Monthly Archives: செப்ரெம்பர் 2012

Separated at Birth: Muttlingam x Subbarao

Earlier Post

சமூக வலைப்பின்னல் தளங்களில் தனிமனிதர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள்

புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:

விவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி?

தமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி!’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.

வேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.

என்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.

இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்றெல்லாம் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.

ஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.

இதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலாம். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.

நம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி? உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.

அதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.

நீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.

தகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல!’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.

சட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.

இந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.

டென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

ஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.

இதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.

1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.

2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.

3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.

வாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.

தோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.

அன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.

சிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.

இறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.

குடுகுடுவென்று காரியத்தில் இறங்காதே! காலத்தே பயிர் செய்யாமலும் இராதே!!

தொடர்புள்ள பதிவு: BBC News – Need a job? Learn to impress the robots

பொன்னம்மாள்: கௌரவத்தை சிதைத்த காமம்: தீபம்

இந்தப் பத்தி என் கவனத்தை ஈர்த்தவை:

* அத்திரி ரிஷி போன்றோர் பெரிய மகானாக நிறுவப்பட்டிருக்கிறார். மும்மூர்த்திகளையே பச்சிளம் பாலகராக்கிய அனுசூயாவின் கணவர் என்பதால் முக்கியமான ஆளாக சொல்லப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்டவரே பிறப்பை இழிவாக்கி வாதங்களில் வென்றது

* ஏகாதசி விரதம் என்றால் ருக்மாங்கதன் ராஜா கதை நினைவிற்கு வரும். அவருக்கு இப்படி ஒரு பின்னணி

* கிருச்சமதர் என்றால் ஏதோ கிறித்துவ போதகரின் பெயர் போல் தோன்றுகிறதே!

உன்னால் முடியும்: ஸ்டார் விஜய் டிவி நிகழ்ச்சி

நேர்காணல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தூர்தர்ஷனில் ‘மலரும் நினைவுகள்’ நிகழ்ச்சியை தவற விட்டதில்லை. அப்புறமாக சன் டிவி வந்த பிறகு அலுக்க அலுக்க திரை நட்சத்திரங்கள், டெக்னிஷியன்கள் பேட்டி கிடைத்தது. எப்படி இருந்தாலும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்று கே விஷ்வநாத் வந்தாலும் சரி… இயக்குநர் கே பாலச்சந்தர் வந்தாலும் சரி… பார்த்து விடுவேன்.

அந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு – ஸ்டார் விஜய் வழங்கும் ‘உன்னால் முடியும்’.

உலக அளவின் தங்கள் நிறுவனத்தை புகழ் பெற வைத்த நிறுவனர்கள் வருகிறார்கள். நம்ம மொழியில் பேசுகிறார்கள். சந்தையாக்கத்தையும் விற்றுத் தள்ளி வென்ற ரகசியங்களையும் கதைகளையும் பகிர்கிறார்கள். தமிழில் இந்த மாதிரி முயற்சி வரவேற்கத்தக்கது. பலரை ஊக்கப்படுத்தும்.

இதுவரை இடம்பெற்ற ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியான தொகுப்பு:

யூனிவெர்சல் சதீஷ் பாபு: Sathish Babu from UniverCell

ஆச்சி மசாலா பதம்சிங் ஐஸக்: Padmasingh Isaac, the founder of Aachi

அருண் எக்ஸெல்லோ சுரேஷ்: Suresh, the President of Arun Excello

ஹட்சன் சந்திரமோகன்: Chandramohan, the President of Hatsun

இதயம் நல்லெண்ணெய முத்து: Muthu, the President of Idhayam

நேச்சர் பவர் சோப் தனபால்: Dhanapal, the President of Power Soap

Unnal Mudiyum – A interview with the successful personalities, the secrets behind their success.

Free Speech, Religion Clash Over ‘Innocence of Muslims’ Film: Cartoon: Movie critics – Dan Wasserman

Thanks: cartoon from Dan Wasserman of the Boston Globe

பொன்னம்மாள் பக்கம் in தீபம்

நன்றி: http://www.kalkionline.com/deepam/2012/sep/20092012/deepam0901.php

Indian Cartoonist’s Arrest & Free Speech Debate: Recent picks from Newspapers

Cartoons by Aseem Trivedi

A cartoon depicting Sansad Bhavan, the Indian parliament building in New Delhi, as a toilet. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

A depiction of Ajmal Kasab urinating on the Indian constitution. Kasab was the only member of the Pakistani terrorist group that attaced Mumbai in 2008 to be captured. He is currently in Indian custody, sentenced to death. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

Cartoon depicting the Indian parliament building, which contains the Rajya Sabha (upper house) and Lok Sabha (lower house). By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

The cartoon, by Aseem Trivedi, that provoked complaints to the police. From cartoonsagainstcorruption.blogspot.co.uk


Asian Age: Here and Now by Sudhir Tailang


Cartoonist Manjul: Column – Irregular at DNA: Daily News and Analysis


Tamil Newspaper Dinamani (Indian Express group): Adade Mathi


The Hindu: Keshav


Ajit Ninan at TOI: Times of India


Hindustan Times: Shreyas Navare


The Indian Express (original – Delhi): Business As Usual by Unny


Satish Acharya: Mid-Day


Mir Suhail Qadiri: Kashmir Reader


Tehelka

Think. And Be Damned

Drawing a dangerous line

‘The arrest of the cartoonist in Bengal, the Internet control laws — this is all part of a shutdown of democratic freedoms we take for granted,’ says Sudhir Tailang

Free Speech or hate speech?: By Mahmood Mamdani

I empathise with those baffled by the rapidly spiralling controversy around the series of cartoons depicting Prophet Muhammad. The cartoons were first published in the Danish paper, Jyllands-Posten, nearly five months ago, in September. The initial protest was limited to Denmark’s Muslim minority but was brushed off by both government and civil society. This is when some of the ultra-conservative Danish imams took up the matter and set off for Saudi Arabia and Egypt with a dossier containing the inflammatory cartoons. Last week came the diplomatic explosion: Saudi Arabia recalled its ambassador in Denmark and Libya shut its embassy. Then followed the boycott of Danish goods, demonstrations, strikes, flag burning, and now fires set to embassies in Damascus and Beirut.

பெண்ணுரிமையும் சட்டங்களும்: சொந்த முடிவுகளை சுதந்திரமாக தேர்ந்தெடுத்தல்

ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்: http://www.jeyamohan.in/?p=29188

கருக்கலைப்பு-ஒரு கடிதம் வாசிக்கக் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசுவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது [இலக்கிய இடக்கரடக்கல்கள்]

//அது ஒரு கொலையல்ல என்று பார்ப்பது எப்படி… நம் மனைவியின் மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றதிலிருந்தே நம் உறவு ஆரம்பமாகிறது அல்லவா…//

கட்சிக்கு ஆள் சேர்ப்பது போல்…
கூட்டத்தைப் பெருக்க குடும்பத்தினரை கூட்டுவது போல்…
மதத்தை முன்னேற்ற எண்ணிக்கை அதிகரிப்பது போல்…
குழந்தைகளை நிறைய ஈன்றெடுங்கள் என்பது அந்தக் காலம்.

ஒன்றோ, இரண்டோ… ஒழுங்காய் வளர்த்தால் சிறப்பு என்பது இந்தக் காலம்.

இதில் எங்கே கொலை வருகிறது?

இந்தியாவில் கர்ப்பம் கலைப்பு என்றாலே பெண் குழந்தை என்றளவிலும், மேற்கில் (குறிப்பாக கிறித்துவ பெரும்பான்மையினர் கொண்ட நாடுகளில்) கருக்கலைப்பு என்றாலே தெய்வக்குத்தம் என்றளவிலும் எளிமையாக்க முடிகிறது.

அமெரிக்கா வந்த புதிதில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வெகு அருகில் ‘Planned Parenthood’ என்னும் வசதி வாய்ப்பற்றோருக்கான உதவி ஸ்தாபனம் இயங்கி வந்தது. தினசரி காலை ஏழு மணிக்கு சிலுவை தாங்கியவர்களும் உள்ளே ஆலோசனைக்குச் செல்பவர்களைக் கடுமையாகத் திட்டும் பதாகைகள் தாங்கியவர்களும் வந்து விடுவார்கள். அந்தத்  தன்னார்வ நிறுவனம் மூடும் எட்டு மணி வரை உள்ளே செல்வோரையும், வெளியே வருவோரையும் மிக மோசமாக வைவார்கள். கேட்கவே பயமாகவும், அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருக்கும். ஒருவரைக் குறி வைத்துப் பத்துப் பதினைந்து பேர் சூழ்வார்கள்.

அதைக் கேட்போர் ஏற்கனவே நோய்க்கு உள்ளானவர்கள்; அல்லது பதின்ம வயதிலேயே, பள்ளிப் படிப்பு முடிக்காமலேயே கரு தாங்கியவர்கள்; மிக முக்கியமாக ஏழைகள். அவர்கள் இந்த அர்ச்சனையைக் கேட்கும் போது எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என நான் நினைக்கும் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தியதுண்டு.

ஏற்கனவே கிடைத்த பதிவுகளில் சில:

அ) பாலா – ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்

பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பில் அந்த 1.30 மணி ஆவணம், பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பை நன்றாக ஆராய்ந்து, அதன் காரணங்களை, அது பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, பாதிக்கப் பட்டவர்களுடன் உரையாடி, அது சம்பந்தமாக மேலே செய்ய வேண்டிய காரியங்களைக் குறிப்பிட்டு நேயர்களையும் அதில் ஈடுபட அழைத்து –

ஆ) சிறில் அலெக்ஸ்கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்

இ) பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

ஈ) மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்

முலைப்பால் குடிக்கும் சிசுக்களைக் கண்ட யேசு தன் சீடர்களிடம் “முலைகுடிக்கும் இந்தக் குழந்தைகள் சொர்க்கத்தில் நுழைபவர்களைப்போல “என்று சொன்னார் .

சீடர்கள் அவரிடம் “அப்படியானால் நாங்கள் குழந்தைகளாக மாறி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கலாமா?” என்றார்கள் .

யேசு அவர்களிடம் “எப்போது நீங்கள் இரண்டை ஒன்றாக்குகிறீர்களோ ,எப்போது நீங்கள் அகம் புறம் போலவும் , புறம் அகம் போலவும் , மேலே இருப்பது கீழே இருப்பது போலவும் ஆகிறீர்களோ , எப்போது நீங்கள் ஆண் ஆணும் பெண் பெண்ணும் அல்லாமலாகும்படி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக ஆக்கிக் கொள்கிறீர்களோ எப்போது நீங்கள் ஒரு கண்ணுக்குப் பதிலாகப் பல கண்களும் , ஒரு கைக்குப் பதிலாக இன்னொரு கையும் ஒரு பாதத்துக்கு பதிலாக இன்னொரு பாதமும் ஒரு சமானத்தன்மைக்கு பதிலாக இன்னொரு சமானத்தன்மையும் உள்ளவர்களாகிறீர்களோ அப்போது நீங்கள் சொர்க்க ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பீர்கள்” என்றார் .

108 Divya Desangal: R Ponnammal Books

The Hindu Book Intro

108 Divya Desangal - Tamil Books


Kumudham Jothidam

108 Thiviya Thesangal