Monthly Archives: ஜூலை 2011

ஒரு ஜென் கதையும் கேள்வியும்

நியு இங்கிலாந்து கலை இலக்கிய முன்னேற்ற கழகத்தின் செயலாளர் ஜென் கதையை சொல்லி கேள்வி கேட்கிறார்.

What I like about Tamil Nadu?

நியு இங்கிலாந்து கலை இலக்கிய மன்றத்தின் பதினான்காவது சந்திப்பின் போது உறுப்பினர்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தை அங்கீகரித்தனர்.

  1. முட்டை பரோட்டா சவுண்ட்
  2. வேஷ்டி டப்பாகட்டு
  3. தெருவோர இட்லி கடை
  4. காலை ஹோட்டலில் ஊதுபத்தி
  5. டீக்கட பென்ச்
  6. கோவில் திருவிழா
  7. காலையில் கிராமத்தில் ஃபர்ஸ்ட் ட்ரிப் பஸ்ஸில் காயகறி ஒரு டிக்கெட்டாக வருவது
  8. யாரையும் அக்கானு கூப்பிடறது
  9. ஓட்டல் ஆர்டரில் சர்வரே நாம என்ன சாப்புடனம்னு சொல்லுறது
  10. பழைய பேப்பர் கட
  11. மாட்டு வண்டி சவாரி
  12. தெருநாய்
  13. டிராஃபிக் கான்ஸ்டபிள் காடும் சைகையையும் புரிந்து கொண்டு இடிக்காமல் செல்லும் வாகன ஓட்டுநர்கள்
  14. வாய்க்கால்
  15. மசாலா பால்
  16. வெத்தல
  17. சிதறு தேங்கா
  18. பஸ் ஸ்டாண்டு பக்கத்தில இருக்கும் தியேட்டரில் எப்ப வேணும்னாலும் உள்ளார போயிட்டு வரது
  19. ஆட்டோ வாசகங்கள்
  20. முட்டை போண்டா
  21. வேப்பமரம்
  22. மரத்தடி பிள்ளையார் கோவில்
  23. நுங்கு
  24. தெருவோர கட்சிக் கூட்டம்
  25. மல்லிகப்பூ
  26. சந்தைக்கு காத்திருப்பது
  27. கனகாம்பரம்
  28. பதநீர்
  29. கொடுக்காபுளி
  30. தாவணி
  31. பாண்டிச்சேரி சரக்கு
  32. பட்டுப் பாவாட
  33. சாம்பார் வடை
  34. ரயில் சத்தம்
  35. இடியாப்பம்
  36. வயலோர வெளிக்கி
  37. புளியோதரை
  38. அய்யங்கார் கோவில் தூண் பிசுக்கு
  39. அடை அவியல்
  40. அக்ரஹாரத்து மடிசார் மாமி
  41. இட்லி தோசை
  42. கொசுறு வாங்குவது
  43. அல்வா
  44. வாழைமரம்
  45. கோலம்
  46. மார்கழி மாசப் பூசணிப்பூ
  47. அய்யர் கோவில் பொங்கல்
  48. மாரியம்மன் கூழ்
  49. பன்னீர்
  50. பட்டு புடைவை
  51. வாழையில சாப்பாடு
  52. பறை சாவு மேளம்
  53. ரஜினிகாந்த்
  54. சில்க் ஸ்மிதா
  55. ரேடியோ மிர்ச்சி சுசித்ரா
  56. சரோஜ் நாராயணசாமி
  57. அண்ணாச்சி கடையில் சாக்கு மடித்து உட்கார்வது
  58. குருவி ரொட்டி
  59. ஆரஞ்சு மிட்டாய்
  60. ராஜராஜ சோழன்
  61. கல் கோனான்
  62. இலந்தை வடை
  63. கோமணம்
  64. மாடுக் கொம்புக்கு கட்சிக் கொடி வண்ணம் போட்டிருப்பது
  65. பல்லவன்
  66. தலைப்பாக்கட்டு
  67. சந்திரலேகா
  68. சுக்கா வறுவல் & ஆட்டுக்கறிக் குழம்பு
  69. பலாப்பழம்
  70. மௌன ராகம்
  71. நவ்வாபழம்
  72. ‘கொஞ்சம் கவனித்தால்’ சகலமும் நடந்தேறும் சுமூகம்
  73. ப்ளாட்பாரத்தில் கிடைக்கும் உலகம்
  74. இலந்தப் பழம்
  75. சாயந்தரம் கோவில் நடைபாதையில் சுத்தம் செய்த துணிகள்
  76. ஏவியெம்
  77. சாயரட்சை நாதஸ்வரம் & தவில்
  78. நரசூஸ் காபி
  79. பொன்னியின் செல்வன்
  80. கொழுக்கட்டை
  81. குமுதம் நடுப்பக்கம்
  82. பிள்ளையார் எறும்பு
  83. ஆடிப் பெருக்கு, ஆடிப் பதினெட்டு – சித்ரான்னம்
  84. ஏர் கலப்பை உழுதல்
  85. ம.பொ.சி. மீசை
  86. தட்டச்சு சொல்லிக் கொடுக்கும் பெண்ணின் கைவிரல்
  87. எம்.ஜி.ஆர் தொப்பி
  88. ரேஷன் க்யூ
  89. ஆதிமூலம்
  90. புன்னகை அரசி
  91. விவேகானந்தர் பாறை
  92. தமிழ்99
  93. பெயருக்கு முன் பட்டப்பெயர்
  94. சீரணி அரங்கம்
  95. சரோஜாதேவி
  96. டேப் ரிகார்டரில் இளையராஜா
  97. முன் ஜாக்கிரத்தை முத்தண்ணா
  98. ஆடிவெள்ளிக்காக திறந்த அரங்கில் திருமால் பெருமை
  99. புரியாத மொழியில் கோவில் கல்வெட்டு
  100. தந்தை ஈ.வெ.ரா. பெரியார் லை
  101. மொய் 101
  102. எல்லாரையும் தல போடுவது
  103. திருக்குறள்
  104. விஸ்வநாதன் ஆனந்த்
  105. கைலி
  106. கஷ்டமோ, நஷ்டமோ… ஓடோடி வரும் சுற்றுப்புறமும் சொந்த பந்தமும்
  107. உலகெலாம் பல்கிப் பெருகுவது
  108. ஸ்தோத்திரம் 108
உங்களுக்கு என்ன பிடிக்கும்?

Notable Tamil Short Films: பார்க்கத் தகுந்த தமிழ் குறும்படங்கள்

மேலும்:
1. நிமித்தகாரன்
2. Short Film of the Day

‘ஒரு மாலைப் பொழுது’

தமிழரசன் 

நல்ல வேளை… இவர் இன்னும் தமிழ் சினிமா இயக்குநர் ஆகவில்லை. அதுவே கோடம்பாக்கத்திற்கு பூஸ்ட். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது போல் கருத்து கந்தசாமி படம்.

வொயிட் பேர்ட்

முரளி

இருபத்தியாறு நடிகர்கள்; மூன்று கேமிராக்கள்; ஒரு கிரேன் – என்றெல்லாம் பணத்தை வீணடிக்காத என்.ஆர்.ஐ தேஸி மக்களின் அத்யந்தமே தனி ரகம். இந்தப் படம் அமெரிக்காவில் வாழும் பேச்சிலரின் கதை. Very promising and raw talent.

முட்டாசுபட்டி

ராம் – ICANS

’நாளைய இயக்குநர்’ ரகம். எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத ரகம். சிரித்து வயிறு வலிக்கக் கூடிய ரகம். ஸ்க்ரிப்ட்டும் காஸ்டிங்கும் சரியா இருந்தா, எவ்வளவு சிறுத்தாலும், காரம் குறையாதுனு உணர்த்தற ரகம்.

ப்ராஜெக்ட் ஐஷு

அருண்குமார்

காதலை விட்டால் வேற எதுவுமே இன்றைய விஸ்காம் மாணவர்களுக்கு சிக்கவில்லை என்பது கொடூரம். அதனினும் கொடூரம் ஊடல். எஸ்.ஆர்.எம்., லயோலா போன்ற லட்சக்கணக்கான விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்களின் யூ ட்யூப் காதலில் இது பர்வாயில் வகை.

பண்னையாரும் பத்மினியும்

அருண் குமார்

கடைசியாக கார் நடித்து நான் பார்த்த படம் – ரஜினியின் ‘படிக்காதவன்’. தண்ணியடித்துவிட்டு தொட்டால் லஷ்மி ஓடமாட்டாள். இங்கே பத்மினி. அமர்க்களம்.

இலக்கணப் பிழை

சரத் ஜோதி

இவர் இன்னும் வெள்ளித்திரைக்கு வரவில்லையா? சஸ்பென்ஸ் – உண்டு; பதைபதைப்பு – உண்டு; டிராமா – உண்டு; ஆக்‌ஷன் – உண்டு; காதல் – உண்டு. எல்லாத்தையும் எப்படி இதற்குள் அடக்கினார்! அட்டகாசம்.

அன்பில் அவன்

ரஷிதா & சுரேகா

டம்ளர் விளிம்பில் எறும்பைப் பார்த்திருப்பீர்கள். குவளையின் ஓரங்களில் இருக்கும் பழரசம் அப்போதுதான் எறும்புக்குக் கிடைக்கும். பேலன்ஸ் தவறினால் ஜூஸுக்குள் சமாதி. இந்தப் பக்கம் விழுந்தால், உணவுக்கு முற்றுப்புள்ளி. சிறுவர்களை நடிக்க வைப்பது அப்படிப்பட்ட காரியம். கொஞ்சம் ஜாஸ்தி போனால் பல்லிளிக்கும்; அடக்கி வாசித்தால், போரடிக்கும். இரண்டுக்கும் நடுவே இங்கே…

’நியூ’ ரூம்மேட் 2303

WTH முரளி

அமெரிக்காவில் அறைத்தோழர் கிடைப்பதற்கு அல்லாடுகிற கதை. நல்ல காமெடியாக வந்திருக்க வேண்டியது. இன்னும் நிறைய சிரமங்களை இயல்பாகக் கொண்டு வந்திருக்கலாம். இவங்க இன்னும் நியூ ஜெர்சியிலா இருக்கிறார்கள்?

துரு

கார்த்திக் சுப்பராஜ்

கலைஞர் டிவி ஆரம்பித்ததிலேயே நடந்த மிக உருப்படியான காரியம். ஓவியர் மதன் + இயக்குநர் பிரதாப் போத்தன் & கீர்த்தி இணைந்து ஒருங்கிணைக்கும் ‘நாளைய இயக்குனர்’. சொல்லப்போனால் விழியங்களின் பொற்காலமாக, குறும்படங்கள், சற்றே பெரிய டிவி படங்கள், சினிமாஸ்கோப்பிற்கு சரிப்படாத களம் கொண்ட லோ பட்ஜெட் படங்கள் என்று சன்/விஜய்/ராஜ்/ஜெயா/மக்கள் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட சமயத்தில் ஒரேயொரு நிகழ்ச்சி மட்டுமே வருவதுதான் ஆச்சரியம் கலந்த குறைப்பாடு.

