- நானா படேகர் – இந்தி நடிகர்
- கிஷோர் (பொல்லாதவன், போர்க்களம், வெண்ணிலா கபடி குழு)
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம்
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம்
Posted in Movies
குறிச்சொல்லிடப்பட்டது Actors, Cinema, Film, Kishore, Movies, Nana, patekar, Photos, Polladhavan, Pollathavan, Similarity, Tamil
‘பாலா & ஜெயமோகனின் பத்து க்ளைமேக்ஸ்‘ என்று எழுதியதற்கு புலவர் விக்கிரமாதித்தன் கடவுளை செல்லமாக அழைத்தது போல் என்னையும் கொஞ்சி மறுமொழி வந்தவுடன் நானும் கடவுள் என்று விளங்கியது.
‘அன்பே சிவ’மாக கமல் வந்து இன்னும் ‘நீயும் கடவுள்’ என்று நெக்குருகாதது பாக்கி இருக்கு. நெஞ்சை கனக்க செய்வது கமலின் சாமர்த்தியம். மைக்கேல் மூர் மாதிரி டாகுமென்டரி சிதறல் செய்வது பாலா சாமர்த்தியம்.
நிறைய விமர்சனம் படித்து, எல்லாவற்றிலும் கொஞ்சம் பிரசாதமாய் எடுத்து லட்டு விநியோகம் செய்யும் ஆசையுடன் வலைப்பதிவில் கிடைத்த இடுகையெல்லாம் மேய்ந்ததில் பைத்தியக்காரன் (Naan Kadavul: Paithiyakkaran – Metaphors, Symbolism, Balachander Shots, Intentions) பிரித்துப் போட்டிருந்தார்.
குருவி, சிலம்பாட்டம், ஜி போன்ற படங்களை பாலா என்று பெயர் போட்டவர் இயக்கி இருந்தால், பைத்தியக்காரனிடம் இருந்து இன்னும் பல சுவாரசியமான விமர்சனம் கிடைத்திருக்கும். இயக்குநர் பாலாவும் எழுத்தாளர் ஜெயமோகனும் தங்கள் பெயரை அவுட்சோர்ஸ் செய்தால், அழகுள்ளபோதே ஐந்து ஷிஃப்ட் செய்யும் நடிகையாக பணம் பார்க்கலாம். பைத்தியக்காரனும் நுண்மையான டபுள் மீனிங் கொடுப்பார்.
நான் இது போல் நுட்பமாக அவதானித்து நிறைய எழுதுபவன். சாம்பிளுக்கு: வேர் இஸ் தி பார்ட்ட!?
பெருமாள்முருகனின் ‘நிழல் முற்றம்’ ஆரம்பித்து எல்லோரும் திருட்டு டவுன்லோடிட்டு பார்த்து டெலீட்டிய ஸ்லம்டாக் மில்லியனர் தொட்டு சினிமாவை பார்த்த கதை முதற்கொண்டு இல்லாததையும் இன்னாததையும் கூறல் ஆசை. வயாகரா போட்டவுடன் செயலில் இறங்க வேண்டும். ஆறு வாரம் கழித்து சாந்திமுகூர்த்தம் வைத்துக் கொள்ளக் கூடாது. எனினும், வயாகரா வந்துவிடுகிறேன் என்று வெளிப்படுகிறது இங்கே.
இந்து மதம் பயமுறுத்தும். ‘உம்மாச்சி கண்ணைக் குத்தும்.’ தற்கொலை தீவிரவாதியானால் இஸ்லாத்தில் மோட்சம். ஃபாதரின் மகளுடன் ஜல்ஸா செய்து பாவ மன்னிப்பு கேட்டாலும் கிடைக்கும்.
ஹிந்துவாக இருந்தால் அன்னியன் வந்து கருட புராணம் தண்டனை கொடுப்பார். ஃபுல்லாகி, பூண்டு ஊறுகாய் ஆகி, புழு ஃப்ரை ஆகி, பறவைக் காய்ச்சல் வரும் ஏழேழு ஜென்மம் உண்டு.
