இந்த நிமிடம் வரை சஸ்பென்ஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் வை.கோ.தான். தி.மு.க., கூட்டணியில் வைகோ தொடர்ந்து நீடிஞூபபாரா, அல்லது அதிமுக., பக்கம் சாய்ந்து விடுவாரா என்ற கேள்வி தொடர்ந்து நீடித்தபடியே இருக்க… அதையொட்டி பல்வேறு யூகங்கள் சுழன்றடித்துக் கொண்டிருந்தன. அந்த நிலை…. தற்போது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து அக்கட்சித் தலைவர்களிடையே வேறுபட்ட அபிப்பிராயங்கள் எழுந்துள்ளதை அடுத்து, மதிமுக., வில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உலாவரத் துவங்கிவிட்டன.
கடந்த டிசம்பர் மாதம் வரையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராகக் கலைஞரை அரியணையில் அமரவைப்பதுதான் என் வேலை என்று பேசிவந்த வைகோ, இப்போது அதுகுறித்து தீவிரமாகப் பேசாமலிருப்பதால் ம.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்களிலிருந்து கடைசித் தொண்டன் வரைக்குமுஞூஇருவேறுபட்ட மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக.,வுடன் தான் போக வேண்டும் என்று ஒரு தரப்பும்…. தி.மு.க.,வுடன் தான் போகவேண்டும் என்று இன்னொரு தரப்பும் கச்சைக்கட்ட கட்சிக்குள் கலகம் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ம.தி.மு.க.,வினரின் இந்த இரு வேறுபட்ட மன ஓட்டம் குறித்து நம்மிடம் பேசினார். கட்சியின் நிர்வாகி ஒருவர். இவர் அதிமுக., சார்பு நிலையிலிருப்பவர். எம்.பி.க்கள் ரெண்டு பேர் எக்காரணம் கொண்டும் தி.மு.க., கூட்டணியை விட்டுப் போயிடக்கூடாதுனு பிடிவாதமா இருக்காங்க. அதுக்காக அவங்க ஏதோ கட்சியைப் பத்திக் கவலைப்பட்டுதான் அப்படி சொல்றாங்கனு நினைச்சிட வேண்டாம். ரெண்டுபேரும் அமைச்சராகிற கனவுல இருக்காங்க. எலெக்ஷன் முடிஞ்சதும் அவங்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி வாங்கித் தந்துடறதா தி.மு.க.,வுல சொல்லியிருக்காங்க. அதனாலதான் தி.மு.க., கூட்டணியில இருந்து விலகுறதுக்கு ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தாலும் விலகச் சம்மதிக்காம அடம்புடிக்கிறாங்க. ஒருவேளை, தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிடுறதா கட்சி முடிவெடுத்துட்டா, கட்சியை உடைச்சி போட்டி இயக்கம் நடத்தியாவது அமைச்சராயிடறதுனு முடிவா இருக்காங்க.
அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி தலைவர் வை.கோவைச் சந்திக்க தாயகத்துக்கு வர்றதாச் சொல்லியிருந்தாரு. அதுக்காக தலைவர் வந்து அரைமணி நேரமா வெயிட் பண்ணியும் அவர் வரவேயில்லை. போன் பண்ணிக் கேட்டதுக்கு அவரு குளிச்சிக்கிட்டு இருக்கிறதா சொல்லியிருக்காங்க. பாத்தாரு தலைவரு டக்குனு கிளம்பி அந்த எம்.பி.யோட இருப்பிடத்துக்கே போயிட்டார. அதுக்குப்பிறகு ரெண்டு பேரும் ரெண்டு மணி நேரம்பேசியிருக்காங்க. ஆனாலும் கூட்டணி விஷயத்துல அந்த எம்.பி.யை சமாதானப்படுத்த முடியாமலே திரும்பிட்டாரு வைகோ.அதனால கட்சி உடைஞ்சிடுமோனு பயந்து இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கமுடியாம தலைவரு தத்தளிச்சிக்கிட்டு இருக்காரு என்றார் அந்த நிர்வாகி.
