Daily Archives: மே 5, 2006

Minorities Choices, MLA Dynasties, CPI(M) SWOT – Dinamani

1. தேர்தல் ஆதரவு: சிறுபான்மை உரிமை பாதுகாப்பு கழகம் கருத்து : திமுக கூட்டணிக்கு எஸ்றா சற்குணம் தலைமையில் சில ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதை தேசிய சிறுபான்மை உரிமை பாதுகாப்புக் கழகம் கண்டித்துள்ளது.

ஒரு சில தனி நபர்கள் ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதை, ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் முடிவு என கருதக் கூடாது.

மத மாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட போதிலும் பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், இன்றளவும் காங்கிரஸ் கட்சி ஆளும் சில மாநிலங்களில் அந்தச் சட்டம் அமலில் உள்ளது. எனவே, சிறுபான்மை மக்கள் திமுக கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க மாட்டோம். இம்மக்களை பாதுகாக்கும் வேட்பாளர்களுக்கு தேர்தலில் ஆதரவு அளிப்போம்.

– ஒருங்கிணைப்பாளர் அண்டன் கோம்ஸ்


2. “பொன்’மலையை வெட்டி தலா 1 கிலோ தங்கம்?’: திருச்சியில் தற்போது பரபரப்பாக பேசப்படும் அளவுக்கு ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய மலஜலம் கழிப்போர் சங்கம்‘ என்ற பெயரில் உள்ள இதன் தொடக்கமே படு நக்கலாக “பொய்யே துணை’ எனத் தொடங்குகிறது. சங்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்… என்ற வாக்குறுதிகள் பட்டியலும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

“குடிசை வீடுகள் அனைத்தையும் மாற்றி சகல வசதிகளும் நிறைந்த வீடுகள் கட்டித் தரப்படும். ஒவ்வொரு வீட்டிலும் இணைக்கப்படும் 5 குழாய் இணைப்புகள் மூலம் பச்சை மற்றும் புழுங்கல் அரிசிகளும், கோதுமை மாவு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, எண்ணை வகைகள், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா என சகலமும் வீடுகளுக்கே வழங்கப்படும். திருச்சியிலுள்ள “பொன்மலை’யை உண்மையான “பொன்’ மலையாக மாற்றி வெட்டி மக்களுக்கு 1 கிலோ தங்கம் வழங்கப்படும்’

என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

“எஸ்.பி. சையதுமுகமது என்கிற சத்யானந்த யோகி பாபா’ என்ற பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் முகவரி ஏதுமில்லை.


3. பொன். தனசேகரன் ::

 • திமுக – மறைந்த அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் மகன் : அன்பில் பெரியசாமி – திருச்சி-1 தொகுதி
  இவரது சகோதரர் அன்பில் பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு, அன்பில் பெரியசாமி தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
 • திமுக – மறைந்த அமைச்சர் தங்கப்பாண்டியின் மகன் : தங்கம் தென்னரசு – அருப்புக்கோட்டை
 • திமுக – அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் : பூங்கோதை அருணா – ஆலங்குளம்
  எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் எம்பியாக இருந்தவர் ஆலடி அருணா.
 • திமுக – அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் : ராஜேந்திரன் – வீரபாண்டி தொகுதி
  மகனுக்காக வழக்கமான தமது வீரபாண்டி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்ட அவர், சேலம்-2 தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
 • திமுக – தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகள் : கீதா ஜீவன் – தூத்துக்குடித் தொகுதி
 • திமுக – முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலத்தின் மகன் : எம்.ஏ. ஆண்டி அம்பலம் – நத்தம்
 • காங்கிரஸ் – முன்னாள் எம்எல்ஏ வீரணன் அம்பலத்தின் மகன் : கே.வி.வி. ரவிச்சந்திரன் – மேலூர் தொகுதி
 • திமுக – அமைச்சராக இருந்த என்.கே.கே. பெரியசாமியின் மகன் : ராஜா – ஈரோடு தொகுதி
  மகனுக்கு வழிவிட்டு தந்தை தேர்தலில் ஓதுங்கிக்கொண்டுள்ளார்.
 • அதிமுக – சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கொலை செய்யப்பட்ட சுதர்சனத்தின் மகன் : கே.எஸ். விஜயக்குமார் – கும்மிடிப்பூண்டி
  இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதையத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
 • காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர் : வசந்தகுமார் – நாங்குநேரி
 • பாஜக – குமரி அனந்தனின் மகள் : தமிழிசை சௌந்தரராஜன் – ராதாபுரம்
 • காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் மகன் : எம்.கே. விஷ்ணு பிரசாத் – செய்யாறு
  முதல் முறையாகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் இருந்தவர் இவர்.
 • காங்கிரஸ் – நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் இரா.அன்பரசின் மகன் : அருள் அன்பரசு – வேலூர் மாவட்டம் சோளிங்கர்.

  4. CPI(M) N Varadarajan – SWOT :: தங்கள் அணியின் பலம், எதிர் அணியின் பலவீனம் என்ன என்பது குறித்து கருத்துக் கூறுமாறு அரசியல் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் அனுப்பியுள்ள கட்டுரை.

 • Suba Veerapaandiyan in Sun TV

  நிகழ்ச்சி: வணக்கம் தமிழகம்
  உரை: சுப வீரபாண்டியன்
  நாள்: மே 4 2006

  பகுதி 1:

  this is an audio post - click to play

  இன்னொரு பகுதி:

  Suba Veerapaandiyan in Sun TV Campaigns for DMK - this is an audio post - click to play

  Purasaivakkam Poster & Pre-Poll Opinions – Dinakaran

  Christian Minorities Plea to Purasaivaakkam Voters

  Pre-election Opinion Polls

  நன்றி: தினகரன்

  Top 10 Tamil Blogs on Election

  சில தேர்தல்களில் சில வலைப்பதிவுகள்

  2006 தேர்தலில் முக்கிய தமிழ் வலைப்பதிவுகள் எவ்வாறு செயல்பட்டன, எவ்விதம் செய்திகளை வழங்கின, எவ்வளவு பயன்பட்டன, எங்ஙனம் முக்கியமானது?

  1. இட்லி-வடை: அலுவல் சம்பந்தமான க்ளையண்ட் விசிட்டில் தமிழ் நண்பரை முதன்முதலாக சந்தித்தேன். வழக்கமான வானிலை, போக்குவரத்து உசாவலுக்குப் பின் தமிழகத் தேர்தல் குறித்து பேச்சு திரும்பியது. என்னுடைய வலைப்பதிவு(கள்) குறித்தும் சிறிது கோடிட்டேன். ‘எனக்கு இந்த ப்ளாக் எல்லாம் தெரியாது… இண்ட்ரெஸ்ட் கிடையாது. நீங்க இட்லி-வடை வெப்சைட் படிப்பது உண்டா?’ என்று பேச்சை முடித்துக் கொண்டார்.

   தேர்தல் 2006-இல் தமிழ்ப்பதிவுகளின் வலைத்துடிப்பு.

  2. தேர்தல் செய்தி கண்காணிப்பு 2006: படபடக்கும் இள ரத்தத்தை முறை செய்து சீராக்க வழிகாட்டி இல்லாமல் காட்டாறாக கோபமான பதிவுகள். தினகரன், தினமலர், தினமணி என்று மூன்று நாளிதழ்களைப் போட்டுத் தாக்காமல் ஒரு பதிவு கூட வெளிவராது. தொட்டுக் கொள்ள தினத்தந்தி, குங்குமம் என்று வேறு சிலவும் மாட்டும். அக்கறை தென்படும் என்றாலும் அலசலும் இல்லாமல் விஷயம் மட்டுமும் இல்லாமல் half-baked analysis.

   மாணவர் குழாமில் அங்கத்தினர் நிறைய இருந்தாலும், அனைத்துப் பதிவுகளும், ஒரே தரத்தை ஒத்து இருப்பதாக பார்த்துக் கொண்டார்கள். வார்ப்புருவில் அச்செடுக்கப்பட்ட எண்ணங்களை தெளிவாக்கி, வலைப்பதிவுக்கேத் தேவையான லாவகத்துடன் வழங்கியிருந்தால் #1.

  3. Hot machi hot: தமிழ்மணத்திலும் பட்டியலிடப்படாமல், சில நாளுக்கு முன்தான் புத்தம் புதியதாகத் துவங்கினாலும் பரவலான கவனிப்பைப் பெற்றுக்கொண்டது. பல பங்களிப்பார்கள் இருப்பதால் கன்ஸிஸ்டென்ஸி கிடைக்கவில்லை. இணையத்திற்கேற்ற ஆங்கிலம் + தமிழ் கலந்த துள்ளலான பதிவுகள். சுயமாய தயாரித்த சரக்கை சுவையாய் கொடுக்கிறார்கள்.
  4. தமிழகத் தேர்தல் 2006: அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா (யாரு?) என்று உலகெங்கும் உள்ள சின்னத் திரைகளில் தேர்தல் கோலங்கள் கொடுப்பது எங்கள் ‘தேர்தல் 2006’. கூகிள் ஆதரவினால் சி.என்.என்., வெகுஜன ஊடகங்கள் என்று உலா வருகிறது. சில சமயம் ‘சுரதா’வினால் வெட்டி/ஒட்டப்பட்ட பத்திரிகை, நாளிதழ் செய்திகள், சிறு நக்கல்கள், வெகு அரிதாக ஒரிஜினல் கருத்துக்கள் தாங்கி வெளிவரும்.

   பத்து பேர் சேர்ந்து வடம் இருப்பதால் இன்னும் நிறைய வெரைட்டியாக, உடனுக்குடன் சுடச்சுட இற்றைப்படுத்தப்பட்டு, சொந்தக் கருத்துக்களுடன் வலம் வந்திருக்காதது ஏமாற்றம்.

  5. ரஜினி ராம்கி: மனதில் பட்டதை எழுதியதால் authenticity உள்ள பதிவுகள். நம்பகத்தன்மை வரும் அளவிற்கு தற்போதைய நடப்புகளை சொல்லி அலசுபவர். எக்ஸ்பிரஸ் வேகத்தில் தரவுகள் உள்ளடங்கி இருப்பதால், எனக்கு சில கருத்துக்கள் விளங்காமல் போகும். இருந்தாலும் பாமர நடையில் நேரடிப் புகைப்படங்களோடும் காரசாரமான மறுமொழிகளுடனும் உலா கொடுப்பவர்.
  6. லக்கி லுக் – மடிப்பாக்கம்: ஏப்ரல் மாசம்தான் துவக்கம். வெத்து வேட்டு, சும்மா டைம்பாஸ் என்று சொல்லிக் கொண்டாலும், sophisticated உள்ளடக்கம். தேர்தல் மீட்டிங் கவரேஜ், கருத்துக் கணிப்புகள் தொகுப்பு என்று வேகமாக புகழ் பெற்ற பதிவு. திமுக ஆதரவை வெளிப்படையாக முன்வைக்கிறது.
  7. கோவி. கண்ணன்: போன மாசம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத் தேர்தலை திறம்பட முன்னிறுத்தும் இன்னொரு முக்கிய பதிவு. கிண்டல் கேலிகள் மற்றும் அரசியல்கள் இருக்கும். தேர்தல் முடிவுகள் தொடரை தவறவிடாமல் படிக்க வேண்டும்.
  8. மாயவரத்தான்: முற்போக்கு, பகுத்தறிவு, நடுநிலைமை, சிந்தனாவாதி போன்ற வலைப்பதிவு பட்டமளிப்புகளுக்கு மயங்காமல் அசத்துபவர். டாஸ்மாக் கடையின் விற்பனையாளன் மட்டும் சரக்கடிக்காதது போல் odd man out. மாற்றுக் கருத்துக்களை முகஞ்சுளிக்காமல் வரவேற்று, எதிர் கருத்து உள்ளவர்களுடனும் தொடர்ந்து விவாதிப்பார். தொகுதி அனாலிஸிஸ், ஆருடம் என்று கஷ்டப்படாமல் content கொடுப்பவர்.
  9. அப்பிடிப்போடு: கரூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, நாகை, திண்டுக்கல், தஞ்சை மாவட்டம் என்று நிறைய அலசி, எழுதியிருப்பதாகத் தெரிகிறது. நான் இன்னும் எந்த மாவட்டத்தையும் படிக்கவில்லை. முடிவு வந்தபிறகு என்னாச்சு என்று தெரிந்து கொண்டு விடலாம் என்னும் எண்ணமாகவும் இருக்கலாம்.
  10. பத்ரி: இன்னும் நிறைய எதிர்பார்த்த பதிவர். காரம் படுகுறைவு. அரிசி மானியம் குறித்த விரிவான பதிவுகள் தவிர எவருக்கு ஓட்டு, தேர்தல் அறிக்கை அலசல் போன்ற பத்ரியுடைய ஸ்டாண்டர்ட் டச் கிடைக்காமல் போனதில் எனக்கு வருத்தம். மயிலாப்பூர் குறித்தாவது வாக்குறுதிகள், வேட்பாளர்கள், பிரச்சாரங்கள் என்று தீனி போட்டிருக்கலாம்.

  பிகு: படு சேரியமாய் எழுதும் தமிழ் சசி, ரோஸாவசந்த், ரவி ஸ்ரீனிவாஸ், ‘உள்ளல்’ ஆதிரை, ‘திசைகள்’ மாலன் போன்ற பலரை சாய்ஸில் விட்டுவிடுகிறேன். ஓரிரண்டு முக்கியமான பதிவுகளில் அவர்களுடைய வழக்கமான இலச்சினையுடன் ஆழமாக தமிழகத் தேர்தலை அலசுவது, மேற்கண்ட தலை பத்து பதிவர்களின் தொடர்ச்சியான (அதாவது ஜனரஞ்சகமான) கவரேஜூக்கு ஈடாகாது.

  பி. குறிப்பிடத்தக்க கருத்து:

  ஊருங்க எல்லாத்தையும் ஒரு வெள்ள பேப்பர்ல எழுதிகோங்க. பக்கத்துலயே அந்த ஊர் வேட்பாளருங்க எல்லார் பேரும் எழுதிக்கோங்க. வேட்பாளருங்க பேர் தெரியாட்டாலும் ஒண்ணியும் ப்ரச்னை இல்ல.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணின்னு பொதுவா எழுதிக்கோங்க.. அதுல உங்களுக்கு பிடிச்ச வேட்பாளர் அல்லது உங்க அய்யா, அம்மா, அப்பத்தா, தோட்டத்துல புல்லு புடுங்கற பெரிய மூக்கி, மாடு மேக்கிற கொண்ண வாயன் இவங்களுக்கு பிடிச்ச வேட்பாளர் பேர போல்டு பண்ணி ஹைலைட்டர் வச்சி கலர் அடிங்க.. ஆச்சா, முடிஞ்சிது தொகுதி அலசல். “என் கணிப்புப்படி”ன்னு எல்லாருக்கும் படிச்சி காமிங்க… காப்பிரைட் நன்றின்னு நம்ம பேர சொல்லிடுங்க..


  | |

  ஊடக வன்முறைகளும், அபத்த நாடகங்களும்

  சன் டிவியில் இப்போது தான் பார்த்தேன். “ஞாபகம் வருதே” படப்பாடலின் பிண்ணணியில் அ.தி.மு.க ஆட்சியில் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் அவலங்களை (கொல்றாங்க! கொல்றாங்க என்ற அற்புதமான வீடியோ ;)) கோர்வையாக்கி 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒளிபரப்புகிறார்கள். வெள்ளம் வந்த போது, அதிமுக அரசும், ஜெயலலிதாவும் ஒவ்வொரு வீட்டிற்கும் போயிருக்க வேண்டும் என்கிற தொனியினை விட மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் தொகுப்பு இது. இது போன்ற ஊடக அசிங்கத்தினையும், அத்து மீறலையும் எந்த மாநிலத்திலும் காண இயலாது.

  ஜெயா டிவியில் சோ.ராமசாமி, கருணாநிதியும், தி.மு.க கூட்டணியும், குடும்ப அரசியலையும் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். 1 இலட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் கொண்டு வந்து நிற்கவைக்கப்பட்டதை மூச்சு விடவில்லை. தீவிரவாதத்தினை அடக்கல் என்கிற பாராட்டில், வை.கோவின் விடுதலைப்புலிகளின் ஆதரவினை ஒரெயடியாக கொல்கிறார். சோ பேசுவது அபத்த நகைச்சுவை வகையறா.

  இது போக பத்ரி சொன்னது போல மிக மோசமாக எடிட் செய்யப்பட்ட விஜயகாந்தின் பிரச்சாரம், மூன்றாம்தர போர்னோ விடியோவினை விட மோசமாக இருக்கிறது. இதில் விவசாயிகளின் ஒரே சின்னம் என்று பேச்சு வேறு. இவர்கள் காவிரி பிரச்சனைக்காக போராடியதாக சொல்லி, நெய்வேலி சென்று அங்கே நடிகைகளையும், நடிகர்களையும் காட்டி விட்டு, போராடுவதாக சொல்லிவிட்டு, எஸ்கேப் ஆன கதையினை இன்னமும் தமிழக மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை “கேப்டன்” மனதில் நிறுத்துவது நல்லது.

  இது தாண்டி, இன்றைய வணக்கம் தமிழகத்தில் இயக்குநர் சீமான் ஏன் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்றும், சரத், வை.கோ பற்றியும் அளந்து கொண்டிருந்தார். சீமான் அவர்களே, 100 தமிழறிஞர்கள் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்மொழிக்காக உண்ணாவிரதம் இருந்த போது, இதே கலைஞர் ஆட்சி தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சீமான் ஒதுக்கி வைக்கும் வை.கோவும், திருமாவும் தான் கருணாநிதி வாய் மூடி பல பிரச்சனைகளில் இருந்த போது பேசியவர்கள். இன்றைக்கு தலித் ஒட்டு வங்கி அதிமுக பக்கம் சாய்ந்திருத்திகிறது என்றவுடன், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர் கருணாநிதி என்று முன்னிறுத்துகிறீர்கள், எச்சில் இலை சோறு வேண்டாம் என்று திருமா சொன்ன போது எங்கே போனது இந்த ரோஷம்.

  ஆக ஒரு முழுமையான அபத்த நகைச்சுவை பெருநாடகம் தமிழகமெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அறிக்கைகள், ஊர்வலங்கள், கோஷங்கள், பேச்சுகள் பார்க்கும் போது ஊடி ஆலனின் பல படங்கள் நினைவுக்கு வருகின்றன. All the world is stage and everybody is an actor. ஷேக்ஸ்பியர் வாழ்க!

  Tamil Drama Review

  ரகசிய ஸ்னேகிதியே

  Director Chats‘நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்’ கடைசியாக ‘பொங்கல் விழா’வில் கூடியது. அதற்குப் பிறகு அடுத்த சந்திப்பாக, நியு ஜெர்ஸி ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் குழுவின் நாடக நிகழ்வு.

  மேகமூட்டமான இரவில் அரிதாகத் தென்படும் நட்சத்திரங்கள் போல் பாஸ்டனில் தமிழர் கொண்டாட்டங்கள் எப்பொழுதாவதுதான் கிடைக்கிறது. அவ்வப்போது கண்ணில் மாட்டும் நட்சத்திரங்களையும் யாரும் கண்டு மகிழாமல், சன் டிவிக்குள் புகுந்து விட்டிருக்கும் சூழ்நிலை.
  Kathir Faints
  அளவான கூட்டம். இலவசமாக நடந்த பொங்கல் விழா போல் நாடகமும் காசு வாங்காமல் நடத்தப் பட்டிருந்தால், இன்னும் கொஞ்ச பேர் வந்திருப்பார்கள். திருட்டு விசிடியை ஆதரிக்கும் தமிழுலகில் இருந்து வந்தவர்களிடம் நுழைவுப் பணம் கேட்கலாமா?

  வெகுஜன எழுத்தாளர் பிரும்மா. ‘வணக்கம் தமிழகம்’ நேர்காணலில் நாடகம் சுறுசுறுப்பாக பயணத்தைத் தொடங்குகிறது. குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைக்கப் பெறுகிறோம். பிரும்மா எழுதும் காதல் கதையின், பின்கதைதான் ‘ரகசிய சினேகிதியே’ நாடகம்.

  அரங்கத்தின் ஒரு பாதியில் பிரும்மா எழுதும் காதல் கதை அரங்கேறுகிறது. மற்றொரு Stage in Stageபாதியில் பிரும்மாவின் எழுத்தாக்க முரண்கள் தரப்படுகிறது. திரைக்கு முன்னும் பின்னும் நடப்பவை, கதைக்குள் கதை என்று தொய்வில்லாமல் செல்கிறது.

  நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனாக தாமோதரனை முடிவு செய்வதன் தாத்பர்யம்; வெள்ளித்திரையில், பணக்கார வீடு என்றால் அம்மா இருக்கமாட்டாளே என்னும் சினிமா இலக்கணங்களை மெல்லிதாக சாடுவது; மருத்துவத்திற்குப் படிக்கும் காவ்யாவிற்கும் மருத்துவர் கதிருக்கும் காதல் திருமணம் நடைபெற வைப்பதுடன் நாடகம் முடிகிறது.

  Doctor Directorமதுரையில் இருந்து சென்னை தூரம் அளவு இருக்கும் நியு ஜெர்ஸி – பாஸ்டன் தொலைதூர பயணத்தில் கூட சோபா, இருக்கைகள், அரங்க அமைப்பு என்று கவனித்து அமைத்திருந்தார்கள். நாடகத்தின் வசனங்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தாலும், இயல்பாக நடிகர்களிடமிருந்து வெளிப்பட்டாலும், இன்னும் கொஞ்சம் இளசாக, புதுசாக இருந்திருக்கலாம். தனக்கு முக்கியமல்லாதவற்றை மறந்து விடும் ஹீரோயினிடம் ‘என்றைக்கு எவன் உடம்பில் எதை மறந்து வைக்கப் போறியோ’ என்று Aariya Uthadugal Bhawanஅங்கலாய்க்கும் அம்மாவின் உரையாடல்கள் போல் நாடகம் நெடுங்க ஆங்காங்கே ஷார்ப் டயலாக் எட்டிப் பார்த்திருந்தால், நடுவில் ஏற்படும் தொய்வு குறைந்திருக்கும்.

  சன் டிவி வணக்கம் தமிழகத்தில் ‘ரமேஷ் பிரபா’வும் ‘ரேவதி’யும் லேட்-20களாக வயசைக் கணிக்கலாம். அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், என்.ஆர்.ஐ. ஆங்கில உச்சரிப்புடன் யுவதியும், நேர்காணலுக்குரிய சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்திய தெளிவான உச்சரிப்புடன் மிட்-40களை சொல்லத்தக்கவரும் நாடகத்தில் கதாபத்திரங்கள் ஆனது, சன் டீவியை சதாய்ப்பதற்கா அல்லது நடிகர் பற்றாக்குறையா என்றறியேன்.

  Maamis Talk Serialபிரும்மாவாக நடித்தவர், அவரின் ஆல்டர்-ஈகோ ஆனந்தனாக மனசாட்சியாக உலா வந்தவர், காதலன் + மணமகனாக மேடையில் இருந்து துள்ளிக் கீழே விழுந்து நமக்கு அடிபடுமளவு ஒன்றி நடித்த கதிர், அம்மா மீனாட்சி (பார்வதி?), அப்பா தாமோதரன் எல்லாருமே டிஸ்டிங்சனுடன் கலக்கினார்கள். ரகசிய சிநேகிதி ‘காவ்யா’ நடன முகபாவங்களையும் கண் பேசும் வார்த்தைகளையும் கொஞ்சம் குறைத்திருந்தால் சிவாஜித்தனம் உணராமல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

  ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மெனுவை எம்.பி.3 ஆக ஒலிக்க விட்ட பணியக சிப்பந்தி, உணவகத்திலும் வாடிக்கையாளரை வளைக்கும் சாஸ்திரி மற்றும் ஸ்டீரியோடைப் மாமிகளுக்கும் ஒரு ‘ஓ’.

  டயல் செய்யாமலே செல்பேசியில் பேசுவது, பட்டு வேஷ்டியில் வலம் வரும் கிளார்க், நடுத்தரக் குடும்பமாக இருந்தாலும் பளபளா (பட்டுப்) புடைவையில் காலை டிபன் செய்து கொடுக்கும் பார்வதி போன்ற சறுக்கல்களை எஸ்.வி.சேகர் (எம்.எல்.ஏ) டைப் நாடகங்களைக் கிண்டலடிக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்வேன்.

  எழுத்தாளர் சுஜாதாவிற்கு ஒத்த பிரும்மாவை, ‘ஆன்ஜைனா’, இருதய வால்வ், ரத்தக் Hero meets Heroine & In-Lawsகுழாய் என்று மருத்துவ சொற்களையும் பிரயோகங்களையும் கொண்டு முழுசாக ஜல்லியடிக்க வைப்பது போன்ற ப்ராக்டிகல் ஜோக்களும் ஏராளம்.

  நாடகாசிரியர் திரைப்படங்களைப் பார்ப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு எழுதினால் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., நூற்றுக்கணக்கான சொல்லாமல்/சொல்லி/·ப்ரெண்ட்ஷிப்/காமம்/கவர்ச்சி/கல்லூரி காதல் கதைகளின் வாசம் எட்டிப் பார்க்காமல் இருக்கும். இந்த விமர்சனத்தை எழுதுபவரும் ஆயிரக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களை ரெகுலராக ரசிப்பது, இந்த மாதிரி வாசனைகளை அதீதமாக உணரச் செய்வதாக இருக்கலாம்!

  வாசகர் கடிதம், நேயர் உரையாடல், போன்ற உத்திகள் மூலம் இருபத்தி நாலு வாரத் தொடரை நகர்த்துதல், எழுத்தாளனின் சறுக்கல்கள், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளின் பழக்கங்கள் என்று ஒரு நாடகம் அமர்க்களமாகவும்;
  Brahma in vanakkam Thanmizhagam
  காதல் குழப்பம், கல்யாணமா நட்பா என்னும் பயங்கள், போன்றவற்றை இயல்பான நிகழ்வுகளின் மூலம் வெகுஜன பத்திரிகை தர்மப்படி உருவாக்கிய, சஸ்பென்ஸ் திருப்பங்கள் நிறைந்த காதல் கதையை இன்னொரு நாடகமாக விறுவிறுப்புடனும் கொடுத்திருக்கிறார்கள்.

  கதை, வசனம் கலிபோர்னியாவை சேர்ந்த திரு. மணிராம் அவர்கள். எஸ்.வி சேகர், கிரேசி போன்றோர் அரசியல், சினிமா என்று ஆளுக்கொர் பக்காமாய் போய்விட அடுத்த தலைமுறை நாடகங்களுக்கு திரு. மணிராம் போன்றோர் தேவை.

  பின் கேள்வி: பழைய ஜானி வாக்கர் ரெட் லேபிள் புட்டியில் புதிய ஆப்பிள் ஜூஸை நிறைய அருந்திய நடிகர் பிரும்மா ஒகேதானே?! 🙂

  பின் பதில் – ரமணி: மேடையில் பிரம்மா குடிப்பது ஆப்பிள் ஜுஸ்தான் என அவ்வளவு அப்பட்டமாகவா தெரிந்தது? நாடகம் முழுவதும் ஒருவர் அவ்வளவு குடித்து அவ்வளவு தெளிவாக பேசுவாரேனால் அவர் குடித்தது மதுவாக இருக்க முடியாது என்பது ஒரு சுலபான யூகம் என்றாலும், அது ஏன் ஐஸ் டீயாக இருக்க முடியாது?

  நிகழ்வுப் புகைப்படங்கள்

  பதிவான மின்னிதழ்: தமிழோவியம்


  | |

  கலாநிதி மாறன் அட்டூழியம்

  ஜெயா டிவியையும் வாங்கிவிட்டார் கலாநிதி மாறன்.இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பான செய்தி திமுக ஆதரவு செய்தியாகவே மக்களால் பார்க்கப்படும.

  ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சோனியா காந்தியால் மன்னிக்கப்பட்டு ஜெயிலில் இருக்கும் நளினியின் சொந்தக்காரர்களுக்கு கலைஞர் கண்ணம்மா படம் எடுத்து உதவினாராம்.

  இதை ஒலக மகா குற்றம் போல் ஜெயா டிவி ஏகப்பட்ட பில்ட் அப்களுடன் எடுத்துக்கூறியது.இனியாவது புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.கலைஞர் இன்னும் ஈழ தமிழர்களின் மேல் பாசத்துடன் இருக்கிறார் என்பது இதன் பின்னே உள்ளே செய்தி.

  அப்ப ஜெயா டிவியை சன் டிவி வாங்கிடுச்சா…கொடுமைடா சாமி…கலைஞர் உங்கள் மனித நேயத்தை தலைவணங்கி போற்றுகிறேன்.அதிமுக வில் மட்டுமல்ல, ஜெயாடிவியில் மட்டுமல்ல .அதிமுக வை ஆதரிப்பவர்களுக்கும் சிறிது அறிவை கொடுக்கும்படி ஆண்டவனை வேண்டுகிறேன்.ஆமென்.

  Subdued campaigning

  இந்த முறை தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணி ஆரவாரம் குறைவாகவும் அமைதியாகவும் நடந்துள்ளது. தேர்தல் தொடர்பான வன்முறை என்று பார்த்தால் அஇஅதிமுக ஃபார்வர்ட் பிளாக் வேட்பாளர்களை பயமுறுத்தியதாக வந்த தகவல்கள்தாம். ஒரு ஃபார்வர்ட் பிளாக் வேட்பாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திண்டிவனம் ராமமூர்த்தியின் கட்சி வேட்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எதனால் கொலை செய்யப்பட்டார் என்று இன்னமும் தெரியவில்லை. ஆண்டிப்பட்டியில் லீலாவதி (எம்ஜிஆர் அண்ணன் மகள்) தன்னை வேட்பும்மனு தாக்கல் செய்யவிடாமல் கடத்திச் சென்றனர் என்று சொல்லியுள்ளார். சில இடங்களில் கல்லடிகள் நிகழ்ந்துள்ளன.

  அவ்வளவு மோசமில்லை.

  சுவற்றில் சின்னங்கள் வரைவதைத் தடை செய்தது நல்ல விஷயம். சென்னையில் சில “பொதுச்சுவர்களில்” நிறைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மற்றபடி வாக்கு சேகரிக்க கட்சிகள் பொதுக்கூட்டங்களையும் தொலைக்காட்சிகளையுமே நம்பியுள்ளனர். இது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் இதன் விளைவாக திமுகவுக்கு மிகப்பெரிய முன்னிலை கிடைத்துள்ளது. சன் குழுமத்தின் நான்கு தமிழ் சானல்களும் மாற்றி மாற்றி விளம்பரங்களை ஒளிபரப்புவதுடன் பொதுக்கூட்டங்களை நேரடியாகவும் ரெகார்ட் செய்தும் ஒளிபரப்புகின்றனர். அத்துடன் நேர்காணல் என்ற பெயரில் நடக்கும் வாக்கு சேகரிப்பும் உண்டு. ஜெயா டிவி தன் பங்குக்கு அஇஅதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கினாலும் இது சமமான ஒரு போட்டி அல்ல என்றே அனைவரும் சொல்வர்.

  இப்படி கட்சிவாரியாக சானல்கள் இருப்பதான் இருட்டடிப்பு செய்யப்படுவது பிற கட்சிகள் அனைத்துமே. சன் டிவியில் பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேர்காணல்களுக்கு மட்டும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியுள்ளனர். அதேபோல ஜெயா டிவியில் வைகோவும் திருமாவளவனும் வந்தனர். விஜயகாந்த் என்று ஒருவர் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார் என்பது ராஜ் டிவியைப் பார்க்காவிட்டால் நமக்குத் தெரியவே தெரியாது. விஜய் டிவி இந்த விஷயத்தில் ஒதுங்கியே உள்ளது. ஆங்கில செய்தி சானல்கள் அவ்வப்போது மட்டுமே தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகின்றன. ஏனெனில் இப்பொழுது ஐந்து மாநிலங்களில் சேர்ந்தாற்போல தேர்தல்கள் நடக்கின்றன.

  தமிழ் செய்தித்தாள்களும் தமது சார்புநிலை காரணங்களால் நடுநிலையாக அனைத்துக் கட்சிகளின் செயல்பாட்டையும் விளக்குவதில்லை. ஆனாலும் ஒவ்வொரு செய்தித்தாளிலும் பிற கட்சிகளைப்பற்றி சிறிதாவது தெரிந்துகொள்ள முடிகிறது. தினகரனிலும் தமிழ் முரசு பத்திரிகையிலும் அஇஅதிமுக, விஜயகாந்த் பற்றிய செய்திகள் வருகின்றன. தினமலர், தினமணி ஆகியவை இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ காண்பித்துள்ளன. திமுக அல்லாத பிற கட்சிகளின் விளம்பரங்கள் தினகரன் அல்லாத பிற பத்திரிகைகளில் வெளியாகின்றன.

  ஆங்கில செய்தித்தாள்களில் கட்சிச் சார்பு அந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை.

  சிதம்பரம் சொன்னதுபோல இம்முறை தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கைதான். தொடக்கத்திலிருந்தே இந்தத் தேர்தல் அறிக்கையை ஒட்டியே – எதிர்த்தோ, ஆதரித்தோ – விவாதங்கள் அமைந்துள்ளன. அத்துடன் பிற விவாதங்கள் – ஜெயலலிதா ஆட்சி கெட்டதா, நல்லதா; காங்கிரஸ், திமுக கூட்டணியின் மத்திய ஆட்சியால் தமிழகத்துக்கு நன்மையா, தீமையா; ஜெயலலிதா மத்திய அரசுமீது வைக்கும் குற்றச்சாட்டுகள், அவர்கள் சொல்லும் பதில் குற்றச்சாட்டுகள்; தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள், வைகோ கட்சி மாறியது ஆகியவை.

  தெருவில் பாட்டு பாடிக்கொண்டுபோகும் ஆட்டோக்கள்கூட (“உங்கள் பொன்னான வாக்குகளை ___________ முத்திரையில் குத்தி கலைஞரின்/புரட்சித்தலைவியின் ஆதரவுபெற்ற அண்ணன் _____________ அவர்களை வெற்றிபெறச் செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்”) குறைவாகவே தென்படுகின்றன.

  வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதும் தெருவில், திறந்த ஜீப்பில் பல்விரிய, கைகுவிய சுற்றிவருவதும் இன்னமும் தொடர்கிறது. பெருந்தலை ஒன்று பேசிக்கொண்டே போக பக்கத்தில் பொம்மைபோல கூப்பிய கரங்களுடன் நிற்கும் வேட்பாளர் இன்னமும் இருக்கிறார். அதேபோல மேடையிலும் கட்சித் தலைவர்கள் பேசித்தள்ளும்போது கை/கால் வலித்தாலும் விடாது நிற்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

  சினிமா நட்சத்திரங்கள் விஜய ராஜேந்தர், பாக்யராஜ் இருவருமே சூப்பர் ஹிட். ராஜேந்தர் உளறித் தள்ளினாலும் பல நேரங்களில் மெச்சும்படியான அடுக்குமொழிகளில் விளையாடுகிறார். குட்டிக்கதை வல்லுனர் பாக்யராஜும் திமுகவுக்கு நல்ல வலு சேர்த்துள்ளார். ஆனால் சரத்குமாரால் அஇஅதிமுகவுக்குப் பலன் குறைவுதான் என்று நான் நினைக்கிறேன். கடைசிவரையில் ராதிகாவை வெளியில் காணமுடியவில்லை.

  இணையம் வழியான campaigning அதிகமாக இல்லை. திமுக, அஇஅதிமுக இரண்டுக்குமான அதிகாரபூர்வமான தளங்களில் தேர்தல் அறிக்கைகளோ, தொகுதி உடன்பாடோ, வேட்பாளர் பெயர்களோ உடனடியாக வரவில்லை. சில நாள்கள் கழித்தே கிடைத்தன. இந்தத் தளங்களின் சுட்டிகள் கூகிள் வழியாகச் சென்று தேடினால்தான் கிடைக்குமே தவிர கழக விளம்பரங்களிலோ தொலைக்காட்சிப் பேட்டிகளின்போதோ காணக்கிடைக்காது.

  திடீரென ஒருநாள் தெருவில் பல இடங்களில் http://www.electadmk.com என்ற சுட்டி கண்ணில் பட்டது. முதலில் அதைப் படித்தபோது இது அ இஅதிமுக ஆதரவுத் தளமா அல்லது திமுக தளமா என்று தெரியவில்லை. கூர்ந்துபார்த்தால்தான் admk என்று தெரியவந்தது. (electadmk could as well be elect-a-dmk)

  லோக் பரித்ராணின் இணையதளத்தின் புகழ் இப்பொழுது உலகெங்குமே பரவியிருக்கும். இந்தத் தளத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று யாருக்காவது புரிந்தால் அதை விளக்கி எனக்குக் கடிதம் எழுதவும்!

  பாவம் மதிமுக. அவர்களது தளத்தில் பழைய கதைகள்தாம் உள்ளன. மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் பாசத்தோடு வைகோவைப் பார்க்கும் படம் இங்கே உள்ளது. அந்தப் பாசம் மாறும்போது படங்களும் தளத்தில் மாறவேண்டும் என்பதை யாராவது அவர்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும். கேப்டனின் கட்சிக்கும் இணையத்தளம் உண்டு. ஆனால் விஷயம் அதிகம் இல்லை இங்கே.

  பாமக இணையத்தளம் எதுவும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளார்களோ, என்னவோ.

  வேட்பாளர்கள் யாரும் சொந்தமாக இணையத்தை நாடவில்லை – நெப்போலியனைத் தவிர. இரு தினங்களுக்கு முன்னதாக நெப்போலியன் I am for Mylapore என்ற தளத்தைத் தொடங்கியுள்ளார்.

  இந்த முறை எப்படியானாலும் அடுத்த தமிழக சட்டசபைத் தேர்தலில் இணையம் பெரும் பங்கு வகிக்கப்போகிறது.

  தேர்தல் 2006 பதிவும், சி.என்.என் – ஐ.பி.என் பார்வையும்

  நேற்று மாலை நானும் பத்ரியும், தேர்தல் 2006 பற்றிய ஒரு சிறப்பு செய்தியினை சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சியின் நிருபர் விவியன் மேத்யுவிற்கு அளித்தோம். காலையிலிருந்து (ஏப்ரல் 5) அது ஓளிபரப்படுகிறது. காலையில் நான் பார்த்தேன். “தமிழ்நாடு ப்ளாக்பஸ்டர்ஸ்” என்கிற தலைப்பில் காலை 8.30 மற்றும் மாலை 7 & 9 நேரங்களிலும், மற்றபடி நாள் முழுக்க பல்வேறு செய்திகளிடையே துணுக்குப் பதிவாகவும் இது ஓளிபரப்பாகி இருக்கிறது. நான் தேர்தல் 2006 பதிவு உருவானவிதம், எழுதும் பதிவர்கள், அதனுடைய பார்வை பற்றி பேசியிருக்கிறேன். பத்ரி, வலைப்பதிவுகள் எவ்வாறு அரசியல் பார்வைகளை மாற்றி வருகின்றன, பத்திரிக்கை, தொலைக்காட்சி தாண்டிய ஒரு மாற்று ஊடகமாக இன்னும் 5 வருடங்களில் எப்படி மாறும் என்று பேசியிருக்கிறார். காலையில் நான் பார்த்ததில் வெட்டி போட்டிருந்தார்கள். தேர்தல் 2006, இட்லிவடை, ஹாட் மச்சி ஹாட் போன்ற வலைப்பதிவுகள் காண்பிக்கப்படுகின்றன. இந்தியாவில் இருந்தால் பாருங்கள்.