கத்ரீனாவில் அகப்பட்டவருக்கு விடுதலை என்பது நியு யார்க்கில் தஞ்சம் புகல். ஆப்பிரிக்காவில் இன அழித்தொழிப்பில் சிக்கியவருக்கு விடுதலை refugee ஸ்டேட்டஸ்.
பௌத்தத்தின் விடுதலை ‘ஆசை’.
கேபிடலிஸ விடுதலை அப்போதைக்கு பிழைத்துப் போவது; நிஜத்தை விட்டு ஓடிப்போவது; குளிர்ந்தால் பக்கத்துவீட்டு நெருப்பில் கதகதப்பு கோருவது.
கம்யூனிச விடுதலை தலைமைக்கு அடிபணிந்து, கடைநிலை யூனியன் மெம்பராய் உழைத்துக் கொட்டுவது.
இதெல்லாம் படத்தில் இருக்கிறதா என்று அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு வரவேண்டாம். படத்தில் பிச்சைக்காரர் சாஃப்ட்வேர் எஞ்சினியர் போல் கடைநிலை சிப்பந்தி. கொஞ்ச நாள் கழித்து ப்ராஜெக்ட் மேனேஜர் பழனி ஆகிறார். அப்புறம், மேலும் பதவி உயர்வு பெற்று பிச்சைக்காரரை வைத்து பணக்காரர் ஆவது விடுதலை என்கிறார்.
ப்ளாகருக்கு விடுதலை எது? நீண்ட பதிவை பின்னூட்டத்தில் சம்ஹரிப்பது. அகோரிக்கு விடுதலை எது? சம்ஹரிப்பு தனக்கானது என்று சஞ்சரிப்பது.
கொஞ்சம் விளம்பர இடைவேளை: நான் கடவுள் தொடர்பான முந்தைய பதிவுகள்
மல்டி டாஸ்கிங் கிங் ஆக இருக்கலாம். ஹிந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் என பன்மொழி பண்டிட் ஆக இருக்கலாம். வெள்ளிக்கிழமை கோவிலுக்கு ராகுகாலத்தில் பல ஃபிகர் வரும். ஆனால், உங்க சைட்டு எதுன்னு புரிஞ்சுண்டு, அதை மட்டும் லுக்கு விடுவீங்க இல்லியா?
சொல்ல வந்ததை மட்டும் சொல்வது கலை. தெரிந்ததை எல்லாம் சொல்வது பல்சுவை இதழ்; வலைப்பதிவு; நாவல்/காவியம். ஆனால், சினிமா அல்ல.
இவரோட இப்பொழுது வந்த இன்னொரு படம் ‘அஞ்சாதே‘. நான்கு ட்ராக்கில் செல்லும்:
1. காவல்துறை
2. நட்பு
3. செல்வந்தச் சிறுமி கடத்தல்
4. காதல்
இப்பொழுது அஞ்சாதேவைப் பார்த்து கைக்கிளை கொண்ட நான் கடவுள் கிளை:
1. வறியவர்
2. காசி அகோரி
3. தாய் – மகன்
4. தெய்வம்
முன்னது கோர்த்த விதத்தினால் சிமெண்டும் மணலும் சரியாகக் கலந்த கலவை.
பீரும் விஸ்கியும் வைனும் கலந்து கட்டி அடிக்கலாம்; தப்பில்லை. ‘நான் கடவுள்’ குளுகுளு பியர் ஏற்றுகிறது. அதற்குப் பிறகு கொனியாக், வைன், வெர்மவுத் என்று சகலத்தையும் சர்பத் போல் கலக்கு கலக்க, எனக்கு மைக்கேல் மூர் இயக்கி, பில் மெஹர் ஹீரோவாக, ஆன் கூல்டர் நாயகியாக நடித்து, ரஷ் லிம்பா வசனம் எழுதிய படம் பார்த்த அஜீரணம்.
