Monthly Archives: ஏப்ரல் 2004

ஸ்ரீதேவி ஜோடி ஆவாரா?

ரஜினிகாந்தின் புதிய பட தொடக்க விழா, வருகிற மே 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சித்ராபவுர்ணமி அன்று நடைபெறுகிறது. ஜுலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

நன்றி:

TFM Pages

Daily Thanthi Article Pages

Ravikumar to direct Rajni`s next film – Sify.com

இரண்டு சுந்தர்

கடந்த வாரம் இரண்டு பதிவுகளை மிகவும் உணர்ந்து ரசித்தேன்.

சுந்தரவடிவேல்: நாடக விமர்சனத்தை விட அவர் கிளம்பிய விதமும், விழாவில் நடந்த கூத்துக்களும் அனுபவித்த ஒன்று. ஒரு இடத்துக்கு செல்வதற்கு ஒன்பது மேப் எடுத்துக் கொள்வது; கடைசி நேரத்தில் மனைவியிடம் வரைபடத்தை சரி பார்க்க சொல்வது; அவர்கள் சரியாக சொன்னாலும் நான் தவறான வழியை எடுப்பது; எங்கு சென்றாலும் குழந்தைக்கு ஸ்பெஷல் சாப்பாடு எடுத்து செல்வது; கார் நூறைத் தொடுமா என்று வேகமாக ஓட்டி பார்ப்பது; மாமாவை (போலீஸின் செல்லப் பெயர்) பார்த்தவுடன் பம்முவது; என்று எனக்கு மட்டும் உரித்தான குணாதிசயங்களை சுவாரசியமாக விவரித்திருந்தார்.

சுந்தர்ராஜன்:’குழலூதி மனமெல்லாம்’ மற்றுமொரு நினைவுகளை அசை போட வைத்தது. முன்னாள் அமைச்சர்கள் சாதிக் பாச்சா, பொன். முத்துராமலிங்கத்தின் மகன்களுடன் படித்த ஸ்கூல் காலங்கள் நினைவுக்கு வந்தது. மாண்புமிகு மகன்களோடு ஊரை வலம் வருவதின் பலமே தனி. அப்போது முயற்சி செய்த கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்; கொஞ்ச காலம் கழித்து பிலானி மாணவிகளே தம் அடிக்கும் peer pressure-இனால் முயற்சி செய்த மென்தால்-More; ரம்மோடு சேர்ந்த ராத்மேனின் அனுபவமே தனி என்னும் பெங்களூர் சகாக்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தது எல்லாம் நிழலாடியது. ஏனோ, எதுவுமே வெற்றியடையாததால் வளையமும் விடத் தெரியாது; Patch அணிந்து கொள்ளும் பாக்கியமும் கிடையாது. ‘ஆட்டோகிராஃபில்’ போகிற போக்கில் பட்டியல் போட்டு சென்ற சேரனின் பாடலுக்கு சுந்தரை விட அழகாக யாராலும் பொழிப்புரை எழுத முடியாது!

‘பேரழகன்’ – காதலுக்கு

புஷ்பவனம் குப்புசாமி பாடும் ‘பறை’ பீட் பாடல். நடுவில் ‘குனித்த புருவமும்’ ஷோபனா போல் பாசுரமும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.சுத்துகிற பூமியில எத்தனையோ சாமி உண்டு

ஏதாச்சும் ஒரு சாமி எங்களக் காக்க வேணுமடா

கூடிநிற்கும் சனங்க எல்லாம் கோஷம் போடுங்கடா

கஞ்சி கேக்கும் வயித்துக்காக காசு போடுங்கடா

காதலுக்குப் பள்ளிக்கூடம் கட்டப் போறேன் நானடி

காம்பவுண்டு சுவருல உன்ன ஒட்டப் போறேன் பாரடி

கண்ணகியின் சிற்பம் ஒண்ணு செத்துப்போச்சு சென்னையில

அந்தச் சில உசிரோட நிக்குது என் கண்ணுக்குள்ள

நட்சத்திரத்த நட்டுவச்ச பல்லுடா

கத்திமுனையில் ஏறி நிற்கும் தில்லுடா

பத்துவிரலும் அர்ச்சுனரு வில்லுடா

என்னப் போல எவனிருக்கான் சொல்லுடா

ஆலமரத் தோப்புக்குள்ள வாழமரம் நீயடி

முக அழகப் பாத்து மயங்கிப்புட்டேன் நானடி

யுவன ஷங்கர் ராஜாவின் முழுப் பாடலையும் கேட்க ராகா செல்லலாம்.

