Category Archives: Uncategorized

வெப்-உலகம்: நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்

சந்திப்பு : ஆர். முத்துக்குமார்

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

எஸ். ரா : முதலில் அந்தத் தீமில் எனக்கு ஈடுபாடு இல்லை. காலம் என்பது சில பல வஸ்துக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலமும் ஒரு `மனவளர்ச்சி’ கொண்டது. குறிப்பிட்ட பிரத்யேகமான பய உணர்ச்சி கொண்டது. ஒரு ஆதிகுடி குகைவாசிக்கு பகல் / இரவு என்பது தெரியாது. அவனுக்கு பொருள் தோன்றுகிறது / மறைகிறது அவ்வளவே. ஆனால் பகல் / இரவின் விளைவுதான் தோன்றுதல் மறைதல் என்பது எப்படி எழுதப்படுவது?

ஒரு கட்டத்தை எழுத்தில் நாவலாகக் கொண்டுவரும் போது அதன் `மனம்’ எப்படி புரியப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. இயற்கை மதங்கள் பல்வேறு பயங்களால் உருவானதே. தற்போது இருக்கும் மதங்கள் அதைப் `பயன்பாடா’ மாற்றிக் கொண்டது. இப்ப-நம்ம பாரம்பரியத்துல ஏகப்பட்ட பக்தி இலக்கியம்-பாசுரம், எல்லாம் இருக்கின்றன. ஆனால் நாயன்மார்களுக்கோ-ஆழ்வாக்ளுக்கோ அது ஒரு மார்க்கம், ஞான மார்க்கம், அல்லது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவி. ஆனால் நமக்கு அது இன்று ஒரு கவிதை மட்டுமே. திருப்பாவை பாடல்கள் இன்னிக்கு நாம கேட்டா அதன் கவிதைத் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குறோம் அவங்களோட வாழ்வியலுக்குள்ள நாம் போகமுடியாது.

`விஷ்ணுபுரம்’ நாவல் பழைய தத்துவம் / இலக்கியம் / வாழ்வு போன்றவைகளை நவீன காலக்கட்டப் பார்வையில் அணுகுகிறது. மேலும் பல இடங்கள் `சினிமாட்டிக்கா’ இருக்கு, இப்ப நாம யானைய பார்த்திருக்கோம், அதுக்கு மதம் பிடிக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம், தமிழ் இலக்கியத்துல உதயணன் கதையில் தான் யானை ஊரையே துவம்சம் செய்யும்னு கேள்விப்பட்டிருக்கோம், இவர் கதைல ஒரு யானை ஒரு ஊரையே காலி செய்கிறது. இது, சினிமாடிக் தனமாகும். நமக்கும் யானைக்குமான உறவுகள் அப்படி இல்லையே. மேலும் அவரால் `பவுத்தம்’ சம்பந்தப்பட்ட தீவிரத் தேட்டத்தை வைக்க முடியவில்லை. பவுத்த நபர்கள் வருகிறார்கள். பவுத்த தர்க்கம் இருக்கிறது. ஆனால் பவுத்த சாரம் இல்லை.

கேள்வி : அந்த நாவலின் முடிவில் வரும் `பிரளயம்’ என்ற `Apocalypse’ ஏற்புடையதா?

எஸ். ரா : மார்க்வெஸின் `நூறாண்டு காலத் தனிமை’ நாவலில் வரும் Apocalypse’ ஞாபகம் என்பதன் நாட்டியமாக இருக்கிறது. அந்தப்பகுதி நாவலையே வேறுவிதமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெயமோகனின் நாவலில் அது ஒரு `condition’ என்பதாக வருகிறது. மேலும் நம் தத்துவ புராண மரபு பிறப்பு / இறப்பு , படைப்பு / அழிவு என்பதை தொடர்ச்சியானதாக சர்க்குலராகப் பார்க்கிறது. பிரம்மாவிற்கும் சிவனுக்கும் இதுதான் வேலை. இவர் கதையில் இது ஒரு `வீழ்ச்சி’ என்பதாக முன்வைக்கப்படுகிறது. `வீழ்ச்சி’ என்பது கிறித்தவ மத விவகாரம்.

கேள்வி : ஏன் இதுலயும் பிரளயத்துலேந்து `நீலி’ புறப்படுகிறாளே?

எஸ். ரா : கொஞ்சம் Tribes மரபு, கொஞ்சம் – ரிலிஜன் – மரபு இது எல்லாத்தையும் அப்படிஅப்படியே அடுத்தடுத்து வைக்கிறார். ஆனா `நீலி’ என்பது அவரது Nostalgia சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கு `உக்கிரமான பெண்’ என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறது. அவருக்கு `உக்கிரம்’ மேல் ஒரு obsession இருக்கு.