இப்போது சித்தர் பாடல் ப்ரேக்:
அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே;
உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. (212)தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. (49)சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே. (50)சிவவாக்கியரின் சிவவாக்கியம் 205வது பாடல்.
ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே
படம் பார்த்தால் நம்ப வேண்டாம்; மயங்கணும்.
கதையில் லயித்து ஒன்றவேண்டாம்; என்றாவது பிச்சைக்காரரைப் பார்த்தால் ‘வெண்ணிலவே! வெண்ணிலவே!! விண்ணைத்தாண்டி வருவாயா?’னு கனவு கஜோள்ளோடு டூயட்டணும்.
‘ஆளவந்தான்‘ புத்திசாலித்தனம் வேண்டாம்; ‘தசாவதார‘த்தின் பரபரப்பிலோ வித்தை காட்டலிலோ சொக்கணும்.
ஆவணப்படம் எடுத்தால் கூட ஒன்றவைக்கும் சிரத்தையும் தகவலில் உள்ள துல்லியத்திற்கும் புனைவுலக 70 எம் எம்மில் மினுக்கிட வேணாம்; பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் வாரணம் ஆயிரமின் drug பயன்பாட்டின் வீச்சும் வீரியமாவது தைக்க வேணாமோ?
வேணாம்கிறார் பாலா. ஒத்து ஊதுகிறார் சாரு நிவேதிதா.
குறிச்சொல்லிடப்பட்டது Arya, அஞ்சாதே, அன்பே சிவம், ஆளவந்தான், கமல், சினிமா, தசாவதாரம், திரைப்படம், நான் கடவுள், வாரணம் ஆயிரம், விமர்சனம், Bala, Cinema, Films, Jayamogan, Jayamohan, Jeyamohan, Movies, Naan Kadavul, Naan Kadawul, NK, Palani, Pooja, Vikramathithan, Vikramathithyan
நான் கடவுள் திரைப்பட விமர்சனங்கள்:
முந்தைய பதிவு: சென்சார் விமர்சனம் + கதை
1. உண்மைத்தமிழன்: First Day; First Look: ஆர்யா பேசும் மொத்த வசனங்களை ஒரு A4 பேப்பரில் எழுதிவிடலாம்.
:::
டைட்டில் காட்சியில் துவங்கி, இறுதிக் காட்சி வரை எங்கும் காவிக்கொடிகள்.. பக்தி, ஆன்மீகம்.. ஜோதிடம், சாஸ்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், கேள்விகள்.. கடவுளைத் தேடும் பணி என்று படம் முழுவதும் இந்துத்துவா மயம்தான். வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.
:::
சென்ற வாரம்தான் Slumdog Millonaire படத்தினைப் பார்த்துத் தொலைத்துவிட்டதனால், இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.
2. செய்திகள் மட்டுமே சித்திரமானால்:
மூலம்: ஜெயமோகன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலக் கட்டுரை
தமிழில்: ஜடாயு
“இந்த ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.
இந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் நான் கடவுள் படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். நான் கடவுள் படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.
3. Cable Sankar: நான் கடவுள் – சினிமா விமர்சனம்.: பிச்சைகாரர்களை மேய்க்கும் முருகன், திருநங்கை பெண், அவர்களின் தலைவன், போலீஸ் இன்ஸ்பெக்ட்ர், அந்த போலீஸ் ஏட்டு, உடல் ஊனமுற்ற அம்பானி பற்றி பேசும் சிறுவன், இரண்டு கை, கால் இல்லாத எப்போது கண் மூடி, வாய் பேசாதிருக்கும் சாமியார், சாமியார் என்று சொல்லிக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் சாமியார்கள், கீச்சு குரல் சாமியார், சாமி வேடமிட்டு பிச்சையெடுக்கும் குறை கொண்ட பெண்கள், என்று நிஜ பிச்சைகாரர்களை நம் கண்முன்னே வாழ விட்டிருக்கிறார்கள்.
