Monthly Archives: மே 2006

Bacchanalia

இந்தப் பதிவினால் உங்களுக்குப் பயன் இல்லாவிட்டாலும் வழமை போல் தலைப்பு சுட்டி பயன்படலாம் :-D)

வலைப்பதிவர் பெயர்: பாலாஜி

வலைப்பூ பெயர்: ஈ-தமிழ் (கண்டதைச் சொல்கிறேன்)

சுட்டி (url) : http://etamil.blogspot.com

ஊர்: பாஸ்டன்

நாடு: அமெரிக்கா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: டேவ் பாரி

முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம் : ஜூலை 22, 2003

இது எத்தனையாவது பதிவு: 1264

இப்பதிவின் சுட்டி (url): http://etamil.blogspot.com/2006/05/Bacchanalia.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: http://etamil.blogspot.com/2004/08/blog-post_109207326898647992.html
மேலும், எல்லாரும் ஆரம்பித்தார்கள். நானும் ஒன்று தொடங்கி எப்படி என்று அறிந்து கொள்ளலாமே என்றுதான்.

சந்தித்த அனுபவங்கள்:

 • இந்தியா நியு இங்கிலாந்து, லிட்டில் இந்தியா போன்ற பத்திரிகைகளில் இருந்து அவ்வப்போது செய்திகளை சேகரிக்க அழைத்தது
 • காப்புரிமை பெற்ற வெகுஜன ஊடக எழுத்தை வெளியிடுவதால், வழக்குத் தொடுக்க நேரிடலாம் என்னும் தனிமடல் எச்சரித்தது
 • போட்ட இடுகையை எடுத்தால்தான் ஆச்சு என்று இருவர் அணி படை திரண்டு வந்து, டயரிக் குறிப்பை நீக்கும் வரை தர்ணா நடத்தியது
 • சென்னை வருகை போதெல்லாம் பதிவர் வட்ட நட்புகளை சந்திப்பது
 • மகளிடம் ‘எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டரிலேயே இருக்கிறே‘ என்று குற்றஞ்சாட்ட வைத்தது
 • விமான நிலையத்தில் நடிகர் வடிவேலுவை சந்தித்தவுடன் செல்பேசியின் ஒலிப்பதிவானை முடுக்கி பேட்டி கேட்க வைத்தது
 • அதிகாலையில் சேவலை தூக்கம் செய்து, தினம் கூவ செய்யாத அளவு விழித்திருக்க வைத்தது

  பெற்ற நண்பர்கள்:

  தனி மடலிடக் கூடிய, தொலைபேசக் கூடிய, சந்திக்க கூடிய என்று பட்டியலிட்டதில் சில… (நான் இவர்களின் நண்பன் என்று சொல்லிக் கொள்வதில், அவர்களுக்கும் பிரச்சினை இல்லாதவரை சரி 🙂

  ஸ்ரீகாந்த் மீனாக்ஷி | சிறில் அலெக்ஸ் | திருஞானசம்பந்தம் | நிர்மலா | திலகபாமா | ரவி ஸ்ரீனிவாஸ் | காசி | ரமணி | மெய்யப்பன் | சுந்தரவடிவேல் | ராஜேஷ் சந்திரா | கார்த்திக் ராமஸ் | ராம் பிரசாத் | ரோசாவசந்த் | சசி | பிரேமலதா | கணேஷ் | நாராயண் | பவித்ரா | பத்மா அரவிந்த் | கேப்ஸ் | பிரபு

  கற்றவை:

 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_108066127019443659.html
 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_25.html
 • http://etamil.blogspot.com/2004/02/blog-post_12.html
 • http://etamil.blogspot.com/2004/01/blog-post_107538961932423572.html
 • http://etamil.blogspot.com/2004/01/blog-post_26.html
 • http://etamil.blogspot.com/2004/05/blog-post_108563190638910592.html
 • http://etamil.blogspot.com/2004/05/vs.html
 • http://etamil.blogspot.com/2004/05/blog-post_19.html
 • http://etamil.blogspot.com/2004/06/belief-without-facts.html
 • http://etamil.blogspot.com/2004/06/blog-post_07.html

  எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

 • இந்தியாவிற்கு 1947-இலும், அமெரிக்காவிற்கு 1776-இலும் கிடைத்ததை விட அதிகம்
 • தண்ணீர் தண்ணீர் கதாபாத்திரம் போல் வளர்ச்சி கம்மிதான்
 • உறவினர்கள் படிக்க ஆரம்பிக்கும் வரை கிடைக்கும்
 • அர்ஜுன் நடித்த படம் போல் அடிதடி கிடைக்க உதவியிருக்கிறது
 • வெளியில் கிடைக்காததற்கு வடிகாலாக இருந்திருக்கிறது
 • பொருளாதார சுதந்திரமாக மாறவில்லை

  இனி செய்ய நினைப்பவை:

 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_107996806683069343.html
 • http://etamil.blogspot.com/2004/06/blog-post_27.html
 • http://etamil.blogspot.com/2004/06/blog-post_16.html
 • http://etamil.blogspot.com/2004/06/no-judgments-only-bull.html
 • http://etamil.blogspot.com/2004/07/blog-post_109027408037286603.html
 • http://etamil.blogspot.com/2004/11/blog-post_08.html
 • இப்படியே பொழுதை ஓட்டுவது

  உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

 • http://etamil.blogspot.com/2006/04/me-myself-balaji.html
 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_108032073042674387.html
 • http://etamil.blogspot.com/2004/03/blog-post_24.html
 • http://etamil.blogspot.com/2004/04/blog-post_108248451965241070.html
 • http://etamil.blogspot.com/2004/05/fight-club-what-movie-do-you-belong-in.html
 • http://etamil.blogspot.com/2004/06/blog-post_108863526079336330.html
 • http://etamil.blogspot.com/2005/01/blog-post_21.html

  இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
  புனிதப்பசுக்களை கூறுபோட்டு barbecue உண்ண விரும்புபவர்களுக்கு ஏற்ற பதிவாக எழுத நினைத்தேன். எலிக்கறியை சமைப்பதுதான் கைவந்த கலையாக ஆகியிருக்கிறது.

  எல்லா சுட்டிகளையும் க்ளிக்கியவருக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்ட பலனும், 108 சக்தி பீடங்கள்/திவ்ய தேசங்கள், ஐந்து சபைகள், பஞ்ச பூதத்தலங்கள், பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் சென்ற புண்ணியமும், பதினாறு பேறுகளும், அறுபத்தி மூன்று கலைத் தேர்ச்சியும், ஆஃபிஸில் சீட்டு கிழியும் ப்ராப்திரஸ்து!


  |

 • Blogtoons – Bizarro & Cornered Adaptations

  அசல் கருத்துப்படம்:

  வலைப்பதிவுக்குத் தோன்றிய கருத்துப்படம்:

  வலைப்பதிவின் வார்ப்புருவிலேயே இது இருப்பதால், ஒவ்வொரு இடுகையுடனும் இந்த மறுப்புக்கூறு வந்துவிடும்: ‘இந்தப் பதிவில் உள்ள தகவற்பிழைகளை சரி பார்ப்பது ஆசிரியரின் பொறுப்பல்ல!


  அசல் கருத்துப்படம்:

  வலைப்பதிவுக்குத் தோன்றிய கருத்துப்படம்:

  “நான் இந்தப் பதிவை விமர்சனமாகத்தான் எழுதினேன். தன்னிலைப்பாடை விளக்க எனக்குத் தெரியாது!”


  அசல் கருத்துப்படம்:

  வலைப்பதிவுக்குத் தோன்றிய கருத்துப்படம்:

  என்னுடைய குழந்தைகள் பார்த்து கேலி செய்யற மாதிரி ஏதாவது எழுதணும்!


  |

  MDMK – Absent in UPA-Left panel meet

  BBCTamil.com

  இந்தியாவில் ஆளும் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
  இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று புது டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  ஆளும் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவானதையடுத்து, பல்வேறு துறைகளில் கண்ட முன்னேற்றங்களை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தனர். இந்தியாவில் உள்ள உயர்திறன் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

  ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு, கடந்த தமிழகத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்ட மதிமுக சார்வில் எவரும் கலந்து கொள்ளவில்லை என்றும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  Daedalus & Kamalhasan

  நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்ற ஆங்கில வார்த்தையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது daedal பொருத்தமானதாகப் பட்டது. வார்த்தையின் மூலத்தைப் பார்த்தபோது eponym என்கிறார்கள்.