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவலை ஒரு அழகியல் வேலைப்பாடாக ஏற்கிறீர்களா?

எஸ். ரா : நாவல் என்ற மிகப்பெரிய வகையினத்தில் `விஷ்ணுபுரம்’ நிச்சயமாக ஒரு முக்கியமான வேலைப்பாடுதான். ஆனால் ஒரு மரபார்ந்த மனம்தான் அதில் ஆப்ரேட் ஆகிறது. ஆனால் நடை மரபு ரீதியானதாக இல்லை.

கேள்வி : ஜெயமோகனின் `பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலின் கம்யூனிச எதிர்ப்பு களம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ். ரா : நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட `கம்யூனிசம்’ வைத்துதான் நாம் அதை அறிந்து கொண்டுள்ளோம் :

மேலும் படிக்க —> வெப்-உலகம்

Australia Day & Republic Day

குடியரசு தினம் (படிக்க: Republic « Tamil News). பாராட்டினால் இந்திய ராணுவத்தின் நேனோமீட்டர் குறைபாடுகளை கிகாமீட்டராக முன்னிறுத்தி, மகிழ்ச்சியான நிகழ்வை இகழ்ந்து தள்ளுவார்களோ (படிக்க: Military « Tamil News) என்னும் காபந்து.

எனவே, இனிய அவுஸ்திரேலியா தின வாழ்த்துகள்.

‘No Worries’ என்பது ஆஸ்திரேலிய தாரக மந்திரம். தமிழில் ரெஹ்மான் பாட்டுடைத்தது போல் ‘முஸ்தஃபா, முஸ்தஃபா டோண்ட் வொர்ரி முஸ்தஃபா‘ என்று குருபாயாக (Guru – Digest & My Views : ஈ – தமிழ்) சாதிக்கச் சொல்லி உற்சாகமூட்டும் தினம்.

இரு நாடுகளிலும் மகிழ்ச்சியும் களியாட்டமும், அவற்றை மறுக்கும் சுதந்திர கருத்தோட்டமும் தொடரட்டும்.


| | |

Fraunhofer lines

சிறில் அலெக்ஸின் (பார்க்க: தேன்: தீபாவளி ஜப்பானியத் திருவிழாவா? அல்லது கூகிள் வீடியோ) பதிவைப் பார்த்தவுடன் அஞ்சலில் கிடைத்த கிண்டல் (சிற்சில கூட்டல் கழித்தலுடன்)

 1. தீபாவளி ஜப்பானியர் திருவிழா என்கிறார் சிறில்? பார்க்க : கில்லி – Gilli
 2. Diwali, Deepavali, Deepavalli, Dance, Japan, Performance, Video, Watch Stage, Show, Kids : Snap Judgement
 3. ஜப்பானியர்கள் – ஆர்யர்களா? திராவிடர்களா? : விடாது கருப்பு
 4. ஜப்பானியர்கள் – பிராமணர்களே : விட்டுது சிகப்பு
 5. எனது ஜேப்பனீஸ் நண்பன் : ‘ஒரிஜினல்’ டோண்டு
 6. எனது ஜேப் ‘பன்னீ’ ஸ் நண்பன் : போலி டோண்டு
 7. நோக்கியா, சாம்சங்கில் வேலைக்கு ஆள் வேண்டும். தலைப்பில் தமிழ்மணம் என்று இடவும். : செந்தழல் ரவி
 8. ரஜினி படங்கள் மட்டும் ஜப்பானில் ஓடுவது எப்படி? : மு. கார்த்திகேயன்
 9. ஜப்பானின் இந்திய தீபாவளி அமெரிக்காவால் சின்னாபின்னப்படும் : உள்ளும் புறமும் வெங்கட்
 10. ஷா ல லா – Gilli – Lyrics : ப்ரியமுடன் கேபி
 11. ஜப்பானிய வீடியோவின் ஃபோட்டோஷாப் ரகசியம் – கழுகார் தகவல் : IdlyVadai – இட்லிவடை
 12. நேயர் விருப்பம் சர்வே – கில்லியா? டோக்யோ-வா?.. வந்து குத்துங்க சாமிகளா!! – Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!

