Hugo Chávez Spreads the Loot – WSJ.com
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும்? எம்.பி.க்களை விலைக்கு வாங்க வேண்டும்.
இந்தியாவிற்குள் சீனா நுழைவதை கண்டுகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்.
ஹ்யூகோ சாவெஸுக்கும் இது போல் நடத்திக் காட்ட ஆசை. இராக்கில் ஜனநாயகம் தழைத்தோங்க அமெரிக்கா செலவு செய்வது போல் அர்ஜென்டீனாவில் இடதுசாரி ஆட்சியமைக்க பிரச்சாரப் பணம் தந்து உதவி இருக்கிறார்.
இது தவறா?
இல்லை.
ஆனால், பினாமிகள் மூலமாக பணத்தைத் திருட்டுத்தனமாக அமெரிக்காவிற்குள் பதுக்க எடுத்துச் செல்லும்போது மாட்டிக் கொள்வது குற்றம்.
சினிமாப் படம் பார்ப்பது போன்ற சம்பவம்.
ஃப்ளோரிடா விமான நிலையத்தில் $800,000முடன் Guido Alejandro Antonini மாட்டிக் கொள்கிறார். விட்டுப்பிடிக்க நினைக்கும் அமெரிக்க காவல்துறை, அன்டோனினியை போகச் சொல்லி விடுகிறது.
வெனிசுவேலாவில் இருந்து அன்டோனினி வாயைத் திறக்காமல் இருக்க வைப்பதற்காக Carlos Kauffmanம் Franklin Duránம் வருகிறார்கள். தமிழ்ப்பட தாதா போல் ‘குழந்தையைக் கொன்று விடுவோம்’ என்று அன்டோனினியை மிரட்டுகிறார்கள்.
அன்டோனினியோ வேவு பார்க்கும் கருவி மூலமாக போலீசுக்கு நேரடி ஒலியும் ஒளியும் நடத்தி விடுகிறார்.
அன்டோனினி தன்னுடைய சாகசங்களையும் பட்டியல் இட்டிருக்கிறார்:
- அர்ஜென்டினா தேர்தலுக்காக $4.2 மில்லியன் – ஹ்யுகோ செவஸ் உபயம்
- வெனிசுவேலாவின் பொலிவிய தூதுவர் மூலம் 100 மில். டாலர்
- பொலிவியாவிற்கு பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க வெள்ளி பெறுமானமுள்ள அடக்குமுறை ஆயுத தானம்
- கொலம்பியாவில் ஹ்யுகொ சாவஸ் ஆதரவாக உள்ள செனேட்டருக்கு $135,000
வெனிசுவெலா அரசு அயல்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில் இவற்றுக்கு சிகரம் வைத்தது போல் நிகாரகுவா பணப்பரிமாற்றம் அமைந்துள்ளது.
நிகாரகுவாவின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய், வெனிசுவேலாவில் இருந்து பாதி விலைக்கு இறக்குமதி ஆகிறது. மற்ற பாதியை 25 ஆண்டு கடன் பத்திரமாக மேலும் விலை குறைக்கப்படுகிறது.
இப்படு சும்மா வந்த எண்ணெயை நிகாரகுவா அரசு தனியார் நிறுவனங்களுக்கு முழு விலைக்கு விற்கிறது.
அப்படியானால், பாக்கி இருக்கும் லாபம்?
கண்துடைப்பாக, அதில் கிடைக்கும் வருமானத்தை நாட்டு மக்களுக்கு இலவச அரசியல் பொடி தூவிவிட்டு மற்றதை நிகாரகுவா அரசரும், அவரின் கட்சியை சார்ந்த சிற்றரசர்களும் பங்குப் போட்டுக் கொள்கிறார்கள்.
இதே போன்ற எண்ணெய் அரசியலை எல் சால்வடோரிலும் கொடுத்து தீவிரவாதம் வளர்க்கிறது வெனிசுவேலா.
முள்ளை முள்ளால் எடுப்பது இதுதான் என்கிறா ஹூகோ சாவஸ்.
முந்தைய பதிவு: இன்றைய பாஸ்டன் க்ளோப்: “Democracy stirs in Venezuela – The Boston Globe”