Naan Kadavul: Something is Missing


நான் கடவுள் திரைப்பட விமர்சனங்கள்:

முந்தைய பதிவு: சென்சார் விமர்சனம் + கதை

1. உண்மைத்தமிழன்: First Day; First Look: ஆர்யா பேசும் மொத்த வசனங்களை ஒரு A4 பேப்பரில் எழுதிவிடலாம்.
:::
டைட்டில் காட்சியில் துவங்கி, இறுதிக் காட்சி வரை எங்கும் காவிக்கொடிகள்.. பக்தி, ஆன்மீகம்.. ஜோதிடம், சாஸ்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், கேள்விகள்.. கடவுளைத் தேடும் பணி என்று படம் முழுவதும் இந்துத்துவா மயம்தான். வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.
:::
சென்ற வாரம்தான் Slumdog Millonaire படத்தினைப் பார்த்துத் தொலைத்துவிட்டதனால், இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.

bala-arya-movies-previews-films-reviews-naan-kadavul-stills-018

2. செய்திகள் மட்டுமே சித்திரமானால்:
மூலம்: ஜெயமோகன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலக் கட்டுரை
தமிழில்: ஜடாயு

“இந்த ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.

இந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் நான் கடவுள் படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். நான் கடவுள் படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.

3. Cable Sankar: நான் கடவுள் – சினிமா விமர்சனம்.: பிச்சைகாரர்களை மேய்க்கும் முருகன், திருநங்கை பெண், அவர்களின் தலைவன், போலீஸ் இன்ஸ்பெக்ட்ர், அந்த போலீஸ் ஏட்டு, உடல் ஊனமுற்ற அம்பானி பற்றி பேசும் சிறுவன், இரண்டு கை, கால் இல்லாத எப்போது கண் மூடி, வாய் பேசாதிருக்கும் சாமியார், சாமியார் என்று சொல்லிக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் சாமியார்கள், கீச்சு குரல் சாமியார், சாமி வேடமிட்டு பிச்சையெடுக்கும் குறை கொண்ட பெண்கள், என்று நிஜ பிச்சைகாரர்களை நம் கண்முன்னே வாழ விட்டிருக்கிறார்கள்.

கவிஞர் விக்ரமாதித்தன் மனநிலை குன்றிய குழந்தையை அந்த கும்பலில் வைத்து காப்பாற்றும் ஒரு பிச்சைகாரர்.

அழகன் தமிழ்மணி ருத்ரனின் அப்பாவாக வந்திருக்கிறார். அமமாவாக பாரதி.

பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எங்கே விட்டோம் என்று தெரியாமல் அலையும் தகப்பனுக்கு, ருத்ரனை பார்த்ததும் ஞாபகம் வருவது ‘என் புள்ளைய எனக்கு தெரியாதா’ என்பதெல்லாம் சரியான ஜல்லியடிப்பு. பூஜாவிடம் நீ வயசுக்கு வந்திட்டியான்னு கேட்கும் பிச்சைகார தலைவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யாமல் கடைசிவரை பாதுகாப்பது படத்தின் இயல்பு நிலைக்கு மாற்றான காட்சிகள்.

பாலா சார் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய காமெடி என்கிற பெயரில் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை வைத்து பாடி மிமிக்கிரி செய்து படத்தை ஓட்டுவீர்கள். அந்த காட்சிகள் படத்துக்கு எந்த விதத்தில் உதவியிருக்கிறது என்றே புரியவில்லை.

4. அயன்:

Cinema Critics: விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா

  1. சேது – தேவதாசிகள்
  2. நந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள்
  3. பிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்

இந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம். . . .

‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’

பேசாமலேயே மொழி படத்துல கலக்கின ஜோதிகாவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான். பூஜாவுக்கு பெரிய ஜே. . . .

