முன்னுமொரு காலத்தில் விமானம் இருந்தது. விமானத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரலாம். அப்படி வரும்போது சிலரை சந்தித்து இருக்கிறேன். இது ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிஜத்தில் நடந்த கதை:
சொல்வனத்திற்காக நிறைய தெலுங்குக் கதைகளை கௌரி என்பவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரின் கணவர் கிருபானந்தத்தை சந்தித்தேன். வெகு அழகாக கதை சொல்கிறார். பேச்சை நிதானமாகவும் இனிமையாகவும் பல்வேறு கோணங்களிலும் கொண்டு சென்றார்.

சென்னையில் ‘வெளுத்துக் கட்டு’ என்று டோபி சங்கிலிக் கடைகள் முளைப்பது போன்ற இளைப்பாறல்களை இடையிடையே நுழைத்து, என் சிதறிய கவனத்தை மீண்டும் குவித்த போது ஜெயமோகன் நினைவிற்கு வந்தார். 2015-ல் நடந்த ‘நவீன விருட்சம்’ சந்திப்பில் சொல்வனம் மைத்ரேனையும் கதாசிரியர் அசோகமித்திரனையும் சந்தித்து இருக்கிறார்.
இவரும் அவருடைய நண்பர் திரு சுந்தர ராஜனும் இணைந்து “குவிகம் இலக்கியவாசல்” என்ற அமைப்பின் கீழ் மாதம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தி வருகிறார்கள்: இலக்கிய வாசல்: குவிகம்
திரு பிரபஞ்சன் அவர்களின் சந்திப்பும்,நேர்காணலும் அதில் ஒன்று. சாரு நிவேதிதாவைக் கூட அழைத்து இருக்கிறார்கள். கவிதைப் போட்டி நடத்தி தங்கள் தைரியத்தை நிரூபித்து இருக்கிறார்கள். சிறுகதை வாசிப்பை வாரந்தோறும் இயக்கமாகச் செய்கிறார்கள். கிரேஸி மோகன் ஆரம்பித்து திருப்பூர் கிருஷ்ணன் வரை நீண்ட நட்பு பட்டியல் வைத்து இருக்கிறார்.
சனிக்கிழமை மாலை நான்கரை மணிக்கு இவர் அபிலாஷைப் பேசச் சொல்லி கூட்டம் போட்டிருக்கிறார். மன்மத ஆண்டில்ஆனந்த் ராகவ் எழுதிய மணிப்பூர் சதுரங்கம் நாடகத்திற்கு அழைத்தார்.
கிருபானந்தனும் வலையகப் பத்திரிகை நடத்துகிறார். என்னை எழுதச் சொல்லிவில்லை.