  அதாகப்பட்டது…

  An eponymous adjective is an adjective which has been derived from the name of a person, real or fictional. Persons from whose name the adjectives have been derived are called eponyms.

  தொகுப்புகளைத் தவிர வேறெங்கும் சிறுகதைப் படிப்பதை விட்டுவிட்டதால், கமலின் ஆனந்த விகடன் கதையைத் தவறவிட்டிருந்தேன். கடகடவென்று படித்து முடித்தேன்.

  ஆரம்ப விமர்சகனாக கடுமையாக வாசக அனுபவத்தை முன்வைக்க மனம் துள்ளியது.

  “கமல் என்னும் daedalus எழுதியிருக்காவிட்டால் இந்த மாதிரி பதிவெழுதி வாசகரை வரவழைப்பேனா” என்றார் பதிவை படித்த கமல்.

  “ஆம்! இது சக பதிவர் பார்க்கும் பதிவு” என்றேன்.

  “சில சமயம் வாசகர்களும் பார்ப்பாரே” என்று சிரித்தார். “பார்ப்பார்கள். உங்க பெயருக்காக படிப்பார்கள். நீங்கதான் ஹீரோ! உங்க கிறுக்கல், உங்க கதை.”

  “சரி, புராணமெல்லாம் ரொம்ப புரட்டறீங்களா?” என்றேன்.

  “ம்…?”

  “நாலைந்து கருத்துக்களை வெட்டி ஒட்டி தந்துட்டீங்களே?”

  நான் சற்றும் எதிர்பாராத பதில் தந்தார்.

  “நான் கற்பிழந்த நாள்.”

  “ஓ! நவீன இலக்கியவாதி பரிச்சயம் இருந்தாலும் கற்பு எல்லாம் உங்க vocabulary-இல் இருக்கிறதா?”

  “என்னை மாதிரி எழுத try பண்றே” என்றார்.

  “In what way? Style or stuff?”

  “ஸ்டைல்தான் யதார்த்தமாய் இருக்கிறதே?”

  “உண்மைதான். ஸ்டஃப்?”

  “புதுசா யோசிக்கலை என்கிறாயா?”

  “நியாயப்படுத்துகிறாயா, கருப்பொருளை வைத்து நாலு புல்லட் பாயிண்ட் இடுகிறாயா, கவிதையை சிறுகதையாக்கினாயான்னு கேக்கறேன்?”

  “Inspiration” என்றார் வீம்புக்காக.

  சிரித்துவிட்டு, “முன்பு ஒரு காலத்துல சொக்கன் எழுதிய மாதிரி புத்திசாலித்தனம், புது விஷயம் எதுவும் இல்லியே?”

  “Why not?” என்றார் விட்டுக் கொடுப்புடன்.

  “உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு வரி விமர்சனம்… ‘நோட்பேடில் நாலு வரி கிறுக்கல் – எப்படி?”

  “Too much!”

  “ஏன்?”

  “Why not?”

  “கதையின் கரு உனக்கு முன்பே தோன்றியிருக்கா?”

  “இப்படியெல்லாம் யோசிச்சு time waste செய்யணுமா?” என்றேன்.

  “Agreed. நீ என்ன சொல்றே? ஏன் அப்படிச் சொல்றே? அப்படிச் சொன்னதுக்கு என்ன காரணம்?”

  “ஓ! விமர்சனத்தின் கூறுகளையும் விமர்சகர்களின் லட்சணங்களும் எப்படின்னு கேக்கறீங்க? சொல்றேன். credentials கேட்டீங்கன்னா, அச்சுப் பத்திரிகையில் வெளியானது ஒண்ணுமில்ல. ஆனா, கருத்துக்கள் பதிவர் சாட்சியா உண்மை.”

  “அப்பிடின்னா?”

  “இது எனக்கு சிற்றிலக்கியவாதிகள் சொன்ன டெக்னிக்.”

  “ஓ! உன் மனசு சொல்லவில்லையா?” என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

  “இல்ல… என் மனசு எனக்குப் பழக்கமில்லை. ஆனால், பதிவர்கள் வேறு விஷயம்.”

  “ஓஹோ! பதிவர் உங்க நண்பரா?”

  “ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. எப்பவாது நாலு வார்த்தை ஆங்காங்கே படிப்பேன். அந்தரங்க ரகசியங்களை கிசுகிசுக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலை எழுத்தாளர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் உறுப்பினரா இருக்காரு.”

  “Wow! Cool Confessions?”

  “No, a cold truth” என்றேன்.

  துவங்கினேன்… “பதிவர் எழுதியபடி அதிக புனைவோடு சொல்றேன்.”

  “கதையில் ஆங்கிலக் கலப்பு தூக்கல். சினிமா மாதிரி டார்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் கொளுத்தறீங்க” என்று விமர்சிக்க ஆரம்பித்தான் பதிவன்.

  “Attribute எல்லாம் பட்டியலிடுவது போல் அக்னி என்னும் noun-ஐ வைத்துக் கொண்டு முன் பின் சென்று கொஞ்சம் ஸ்பானிஷ் மொழிப் படம் போல் அவார்டு கதை எழுத முயற்சித்து இருக்கீங்க.

  ரெண்டு பேர் பேசறது மாதிரி சின்னக்கண்ணன் ரோஸி மாடசாமி என்று நாய்களை வைத்து இதைவிட பெட்டரா எழுதுவார்.

  ஆனா, அவர் மருதநாயகம் எடுக்கப்போறேன் என்று அறிவிப்பு விடுவதில்லை.

  நண்பர்களுக்கிடையே எதற்கு பிராமணா பாஷை?”

  “சரி! கிறுக்கல் என்பதற்கு காரணமென்ன? இது விமர்சனம், ஞாபகமிருக் கட்டும்” என்று ஞாபகப் படுத்தினார்.

  பின்னூட்டத்தின் எரிச்சலைக் காட்டாமல் பதிவன் பதில் பதிவு எழுதலானான்…

  “செவ்வாய்க்கு விடப்படும் விண்கலம் தன் பாதையில் இருந்து வழுவி திங்கள், புதன், வியாழன், வெள்ளி, என்று கோள்தோறும் வலம் வந்தால் நாஸாவிற்கு லாபம்தான். கதை இலக்கற்று பல தகவல்களை நிரம்பியிருந்தால் வாசகனுக்கு லாபமே. ஆனால், அதற்குப் பெயர் புராண தகவல் கோர்வை. சிறுகதை என்று சொல்லி சிறுமைப்படுத்தினால், ஒருசில இணையக்குப்பைகளே மேல் என்னும் முடிவுக்கு உங்கள் ரசிகர்கள் வந்துவிடக் கூடும். அதன் பின் திருட்டு விசிடியில் கூட வேட்டையாடு விளையாடு பார்க்க மாட்டார்கள்.

  கமல் என்னும் நடிகனின் ஆளுமை என்று கட்டுரை ஆரம்பித்து, நான் களத்தூர் கண்ணம்மாவை தூர்தர்ஷனில் மின் தடங்கல் இல்லாமல் விளம்பரம் வாராமல் டிவோ பதிவு செய்யாமல் பார்த்த கதை; விருமாண்டியில் ‘உன்னை விட’ மாதிரி இரவில் காதலியுடன் பைக் ஓட்டியபோது போலீஸ் எஃப்.ஐ.ஆர். கோப்பாக்கிய தரவு; ஆகவே, வேலை பார்க்காமல் சிறுவனாகவே மனத்தளவில் இருந்திருந்தால் பைக் மேல் காதல் தொடர்ந்திருக்கும் என்று எழுதினால் எப்படியிருக்கும்?”

  தன் எழுத்தையே வருகையாளர்களின் தூண்டிலாக ஆக்கினான் பதிவன் என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

  விவாதம் தொடர்ந்தது.

  ஆனந்த விகடன் சுட்டி: அணையா நெருப்பு – கமல்ஹாசன்

  கமல் குறித்த முந்தைய புனைவு: கமல் கண்ட கனவு


  Maaya Valai – Kumudam Reporter

  பா ராகவன் அடுத்த தொடர் ஆரம்பித்து விட்டார். மாய வலை. முதல் வாரத்திலேயே ‘ஓம் போன்ற வித்தியாசமானவர்களை சொல்லி கட்டிப் போடுகிறார். நூறு வாரங்களுக்குக் குறையாமல் ஜபடிஸ்டாவில் ஆரம்பித்து அபு சாயஃபுக்குத் தொடர்பைக் காட்டி பாஸ்க், கஹானே சாய், டெவ் சோல் என்று ரவுண்ட் கட்டி ஆடுவார் என்று ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

  Maaya Valai - Kumudam Reporter

  இரண்டாவது பகுதியில் இருந்து….

  எதேச்சாதிகாரத்துக்கு எதிரான போர். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம். அடக்குமுறைக்கு எதிரான துவந்த யுத்தம். ஆனால் இவர்கள் யோசிக்கத் தவறும் விஷயம், பிரெஞ்சுப் புரட்சியின்போதோ, ரஷ்யப் புரட்சியின்போதோ, புரட்சியின் நோக்கம் மக்களாட்சி என்பதாக மட்டுமே இருந்தது என்பதுதான்! தவிரவும், இந்தப் புரட்சியாளர்கள் முடியாட்சிக்கு எதிராக, அமைதியான வழியில் மட்டுமே போராட்டத்தைத் தொடங்கினார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். போராட்டத்தின் உச்சகட்டக் காட்சிகள் மட்டுமே நேரடி யுத்தமாக இருந்தன. போராட்டத்தில் எந்தப் பொதுச்சொத்தும் சேதமானதில்லை என்பதும், அப்பாவி மக்கள் பலிகடாக்களாக்கப்பட்டதில்லை என்பதும், கொடூரமான கொலைவெறிக் காட்சிகள் தினத்துக்கு ஒன்றாக அரங்கேறியதில்லை என்பதும் இதன் பின்னிணைப்புகள்.

  புரட்சி என்ற சொல்லின் அர்த்தமே மாறிவிட்ட காலகட்டத்தில், தீவிரவாதத்தின் பாடு குறித்துச் சொல்லவேண்டாம். அந்தக் காலத்தில் புரட்சியாளர்கள், மக்களின் ஆசியுடன், மக்கள் மத்தியிலிருந்தே தோன்றினார்கள். இன்றைய தீவிரவாதிகள் உருவாகக் காரணமாக, சமூக விஞ்ஞானிகள் முன்வைக்கும் காரணங்களைப் பார்த்தால் மூச்சு முட்டும்.

  ஏழைமை. கல்வியின்மை. பசி. இவற்றின் மீது ரகசியமாக ஏற்றப்படும் மதவெறி என்கிற விஷ ஊசி. இதன் விளைவாகப் பீறிடும் கோபத்தை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம். இந்தக் கோபம், எங்கெங்கோ மூலைகளில் எத்தனையோ பல தனிமனிதர்களுக்கு உருவாவதாகவே இருந்தாலும், இதனை ஒன்று சேர்ப்பது பெரிய விஷயமல்ல என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

  Maaya Valai - Kumudam Reporter


  | |

  Election Result Analysis from Bloggers

  தமிழ் வலைப்பதிவுகளில் இருந்து நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், அமைக்கப்பட்ட மந்திரிசபை குறித்தும், அவர்களின் முடிவுகள் குறித்தும் ஒரு சில பார்வைகள்…

  கலைஞருக்கு ஒரு கடிதம் : வலைஞன்
  அன்புள்ள கலைஞருக்கு வணக்கம். தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். பதவியேற்ற சூட்டோடு வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைகிறீர்கள். நல்லது. ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் நீங்களும் …

  கலைஞர் காலில் விழும் முடிவை விஜயகாந்த் மாற்றியது ஏன்? : ஊசி

  துக்ளக் கார்ட்டூன் : ஊசி
  ஏற்கனவே எல்லாருமா சமையல் பண்ணிட்டோம். அதுக்கு மேலே உங்களை எல்லாம் சிரமப்படுத்த நான் விரும்பல. நீங்க சுலபமா பரிமாறிட்டு போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க. நான் கஷ்டப்பட்டு இலையிலே உட்கார்ந்து, சிரமப்பட்டு பிசைஞ்சு…

