செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்


தற்சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற Phillip Garrido குறித்த செய்தி: Questions arise over how kidnapper went undetected – Yahoo! News: “For 18 years, Phillip Garrido managed to elude detection as he pulled off what authorities are calling an unfathomable crime, kidnapping and raping 11-year-old Jaycee Dugard, keeping her as his secret captive for nearly two decades and fathering two of her children.”

Jaycee-Dugard-California-kid-child-abuse-11-year-Guardian

பள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.

பதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.

மூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.

இந்தச் சிறுமிகள் பள்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.

அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
Sac-bee-san-francisco-step-father-old-11-story-newspaper-cuttingஅச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

நல்ல வேளை.

கமல்ஹாசன் – ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.

அப்படி ஒரு கொடூரம் இங்கே: The Hindu : Front Page : Soothsayers arrested for poisoning children after predicting their death

அப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:

மாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்

1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் – யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”

2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.

புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.

இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”

ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவோம்.

Fritzl-Die-Justice-Jury-Sentence-Kids-Children-law-Order-Judges-Courts

வினாக்கள்

  1. செக்ஸ் அஃபென்டர் என்றால் யார்?
  2. இப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா? தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா?
  3. அமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா? அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா?
  4. மேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா? எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது? எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது?
  5. அதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு?

Freedom-Daughters-Dress-Ethics-Morality-cartoon_leunigjpg

பாலியல் குற்றவாளி – Sex Offender

  • சிறுவன்களையோ சிறுமிகளையோ வன்புணர்பவர்
  • அவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.
  • குழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.
  • சிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.
  • மேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.
  • ரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.

மதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்

அந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.

ஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்க என்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.

மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.

‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.

Cartoons-look-the-other-way-ignore-sex-offenders-abuse-Martin-Rowson-006

தனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்

பாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.

1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.

2. வேட்டையாடு விளையாடு: – Garrido came under suspicion in the unsolved murders of several prostitutes in the 1990s, raising the prospect he was a serial killer as well. Several of the women’s bodies — the exact number is not known — were dumped near an industrial park where Garrido worked during the 1990s. Police executed a search warrant at his home in the investigation.

3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”
Babysitter-New-Yorker-Abuse-Cartoons-Comics-Fun-Pun-satire

உங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா?

1. National Sex Offender Registry

2. Obtaining Information About Sex Offenders

தொடர்புள்ள பதிவுகள்:

1. Jaycee Lee Dugard and the kidnapper’s narrative | Beatrix Campbell | Comment is free | guardian.co.uk

2. Jaycee Lee Dugard kidnap | World news | guardian.co.uk

3. Just another week of rapes | Life and style | The Guardian: “Nearly 50,000 rapes and attempted rapes take place in the UK every year, but only a few are covered by the media. Julie Bindel gives a snapshot of which cases are reported – and how”

4. Is Jaycee Dugard’s tormentor mentally ill? – Broadsheet – Salon.com

5. Afghan law: Wife refusing sex? Deny her food – Broadsheet – Salon.com

6. The blog of Philip Garrido, serial rapist and kidnapper: “sound control” gadget hallucinations. – Boing Boing

7. In True Psycho Fashion, Phillip Garrido Had Blog, Heard God – Phillip Garrido – Gawker

8. Authorities Missed Chances to Find Captives – WSJ.com

9. Woman Held Captive for 18 Years Resurfaces – WSJ.com

HT-Delhi-Kidnap-Ransom-K-and-R-Kids-Money-Extortion-Rich-Servants-housemaids

லிபரல் பக்கம்: இன்னொரு பக்க நியாயம்: மாற்று சிந்தனை

10. Erogenous Zoned: Sending sex offenders into exile – Reason Magazine

11. Hit List: Deadly sex offender registries – Reason Magazine

12. Which pedophiles strike again? – By Daniel Engber – Slate Magazine

13. Who Are the Molesters in Your Neighborhood? The Supreme Court considers the sex offender next door. – By Dahlia Lithwick – Slate Magazine

Terrorists-Extremists-Law-UNA-Bombers-Police-Sex-Offenders

கட்டுரையை முடிக்க பன்ச் டயலாக்கள்

  • கஞ்சா வைத்திருந்தால் கஞ்சமில்லாமல் இருபது வருசம் உள்ளே தள்ளூறாங்க! பொட்டச்சிய வச்சிருந்தா மட்டும் ஏன் பொட்டில் அறைஞ்சு பாடை கட்ட மாட்டேங்கிறாங்க?
  • பொண்ணுங்க மனச பொண்ணுக்குத்தான் தெரியும் என்பது சீரியல் வசனம். ரேப்பும் செய்வாள் பத்தினி என்பது ரியல் விசனம்.
  • சந்தேகாஸ்தபமா இருக்கேன்னு போலீஸ் விசாரிச்சா தப்பே கிடையாது. ஒண்ணு ஒபாமாவோட பீர் கிடைக்கும்; இல்லேன்னா, பொண்ண பதுக்கற பொறுக்கி கிடைப்பாங்க.
  • பரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா?
  • கோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை?
  • அன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே!

Fun-satire-basement-fence-prison-abduct-sex-rapes-violent-austria

30 responses to “செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்

  1. Great, Amazing, superb, tremendous- collection.

  2. Why dont you convert this into a coherent essay with references. That may take time still it is worth the time.

  3. சாரு நிவேதாவும், ஜெயமோகனும் ஒரு விஷயத்தை பற்றி நேரெதிர் துருவங்களில் இருந்து பேசுகிறார்கள். விஷயம் மையத்தில் இருக்கிறது

  4. Extensive! Hard work! Great article.

    ஆனால் தலைப்பை மாற்றியிருக்கலாமே என்று தோன்றியது. இன்னொரு முறை நிதானமாகப் படிக்கவேண்டும்.

    • சித்ரன், __/\__

      —தலைப்பை மாற்றியிருக்கலாமே —

      உண்மை. உள்ளே வந்து குழந்தையுடன் குலாவச் சொல்லும் அதிர்ச்சியைத் திணிப்பதே தலைப்பின் நோக்கம் 😉

  5. //ரேப்பும் செய்வாள் பத்தினி என்பது ரியல் விசனம்.
    // இது மேலோட்டமான வரி. மனைவியும் ஒரு விக்டிம் ஆக இருக்க கூடும். domestic violence ஒரு சிக்கலான உளவியல். இங்கே பல படிமங்கள் உண்டு. இதன் ஆழம புரியாமல் எதுவும் சொல்ல இயலாது. பாதிக்கப்பட்ட பெண்ணே கூட போன், கம்ப்யூட்டர் அணுக முடிந்தும் புகாரிடாதது ஏன் என்பதும் தெரியாது. ஸ்டாக்ஹோம் சிந்த்ரோம் தவிர உயிர்பயம், அனுபவித்த சித்திரவதைகள் எதுவும் தெரியாது. சில் பெண்கள் பாதிக்கப்பட்ட ஆண்கள் பல வருடங்களானாலும் வெளி வர துணிவதில்லை.

    • பத்மா, __/\__

      —மேலோட்டமான வரி.—

      பேரே snap நீதிதானே… விலாவாரியாக விசாரித்து நீதி வழங்க, நீதிமன்றத் தீர்ப்பிற்கு காத்திருப்போம்.

      —சில் பெண்கள் பாதிக்கப்பட்ட ஆண்கள் பல வருடங்களானாலும் வெளி வர துணிவதில்லை.

      இந்தியத் திருமணங்கள் குறித்து சொன்ன மாதிரி நச்சென்று உள்ளது!

  6. வள்ளி மணவயதில் இருந்தவள்; முருகனைக் கணவனாக வரித்தவள், அவளை பயமுறுத்தி பின் சுய உருவம் காட்டியது காதலன் காதலியிடத்தில் நிகழ்த்தும் ஒரு சிறு கண்கட்டு விளையாட்டு. அதற்குப் பின் மன்னரான அவளது தந்தையின் சம்மதத்துடன் வள்ளியை மணம் செய்கிறார் முருகன். இதில் எங்கே பலாத்காரம் வந்தது, ஏன் அபத்தமாக எழுதியிருகிறீர்கள்?
    அடுத்த வரியில் ஜீஸஸ், அல்லா என்று எழுதியதற்காக இப்படி ஒரு சூடோ-செக்யுலர் நிரவலா?

    • அருணகிரி, __/\__

      —வள்ளி மணவயதில் இருந்தவள்;—

      டேவிட் லெட்டர்மேன்/லாரி கிங் போன்ற பணக்கார ‘வயகரா’ இளவரசர்கள் மணமுடிப்பது போல் வள்ளியும் வாழ்க்கைப்பட்டாள். லாரி கிங்குக்கு 67 வயதிலும் இளமையாக குழந்தை பிறக்கிறது. முருகரும் வயோதிகத் தோற்றத்தில் வந்து, பின் உருமாறிய கதையும் இதே குறியீடு கொண்டதே.

      அதெல்லாம் debatable…

      என்னவாக இருந்தாலும் இரண்டாந்தாரம். ஏற்கனவே, கல்யாணமான ஒருவருக்கு கீப்.

      உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவளை ‘சீனி கம்’ அமிதாப் ஆகிருதியோடு மாப்பிள்ளையாக்கிக் கொள்ள மனசு இடங்கொடுக்குமா…

  7. ”டேவிட் லெட்டர்மேன்/லாரி கிங் போன்ற பணக்கார ‘வயகரா’ இளவரசர்கள் மணமுடிப்பது போல் வள்ளியும் வாழ்க்கைப்பட்டாள்”.

    என்ன சொல்கிறீர்கள்? கிழ வேடத்தில் வள்ளி திருமணம் நடக்கவில்லை. அதை வள்ளியின் தந்தையும் அனுமதித்திருக்க மாட்டான். வேடம் கலைத்து சுய உருவம் காட்டிய பின்தான் திருமணம் நடக்கிறது. வள்ளி மணம் முடிப்பது இள முருகனை.

    காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமன் தன் காதலியைக் கலாய்ப்பதுபோல் கலாய்த்து விட்டு, பின் வேஷம் கலைத்து சுய உருவம் காட்டி காதலியை மகிழ்வடையச் செய்து இணைதல் போல இது ஒரு விளையாட்டு.

    இதை எப்படி (மன்னிக்கவும்) கேனத்தனமாக டேவிட் லெட்டர்மேன் என்ற நிஜக்கிழவன் ஒரு சிறுவயதுப் பெண்ணை மணப்பதுடன் ஒப்பிடுகிறீர்கள்?

    ”லாரி கிங்குக்கு 67 வயதிலும் இளமையாக குழந்தை பிறக்கிறது. முருகரும் வயோதிகத் தோற்றத்தில் வந்து, பின் உருமாறிய கதையும் இதே குறியீடு கொண்டதே”.

    இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சாக இருக்கிறதே! லாரி கிங் என்ற கிழவனுக்கு ”இளமையாக குழந்தை பிறப்பதற்கும்” (குழந்தை எப்போதுமே இளமையாகத் தானே அய்யா பிறக்கும்!!!:))), நிஜக் கிழவன் சிறு குமரியை மணப்பதற்கும் என்னய்யா சம்பந்தம்?!

    மேலோட்ட தர்க்கத்தில்கூட இந்த ஒப்பீடு பொருந்தி வரவில்லையே. கொஞ்சம் யோசித்து எழுதுங்கள் பா.பா.

  8. //தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும்.//

    முருகன் கிழவராக வந்தது மாறுவேடம் என்பது வள்ளித்திருமணம் கதை அறிந்த அனைவரும் உணர்ந்த ஒன்றாயிறே இதில் வள்ளி காதலித்துக் கொண்டிருக்கிற முருகன்தானே அவரைக் கைபிடிக்கிறார். காதலர் விளையாட்டை கற்பழிப்பு என்று சொல்வது ஏன்?

    சில ஆண்டுகள் முன்புவரையிலும் கூட பலதார மணம் நம்நாட்டில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானே!

    மிகவும் நாகரிகமற்ற உண்மைக்குப் புறம்பான எழுத்தாடல்.

    ஓகை நடராஜன்.

    • ஓகை, __/\__

      —சில ஆண்டுகள் முன்புவரையிலும் கூட பலதார மணம் நம்நாட்டில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானே!

