Tamil Film Songs – 2006 Best


என்றும் கேட்கலாம் பத்து

 1. லேலாக்கு :: ஆதி (வித்யாசாகர்)
 2. கோலிகுண்டு கண்ணு :: எம் மகன் (வித்யாசாகர்)
 3. சித்திரையில் என்ன வரும் :: சிவப்பதிகாரம் (வித்யாசாகர்)
 4. ரகசியமானது காதல் :: கோடம்பாக்கம் (சிற்பி)
 5. ஏதோ நினைக்கிறேன் :: தலைநகரம் (டி இமான்)
 6. ஆணும் பெண்ணும் :: உயிர் (ஜோஷுவா ஸ்ரீதர்)
 7. கண்ணனை நினைக்காமல் :: நீ வேணுண்டா செல்லம் (தினா)
 8. சரச லோக :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)
 9. கண்கள் தேடுதே :: மனதோடு மழைக்காலம் (கார்த்திக் ராஜா)
 10. உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே :: வெயில் (ஜிவி பிரகாஷ் குமார்)

ஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)

 1. கற்க கற்க :: வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)
 2. காதலைப் பிரிக்க காதலர் போடும் திட்டம்தான் :: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (யுவன் ஷங்கர் ராஜா)
 3. வாள மீனுக்கும் :: சித்திரம் பேசுதடி (பாபு)
 4. ஏதேதோ எண்ணங்கள் வந்து :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
 5. நெஞ்சாங்கூட்டில் :: டிஷ்யூம் (விஜய் ஆண்டனி)
 6. தையத்தா :: திருட்டுப் பயலே (பரத்வாஜ்)
 7. கண்ணை விட்டு :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
 8. பூப்பறிக்க நீயும் :: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (தேவி ஸ்ரீபிரசாத்)
 9. இது என்ன வாழ்க்கை :: ஆச்சார்ய (ஸ்ரீகாந்த் தேவா)
 10. லூசுப் பெண்ணே :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)

ஆடலுடன் பாடலும் சுகம் பத்து

 1. நம்ம காட்டுல :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
 2. எம்மாடி ஆத்தாடி :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)
 3. அருவா மினுமினுங்க :: வெய்யில் (ஜிவி பிரகாஷ் குமார்)
 4. எங்க ஏரியா :: புதுப்பேட்டை (யுவன் ஷங்கர் ராஜா)
 5. சங்கு தாரை தப்பட்ட :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)
 6. ஆ சொன்னா அயனாவரம் :: கொக்கி (தினா)
 7. ஒரே முறை தப்பு :: (ஸ்ரீகாந்த் தேவா)
 8. நூறு நூறு :: தலைமகன் (பால், ஸ்ரீகாந்த் தேவா)
 9. ஒவ்வொரு பிள்ளையும் :: வட்டாரம் (பரத்வாஜ்)
 10. நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே ::வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)

ஆறுதல் பரிசுகள்

 1. கீரை வெதப்போம் :: திருப்பதி (பரத்வாஜ்)
 2. நியூ யார்க் நகரம் :: சில்லென்று ஒரு காதல் (ஏ ஆர் ரெஹ்மான்)
 3. சுடும் நிலவு :: தம்பி (வித்யாசாகர்)
 4. கிங்கிணி மிங்கிணி :: கிழக்குக் கடற்கரை சாலை (பால்)

Top 10 Movie Songs: “திரைப்பாடல்கள் – 2005”

இசையமைப்பாளர்களும் இடம் பெற்ற எண்ணிக்கையும்

 1. யுவன் ஷங்கர் ராஜா – 7
 2. வித்யாசாகர் – 4
 3. பரத்வாஜ் – 3
 4. ஸ்ரீகாந்த் தேவா – 3
 5. பால் – 2
 6. ஹாரிஸ் ஜெயராஜ் – 2
 7. தினா – 2
 8. ஜிவி பிரகாஷ் குமார் – 2
 9. சபேஷ் – முரளி – 2
 10. பாபு – 1
 11. தேவி ஸ்ரீபிரசாத் – 1
 12. விஜய் ஆண்டனி – 1
 13. சிற்பி – 1
 14. டி இமான் – 1
 15. ஜோஷுவா ஸ்ரீதர் – 1
 16. கார்த்திக் ராஜா – 1
 17. ஏ ஆர் ரெஹ்மான் – 1

| | | | | | |

37 responses to “Tamil Film Songs – 2006 Best

 1. சரியான தரவரிசையினை பாடல்களுக்கு அளித்துள்ளீர்கள்.

 2. ஏங்க வேட்டையாடு விளையாடு படத்தில் காட்டிக்கொடுக்கிறதே விழிகளிரண்டும் பாடல் உங்களுக்கு கேட்க பிடிக்கலையா. எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு.

 3. ஏங்க வேட்டையாடு விளையாடு படத்தில் காட்டிக்கொடுக்கிறதே விழிகளிரண்டும் பாடல் உங்களுக்கு கேட்க பிடிக்கலையா. எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு.

 4. அகில், மஞ்சள் வெயில் மாலையிலே-யும் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்

 5. திவ்யா… நன்றி.
  (அவசரத்தில், ‘கண்ணை விட்டு’ பாடல் தவறாக இடம்பெற்றுவிட்டது :-()

 6. பாட்டிற்க்கான ராகா.காம் லிங்க்கும் அளித்திருந்தால், தர வரிசையில் உள்ள பாடலகளை ரசிக்க இலகுவாகயிருந்திருக்குமோ??

 7. அண்ணே..என்னோட பிளாக்கு லின்க் குடுத்து இருக்கீங்க…ரொம்ப டாங்ஸ்ங்க….ஆன ஆங்கிலேயர்னு ஒரு உள்குத்து குத்தி இருக்கீங்களே…நானும் என்ன பன்றதுனே தெரியல…தமிழ்மனம் போன அவுக தமிழ்ல இல்லனு சொல்றாங்க…google adsense போனா அவுக இது தமிழ்ல இருக்கு we are not supporting tamil at this time னு சொல்றாங்க…நான் தான் என்ன பண்ணுவேன்…
  🙂

 8. ன்னா…இதுல எங்க பழைய தலைவி நமீதாவோ இல்ல புது புரட்சி தலைவி இலியானாவோ வர பாட்டு ஒன்னு கூட இல்லயே… 🙂

 9. அன்புடன்...ச.சங்கர்

  பாலா,
  இது நீங்களாக வரிசைப் படுத்தியதா? அல்லது ஏதாவது கருத்துக் கணிப்பின் முடிவுகளா ?

  அன்புடன்…ச.சங்கர்

 10. —ராகா.காம் லிங்க்கும் அளித்திருந்தால், —

  View Albums2006 – Music India OnLine-இல் இதைத் தொகுப்புகளாகப் பகிர (அப்படியே உங்களுடையதாக இறக்குமதியும் செய்ய) வசதி இருக்கிறது. அவ்வாறு கொடுத்து விட எண்ணியுள்ளேன்.

  நினைவூட்டலுக்கு நன்றி. (யாருக்காவது பயன் இருக்குமோ என்னும் அலட்சியம் மேலிட்டிருந்தது. நீங்கள் வினவியது பூஸ்ட் ஊட்டுகிறது. சிறப்பு நன்றிகள்)

 11. —ஏதாவது கருத்துக் கணிப்பின் முடிவுகளா —

  கருத்துக் கணிப்பில் எனக்கு நம்பிக்கை லேது 😛 (நான் கெலித்தால் மாற்றுக் கருத்து கொள்ளலாம் 😉

  இது தனி விருப்பப் பட்டியல்.

 12. —பழைய தலைவி நமீதாவோ —

  பச்சக்குதிர NDF ஆதரவு பெற்ற படம்தானே??

  நான் பாடல் மட்டுமே கேட்கப் பெற்றேன். ஏற்கனவே ‘உள்ளே வெளியே’, இவன், புதுமைப்பித்தன் என்று அடிபட்டது முதல் காரணம்; நண்பர்கள் கடுமையான எச்சரிக்கை இரண்டாம் காரணம்…

  இருந்தாலும் ‘சங்கு தார தப்பட்டை’ & சரச லோக பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது!

  —இலியானாவோ வர பாட்டு —

  இலியானா மேல் கிராஃபிக்ஸ் கரப்பான் பூச்சி ஊர விட்டு ஒரு பாட்டு வந்திருந்தது. (இந்த மாதிரி உவ்வேக்களால்தான், பாடல் பதிவை பார்க்காமல், கேட்பதுடன் நிறுத்திக் கொள்வது. அதனால், ‘கேடி’ அவுட்)

  தெலுங்குப் பாடல் அவ்வளவாகக் கேட்காததாலும் இலியானா மிஸ்ஸிங் இன் ஆக்சன் ஆகிப் போகிறார்.

 13. —நான் தான் என்ன பண்ணுவேன்… —

  இருப்பதோ ஒரு ப்ளாக்… இரண்டு மனம் கேட்டேன் ஸ்டைலில் பாட்டா படிக்கறீங்க :))

  அவசியம் மாற்றி விடுகிறேன்

 14. //அவசியம் மாற்றி விடுகிறேன் //

  ரொம்ப நன்றிங்க…நீங்களாவது புரிஞ்சுகிட்டீங்களே 🙂

 15. //—பழைய தலைவி நமீதாவோ —

  பச்சக்குதிர NDF ஆதரவு பெற்ற படம்தானே??

  நான் பாடல் மட்டுமே கேட்கப் பெற்றேன். ஏற்கனவே ‘உள்ளே வெளியே’, இவன், புதுமைப்பித்தன் என்று அடிபட்டது முதல் காரணம்; நண்பர்கள் கடுமையான எச்சரிக்கை இரண்டாம் காரணம்…

  இருந்தாலும் ‘சங்கு தார தப்பட்டை’ & சரச லோக பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது!

  —இலியானாவோ வர பாட்டு —

  இலியானா மேல் கிராஃபிக்ஸ் கரப்பான் பூச்சி ஊர விட்டு ஒரு பாட்டு வந்திருந்தது. (இந்த மாதிரி உவ்வேக்களால்தான், பாடல் பதிவை பார்க்காமல், கேட்பதுடன் நிறுத்திக் கொள்வது. அதனால், ‘கேடி’ அவுட்)

  தெலுங்குப் பாடல் அவ்வளவாகக் கேட்காததாலும் இலியானா மிஸ்ஸிங் இன் ஆக்சன் ஆகிப் போகிறார்.

  //
  தலைவரே…நான் தான் கேனப்பய எதோ கேட்டேனு சொல்லி…அத போய் பெரிசா எடுதுக்கிட்டு இவ்வளவு தூரம் விளக்கம் சொல்லி இருக்கீங்க…அது சரி பெரிய மனுசன் பெரிய மனுசன் தான்… 🙂

 16. என் பட்டியல்:

  01. நியூயார் நகரம் – ஜில்லென்று ஒரு காதல்
  02. ஏதோ ஏதேதோ – பட்டியல்
  03. மஞ்சள் வெயில் – வேட்டையாடு விளையாடு
  04. முகிலினமே – அமிர்தம்
  05. காற்றில் ஓர் வார்த்தை – வரலாறு
  06. போகப் போக – பட்டியல்
  07. அறியாத வயசு – பருத்தி வீரன்
  08. கண்னை விட்டு – பட்டியல்
  09. சித்திரயில் – சிவப்பதிகாரம்
  10. கோலிகுண்டு கண்டு – எம் மகன்
  11. சும்மா கிடந்த – தம்பி
  12. தையத்தா – திருட்டுப் பயலே
  13. மணமகளே – அரண்
  14. அழகா அழகா – இருவர் மட்டும்

  குத்துப் பாடல்கள்:

  01. கிட்டே நெருங்கி – டிஷ்யூம்
  02. டேய் நம்ம மேளம் – பட்டியல்
  03. நம்ம காட்டுல – பட்டியல்
  04. எங்க ஏரியா – புதுப்பேட்டை
  05. சீனி சக்கர – வரலாறு
  06. வாழ மீனுக்கும் – சித்திரம் பேசுதடி

  சிறந்த படம்: புதுப்பேட்டை (அடுத்தது பட்டியல்.)
  சிறந்த இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா (பட்டியல், புதுப்பேட்டை)
  சிறந்த பாடகர்: ஏ.ஆர்.ரகுமான் (நியூயார்க்)
  சிறந்த பாடகி: ஷ்ரேயா (முன்பே வா என் அன்பே வா)
  சிறந்த இயக்குநர்: செல்வராகவன் (புதுப்பேட்டை)
  சிறந்த நடிகர்: தனுஷ் (புதுப்பேட்டை) மற்றும் பரத் (பட்டியல்)
  சிறந்த நடிகை: யாருமில்லை. 🙂
  சிறந்த அறிமுக இசையமைப்பாளர்: பவதாரிணி (அமிர்தம்)

 17. வாவ்!!!!

  தூள் லிஸ்ட் பிரசன்னா…

  (வெளியாகாத படங்கள் என்று பருத்தி வீரனைத் தவிர்த்து விட்டேன்.)

  எல்லாமே தலையாட்டி (அட… நான் எப்படி தவறவிட்டேன் என்று சில இடங்களில் நினைக்க வைக்கும்) கலக்கல் தேர்வு.

  சிறந்த பாடகர்: ஏ.ஆர்.ரகுமான் (நியூயார்க்)

  ஒத்துக்கவே முடியாது வாத்யாரே :-(((

  இயக்குநர் ஏற்றி விடுகிறார் என்பதற்காக, நல்ல பாடல்களை இசையமைப்பாளரே பாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வைரமுத்துவும், வாலியும், பா விஜய்யும் நானேதான் பின்னணி கொடுப்பேன் என்பது போல் சில சமயம் அதீதமாக சென்று இவர்கள் படுத்துகிறார்கள்.

  இன்னொருவரை வைத்து ஒலிக்க விட்டிருந்தால், மேலும் பரிமளித்து, ரசித்திருக்கக் கூடிய பாடலை, தன்னுடைய உச்சஸ்தாயி, ஏற்ற இறக்கப் போதாமையினால் தவறவிட்டு விட்டதாக நினைக்கிறேன்.

 18. செல்லாது.செல்லாது. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு. எங்கள் 2006 வருட தானைத்தலைவி பாட்டு இல்ல.

 19. நல்ல லிஸ்ட் பாபா!

  //சில சமயம் அதீதமாக சென்று இவர்கள் படுத்துகிறார்கள்.
  //

  யுவனை விடவா! 🙂

 20. அடப்பாவமே,

  முன்பே வா லிஸ்டிலயே இல்ல. நியூயார்க் நகரம் ஏ.ஆர் பாடினது “கொடுமை கொடுமையே”ங்கிறீங்க …

  ஆறுதல் பரிசுல கீரை வெதப்போம்க்கு இட ஒதுக்கீடு.. வரலாறுக்கு no permission

  ரஹ்மான் மேல அப்படி என்ன கோபம் 😉

  மத்தபடி வழக்கம்போல் கலக்கல் Format. கலக்கல் List.

  Thanks.

 21. மிகச்சிரத்தையுடன் ஏ ஆர் ரஹ்மானை தவிர்க்க முயன்று இருப்பது தெரிகிறது…

  என்னாங்கணா…ஏ ஆர் ரஹ்மான் உங்களுக்கு பாட சான்ஸ் கொடுக்கலாயா
  அந்தக் கோபமா”

  //இயக்குநர் ஏற்றி விடுகிறார் என்பதற்காக, நல்ல பாடல்களை இசையமைப்பாளரே பாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.//

  இது இளையராசாவிற்கும் பொருந்துமா

 22. —எங்கள் 2006 வருட தானைத்தலைவி —

  படிப்பவரே…

  யாருப்ப அது? அசின்??

  ‘வடுமாங்கா ஊறட்டும்’ மாதிரி எந்தப் பாடலும் அமையவில்லையே : P

 23. கப்பி…

  —யுவனை விடவா—

  : )

  (மௌனம் பேசியதே பாடல்கள் அருமையாக இருந்ததற்கு, யுவனை நடிக்க (பாடவும்தான்) வைத்தது மிக முக்கிய காரணம் ; )

 24. விக்கி…

  —ஆறுதல் பரிசுல கீரை வெதப்போம்க்கு இட ஒதுக்கீடு.. வரலாறுக்கு no permission—-

  கோபம் எல்லாம் ஒண்ணும் இல்லீங்க.

  காரணம் என்று பார்த்தால்…

  1. ரோஜா, திருடா திருடா என்று ஒவ்வொரு பாடலுமே வெரைட்டி காட்டியவர் மீண்டும் வாரமாட்டாரா என்னும் ஏக்கம்

  2. ரெஹ்மான் எங்கேயோ போயிட்டார். நான் இன்னும் வளரவேயில்லையே மம்மீ : )

  3. கேயெஸ் ரவிக்குமாருக்கு இசை அமைக்கிறார். பேரரசுவுக்கு இசை அமைப்பதில்லையே என்னும் வருத்தம் : P

 25. செந்தில்,

  —ஏ ஆர் ரஹ்மான் உங்களுக்கு பாட சான்ஸ் கொடுக்கலாயா
  அந்தக் கோபமா”—

  : ))

  அதே ; )

  —இளையராசாவிற்கும் பொருந்துமா—

  மாணிக்க விநாயகம் மாதிரி கட்டை குரலும் கொண்டு, விஜய் யேசுதாஸ் மாதிரி இளமைத் ததும்பும் உருக்கும் வாய்ஸும் கொண்டு, திப்பு/கார்த்திக் போல் எல்லா ஹீரோவுக்கும் பொருந்தி, ஹரிஹரன் போல் ஆட்டமும் துள்ளமும் கொண்ட குரலாச்சே அது…

  எமெஸ்வீ போல் தேர்ந்தெடுத்தப் பாடல்களை, தனக்கும் சௌகரியப்படுத்தும் விதத்தில்தானே பாடுகிறார்?

 26. பாபா,

  அருமையான அலசல்.. உங்களின் சில கருத்துகளோடு ஒத்துப் போகிறேன்.

  ஆனா நீங்க ரஹ்மானே பற்றி சொன்ன கருத்துக்கு முரண்படுகிறேன்.

 27. // 2. ரெஹ்மான் எங்கேயோ போயிட்டார். நான் இன்னும் வளரவேயில்லையே மம்மீ : )

  3. கேயெஸ் ரவிக்குமாருக்கு இசை அமைக்கிறார். பேரரசுவுக்கு இசை அமைப்பதில்லையே என்னும் வருத்தம் : P

  ஒரு doubt. இப்ப தேன்கூடு போட்டிக்கு பின்னூட்டமெல்லாம் allow பண்றாங்களா 😉

 28. லக்கிலுக்

  நல்ல ரசனை வாத்தியாரே உங்களுக்கு!

  அப்படியே தமிழ் வலையுலகின் டாப் 10 வார்த்தைகளையும் வரிசைப்படுத்திடுங்க….

 29. On What basis You have selected these songs ? I cant accept List. sorry.

 30. கோவி.கண்ணன் [GK]

  //ரகசியமானது காதல் :: கோடம்பாக்கம் (சிற்பி)

  தையத்தா :: திருட்டுப் பயலே (பரத்வாஜ்)//

  பாலா,

  இந்த இரண்டு பாட்டும் நிச்சயம் இருக்கும் என்று நினைத்தேன் !

  Good Taste !!!

  ஏமாற்றவில்லை !
  பாராட்டுக்கள் ! நன்றி !

 31. @லக்கி நன்றி.

  —தமிழ் வலையுலகின் டாப் 10 வார்த்தைகளையும்—

  முயற்சிக்கிறேன். சமீபத்தில் படித்த செய்தி (Wired News: Best Blogfights of 2006) மாதிரி, சிறந்த விவாதங்களைக் கூடத் தொகுக்கலாம் : )

 32. @ராம் நன்றி.

  —உங்களின் சில கருத்துகளோடு ஒத்துப் போகிறேன்.—

  எந்த எந்தப் பாடல்கள்?!

  ரெஹ்மான் சிவாஜியிலாவது மீண்டும் தன்னுடைய அசல் தூள் கிளப்பலுக்கு வருவார் என்று நம்புவோம் ; )

 33. @jvenga நன்றி.

  —On What basis You have selected these songs ? I cant accept List.—

  ஓ… உங்களுக்கு சிலது விருப்பமில்லையா!

  * கேட்டவுடன் பிடித்தது;
  * பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டது;
  * அனுராதா ஸ்ரீராம், டி ராஜேந்தர் என்று கவர்ச்சிப் பாடகர்கள் கொண்டது;
  * திரைப்படம் கண்ட பிறகு முணுமுணுக்க ஆரம்பித்தது;
  * கவிஞர் கவிதையாக தென்பட்டது…

  இவ்வளவுதான் என்னுடைய தேர்வுக்கு காரணங்க்ள் : )

 34. @கோவி. கண்ணன் நன்றி.

  —இந்த இரண்டு பாட்டும் நிச்சயம் இருக்கும் என்று நினைத்தேன்—

  தங்கள் அனுமானத்துடன் ஒத்துப் போகிறேன்!! : D
  மகிழ்வைக் கொடுக்கிறது…

  ஏதாவது பாடலை எதிர்பார்த்து, தவறவிட்டிருக்கிறேனா?

 35. பிங்குபாக்: Tamil Film Songs - Best of 2007 Movie Music « Snap Judgment

 36. பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.