Daily Archives: ஜனவரி 31, 2006

‘ஆஸ்கரை அவமதிப்போம்’

செய்தி ::

‘பஹேலி’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரை கிடைக்கவில்லை. சிறந்த அயல்நாட்டுத் திரைப்படத்துக்கான போட்டியில் இத்தாலி, ஃப்ரென்சு, பலாஸ்தீன, ஜெர்மன், தென்னாப்பிரிக்க மொழிப் படங்களே உள்ளன.

இதைக் கேள்விப்பட்ட முன்னாள் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் உமாபாரதி பொங்கியெழுந்தார்.

“கடந்த பல வருடங்களாக ஆஸ்கரின் கடைக்கண் கூட இந்தியப் படங்களின் மேல் விழுவதில்லை. பரங்கியனை அவமானப்படுத்தும் ‘லகான்’ அல்லது நம்மை உரித்துக்காட்டும் ‘பார்ன் இன்டு ப்ராத்தல்ஸ்’ போன்ற படங்களையே ஆஸ்கார் மீண்டும் மீண்டும் ஆதரிக்கிறது. நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அறிக்கை விடுத்துள்ளார்.

பா.ஜ.க.வின் முன்னணி சிந்தனையாளர்களுள் ஒருவரான கோவிந்தாச்சாரியாவும், வலைப்பதிவாளர்களை சந்திப்பதில்லை என்று உறுதியை உடைத்துவிட்டு, உமாபாரதியுடன் காணப்பட்டார்.

சந்திப்பில் பேசிய கோவிந்தாச்சாரியா, “இந்தப் படத்தைக் குறித்து அமோல் பலேகருடன் பேசும்போதே நான் சொன்னதுதான். உமா பாரதியார் வைஷ்னோ தேவி பயணிப்பதை திரைக்கதையாக்கும்படி உபதேசித்திருந்தேன். ஆனால் அவரோ ஷாரூக் கான் கால்ஷீட் இருக்கிறதே என்று பஹேலி எடுத்துவிட்டார். நான் சொன்ன கதைக்கு மட்டும் காஷ்மீர் போராளியாக ஷாரூக் நடித்திருந்தால், இந்நேரம் ஆஸ்கர் பரிந்துரை என்ன… விருதே நமக்குத்தான் கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் ‘தேச நல்லிணக்கத்திற்காக நர்கீஸ் தத்’ விருதாவது கொடுத்திருப்பார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.

சென்னையில் இந்த வலைப்பதிவை படித்த ரிச்சி ஸ்ட்ரீட் வணிகையாளர் ஆஸ்கார் விருதுகளைத் தான் பெரிதும் வரவேற்பதாக சொன்னார். மேலும், “பொங்கல் படங்கள் எதுவுமே மக்களுக்குப் பிடிக்கலை. விசிடி பிஸினஸ் படுத்துடுமோ என்று நாங்க பயந்தபோதுதான் இப்படி ஒரு அறிக்கைய அகாதெமி வெளியிட்டிருக்காங்க. கிங் காங், ஹாரி பாட்டர் என்று ஜல்லியடிச்ச நாங்க இனிமே ‘அகாடெமி புகழ் பெற்ற… திரைக்கு வந்து சில மாதங்களே ஆன’ என்று சொல்லி நிறைய வெரைட்டி காட்டலாம் சார்” என்று மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

போபாலில் இருந்து பொப்பிலி ராஜாவும் மவுண்ட் ரோடில் இருந்து மதியழகனும் இந்த செய்தியறிக்கையில் பங்களித்தார்கள்.

குறிப்பு: இந்தப் பதிவை நிஜம் என்று நம்பவைக்கும் அளவு ரியாலிடி இருப்பதற்கு இதை எழுதியவர் பொறுப்பாக மாட்டார்.


| |

தலைவர் கைது இல்லை

Stalin, hundreds of DMK men removed :: Chennai Online News Service

‘சார். நாளைக்கு எனக்கு லீவு கிடைக்குமா?’

‘ஏன் திடீர் என்று விடுமுறை கேட்கறீங்க?’

‘நாளைக்கு க்ளிண்டனை impeach செய்யப் போறாங்களாமே! ஆபீஸ் வருவதற்கு பயமா இருக்கிறது. ட்ரெயின் எல்லாம் ஓடுமா என்று தெரியலை. நான் இப்பத்தான் புது கார் வாங்கியிருக்கேன். சாலை மறியல் எல்லாம் நடக்குமே. காரை கிழிச்சுடுவாங்க சார். இன்ஷூரன்ஸ் ஜாஸ்தி செஞ்சிடுவாங்க.’

‘நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை பாலாஜி!’

‘எங்க ஊரில் க்ளிண்டன் மாதிரி கட்சித் தலைவருக்கு எதிராக இந்த மாதிரி மசோதா கொண்டு வந்தால், ஊரே ரணகளமாயிடும். பந்த் என்பார்கள். ஜாலியாக வீட்டில் உட்கார்ந்துண்டு கிரிக்கெட் மாட்ச் பார்க்கலாம். சன் டீவியில் ‘ஸ்பெஷல் ப்ரொகிராம்’ என்று புத்தம்புதிய இளைய தளபதி திரைப்படம் கூட காட்டுவாங்க சார். ஆனால், ஹோட்டல் எல்லாம் திறந்து இருக்காது. ஷாப்பிங் போக முடியாது’

‘அப்படியா? நீங்க ‘நியூட் கிங்ரிச்‘ பதவி விலக்கப்பட்டப்பக் கூட இங்கதானே இருந்தீங்க… ரிபப்ளிகன் கட்சித் தொண்டர்களே பேசாமத்தானே இருந்தாங்க. அப்பவே ஒண்ணும் நடக்கலியே! இப்பொழுதும் அந்த மாதிரி எதுவும் இருக்காதுங்க. நாளை மற்றொரு நாளே.’

‘சரிங்க’

முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கல் எறிதல்களும், சாலைத் தடுப்புகளும், பந்த்களும் இல்லாத ஊரில், வேலைக்கு இருப்பதை நினைத்து, மனம் நொந்தபடியே இருக்கைக்குத் திரும்புகிறான்.

இணையத்தில் தமிழ்நாட்டு செய்திகள் வழக்கம் போல் மிளிர்ந்தது:

Activists, thinking that their leader has been arrested, tried to block roads in various parts of the state. A metro report said 70 party volunteers, including MLA and functionaries of the local transport Corporation, were removed for blocking road traffic. In another regional hub, about 250 party workers were removed by the police when they blocked road traffic. Similar demonstrations were reported from City A, City B, City C, City D and other parts of the state.


| |

"இஸ்லாமிய தீவிரவாதம்"

Foreign Policy: Think Again: Islamist Terrorism: ‘ஃபாரின் பாலிசி’யில் படித்த கட்டுரையில் இருந்து…

 • இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையை தீர்த்துவிட்டால் தீவிரவாதம் குறைந்துவிடுமா?
 • வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியின்மை ஆகியவையே திவிரவாதிகளை உருவாக்குகிறதா?
 • படிக்காத இளைஞர்கள்தான் தீவிரவாதி ஆகிறார்களா?
 • தீவிரவாதிகளை உண்டாக்கும் தொழிற்சாலையாக மதராஸாக்கள் விளங்குகிறதா?
 • வசதி இல்லாததனால்தான் பொதுமக்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்களா?
 • இஸ்லாம் எதிர்நோக்கும் ஆபத்தினால்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவு பெருகிறதா?
 • வாழ்க்கையில் வெறுப்படைந்த கோபமும் துடிப்பும் நிறைந்த மேற்கத்திய முஸ்லீம்கள்தான் புதிய தலைமுறை தீவிரவாதிகளா?

  காந்தி, ஜின்னா, விடுதலைப் புலிகள் என்று பலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, காஷ்மீர், பஞ்சாப் முதல் அல்ஜீரியா வரை அலசி, பல்வேறு கருத்துக் கணிப்புகளின் மூலம் தங்கள் புரிதல்களை எளிதாக முன்வைக்கிறார்கள்.


  |

 • சிறுவர் பாடல்

  William Brighty Rands’s ‘Godfrey Gordon Gustavus Gore’ from Oldpoetry.com:

  “Godfrey Gordon Gustavus Gore —
  No doubt you have heard the name before —
  Was a boy who never would shut a door!

  The wind might whistle, the wind might roar,
  And teeth be aching and throats be sore,
  But still he never would shut the door.

  His father would beg, his mother implore,
  “Godfrey Gordon Gustavus Gore,
  We really do wish you would shut the door!”

  Their hands they wrung, their hair they tore;
  But Godfrey Gordon Gustavus Gore
  Was deaf as the buoy out at the Nore.

  When he walked forth the folks would roar,
  “Godfrey Gordon Gustavus Gore,
  Why don’t you think to shut the door?”

  They rigged up a Shutter with sail and oar,
  And threatened to pack off Gustavus Gore
  On a voyage of penance to Singapore.

  But he begged for mercy and said, “No more!
  Pray do not send me to Singapore
  On a Shutter, and then I will shut the door!”

  “You will?” said his parents; “then keep on shore!
  But mind you do! For the plague is sore
  Of a fellow that never will shut the door,
  Godfrey Gordon Gustavus Gore!”


  |