      அமெரிக்காவில் கூட சில ஆண்டுகள் முன்பு வரை பெண்களுக்கான ஓட்டுரிமை மறுக்கப்பட்டது. அப்போது சரியென்று நினைத்ததால், இன்றும் கொண்டாட வேண்டாமே!?

      — மிகவும் நாகரிகமற்ற உண்மைக்குப் புறம்பான எழுத்தாடல்

      குறிப்பிடப்பட்ட முதியவர் தீவிர இறை நம்பிக்கை கொண்டவர். குழந்தைகளைத் திருடுபவர்.

      இந்தக் கட்டுரையின் நோக்கம் சிறுமிகளைக் கவர்ந்து வன்புணரும் வயோதிகர் குறித்து… அதை விட்டுட்டு… ஒரு வாக்கியத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாமே?

  9. அதுதானே பாபா கேள்வியே, சிறுமிகளை வன்புணரும் கிறித்துவ அடிப்படைவாத அமெரிக்க இழி வயோதிகன் ஒருவனைப்பற்றிய கட்டுரையில் இந்துக்கடவுள் முருகனை அபத்தமாக இழுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? இது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியும் கூட.

    குறிப்பிட்ட முதியவர் தீவிர (கிறித்துவ) இறை நம்பிக்கை கொண்டவர் என்று கூறியிருக்கிறீர்கள். அந்நம்பிக்கையின் பின்னணியில் (உதாரணமாக விவிலிய அடிப்படையில்) அல்லது அவரே தன் மதநம்பிக்கையினால் இதைச்செய்ததாக சொல்லியிருந்தாலோ அதனைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும்.
    ஏனெனில் இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன.

    உதாரணத்திற்கு, ஞானஸ்நானத்திற்கு முன் புனித ஆவி இறங்காத குழந்தைகள் முழுமையற்ற பிறவிகள் என்று சொல்லி அவர்களை molest செய்த சம்பவங்கள் இதற்கு முன் உண்டு. அதைச் சொல்லலாம். குழந்தைகளைக் கழியால் அடிப்பதை விவிலியத்தை வைத்து நியாயப்படுத்தும் கிறித்துவ மதப்பற்றாளர்கள் இருக்கிறார்கள். தடியால் குழந்தையின் பின்பக்கத்தில் அடிப்பதை ”கடவுளின் வழி” என்று சொல்லித்தரும் கிறித்துவ மினிஸ்டர்களும் (குறிப்பாக evangelical/ baptist) இருக்கிறார்கள். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை அடிக்க எந்த அளவு நீளக்கழி உபயோகப்படுத்த வேண்டும் எவ்வளவு அடி அடிக்க வேண்டும் என்றெல்லாம் புத்தகம் போட்டிருக்கிறார்கள் (10-12 inch long; 1/8 inch diameter; 10-12 அடி அடிக்க வேண்டுமாம்- பிறகு புத்தம்புது குழந்தை உருவெடுக்குமாம். பெற்றோர்கள் அதன்பிறகு இறைவனால் ஆசி செய்யப்பட்ட அக்கழியைப் புதிய மரியாதையுடன் பார்ப்பார்களாம்). இதைச் சொல்லலாம்.

    பல பொறுக்கிகளும் எந்த அடிப்படையிலாவது தன் செயலுக்கு ஞாயம் கற்பிக்கவே முனைவர்- மத நூல்களைத் துணைக்கு அழைத்தும் கூட. என்றாலும் புத்தக மதங்களின் மத நூல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. வரிக்கு வரி இறைவனால் அளிக்கப்பட்ட லிட்டரல் உண்மையே அப்புத்தக வாசகங்கள் என்ற நம்பிக்கையே அது. லிட்டரலிஸம் என்ற இந்த நம்பிக்கை அம்மதங்களுக்கு அச்சாணி போன்றது.

    ஆக லிட்டரல் மதநூலின் தீவிர விசுவாசிகள் இதுபோன்ற தவறுகளுக்கு தம் மதநூல்களைக் காரணம் காட்டும்போது அதனை எளிதாக ஒதுக்கி விட முடியாது. ஏனெனில் அவ்வாறு அவர்கள் செய்ய அம்மதங்களில் இறையியல் முகாந்திரம் இருக்கிறது. அதுவும் அமெரிக்காவில் லிட்டரலிசத்தை நம்பும் கிறித்துவ அடிப்படைவாதிகள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் லிட்டரலிசத்தை விட்டு வெளி வரவேண்டிய கடமையும் அச்சமூகங்களுக்கும் அதன் இறைநெறியாளர்களுக்கும் இருக்கின்றன.

    சமூகப்பிரச்சனைகளுக்கு எல்லா மதங்களும் ஒரே மாதிரியான தீர்வைத் தருவதில்லை. புத்தக மதங்களின் இறையியல் விளைவிக்கும் சமூகப்பிரச்சனைகளை, அவ்வாறில்லாத கீழை மதங்களுடன் நேரடியாக ஒப்பிட்டுப்பார்க்கவே முடியாது. அவ்வாறு செய்வது நம் நாட்டில் பல வருடங்களாகப் பிரசாரப்படுத்தப்பட்டுள்ள போலியானதொரு கருத்தியலையும் அதன் தொடர்ச்சியானதொரு அரசியல் சரித்தன மனோநிலையையும் பிரதிபலிக்கிறதே தவிர உண்மையை அல்ல.

  10. முருகன் கிழவராக வந்தது மாறுவேடம் என்பது வள்ளித்திருமணம் கதை அறிந்த அனைவரும் உணர்ந்த ஒன்றாயிறே இதில் வள்ளி காதலித்துக் கொண்டிருக்கிற முருகன்தானே அவரைக் கைபிடிக்கிறார். காதலர் விளையாட்டை கற்பழிப்பு என்று சொல்வது ஏன்?

  11. பிங்குபாக்: 2010 in review | Snap Judgment

  12. பிங்குபாக்: சாரு நிவேதிதா சந்திப்பு | Snap Judgment

  13. கடவுளைக் கண்டேன் : யோகம் நிரோதம்

    இதற்கு முந்திய அத்தியாயங்களில் நாம் கண்ட கடிதங்களை இந்தப் புத்தகத்தின் முன்னுரையாக எடுத்துக் கொண்டு மேலே தொடர்வோம். சிவாவின் கடிதத்தை இந்த நூலில் பயன்படுத்திக் கொண்டதன் காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் இப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட நாஸ்திகனாகவே இருந்தேன் என்பதனால்தான். இதை விடவும் கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். கடவுளையே திட்டியிருக்கிறேன். இல்லாத கடவுளைத் திட்டினால் கடவுளுக்கு என்ன நஷ்டம் என்று அப்போது தோன்றவில்லை. கடவுளையே திட்டும்போது கடவுளின் செய்தியைச் சொல்பவர்கள் எம்மாத்திரம்? அவர்களை இன்னும் மோசமாகவும், அசிங்கமாகவும் திட்டினேன். அப்படித் திட்டியதற்குக் காரணம், அரசியல்வாதிகளைப் போலவே சில சந்நியாசிகளும் அவர்கள் போதித்த ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக வாழ்ந்து வந்ததுதான். குறைந்த பட்சம், அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான வாழ்வில் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் இருக்கிறது.

    ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறி விட்டேன் என்று இப்போது புரிகிறது.

    காசியிலும், திருவண்ணாமலையிலும், வெள்ளியங்கிரியிலும், ரிஷிகேஷிலும், கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், கைலாஷ் போன்ற இமயமலைப் பிரதேசத்திலும் நாம் ஏராளமான துறவிகளையும் ஞானிகளையும் பார்க்கிறோம். இது தவிர, இந்தியா முழுவதும் மக்களோடு மக்களாக இணைந்து வாழும் சூஃபிகள் ஒரு பக்கம். இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான மகான்களின் தவ வாழ்க்கையைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் காவி உடுத்திய ஒரே ஒரு சாமியார் பொம்பளை கேஸில் உள்ளே போனதும் எல்லா ஞானிகளையும் பற்றி அவதூறாக நினைக்கவும் எழுதவும் ஆரம்பித்து விடுகிறோம். அதே தவறைத்தான் நானும் செய்திருக்கிறேன் என்றே இப்போது எனக்குத் தோன்றுகிறது.

    சிவா தன் கடிதத்தில் குறிப்பிடுவது போல் எனக்குமே நித்யானந்தர் பற்றி மூன்று மாதங்களுக்கு முன்பு வரை எதுவும் தெரியாது. குமுதத்தில் அவருடைய தொடரையும் வாசித்ததில்லை. ஆனாலும் பொதுவாகவே இது போன்ற ஆன்மீக போதகர்கள் குறித்து எனக்கு நல்ல அபிப்பிராயமும் மரியாதையும் இருந்து வந்தது. காரணம், இன்றைய கல்வி மனிதர்களுக்கு மிக மோசமான மதிப்பீடுகளை உருவாக்கித் தருவதாக இருக்கிறது. இந்தியாவைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. உலகம் பூராவுமே நிலைமை அப்படித்தான் உள்ளது. உதாரணமாக, ஒரு அமெரிக்க ஜனாதிபதியை எடுத்துக் கொள்வோம். அவர் நல்ல முறையில் கல்வி பயின்றவராகவே இருக்கிறார். ஆனால் தங்களுக்குச் சம்பந்தமில்லாத வேறோர் தேசத்தின் மீது படையெடுத்துச் சென்று அந்த நாட்டு மக்களைக் கொன்று, முடமாக்கி, அந்த தேசத்தையே சுடுகாடாக மாற்றுவது பற்றி அவருக்கு எந்தக் கவலையுமே இல்லை. அமெரிக்கா மட்டும் அல்ல; எந்த நாட்டை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தங்கள் தேசத்தைத் தவிர மற்ற தேசத்தையும் நேசத்துடன் பார்ப்பதே இல்லை. கேட்டால் தேசப்பற்று என்கிறார்கள்.

    அரசியல்தான் இப்படியிருக்கிறதென்று தனி மனிதனை எடுத்துக் கொண்டால், அங்கேயும் மிக அவலமான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜாலியாக வாழ்வதற்காக 72 வயதான ஒரு டாக்டரை கடத்திக் கொண்டு போய் அவர் குடும்பத்தினரிடம் மூன்று கோடி ரூபாய் கேட்டு, இடையில் அவரைக் கொலை செய்து பிணத்தை நதியில் தூக்கிப் போடுகிறார்கள். எல்லோரும் முப்பது வயதுக்குட்பட்டவர்கள். அதில் ஐந்து பேர் கல்லூரி மாணவர்கள். இதை ஒரு குற்றச்செயலாக தினசரிகளில் வாசிக்கும் ‘நல்ல ’ மனிதர்களின் வாழ்வியல் மதிப்பீடுகளும் கூட அடிப்படையில் இப்படியாகத்தான் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம், கொலை வரை போக மாட்டார்கள். அவ்வளவுதான். எல்லாம் பணத்தின் மீதான ஆசை. சுகம் என்றால் எது என்பது பற்றிய மோசமான மதிப்பீடு. என்ன வேண்டுமானாலும் செய்து சுகமாக வாழலாம் என்றே கற்பிக்கப்பட்டு ஒரு தலைமுறையே உருவாகி இருக்கிறது.

    புகழ் மற்றும் அதிகார ஆசை எப்படியென்றால், தமிழ் சினிமாவில் ஒரு பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து படங்களில் ஹீரோவாகத் தாக்குப் பிடித்து விட்டால் அந்த ஹீரோவுக்கு முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை வந்து விடுகிறது. தன்னுடைய குத்தாட்டத்திற்குக் கைதட்டும் கும்பல் தனக்கு ஓட்டுப் போட்டு விடும் என்று நம்ப ஆரம்பித்து விடுகிறான்.

    இந்த ஆசைகளே மனிதனுக்குள் நோயாய்ப் புகுந்து அவனுடைய உடல், மன ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது. இந்த அவலமான நிலையில்தான் ஆன்மீக குருமார்களின் போதனைகளும் வாழ்வியல் நடைமுறைப் பயிற்சிகளும் மனிதனுக்கு மிகுதியாய் தேவைப்பட ஆரம்பித்தன.

