Monthly Archives: மார்ச் 2009

India Elections 2009: Cartoons: The New Yorker

ஒபாமா: ‘இந்தியா போக்கிரி நாடு’?

ஜார்ஜ் புஷ் பதவி விலகிய பிறகு இந்தியாவின் மவுசு குறைந்து போய் விட்டதாக வாஷிங்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

நியு யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர்கள் துவங்கி டெமொக்ரட்ஸ் கருத்தாக்கத்தை தலையங்கம் தீட்டுபவர் பலரும் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, மண்டையில் தட்டி மிரட்ட வேண்டிய அவசியத்தை எடுத்து வைக்கிறார்கள்.

    1. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடெல்லாம் நம்ம நாடாக இருக்கவேண்டும். பாகிஸ்தான் என்ன? இந்தியா என்ன? இரண்டும் ஒரே வைரஸ் புகுந்த கணினி மாதிரி அச்சுறுத்தல் தருபவை.
    2. பாகிஸ்தான் தலைவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல! அதனால் தாலிபான் + அல் க்வெய்தா பக்கம் வேண்டுமென்றே சாய்பவர்கள் கிடையாது. பாகிஸ்தானுக்கு இந்திய வெறுப்பு உள்ளது. இருந்துட்டுப் போகட்டுமே.
    3. காஷ்மீர் பிரச்சினையை இந்தியா தீர்க்க நினைத்தால் சுபமஸ்து போடலாம். ஆனால், என்றாவது அமெரிக்கா சொல்வதை செவிமடுத்து ஒரு வார்த்தையாவது கேட்கிறார்களா? திபெத்துக்கு சுண்ணாம்பு; காஷ்மீருக்கு வெண்ணெய்யா?
    4. அமெரிக்காவிற்கு பணம் வேண்டுமானால் ஆபத்பாந்தவராக அள்ளிக் கொடுக்கும் சீனாவை திருப்தி செய்யவேண்டும். தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் அச்சிடும் கடன் பத்திரத்தை வாங்கும் சைனா சொற்படி கேட்கவேண்டும்.
    5. சுதந்திர நாட்டோடு நட்பு வைத்திருப்பதை விட அதிகாரத்தைப் பிடிக்குள் வைத்திருக்கும் தலைவர்களுடன் உறவாடுவதே ஸ்திரத்தன்மைக்கு வழிகோலுகிறது. குடியாட்சியை விட மன்னராட்சியும் கொடுங்கோல் அரசுகளுமே உத்தமம்.
    6. இந்தியாவிற்கு அவுட்சோர்சிங்  செய்தோம். கால் சென்டர்களை அனுப்பினோம். பதிலுக்கு என்ன கிடைத்தது? சீனாவிற்கும்தான் தொழிற்பேட்டைகளை ஏற்றுமதி ஆக்கினோம். எவ்வளவு முதலீடு கிடைக்கிறது? சீனா சொன்னால் வட கொரியா தலையாட்டுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதம் கூட பயப்படுகிறது. இந்தியாவினால் உள்ளூர் மும்பையைக் கூட காப்பாற்ற வக்கில்லை.
    7. வல்லரசாக வேண்டுமானால், நல்லரசாக நடிக்கவாது தெரியவேண்டும். மனித உரிமை துஷ்பிரயோகத்தில் முன்னிலை வகித்து, பர்மா, இலங்கை, சுடான் என்று நசுக்கல் நாடுகளை அரணாகக் கட்டிக் காக்கும் இந்தியாவை கண்டித்து Non aligned Movement என்னும் கண்ணெரிச்சல் இயக்கத்தை முடக்க வேண்டும்.
    8. வாக்கு கொடுத்தால் காப்பாற்றத் தெரியணும். 123 அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுவது; நாளை இடதுசாரி ஆதரவு கிடைக்கவில்லை என்று பேரம் பேசுவது. நிலையான உறுதி கிடைக்காத இடத்தில் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கு?
    9. Nuclear Non-Proliferation Treaty (NPT) ஆகட்டும்; தோஹா ஆகட்டும்; சுற்றுச்சூழல் வர்த்தகம் ஆகட்டும். ஆளுங்கட்சி மாறினாலும் இம்மி கூட விட்டுக் கொடுக்காத முரண்டுக் குழந்தை நிலைப்பாடு.
    10. இந்தியாவை எப்பொழுது வேண்டுமானாலும் தூண்டில் போட்டு இழுக்கலாம். எதிரிகளை மிக அருகில் நெருக்கமாக வைப்பதுதான் இன்றைய உடனடி தேவை.


      India Elections 2009: Irrelevant Online Crowd

      அனைவரையும் வாக்களிக்க அழைக்கிறோம்.

      அதன் தொடர்ச்சியாக இணையத்தில் தேர்தல் பிரச்சாரமும் தகவலும் சூடு பிடிப்பதாக சிலர் சொல்கின்றனர்:

      1. Online resources for the Indian general election 2009 – Part 1 – Play Things

      2. India’s First Digital Election is a collaborative wiki to compile a database of internet and mobile initiatives being used in the 2009 Indian general elections by political parties, individual politicians, and civil society groups.

      3. Mumbai Votes – Election Campaign Resource

      விளம்பரத்திற்கும் ஊடகத்திற்கும் மெகா பொக்கீடு என்கிறார்கள்:

      Indian political parties are flush with funds: “Congress, India’s oldest and now the ruling party, is set to splurge a whopping Rs.20 billion (Rs.2,000 crore/$400 million) in this election.
      :::
      Abraham said the main beneficiary of the huge spending would be the media sector.

      “The sectors that would directly benefit would be mainly media, be it print, audio or visual, communication and transportation

      கருத்துப்படங்களும் பட்டை கிளப்புகிறது:

      myspace-twitter-social-networking-technology-voters

      உங்கள் அலுவலில் ரிசப்ஷனிஸ்ட் இருப்பார். கொஞ்சம் அழகாக; நிறைய இளமையாக; அவ்வப்போது மாறிக் கொண்டு; அது போல் கட்சிகள் வலையில் செலவழிப்பதை இன்னும் அவசியமில்லாத அலங்காரமாகவே கருதுகின்றன. ஏன்?

      • ரிசப்ஷனிஸ்ட் நிரலாளர் ஆக மாறுவது எல்லாம், ‘கண்டு  கொண்டேன்; கண்டு கொண்டேன்’ தபூ சினிமாவில் நடக்கும். நிஜத்தில், வாக்காக மாறாது.
      • வளர்ந்த நாடுகளிலேயே வலையில் இருந்து எழுந்து வந்து வாக்குப் போடுவோர் அரிது. பாமர இந்தியாவில்:
      Rank Country Literacy Rate
      59 Maldives 96.3
      85 China 90.9
      86 Sri Lanka 90.7
      87 Indonesia 90.4
      88 Vietnam 90.3
      89 Myanmar 89.9
      93 Malaysia 88.7
      109 Mauritius 84.3
      147 India 61.0
      160 Pakistan 49.9
      162 Nepal 48.6
      164 Bangladesh 47.5
      165 Bhutan 47.0
      • இணையத்தில் சாதிச்சங்கத்திற்கு வலையகம் இருக்கிறதா? அப்படியே மொத்த உறுப்பினரின் வாக்குகளும் விழுமா?

      obama-caste-community-india-cartoons-toi-ninan-mayavathy

      • சன் டிவி சீரியல், தி ஹிந்து ஓப்பன் பேஜ் அபாயின்ட்மென்ட் என்றிருப்போரே target இல்லை என்னும்போது இணையம் எம்மாத்திரம்?

      தேவை: பொருத்தமான கற்பனை

      அரசியல் கருத்துப்படங்கள்

      ஓடுவது யார்?

      • விஜய்காந்த்
      • அன்புமணி ராமதாஸ்
      • சரத்குமார்
      • வைகோ

      யானை பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம்; என்றாலும் இங்கே யாருக்குப் பொருத்தம்?

      • சிரஞ்சீவி
      • ராகுல் காந்தி
      • அத்வானி

      உங்கள் எண்ணத்தில் உதித்த மேற்கோள் என்ன!?

      USA in a nutshell NYC: Conservatives vs Liberals

      Canarsie
      By Jonathan Rieder
      Harvard, 1985

      “Since 1960 the Jews and Italians of Canarsie have embellished and modified the meaning of liberalism, associating it with profligacy, spinelessness, malevolence, masochism, elitism, fantasy, anarchy, idealism, softness, irresponsibility and sanctimoniousness.

      The term ‘conservative’ acquired connotations of pragmatism, character, reciprocity, truthfulness, stoicism, manliness, realism, hardness, vengeance, strictness, and responsibility.”

      Of course it all came undone after 2000. But that’s another story, for another book.

      Thanks: Five Best Books – WSJ.com: “Great political upheavals are memorably recorded in these works, says David Frum”

      ரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்

      rettai-vaal-rengudu-madan-ananda-vikadan-jokes

      டிராம் காலம்: அந்தக் கால புடைவை விகடன்: நகைச்சுவை

      classics-vikadan-av-jokes-old-bus-seat-kids-children

      Therthal 2009: Our Next PM – Mayavathy

      இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? ஏன் மாயாவதிக்கு அந்த நாற்காலி கிடைக்கும்? எப்படி பொருத்தம்?

      காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையிலான அணிகளுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்கிய இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை மட்டும் சேர்ப்பது என்ற பழைய பாணியைக் கைவிட்டுவிட்டு, பாரதிய ஜனதா + காங்கிரசின் தோழமைக் கட்சிகளையே ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் இழுத்துள்ளனர்.

      mayavathy-deve-gowa-tdp-trs-third-front-alliance

      • கடந்த தேர்தலில் 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இப்போது ஒரு கை விரல்கள் கூட காணாத அளவு சுருங்கி விட்டது. பாஜக கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாது.
      • முலாயம் சிங் யாதவ் குறித்து நீங்கள் அறிவீர்கள் அல்லவா? XLRI Alumna takes on Mulayam Singh Yadav « Gautam’s Net

      up-corruption-samajwadimulayamundisclosedassets

      மாவட்ட தேர்தல் அதிகாரியை மிரட்டிய சமாஜ்வாடி கட்சி

      நீங்கள் ஒரு பெண் அதிகாரியாக இருப்பதால் என்னை நானே கட்டுப் படுத்திக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் பெண்ணாக இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வந்திருக்கும். – ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய முலாயம்சிங்

      நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, விஷம்போல் ஏறும் விலைவாசி

      point-blank-blogspotrisingfoodprices

      • சாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார கொள்கையில் எத்தகைய மாற்றத்தையும் பாஜக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

      வேலையில்லாத் திண்டாட்டம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேக்க நிலை, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு

      • பொருளாதார கொள்கையை வகுப்பதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அவை பின்பற்றிய கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கு சாதகமானவையாகும். இவ்விரு கட்சிகளும் தொழில் நிறுவனங்களின் நிதியை சார்ந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

      சட்டம்- ஒழுங்கு சீரழிவு

      • இவ்விரு கட்சிகளின் ஆட்சியில் எல்லையை கூட பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

      சமூக சீர்திருத்தம்

      • பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கை: உத்தரப் பிரதேசத்தில் அரசு நிறுவனங்கள் தனியார் வசம் கொடுக்கப்பட்டால் கூட இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வழங்கும்.
      • தங்கள் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர்வகுப்பினருக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாயாவதி குறிப்பிடுகிறார்.

      bsp-mayawati-uttar-pradesh-elephant-dalits-polls

      • பாரதிய ஜனதாவுடன் நட்புறவு: உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் மாயாவதி. அந்த மூன்று முறையுமே பாரதிய ஜனதாவின் உதவியால்தான் அவர் முதல்வர் ஆனார். பாரதிய ஜனதாவின் லால்ஜி தாண்டனைத்தான் மாயாவதி அண்ணனாகக் கருதுகிறார்.

      adade-1mathy-third-mayavathy-pawar-jj-admk

      Blogkut Sangamam Contest: College Life Story: கல்லூரி – போட்டி

      கதைக்கான களம் பதிவுகள் அல்ல என்றாலும், சொந்தமாக சிறுகதை/கவிதை எழுதியதை கத்திமுனையில் படிக்க வைக்க வலைப்பதிவு போட்டி உருவாக்குகிறது.

      தேன்கூடு போட்டியில் கண்ட ஆர்வம் மீண்டும் spring ஸீஸன் ஆகி அலர்ஜி ஆகும் வீரியத்துடன் பல புனைவுகள் வந்துள்ளன.

      அனைத்தையும் ப்ளாக் – குட் / சங்கமம் வலையகம் தொடுத்திருக்கிறது.

      அனுபவமும் அனுபவம் சார்ந்த இடுகையும் வலைப்பதிவு எனப்படும். சுஜாதாவும் சுஜாதா நடை சார்ந்ததும் சிறுகதை எனப்படும். பிற்காலத்தில் இந்தக் காலத்தை இப்படித்தான் ஆய்வறிக்கை தரவேண்டும்.

      இரண்டையும் சரியாக மிக்ஸ் செய்து காக்டெயில் தந்த ஆசிப்பை பார்த்து தோன்ற வேண்டிய ஏகலைவர்களின் தேவையை சங்கமம் போட்டி நிரூபித்திருக்கிறது.

      கலந்துக்கத்தான் வக்கில்லை என்னும் உரிமைதுறப்புடன், சிதறலாகத் தேர்ந்தெடுத்து படித்தவைக்கான கருத்துகள்:

      # 10 மாணவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்

      மேற்கோள் மூலை:

      போனஸ் அடி வாங்கிய இன்னொரு நண்பன் “டேய் அவனே விழுந்த அடியிலே அரண்டு போய் இருக்கான், நீ சட்டை லுங்கி ன்னு கவலைப் பட்டு கிட்டு இருக்கீங்க”

      ராம் நாடு நண்பன் ” பின்ன நான் கவலை படமால் இருக்க முடியுமா?, அவன் போட்டு இருந்தது என் சட்டை டா, நான் 10001 ரூபா என் ஆளுக்கு செலவு பண்ணிட்டேன்னு என் காதலி பரிசா எடுத்து கொடுத்த 50 ரூபா சட்டை”

      திருச்சி நண்பன் “அவன் போட்டு இருந்தது என் லுங்கி”

      நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

      Sathia : வம்பே வேண்டாம். ஒரு :-)) மட்டும் போட்டுக்கறேன். – March 11, 2009 4:17:00 PM EDT

      # 9 காதல் என்பது… : கெக்கெ பிக்குணி

      மேற்கோள் மூலை:

      பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன். “நீ திருக்குறள்லாம் படிப்பியாமே” என்று எங்கள் கடலை அஃபிஷியலாகத் தொடங்கியது. எப்போதுமில்லாமல் திருச்சி மிக விரைவில் வந்தாற்போலிருந்தது.

      நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

      Sridhar Narayanan said…சொல்றாங்க: //கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:‍-)//

      இந்த வரி உண்மைன்னா கௌதமும் உண்மை, கதையும் உண்மைதானே. அப்புறம் எப்படி ‘பாதிதான் உண்மை’ன்னு சொல்றீங்க?

      அதெல்லாம் நாங்க பாயிண்டை பிடிச்சிருவோமில்ல கரெக்டா :-))

      Was just kidding.

      கதையில் ஒரு நேர்த்தி இருக்கிறது.

      //அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. //

      கலக்கல். வாழ்த்துகள்! – 3/23/2009 காலை 10:28

      நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

      • இந்த அடைப்புக்குறிக்குள் கதாசிரியர் எட்டிப் பார்ப்பதை விட்டுட்டு வெளியிலேயே சிந்தியுங்கப்பா
      • முடிவு; முடிவு தூக்கி நிறுத்தும் கதை.
      • பெனாத்தல் அவர் கதையில் ‘ஆர் சுந்தரராஜன் பட ஹீரோயின் மாதிரி’ சொன்ன மாதிரி அட்வைஸ் கொடுக்கிறாங்களே! எ.கொ.இ.ச!!

      # 8 கல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல்

      மேற்கோள் மூலை:

      இருக்கை கிடைத்த மாணவிகள் அவர்களது வகுப்பு தோழர்களின் பைகளை வாங்கி காலுக்கு அடியிலும், பிடித்தமானவர்களின் பையை மடியிலும் வைத்து கொண்டார்கள்.
      :::
      பிசிக்ஸ் லேபிள் ஸ்பெக்ட்ரோமிட்டர் பிரசம் வைக்கும் போது அது முக்கோண வடிவத்திற்கு பதிலாக ஹார்டின் வடிவத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
      :::
      அழக ரசிக்க கத்துக்கணும்னு நான் சொன்னவுடன், பருவத்துல பன்னிங்க கூட அழகா தாண்டா இருக்கும் என்றான். கண்டிப்பா ஆண் பன்னிகளுக்கு அழகாத்தான் தெரியும் என்று சொல்ல நினைத்து பேக் ஃபையர் ஆகிவிடும் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.

      நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

      J said… Enakku puriyave illaye… why kesavan is like that in the end?

      As others i also thought that u are writing abt the trip to college.Namma college and ooruku pona effect varuthu..but naan padikumpothu mini bus, auditorium ellam illa. 😦 – 10:14 PM

      நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

      • முடிவு இயல்பாக இல்லை; பாலா படம் பார்த்துட்டோ, எண்பதுகளின் பாரதிராஜா க்ளைமேக்ஸ் போன்றோ துருத்தி பல்லிளிக்கிறது.
      • சொல்லி வச்சாப்ல எல்லாரும் காதல்னு விழுந்துட்டாங்களே; இட ஒதுக்கீடு, சாதி ரேகிங், தேர்தல், விரிவுரையாளர் அரசியல்னு எம்புட்டு இருக்கு?
      • அத்தனை டிராமாத்தனமான இறுதி பாகம் இல்லாவிட்டால், அல்லது அதை இன்னும் நம்பும்படியாக கொண்டு வந்திருந்தால் #1

      # 7 நாற்பது மாத்திரைகள் : பினாத்தல் சுரேஷ்

      மேற்கோள் மூலை:

      விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து வெளிச்சத்துக்குப் பதில் தூரத்தைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன.
      :::
      “நான் எங்கே இருக்கேன்? சொர்க்கத்திலயா?”

      “கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சொர்க்கமா தெரியுதாம்டா.. அந்த மாத்திரை இனிமே மார்க்கெட்லே செம பிக்கப் ஆயிடும்”

      நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

      சாத்தான் said… வெறி ரொமாண்டிக். 🙂 – March 19, 2009 9:10 AM

      நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

      • இத்தனை சிறிய சிறுகதையில் கோபி, லதா, அப்பா, தண்டபாணி, சேகர், சுந்தரமூர்த்தி, தாத்தா, டாக்டர், நர்ஸ், சுரேஷ் என்று இரண்டு கை நிறைய கதாபாத்திரங்கள். எல்லாரும் well defined ஆக ஆகிருதியுடன் உலா வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அறிமுக படலம் என்று வெளிப்படையாக இல்லாத ஆனால் சிறப்பான உருவாக்கம்.
      • பத்து நிமிட குறும்படமாக எடுக்கக் கூடிய அளவு விறுவிறுப்பான கச்சிதமான பாக்யராஜ் ஸ்டைல் மசாலா ஸ்க்ரிப்ட்.
      • அதெல்லாம் கரீட்டுதான்! கடேசில்ல என்னங்க சொல்ல வர்றீங்க பாஸு?

      # 6 யார் முட்டாள்? : என். சொக்கன்

      நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

      • சொக்கனுடையது.
      • ஏன் #6: இவர் காணாத பரிசா? வெல்லாத போட்டியா? சொந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்காத அலசலா?

      # 5 கல்லறை ஆட்டம் : சத்யராஜ்குமார்

      மேற்கோள் மூலை:

      மனசு தைரிய சலைனை அவன் ரத்தத்தில் ஏற்றியது.

      நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

      • மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு பிணவறை மகாத்மியங்கள் கேள்விபட்டிருக்கிறேன். இது வேறு ரகம்.
      • ஆவி இருக்கிறது என்று நம்ப மறுக்கும் அறிவியல் மனதைப் புரட்டிப் போட்டு மீண்டும் புரட்டி போடும் சித்து ஆட்டம்.
      • ஏன் #1 இல்லை: #6க்கு சொன்ன அதே காரணம். மகாதமாக்களை தேர்தலில் நிற்க வைப்பதில்லை; மனதில் மட்டுமே இடம்.

      # 4 ஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்

      மேற்கோள் மூலை:

      அதுல பாத்தீங்கன்னா ஈக்கும் இறக்கை இருக்கு. எரோப்ளேனுக்கும் இறக்கை இருக்கு. (கைதட்டல்). ஈ முட்ட வெக்குங்க. ஏரோப்ளேன்ல கோளாறு இருந்துதுனு வெயுங்க எங்காச்சும் கொண்டு போயி முட்ட வெச்சு ஆக்ஸிடெண்ட் ஆயுருமுங்க. (கூட்டம் ஊளையை நிறுத்திவிட்டுக் கைதட்டி ரசிக்க ஆரமிச்சுது.)

      நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

      இராகவன் நைஜிரியா said… தாங்க முடியலங்க…

      ஈயும் ஏரோப்ளேனும் – மிக அழகான கம்பேரிசன்.

      வாழ்க அறுவை திலகம், கடிமன்னர்.

      நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

      • சிரிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு நிஜமாவே சிரிப்பை வரவைப்பது கஷ்டம். செய்து காட்டுகிறார்.
      • பரீட்சைக்குப் படித்துக் கொண்டு செல்லாத அம்பேத்கார் குறித்து கட்டுரை எழுத சொன்னால், படித்துக் கொண்டு சென்ற மாட்டைப் பற்றி பத்து பக்கம் எழுதித் தள்ளிவிட்டு, அப்பேர்பட்ட மாட்டை அம்பேத்கார் வளர்த்திருக்கிறார் என்று முடித்த கதையாக, கல்லூரியை விட்டு விட்டு, வேறு எங்கோ லாகவமாக ஏரோப்ளேனை ஹைஜாக்குகிறார். அதற்கு சலாம்.

      # 3 கமிஷன் மண்டி சுப்பையா : ஸ்ரீதர் நாராயணன்

      மேற்கோள் மூலை:

      ஒடுங்கிப் போய் படுக்கையில் படுத்து இருந்தாலும் திடீரென்று உத்வேகத்தோடு எழுந்து சாக்பீஸை விட்டெறிந்து ஏதாவது தேற்றம் விளக்கி சொல்லச் சொல்வாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருந்தது.

      நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

      ILA said… செம எழுத்து நடை.. 🙂 –March 20, 2009 1:22 PM

      நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

      • அது என்ன சொல்வீங்க? ஆங்.. ஜென்டில் ஸ்மைல்; அதேதான்.. மெல்லிய புன்னகை வழி நெடுக
      • சுஜாதாவின் ஆவி சொல்ல சொல்ல இவர் எழுதினாரோ என்று ஏங்கி சொக்க வைக்கும் விவரணை
      • படிச்சா மனசில் உட்கார வேணாம்! குறைந்த பட்ச டெபாசிட்டாக நிக்கணுமாமே? இது இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் வெளியே விழும் குச்சி; Buds போடும்போது கிடைக்கும் சுகம் மட்டுமே இங்கே.

      # 2 வாசமில்லா மயிலிறகுகள் : ராமசந்திரன் உஷா

      நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

      கெக்கே பிக்குணி சொல்வது… உங்க கதைத்தலைப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சி இருந்தது.

      நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

      • கல்லூரி நட்பு பல்லாண்டு கழித்து மறந்து போகும் எதார்த்தம்.
      • எல்லாரும் லூட்டி, அரைலூசுத்தனம் என்று அந்தக் கால மலரும் ஜவ்வு மிட்டாய் கொடுக்க, இவருடையது செம crisp.
      • பழங்கால நினைவு இன்றும் பல்லிடுக்கில் மாட்டிய கோழித் துண்டாய் இருப்பதற்கு ஒரு சம்பவம், ஒன்றிரண்டு சுற்றுப்புற வர்ணனை, நடை ஜாலக்கு என்னும் மேக்கப் போட்டிருந்தால் நிச்சயம் #1

      # 1புட்டிக்கதை : கார்க்கி

      மேற்கோள் மூலை:

      இடுகை முழுக்கவே இங்கே இட வேண்டும்.

      நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

      ஆதவா said… நான் படிக்கும் உங்களின் முதல் பதிவு… ரகளையா இருக்குனஙக….
      அப்படியய அலேக்காக அந்த இடத்தில் கொண்டு போகும் எழுத்துக்கள்…

      இது உண்Mஐயா நடந்ததா?? –February 6, 2009 6:05 PM

      நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

      • கொஞ்சம் அசந்தால் மொக்கை ஆகிப் போகும் அபாயம்.
      • எல்லாரும் ஏற்கனவே எழுதிய பழைய ஜோக்குகளின் தொகுப்பாக நின்றுவிடும் பபிள் கம்மாக இல்லாமல், சூப்பர் மேன் தரித்த பூமர் கம்மாக வெடித்திருக்கிறது.
      • பதிவில் போட்டி என்றால் க்ளாசிக் சிறுகதை வேண்டாம்; கொஞ்சம் அனுபவம்; நிறைய நக்கல்; துளி புனைவு மாதிரி நம்பமுடியாமை; ஒன்றரை பக்கம் – எல்லா சாமுத்ரிகா லட்சணமும் பக்கா!

      டாப் 10 பதிவைப் படித்து சன் டிவியின் செவ்வியல் தயாரிப்புகளான ‘தீ’, படிக்காதவன் விமர்சிப்பவரா நீங்க? உங்களுக்காக என்னுடைய கல்லூரி: ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)

      Therthal 2009: வாக்கு கொடுத்துட்டேன்

      தேவ் அழைக்கிறார்.

      பாலபாரதி பவர்பாய்ன்ட் இட்டு கொதிக்கிறார். மாற்றம் வேண்டும் இயக்கம் துவங்குகிறார்கள். பதிவரோ சூடான இடுகைக்கு செய்தி இட்லியும் அலசல் வடையும் பரிமாறுகிறார்.

      உங்கள் பொன்னான வாக்கை தேர்தலில் சரியான சின்னம் பார்த்து அமுக்க பத்து காரணம்:

      1. மதன் பாப்புக்கு வழங்குவது போல் ‘தீசுந்தர் சி அடிப்பார்.
      2. கண்ணுக்கு மையழகு. கைக்கு வாக்கு போட்ட மசி அழகு.
      3. தேவ் அழைத்தவர் எல்லாம் வெளிநாடு. நீங்க உள்நாடு.
      4. வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம்; வீட்டை தூசு தட்டுகிறோம்; அது போல் இதுவும் எளிது + முக்கியம் + கடமை.
      5. பாஸ்போர்ட் முதல் பால் வரை பல க்யூவில் நிற்கிறோம். இந்த காத்திருப்பு வரிசை எம்மாத்திரம்?
      6. எழுபது வயதான என் அம்மா இதுவரைக்கும் எந்தத் தேர்தலையும் தவறவிட்டதில்லை. கால் சரியில்லாதபோதும், எப்படியாவது வாக்களித்து வந்திருக்கிறார்.
      7. தி ஹிந்து, வலைப்பதிவு, சிஎன்என், காமெடி சென்ட்ரல் எல்லாம் பாத்தால் எதற்கும் நயா சென்ட் பயனில்லை. வாக்குச்சாவடியில் எந்திரத்தை தொட்டால் மட்டுமே மோட்சம்.
      8. உங்களுக்கு பதில் இன்னொருத்தர் கணவனாக செயலாற்ற விடுவீர்களா? அப்படியிருக்க கள்ளவாக்கு மட்டும் ஏன் விடுகிறீர்கள்?
      9. அனுபவஸ்தன் சொல்கிறேன். வோட்டு போட்டார்ல் ரொம்ப திருப்தியாக இருக்கும். மனநிறைவு கிடைக்கும்.
      10. இதே மாதிரி இன்னும் நூறு இடுகை வந்து உங்களைத் தொல்லைக்குள்ளாக்கணுமா? தயவு செஞ்சு போட்டுடுங்க!

      யாருக்கு போட்டேன் என்று ட்விட்டரில் எனக்கு டைரக்ட் மெஸேஜ் விடவும் மறக்காதீங்க 🙂

      நான் இந்தியாவில் இல்லையே என்றால், அட்லீஸ்ட் பதிவு மட்டுமாவது போடுங்க தல•…