  என் பார்வையில் 2006 தேர்தல் முடிவுகள் : முத்துகுமரன்
  தேர் நிலைக்கு வந்திருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னதுபோல் போட்டி கடுமையாக இருந்தாலும் முடிவு தெளிவாகவே வந்திருக்கிறது. தமிழக அரசியல் …

  அய்யோ பாவம் ஜெயா / சன் டிவிகள் : குழலி
  ஆட்சி மாற்றம் தமிழகத்திலே நடந்தேறிவிட்டது, திமுக தனிப்பெரும்பான்மை பெறாமல் அல்லது குறைந்த பட்சம் கம்யூனிஸ்ட்கள் துணையோடு ஆட்சி அமைக்கும் நிலை வந்திருந்தால் …

  முதல் கையெழுத்து[கள்] : பத்ரி
  எந்த உத்தரவில் முதல் கையெழுத்து என்று சிலர் கேலி செய்தனர். மூன்று உத்தரவுகளில். இன்று பதவியேற்றதும் நேரு அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் …

  புதிய அரசின் புத்துணர்வு நடவடிக்கைகள் : சந்திப்பு
  தமிழகத்தில் ஆரம்ப கல்வி முதல் மேனிலை கல்வி வரை தமிழை தொடாமலே கல்வி பயிலலாம் என்ற நிலை உள்ளது. எனவே இந்த நிலையில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் கட்டாய பாடமாக்கிட வேண்டும்.

  நச்சுப் பாம்பும் – காட்டுமிராண்டிகளும் : சந்திப்பு
  தமிழக வரலாற்றில் இரண்டு கழகங்களின் ஆட்சியின் மீது மக்களது நம்பிக்கை குறைந்து வருவதைத்தான் இந்த தீர்ப்பு வெளிக்காட்டுகிறது.

  Da Vinci Code – Movie Experience

  நான் இன்னும் ‘டா வின்சி கோட்‘ புத்தகத்தைப் படிக்கவில்லை. மெத்தப் படித்த நண்பர்களின் கருத்துக்குத் தலைவணங்கி, ‘என்றாவது ஒரு நாள் வெட்டி வேலாவ இருந்தால்‘ என்னும் பட்டியலில் சேமித்திருக்கிறேன். படம் பார்ப்பது சௌகரியம் என்பதால், திரைக்கு சென்று பார்த்தபின் தோன்றிய சில எண்ணங்கள்.

  1. டிவிடி வரும் வரை காத்திருந்திருக்கலாம். நிறைய ‘கூடுதல் தகவல்கள்’, ‘பின்னணி விவரணப் படங்கள், ‘ரான் ஹாவர்டின் கருத்துரை’, டாம் ஹான்க்ஸின் விளக்கங்கள்’ என்று படம் தெளிவாகப் புரிந்திருக்கும்.
  2. திரையரங்கில் கூட்டமே இல்லை. படம் சூப்பர் ஹிட்டாவது பெரும் சந்தேகமே.
  3. லூவர் அருங்காட்சியகம் அருமையாக இருக்கிறது. பாரிஸுக்குப் போ.
  4. திரைப்படம் ஆரம்பிக்கும் முன் போடும் முன்னோட்டங்களில் [ட்ரெயிலர்] ஜேம்ஸ் பாண்ட் படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வரப்போவதாக சொல்லியிருந்தார்கள். ‘டாவின்சி கோட்’ மாதிரி புத்திசாலித்தனமானப் படத்திற்கு முன் குளிர்கால ஆஸ்கார் பரிந்துரைப் படங்களின் முன்னோட்டங்கள்தானே வந்திருக்க வேண்டும் என்று யோசித்தது என்னுடைய தப்புதான்.
  5. கிறித்துவைக் குறித்துதான் லாஜிக் இல்லாமல் கதைக்கிறார்கள் என்று பார்த்தால், ஃப்ரென்ச் காவல்துறை, அறிவுஜீவி வில்லாதி வில்லன், துப்பறியும் சிங்கம் வழியில் குறுக்கிடுபவர்கள் அனைவருமே தமிழ்ப்படம் போல் கோட்டை விடுகிறார்கள்; துப்பாக்கி இருந்தும் வீழ்த்தப் படுகிறார்கள்; முப்படை கொண்டிருந்தாலும் ஹீரோ முன் நொறுங்குகிறார்கள்.
  6. அலகு குத்துவது, அங்கப்பிரதட்சிணம் செய்வது வைத்து, ‘அன்னம்மய்யா கோட்‘ என்று திருப்பதி பாலாஜியைத் துப்பறிவதாக தமிழாக்கம் செய்து, ராஜ்கிரணும் ‘சாமுராய்‘ அனிதாவும் (வீ நீட் எ ஃப்ரெஷ் ஃபேஸ் – உதவி இயக்குநர்), வில்லர்களாக காகா ராதாகிருஷ்ணனும் (Ian McKellen), தமிழில் முதன்முறையாக நானா படேகரும்(Jean Reno), எஸ்ஜே சூர்யாவும் (Paul Bettany) நடித்தால், ஹிந்துத்வாவை மீறி, படம் வெளிவருமா என்று தெரியவில்லை; மீறி வந்தால் ஹிட்டாகும்.
  7. திரைப்படம் பார்த்த பிறகு புத்தகத்தைப் புரட்டும் வாசகர்கள் அதிகரிக்கும்.
  8. ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஒரு பாக்கெட் நாவல் எழுதியிருந்தாலே மில்லியனராகி இருப்பார்கள்.
  9. பிரான்ஸில் உல்லாசப் பறவையாக ஹீரோவும் ஹீரோயினும் திரிந்தாலும், ரதியும் கமலும் செய்த ரொமான்ஸ் கூட செய்யாம,ஃப்ரென்ச் கிஸ் அடிக்காம இருப்பதுதான் படத்தின் best kept suspense (& the spolier).
  10. We are in the middle of a war. One that has been going on forever to protect a secret so powerful that if revealed it would devastate the very foundations of mankind. என்று படத்தில் உதிர்ப்பதை

   ‘மோசமான படத்தின் நடுவில் நாம் இருக்கிறோம். எப்போது முடியும் என்றே விளங்காத மாதிரி நீட்டி முழக்குபவர்கள், நீளத்தை மட்டும் சொல்லியிருந்தால், அதிர்ந்து எழுந்திருந்து பக்கத்து தியேட்டரில் கலக்கும் ‘ஓவர் தி ஹெட்ஜ்‘ போய்விடுவோம்’

   என்று டயலாகிருக்கலாம்.


  | |

  Sundara Ramasamy

  நான் கண்ட நாய்கள் – சுந்தர ராமசாமி

  சில நாய்கள்
  வேளைகெட்ட வேளைகளில் உறங்கும்.

  சில நாய்கள்
  ‘ப்ளூக்’கெனக் கக்கி
  அக் கக்கலை
  அதி சுவாரஸ்யமாய் நக்கித் தின்னும்.

  சில நாய்கள்
  புட்டிப் புண் ஈக்கள் லபக்காக்க
  முக்கி முதுகு வளைத்தும்
  வாய்க்கு எட்டாது நகர்ந்தோடும்
  புட்டியின் ஜாலம் புரியாது சரியும்.

  சில நாய்கள்
  இருந்த இருப்பில்
  கத்தத் தொடங்கி
  நிறுத்தத் தெரியாமல்
  அக்கத்தலில் மாட்டிக்கொண்டு சுழலும்.

  கொடும் வெயிலில்
  சில நாய்கள்
  பெண் துவாரம் தேடி அலைந்து
  ஏமாந்து
  பள்ளிச் சிறுமிகளை விரட்டும்.

  இவ்வாறு
  இவ்வாறு
  இவ்வுலகில்
  நான் கண்ட நாய்களின் சீலங்கள்
  வாலுக்கு ஒரு விதம்.

  என்றாலும்
  உண்ணும் உணவில் குறுக்கிட்டால்
  பட்டெனப் பிடுங்குவதில்
  இவையெல்லாம்
  நாய்கள்.

  நன்றி: ஞானரதம் டிசம்பர் 1973, சுந்தர ராமசாமி

  வாரயிறுதி தொலைபேசி உரையாடலில் இந்தக் கவிதையைப் பகிர்ந்து கொண்ட நண்பர் பிகே சிவக்குமாருக்கு நன்றி.


  | |

  Ten Wealthy Rulers

  செய்தி: Forbes.com

  ராஜா என்பார், மந்திரி என்பார்; ராஜ்ஜியம் இல்லை என்றாலும் ஒன்றுக்குப் பிறகு இரு கை போதாத அளவு பூஜ்யங்களை நிரப்பும் சொத்து மதிப்பு. நம்ம ஊர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் (சோனியாவும்தான்) போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளதா… அல்லது ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு’ என்று பாடுகிறார்களா?

  தலைபத்து பணக்காரத் தலைவர்கள்:

  பெயர் – பொறுப்பு – நாடு – சொத்துக் கணக்கு – வயது

  1. மன்னர் அப்துல்லா பின் அப்துலாஜீஸ் – அரசர் – சவூதி அரேபியா – $21 பில்லியன் – 82
  2. சுல்தான் ஹஜி ஹஸ்ஸாநல் போல்கியா – சுல்தான் – ப்ரூனே – $20 பில்லியன் – 59
  3. ஷேக் காலிஃபா பின் ஜயேத் அல் நாஹ்யான் – ஜனாதிபதி – யு.ஏ.ஈ (அமீரகம்) – $19 பில். – 58
  4. ஷேக் மொஹமத் பின் ரஷீத் அல் மக்தூம் – அரசர் – துபாய் – $14 பில். – 56
  5. Hans Adam II von und zu Liechtenstein – அரசர் – லிச்செடென்ஸ்டெயின் – $4 பில். – 61
  6. இரண்டாம் ஆல்பர்ட் மன்னர் – அரசர் – மொனாகோ – $1 பில். – 48
  7. ஃபிடல் காஸ்ட்ரோ – ஜனாதிபதி – க்யூபா – $900 மில்லியன் – 79
  8. Teodoro Obiang Nguema Mbasogo – ஜனாதிபதி – பூமத்திய ரேகை கினியா – $600 மில். – 63
  9. இரண்டாம் எலிசபெத் ராணி – அரசி – யூ.கே. – $500 மில். – 80
  10. Queen Beatrix Wilhelmina Armgard – அரசி – நெதர்லாண்ட்ஸ் – $270 மில். – 68

  பணக்கார ராஜாக்களைக் குறித்து அறிய நினைப்பவர்கள் விஎச்1-இன் நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.


  | |

  How The Da Vinci Code Doesn’t Work

  1. Howstuffworks : புத்தகத்தை சேரியமாய் எடுத்துக் கொண்டு கழலாக்கட்டை சுற்றுபவர்களுக்காக, ‘டா வின்சி கோட்’ நாவல் ஒரு கட்டுக்கதை என்பதை இன்ச்… இன்ச்சாக அலசி ‘புனைவு’தான் என்பதை நிரூபிக்கிறார்கள். (வலைப்பதிவில் சிறுகதை எழுதியவுடன் ‘சொந்த அனுபவமா’ என்று கேட்பார்கள்; இது மாதிரி வலைப்பதிவரின் சிறுகதைகளையும் கட்டுடைத்தால் புண்ணியமாப் போகும்).

  2. Conspiracy theory : வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு கோபம் வருகிறது.

  3. C.S. Lewis’s message to “Da Vinci Code” : விசுவாசிகளின் நம்பிக்கையை ஐயுற வைக்குமா?

  4. FO : நல்லவேளை… ‘இருவர்‘ திரைப்படத்தை கலைஞர் பார்த்து பரிசீலித்து பதுக்க வேண்டியதை பரிந்துரைத்து, பின் வெளியிட்டது மாதிரி, லியோனார்டா டா வின்சி பார்த்து ஒப்புதல் அளித்தால்தான் ‘டா வின்சி கோட்‘ திரைப்படம் வெளியிட முடியும் என்று தடா போடாமல் விட்டார்களே! (முதல் மூன்றும் படிக்க நேரம் கிடைக்காவிட்டால், இந்த கார்டியன் பத்தியை மட்டும் படிக்கலாம்.)

  Sir Ian McKellen suggested that perhaps there should be a warning printed at the beginning of the Bible saying that some of that might be fiction; for example, the walking on the water.


  | |