போஸ்ட் மேன்

மனோகர்

நல்ல கேமிராமேன்; குறும்படத்திற்கு மீறிய பட்ஜெட்; உருக வைக்கும் காட்சிகள்; நம்பக்கூடிய கதை… எல்லாம் இருந்தும் ஒரு படம் ஓடாமல் டப்பாவிற்குள் முடங்குவதற்கு என்ன காரணம்? இந்தப் படமும் ஃபெயில் ஆவதற்கு அதுதான் காரணம்.

தி சவுண்ட் மெஷின்

Prize-Winner: Propeller TV Best Short Film Competition
Shortlisted: Friends of the Earth Short Film Competition
Screened at Hull International Film Festival 2009

மொழியே தேவையில்லாத குறும்படம்

ஸ்னாப்

வெறும் ஐநூறு டாலருக்குள் எடுக்கப்பட்டது. டயலாக் எதுவுமே தேவையில்லாத இன்னொரு காட்சியாக்கம்.

அடுத்த ‘நாயகன்’? – தம்பி வெட்டோத்தி சுந்தரம்

சினிமா ட்ரெய்லர்

தொடர்புள்ள பதிவுகள்:

  1. விழா மாலைப் போதில்…
  2. பாட்டு புஸ்தகம்
  3. சுந்தரம் அழைக்கிறான்
  4. திரைப்படம் >> தம்பி வெட்டோத்தி சுந்தரம்
  5. ட்வீட்: கலைஞர் டிவி ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளரை ‘சொந்தில்நாதன்’ ஆக்கியதன் பிண்ணனி என்ன? அஞ்சலிப் பாப்பாவையும் காணோமே.
  6. ப்ரமோஷன் வலையகம் – Thambi Vettothi Sundaram
கதை முழுதும் கன்யாகுமரி – கேரள எல்லையில் நடக்கிறது. படித்தவர்கள் அதிகமிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் நிகழும் குற்றங்களின் சதவீதமும் அதிகம். அதற்கான மூலக் காரணத்தை ஆராயும் திரைக்கதை இது. எல்லைப்புற மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள், அடிப்படை முன்னேற்றமின்மை, கடத்தல், சட்டமீறல்கள், பதற்றம் போன்றவை தேச எல்லைகளுக்கு மட்டுமே உரித்தானவையல்ல. மாநில எல்லைகளிலும் அதுதான்.

எழுத்தாளர் பா ராகவன் உரை

வைரமுத்து பாடல் வரிகள்

மண்புழுவோ மண்புழுவோ மண்ண திங்குது
அந்த மண்ண தின்னும் புழுவ தவள திங்குது
புழுவ தின்னும் தவளைதான் பாம்பு திங்குது
மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது
பாம்ப தின்னும் கழுக தானே நரியும் திங்குது
அந்த நரிய கூடி வேட்டையாடி மனிதன் திங்குறான்

அந்த மனுசனதான் கடைசியிலே மண் திங்குது
அந்த மண்ண புரிஞ்ச மனுசனுக்கு
ஞானம் பொங்குது

வி சி வடிவுடையான்

பட முன்னோட்டம் – பேட்டி

செல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து

இணையத்தில் கண்டது:

அ) Mohamed Hashmath  –  Yesterday 11:35 AM (edited Yesterday 11:36 AM)

ஆ) செல்ஃபோனில் காதலித்துப்பார்

உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும்
உலகம் உன்னையே பார்க்கும்
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும்
உனக்கும் வறுமை வரும்
கடன்கள் அதிகமாகும்
ரீலோட் கடைக்காரன் கடவுளாவான்
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும்
காதிரண்டும் செவிடாகும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

குப்பை மேட்டில் நின்று கதைப்பாய்
பல நாட்கள் குளிக்கமாட்டாய்
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய்
வந்துவிட்டாள் வருசங்கள் நிமிசமென்பாய்.
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரனாய்ப் பார்க்கும்
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய்
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன்போல் நடந்து திரிவாய்
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரிலோட் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.
செல் ஃபோனில் காதலித்துப்பார்

உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும்
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் மிஸ்ட் காள் மட்டும் தெளிவாய்க் கேட்கும்
உன் ஃபோனே பெட்ரி டவுன்னாகி
உனக்கு ஆப்படிக்கும்
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும்
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்.
Missed Call வராவிட்டாள் பைத்தியம் பிடிக்கும்
Missed Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்.
செல் போனில் காதலித்துப்பார்

கடன்களை வாங்கி வாங்கியே ரீலோட் பண்ண உன்னால் முடியுமா?
Out Goingஉம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா
சபையிலே மெதுவாகவும்
தனிமையிலே உருகி உருகியும் பேச
உன்னால் ஆகணுமா
ஃபோன் சூடாகவேண்டுமா
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும்
பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா
தொலைபேசியில் காதலித்துப்பார்

ஏர்டெல் (சிம்) கொம்பனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும்
Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும்
டயலொக் சிம்முக்கும்
மொபிடெல் சிம்முக்கும்
கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும்
கழிவறையில் உற்காந்து கொண்டு பேசவும் முடியுமே
கட்டாந்தறையில் படுத்துக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும்
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும்
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும்
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும்
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ள் பண்ணாமல் விட்டாலும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
நீ பிச்சைக்காரனாவாய் இல்லை கடன்காரனாவாய்

இரண்டில் ஒன்று
உனக்கு நிச்சயம்
செல்ஃபோனில் காதலித்துப்பார்..

அசல்

கவிப்பேரரசு வைரமுத்து – காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம் விளங்கும்….
உனக்கும் கவிதை வரும்…
கையெழுத்து அழகாகும்…..
தபால்காரன் தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்…
காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்…
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்…
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்…
காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்…
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்…
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்…
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்…
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்…
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்…
ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்…
தாகங்கள் சமுத்திரமாகும்…
பிறகு
கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்…
காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே…
அதற்காகவேனும்…
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…
காதலித்துப் பார்!

