முன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:
“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.
முதல் முறை ‘என்ன சார்! நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல?’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.
கோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”
பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.
இப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.
ரொம்ப முக்கியம் 🙂
நடிப்பில் சில சமயம் ஆழ்ந்து அமிழ்ந்துவிடுவார் எனக் கொள்ளலாம்.
அய்யப்ப மலைக்கு மாலை போடுவதால் மட்டும் அவர் உத்தமராக்கப் படாமல் இருக்கலாம் 😉
http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_03.html
அவர் மறைந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவு அவசியமா? 😦
//எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது. //
இது வேற. 😦
தென்றல், நன்றி __/\__ இப்பொழுதுதான் பார்த்தேன்
ஸ்ரீதர், எனக்கும் இதே கேள்வி இருந்தது. ஆனால், இப்பொழுதாவது சந்தேகத்தை நிவர்த்திக்காமல், முதலாமாண்டு அஞ்சலியை முன்னிட்டா பதிவிட முடியும்?
அதாவது அந்த வாத்தியார் இறந்த பொழுது கூத்தாடியவர்களை பார்த்துப் பரிகாசம் செய்ய இந்த வாத்தியார் இறந்த நேரத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் செய்யும் நுண்ணரசியல் பிரமிக்க வைக்கிறது.
ஆனால் செய்திருக்க வேண்டாமோ?
நவ. 14 நேரு பிறந்தநாளன்று அவர் மெளண்ட்பேட்டன் குடும்பத்துடன் எப்படி பழகினார் என்று நட்வர் சிங் எழுதிய செய்தியை ஹிண்டு நாளிதழ் வெளியிட்டு, நிறைய கண்டனக் கடிதங்கள் வந்து அதையும் அச்சிட்டது ஹிண்டு.
மறைந்தவர் பற்றி நீங்கள் அறிந்த நல்ல தகவல் மட்டுமே சொல்லுங்க்ள்.
சகாதேவன்
//மறைந்தவர் பற்றி நீங்கள் அறிந்த நல்ல தகவல் மட்டுமே சொல்லுங்க்ள்.//
மறைந்தவர் கடவுல் ஆக்கப்பட்டால்…?
கொத்ஸ், இதுதான் மாற்று நீரோட்டமா 😉
வடிவேல்முருகன், சின்டொக் __/\__
Oru periya nadigarai patri avar maraintha piragu ippadi oru new vendame. Nandri.
இறந்தவர்களை பற்றி பேசும்போது அவர்களது நட்பன்புகலையே பேசவேண்டும் என்று இந்து சாஸ்திரம் சொல்லுகிறது . நீங்கள் இறந்த பின்பும் கண்டிப்பாக நாங்கள் கடைபிடிப்போம் .
பதிவை விட பிரபு ராஜதுரை, ஸ்ரீதர் .. பின்னூட்டம் சூப்பர்.
ரொம்ப நல்லாயிருக்கு.
thevai illatha vellai.
en intha thevai illatha velai……..
iranthu vittalavarai patrikathaithal thavaru