    இவ்வாறாக, மனிதனின் நோய்களை சொஸ்தப்படுத்துபவர்கள் என்ற அளவிலேயே இந்த குருமார்கள் மீது எனக்கு மரியாதை இருந்து வந்தது. இந்த நிலையில்தான் என் மனைவி அவந்திகா ஒருநாள் அவளுடைய ஆன்மீக வகுப்பிலிருந்து ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்து வந்தாள். இந்த இடத்தில் ஒரு சிறிய அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நானும் அவந்திகாவும் யெகங்கர் ( ECKANKAR ) என்ற மதத்தைச் சேர்ந்தவர்கள். உலகில் அதிகம் பேருக்குத் தெரிய வராத ஒரு ஆன்மீக வாழ்வியல் நெறி இது. இந்த மதத்தில் பல்வேறு குருமார்கள் உண்டு. அவர்களில் ஒருவரான ராமி நூரி ( Rami Nuri) பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருபவர். இந்த மதத்தின் புனித நூலான ஷரியத் கே சுக்மாத்-ஐ இவர் வெள்ளி கிரகத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார். இப்போது இந்த நூல் பூமியிலும் கிடைக்கிறது. பூமியில் வாழும் யெக் குருவை மஹந்தா என்று அழைக்கின்றனர். தற்போதைய மஹந்தா ஸ்ரீ ஹெரால்ட் க்ளெம்ப் தற்சமயம் மின்னெசோட்டாவில் (அமெரிக்கா) வசித்து வருகிறார். இவர், இடைவெளியே இல்லாமல் தொடர்ச்சியாக வரும் யெகங்கர் குரு பாரம்பரியத்தின் 973-ஆவது குரு ஆவார்.

    ஒரு யெக்கிஸ்டுடன் ராமி நூரி நேரடியாகவும் தொடர்பு கொள்வார். யெக்கிஸ்டும் அவரோடு தொடர்பு கொள்ளலாம். ராக்கெட் இருக்கிறதா, தொலைத் தொடர்புத் துறை அவ்வளவு தூரம் வளர்ந்து விட்டதா என்றெல்லாம் கேட்கக் கூடாது. எல்லாமே ஆத்மப் பயணமாக ( Soul Travel) நடக்கும் செயல்பாடுகள். உலகெங்கிலும் உள்ள யெக்கிஸ்டுகளுடனும் மஹந்தா இதே விதமாகத்தான் தொடர்பு கொள்கிறார். உதாரணமாக, மஹந்தாவிடம் நீங்கள் தெரிவிக்க நினைப்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் உங்கள் கனவில் வரும் மஹந்தா அதற்கு விடை அளிக்கிறார்.

    இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம் என்றுதான் நானும் ஆரம்பத்தில் உங்களைப் போலவே நினைத்தேன். ஆனால் சமயங்களில் உறக்கத்திலிருந்து நான் விழிக்கும் போது அவந்திகா அமெரிக்க ஆங்கிலத்தில் யாருடனோ உறக்கத்திலேயே உரையாடிக் கொண்டிருப்பாள். அவளுக்கு ஆங்கிலம் பேசத் தெரியும். ஆனால் சுட்டுப் போட்டால் கூட அமெரிக்க உச்சரிப்பு தெரியாது. சத்தமின்றி கூர்ந்து கவனித்தால் யாரோ பேசுவதற்கு இவள் பதில் சொல்வதும், உரையாடுவதும் தெரியும். இன்னும் கூர்ந்து கவனித்து அது மஹந்தா என்று தெரிந்து கொள்வேன்.

    சரி, இதுவும் பைத்தியக்காரத்தனம் என்று நீங்கள் நினைத்தால் வேறொரு சாட்சியம் அளிக்கிறேன். நான் இன்னும் ஆறு மாதம் கழித்து என்ன செய்யப் போகிறேன் என்று இப்போதே அவளுடைய நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறாள். நான் அவளுடைய நாட்குறிப்புகளைப் படிப்பதில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் என்னுடைய தவறின் காரணமாக நான் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டேன். அப்போது அவள் அந்தச் சம்பவம் நடக்க இருப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் எழுதிய டைரியை எடுத்துக் காண்பித்தாள். நேரில் இருந்து பார்த்தது போல் அவ்வளவு துல்லியமாக இருந்தது. இதை அன்றைய தினம் அவள் எழுதியிருக்க முடியாது. நாட்குறிப்புப் புத்தகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னே ஏதோ ஒரு பழைய தேதியில் எழுதப் பட்டிருந்தது அந்தச் சம்பவம். அதைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தினமும் நாட்குறிப்பு எழுதப் பட்டிருந்தது. இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். ஆனால் நான் இதை சத்தியமாகச் சொல்கிறேன்.

    இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவ்வளவும் அவளுக்கு கனவில் மஹந்தாவால் சொல்லப்படுகின்றன என்கிறாள்.

    யெகங்கர் நெறியில் எனக்கு இப்படி ஒரு அனுபவம் கூட ஏற்பட்டதில்லை என்றாலும் இதில் உள்ள எல்லோருமே பொய் சொல்லுகிறார்கள் என்று சொன்னால் அது என்னுடைய முட்டாள்தனம். மேலும், அவந்திகாவின் நேரடி சாட்சியத்தை நான் மறுக்கவே முடியாது. யாருக்குமே தெரியாத, எனக்கு மட்டுமே தெரிந்த என் சம்பந்தப்பட்ட ரகசியங்கள் கூட அவளுடைய நாட்குறிப்பில் இருந்தன.

    இதெல்லாம் ஒருபுறம் இருக்க, நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன். யெக்கிஸ்டுகளின் ஆன்மீக வகுப்பு வாரந்தோறும் சென்னையில் நடைபெறுகிறது. நான் அந்த வகுப்புகளுக்குச் செல்வதில்லை. ஆனால் அவந்திகா தவறாமல் சென்று விடுவாள். அந்த வகுப்பு ஒன்றிலிருந்துதான் அந்தத் தடிமனான புத்தகத்தை எடுத்து வந்தாள் அவந்திகா. ஜீவன் முக்தி என்ற அந்த நூல் இரண்டு காரணங்களால் என் கவனத்தைக் கவர்ந்தது. ஒன்று, ஒரே நாளில் இரண்டரை லட்சம் பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்ட நூல். இரண்டாவது, உண்மையான மகான்களுக்கு மட்டுமே உரிய ஈர்ப்பு சக்தி அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அணுவிலும் வெளிப்பட்ட தன்மை.

    பின்னர் அந்தப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் படித்தபோது ‘இவர் மகான் மட்டுமல்ல; மகா அவதார புருஷர் ’ என்பதை உணர்ந்தேன். அவர்தான் பரமஹம்ஸ நித்யானந்தர்.

    அதற்குப் பிறகு நடந்ததுதான் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வரும் வழியில் கிடைத்த நித்ய தரிசனம். அதிலும் எப்பேர்ப்பட்ட தரிசனம்? நான் ஒருவன் பார்த்திருந்தால் அதை மனதில் தோன்றும் மாயத் தோற்றம் (ஹலூசினேஷன்) என்று கருதலாம். ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? நான் தெரிவித்த தேதியை வைத்து ஆசிரமத்திலும் பார்த்து விட்டார்கள். நித்யானந்தரின் காரியதரிசியும் நித்யானந்த சீடர்களால் ஐயா என்று அழைக்கப்படுபவருமான ஸ்ரீ நித்ய சதானந்தாவும் நான் குறிப்பிட்ட தேதியை வைத்து சரி பார்த்து விட்டார். அந்தத் தேதியில் நித்யானந்தர் பெங்களூரில் இருந்துள்ளார்.

    இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது. அது, சென்ற மாதம் ஒருநாள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கல்பதரு நிகழ்ச்சியில். நாள் முழுவதும் நடந்த அந்த தியான வகுப்பின் முடிவில் நித்யானந்தர் அங்கு வந்திருந்த 2000 பேருக்கும் கல்பதரு தீட்சை அளித்தார்.

    தீட்சை அளிப்பதற்கு முன்பு ஒரு துறவி அறிவித்தார்: பிள்ளை வரம் வேண்டுபவர்களெல்லாம் வந்து முன் வரிசையில் அமரலாம்.

    இதைக் கேட்டதும் எனக்கு ’ நாம் என்ன விஞ்ஞான யுகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? ’ என்ற திகைப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கே வந்திருந்தவர்கள் கூறிய சம்பவங்கள் நித்யானந்தரின் இறை சக்திக்கு சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தன. ஸ்ரீ நித்ய ஞானானந்தா கூறியது இது:

    நித்யானந்தரின் பக்தரான மருத்துவர் ஒருவர் தன்னுடைய மருத்துவமனைக்கு வந்து ஆசி வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ள அந்த இடத்துக்கு செல்கிறார் நித்யா. குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பெறுவதற்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை அது. நித்யானந்தர் அங்கே போய் நுழைந்ததும் ஒரு பெண் ஓடி வந்து அவர் பாதங்களில் விழுந்து ” எனக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை; தாங்கள் அருள் புரிய வேண்டும் ” என்று கேட்க, நித்யாவும் “நடக்கும் ” என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுகிறார்.

    அந்தப் பெண் அந்த மருத்துவமனைக்கு நித்யானந்தரை அழைத்து வந்த மருத்துவரின் உதவியாளர். அந்தப் பெண்ணுக்கு சந்தேகம். நாம் சொன்னதை ஸ்வாமி சரியாகக் காது கொடுத்துக் கேட்டது போல் தெரியவில்லையே? போகிற போக்கில் “நடக்கும் ” என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட்டுச் சென்று விட்டாரே?

    நித்யானந்தர் சில வார்டுகளைப் பார்த்து விட்டுத் திரும்பும் போது சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் மீண்டும் அவர் எதிர்பாராதபடி அவர் காலில் விழுந்து முன்பு சொன்னதையே சற்று அழுத்தமாகவும், உருக்கமாகவும் சொல்கிறார். அப்போதும் “நடக்கும் ” என்று சொல்லிவிட்டு வேறு அறைகளுக்குச் செல்கிறார் நித்யா.

    அப்போதும் அந்தப் பெண்ணுக்குத் திருப்தி இல்லை. ஸ்வாமி நாம் சொன்னதைக் கேட்டது போலவே தெரியவில்லையே? நாம் சொல்லி முடிப்பதற்குள்ளேயே ’ நடக்கும் ’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டுப் போகிறாரே?

    ஸ்வாமியிடம் இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்று அதற்கான தருணத்தைப் பார்த்து அவர் மருத்துவமனையை விட்டுக் கிளம்பி காரில் ஏறச் செல்லும்போது தடாலென்று அவர் காலில் விழுந்து கால்களை கெட்டியாகப் பிடித்து கொள்கிறார்.

    இப்படிச் சிலர் தன் மீது கொரில்லா அட்டாக் நடத்துவது பற்றி நித்யானந்தரே ஒரு உரையில் குறிப்பிட்டார். அவர் எப்போதும் சமாதி நிலையிலேயே இருப்பவர் என்பதால் இப்படி எதிர்பாராமல் விழும்போது அவரே தடுமாறி விழுந்து விடக் கூடும்.

    இந்த சமாதி விஷயத்தில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. பதஞ்சலியின் யோக சூத்திரத்தின் முதல் பாதமான சமாதி பாதத்தின் இறுதியில் வரும் 51-ஆவது ஸ்லோகம் “தஸ்யபி நிரோதே ஸர்வநிரோதன் நிர்பிஜ ஸமாதி ” என்பது. நிர் என்றால் தவிர, தவிர்த்த என்று பொருள். பிஜ என்றால் விதை. இந்த நிர்பிஜ சமாதிதான் நித்யானந்தர் கூறும் நிர்விகல்ப சமாதி. மீண்டும் தான் கிளம்பிய இடத்துக்கே திரும்பிச் செல்வதற்கான விதைகள் எதையும் கொண்டிராத ஒன்றிணைதல் என்பது இதன் பொருள்.

    யோக சூத்திரத்தின் இரண்டாம் பாகம் சாதனா பாதம். இதில் க்ரியா யோகம், அஷ்டாங்க யோகம் என்று இரண்டு யோகங்கள் கூறப்படுகின்றன. இந்த அஷ்டாங்க யோகம் எட்டு பாதைகளைக் கூறுகிறது. இவை படிகள் அல்ல; பாதைகள் அல்லது கிளைகள் என்றார் நித்யா. அதாவது, இந்த எட்டு நிலைகளையும் ஒருவர் ஒவ்வொரு படியாகச் சென்று கடப்பதில்லை; இந்த எட்டும் ஒரே சமயத்தில் பின்பற்றப்பட வேண்டியவை. ஒரு தாமரையின் இதழ்களைப் போல என்று சொல்லலாம்.

    யமம் : கட்டுப்பாடு, அகிம்சை போன்றவை

    நியமம் : சுத்தம் போன்றவை

    ஆசனம்: ஆசனம்

    பிராணாயாமம் : சுவாசப் பயிற்சி

    ப்ரத்யாஹரா : புலனடக்கம்

    தாரணா : கவனத்தை ஒருமுகப்படுத்துதல்

    தியானம் : தியானம்

    சமாதி : சம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டு இறைசக்தியோடு ஒன்றுதல்.

    ஆக, சமாதி பாதத்தில் குறிப்பிடப்படும் சமாதியும், அஷ்டாங்க யோகத்தில் வரும் எட்டாவது உச்சநிலையான சமாதியும் ஒன்றா என்பதுதான் என்னுடைய சந்தேகம். அடுத்த முறை நித்யானந்தரைப் பார்க்கும்போது கேட்க வேண்டும் என்று இருக்கிறேன்.

    தனது உரையில் நித்யா குறிப்பிட்டார், இந்த உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்களால் இன்று பின்பற்றப்படும் ஒரே ஆன்மீகவாதி பதஞ்சலி என்று. மத, இன, தேச வேறுபாடுகள் இல்லாமல் பதஞ்சலியின் யோக வழிமுறைகள்தான் இன்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு ஆச்சாரியார்களால் கோடிக்கணக்கான மக்களுக்கு போதிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் தியானம் மற்றும் யோகா வகுப்புகளின் ஆதி ஆசான் பதஞ்சலிதான். ஆனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த ஞானியைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை. இவரே மேற்குலகில் தோன்றியிருந்தால் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் தெரிந்த மகா குருவாக அறியப்பட்டிருப்பார்.

    யோகத்தை ஒரு விஞ்ஞானமாக, ஒரு தொழில்நுட்பமாக (டெக்னாலஜி என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார் நித்யா) மாற்றிக் கொடுத்தவர் பதஞ்சலி. யோகம் என்பது பதஞ்சலிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்வேறு குருமார்களால் பின்பற்றப்பட்டு வந்தது; குரு-சிஷ்ய பாரம்பரியத்தில் வழிவழியாக வாய்ச் சொல்லாகவும், நேரடிப் பயிற்சியின் மூலமாகவும் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் அது முழுமையாக இல்லாமல் சிதறலாக இருந்தது. உதாரணமாக, புத்தரின் எட்டு கோட்பாடுகளுக்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்துக்கும் ஒற்றுமை உண்டு. சரியான புரிதல், சரியான நோக்கம் ( இந்த இரண்டும் ஞானம் என்ற பிரிவில் அடங்கும்), பேச்சு, செயல், வாழ்வு ஆகியவற்றில் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தல் (இந்த மூன்றும் அறவுணர்வு என்ற பிரிவில் அடங்கும்), முயற்சி, அறிதல், ஆழ்ந்து கவனித்தல் (இந்த மூன்றும் உளவியல் பிரிவு) என்பவையே அந்த எட்டு கோட்பாடுகள். வெறும் இந்த எட்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு நம்மால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. அதற்குத்தான் ஆன்மீக வழிநெறியில் குருவின் தேவை வலியுறுத்தப்படுகிறது. உதாரணமாக, புத்தர் கூறும் ஆழ்ந்து கவனித்தல் என்பதே தியானம் எனப்படுகிறது.

    ததாகதர் சித்தார்த்தனாக லும்பினி அரண்மனையை விட்டு வெளியேறிய போது அவர் மகத ராஜ்ஜியத்தின் (இப்போதய பிகார்) தலைநகரான ராஜக்ருஹத்துக்கு அருகிலுள்ள கானகங்களில் வசித்த அரத கலமா, உத்தக ராமபுத்தா ( Arada Kalama, Uttara Ramaputta) என்ற இரண்டு குருநாதர்களை ஒருவர் பின் ஒருவராக சந்திக்கிறார்ர். ராமபுத்தாவிடம் அப்போது எழுநூறு மாணவர்கள் இருந்தனர். அவர் தனது தியான முறையின் மூலம் மனதையும், மனதின் சலனங்களையும் தாண்டியவராகக் கருதப்பட்டார். சிந்தனையும் இல்லை; சிந்தனையற்ற நிலையும் இல்லை என்ற நிலையை எய்தியவர் ராமபுத்தா.

    இந்த இருவரிடமும் கற்ற தியானத்தின் மூலமும் தான் தேடிய ஞானம் கிடைக்காததால் இவர்களைப் பிரிந்து வேறு இடங்களுக்குச் செல்கிறார் ததாகதர் என்பது சரித்திரம்.

    நான் சொல்ல வந்தது என்னவென்றால், பதஞ்சலிக்கு முன்பே பல்வேறு குருமார்களும், ஆச்சாரியார்களும் பின்பற்றிக் கொண்டிருந்த பல்வேறு யோக, தியான முறைகளை பதஞ்சலியே முறைப்படுத்தி அதை ஒரு விஞ்ஞானமாக, தொழில்நுட்பமாக மாற்றினார்.

    இந்த இடத்தில் யோகம் என்றால் என்ன என்பது பற்றி சுருக்கமாக அறிவோம். பதஞ்சலி இதை நாலே வார்த்தைகளில் விளக்குகிறார்.

    ’ யோக சித்த வ்ருத்தி நிரோதா. ’ (சமாதி பாதத்தில் வரும் இரண்டாம் சூத்திரம் இது).

    Yogah Chitta Vritti Norodhah || (1 – 2)

    யோகா : ஒன்றாக இணைதல்; சித்தம் : மனம்; வ்ருத்தி : சலனம்/ செயல்படுதல்; நிரோதா : தடுத்தல். மனதின் சலனத்தைத் தடுத்து இறைசக்தியுடன் ஒன்றிணைதல்.

    நிரோதா என்ற வார்த்தையைப் புரிந்து கொண்டால் இதை இன்னும் சரியாக உள்வாங்கிக் கொள்ளலாம். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியபோது அதற்கான சாதனமாக நிரோத் என்ற ரப்பர் வினியோகிக்கப்பட்டதல்லவா? அதன் செயல்பாடு ஆணின் விந்து யோனிக்குள் சென்று கருத்தரித்து விடாமல் தடுப்பது. அதேபோல், யோகாவானது சித்தத்தின் அலைபாய்தலைத் தடுக்கிறது.

    இந்த இடத்தில் இது பற்றிய ஒரு அழகான ஜென் கவிதை ஞாபகம் வருகிறது.

    தெளிந்த மனம் வானத்தின் முழு நிலா.

    சில சமயங்களில் மேகங்கள் அதை மறைக்கின்றன;

    ஆனாலும் அந்த மேகங்களுக்குப் பின்னே

    இருந்து கொண்டுதான் இருக்கிறது நிலா;

    அதேபோல் சிந்தனைகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்றன;

    வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும் அந்த

    சிந்தனைகளைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாய்?

    அதன் பின்னே உன்னுடைய தெளிந்த மனம்

    அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது.

    ஸ்யூங் சான்.

    நித்யானந்தரின் சமாதி நிலை என்றதும் பதஞ்சலிக்குப் போய் இவ்வளவு தூரம் வந்து விட்டேன். இந்த இடத்தில் வேறோர் விஷயம். திடீரென்று முந்தாநாள் காலையில்தான் எனக்கு இந்த விஷயங்களெல்லாம் ஞானோதயமாக உதித்தன என்று யாரும் கருத வேண்டாம். எனக்கு பத்து வயதிலிருந்தே ஆன்மீகத் தேடல் இருந்து வந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது எங்கள் ஊர் சிவன் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சிலைக்கு முன்னே போய் மணிக்கணக்கில் நின்று கொண்டிருப்பேன். வாரந்தோறும் மௌன விரதம் இருப்பேன். பிறகு கல்லூரிப் பருவத்தில் பல ஆன்மீகக் கட்டுரைகளை நிவேதிதா என்ற பெயரில் எழுதி வந்தேன். சமஸ்கிருத மூல நூல்களைப் படிப்பதற்காக சம்ஸ்கிருதமும் கற்றுக் கொண்டேன். ஒருமுறை மகாவீரர் பற்றிய என்னுடைய கட்டுரை ஒன்று இந்திய ஜைன மகாசபையால் பெரிதும் பாராட்டப்பட்டு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு கிடைத்தது. அப்போது எனக்கு வயது 18. ஆண்டு: 1971. பிறகுதான் சிவா கூறியது போல் மார்க்சீய அண்ணன்களால் மார்க்சீயத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டேன். அப்போது 24 வயது இருக்கும். அந்த அண்ணன்களில் முக்கியமான ஒருவர் இப்போது தமிழ் சினிமா இயக்குனர்களின் டீ ஷர்ட்டுகளில் தென்படுகிறார். கூபாவைச் சேர்ந்தவர்.

    இப்போது மீண்டும் ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறேன். பயணம் ஒரு வட்டமாகி விட்டது.

    இப்போது நித்யானந்தரின் காலில் விழுந்த பெண்மணியிடம் வருவோம். அவர் மருத்துவமனையை விட்டு காரில் ஏறச் சென்ற போது அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அந்தப் பெண் “எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஸ்வாமி; எனக்குக் குழந்தை வரம் தாருங்கள் ” என்று தழுதழுத்த குரலில் மீண்டும் சொல்ல அப்போதும் “நடக்கும் ” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்று விடுகிறார் நித்யானந்தர்.

    சரியாக மூன்று மாதங்களில் அந்த மருத்துவமனையிலிருந்து ஒரு பதற்றமான, யாருமே எதிர்பார்க்காத அந்த அதிர்ச்சியான செய்தி நித்யானந்தரின் பிடதி ஆசிரமத்துக்கு வந்தது.

  14. கடவுளைக் கண்டேன் (8)

    அவர் பெயர் பழனியப்பன். ஒரு தேசிய வங்கியில் பெரிய பதவியில் இருந்தவர். நித்யானந்தரின் மீது பக்தி கொண்டவர். அடிக்கடி பிடதி ஆசிரமத்துக்குச் செல்பவர். ஒருநாள் அவர் தாங்கித் தாங்கி நடப்பதைப் பார்த்து அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் பிரதாப் ரெட்டி “என்ன விஷயம்? ” என்று விசாரித்து ” மருத்துவமனைக்கு வாருங்கள்; சோதித்துப் பார்க்கலாம் ” என்று சொல்லியிருக்கிறார். அப்பல்லோவுக்குப் போனால் ஒரு லட்சம் இரண்டு லட்சம் ஆகிவிடும் என்று நினைத்து பழனியப்பன் அந்தப் பக்கம் செல்லவில்லை. அதன் பிறகும் ஒருமுறை பழனியப்பனை அதேவிதமாகப் பார்த்த டாக்டர் ரெட்டி அவரைக் கையோடு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் பெரிய பிரச்சினை இருப்பது புரிந்தது. எலும்பு நிபுணர்களும், நரம்பு நிபுணர்களும் பரிசோதித்த பிறகுதான் அதைப் பற்றிய சரியான முடிவுக்கே வர முடியும் என்று தெரிகிறது. பின்னர், எல்லாவிதமான சோதனைகளும் செய்யப்படுகின்றன. முடிவில் பழனியப்பனின் வயிற்றில் 32 செ.மீ. உயரம், 19 செ.மீ. நீளம், 12.6 செ.மீ. அகலத்துக்கு ஒரு கட்டி (Tumor) இருப்பது தெரிய வருகிறது. அந்தக் கட்டியின் தன்மை என்னவென்றால், அது அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் அந்தக் கட்டி வெடித்து விடும். வெடித்தால் உயிர் போய் விடும்.

    அறுவை சிகிச்சை செய்துதான் கட்டியை எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்தால் பிழைப்பதற்கான நம்பிக்கை சுத்தமாக இல்லை. நீங்கள் ஒரு D.O.T. யாகத்தான் கிடக்க வேண்டும்.

    அது என்ன DOT?

    மருத்துவர்களின் பரிபாஷையில் டிஓடி என்றால் டெத் ஆன் டேபிள். அதுவும் 25 மணி நேர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். 30 யூனிட் ரத்தம் தேவை.

    சிகிச்சை செய்யாவிட்டால் அதிக பட்சம் ஒரு ஆண்டு உயிரோடு இருக்கலாம். அந்த அளவுக்கு முதுகெலும்பு முப்பத்திரெண்டையும் சிதைத்து ஊடுருவி விட்டது கட்டி. கிட்டத்தட்ட சுரைக்காய் அளவு கட்டி.

    அப்போது நித்யானந்தர் அமெரிக்கா சென்றிருக்கிறார். அந்தச் சமயம் அவர் இருந்தது சான் ஃப்ரான்சிஸ்கோவில். நித்யாவை தொடர்பு கொள்கிறார் பழனியப்பன். “சாமி, நிறைய பேரை நீங்கள் குணப்படுத்தி இருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை குணப்படுத்த வேண்டும் ” என்று விண்ணப்பித்து தன் பிரச்சினையை சொல்லியிருக்கிறார்.

    அதற்கு பழனியப்பனிடம் பரமஹம்ச நித்யானந்தர் கூறிய வார்த்தைகள்: “கவலையை விடுங்கள். நேராக உங்கள் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். சரியாக அரை மணி நேரத்தில் I will enter your body and cleanse your tumor.” இதே வார்த்தைகள். நித்யானந்தர் தினந்தினம் நிகழ்த்தும் ஆயிரக் கணக்கான அற்புதங்களை அருகில் இருந்து பார்த்தவர்தான் பழனியப்பன். ஆனாலும் அப்போது அந்த நிமிடம் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ’ என்னது, நம்முடைய உடம்புக்குள் சாமி புகுந்து சரி பண்ணுவதாவது ’ என்று நினைத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து படுக்கையில் படுத்து விட்டார்.

    சிறிது நேரத்தில் அவருக்கு ஏதோ ஒரு அமானுஷ்யமான உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த அறையில் வேறு யாரோ இருப்பதைப் போன்ற உணர்வு. ஆனால் உருவம் தெரியவில்லை. பிறகு அவரது பாதங்களின் ஊடே ஏதோ ஒரு சக்தி அவருடைய உடம்புக்குள் இடுப்பு வரை செல்வதை உணர்கிறார். இந்த அதிசய சம்பவம் நடந்து முடிந்த அந்தக் கணமே பழனியப்பனுக்கு அதுவரை அவரிடம் இருந்த வலி, அயர்ச்சி, சோர்வு எல்லாம் காணாமல் போயிற்று. மிகுந்த புத்துணர்ச்சியுடன் படுக்கையிலிருந்து எழுந்து கொள்கிறார். அப்போது அங்கிருந்த அவரது மனைவியும், அந்த அறையில் தங்கள் இரண்டு பேரைத் தவிர வேறு ஒருவரும் இருந்தது போல் தான் உணர்ந்ததாக சொல்கிறார்.

    மறுநாள் பழனியப்பன் சோதனைக்குச் சென்ற போது கட்டியின் வளர்ச்சி நின்று போயிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிசயிக்கிறார்கள். பிறகு சில தினங்கள் சென்று மீண்டும் சோதித்துப் பார்த்தபோதும் அதே நிலை. கட்டி வளரவே இல்லை. சாமி, பழனியப்பனின் உடம்புக்குள் புகுந்து கட்டியை அப்படியே உறையச் செய்து விட்டார். இந்த அதிசயம் நடந்து இப்போது ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. உயிருக்கு சில தினங்களே கெடு விதிக்கப்பட்டிருந்த பழனியப்பன் இப்போது ஒரு இளைஞனைப் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

    அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் ரெட்டி இப்போதும் நித்யானந்தரின் ஆசிரமவாசிகளைச் சந்திக்க நேர்ந்தால் வியப்பும் ஆர்வமுமாக “அந்தப் பழனியப்பன் இன்னமும் இருக்கிறாரா? ” என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    அந்தப் பழனியப்பன்தான் இப்போது பிடதி ஆசிரமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக தினமும் 16 மணி நேரம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பவர். இப்போது அவர் பிரம்மச்சாரியும் கூட. சாமி அவருக்கு சூட்டிய பெயர் நித்ய சேவானந்தா. சேவானந்தாவிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம். சாமியின் அதிசயம்.

    ***

    சென்ற வாரம் நித்யாவை பாண்டிச்சேரியில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது அடியேனின் நரகத்திலிருந்து ஒரு குரல் மற்றும் தாந்தேயின் சிறுத்தை இரண்டு நூல்களையும் படித்து விட்டதாகக் கூறினார். அப்போது நான் கடவுள் பற்றிய பேச்சு வந்தது. படத்தில் மூன்று குறைகள் இருந்தன; அதைத் தவிர்த்து படம் தனக்குப் பிடித்திருந்தது என்று சொன்னார் நித்யா. அகோரிகள் யாரும் மரணத்தைத் தீர்வாகத் தர மாட்டார்கள். எவ்வளவோ சக்தி வாய்ந்த அகோரிக்கு அந்த வில்லனின் மனதை மாற்றி அவனை நல்லவனாக்குவதா பெரிய கஷ்டம்? இது முதல் குறை. இரண்டாவது, அகோரிகள் யாரும் இப்போது பிணத்தைத் தின்பதில்லை. அதெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை. நித்யாவும் அகோரி பாரம்பரியத்தைச் சேர்ந்தவரே. மூன்றாவது, அகோரிகள் யாரும் தங்களுடைய பூர்வாசிரமத்தின் சொந்தங்களை அப்படி வெறுப்புடனும், அசூயையுடனும் நடத்த மாட்டார்கள்.

    ***

    நித்யானந்தரின் கருணை மழையில் நீங்கள் நனைய விரும்பினால் 14.2.2009 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை நடக்கும் கல்பதரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். கல்பதருவில் நீங்கள் கேட்ட வரத்தைத் தருவார் நித்யா. நடைபெறும் இடம்: ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி, வேலப்பன் சாவடி, சென்னை – 73.
    தொடர்புக்கு: 94449 78879, 94440 19791, 98403 40250,
    94449 08071, 98415 08994, 98419 71817, 94449 09066
    மேலும் விபரங்களுக்கு: http://www.nithyananda.org
    27.1.2010.
    6.30 p.m.

    Charu nivethitha-

  15. கடவுளைக் கண்டேன் : நித்யானந்தம்… பரம நித்யானந்தம்

    சாரு நிவேதிதா

    சீனிவாசனும் நானும் பாண்டிச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் பரமஹம்ஸ நித்யானந்தரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். சீனிவாசனுக்கு இது போன்ற விஷயங்களில் அவ்வளவாக நம்பிக்கை இல்ல ; அல்லது , அக்கறை இல்லை என்று சொல்லலாம். அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டு வந்தார்.

    முக்கியமாக நித்யானந்தரின் ஜீவன் முக்தி என்ற புத்தகம் ஒரு அவதார புருஷரால் மட்டுமே எழுதப் பட்டிருக்க முடியும் என்றேன்.

    அவர் ’ ஓகோ ’ என்று தலையாட்டினார்.

    அதன் பிறகு அவர் கேட்கிறாரோ இல்லையோ , நாம் சொல்ல நினைத்ததைச் சொல்லி விடுவோம் என்று அது பற்றிப் பேசினேன். அந்தப் புத்தகத்தைப் படித்து அதை ஓரளவுக்காவது பின்பற்றினால் இந்த வாழ்க்கை நித்யானந்தமாக இருக்கும் என்பதில் எனக்கு ஒரு துளியும் சந்தேகம் ஏற்படவில்லை. அது மட்டுமலலாமல் அவர் மிகவும் சுவாரசியமாகவும் பேசுகிறார். உதாரணமாகப் பாருங்கள். ஒரு இடத்தில் அவர் “ நான் உங்களுக்கு ’ அஹம் ப்ரும்மாஸ்மி ’ ( நான் கடவுள்) என்பதை போதிக்க வரவில்லை ; தத்வமஸி ( நீயே கடவுள்) என்பதை போதிக்கவே வந்திருக்கிறேன் ” என்கிறார். இரண்டுமே நமக்குத் தெரிந்ததுதான் என்றாலும் அவர் அதை வேறு விதமாகக் கூறுகிறார்.

    இன்னொரு உதாரணம். ஒரு பெண்மணி அவரிடம் ” உங்கள் சொற்பொழிவுகளில் ஓஷோவின் சாயல் தெரிகிறதே ? ” என்று கேட்கிறார். உடனே பரமஹம்ஸ நித்யானந்தர் சொல்கிறார்: “ ஓஷோவின் சாயல் என்னிடம் இல்லை ; உங்களிடம்தான் இருக்கிறது. நீங்கள் ஓஷோவைப் படித்திருக்கிறீர்கள். அதனாலேயே என்னிடம் உங்களுக்கு ஓஷோவின் சாயல் தெரிகிறது. அதேபோல் ராமகிருஷ்ணரைப் படித்திருந்தால் ராமகிருஷ்ணரின் சாயல் தெரியும்… ”

    இப்படியே சொல்லிக் கொண்டு போகும் நித்யானந்தர் கடைசியில் “ யாருடைய சாயலும் என்னிடம் இல்லை ; ஆனால் எல்லோருடைய சாரமும் என்னிடம் இருக்கிறது ” என்று முடிக்கிறார்.

    இதற்கும் சீனிவாசனிடமிருந்து வந்தது ஒரு ஓகோ.

    சரி , இதையெல்லாம் விட்டு விடுங்கள். அவர் ஒரு அவதார புருஷர் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். இதை நீங்களே அவரிடம் சோதித்துப் பார்க்கலாம். அவர் ஒரு புத்தகத்தைப் படிக்கிறார். 1000 பக்க புத்தகம். எவ்வளவு விரைவாகப் படித்தாலும் அதை முடிக்க எப்படியும் ஒரு வாரமோ பத்து நாளோ ஆகும். ஆனால் நித்யானந்தர் அந்த 1000 பக்கப் புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் ஐந்து நிமிடம். அப்படியே அவருடைய கண்களும் மனமும் அந்தப் புத்தகத்தை ஒரே பார்வையில் ஸ்கேன் செய்து விடுகின்றன. இது எப்படி நமக்குத் தெரியும் என்றால் , அவர் அந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். வரிக்கு வரி மேற்கோள் காட்டுகிறார். எந்தப் பக்கம் என்று சொல்லுகிறார். இந்த ஒரு விஷயத்துக்காகவாவது அவரை நாம் மகான் என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

    அதற்கும் சீனிவாசனின் பதில் , ஓகோ.

    நான் அலுத்துப் போய் விட்டேன். சிலரிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. யாராவது கோடிக் கணக்கான மக்களுக்குத் தெரிந்தவராகவும் , வெகுஜன ஊடகத்தில் பிரபலமாகவும் இருக்கிறார் என்றால் அவர் ஒரு சாதாரணராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து விடுகிறார்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. எதிரே ஒரு காரில் எங்கள் எதிரே நித்யானந்தர் சென்று கொண்டிருந்தார். உடனே எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் விசாரிக்கிறேன். அவர் அப்போது வேறு எங்கோ கர்னாடகாவில் தங்கி இருக்கிறார். நான் மட்டும் பார்த்திருந்தால் என் கண்கள் பொய் சொல்லும் என்று சொல்லலாம். சீனிவாசனும் பார்த்தாரே ?

    சீனிவாசன் உண்மையிலேயே மிரண்டுதான் போய் விட்டார்.

    நித்யானந்தரின் இணைய தள முகவரி: http://www.dhyanapeetam.org/

    தொடர்பு முகவரி: http://www.dhyanapeetam.org/web/Contact.asp

  16. கடவுளைக் கண்டேன் – வரம் தரும் கல்பதரு

    முதலில் எனக்கு நடந்த அதிசயத்தைச் சொல்லி விட்டு அந்த மருத்துவமனை உதவியாளரிடம் வருகிறேன்.