கோ (Ko) – Subtitles & Captions for the hearing impaired in Tamil Movies

அர்ப்பணிப்பு

நல்ல படத்தை துணையெழுத்து மட்டும் படித்துவிட்டு காட்சியமைப்பையும் நடிகர்களின் உடல்மொழியையும் பின்னணி இசைக்கோப்பையும் தவறவிடுவோம். அந்தளவிற்கு துணையெழுத்துகளில் இலக்கியம் உண்டு. தமிழ்ப்படங்களின் தரமான வசனத்திற்கும், அதை எட்ட வைக்கும் தூரத்தில் வைத்திருக்கும் சப் டைட்டில்காரர்களுக்கும் நன்றி.

என்னுரை

Caption for the hearing impaired என்பதற்கும் Sub-titles என்னும் பிரிவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்னதில் வீட்டுக் கதவு திறந்தாலும், மங்கல் இசை ஒலித்தாலும், கார்கள் மோதிக் கொண்டாலும் கூட ஒலிக்குறிப்பு போடுவார்கள். பின்னது, எங்கெல்லாம் மொழி இடிக்கிறதோ, அங்கு மட்டும் மாற்றி, துணையெழுத்தாக இடுகிறார்கள்.

ஆக்சன் படத்திற்கு வசனம் எழுதுவது தனிக்கலை. அப்படி நறுக்குத் தெறித்தது போல் எழுதப்பட்ட வரிகளுக்கு மொழிபெயர்ப்பது இன்னொரு கஷ்டமான கலை. அதில் குழுஊக்குறி, உள்ளூர் பாஷை எல்லாவற்றையும் அயல்மொழிக்கு ஏற்ற பதமாக மாற்றுவது கிட்டத்தட்ட இயலாத காரியம்.

உரிமை துறப்பு:

இதை நான் பார்த்ததே திருட்டி டிவிடி. எனவே, இப்படி எல்லாம் குற்றங்கண்டுபிடிக்க அருகதை இல்லை என்பது உண்மை. எனினும், உலக அரங்கில், ஆஸ்கார் விருதுக்குழுவிற்கும் அர்த்தம் போய்ச்சேர வேண்டும் என்பதைத் தவிர எந்த விதமான கெட்ட எண்ணமும் இல்லை.

அப்படியாக கோ படத்தில் கிடைத்த சில

1. பேனர்கள், அறிவிப்பு பலகை, பதாகை, தோரண எழுத்து எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பது அவசியம். அப்படி பார்த்தால், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அறிமுகத்தில் வரும்

  • ‘அதிகார ஆட்சிக்கு முடிவுரை எழுத வரும் தலைவனே!’,
  • ‘அறிவுக் குற்றாலமே’ போன்ற சுவரொட்டிகள் ஆங்கிலமாக்கம் பெறவில்லை.

2. அதே போல் ‘தினக்குரல்’ நாளிதழில் வரும் ‘புகைப்பட புதையல்’ போன்ற தலைப்புச் செய்திகளும் பிறமொழிக் காரருக்கு புரியாது. ‘சிறகுகள்’ துண்டுச்சீட்டு போன்றவையும் அடக்கம்.

3. பிரகாஷ்ராஜ்: கார்-ல போய்கிட்டே பேசலாம்

ஆங்கிலம்: ‘Follow me in the car’

4. டூயட் பாடல்களுக்கு வேண்டாம். ஆனால், அந்த சிறகுகள் தீம் சாங் மட்டுமாவது ஆங்கிலமாக்கம் செய்திருக்க வேண்டும்.

5. Naxels, IAT போன்ற பலுக்கப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

கோ போன்ற நல்ல படங்களுக்கு, அடர்த்தியான வசனங்களும் கொள்கைக் கோட்பாடுகளை விளக்கும் காட்சிகளும் அமைந்த வசனங்களுக்கு மொழிமாற்றுவது சாதாரணம் காரியம் அல்ல. செய்தவருக்கு வாழ்த்துகள்.

தமிழ் ஆர்வலரும் நானும் – பாஸ்டனில் மு இளங்கோவன்

 A glance leaves an imprint on anything it’s dwelt on.
Joseph Brodsky 

[Russian poet(1940-1966) – “A Part of Speech” in Collected Poems in English]

துவக்கப் பாடமாக வீடியோ பார்த்துவிடலாம்

அமெரிக்க வந்த காரணம் என்ன? தமிழ் இணைய மாநாடு என்ன செய்தது?

சந்தித்த கதை

மீன் தொட்டிக்குள் நீந்துவது போல் வலை வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. எல்லா மீன்களும் இடமிருந்து வலமாக சுற்றியது. குழாம் அமைத்தது. தொகுதிப் பங்கீடு செய்தது. நானும் நடுவில் இருந்தேன். ஆங்காங்கே சுறா தென்படும். சிலரை கபளீகரம் செய்து கொண்டிருக்கும். நானும் குட்டி மீன்களைக் கவ்வி பசியாறினேன்.

அப்போதுதான் கூர்மாவதாரமாக முனைவர் மு இளங்கோவன் எதிர்கொண்டார்.

அனுபவத்தில் ஆமை என்றால், வயதில் பட்டாம்பூச்சியாக இருக்கிறார். நெடுநெடு உயரம். கருகரு முடி. துடிதுடி கண். பதட்டமில்லாத நடை. தெளிவான உச்சரிப்பு. பாவனையற்ற கனிவு. ஜாக்கிரதையானப் பேச்சு. வம்புகளற்ற உரையாடல்.

சலபதியை சந்தித்தபொழுதும் சரி; ஜெயமோகனோடு இருந்த சில நிமிடங்களிளும் சரி… ஞாநியும் ஆகட்டும்.

சளைக்காமல் கதைக்கக் கூடியவர்கள்.

அ. முத்துலிங்கம் போன்றோர் வேறு இனம்.

கேள்விக்கு சீரியமாக எதிர்வினையாற்றுவார்கள். விவாதங்களை இறுதிவரை கவனித்து முத்தாய்ப்பாக முழுமையாக்குவார்கள். சீரியமாக கவனிப்புடன், ட்விட்டரில் 140 எழுத்துக்குள் சிந்தனையை அடக்குவதற்கொப்ப, எண்ணி, எண்ணியதை சரியான வார்த்தையைக் கொண்டு கோர்த்து, முத்து சிந்தக் கூடியவர்கள்.

மு. இளங்கோவனாரும் அதே ரகம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்

தமிழ் இணைய மாநாட்டுக்காக பிலடெல்பியா வந்தவர் பாஸ்டன் பக்கமும் எட்டிப் பார்த்தார். எட்டிப் பார்த்தது, ஹார்வர்ட், எம்.ஐ.டி போன்ற தலை பத்து கல்லூரிகளைப் பார்வையிட.

நான் பலமுறை இந்த இடங்களுக்கு சென்றிருந்தாலும், சென்றபோதெல்லாம் சுற்றுலாவாசியாகவே பராக்கு பார்த்திருக்கிறேன். வளாகத்தின் முக்கிய கட்டிடங்கள், வகுப்பறைகளின் அமைப்பு, மாணவர்களின் வாழ்க்கைமுறை, ஆசிரியர்களின் அலுவலகம், இருப்பிடங்களுக்கும் கல்விக்கூடத்திற்குமான தூரம் போன்றவற்றை கவனித்ததில்லை.

எனவே, ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களே நெறிப்படுத்திய சுற்றுலாக்களை தேர்ந்தெடுக்கு, அவர்களைப் பின் தொடரும் விதமாக, பார்க்கச் சென்றோம்.

அலுவலில் இருந்து வீட்டுக்கு சேணம் கட்டிவிட்ட குதிரையாக ஒரே பாதை. அதே திருப்பம். பழக்கமான பயணமாக இருப்பதை, கூகிள் வரைபடம் (மேப்) வந்தவுடன், சோதித்து பார்த்ததில் புத்தம்புது குறுக்குவழி கிடைப்பது போல், இந்த வழிகாட்டி சுற்றுலாக்கள் பல புதிய விஷயங்களை அடையாளம் காட்டி வழி திறந்தது.

எம்.ஐ.டி.யின் சுயம் சார்ந்த மதிப்பீடுகளும், மாணவ வயதின் பரிசோதனை கலந்த முயற்சிகளும் விளங்கின என்றால், யேல் பல்களையின் பணமும், பிரும்மாண்டமும், உள்ளே நுழைந்த புகழ் பெற்றவர்களின் பேரும் மிரட்டின.

நடுவாந்தரமாக ஹார்வார்டு. கொஞ்சம் அலட்சியம்; கொஞ்சம் திமிர்; கொஞ்சம் பந்தா எல்லாம் யேல் பல்கலையை நினைவூட்டினாலும், பாஸ்டன் நகரத்தின் அண்மை மாணவர்களைத் தரையையும் சுட்டிக் காண்பிப்பதாகத் தெரிகிறது.

  • முதல் வருடம் கழித்தபிறகு முதுநிலையோ, இளநிலையோ… பட்டம் வாங்க விரும்பும் படிப்பை தேர்வு செய்வது;
  • ஐந்தாவது வகுப்பிலேயே கல்லூரிக்கு முதற்படி எடுக்கும் பால்ய காலப் படிக்கட்டுகள்;
  • படிப்பைத் தவிர மக்கட்பண்பு, குணநலன், சகாக்களோடு பழகும்விதம், வெற்றி பெறுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பது;
  • யேல், ஹார்வார்ட் போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இன்றளவிலும் மதம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் செலுத்தி, இறை சார்ந்து இட்டுச் செல்வது;
போன்ற தகவல்களை அறிந்து கொண்டோம்.

தமிழும் தமிழ் சார்ந்த கணினியும்

இளங்கோவனுக்கு பல்வழி அடையாளம். தமிழ்ப் பேராசிரியர்; கணினியில் தமிழ்ப் பயன்பாடுகளை அடையாளம் கண்டு, புதியவர்களுக்கு எளிதாக்கி, கிராமப்புறங்களுக்கும் பரவலாக்குபவர்; நாட்டுப்புற பாடல் தொகுப்பவர்; சிலம்பு சொற்பொழிவாளர்.

ஆனால், நேர்ப்பேச்சில் நம்மிடம் இருந்து விஷயம் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார். தன் பெருமைகளை, தன் அறிவை, தன் சாதனைகளை மூச்சு விடாமல் பேசியே திணறடிப்பவர் மத்தியில் பிறரின் திறனை தூண்டிலிட்டு, திரியேற்றி, சம்பாஷணைகளை சுவாரசியமாக்குகிறார்.

ஒருங்குறி ஆகட்டும்; வாழ்க்கையின் அடுத்த அடிகள் ஆகட்டும்; தமிழைக் கணினி கொண்டு, பரவலாக்கி அன்றாட பயன்பாட்டுக்கு அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஆகட்டும் – தீர்மானமான கொள்கைகள் வைத்திருக்கிறார்.

நம் மீது அதை திணிப்பதில்லை; ஆனால், அதன் நலன்களை சுருக்கமாக விளக்குகிறார். அடுத்தகட்ட செயல்பாடுகளை சொல்கிறார். பயனுள்ள முடிவை நோக்கிய திட்டங்களை வைத்திருக்கிறார்.

இனி அவர்…

தமிழ்க் கல்வி முறை

தமிழை இணையம் மூலமாக கற்பிக்க அடுத்த நடவடிக்கை என்ன?

வலை வழியாக தமிழ்ப் பாடங்களை எப்படி கற்றுக் கொடுக்கலாம்?

பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
தமிழிணைய மாநாடு – பார்வையாளரில் ஒரு பகுதி
யேல் பல்கலை – பார்னி பேட், சுதீர்
ஃபெட்னா – சார்ல்ஸ்டன் – 2011 துவக்க விழா
கோடை மழை வித்யா, நாசர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடலாசிரியர் நா முத்துக் குமார் – பெட்னா 2011
விழா மலர் வெளியீடு – பெட்னா 2011
பாஸ்டன் (நியு இங்கிலாந்து) வலைப்பதிவர், தமிழ் ட்விட்டர் சந்திப்பு
மேரிலாந்து, பால்டிமோர், வர்ஜீனியா, வாஷிங்டன் டிசி – மும்மாநில தமிழ்ச்சங்கம்
பிலடெல்பியா தமிழ் இணைய மாநாடு – தமிழ் யூனிகோட், ஒருங்குறி, எழுத்து சீர Continue reading

நானும் ராம் கோபால் வர்மாவும்

நீங்களும் இவ்வாறு ஒப்பிட: Twitterize Yourself: How To Create A Visualization Of Your Twitter Profile [INFOGRAPHIC] – AllTwitter

உங்களுடன் ஒப்பிட சிலர்:

  1. ஏ ஆர் ரெஹ்மான்
  2. சுருதி ஹாஸன்
  3. பிரிட்டிஷ் நந்தி
  4. பர்க்கா தத்
  5. கரன் ஜோஹர்
  6. ஷாரூக் கான்
  7. சசி தரூர்
  8. சேகர் கபூர்
  9. சுசித்ரா
  10. சச்சின் டெண்டுல்கர்

எவன்டி உன்னப் பெத்தான் … கைல கிடைச்சான் செத்தான்

அவசரத்தில் ஆணுக்கானதா, பெண்ணுக்குரியதா என்று கவனியாமல் தவறான கழிவறைக்குள் நுழைந்து விடுவது போன்றது சிம்புவின் திரைப்பாடல்கள். எந்த டாய்லெட்டாக இருந்தால் என்ன… காரியம் நடக்கும்.

இன்னொரு விதத்தில் பார்த்தால் சிம்பு ஒரு ட்ரீம் டெவலபர். அவரைப் போல் பன்முறை சுழற்சிக்குள்ளாக்கக் கூடிய (ரெட்யூஸ். ரீயூஸ். ரீசைக்கிள்) கவி எவரும் இல்லை. நாலு எஃப், எட்டு டி போட்டால் பாடல் தயார். அதையே காலத்திற்கேற்றபடி டெண்டுல்கர், வைரமுத்து, மன்மோகன், ஃபேஸ்புக் என்று எவருக்கும் மாற்றிப் போடலாம்.

கடைசியாக பைந்தமிழ் பா வல்லுநர். சொல்பின்வரு நிலையணி, பொருள் பின்வரு நிலையணி, சொற்பொருட் பின்வரு நிலை அணி எல்லாம் ஒரே செய்யுளில் வருமாறும் புனைகிறார்.

அப்படி ஒரு பாடல் – (படம் :: வானம்)

Oh Baby I feel like flying
Flying up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make Love to me there

உன்னப் பாத்த ஃபெர்ஸ்டு செக்கன்ட்ல என்னக் காணோம்
தேடிப் பாக்கிறன் கண்டபடி நானும்

பாத்த ஃபெர்ஸ்டு செக்கண்ட்லேர்ந்தே என்னக் காணோம்
தேடிப் பாக்கிறன் கண்டபடி நானும்

சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும்

வந்து என்னக் கண்டுபிடிச்சுக் குடு
இல்ல ரொம்ப சிம்பிள் உன்ன எனக்குக் குடு
இல்ல தயவு செஞ்சு ஒரு GUN எடுத்து என்ன சுடு

எவண்டி உன்னப் பெத்தான்
கைல கிடைச்சான் செத்தான்

I Feel Like Kissing You
I Feel Like Touching You
I Feel Like Holding You
I Feel Like Looking Sweet Love To You..

என் ஃபேஸ்புக் ஸ்டேடஸும் நீதான்
என் ட்வீட்டர் ட்வீட்டிங்கும் நீதான்
என் ஸ்கைப் கோலும் நீதான் நீதான்

என் பி பி எம் உம் நீ தான்
என் ஃபேஸ் டைமும் நீதான்
என் ஐ ஃபோன் ஐ பாட் எல்லாமே நீதான்

என் ஐ டியூன்ஸ் ப்ளேலிஸ்டும் நீதான்
அதில் லவ் சோங்கும் நீதான்
அது ப்ளே ஆகிற ஸ்பீக்கர் நீதான்

என் அப்பாவும் நீதான்
என் அம்மாவும் நீதான்
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்

என் கடவுளும் நீதான்
என் உயிரும் நீதான்
எனக்கெல்லாமே நீதான்

I Feel Like Flying High Oh High Baby Girl
U Know U Make Me Go So Wild Oh Wild
U Baby Girl

உன் பேஸ்ட் ப்ரஷும் நான்தான்
உன் ஷவர்ஜெல்லும் நான்தான்
உன் மானம் காக்கிற மேலாடை நான்தான்

உன் லிப் க்ளொஸும் நான்தான்
உன் ஐ லைனர் நான்தான்
உன் அழகக் கூட்டிற மேக்கப் நான்தான்

உன் டெடி பெயாரும் நான்தான்
உன் பெட் & பில்லொவ் நான்தான்
உன் வீட்டோட நைட் வாட்ச்மான் நான்தான்

உன் நகமும் சதையும் நான்தான்
உன் எலும்பும் நரம்பும் நான்தான்
அது உள்ள ஓடும் ரத்தமும் நான்தான்

உன் ஃப்ரெண்டும் நான்தான்
பாய் ஃப்ரெண்டும் நான்தான்
உனக்கெல்லாமே நான்தான் நான்தான்

Who The F*** is your daddy daddy daddy daddy daddy daddy
if i see him he is just dead body body body body body body body
Who The Fuck is your daddy daddy daddy daddy daddy daddy
if I see him he is just dead body body body body body body body


இப்பொழுது இணையத்தில் கண்ட உல்டா

கலைஞர் சமீபத்துல “அம்மா”வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோட பாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு… அதே ட்யூன்ல பாடுங்க..