5. லக்கிலுக் / மடிப்பாக்கம்

யுவகிருஷ்ணா: Movie Reviews: ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

ட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை

14 responses to “Naan Kadavul: Something is Missing

  1. பிங்குபாக்: நான் கடவுள் - அஹம்ப்ரம்மாஸ்மி « Snap Judgment

  2. பாலா மூன்று வருஷமா ஏதோ கர்ப்பிணி பிள்ளையைச் சுமப்பது போல் சுமந்து கொடுத்திருக்காரே, படம் புட்டுக்கிச்சா?

    படத்தின் வால்போஸ்டர்களே பயமுறுத்தலா இருக்கு?
    பார்க்கலாமா வேண்டாமா?

  3. விமர்சனம் எல்லாம் நம்பாதீங்க விஜய்.

    நீங்களே போய் பார்த்துடுங்க! நான் வெள்ளித்திரையில், பிரும்மாண்டமாய் பார்க்கவுள்ளேன் 🙂

  4. இந்தப் படம் மரண கடியாக இருக்கும் என்று ஸ்டில்ஸையும் ட்ரெயிலரையும் பார்த்தபோதே தோன்றியது.

  5. பிச்சைக்காரர்களை சப்ஜெடாக வைத்து படம் எடுப்பவர்கள்,
    எழுத்தாளர்கள் காட்டில் மழை :).
    லண்டனில் பெய்தது பெரு மழை
    என்றால் நாகர்கோவிலில் லேசாக
    தூறல்தானோ 🙂

  6. பிங்குபாக்: நான் கடவுள்: 140 எழுத்து விமர்சனம் « Snap Judgment

  7. //நீங்களே போய் பார்த்துடுங்க! நான் வெள்ளித்திரையில், பிரும்மாண்டமாய் பார்க்கவுள்ளேன்
    //

    When? where?

  8. சாத்தான்,
    ட்விட்டர் நண்பர்கள் அப்படித்தான் மிரட்டுகிறார்கள். இப்போது ‘செல்லவேண்டுமா?’ என்னும் மனக்கிலேசம்.

  9. பிச்சைக்காரர்களை, விளிம்புநிலையாளர்களை வைத்து பணக்காரர்களுக்கு படமெடுத்தால் ஓடும். இந்தியாவில்? Probably they have better things to worry.

  10. பாலாஜி,
    இந்த வாரம் லேது. அடுத்த வாரம் வெளியாகுமாம்.

    அதற்குள் எல்லாரும் கிழித்துத் தொங்கவிட்டுடுவாங்க 😉

  11. //SnapJudge // பெப்ரவரி 6, 2009 இல் 7:00 பிற்பகல்

    பாலாஜி,
    இந்த வாரம் லேது. அடுத்த வாரம் வெளியாகுமாம்.
    //
    அதானே பார்த்தேன்… இந்த வாரம் ஒரு தெலுகு படம் ரிலிஸ் ஆகுது. கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் 🙂

    //அதற்குள் எல்லாரும் கிழித்துத் தொங்கவிட்டுடுவாங்க
    //

    ஆமாம் பாபா. இங்க ரிலிஸ் ஆகிருந்த இந்நேரம் நம்ம விமர்சனம் போட்டிருக்கலாம் 🙂

  12. திருமூர்த்தி சுப்ரமணியம்

    நான் கடவுள் படத்தில என்ன பிடிக்கல? ஒரு வேளை ஆர்யா மனசு திருந்தி பூஜாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டு விட்டு; காசி சாமியாரின் ஆசியில் பூஜாவிற்கு பார்வை வரவைத்து அதன் பிறகு வில்லனை துவம்சம் செய்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ? குத்து பாடலை பேரரசு எழுதி அதனை அழகான தமிழில் உதிட் நாராயணன் பாடியிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நல்லா இருந்திருக்குமோ? சிந்திக்கலான கூட பரவால…சிந்திக்கவாவது விடுங்கப்பா.

  13. Salute director Bala for taking great effort to convey the difficulties faced by disabled people.
    excellent!

  14. இசைப்பிரியன், நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.