    ஒரு சில அசாதாரணமான மனிதர்களின் அசாதாரணமான பழக்க வழக்கங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். உதாரணமாக, சில சூமோ வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்களின் உணவுப் பழக்கம். காலையில் 10 முட்டை, ஒரு கிலோ மாமிசம், இரண்டு லிட்டர் பால்; மதியம் பத்து கோழி, 20 முட்டை, 2 கிலோ காய்கற்கள் என்று இப்படியாகப் போகும் அவர்களுடைய உணவுப் பட்டியல். அப்படி ஒரு நீச்சல் வீரர் சென்ற முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஏழெட்டு தங்கப் பதக்கங்களை தனி ஆளாக அள்ளியதையும் நாம் அறிவோம். அதே போல் என்னைப் பீடித்திருந்தது காமப் பசி. சுமார் 15 வயதிலிருந்து இந்த 56 வயது வரை சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது அந்தத் தீ. நானும் அதை ஒரு குறையாகவும் எண்ணவில்லை. மேலே குறிப்பிட்ட அசாதாரணங்களைப் போல் இதுவும் ஒரு அசாதாரணம் என்று நினைத்து அதனுடனேயே ஒத்து வாழப் பழகி கொண்டேன். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை. காமம் புசிக்க கடைக்கா செல்ல முடியும்?

    நிச்சயமாகச் சொல்கிறேன். என்றைக்குமே அதை நான் ஒரு குறையாக நினைத்ததில்லை.

    சென்ற மாதம் நடந்த கல்பதரு நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக நித்யானந்தரை மிக நெருக்கத்தில் தரிசித்தேன். முதல் முறை, இந்த ஆண்டு (2009) ஜனவரியில் நடந்த புத்தக விழாவில் நேருக்கு நேர் பார்த்திருந்தேன். ஆனால் அப்போது அவருடைய பெயரைத் தவிர வேறு எதுவும் அவரைப் பற்றித் தெரியாது. இந்த இரண்டு தரிசனங்களுக்கும் இடையில் பாண்டிச்சேரியிலிருந்து வரும் வழியில் நெடுஞ்சாலையில் கிடைத்த தரிசனம் இதிகாசம் புராணம் போன்றவைகளில் மட்டுமே காணக் கூடியது. மனித உருவத்தில் இருக்கும் ஒருவர் ஒரே சமயத்தில் உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு மனிதர்களுக்கு ஸ்தூல வடிவிலேயே காட்சியளிக்கும் அற்புதம் அது.

    யூஜின் ஓ நீல் எழுதிய நாடகம் ஒன்று Desire Under the Elms. இந்த நாடகத்தை நீங்கள் படித்திருக்காவிட்டால் இதன் கதைச் சுருக்கத்தையாவது படித்து விடுங்கள். மனித மனதில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஃப்ராய்டியன் இச்சையானது எவ்வளவு தூரமெல்லாம் சென்று, என்னவெல்லாம் செய்யக் கூடியது என்பதை கிரேக்க நாடகங்களுக்கு இணையாக எழுதியிருக்கிறார் யூஜின் ஓ நீல். சுருக்கமாகச் சொல்வதானால் , இந்த நாடகத்தை நீட்ஷேவின் டயோனீஷிய அனுபவம் ( Dionysian experience) என்று கூறலாம். என்னுடைய எழுத்துக்களில் பரிச்சயமுள்ளவர்கள் அவற்றில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் டயோனீஷியன் அனுபவம் பற்றிப் புரிந்து கொள்ளலாம். எல்ம் மரத்தின் கீழ் பீறிட்ட இச்சை பற்றி ஓ நீல் எழுதியது 1924-இல். ஆனால் கல்ப விருட்சத்தின் கீழ் கிடைக்கும் வரம் பற்றி வியாசர் எழுதி 3000 ஆண்டுகள் ஆகிறது.

    (Kalpataru, the divine tree of life being guarded by mythical creatures Kinnara and Kinnari, flying Apsara and Devata. 8th century Pawon temple, Java, Indonesia)

    கல்பதருவைப் பற்றி ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. விறகு வெட்டி ஒருவன் காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும்போது மிகுந்த களைப்பின் காரணமாக ‘இந்த மரங்களெல்லாம் தானே வெட்டி அடுக்கிக் கொள்ளக் கூடாதா? ’ என்று நினைத்தானாம். உடனே அவன் நினைத்தது போலவே மரங்களெல்லாம் விறகுகளாக மாறி, கட்டப்பட்டு அவன் முன்னே கிடந்தன. அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, தான் அமர்ந்திருக்கும் மரம் கல்பதரு என்று. கல்பதரு என்றால் நினைத்ததை எல்லாம் நடத்தித் தரும் மரம் என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.

    ’ ஆஹா! இப்போது ஒரு அழகான பெண் இருந்தால் எப்படி இருக்கும்! ’ என்று நினைக்கிறான். உடனே அங்கே ஒரு பேரழகி அவனருகே அமர்கிறாள். பிறகு அவன் ஒரு அரண்மனை வேண்டும் என்று நினைக்கிறான். அரண்மனையும் தோன்றுகிறது. அரண்மனையில் அவனுக்கு ஏகப்பட்ட வேலையாட்கள் பணி செய்யக் காத்திருக்கிறார்கள். அவனுக்கு அற்புதமான விருந்து பரிமாறப்படுகிறது.

    இப்படியே அவன் நினைப்பது எல்லாமே அங்கே நடந்து கொண்டிருக்கிறது. அப்போது சூரிய அஸ்தமன நேரம் நெருங்குகிறது. அப்போது அவனுக்குள் ஒரு எண்ணம் தோன்றுகிறது. நாம் இருப்பதோ ஒரு காடு. இருள் வேறு சூழ்ந்து விட்டது. இப்போது ஒரு புலி வந்து நம்மை அடித்துத் தின்று விட்டால் என்ன செய்வது?

    எண்ணத்தின்படியே புலி அந்த விறகு வெட்டியை அடித்துத் தின்கிறது.

    ***

    பரமஹம்ஸ நித்யானந்தரின் கல்பதரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மகாபாரதத்தில் வரும் வரம் தரும் கல்பதருவே இந்தக் கல்பதரு நிகழ்ச்சியும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஞானானந்த ஆச்சாரியார் தனது உரையில் குறிப்பிட்ட சில சம்பவங்களைக் கேட்ட பிறகுதான் இந்த நிகழ்ச்சி பற்றி எனக்குச் சரியாகப் புரிந்தது. ஆனால் சில பேர் மேலே குறிப்பிட்ட விறகுவெட்டியைப் போல் இந்த வரத்தை வீணாக்கி விடுகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். உதாரணமாக, நித்யானந்தர் என்ற கல்பதருவிடம் வந்த ஒருவன் “நான் இந்த நாட்டின் பிரதம மந்திரி ஆக வேண்டும் ” என்று கேட்டானாம். அதற்கு நித்யானந்தர் “முதலில் உன்னுடைய அழுக்கான வேஷ்டியைத் துவைத்துக் கட்டு; பிறகு கேள் அந்த வரத்தை ” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

    இது பற்றித் தனது உரையில் சற்று வருத்தத்துடனே குறிப்பிட்டார் நித்யானந்தர். ஒரு அரசன் தன் பிரஜைகளிடம் அவர்கள் என்ன கேட்டாலும் தருவதாகக் கூறுகிறான். ஆனால் அவனிடம் வருபவர்களோ அன்றைய சமையலுக்கு வேண்டிய அரைக் கிலோ கத்தரிக்காயை மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். அதைப் போலவே என்னிடமும் அரைக்கிலோ கத்தரிக்காயை வாங்கிச் செல்லவே நீங்கள் பிரியப்படுகிறீர்கள். கத்தரிக் காய் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் கேட்டதைத் தருகிறேன். அதோடு மேலும் கொஞ்சம் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதியுங்கள். வேறு ஒன்றும் இல்லை. என்னிடமுள்ள தீபத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும். நீங்கள் அனுமதித்தால் மட்டுமே அதை என்னால் செய்ய முடியும்.

    ஆம். அவர் நம்முடைய வாழ்வில் ஒளியை ஏற்ற நாம் அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடவுளாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார் நித்யானந்தர். ஸ்வாமியை அமெரிக்காவில் ஒரு தம்பதி சந்தித்திருக்கின்றனர். அவர்களின் குழந்தைக்கு ஆட்டிஸம் பிரச்சினை. பிறந்ததிலிருந்தே ஒரு வார்த்தை பேசவில்லை. அந்தத் தம்பதி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தெலுங்கும், ஆங்கிலமும் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.

    நித்யானந்தரிடம் தங்கள் குழந்தையை சொஸ்தப்படுத்துவதற்காக அழைத்து வந்திருக்கின்றனர். அந்தப் பிள்ளைக்கு எட்டு வயது இருக்கும். பிள்ளையின் தலை மீது தனது கரங்களை வைக்கிறார் நித்யா.

    ” எட்ரா கையை… ”

    சுத்தமான ‘சென்னைத் ’ தமிழில் சொன்னதாகச் சொல்கிறார் நித்யா. பிள்ளை கூறிய வார்த்தைகளை ஸ்வாமியால் எங்களிடம் திருப்பிச் சொல்ல முடியவில்லை. அதனால் ’ சுத்தமான சென்னைத் தமிழ் ’ என்கிறார்.

    “ஏன் தம்பி கையை எடுக்கச் சொல்கிறாய்? உன்னை குணப்படுத்துவதற்காகத்தானே இதைச் செய்கிறேன்? ”

    ” எனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும். நீ கையை எட்ரா… ”

    மீண்டும் சென்னைத் தமிழ்.

    நித்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் ஏதாவது பேய் பிசாசா, ஆவியா என்ற சந்தேகம் தோன்றுகிறது. ம்ஹும். அப்படியிருக்க வாய்ப்பு இல்லை. அவதார புருஷர்கள் இருக்கும் பிரதேசத்தில் அம்மாதிரிப் பிரச்சினைகள் இருக்க வாய்ப்பில்லை. பிறகு அந்தப் பையனிடமே மீண்டும் மீண்டும் கேட்கிறார் நித்யா. இவ்வளவுக்கும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அந்தப் பிள்ளைக்கு சென்னைத் தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அதோடு பிறந்ததிலிருந்தே இப்போதுதான் முதல் முதலாகப் பேசுகிறான்.

    பிறகு ஸ்வாமி அந்தப் பிள்ளையைத் தொடர்ந்து கேட்ட பிறகு தெரிந்த விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவனின் ஆத்மா தான் சொஸ்தப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. போன ஜென்மத்தில் மிகவும் கசப்பான அனுபவங்களே கிடைத்திருக்கின்றன. எத்தனையோ பேருக்கு எவ்வளவோ கொடுத்தும் திரும்ப அந்த உயிருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அதனால் உலக வாழ்க்கையின் மீது கசப்பும் வெறுப்பும் மிகுந்த அந்த ஆத்மா இந்த ஜென்மத்தில் இந்த உலகத்துக்கு எதையுமே கொடுக்க விரும்பவில்லை; எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ள இஷ்டமில்லை.

    ” இப்போது உனக்கு எட்டு வயதுதான் ஆகிறது. இன்னும் 70 ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக் கொண்டால் அந்த 70 ஆண்டுகளும் நீ இப்படியே கஷ்டப்பட வேண்டுமா? அது தேவைதானா? ”

    ஸ்வாமி கேட்கிறார்.

    ” தயாராகத்தான் வந்திருக்கிறேன் ” என்கிறான் சிறுவன்.

    ” சரி, நீ இதைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருந்தாலும் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இது எவ்வளவு கஷ்டம்? மிக நல்ல மனிதர்களான அவர்களுக்கு இந்தச் சிரமம் தேவைதானா? ”

    “ அவர்கள் நல்லவர்கள் என்பதால்தான் அவர்களுக்கு மகனாகப் பிறந்தேன். ”

    ஆக, பரமஹம்ஸ நித்யானந்தர் சொஸ்தப்படுத்த நினைத்தாலும் அந்தச் சிறுவனின் ஆத்மா அதை விரும்பாததால், அவனுடைய வாழ்வில் ஒளி ஏற்றுவதற்கு அனுமதிக்காததால் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. இந்தச் சம்பவத்தை விவரித்து விட்டு நித்யா சொன்னார், அப்போதுதான் நான் ஒரு விஷயத்தை முதல் முதலாகப் புரிந்து கொண்டேன். ஒரு ஆத்மா தயாராக இல்லாவிட்டால் கடவுளால் கூட அந்த ஆத்மாவுக்கு எதுவும் செய்ய முடியாது.

    அதனால்தான் அவர் நம் ஒவ்வொருவரையும் இறைஞ்சுகிறார்; கெஞ்சுகிறார். என்னிடம் இருப்பதை உங்களுக்குத் தருவதற்கு அனுமதியுங்கள் என.

    ***

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கல்பதருவில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன். எல்லோரையும் சந்தித்து, எல்லோருடையை குறையையும் கேட்டு, எல்லோருக்கும் வரமளித்துக் கொண்டிருந்தார் நித்யானந்தர். இதில் அவர் பாகுபாடே பார்ப்பதில்லை. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் சரி; அத்தனை பேரையும் சந்திக்கிறார்; ஒவ்வொருவரிடமும் அவர்கள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்கிறார். கட்டி அணைத்துக் கொள்கிறார். அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதை வழங்குகிறார். என்னுடைய முறை வந்தது. ” நீங்கள் சாமியைப் பற்றி உங்கள் ப்ளாகில் எழுதியிருப்பது பற்றிக் கேள்விப்பட்டேன் ” என்று கூறி விட்டு “உங்களுக்கு என்ன வேண்டும்? ” என்று கேட்டார்.

    ( நித்யானந்தர் எப்போதும் நான் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை; தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது சாமி என்றே சொல்கிறார்).

    கல்பதருவின் கீழே நின்று கொண்டிருக்கிறேன். என்ன கேட்டாலும் கிடைக்கும். ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு நபருக்கு ஒரு வினோதமான பிரச்சினை. இரவு இரண்டு மணிக்கு அவருக்குத் தூக்கத்திலிருந்து விழிப்பு வரும். உடனே நாலு பெக் மது அருந்த வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு மேல் தூக்கம் வராது. மறுநாள் களைப்பாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. இதற்காகவே தினமும் மறக்காமல் பாட்டிலை வாங்கி வைத்துக் கொள்வது அவர் வழக்கம். பாட்டில் இல்லாத நாட்களில் பயங்கர பிரச்சினை.

    கல்பதரு நிகழ்ச்சியில் ஸ்வாமி அவருடைய ஆக்ஞா சக்கரத்தில் தனது கட்டை விரலை வைத்து தீட்சை அளித்திருக்கிறார். அன்றைய தினத்திலிருந்தே அவருடைய அந்த நடுநிசி மதுப் பிரச்சினை அவரிடமிருந்து அகன்று விட்டது.

    (நமது தேகத்தில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன.

    மூலாதார சக்ரம் : முதுகுத் தண்டின் அடிப்பகுதி .

    ஸ்வாதிஷ்டான சக்ரம் : நாபியிலிருந்து இரண்டு அங்குலம் கீழே.

    மணிப்பூரக சக்ரம் : நாபி .

    அனாஹத சக்ரம் : இரண்டு மார்புகளுக்கும் நடுவே.

    விஷுத்த சக்ரம் : தொண்டைக் குழி.

    ஆக்ஞா சக்ரம் : நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில்.

    சஹஸ்ரஹார சக்ரம் : உச்சந்தலை).

    கல்பதருவின் கீழே நின்று கொண்டிருந்த நான் என்னுடைய வாழ்வாதாரமான விருப்பங்களில் ஒன்றைக் கேட்டிருக்கலாம். அவந்திகாவின் வயிற்றுப் பிரச்சினை சரியாக வேண்டும். அவளால் பால் பழங்களைத் தவிர வேறு எதையுமே சாப்பிட முடியாத நிலை. சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லும் அளவுக்குப் பிரச்சினை ஆகிவிடும். எலி ஜூரம் என்று சொல்லப்படுகிற லெப்டோஸ்பைரோஸிஸ் வந்து தங்கி விட்டுப் போனதிலிருந்து அவளுக்கு இந்தத் தொல்லை.

    இலக்கியத்தைப் போலவே என் உயிரோடும் உணர்வோடும் கலந்த இன்னொரு விஷயம் இருக்கிறது; அது, பயணம். உலகம் பூராவும் சுற்றி வர வேண்டும் என்ற தீராத ஆசை. கேட்ட வரத்தைத் தரும் கல்பதருவிடம் என்னுடைய அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு கேட்டிருக்கலாம்.

    ஆனால், எல்லையற்ற பிரபஞ்ச சக்தி மனித உருவில் என் முன்னே நிற்கும் போது என்னால் எதையுமே யோசிக்க முடியாமல் போய் விட்டது.

    ப்ருஹத் ஜாபால உபநிஷத்தின் ஆறாவது பிரமாணத்தில் பரமாத்மா பற்றிய ஒரு அதியற்புதமான, கவித்துவம் ததும்பும் விளக்கம் வருகிறது:

    யத்ர ந ஸூர்யஸ்தபதி

    யத்ர ந வாயுர்வாதி

    யத்ர ந சந்த்ரமா பாதி

    யத்ர ந நக்ஷ்த்ராணி பாந்தி

    யத்ர நாக்நிர்தஹதி

    யத்ர ந ம்ருத்யு :

    ப்ரவிஸதி யத்ர ந துகாநி

    ப்ரவிஸந்தி ஸதாநந்தம் பரமாநந்தம் ஸாந்தம் ஸாஸ்வதம் ஸதாஸிவம்

    ப்ரஹ்மாதி வந்திதம் யோகித்யேயம்

    பரம் பதம்

    யத்ர கத்வா ந நிவர்தந்தே யோகிந:

    எங்கே ஆதவன் சுடுவதில்லையோ

    எங்கே காற்று வீசுவதில்லையோ

    எங்கே நிலா ஒளிர்வதில்லையோ

    எங்கே நட்சத்திரங்கள் மின்னுவதில்லையோ

    எங்கே நெருப்பு எரிப்பதில்லையோ

    எங்கே மரணமும் துக்கமும் நுழைவதில்லையோ

    எங்கே சென்ற யோகி திரும்புவதில்லையோ

    அதுவே

    எப்போதும் ஆனந்தமயமானதும்

    பரமானந்தமயமானதும்

    சாந்தமானதும்

    சாஸ்வதமானதும்

    எப்போதும் மங்களமயமானதும்

    ப்ரும்மா முதலிய தேவர்களும் வணங்குகின்றதும் ஆன

    யோகிகள் தியானிக்கின்ற பரமபதம்.

    இதையே கீதையில் கிருஷ்ணனும் கூறுகிறான்:

    ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக:

    யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம

    (15ஆவது அத்யாயம்: 6ஆவது ஸ்லோகம்)

    எந்த பரமபதத்தை அடைந்த பிறகு மனிதர்கள் ஸம்ஸாரத்துக்குத் திரும்புவதில்லையோ அந்த ஸ்வயம் ப்ரகாசமான பரமபதத்திற்கு சூரியன் ஒளி தருவதில்லை; சந்திரன் ஒளி தருவதில்லை; அக்னியும் ஒளி தருவதில்லை. அதுவே என்னுடைய மேலான ஸ்தானமான பரமபதம்.

    இப்படிப்பட்ட பரமானந்தத்தின் முன், நித்யானந்தத்தின் முன் நின்று கொண்டு நான் எதைக் கேட்பேன்? எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. இலக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைக் கேட்டு விட்டு இறங்கி விட்டேன். பிறகு பிரக்ஞை தெளிந்த போது அவந்திகாவிடம் ” நீயாவது உன் வயிற்றுப் பிரச்சினை பற்றிக் கேட்டாயா? ” என்று கேட்டேன். அவள், ’ இந்த ஜென்மத்திலேயே இறை சக்தியை உணர வேண்டும் ’ என்று கேட்டிருக்கிறாள். அதற்கு ஸ்வாமி “ரொம்ப ரொம்பப் பெரிய விஷயமாக இருக்கிறதே; ம்… நடக்கும் ” என்றாராம்.

    ஆனால் பாருங்கள்; அன்றைய தினத்திலிருந்தே என்னை இத்தனை ஆண்டுகளாகப் படுத்திக் கொண்டிருந்த அந்தக் காமம் என்ற நோய் என்னை விட்டு அகன்று விட்டது. சதா சர்வ காலமும் ரதி சுகத்தையே எண்ணிக் கிடந்த மனம் இப்போது சாந்தப்பட்டு விட்டது. இப்போது என்னால் எந்தப் பெண்ணையும் சகஜமாகப் பார்க்கவும் பேசவும் முடிகிறது.

    இது பற்றி சில நண்பர்களிடம் சொன்ன போது அந்த அறிவாளிகள் ’ உங்களுக்கு வயதாகி விட்டது ’ என்றார்கள். அடக் கடவுளே! முதல் நாள் வரை இருபது முட்டையும், பதினைந்து கோழியும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதனின் ஆக்ஞா சக்ரத்தில் நித்யானந்தர் கை வைத்த தருணத்திலிருந்து அந்த ஆள் ரெண்டு இட்லிக்கு மாறி விடுகிறான் என்றால் அவனுக்கு வயதாகி விட்டது என்றா அர்த்தம்? ஒரே நொடியில் வயதாகி விடுமா என்ன?

    காமம் என்பது தீ. நதியின் இரண்டு கரைகளிலும் தீப்பற்றி எரியும் போது யானைக் கூட்டம் நதியில் இறங்கி தங்களைக் காபந்து செய்து கொள்ளுமாம்.

    யானைக்காவது வனத்தீயிலிருந்து நதியில் இறங்க வேண்டும் என்ற அறிவு இருக்கிறது. நானோ, அது கூட இல்லாமல் அந்த வெக்கையிலேயே கிடந்தேன். அதையே ஆனந்தம் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நிலையில்தான் நித்யானந்தர் நான் கேட்காமலேயே வந்து நதியாய் என்னைக் குளிர்வித்திருக்கிறார்.

    ***

    மொத்தம் நான்கு முறை எனக்கு நித்யானந்தரை மிக நெருக்கத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று முறை தியான வகுப்புகளில். ஒருமுறை பாத பூஜையில். பாத பூஜையிலும் என்ன வேண்டும் என்று கேட்டார். அவந்திகாவின் உடல் நலம் பற்றிக் கேட்க வேண்டும் என்று உள்ளுக்குள் மனப்பாடமே செய்து வைத்திருந்தேன். இறை சக்தியின் முகத்தைப் பார்த்ததுமே எல்லாம் மறந்து போயிற்று.

    மற்ற இரண்டு முறையும் ‘என்ன வேண்டும்? ’ என்று கேட்ட போது, ஒருமுறை “உங்கள் ஆசீர்வாதமே போதும் சாமி ” என்றும், இன்னொரு தடவை “நீங்கள் எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும் ” என்றும் கேட்டுக் கொண்டேன்.

    ஒருமுறை ஸ்வாமி இமயமலைக்குப் போயிருந்த போது நடந்த சம்பவம் இது. ஸ்வாமி தன்னுடைய சீடர்களுடன் அமர்ந்து ஏதோ முக்கியமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வேலையாக சீடர்களில் ஒருவரை வெளியே அனுப்புகிறார். சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. “எங்கே போனான் இவ்வளவு நேரம்? ” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்து தேடியிருக்கிறார். பார்த்தால் ஒரு ஆழமான பள்ளத்தில் விழுந்து கிடக்கிறார் சீடர். ஒரு சத்தம் இல்லை; ஒரு முனகல் இல்லை. அவரை மேலே கொண்டு வந்த போது உடம்பில் சில இடங்களைக் காண்பித்து ” அங்கேயெல்லாம் தொட வேண்டாம்; எலும்பு முறிந்த மாதிரி தெரிகிறது ” என்று சொல்லியிருக்கிறார் அந்த சீடர். (பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது அவர் குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் – மொத்தம் ஏழு இடங்கள் – எலும்பு முறிந்திருந்தது தெரிந்திருக்கிறது). சீடரை பள்ளத்திலிருந்து மேலே கொண்டு வந்ததும் நித்யானந்தர் அவரிடம் ” ஏன் அப்பா, இவ்வளவு உயரத்திலிருந்து விழுந்து எலும்பெல்லாம் முறிந்திருக்கிறது; ஒரு சத்தம் போட வேண்டாமா? ” என்று கேட்க, “இது உங்களுடைய உடம்பு; உங்களுடைய உயிர். நான் ஏன் சத்தம் போட வேண்டும்? ” என்று கேட்டாராம் சீடர்.