தி.முக., கூட்டணியில் இருப்பதுதான் பலம் என்று நினைக்கக்கூடிய மணம் பரப்பும் பெயரைக் கொண்ட மாவட்டச் செயலாளர் ஒருவர், வைகோ அதிமுக., பக்கம் போய்விட்டால் திமுக.வில் இணைந்துவிடுவது என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஏற்கெனவே தான் மட்டும் திமுக.,வில் இணைவதற்கு ஆர்வம் தெரிவித்தாராம் இவர்.ஆனால் கூட்டணி இருப்பதால் இப்போது வேண்டாம் என்று திமுக., சார்பில் சொல்லப்பட்டதாம். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இவருக்கு, மதிமுக.,வுக்கு வந்த பின்னர் எம்.எல்.ஏ., எம்.பி. யாகும் வாய்ப்பு தரப்படவில்லை என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறதாம்.
சட்டசபைத் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு தவறான முடிவை எடுத்து, தங்களுக்குப் பதவி வாய்ப்பு இல்லாமல் செய்துவிடுகிறார் வைகோ. இம்முறையும் அப்படி ஏதாவது ஒரு மடிவை அவர் எடுத்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட தயாராகத்தான் இருக்கிறேன் என்று தன் சகாக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இப்போது தனக்கு ஆதரவாகப் பேசக்கூடியவர்கள் யார் யார் என்பதை பல்ஸ், பார்க்கவும் ஆரம்பித்திருக்கும் இவர், அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு தாய் கழகத்தில் ஐக்கியமாவதா, அல்லது தனி அணியாகச் செயல்பட்டு வைகோவுக்கு டார்ச்சர் கொடுப்பதா என்ற யோசனையில் இருக்கிறாராம். இவருக்குப் பக்கபலமாக இருப்பது, வடமாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு தலைவராம்.
அந்த வடமாட்டத் தலைவருக்கும் கட்சியில் ஏகப்பட்ட வருத்தங்கள்தான். தன்னை நம்பி அரசியலுக்கு வந்த யாருக்கும் எதுவும்செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறாராம். தன்னுடைய மாவட்டத்தில் தன்னை ஓரம் கட்டும்விதமாக சில காரியங்களை கட்சி மேலிடம் செய்வது அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம்.ஏöன்ன்றால் கட்சியை ஆரம்பித்தபோது வந்த மூத்த தலைவர் அவர், சில நேரங்களில் அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்படுவதை அவர் விரும்புவதில்லையாம். அவரைக் கட்டுப்படுத்தும் வகையில் சிலரைக் கட்சியில் வளர்த்துவிடுவதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக ஏற்கெனவே புழுக்கத்தில் இருக்கிறாராம். குறிப்பாக அமைச்சராக முடியாத வருத்தம் அவருக்கு நிறையவே இருக்கிறது. எனவே அவரும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் வைகோவுடன் சிறையில் இருந்த தலைவர் ஒருவருக்கு எம்.பி. ஸீட் கிடைக்கவில்லை என்ற வருத்தம் ஏற்கெனவே இருந்து வருகிறது. இப்பொழுது அதிமுக.,.வுடன் கூட்டணி அமைத்தால், அவர் கட்சியில் இருந்தே விலகிவிடுவார் அல்லது போட்டி இயக்கத்தில் ஐக்கியமாகிவிடுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி பொட சிறை சென்ற ஏழு பேர்களுடைய குடும்பத்தினரும் அவரைச் சந்தித்து அதிமுக.,வுடன் செல்ல வேண்டாம் என்று வைகோவிடம் எடுத்துச் சொல்லும்படிக் கேட்டிருக்கிறார்களாம். வைகோ அதை ஏற்கவில்லை என்றால், போட்டி இயக்கம் நடத்த முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி சிறையிலிருந்த இந்தத் தலைவருடன் செல்வதற்கு மூத்த பெண் நிர்வாகி ஒருவர் தயாராகி வருகிறாராம்.
