
நன்றி: தினமணி
தொடர்புள்ள பதிவு: Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis « தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?: “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு :: நீரஜா சௌத்ரி“
கடந்த தேர்தலை விட காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறைகிறது; கூட்டணி கட்சிகள் நெருக்கடிக்கு பணிந்தது
2004-ம் ஆண்டு பாராளு மன்றத்தேர்தலின் போது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 417 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
இதில் 150 தொகுகளில் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தடவை அதிக இடங்களில் போட்டியிட்டால் தான், கடந்த தடவை வென்ற 150 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்கள். இதற்காக
மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகி றது. ஆனால் காங்கிரஸ் நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.
கூட்டணி கட்சிகள் எல்லாம் தாங்கள் அதிக தொகுதிகளை வைத்துக் கொண்டு சிறிதளவு இடத்தையே காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளன.
- உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங்,
- பீகாரில் லல்லு பிரசாத்,
- மராட்டியத்தில் சரத்பவார்,
- மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி
ஆகியோர் மிக, மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரசுக்கு கொடுக்க உள்ளனர்.
காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசுக்கு குறைவான இடங்களைத் தான் தர முடியும் என்று கூறி உள்ளது. இது காங்கிரசுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த தடவை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதி களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தடவை முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியுடன் நட்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரசுக்கு 17 முதல் 20 தொகுதிகள் வரையே கிடைக் கும் என்று தெரிகிறது. எனவே கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை சுமார் 30 இடங்களை காங்கிரஸ் இழக்கும் என்று தெரிகிறது.

DMDK Vijaikanth Alliance Partner Cartoons
காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை ஆந்திரா, தமிழகம் இரு மாநிலங்கள் மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளன. ஆந்திராவில் கணிசமான தொகுதிகளை பெற்று வெற்றி பெற முடியும் என்று சோனியா நம்பிக்கையுடன் உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த தடவை 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தடவை 20 தொகுதிகள் வரை தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்கள் வரை தி.மு.க. கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

Seats & Votes
தொகுதிகள் எண்ணிக்கை குறைவது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் கூறுகையில், “கூட் டணி கட்சிகளுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அது தான் கூட்டணி தர்மமாகும். இது எங்களுக்கு அதிக பலத்தை தரும்” என்றார்.

Posted in 2009, Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 2009, Alliance, Candidates, Coalition, Congress, Deals, DMDK, DMK, Elections, India, Indira, Indra, Kalainjar, Lalu, Manmohan, Mulayam, Partners, PM, Polls, Sonia, TN, UP, Vijaikanth