    “இன்னும் ஒரு ஆண்டுக் காலத்துக்கு படுக்கையை விட்டு எழுந்து நடமாடக் கூடாது ” என்று சொல்லியிருக்கிறார் மருத்துவர்.

    “கவலையை விடு; இன்னும் மூன்று மாதங்களில் சரியாகி விடும் ” என்று அந்த சீடரிடம் சொல்கிறார் ஸ்வாமி.

    அவர் சொன்னதைப் போலவே மூன்று மாதங்களில் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகிறார் சீடர். இப்போது அவர் ஒரு ஆச்சாரியராக பிடதி ஆஸ்ரமத்தில் இருக்கிறார்.

    வேதங்களின் சாரம் கீதை என்றும், கீதையின் சாரம் அதன் பதினெட்டாவது அத்தியாயம் என்றும், பதினெட்டாவது அத்தியாயத்தின் சாரம் அதன் 66-ஆவது ஸ்லோகம் என்றும் கூறுவர். அந்த ஸ்லோகம் இது:

    ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ

    அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச :

    (18: 66)

    தர்மங்கள் அனைத்தையும், அதாவது கடமைகள் அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்து விட்டு, சர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, பரமேஸ்வரனான என் ஒருவனையே சரணடைவாயாக! நான் உன்னைப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே!

    கிருஷ்ணன் கூறும் அப்படிப்பட்ட சரணாகதியையே மேலே குறிப்பிட்ட சீடரிடம் நாம் காண்கிறோம். இந்த நிலையை அடைவதற்கு நான் இன்னும் எத்தனையோ ஜென்மங்கள் எடுக்க வேண்டும். இருந்தாலும் “உனக்கு என்ன வேண்டும்? ” என்று அந்த கல்பதரு கேட்கும் போதெல்லாம் எதையும் கேட்கத் தோன்றாமல் ‘உங்கள் ஆசீர்வாதம் இருந்தாலே போதும் ” என்று கேட்டதற்காக உவகையே அடைகிறேன். ’ எப்போதும் உன்னுடனேயே இருப்பேன் ’ என்ற பரமஹம்ஸ நித்யானந்தரின் வரத்தை விடவும் அதிக மதிப்புடைய பொருள் இந்த வாழ்க்கையில் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன?

    ஆனால் நித்யானந்தர் ‘எப்போதும் உன்னுடனேயே இருப்பேன் ’ என்று என்னிடம் மட்டும் சொல்லவில்லை. சென்னையில் நான்கு தினங்கள் நடந்த நித்யானந்த ஸ்புரணம் எனப்படும் தியான முகாமின் முடிவில் ஒரு மாபெரும் சொற்பொழிவை நிகழ்த்தினார் ஸ்வாமி. அவ்வளவு உருக்கமான, சத்தியத்தின் ஜ்வாலை தெறிக்கும் பேச்சை நான் அதுவரை என் வாழ்நாளில் கேட்டதில்லை. அந்த உரையின் முடிவில் ஸ்வாமி சொன்னார்:

    நான் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும், நீங்கள் உங்களுடைய இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் நான் உங்களை விட்டுப் பிரியாமல் உங்களுடனேயே இருப்பேன். இது சத்தியம்.

    அந்த வார்த்தைகளைக் கேட்டபோது என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ” நித்யானந்தர் யார்? ” என்று என்னிடம் கேட்டார் ஒரு நண்பர். அவரிடம் நான் சொன்னேன்:

    அவர் ஒரு ஆன்மீக குரு அல்ல;

    அவர் ஒரு ஞானி அல்ல;

    அவர் ஒரு மகான் அல்ல;

    அவர்

    கடவுள்!

    ***

    கட்டுரையே முடிந்த பிறகும், அந்த மருத்துவமனைப் பெண் பதற்றத்துடன் ஸ்வாமியின் பிடதி ஆசிரமத்துக்கு போன் செய்து என்ன சொன்னார் என்பதைச் சொல்லவில்லை அல்லவா? ஸ்கேன் செய்து பார்த்ததில் அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையில் மூன்று குழந்தைகள் இருந்திருக்கின்றன. குழந்தை வேண்டும் என்று மூன்று முறை அல்லவா கேட்டார்? மூன்று குழந்தைகளை அவருடைய கர்ப்பப்பை தாங்காது என்றது மருத்துவ அறிக்கை. அதனால்தான் மீண்டும் ஸ்வாமியிடம் தஞ்சம்…

  17. கடவுளைக் கண்டேன் : சர்வரோக நிவாரணம் (7)

    சென்ற மாதம் எனக்கு வைரல் ஜூரம் வந்தது. அதன் விளைவாக இடதுகால் வீங்கிக் கொண்டது. நீண்ட நேரம் கீழே தொங்க விட்டிருந்தால் வீக்கம் அதிகமாகி ஆயிரம் தேள் கொட்டியது போல் வலித்தது; கடுத்தது. காலை கீழே தொங்க விடாமல் மேல் நோக்கி வைத்திருந்தால் வலியும் வீக்கமும் குறைந்தது. அதனால் இடதுகாலை எப்போதும் வலது காலின் மீது ஷீர்டி பாபா ஸ்டைலிலேயே வைத்திருக்க வேண்டி ஆனது. ஆனால் இதை மற்றவர்கள் தங்களுக்குத் தரப்படும் அவமரியாதை என்று எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

    என்னை அடுத்து அவந்திகாவுக்கும் வைரல் ஜூரம் வந்து அவளுக்கும் கால் வீங்கியது; ஆயிரம் தேள் கொட்டியது போல் கடுத்தது. அவள் வேறு புலம்பல் திலகம் என்பதால் ஒரே ரகளை. (அவளிடம் கேட்டால் ‘சாருதான் புலம்பல் திலகம் ’ என்பாள். அவள் எழுதுவதில்லை என்பதால் அவளுடைய தரப்பு கேட்பார் இல்லாமல் போகிறது). வலியால் அவள் துடிப்பதைப் பார்த்துப் பார்த்து சலிப்படைந்து என் வலி பற்றி வெளியில் சொல்வதையே நிறுத்திக் கொண்டேன். மருத்துவரிடம் கேட்டதில் இந்த வலி காலப்போக்கில்தான் சரியாகும் என்றார். காலப் போக்கு என்பது வருடங்களா, மாதங்களா, நாட்களா என்று கேட்டதற்கு என்னை ஒருமாதிரி பார்த்து விட்டு “ஓரிரண்டு மாதங்கள் ” என்றார்.

    மற்ற மருத்துவர்களிடம் விசாரித்த போதும் அந்த பதிலே கிடைத்தது. இரண்டு மாதங்களுக்கு இந்த வலியை எப்படிப் பொறுப்பது? பல சமயங்களில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யலாமோ என்ற அளவுக்கு வலி. இதற்கிடையில் டிசம்பர் 16 அன்று தன்னுடைய பிறந்த நாளுக்காக சாமியைப் பார்த்து ஆசி வாங்க வேண்டும் என்றாள் அவந்திகா.

    ” சாமியைப் பார்க்க வேண்டுமானால் பெங்களூர் செல்ல வேண்டுமே; இந்தக் காலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? ” என்றேன்.

    எப்படியோ தாங்கித் தாங்கி நடந்து பெங்களூர் போய் சேர்ந்து விட்டோம். நித்யானந்தரின் தரிசனம். பக்தர்களுக்கு நித்யா வரம் கொடுக்கும் நேரம்.

    என்னைப் பார்த்து ” என்ன வேண்டும் ஐயா? ” என்று கேட்டார். நான் அவந்திகாவை சுட்டிக்காட்டி ” கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றி மாற்றி இவளுக்கு ஏதாவது ஜூரம் வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் சாமி. இதை சரிப்படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான கால் வலியைப் பற்றியும் சொன்னேன்.

    ” அப்படியா? அம்மா இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே? ” என்று சொல்லி விட்டு, தன் கையிலிருந்த ஒரு செங்கோல் மாதிரியான ஒரு தண்டத்தை அவந்திகாவின் காலில் வைத்தார்.

    அடுத்து, சில தத்துவப் பிரச்சினைகள் பற்றி விவாதித்தார். அப்போது மதியம் மணி மூன்று. காலையிலிருந்து அவருடைய நடமாட்டங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். காலையிலிருந்தே ஒரு நிமிடம் கூட விடாமல் காலில் ரெக்கை கட்டியது போல் அங்கே ஒரு லெக்சர், இங்கே ஒரு சர்வ தரிசனம் என்று பறந்து கொண்டிருந்தார். ஒரு வாய் தண்ணீர் கூட அருந்தியிருப்பாரா என்பது சந்தேகம். இன்னும் பலர் தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். தரிசனம் முடிந்து மீண்டும் லெக்சருக்காக ஓட வேண்டும். அநேகமாக இரவு 11 மணிக்குத்தான் அவரால் ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.

    என்னைப் பார்த்து அந்த அற்புதமான சிரிப்புடன் “ஐயா, அம்மாவுக்கு சரியாகி விட்டது. உங்களுக்கு என்ன வேண்டும்? ” என்று கேட்டார்.

    “சாமி, இன்னும் நீங்கள் காலையிலிருந்து சாப்பிடக் கூட இல்லை என்று நினைக்கிறேன்… ”

    “ஆமாம் ஐயா… ”

    என்னதான் தெய்வம் என்றாலும் எடுத்திருப்பது மனித உடல்தானே? இருந்தாலும் நாள் பூராவுன் ஊண் உறக்கம் இன்றி மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் புனிதன் மீது ஒரு தாய்க்குத் தன் பிள்ளையின் மீது எத்தனை அன்பும், பாசமும் சுரக்குமோ அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டு என் மனம் நெகிழ விடை பெற்றேன்.

    சொன்னால் நம்பவே மாட்டீர்கள். ஆனால் என் கண்களால் அந்த அதிசயத்தைக் கண்டேன். அவந்திகா எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடந்தாள்.

    சென்னை திரும்பும்போது என் இடதுகாலில் ஆயிரம் தேள் கொட்டிய போது அது பற்றி சாமியிடம் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தேன். மறுநாள் ஊர் திரும்பியதும் சாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

    கடிதம் கிடைத்தது என்ற தகவலும் கால் பிரச்சினை சரியாகி விடும் என்ற ஆசியும் கிடைத்தது. அன்றே, அந்தக் கணமே கால் வலி சரியாகி விட்டது. வீக்கமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போனது.

    பரமஹம்ஸ நித்யானந்தர் என்ற பெயரால் அழைக்கப்படும் அந்த அற்புதமான அவதார புருஷனை நீங்கள் பார்க்க விரும்பினால் ஜனவரி 9,10 தேதிகளில் மாலை 5.30 மணிக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் பார்க்கலாம். அங்கே அவரது பகவத் கீதை பற்றிய தியான சத்சங்கத்தில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அவரோடு பேசலாம். உங்கள் குறைகளைச் சொல்லலாம். அவரது ஆசி பெறலாம். அனுமதி இலவசம்.

    தொடர்புக்கு: 98400 41541 / 98403 38386

  18. koiyaala … unnala thaanda oooru keduthu….
    saamiyaam saami…thooo…

    Avan sex saamidaa….movana… nee kooda thaan..

  19. koiyaala … unnala thaanda oooru keduthu….
    saamiyaam saami…thooo…

    Avan sex saamidaa….movana… nee kooda thaan..

  20. koiyaala … unnala thaanda oooru keduthu….
    saamiyaam saami…thooo…

    Avan sex saamidaa….movana… nee kooda thaan..

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.