வை.கோவை சிறையில் அடைத்த ஆட்சியை அகற்றாமல் ஓயமாட்டேன் என்று சபதம் போட்டிருக்கும் நிர்வாகி சமீபகாலமாக திமுக. நிர்வாகிகளிடம் அடிக்கடி பேசி வருகிறாராம். எப்படியாவது திமுக. கூட்டணியில் தக்கவைத்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் எங்களையாவது சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி வருகிறாராம். இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் தனியாக அவ்வப்போது சந்தித்துப் பேசி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
ஆளும் கட்சியைப் பொறுத்தவரை, திமுக., கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மதிமுக.வை மட்டுமே முழுமையாக தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். காங்கிரஸ், பா.ம.க, ஆகியவற்றில் உள்ள ஒரு சில அதிருப்தியாளர்களை மட்டுமே இழுக்க முடியுமே தவிர, கட்சியையே தங்கள் பக்கம் இழுக்க முடியாது என்பது அதிமுக.வுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே இம்முறை கூட்டணியை உடைத்து மதிமுக.,வை இழுத்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் மந்திரச்சொல் ஸ்டாலின் ஸ்டாலின் இருக்கும் வரை உங்களை வளரவே விடமாட்டார்கள் என்று சொல்லியே வைகோவை வளைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஒருவேளை திமுக. கூட்டணியில்உள்ள கட்சிகளை உடைக்க முடியாவிட்டால் திமுக.,வுக்குத் தனி மெஜாரிட்டி கிடைக்கவிடாமல் செய்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த சமயத்தில் குதிரை பேரங்கள் நடத்திஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கலாம் என்று ஆளுங்கட்சி கணக்குப் போடுவதாகக் கூறப்படுகிறது.
இப்படி சர்ச்சைகள் றெக்கை கட்டி மறந்து கொண்டிருக்கும் நிலையில் குடியரசு தினத்தன்று திடீர் சந்திப்பாக கருணாநிதியை வீடு தேடிப்போய் பார்த்தார் வைகோ. கூட்டணிக் குழப்ப செய்திகளுக்கு ஒரு முடிவு கட்டி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு கருணாநிதியின் கோபாலபுரம் வீடு நோக்கி படையெடுத்தனர் பத்திரிகையாளர்கள். சுமார் முக்காமல்மி நேரம் நடந்து முடிந்த அந்தச் சந்திப்பின் முடிவில் கருணாநிதி, வைகோ இருவருமே பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் போய்விட்டனர். இருவரின் முகங்களும் ஒருவித இறுக்கத்துடனேயே காணப்பட்டன.
என்னதான் பேசினார்கள்? என்று இரு கட்சி வட்டாரங்களிலும் விசாரித்தபோது, மதிமுக.,வின் நிலை பற்றி சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் பற்றி வைகோவிடம் கேட்டிருக்கிறார் கருணாநிதி. அதற்கு வைகோ நீண்ட விளக்கம் கொடுத்தும், கருணாநிதிக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனாலலேயே இருவரும் உடனடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை என்று சொன்னார்கள்.
அதேசமயம் அன்று மாலை, பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி தி.மு.க., கூட்டணி அப்படியே நீடிக்கிறது. உளவுத்துறையினர்தான் கூட்டணியில் குழப்பம் இருப்பதாக செய்தி பரப்புகிறார்கள். இன்று நானும் வைகோவும் சந்தித்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னார்.
ஆனால் வைகோ தன் தரப்பு என்ன என்பது பற்றி சொல்லாமல், மர்மதேச பாணியைக் கடைபிடிப்பதுதான் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது!
ஜூ.வி. தேர்தல் டீம்
————————–
நன்றி: ஜூனியர் விகடன் (மற்றும் தினமலர்)
http://www.dinamalar.com/2006jan30/juniorvik.asp
Courtesy: http://www.juniorvikatan.com