சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர். ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.
சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர் சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ் முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ் என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ் விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ் ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ் டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ் தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர் வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ் வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்
பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?
புரிகிறது…
இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!? அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே… பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?
இருந்தாலும்…
துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும். இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.
எது எப்படியோ…
இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள். அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும். அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.
தமிழகத்தில் பெரியார் எப்படி இவ்வளவு பெரிய ஆளுமையாக இருக்கிறார்?
இந்தக் கேள்விக்கு விடையாக, கீழ்க்கண்ட தகவல்கள் தேவையாகின்றன:
தமிழ்நாடு அரசுத்துறையில் எவ்வளவு நூலகங்கள் இருக்கிறது?
தமிழில் எத்தனைப் பதிப்பகங்கள் இருக்கின்றன?
ஒரு பதிப்பகத்தில் இருந்து எத்தனை பெரியார் புத்தகங்கள் (எவ்வளவு ஆசிரியர்களின் பெயர் போட்டு) வருகின்றன?
ஒவ்வொரு வருடமும் (அல்லது எப்பொழுதெல்லாம் லைப்ரரி ஆர்டர் கொடுக்கிறதோ, அப்பொழுதெல்லாம்) தமிழக அரசு எவ்வளவு கோடியை பெரியார் புத்தகங்களுக்காக ஒதுக்குகிறது?
பஞ்சாயத்துதோறும் நூல் நிலையம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது எவ்வளவு பணம் புத்தகங்களுக்காக திட்டமிடப்பட்டது? அவை எந்த / எவ்விதமான நூல்களை வாங்குவதற்காக செலவிடப்பட்டன?
பெரியார் நினைவு சமத்துவபுரம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், போன்று தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் இருக்கின்றன?
பெரியார் உருவப்படங்கள் திறப்பிற்கு எவ்வளவு செலவிடப்படுகின்றன? ஆண்டுதோறும் வேறு எவர் எவர், பிறந்தநாளை முதலமைச்சரும் மந்திரிகளும் வலுக்கட்டாயமாகக் கொண்டாடுகின்றனர்?
ஈ.வெ.ரா. பெயரில் எத்தனை விருதுகள் இயங்குகின்றன? தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளும் பள்ளிப்படிப்பிற்கான ஸ்காலர்ஷிப்களும் அவருடைய பெயரின் தலைப்பில் இயங்குவதைப் போல் வேறு எவருக்காவது நடத்தப்படுகிறதா?
எத்தனை சாலைகள் அவருடைய பெயர் தாங்கி இருக்கிறது? எத்தனை இடங்களில் ஒரே பெயர், பெரியாரின் பெயரை தன் தலைப்பில் வைத்திருப்பதால் குழப்பம் உண்டாகிறது?
பெண் பார்ப்பது இப்பொழுது ஆண் பார்ப்பது என அழைக்கப்படுகிறது. பத்தாண்டுகள் முன்பு வரை ”மாப்பிள்ளை முறுக்கு” பிரபலம். இப்பொழுது மணப்பெண் ப்ரெட்ஜல் (pretzel) புகழடைந்திருக்கிறது.
இதற்கான உதாரணங்களை முதலில் காண்போம்.
“பையன் பக்தி சிரத்தையாக இருக்க மாட்டானே? நாள்தோறும் கோவில் கோவிலாக ஏறி இறங்க மாட்டானே? காலங்கார்த்தாலே பூஜை, புனஸ்காரம் செய்ய மாட்டானே?” – இது இன்றைய கால்கட்டிற்கு மணல்கயிறு மாதவிகள் போடும் முதல் கட்டளை.
“அமெரிக்காவா… லாஸ் ஏஞ்சலீஸ்னா சரிப்படலாம். எங்களுக்கு குளிர் ஒத்துக்காது. அங்கே சமையற்காரி வைச்சுண்டா, தேவயானி கோப்ரகாடே மாதிரி அம்மணமாக்கி வேற சோதனை செய்யறா!” – வெளிநாட்டினருக்கு இடமில்லை என்னும் சுதேசிக் கொள்கையும் இப்பொழுது பரவலாகி வருகிறது.
“இருபது லட்சமாவது சம்பளம் வாங்குகிறானா? பொறியியல் மட்டும் இல்லாமல் மேலாண்மையும் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறானா? கூடவே பி.எம்.பி., சிக்ஸ் சிக்மா, ஜாவா, பி.எச்.பி. பரீட்சை எல்லாம் தேறி சான்றிதழ் இருக்கிறதா?” – அம்மி மிதிப்பதற்கு முன் காலாகாலமாக சம்பந்திகள் முன்வைக்கும் கட்டளையும் உண்டு.
எல்லாப் படமும் மறு ஆக்கம் செய்கிறார்களே… ’மணல் கயிறு’ மறுபடி மருமகள் நிபந்தனைகளைக் கொண்டு வந்தால், “எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை” பாட எந்தப் பாடகி நீங்கள் தேர்வு செய்வீர்கள்?
1. கூடங்குளம் உண்ணாவிரதம் » ஜெயமோகன்: இந்தநிமிடம் வரை நம்முடைய முக்கியமான அதிகார பீடங்கள் எவையும் அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதுவரை அவரைநோக்கி ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக்குரல் வரவில்லை.
ஒசாமா பின் லாடன் மதத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார். வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாதவர்களை அமெரிக்காவில் யூனியன் தொழிலாளிகள், மிரட்டி உருட்டுவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்; அடி வாங்கி இருக்கிறேன். இந்த மாதிரி கொள்கைக்காக கொண்ட லட்சியத்தில் ஈர்ப்போடும் முனைப்போடும் இருப்பவர்களின் உள்நோக்கங்களை ஆராயாமல் உள்ள உறுதியை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டுமா?
2. இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை… « திண்ணை – ஞானி: சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்த்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள்.
நீங்களும் இணையத்தை பரவலாக வாசிப்பீர்கள் என்று அறிந்திருக்கிறேன். மின்ரத்து இல்லாத சில மணித்துளிகளில் கீழ்க்கண்ட உரல்களை படித்து தெளிவடைவீர்கள் என்று நம்புகிறேன்.
3. அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள் ! | வினவு!: ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ, வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.
தங்கம் வாங்கினால் திருடு போய் விடும். வண்டி ஓட்டினால் விபத்துக்குள்ளாகும். கணினியால் கண் பிரச்சினை வரும்; செக்ஸ் வைத்துக் கொண்டால் எயிட்ஸ் வரும். மின்சாரம் வந்தால் ஆபத்து வருமா?
4. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar: They promise foreign direct investment (FDI), nuclear power, development, atom bombs, security and superpower status. We demand risk-free electricity, a disease-free life, unpolluted natural resources, sustainable development and a peaceful future.
நிலக்கரி போன்ற நச்சுத்தன்மையற்ற எரிசக்தி கிடைப்பது ஏன் பிடிக்கவில்லை? கேரளா மாநிலம் முழுக்க காற்றாலையால் ரொப்பி வருண பகவான் அருளினால் கூட கூடங்குளம் போன்ற குறுகிய இடத்தில் கிடைக்கும் உற்பத்தி கிடைக்காது. மக்கள் முன்னேற்றத்தை விட, தங்கும் இருப்பிடத்தை விட இராட்சத காத்தாடிகள்தான் தங்கள் குறிக்கோளா?
5. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.: அணுக்கழிவுகளை தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்று சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையில் இருந்து கழற்றி வைத்து விட்டு பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது.
.
.
ஃபாசில் எரிபொருட்களின் வளம் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப்பிரச்சனை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும்.
ஒரு யுரேனியம் குளிகை – அதாவது உங்களின் சுண்டு விரல் கூட அல்ல… சுட்டுவிரலின் நுனி
– (சவுதி எண்ணெய்க் கிணறுகளின் கிடைக்கும்) பதினேழாயிரம் கன சதுர இயற்கை வாயு
– எண்ணூறு கிலோ நிலக்கரி
– ஐநூறு லிட்டர் பெட்ரோல்
இப்படி முழுவதும் தயாரான, தற்கால நுட்பங்களை உள்ளடக்கிய, தொழிற்சாலையை இயக்குவதில் அதன் மூலம் பயனடைவதில் ஏன் சுணக்கம்?
6. Koodankulam: Letter to IAEA, Nuclear Regulators and Human Rights Organisations — DiaNuke.org: The KKNPP reactors from Russia are being set up without sharing the Environmental Impact Assessment (EIA), Site Evaluation Study and Safety Analysis Report with the people, or the people’s representatives and the press. No public hearing has been conducted for the first two reactors either
அமெரிக்கா வரை சு. ப. உதயக்குமாரால் சுற்றுலா வரமுடிகிறது. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாட முடிகிறது. உலகெங்கிலும் இருந்து பணம் கொணர முடிகிறது. ஆனால், திருநெல்வேலி வரை வந்தவர்களை சந்திக்க செல்ல முடிய வில்லையா? அரசு ரகசியங்களையும் பாதுகாப்பு ஆவணங்களையும் படிப்பதற்கு நேரம் ஒதுக்க மனமில்லையா?
7. 02 | மார்ச் | 2012 | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்: “உதயகுமாருக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம்”: ஜெர்மனிய நிறுவனத்திடமிருந்து –
2,15,21,900.00 ரூபாய். INDISKA MAGASINET AB Box 27317,S-102 54,Stockolm, Sweden என்கிற ஸ்வீடிஷ் நிறுவனத்திடமிருந்து 41,91,222.00 ரூபாய்.”
இவ்வளவு சொல்ப வருமானத்தை வைத்துக் கொண்டு பள்ளிச்சிறுவர்களை படிக்க அனுப்பாத பெற்றோர்களுக்கு பஞ்சப்படி தர முடிகிறதா?
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இணையத்தில் தேடினால், ‘Whats the worst that could happen’ என்று விளக்கும் பதிவுகள் முதலில் தென்படுகின்றன. அவற்றில் இருந்து என் புரிதல்:
1. கேரளாவிற்கு அருகில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு போல் பிரச்சினைக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளும் இடம் தோதுப்படாது.
2. ராஜீவ் காலத்திலேயே கையெழுத்திட்டதால், தற்போதைய எம்.பி.க்களுக்கு கையூட்டு கிட்டவில்லை.
3. இலங்கையில் விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத சக்திகள் அடக்கப்பட்டுவிட்டாலும், பாகிஸ்தானில் இருந்து முஜாஹிதீன் யாராவது கள்ளத் தோணியில் வெடிகுண்டு போடுவார்கள்.
4. இந்த மாதிரி பயங்கரவாதக் குழுக்களும், அவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவமும், ராணுவத்திடமிருந்து மக்களை பாதுகாக்க காவல் படையும் குவிவதால், நிலநடுக்கம் ஏற்படலாம்.
5. முன்னாடி லெமூரியா கண்டம் இருந்ததே இன்னும் ருசுப்படவில்லை. இந்த லட்சணத்தில் குமரிக் கண்டமும் திராவிடர்களுக்கு இல்லாமல் சுனாமிக்கு இழக்கலாமா!
6. தூத்துகுடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களுக்கும், போராட்டக்குழுவுக்கு தலைமையேற்றுள்ள உதயகுமார் அவர்களுக்கும் முறையே 54 கோடி ரூபாயும், உதயகுமார் அவர்களுக்கு 1.5 கோடி ரூபாயும் வந்தது வெறும் முன்பணம் மட்டுமே. முழுப்பணம் இன்னும் பட்டுவாடா ஆகவில்லை.
7. இப்போதாவது தினசரி 550 ரூபாய் கிடைக்கிறது. மின் உற்பத்தி துவங்கி விட்டால், இந்த வருவாயும் நின்றுவிடும். தேர்தலும் இல்லாத தரிசு காலத்தில், கூட்டத்தில் நிற்போரின் தினப்படியை கொடுக்கவிடாமல், வாயில் அடிப்பது நன்றாக இல்லை.
8. உலகமே இன்னும் கொஞ்ச நாளில் இருளில் மூழ்கிவிடும். அப்போது தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க, இப்போதில் இருந்தே பழக்கப்படுத்தும், சூரிய ஒளியை மட்டும் நம்பி வாழவைக்கும் திட்டம்.
9. வைகோ போன்ற பேச்சாளர்களுக்கு பேச, உணர்ச்சி உரை ஆற்ற ஒரு விஷயம் குறைந்து போகும் அபாயம்.
10. நெய்வேலியில் இன்னும் கரி இருக்கிறதே! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் இருக்கிறதே!! இலையில் இருந்து எண்ணெய் கொடுக்க ராமர் பிள்ளை கண்ட அறிவியல் தமிழ்நாட்டில் அணுசக்தி எதற்கு!!!
தேவேந்திர குல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், இன்று இரவு 9 மணியளவில் திண்டுக்கல் பக்கம் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி பக்கமுள்ள தாளமுத்து நகர். இங்குதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்ட இவரது மனைவி வழக்கறிஞர் ஜசீந்தா பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டுள்ளது.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அந்த பெயரில் தனிப்பட்டியல் உருவாக்க வேண்டுமென தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் இவர் வலியுறுத்தினார்.
பசுபதி பாண்டியன், தென்தமிழகம் நன்கு அறிந்த தலித் சமுதாய தலைவர். ஆரம்பத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் இணைந்து செயல்பட்டவர். அம்மன்புரம் வெங்கடேச பண்ணையாருடன் (திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் கணவர்) ஏற்பட்ட மோதல்களின் காரணமாக திண்டுக்கல் சென்ற இவர், கடந்த சில வருடங்களாகவே, மீண்டும் தென் மாவட்டங்களில், தனது சமுதாய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வந்தார். பல்வேறு அரசியல் ரீதியான போராட்டங்கள், உண்ணாவிரதம், பொதுக்-கூட்டம் என்று தலித் சமுதாய மக்களின் கவனத்தைத் தன்பால் மீண்டும் திருப்பிவிட முயன்றார்.
Video taken in Nakkasalem_perambalur district: Dhevendra kula vellaalar commuinty board and flag hosting with Maaveeran. Pasupathi Pandian on 22.08.2010.
தேவேந்திர-குல வேளாளர் கூட்டமைப்பு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராம-நாதபுரம், சிவகங்கை, திருச்சி ஆகிய 7 தொகுதிகளில் ஜாதி செல்வாக்குடன் இருக்கிறது.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும் என்றும் பசுபதி பாண்டியர் போராடினார்.
சி. பசுபதி பாண்டியன் பேச்சில் இருந்து:
“எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.
எங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.
தில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.
தமிழகத்தில் பல இடங்-களில் ஜாதிக் கலவரத்திற்கு கிருஷ்ணசாமிதான் காரணமாக உள்ளார், மதுரை உத்தம-புரத்தில் நடந்த கலவரத்தில் சுரேஷ் என்ற வாலிபர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனார். மாஞ்சோலை பிரச்னைக்காக கிருஷ்ணசாமி நடத்திய ஊர்வலத்தில், 17 பேர் இறந்து போயினர். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் தலித் மக்களுக்கு என்ன லாபம்? இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி எரியத் தொடங்கிய நேரம் அதனை சற்றுத் திசை திருப்பவே அந்தக் கலவரம் பயன்பட்டது.”
வீட்டுக்கு வீடு வாசப்படி. மேற்கத்திய நாடுகளிலாவது, சாப்பாட்டின் உள்ளடக்கம் என்ன என்பதை வெளிப்படையாக பட்டியலிட வேண்டும் என்று சட்டம் இருப்பது ஆறுதல். இருந்தாலும், உணவின் தலைப்ப்பை விட்டுவிட்டு குட்டி எழுத்துருவில் நுணுக்கி நுணுக்கி எழுதியிருப்பதை எங்கே வாசிக்கப் போகிறோம்!?
செய்தி
Zabar’s Sold It as Lobster Salad, but Key Ingredient Was Missing – NYTimes.com: For at least 15 years, Zabar’s, the Upper West Side grocery with the big crowds and even bigger prices, sold that as lobster salad — thousands and thousands of pounds of it, by itself in a plastic tub or on a bagel or a roll. Apparently no one noticed.
இங்கிலீஷ் லாப்ஸ்டர் பர்கர்
தெலுங்கு காக்கா பிரியாணி
இந்திய செய்தி
கோழி, காடை, கௌதாரி போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால் காகங்களை பிடித்து தரும்படி சில ஹோட்டல் உரிமையாளர்கள் இவர்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து தெர்மல் நகர் கடற்கரையில் கோழி தீவனத்தில் மரு்நது கலந்து காகங்களை வேட்டையாடியுள்ளனர். பின்னர் தோலை உரித்து இறைச்சியாக்கி தூத்துக்குடி, ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்துள்ளனர்.
ஹோட்டல்களிலும் மசாலா தடவி காடை, கௌதாரி என்று கூறி காக்கா பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது.
”ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயரில் ஹோட்டல்கள் நடத்துபவர்களுக்கு, கோழிக் கறியை மட்டும் வாங்கினால் கட்டுப்படியாகவில்லையாம். அதனால் கோழிக் கறியோடு நாங்கள் கொடுக்கும் இந்த காகங்களின் கறியை கலந்து… சிக்கன் ஃப்ரைடு ரைஸ், சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள்”
ஒரிஸ்ஸாவில் எப்படி ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல்களில் காக்கா-சிக்கன் புழக்கத்தில் இருக்கிறதோ, அதேபோல மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் நாய்-சிக்கன் புழக்கத்தில் இருக்கிறது.
நிதிஷ்குமார் பிகார் முதல்வராக பதவியேற்ற புதிதில், பீஹார் மாநிலத்தின் அனைத்து அசைவ ஹோட்டல்களிலும் கட்டாயம் எலிக்கறியினால் தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு உணவாவது இருக்க வேண்டும் என்று சட்டம் போடவே முயற்சி செய்தார்.
தமிழ்நாட்டில்? இங்கே அணில்-சிக்கன் மற்றும் கீரிப்பிள்ளை-சிக்கன் பல ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் மணம் வீசுகின்றன.
இதுபோல இந்தியாவின் மற்ற மாநிலங்களையும் சுற்றி வந்து பார்த்தால் பூனை-சிக்கன், குரங்கு-சிக்கன் என்று விதவிதமான சிக்கன் அயிட்டங்கள் ஃபாஸ்ட் ஃபுட் ஓட்டல்களில் விற்பனையாவதை கண்டுபிடிக்க முடியும்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde