Dinamani.com – TamilNadu Page
10 ஆண்டுகளுக்குப் பின்னர் கீரிப்பட்டி ஊராட்சிக்கு மனு தாக்கல்
உசிலம்பட்டி, செப். 28: தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதால் 10 ஆண்டுகளாகத் தேர்தல் நடைபெறாமல் இருந்த மதுரை மாவட்டம், கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வேட்புமனுக்கள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கிராமங்களில் ஜனநாயக நடைமுறையை மலரச் செய்ய மாவட்ட ஆட்சியர் த. உதயசந்திரன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு பால்ச்சாமி, எஸ்.பரமன், ஏ.சுப்பன் ஆகியோர் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
கீரிப்பட்டி 1-வது வார்டுக்கு காசிமாயன், பழனியம்மாள். 2-வது வார்டுக்கு சுப்பையா, தவசித்தேவர், 3-வது வார்டுக்கு சுப்பன், நாகஜோதி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாப்பாபட்டி: பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு பேச்சியம்மாள், பெரியகருப்பன், ஜெயக்கண்ணன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பாப்பாபட்டி 1-வது வார்டுக்கு தேவராஜ், பாண்டி, ராஜேஸ்வரன், தவமணி, சின்னத்தாய், முருகன் ஆகியோர் மனுச் செய்தனர்.
2-வது வார்டுக்கு மொக்கராஜ், ராஜப்பன், அலமு, மாயன், பேச்சியம்மாள், மோளத்தேவர் ஆகியோர் உதவித் தேர்தல் அதிகாரி தர்மராஜிடம் மனு தாக்கல் செய்தனர்.
நாட்டார்மங்கலம்:நாட்டாமங்கலம் 1-வது வார்டுக்கு கென்டியான் மகன் பெருமாள், ராஜா மனைவி வசந்தா, 2-வது வார்டுக்கு பூசாரி சிங்கம் மனைவி பவுன்தாய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
உசிலம்பட்டி நகராட்சி: உசிலம்பட்டி நகராட்சி 5-வது வார்டுக்கு மதிமுக சார்பில் அடைக்கலம், 19-வது வார்டுக்கு ஜே.டி.குமார், 9-வது வார்டு (ஊராட்சி) பழனித்துரை, 3-வது வார்டுக்கு சிவனம்மாள் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.