கள்: இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனமும் அறிவித்துள்ளது.


    அமெரிக்கா வாசிகளுக்கு ஏன் பயம்?

    1. புதிய சட்டம் அமலுக்கு வந்தால், எச்1-பியில் இருப்பவரின் துணைவரும் வேலைக்கு செல்லலாம்.
    2. அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்த மாணவர்கள் எச்1-பி கோட்டாவில் அடிபட்டு, விசாவிற்காக காத்திருக்க வேண்டாம்.
    3. நிரந்தரக் குடியுரிமை பெறும் முறை எளிதாகும்.
    4. H1-B எண்ணிக்கை அதிகரிக்கும். (310,000 ஆக உயர்கிறது).
    5. இப்பொழுதுதான் நிமிர்ந்திருக்கும் வேலைவாய்ப்புகளும், ஊக்கத் தொகைகளும், சம்பளங்களும், மேலும் உயராமல் ஸ்திரப்பட்டு விடும்.
    6. சாதாரணமாகப் படிக்கும் தங்களின் குழந்தைகள், ப்ரொஃப்ஷனல் துறைகளில் இருந்து துறவறம் பூணும் வாய்ப்பாக இந்த சட்டம் அமையும்.
    7. ஏனோதானோ என்றில்லாமல், கர்ம சிரத்தையாக பணியில் முனைப்பு காட்டினாலும், வேலை நிரந்தரம் இல்லாமல் போகும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

    இந்தியாவில் அரசு ஊழியர்கள் ஏன் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று என்னால் கணிக்க இயலவில்லை. தொடர்பாக மனதில் எழுந்த கேள்விகள்:

    1. பன்னாட்டு வங்கி, காப்பீடு, தொலைபேசி எல்லாமே வேலை நிறுத்தம் செய்யாமல் கிடைக்கிறது. அவ்வாறு தங்கு தடையற்ற சேவை கொடுக்கும் இடத்திற்கு பயனீட்டாளர்கள் மாறிவிடுவார்களா?
    2. அவ்வாறு மாற்றிக் கொண்டால், எழும் நஷ்டம் அல்லது லாபக் குறைவிற்கு ஏற்ப ஆட்குறைப்பு அரங்கேறுமா?
    3. திறமற்ற பணியாளர்களைக் குறைக்காவிட்டால், நாளடைவில் திவாலாகும் வாய்ப்பு இருக்கிறதா?
    4. முதலீட்டாளர்களுக்கே துண்டுச்சீட்டு கொடுக்கும் நிலை ஏற்பட்டால், அங்கு வேலை பார்த்த அரசு ஊழியரின் சேமநல நிதி என்னவாகும்?
    5. இவ்வாறு பற்றாக்குறையில் இயங்கும் நிறுவனத்தை அரசு நடத்த வேண்டுமா? வரிப்பணத்தின் மூலம் ஊழியரின் ஓய்வுப்பணத்தைக் கொடுக்க வேண்டுமா?


    | | | | |