Daily Archives: செப்ரெம்பர் 29, 2006

சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (4)

Kallu Shap menuகள் குடித்தால் 10 கிலோ அரிசி இலவசம்: கள்ளுக்கடையில் நூதன அறிவிப்பு:

சிக்குன் குனியாவால் குடிக்க காசு கிடைக்காமல் வீட்டிலேயே கூலித் தொழிலாளர்கள் முடங்கி விட்டார்கள். வியாபாரம் படுத்து விட்டது. அதன் பின் இன்று,

‘கல்லாப்பெட்டி பொங்கி வழியுமாறு மாறியதன் ரகசியம் என்ன?’

என்பதை அறிந்து கொள்ள கள்ளுக்கடை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

in a toddy (local palm wine) shop.....Keralaவந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சாயா கடை போடலாமா என்று கள்ளுக்கடை யோசித்தபோது தமிழக அரசியல் இவருக்கு கை கொடுத்ததாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் இலவச அரிசி வாக்குறுதி போல், சாராயம் ஊற்றிக் கொள்ள வருபவர்களுக்கு பத்து கிலோ அரிசி தருவதாக அறிவித்தவுடன் ஆட்சியைப் பிடித்த கட்சியாக கூட்டம் அலைமோதுகிறது.

நன்றி: திண்ணை


| |

சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (3)

Google finally in Cairo!தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு:

இணையத்தினாலும் உலகமயமாக்கலினாலும் நிகழும் சாபக்கேடாக பணவீக்கம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, சூடு மீட்டர் பொருத்திய ஆட்டோவாக எகிறுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது.

தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருப்பதை Sacks of lentilsவலைவாசிகளிடம் விசாரித்தேன். ‘

இணையத்தில் இப்போது தமிழில் மிகப் பலர் எழுத ஆரம்பித்திருக்கிறோம். அதன் நேரடிப் பலனாக விகடன் வாசகர் வட்டம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே #1 ஆனார்கள். குங்குமமோ போட்டி போட்டுக் கொண்டு சோப்பு, சீப்பு கொடுத்தாலும் சல்லிசாக இதழ் நடத்துகிறது. விற்பனையில் சாதனை புரிகிறது. இதெல்லாம் கூட வலையின் வீச்சினால்தான் சாத்தியப்படுகிறது. படிப்பவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு பயந்து, ப்ரிண்ட் புத்தகத்தை படிப்பதற்கு ஓடுவது சாதகமான உபாதைதானே!’

என்று எதிர் கேள்வி எழுப்பி முடித்துக் கொண்டார்.

நன்றி: திண்ணை


| |

Who will be the Next Mayor of Chennai?

Dinamani.com – Chennai Page

சென்னை மாநகராட்சி அடுத்த மேயர் யார்?

சென்னை, செப். 29: சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அடிப்படையில், மேயர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் உருவாகியுள்ளன.

புதுப்பேட்டை பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நா. பாலகங்கா, சைதாப்பேட்டை பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன், கிண்டி பகுதியில் போட்டியிடும் கா. தனசேகரன் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றால், மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மா. சுப்பிரமணியன், கா. தனசேகரன் ஆகியோரில் ஒருவர் பெயர் முன்மொழியப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

1996-ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது மா. சுப்பிரமணியன் கவுன்சிலராக வெற்றிபெற்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சிறந்த கவுன்சிலர் விருது பெற்றார்.

2001-ம் ஆண்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் பல்வேறு விவாதங்களில் பங்கேற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2005-ம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண விநியோக மையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழக்கக் காரணம் என்று கூறி கைது செய்யப்பட்டவர் தனசேகரன். பின்னர் இவர் மீதான வழக்கில் எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிமன்றம் இவரை விடுவித்தது.

அதே வேளையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றால், மேயர் பதவிக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவர் நா. பாலகங்காவின் பெயர் முன் மொழியப்படும் எனத் தெரிகிறது.

2001-ம் ஆண்டு மேயர் பதவிக்கு நடைபெற்ற நேரடித் தேர்தலில் பாலகங்கா போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ 155 கவுன்சிலர்களில் ஒருவர்தான் மேயராக முடியும் என்பதால் மேயர் தேர்தலுக்கான முக்கியத்துவம் இந்த முறை கவுன்சிலர் தேர்தலுக்குக் கிடைத்துள்ளது.

சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (2)

‘திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு:

Tamil Nadu - e-LECTIONS 2006இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.” என்று ரஜினி பேசியதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தது. சிவாஜி பட ஷூட்டிங்கில் இடுப்பு வளையாததால் ஷங்கரிடம் திட்டு வாங்கி கடுப்பில் இருந்த சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ss‘கேயெஸ் ரவிக்குமாரா இருந்தால் விரலை மட்டும் “விஷ்க் விஷ்க்” என்று அசைக்க சொல்வான். இவன் ரொம்பப் படுத்தறான்’ என்று உடம்பின் நோவைப் பகிர்ந்தார். தொடர்ந்து, ‘நான் பேசியதை மாற்றி விட்டார்கள். கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம் கொடுத்த உமறுப்புலவர் விருது கிடைத்திருக்கிறது. மேலும் ஆழ்வார், ஆரெம்வீ என்று பலரும் பல பரிசுகளையும் பட்டங்களையும் கொடுக்கிறார்கள். ‘கருணாநிதிக்கு அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ என்று சொல்ல வேண்டியது, ஷங்கர்ஜி கொடுத்த டார்ச்சரில் நாகுழறி விட்டது’ என்றார்.


| |

சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (1)

musharraf_book

Manmohan-Musharraf-NY-25-10-2004பாகிஸ்தான் அதிபர் முஷாரப் :: நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு:

ஜேம்ஸ் ஃப்ரே (James Frey) என்று ஒருவர் இருக்கிறார். “A Million Little Pieces” என்னும் நனவோடை எழுதினார். பால்ய காலத்தின் பாலியல் கொடுமைகளை புத்தகமாக்கினார். இணைய ஆய்வாளர்கள் அது அவருடைய சொந்தக் கதை அல்ல என்பதை பிட்டு வைத்தவுடன் ‘கண்டு / கேட்டு / தீர விசாரித்து’ கட்டியதை சொன்னவுடன், கட்டுரை பகுதியில் இருந்த புத்தகத்தை, ‘புனைவு’ என்று வகை செய்து மாற்றினார்கள்.

Times of India cartoonபாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப் எழுதி உள்ள புத்தகத்தில் கூறியருப்பதை சரிபார்க்க கூகிள் வழியாக ‘நியூக்ளியர்’ என்று இஸ்லாமாபத்தில் தேடியவர்களைக் கண்டுபிடித்து என் விசாரணையைத் துவக்கினேன். பாகிஸ்தான் நுட்பங்களை காப்பி அடித்து இந்திய அணுவிசை திட்டங்கள் உருவாக்கப்பட்டது என்பது கட்டுக்கதை என்பதை பாகிஸ்தானின் தொழில்நுட்பியலாளர் அப்போது தெரிவித்தார். மேலும் ‘கூகிள் அந்தக் காலத்தில் இல்லை’ என்று நினைவூட்டி ‘லெக்சிஸ்-நெக்சிஸ்’க்கு யுரேனியம் செறிவூட்டல் ப்ராஜெக்ட் நன்றிக்கடன் பட்டிருப்பதாக முடித்துக் கொண்டார்.


| |