Oh (Big)Baby I feel like spitting
Spitting up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make fight To Me There

நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும்
தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும்
நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும்
தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும்

சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்
சத்தியமா எனக்கு தயாநிதி வே….ணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்

ஒண்ணு எனக்கு தமிழ்நாட்ட குடேய்…
இல்ல ரொம்ப சிம்பிள் ஸ்பெக்ட்ரம் கேச விடேய்
இல்ல தயவு செஞ்சி கனிமொழியயாச்சும் வெளிய விடேய்….

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
கைல கெடச்சா செத்த்தான் செத்தான் செத்தான் செத்தான்

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்…

மூஞ்சப் பாரு… i feel like….
மூஞ்சப் பாரு… i feel like….
மூஞ்சப் பாரு.. i feel like….

I FEEL LIKE …. BITING YOU
I FEEL LIKE …. PUNCHING YOU
I FEEL LIKE …. BEGGING YOU
I FEEL LIKE …. FUCKING YOU

என் head ache um நீதான், என் action 500 um நீதான்
என்னப் புடிச்ச 71/2 நீ தான் ((hi pitch))
என் sleeping pills um நீதான், என் power glass um நீதான்
நான் தினமும் போடுற sugar free yum நீதான் (hi pitch)
என் கலைஞர் காப்பீடு நீதான் என் சமச்சீர் கல்வி நீதான்
எனக்கு அடிச்ச ஆ..ப்பும் நீதான்
என் கச்சத்தீவும் நீதான்… என் மஞ்ச துண்டும் நீதான்
என் உண்ணா விரத போரும் நீதான்

என் enemy யும் நீதான். மடி கணிணியும் நீதான்
அட எல்லாமே நீதான்…. நீதான்…. நீதான்… நீதான்…ஆங்….ஆங்… ஆங்,… ஆங்… அஹ அஹ அஹ அஹ..ஆங்ங்ங்ங்…..

மூஞ்சப் பாரு… I FEEL LIKE…

Who the “M..” is your Mummy Mummy Mummy Mummy
நீ என்னை ஆக்கிட்ட Dummy Dummy Dummy Dummy

who the “D..” is your teacher teacher teacher teacher
நீ என்ன படுத்துற torture torture torture torture….

எவண்டி உன்ன பெத்தான்
என் கைல கெடச்சா செத்தான்..
எவண்டி உன்ன ……….த்தான்……. த்தான்……. த்தான்….
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்

வீட்டுப்பாடமாக கீழ்க்கண்டவற்றுக்கு பாடல் எழுதவும்:

  1. சச்சின் டெண்டுல்கர், 100
  2. கவிப்பேரரசு வைரமுத்து, நோபல் இலக்கியம்
  3. சாரு நிவேதிதா, ஞானபீடம்
  4. ஃபேஸ்புக், ஐபிஓ
  5. சோனியா காந்தி, அன்னா ஹசாரே
  6. ரூபர்ட் முர்டாக், பி ஸ்க பி
  7. கேசி ஆண்டனி, சி என் என்
  8. பராக் ஒபாமா, பற்றாக்குறை பொக்கீடு
  9. நெட்ஃப்ளிக்ச், யூ ட்யூப்
  10. பத்மநாபசாமி, புதையல்

Booking Air Tickets for Travel within India (from Abroad)

”புனே… ரெண்டு டிக்கெட் கொடுங்க மேடம்”

செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்; தாதர் எக்ஸ்பிரஸ்; முன்னாடி இருபத்தி ஏழு பேர் நிற்கும் க்யூவில் காத்திருந்து, அதன் பின் உங்கள் வாய்ப்பு வரும்போது பதினேழு நிமிட காபி இடைவேளைக்கு ஒற்றைக்கால் மாற்றி தவமிருந்து, சரியான சில்லறை சரி பார்த்து, ஜேப்படி திருடர்களிடமிருந்து அந்த சில்லறை பணத்தைப் பாதுகாத்து, ரெனால்ட்ஸ் ஓசி வாங்கும் சாக்கில் நடுவில் நுழையும் கல்லுளிமங்கனை – விடாக்கண்டராக துரத்தி அடித்து, கடன் கொடுத்த பேனாவை திரும்பப் பிடுங்கி பத்திரபடுத்தி ஒளித்து வைத்து…

இந்த மாதிரி ஒத்த கவலை கூட இல்லாத இண்டெர்நெட் யுகம் இது.

கூகிள் திறந்தோமோ… India domestic Flights தேடினோமா… புக் செய்தோமா… என்று முடிய வேண்டிய இரண்டு நிமிட காரிய உலகம். கலிகாலம்.

முதலில் மேக் மை ட்ரிப்.காம் வந்தது.

விமானம் தேர்ந்தெடுத்து, ஊர்/பேர்/விலாசம்/பிறந்த நாள், நட்சத்திரம், லக்கினத்தில் மாந்தியை அங்காரங்கன் பார்ப்பதையும் நீச பங்க ராஜயோகத்தையும் சொல்லி முடித்தபிறகு, கிரெடிட் கார்ட் கேட்டார்கள்.

கேட்ட விவரம் எல்லாம் கொடுத்தாலும் செக்யூர் ஸ்வீட்.நெட் அனுப்பி வைத்தார்கள்.

பெயரைப் பார்த்தால் கொள்ளையர் கூட்டம் மாதிரி தெரிகிறதே என்று காபந்து கலந்த முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக பின்புல ஆராய்ச்சி செய்ய ஆசை. முகப்பு பக்கம் சென்றால் ’எங்கள் உள்ளம் வெள்ள மனசு’ என்று வெத்துப் பக்கமாக காட்டினார்கள்.

‘இது யாருடைய தளம்?’ என ஹூ – இஸ் இட்டுப் பார்த்தால்

Registrant:
cyota
yaron shohat

சர்வ நிச்சயமாகத் திருடர்கள் என்பதை ஓஜே சிம்ஸனிடம் கேசி அந்தோனி உரைப்பது போல், `கோ’வின் அம்ஜலைப் பற்றி ஜீவாவிடம் போஸ் வெங்கட் பிட்டு வைப்பது போல் குழப்பமாக உளறியது.

’உங்கள் நேரம் காலாவதியாகிவிட்டது’ என்று கொடுத்த கெடுவிற்குள் காரியத்தை முடிக்க துப்பில்லையே என நிராகரித்தும் விட்டது.

அடுத்து யாத்ரா.காம்

இணையம் வேஸ்ட். மக்களுடன் பேசுவோம். வேண்டியதை சொல்வோம். புரிந்து கொள்வார்கள். எனவே, 1-888-4MY-YATRA சுழற்றினேன்.

பன்னிரெண்டு நாழிகை இன்னிசைக்குப் பிறகு, தூக்கக் கலக்கத்தோடு மனிதக் குரல் கேட்டது.

“எனக்கு புனே போக ரெண்டு டிக்கெட் வேணும்”

“மத்தியானம் நாலு மணிக்கு போட்டுரவா?”

“இல்ல… கார்த்தால ஒரு ஸ்பைஸ் ஜெட் இருக்கே? அதில கிடைக்குமா?”

“மத்தியானம் நாலு மணிக்கு போட்டுரவா?”

“இப்பத்தான் உங்க சைட்டில பார்த்தேன். ஸ்பைஸ் ஜெட்டில் செஞ்சு தர முடியுமா?”

“முடியாது”

“ஏன்?”

“அவங்க இப்ப மூடிட்டாங்க. நாளைக்கு சண்டே. அதற்கப்புரமாத்தான் செய்யலாம்.”

“உங்க வெப்சைட்டில் செய்யப் பார்த்தேன்…”

டொக்.

இந்தியாவில் கஸ்டமர் சர்வீஸ் எப்படி என்பதை அங்காடித் தெருவும் சரவணா ஸ்டோர்சும் உணர்த்தி இருந்தாலும், டாட் காம் உலகில் 9 டு 5 உத்தியோகம் அமையப்பெற்ற பாக்கியவான்களை எண்ணி மகிழ்வதா அல்லது நானே பிசினஸ் அமைக்கும் திறவுகோலை ஆராய்ந்து பயனடைவதா என்னும் சிந்தனையை செல்பேசி சிணுங்கிக் கலைத்தது.

“ஹலோ?”

“நாங்க சிடி பேங்கில் இருந்து கூப்பிடறோம். நீங்க இந்தியாவில் இருக்கீங்களா?”

“இல்லை. ஆனா…”

“உங்க கார்டில் இருந்து சந்தேகாஸ்பமான விஷயங்கள் நடக்குது. எல்லாத்தையும் தடுத்துட்டோம்”

“ஒரு நிமிஷம்…”

“ஒண்ணும் கவலப்படாதீங்க”

“மேடம்…”

டொக்

திரும்ப சிட்டி வங்கியின் தவணை அட்டைப் பிரிவை அழைத்து ‘அது நாந்தான்; அந்தக் குயில் நான் தான்; அந்த விமானத்தில் பறக்க நினைத்தது நாங்கதான்’ என்று உணர்த்துவதற்குள் ஏழரை ஹாரி பாட்டர் புத்தகங்களை வாசித்தும், அதன் பின் நெட் ஃப்ளிஸ் ‘இன்ஸ்டண்ட் ப்ளே’வில் பார்த்தும் விடலாம் என்னும் அனுபவம் பெற்றிருந்ததால், அந்த நீண்ட நெடிய பயணத்தைத் துவக்கவே இல்லை.

என் பி ஆர் திருகினேன்.

முப்பத்தைந்து டாலருக்கு திருட்டு கடன் அட்டை விற்கப் படுவதை விவரித்தார்கள்.

எட்டு லட்சத்து நாற்பத்தி மூவாயிரத்து எழுநூற்றி இருபத்தி ஆறு பேரின் க்ரெடிட் கார்டுகளின் எண், ரகசியச் சொல், கடவு வார்த்தை இன்ன பிற களவாடப் பட்டதை செய்தியாக்கினார்கள்.

ஓட்டல்களில் பில் கட்ட அனுப்பும் வினாடித் துளிகளிலும், பெட்ரோம் பங்க் ரசீதுகளிலும், ஒட்டுக் கேட்டு, எட்டிப் பார்த்து திருடும் நுட்பங்களையும் அடுக்கினார்கள்.

திருடரை எல்லாம் சுதந்திரமாக விட்டுவிட்டு, விட்டு விடுதலையாகி சுதந்திரமாகத் திரிய விரும்புபவனின் வான் சிறகை முறிப்பதில் குறியாக இருந்தால் எகானமியும் நகராது; வயலாருக்கும் வருவாய் வராது.