கொஞ்ச நாள் முன்னாடி கண்ட பதிவு: பினாத்தல்கள்: கனவில் வந்த தமிழ்மணம் (10 Jan 2007)

தலைப்புக்கும் பதிவுக்கும் பொருத்தம் அறியாதவர்கள் இங்கு (Fraunhofer lines: Definition and Much More from Answers.com) செல்லவும்.


| |

Plus Two Tamil & Current Thamil

இன்றைய தினமணியில் பிளஸ் டூ தமிழ் பொதுத் தேர்வுக்கான மாதிரி (Dinamani.com – TamilNadu Page) வினாக்களை கேட்டிருக்கிறார்கள்.

பதில் தெரிகிறதா?

 1. யாருமில்லை தானே கள்வன்
  தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
  (கூகிள் பிட் அடிக்கவும்)
  • பாடல் இடம் பெற்ற நூல் எது?
  • இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • ‘கள்வன்’ யார்?
  • இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?
 2. நீயடா வெதிர் நிற்பதோ மதம் பொழ கரிமேல்
  நாயடா வினை நடத்துமோ?
  (கூகிள் பிட் அடிக்க முடியாது)
  • இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
  • இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • யார் யாரிடம் கூறியது?
  • ‘கரி’ என்பதன் பொருள் யாது?

 3. ‘காலத்தினால்’ எனத் தொடங்கும் குறளையும், ‘செயல்’ என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக.
 4. உறுப்பிலக்கணம் தருக.
  • வேண்டேன்
  • களையாத
  • கேட்டி
  • ஏகுவாய்
  • பொறுத்தல்
  • சொல்லுமின்
 5. இலக்கணக் குறிப்பு எழுதுக.
  • கயன்முன்
  • திரைகவுள்
  • கூர்ம்படை
  • படூஉம்
  • சிறைப்பறவை
  • வல் விரைந்து
 6. புணர்ச்சி விதி தருக.
  • வினைத்திட்பம்
  • பெருந்தேர்
  • வீறெய்தி
  • நிறைஉடைமை
  • இற்பிறப்பு
  • சின்னாள்
 7. பொதுவியல் திணை – சான்று தந்து விளக்குக.
 8. தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.

நிறுவனத்துக்கு கணினி வேலை நேர்காணலுக்குத் தேர்வாகுவதற்கு, முதல் படியாக பரீட்சை வைப்பார்கள். நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறை சி#, ஜாவா, டேட்டாபேஸ் தேர்வுகளை எழுதி 70+ மதிப்பெண் எடுத்தால்தான் ஸ்திரமான வேலையில் நிரலி தட்ட முடியும்.

நல்ல வேளை.

வலைப்பதிவு நுழைவதற்கு இலக்கண வினாக்கள் படிக்கல்லாக இல்லை. ‘நான் படிக்கிற காலத்தில்’ என்று பெற்றோர் ஆரம்பிப்பது போல் அந்தக்கால மதிப்பெண்ணை வைத்தே காலத்தை ஓட்ட முடிகிறது.

விடை தெரியாதவர்களுக்காக மாற்றுத் வினாத்தாள்:

 1. தேவதை புன்னகை செய்தால்
  சிறு தேய்பிறை முழு நிலவாகும்
  • பாடல் இடம் பெற்ற படம் எது?
  • இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • ‘தேய்பிறை’ எது?
  • இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?
 2. கடல் கொண்ட நதியோ முகம்தன்னை இழக்கும்
  நான் உன்னில் கலந்தால் புதுமுகம் கிடைக்கும்
  • இப்பாடல் வரி இடம் பெற்ற படம் எது?
  • இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • யார் யாரிடம் கூறியது?
  • ‘புதுமுகம்’ என்பதன் பொருள் யாது?

 3. ‘விடுகதையா’ எனத் தொடங்கும் துண்டுப்பாடலையும், ‘கனாக்கண்டேன்’ என முடியும் பாடலையும் அடிபிறழாமல் எழுதுக.

 4. உறுப்பிலக்கணம் தருக.
  • ரஜினி விரல்
  • விஜய் காலணி
  • கமல் மார்பு
  • அஜீத் தல
  • கவுண்டமணி கால்

 5. புணர்ச்சி விதி தருக.
  • வில்லன் – நாயகனின் தங்கை
  • வில்லன் – கதாநாயகி
  • கதாநாயகன் – கதாநாயகி
  • கதாநாயகன் – கவர்ச்சி நாயகி
  • இராம நாராயணன் – பிராணி
 6. ஹீரோயின் சப்ஜெக்ட் – சான்று தந்து விளக்குக.
 7. அரசியல் தமிழை விளக்குக.


| | |

Celebrities Pokkiri Pongal

நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்!

இது ‘போக்கிரி‘ வசனம்.

 1. சோனியா காந்தி: நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா மன்மோகன் பேச்சை நானே கேக்க மாட்டேன்!
 2. ஷாரூக்கான்: நான் ஒரு முறை நிகழ்ச்சி நடத்திட்டா, என் KBC-ஐ நானே பார்க்க மாட்டேன்.
 3. ஷில்பா ஷெட்டி: நான் ஒரு முறை திட்டு வாங்கிட்டா, என் காசை நானே எண்ண மாட்டேன்.
 4. ஐஸ்வர்யா ராய்: நான் ஒரு முறை நடிக்க ஆரம்பிச்சுட்டா, என் படத்தை நானே பார்ப்பேன்.
 5. கங்குலி: நான் ஒரு முறை ஆடி அடிச்சுட்டா, என் மாட்ச் ஃபிக்சிங்க நானே கண்டுக்க மாட்டேன்.
 6. அரசியல்வாதி: நான் ஒரு முறை மசோதாவை நிறைவேற்றிட்டா, என் சட்டத்தை நானே கடைபிடிக்க மாட்டேன்.
 7. சானியா மிர்சா: நான் ஒரு பந்தை போட்டுட்டா, என் ரிடர்னை நானே திரும்ப எடுக்க மாட்டேன்.
 8. தீவிரவாதி: நான் ஒரு முறை குண்டு போட தொடங்கிட்டா, என் வாழ்வை நானே மதிக்க மாட்டேன்.
 9. வலைப்பதிவர்: நான் ஒரு முறை திட்ட ஆரம்பிச்சுட்டா, என் பதிவை நானே நிறுத்த மாட்டேன்.


| |

Images, Imaginations


பார்த்ததும் கிடைத்த பாடல் வரிகள்… (படம் என்ன தெரிகிறதா?)

 • வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்
 • கண்ணிமைக்கும் வேளை; வானவில்லின் வாழ்க்கை
 • உனக்கென்ன வேண்டும்? உணர்ந்திடு தம்பி

  நியூ யார்க்கர் கொடுத்த தலைப்பு Good shrink; Bad shrink.

  எனக்குத் தோன்றியது சில…

 • குரு x ஜெண்டில்மேன்
 • எதிரணி x ஆளுங்கட்சி
 • விமர்சகர் x களப்பணியாளர்

  வேறு என்ன உங்களுக்குத் தோன்றுகிறது?


  பேட்ட ராப்பில் வரும், ‘உன் சான்ஸ்… உன் கையில் எல்லாமே இருக்குதடா


  | |

 • African-American music performers harassed by Canada

  கனடா குடிபுகல் அதிகாரிகளின் இனப்பாகுபாட்டு விழுமியம்

  1. TheStar.com – artsentertainment – Not alone in border hassles: Rapper

  2. globeandmail.com: Black stars harassed, suit alleges

  3. Bloomberg.com: Canada

  கனடாவை நிறப்பிரிகை இல்லாத நாடாக சொல்லலாம்?

  வெற்றி பெறுவதற்காக வெறி கொண்ட வார்த்தைகளை உதிர்த்ததாக இங்கிலாந்தில் இனவெறி குற்றச்சாட்டு. (படிக்க: கில்லி – Gilli » Big Brother, Shilpa Shetty & Racism). அதைத் தொடர்ந்து கனடாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இந்த வழக்கு ஜெரோம் (Jerome Almon) மூலம் தொடுக்கப்பட்டிருக்கிறது.

  கறுப்பராக இருந்ததால் ‘சிறப்பு கவனிப்பு’ கிடைத்திருக்கிறது என்கிறார். ராப் பாடகராக இருந்ததினால், கனடாவுக்குள் நுழைவதற்கான ஆவணங்கள் சரிபார்த்தல் முதல் கார் பரிசோதனை வரை நீண்டு, நெடிய காத்திருத்தலாக மாறியிருக்கிறது. இனவெறி சொற்றொடர்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.

  டொரண்டோ, வான்கூவர் நகரங்களில் தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்ல வகைசெய்யும்விதமாக இவை அரங்கேறியிருக்கிறது. கருப்பின ராப் நட்சத்திரங்கள் கனடாவுக்குள் நுழையத் தடை விதிக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த பாகுபடுத்தலையும் அவதானிக்கிறார்.

  முந்தைய சம்பவங்கள் சில:

 • டிசம்பர் 2005 – வன்முறையை ஆராதிப்பதாக 50 செண்ட்ஸ், கனடாவுக்குள் நுழையத் தடைவிதிக்க முயற்சி.
 • மார்ச் 2003 – ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட, DMX-இற்கு மீண்டும் கனடா நிராகரிப்பு. இசை நிகழ்ச்சியில் பாடமுடியாமல் ரத்து செய்கிறார்.
 • ஏப்ரல் 2001 – மாட்லி க்ரூவின் முன்னாள் அங்கத்தினர், டாமி லீ-யினால் இசை வாரக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு, கனடாவினுள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை.

