Daily Archives: மே 22, 2006

Election Result Analysis from Bloggers

தமிழ் வலைப்பதிவுகளில் இருந்து நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், அமைக்கப்பட்ட மந்திரிசபை குறித்தும், அவர்களின் முடிவுகள் குறித்தும் ஒரு சில பார்வைகள்…

கலைஞருக்கு ஒரு கடிதம் : வலைஞன்
அன்புள்ள கலைஞருக்கு வணக்கம். தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். பதவியேற்ற சூட்டோடு வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைகிறீர்கள். நல்லது. ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் நீங்களும் …

கலைஞர் காலில் விழும் முடிவை விஜயகாந்த் மாற்றியது ஏன்? : ஊசி

துக்ளக் கார்ட்டூன் : ஊசி
ஏற்கனவே எல்லாருமா சமையல் பண்ணிட்டோம். அதுக்கு மேலே உங்களை எல்லாம் சிரமப்படுத்த நான் விரும்பல. நீங்க சுலபமா பரிமாறிட்டு போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க. நான் கஷ்டப்பட்டு இலையிலே உட்கார்ந்து, சிரமப்பட்டு பிசைஞ்சு…

என் பார்வையில் 2006 தேர்தல் முடிவுகள் : முத்துகுமரன்
தேர் நிலைக்கு வந்திருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னதுபோல் போட்டி கடுமையாக இருந்தாலும் முடிவு தெளிவாகவே வந்திருக்கிறது. தமிழக அரசியல் …

அய்யோ பாவம் ஜெயா / சன் டிவிகள் : குழலி
ஆட்சி மாற்றம் தமிழகத்திலே நடந்தேறிவிட்டது, திமுக தனிப்பெரும்பான்மை பெறாமல் அல்லது குறைந்த பட்சம் கம்யூனிஸ்ட்கள் துணையோடு ஆட்சி அமைக்கும் நிலை வந்திருந்தால் …

முதல் கையெழுத்து[கள்] : பத்ரி
எந்த உத்தரவில் முதல் கையெழுத்து என்று சிலர் கேலி செய்தனர். மூன்று உத்தரவுகளில். இன்று பதவியேற்றதும் நேரு அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் …

புதிய அரசின் புத்துணர்வு நடவடிக்கைகள் : சந்திப்பு
தமிழகத்தில் ஆரம்ப கல்வி முதல் மேனிலை கல்வி வரை தமிழை தொடாமலே கல்வி பயிலலாம் என்ற நிலை உள்ளது. எனவே இந்த நிலையில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் கட்டாய பாடமாக்கிட வேண்டும்.

நச்சுப் பாம்பும் – காட்டுமிராண்டிகளும் : சந்திப்பு
தமிழக வரலாற்றில் இரண்டு கழகங்களின் ஆட்சியின் மீது மக்களது நம்பிக்கை குறைந்து வருவதைத்தான் இந்த தீர்ப்பு வெளிக்காட்டுகிறது.

Da Vinci Code – Movie Experience

நான் இன்னும் ‘டா வின்சி கோட்‘ புத்தகத்தைப் படிக்கவில்லை. மெத்தப் படித்த நண்பர்களின் கருத்துக்குத் தலைவணங்கி, ‘என்றாவது ஒரு நாள் வெட்டி வேலாவ இருந்தால்‘ என்னும் பட்டியலில் சேமித்திருக்கிறேன். படம் பார்ப்பது சௌகரியம் என்பதால், திரைக்கு சென்று பார்த்தபின் தோன்றிய சில எண்ணங்கள்.

 1. டிவிடி வரும் வரை காத்திருந்திருக்கலாம். நிறைய ‘கூடுதல் தகவல்கள்’, ‘பின்னணி விவரணப் படங்கள், ‘ரான் ஹாவர்டின் கருத்துரை’, டாம் ஹான்க்ஸின் விளக்கங்கள்’ என்று படம் தெளிவாகப் புரிந்திருக்கும்.
 2. திரையரங்கில் கூட்டமே இல்லை. படம் சூப்பர் ஹிட்டாவது பெரும் சந்தேகமே.
 3. லூவர் அருங்காட்சியகம் அருமையாக இருக்கிறது. பாரிஸுக்குப் போ.
 4. திரைப்படம் ஆரம்பிக்கும் முன் போடும் முன்னோட்டங்களில் [ட்ரெயிலர்] ஜேம்ஸ் பாண்ட் படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வரப்போவதாக சொல்லியிருந்தார்கள். ‘டாவின்சி கோட்’ மாதிரி புத்திசாலித்தனமானப் படத்திற்கு முன் குளிர்கால ஆஸ்கார் பரிந்துரைப் படங்களின் முன்னோட்டங்கள்தானே வந்திருக்க வேண்டும் என்று யோசித்தது என்னுடைய தப்புதான்.
 5. கிறித்துவைக் குறித்துதான் லாஜிக் இல்லாமல் கதைக்கிறார்கள் என்று பார்த்தால், ஃப்ரென்ச் காவல்துறை, அறிவுஜீவி வில்லாதி வில்லன், துப்பறியும் சிங்கம் வழியில் குறுக்கிடுபவர்கள் அனைவருமே தமிழ்ப்படம் போல் கோட்டை விடுகிறார்கள்; துப்பாக்கி இருந்தும் வீழ்த்தப் படுகிறார்கள்; முப்படை கொண்டிருந்தாலும் ஹீரோ முன் நொறுங்குகிறார்கள்.
 6. அலகு குத்துவது, அங்கப்பிரதட்சிணம் செய்வது வைத்து, ‘அன்னம்மய்யா கோட்‘ என்று திருப்பதி பாலாஜியைத் துப்பறிவதாக தமிழாக்கம் செய்து, ராஜ்கிரணும் ‘சாமுராய்‘ அனிதாவும் (வீ நீட் எ ஃப்ரெஷ் ஃபேஸ் – உதவி இயக்குநர்), வில்லர்களாக காகா ராதாகிருஷ்ணனும் (Ian McKellen), தமிழில் முதன்முறையாக நானா படேகரும்(Jean Reno), எஸ்ஜே சூர்யாவும் (Paul Bettany) நடித்தால், ஹிந்துத்வாவை மீறி, படம் வெளிவருமா என்று தெரியவில்லை; மீறி வந்தால் ஹிட்டாகும்.
 7. திரைப்படம் பார்த்த பிறகு புத்தகத்தைப் புரட்டும் வாசகர்கள் அதிகரிக்கும்.
 8. ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஒரு பாக்கெட் நாவல் எழுதியிருந்தாலே மில்லியனராகி இருப்பார்கள்.
 9. பிரான்ஸில் உல்லாசப் பறவையாக ஹீரோவும் ஹீரோயினும் திரிந்தாலும், ரதியும் கமலும் செய்த ரொமான்ஸ் கூட செய்யாம,ஃப்ரென்ச் கிஸ் அடிக்காம இருப்பதுதான் படத்தின் best kept suspense (& the spolier).
 10. We are in the middle of a war. One that has been going on forever to protect a secret so powerful that if revealed it would devastate the very foundations of mankind. என்று படத்தில் உதிர்ப்பதை

  ‘மோசமான படத்தின் நடுவில் நாம் இருக்கிறோம். எப்போது முடியும் என்றே விளங்காத மாதிரி நீட்டி முழக்குபவர்கள், நீளத்தை மட்டும் சொல்லியிருந்தால், அதிர்ந்து எழுந்திருந்து பக்கத்து தியேட்டரில் கலக்கும் ‘ஓவர் தி ஹெட்ஜ்‘ போய்விடுவோம்’

  என்று டயலாகிருக்கலாம்.


| |