கவிஞர் விக்ரமாதித்தன் மனநிலை குன்றிய குழந்தையை அந்த கும்பலில் வைத்து காப்பாற்றும் ஒரு பிச்சைகாரர்.
அழகன் தமிழ்மணி ருத்ரனின் அப்பாவாக வந்திருக்கிறார். அமமாவாக பாரதி.
பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எங்கே விட்டோம் என்று தெரியாமல் அலையும் தகப்பனுக்கு, ருத்ரனை பார்த்ததும் ஞாபகம் வருவது ‘என் புள்ளைய எனக்கு தெரியாதா’ என்பதெல்லாம் சரியான ஜல்லியடிப்பு. பூஜாவிடம் நீ வயசுக்கு வந்திட்டியான்னு கேட்கும் பிச்சைகார தலைவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யாமல் கடைசிவரை பாதுகாப்பது படத்தின் இயல்பு நிலைக்கு மாற்றான காட்சிகள்.
பாலா சார் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய காமெடி என்கிற பெயரில் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை வைத்து பாடி மிமிக்கிரி செய்து படத்தை ஓட்டுவீர்கள். அந்த காட்சிகள் படத்துக்கு எந்த விதத்தில் உதவியிருக்கிறது என்றே புரியவில்லை.
4. அயன்:
Cinema Critics: விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா
இந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம். . . .
‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’
பேசாமலேயே மொழி படத்துல கலக்கின ஜோதிகாவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான். பூஜாவுக்கு பெரிய ஜே. . . .
5. லக்கிலுக் / மடிப்பாக்கம்
யுவகிருஷ்ணா: Movie Reviews: ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.
ட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை
Posted in Movies, Naanj Kadavul
குறிச்சொல்லிடப்பட்டது Arya, ஆர்யா, சினிமா, ஜெமோ, ஜெயமோகன், திரைப்படம், நான் கடவுள், பாலா, பூஜா, விமர்சனம், Bala, Cinema, Films, Movies, Naan Kadavul, Pooja, Reviews, Spoilers
முந்தைய நான் கடவுள் பதிவு
இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்…டென்ஷன்… ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!
படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். “சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம்.”
“காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை” என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.
நர மாமிசம் சாப்பிடுபவர்களை கொடூரி என்பார்களாம். இந்த கொடூரியாகவும் ஒரு காட்சியில் வருகிறாராம் ஆர்யா. பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஓரிடத்தில் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம்.
கடந்த மூன்று வருடங்களாக நான் கடவுளை உருவாக்கி வருகிறார் பாலா. ஆனாலும், படப்பிடிப்பு நடந்தது மொத்தம் 369 நாட்கள்தானாம். பாலா, பூஜா தவிர்த்து படத்தில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களில் பலர் நிஜமான மன நோயாளிகள். ஊடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். இவர்களை நடிக்க வைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாராம் பாலா. இதன் காரணமாகவும், பெரிய குளம் ஏரியாவில் எப்போதாவது தலை காட்டும் வெயிலாலும்தான் படப்பிடிப்பு தாமதமானது என்கிறார்கள் யூனிட்டில்.
சரி, முதல் பாரா சஸ்பென்சுக்கு வருவோம். இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். “என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு…!”
நன்றி: தணிக்கை துறையின் விமர்சனம்
Posted in Movies
குறிச்சொல்லிடப்பட்டது Arya, ஏழாம் உலகம், சினிமா, ஜெயமோகன், திரைப்படம், நான் கடவுள், விமர்சனம், Bala, Cinema, Films, Kadawul, Movies, Naan Kadavul, Pooja, Promos, Reviews, Story
நன்றி: ரவி ஆதித்யா: நான் கடவுள்
அசல்: Raajavin Ramanamaalai – Pitchai Paathiram (Non-Film devotional album)
புதுசு: Pichaipaathiram – Madhu Balakrishnan: Naan Kadavul
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
முழு வீடியோ :: Dialogue Writer Jayamohan On Naan Kadavul
பிற செவ்வி:
முந்தைய இடுகை: