பத்ரியை பதிவுலகில் அறியாதவர் இலர். அவரை தமிழக அரசியல்வாதி ஆக்குவது எங்ஙனம்?
1. வண்ணச் சொக்காயை விட்டு வெள்ளை சட்டை; அரைக்கால் டவுசரை விட்டு, கரை வேட்டிக்கு மாறவேண்டும்.
2. புதிய தலைமுறை, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சன் செய்திகளில் வரவைத்துக் கொள்ள வேண்டும்.
3. அதன் தொடர்ச்சியாக புதிய சேனல் துவங்க வேண்டும்.
4. குஷ்பு போல் புரட்சிகரமான கருத்துகள் சொன்னால் போதாது; திருமா போன்றவர்களிடமிருந்து மிரட்டல்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
5. நல்ல தமிழில் பேசுவதிற்கு பதிலாக பக்கா லோக்கல் தமிழில் பண்பாட்டுடன் உரையாட வேண்டும்.
6. அலைக்கற்றை, அயோத்தியா என்று இதுவரை எழுதியவற்றை அழித்துவிடவேண்டும்.
7. அழித்தவுடன், அதன் துணுக்குகளை வெகுசன ஊடகங்களான விகடன், குங்குமத்தில் வரவைக்க வேண்டும்.
8. தமிழ் பேப்பரை மாலை நாளிதழாக்கி மாயவரத்தாரையோ மருதரையோ மாஸ் தலைப்பு தூண்டில் உற்பத்தியாளராக்கி தேநீர் நிலையங்களில் சூடு பறக்க வேண்டும்.
9. ’அரசியல்வாதி ஆவது எப்படி’ என்று புத்தகம் அச்சிடக் கூடாது.
சார் ! பதிவு நச்!
1. அம்மாவையும் அய்யாவையும் ஒருமுறை மாறி மாறித் திட்ட வேண்டும். பின்னர் திடீரெனப் பாராட்ட வேண்டும்.
2. திராவிடர்கள் யார்? – என்று சூடான ஒரு அரசியல் கட்டுரை எழுத வேண்டும்.
3. ஹிந்துத் தலைவர்கள் யாரையாவது பற்றி கன்னா பின்னா என்று பேச வேண்டும்.
4. ராமதாஸ் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
5. உலகில் முன் தோன்றிய மூத்த குடி தமிழன் தான் என்பதை மேடை போட்டுப் பேச வேண்டும்.