  சட்டத்தின் துணையுடன் அதிகாரிகளின் மனக்கற்பனைகள் மாற முயற்சி எடுக்கும் வேளையில், தன்னுடைய மனசஞ்சலத்துக்கு ஈடாக $900 மில்லியன் தொகை கேட்டிருக்கிறார்.


  | | | | | |

 • Actor Thyagu : Tamil Movie Awards Committee Nomination

  தமிழ்நாடு அரசு திரைப் பட விருதுகளையும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்ப பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளையும் தேர்வு செய்ய புதிய தேர்வுக்குழு ஒன்றை இன்று அமைத்து முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

  இந்தக் குழுவில் இடம் பிடித்த நடிகர் தியாகுவுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தேர்ந்தெடுத்து வெகு சில படங்களில் மட்டும் தோன்றுபவர். மேடை கிடைத்தபோதெல்லாம் விடாமல் பேசுபவர். சிந்திக்க வைத்து பார்வையாளர்களைப் புண்படுத்தாமல், சிரிக்கவைத்து நோகடிக்காமல், கண்களை மட்டும் உருட்டுபவர். சாமுராய் படத்தில் விக்ரமின் பெயர் தியாகு. ‘அரங்கேற்றம்’ படத்தில் கமலின் பெயர் தியாகு. அவள் அப்படித்தானில் ரஜினி கதாபாத்திரத்திற்கும் தியாகு!

  பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி, விருதுக்கு உரியவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பைக் கொடுத்த கலைஞருக்கும்;

  அடைமொழி கொள்ளா இளவல், திமுக ஒலிபெருக்கியெல்லாம் தித்திக்கும் தகதக தீப்பொறிகளை நிறைத்த தியாகுவிற்கும் வாழ்த்துக்கள்.

  மாலைமலர் செய்தி: Tamil Nadu Government’s Movie Award Committee nominated « Tamil News


  | | | | |

  Guru – Digest & My Views

  முக்கிய விமர்சனங்கள்:
  1. Prakash’s Chronicle: Mani Ratnam’s Guru – Review

  2. கில்லி – Gilli » Guru – Reviews

  3. Prabhu n Ferrari » Blog Archive » Guru – Hindi Movie Review

  4. Lightning Strikes Everyday: Guru: Review

  இணைய சஞ்சிகைகள்:
  1. Rediff.com Review3/5 stars

  2. IndiaFM.com – Taran Adarsh Review – 4/5 stars

  3. DNA Review – 3/5 stars

  4. CNN IBN – Rajeev Masand Review – 4/5 stars

  5. Deccan Herald: Movie Review – Guru : No Rating.

  6. Andhra Cafe: Guru – Hindi Movie Review : 3.5 stars

  7. Times Of India – Nikhat Kazmi Review

  8. Indiatimes.com Review – 3 stars

  மேலும் சில:
  1. A Lover’s Journal: Guru – Movie Review (Paisa Waste!

  2. Archana’s A rupee for my thoughts!

  3. Wreck Tangle: Guru, Gandhi and Guns

  கொஞ்சம் அசல்:
  1. Remembering the Prince of Polyester — Monday, Jul. 15, 2002 — Page 1 — TIME

  2. அம்பானி ஒரு வெற்றிக் கதை :: என்.சொக்கன்

  பதிவு செய்ய விரும்புபவை:

 • கொடுத்த காசுக்கு வஞ்சனை வைக்காமல், இசை, ஒளிப்பதிவு என்று ‘பேஷ்’ போட வைத்தாலும், செண்டி போட்டு, “எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம்” வரிசையில் மணியின் மற்றொரு ரத்னம்.
 • ‘ரெண்டு’ போன்ற படங்களில் தோன்றுவதால் மாதவன் சொதப்பினாரா? இல்லாவிட்டாலும் குளறியிருப்பாரா! ஏனோ தானோ முரண்டு செய்யும் முக்கிய கதாபாத்திரம்.
 • ஐஷ்வர்யா ராய் நடித்து நான் பார்த்த படங்களில் இன்னும் ‘ரெயின்கோட்’ மட்டுமே பட்டியலின் முடிவாகவும் தொடக்கமாகவும் இருக்கிறது. புருஷனை (மாமனார், மாமியாரும்தான்) பார்த்தாலாவது என்னிக்காவது நட்சத்திரம் ஆகும் வரை நட்சத்திர கேலரி மாடலிங் மட்டும் செய்யலாமே.
 • ஃப்ரென்ச் முத்தம் கொடுப்பது பேசுபவரின் வாயை மூட அல்ல. கிஸ் அடித்தால் காதல் வரணும் அல்லது கிக் வரணும். மாதவனும் வித்யா பாலனும் காமிரா கான்சியஸாக சவைக்கிறார்கள்.
 • உணர்ச்சிபூர்வமாக ‘comfort zone’ஐ விட்டு வெளியே வந்து ஆடுடா ராசா என்று ஒவ்வொரு பார்வையாளனையும் உசிப்பேற்றி, முறுக்கிவிட்டு, கொம்பு சீவி, CV தயாரிக்க அனுப்புகிறார்கள்.
 • அம்பானி… குரு கடைசியில் பேசி முடித்தவுடன் அமெரிக்காவில் கைத்தட்டல் தியேட்டரை பிளந்தது. முதலாளித்துவ நாடல்லவா 😉
 • ஞாயிறு இரவு இரண்டாம் ஆட்டத்தில் கூட அமெரிக்க திரையரங்கை நிறைத்த கூட்டம். வெளிநாடு, உள்நாடு இரண்டிலும் நகரங்களில் சூப்பர் ஹிட்?
 • Thank You for Smoking படம் முடிந்தவுடன் தொழில் தர்மத்திற்காக வேலை செய்பவனின் நியாய அதர்மங்களின் குழப்பம் மேலிட்ட, நம்பிக்கை கலந்த புன்முறுவல் வெளிப்படும். மேற்கண்ட அடைமொழி கலவையுடன் நிறைவைத் தரும் முக்கியமான திரைப்படம்.
 • சொல்ல விட்டுப் போச்சே… ‘நாயகன்’ கமலை விட, அபிஷேக் அடக்கி வாசித்து நடிக்காமல், வாழ்ந்திருக்கிறார். (அல்லது இயக்குநரின் கதாநாயகனாக சமர்த்தாக சொன்னதை செய்திருக்கிறார் என்றும் நினைக்கலாம்).

  | | | | | | |

 • Sun TV New Year Special Programmes

  என்னுடைய தோழியைப் பார்த்துக் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அக்டோபர் மாதவாக்கில் டிஷ் நெட்வொர்க்கை கூப்பிட்டு, சன் டிவி கணக்கைத் துவங்குவார். ஜனவரி மாத இறுதியில் சன், கே தொலைக்காட்சிகளை அணைத்து விட்டு, டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ், சிஎஸ்ஐ என்று கட்சி மாறி விடுவார்.

  புத்தாண்டு நிகழ்ச்சி குறித்து எழுதுவதற்கு முன் பொங்கல் சிறப்பு ப்ரொகிராம் அறிவிப்பே வந்து விட்டது.

  சோம்பேறிகள் டிவி பார்க்க கூடாது. டிவி பார்த்தாலும், ப்ளாக் செய்யக் கூடாது. பதிவு எழுதினாலும், பத்தாண்டு பழைய, விசு-கிஷ்மு மொழிபெயர்ப்பை சிலாகிக்கலாம். பத்து நாள் பழைய, ஊசிப் போன புத்தாண்டு சின்னப்பெட்டி விமர்சனங்களை பொங்கலின் போது இடக் கூடாது.

  இது மாதிரி ஆயிரம் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கலாம். ‘பொய்‘ பிரகாஷ்ராஜ் இருந்தால், பாலச்சந்தர் தலைவிதியாக படம் எடுத்துதானே படுத்துவார். அவ்வழியில் சன் டிவியின் 2007 சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த என்னுடைய கண்ணோட்டம்.

  நிகழ்ச்சியின் ஹைலைட் யுவன் ஷங்கர் ராஜா. சிறப்பு வணக்கம் தமிழகம் என்று காலங்கார்த்தாலே போணி. ஏஆர் ரெஹ்மானுக்கு டூப் போட்டது போல் இருந்தார். அதே நிதானம். சலனமற்ற முகம். அடக்கமான தொனி. தலைமுடி விரித்துவிட்ட இசைப்புயலை பார்ப்பது போலவே இருந்தது. அதே சிரிப்பு. வெளிப்படையாகப் பேசுவதை உணர்த்தும் கண்கள்.

  புதுப்பேட்டை பின்னணி இசை குறித்து சொன்னார். இசை எழுதத் தெரியாததால், ஒவ்வொரு வாத்தியமாக வாசித்துக் காட்டுவார். பேங்காக் சிம்ஃபொனி ஆர்க்கெஸ்டிரா அதை இசை மொழியாக எழுதும். தெலுங்குப் படத்தை தமிழ் இயக்குநர் கையாள்வது போன்ற அனுபவம். இப்பொழுது இசை எழுதுவது குறித்த படிப்பில் ஆர்வம்.

  ‘ஏதாவது செய்ய வேண்டும். இசையை பிராபல்யபடுத்தி, ஆர்வமுடையவர் அனைவரும் எளிதில் நுழைய வழிவகுக்க வேண்டும்’ என்று பேசி மட்டும் செல்லாமல், திறமைகளைத் துழாவி முன்னிறுத்த, சொந்த அமைப்பு ஆரம்பித்திருக்கிறார்.

  ‘மாலை நேரத்து மயக்கம்’ திரைப்படத்தை செல்வராகவனுடன் சேர்ந்து தயாரிக்கிறார். சந்தியா ஹீரோயின். ஷங்கர் வழியில் இன்னொரு நிறுவனம்.

  அப்பாவிடம் பிடித்தது தொழில் சிரத்தை. ‘காலாபாணி‘ படத்தின் போது இளையராஜாவை முழு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தி அந்தப்பக்கம் சென்றவுடன், ரெகார்டிங் தியேட்டர் சென்று நேரத்திற்கு பி.ஜி.எம். இசைக்க ஆழ்கிறார். அப்பா மாதிரி தன்னால் அக்கறையொடு இசை மீது காதலாக முழுவதுமாக அர்ப்பணிப்பது சந்தேகம்தான் என்று தன்னடக்கத்தோடு ஒத்துக் கொள்கிறார்.

  ட்ராக் மட்டும் பாடி செல்பவனை, இயக்குநர்கள், திரையிலும் பாட வற்புறுத்துகிறார்கள். சொந்தக் குரலில் பாடியதில் பிடித்தது பட்டியலின் ‘ஏதேதோ எண்ணங்கள்’. மொழித் தூய்மை வேண்டியும் சில பாடல்களில் பின்னணிக் குரல் கொடுக்க கடைசி நிமிடத்தில் பாடகன். தன் இசையமைப்பில், தமிழ் வரிகள் ஒலி தெளிவாகக் கேட்க வைப்பதில் ப்ரியம்.

  ”7-ஜி ரெயின்போ காலனி’ இசையமைக்கும் சமயத்தில் செல்வராகவன் உறங்கிப் போகிறார். சோர்வுற்று தூங்கிப் போனவரை எழுப்ப மனம் வரவில்லை. “தானொரு ட்யூன் போடுவோம். அந்த தாளத்தில், இயக்குநரே விழித்தெழ வேண்டும்” என்னும் முடிவோடு இசையமைக்கிறார். அப்படி கண்திறந்த பாடல்தான் ‘கனாக் காணும் காலங்கள்’. “அருமையா இருக்கே” என்று நித்திரை கலைத்த பாடல்.

 • இரண்டே நாளில் ஒலிப்பதிவான ‘கண் பேசும் வார்த்தைகள்’,
 • ரீமிக்ஸ் பாடல்களில் உள்ள அசௌகரியம்,
 • லூசுப் பெண்ணே‘ உருவான விதம்,
 • ‘எம்மாடீ ஆத்தாடி’ எவ்வாறு தன் பாடல்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது,
 • இயக்குநருடன் ஒத்திசைவு… திருப்தியான உரையாடல்.

  மற்ற அனைத்தும் திருஷ்டி பரிகாரம் என்று விட்டுச் செல்ல முடியாது.

  ‘ஹாய் கோபிகா’ இயல்பாக அமைந்திருந்தது. காதல் குறித்த சிந்தனை, சந்தித்த விதம் என்று கொஞ்சம் (கொஞ்சமே கொஞ்சம்) சாதாரண நேர்வழிசல்களில் இருந்து தள்ளி நின்று, மனதார ஜொள்ளு விட அழைத்தது.

  சிறந்த பத்து திரைப்படங்களில் ‘கோவை பிரதர்ஸ்’ போன்ற சூப்பர் படங்கள் பட்டியலை ரொப்பி, அதிர்ச்சி கலவாத தொலைக்காட்சி நடத்துவதின் பொருளாதார சிக்கல்களை முன்வைத்தது.

  தனுஷ் நடித்த நாலைந்து படங்களின் இயக்குநர்களை தலா ஐந்து நிமிடம் சந்தித்து உரையாடினார். செல்ஃப் வாய்க்கரிசியாக, ‘நான் நடிச்சதே ஒரு விரலுக்குள் அடங்குற மாதிரி படங்கதான்… அதில் என்ன சஸ்பென்ஸ்’ என்று ஜாலியாக கலந்துரையாடினார். ‘சுள்ளான்’ ரமணா, பூபதி பாண்டியன், திருடா திருடி டைரக்டர், பாலு மகேந்திரா ஆஜர். அவர்களில் சுவாரசியம் ஏதும் இல்லை.

 • ‘நீங்க ஏன் நேரில் பேட்டி கொடுக்க மாட்டேங்கறீங்க?’
 • ‘நிஜத்தில் நாயே, பேயே, சனியனே என்று திட்றீங்க… இந்த மாதிரி டிவிக்காக ஃபோனில் பேசறப்ப, “வாங்க/போங்க” மரியாத பலமா ஃபிலிம் காட்றீங்களே?’
 • ‘உங்களுக்கு அப்பா சூப்பர் ஸ்டார பிடிக்குமா? ஒல்லிப்பூச்சி தனுஷ் பிடிக்குமா?’ என்று அரட்டையாக மனைவி ஐஸ்வர்யாவுடன் பேசியது சூப்பர்.

  கனவுக்கன்னி, கலகல கருணாஸ், மிஸ் மெட்ராஸ் (அல்லது அது போன்ற ஏதோ ஒரு பட்டமளிப்பு முடிசூட்டு நீச்சலாடைப் பெருவிழா) எல்லாமே ‘நல்லவேளை… ரெகார்ட் செய்யவில்லை’ என்று பார்க்கவும் இல்லை. அது போல் விட்டுப்போன சில நிகழ்ச்சிகளை ஸ்ரீகாந்த் பார்த்து, அனுபவித்ததை பதிந்திருக்கிறார். (படிக்க: கில்லி – Gilli » New Year Spl programmes in TV)

  2006-இன் சிறந்த பத்து பாடல்களில் ‘கருவாப்பையா’ வந்திருந்தது.

  ‘அழகிய அசுரா’ பார்க்கலாம் என்று எண்ணம் இருப்பவர்களின் சித்தத்தை மாற்றும் நோக்கோடு, அந்தத் திரைப்படம் குறித்த விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. வருகிற ஒன்றிரண்டு பேரையும், இவ்வாறு விரட்டுவது எந்த வகை நியாயமோ?

  ‘வேட்டையாடு விளையாடு’ நூறாவது நாள் விழா. கமல், கௌதம், பாராட்டு பூகம்பத்தில் காணாமல் போக்கிக் கொண்டார்கள். ஜோதிகா நடிக்காத வே.வி. என்று எண்ணுகிறேன். ஜோ குறித்து யாராவது சொல்கிறார்களா என்று எண்ண ஆரம்பித்ததில் கை விரலுக்கு வேலை கொடுக்காத பேச்சாளர்கள். (அல்லது ஜோவைக் கத்தரித்த படத்தொகுப்பாளர்).

  கடந்த வருடத்தில் நடந்த முக்கிய உலக நிகழ்ச்சிகள் சன் நியூஸின் உண்மையான திறமையை வெளிக் கொணர்ந்தது. அதைத் தொடர்ந்த இந்திய நிகழ்வுகளின் தொகுப்பு, சன் குழும மேலாளர்களின் ஊடகத் திணிப்பை மீண்டும் பறை சாற்றியது.

  கடைசியாக ‘அழகே ஐஸ்வர்யா’ கொட்டாவி. Longines பட்டை பட்டையாக தீற்றல். ரஜினியுடன் நடிக்க மறுப்பதற்கு உண்மையை சொன்னால் கொடும்பாவியாகலாம் என்னும் பயம் தடுத்தாலும், பற்பசை விளம்பரத் தோற்றத்துடன் பசையில்லா பதில்.

  நிகழ்ச்சியைத் தவற விட்டவர்களுக்காக… முழு நிரல் இங்கே:

  ஐஷ்வர்யா: ‘I like tamils.’

  விஜயசாரதி: ‘அப்புறம்…’

  ஐ: ‘I like Tamil!’

  இப்பொழுது (கண்டு கொண்டேன்)**2 பார்ப்போம்.

  ஐ: ‘I like Mani.’

  வி: ‘ஓ..’

  இப்பொழுது (கண்டு கொண்டேன்)**2 பார்ப்போம்.

  ஐ: ‘I like Rathnam.’

  இப்பொழுது (கண்டு கொண்டேன்)**2 பார்ப்போம்.

  விளம்பர இடைவேளை

  ஐ: ‘I know couple of tamil words. நன்றி வணக்கம்’

  எல்லோருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.


  | | | | | | |