‘பேரழகன்’ பாடல் குறித்த முந்தைய பதிவு.

அருள் – திரைப்பாடல் அறிமுகம்

‘அநியாயம் பண்ணினா ஆண்டவனுக்குப் பிடிக்காது; அசிங்கமாப் பேசினா அருளுக்குப் பிடிக்காது’ என்று அருள் விக்ரம் உதாருடன் நம்மை வரவேற்கிறார். ட்ரெய்லரில் நிறைய அடிதடி; சண்டை முடிந்தவுடன் வேல் கம்பு; அப்புறம் மேற்சொன்ன வசனம். தொடர்ந்து குத்து சண்டை. டிஷ¤ம் டிஷ¥ம் ம்யுசிக் என்று நிறைய முஷ்டி தூக்கும் ரத்தம்.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

மருத மலை அடிவாரம் ஒக்கடாத்துப் பப்படாமே: நா. முத்துகுமார் – எல்.ஆர்.ஈஸ்வரி, டிப்பு, தேனி குஞ்சரம்மா – ***/4

காதல் எதிர்ப்பு அருள்வாக்கு டப்பாங்குத்து. கொஞ்ச நாட்கள் அனைவரின் வேதமாக உலாவரும். எல்.ஆர்.ஈஸ்வரி இன்னொரு ரவுண்டு வரவேண்டும்.

‘கண்ண பார்த்து

கலர பார்த்து

காதலுன்னு நம்ப வேண்டாம்

லைட்டா நீ சிரிச்சாலும்

லைட் ஹவுஸில் பார்த்தேன்னு

சும்மாவே சுத்துவானே ரீலு

லேசா நீ பார்த்தாலும்

ரோசாப்பூ தூக்குதுன்னு

காதுலதான் வைப்பானே பூவு’

பத்து விரல்: வைரமுத்து – எஸ்.பி.பி., ஸ்வர்ணலதா – *.5/4

வரிகள் புரியும் சாதாரணமான தாலாட்டு. இரண்டு நல்ல பாடகர்கள் கடமையை முடித்திருக்கிறார்கள். ஆபீஸில் கேட்காதது உத்தமம். தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. புதிய அறிவியல் விஷயங்களை சொல்லும் ஆர்வத்தில் பாதரசத்தின் தன்மையை எழுதியிருக்கிறார்.

ஓசையில்லாத பிம்பத்தை போல விழுந்து விட்டாயே மனசுக்குள்ள!

புண்ணாக்குன்னு: நா. முத்துகுமார் – டிப்பு, ஸ்ரீராம் – **/4

காரணமில்லாமலோ காரணத்துடனோ சாமியின் ‘வேப்பமரம் பாடல்’ நினைவுக்கு வரலாம்.

‘கள்ளில் சிறந்த கள்ளு ஒத்த மரத்து கள்ளு

டயரில் பெரிய டயரு லாரியோட டயரு’

ஒட்டியாணம்: வைரமுத்து – ஹரிஹரன், மதுமிதா – **/4

வைரமுத்து இனிப்பான காதல் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார். இப்ப அவருக்கு என்னாச்சுங்க ?

‘தங்கத்தோடு நான் தாரேன்

அங்கத்தோடு நீ வாரியா?

மஞ்சக் கயிறு நீ தந்தா

என்ன உரிச்சு தாரேன்யா’

சூடாமணி: ஸ்னேஹன் – ரஞ்சித், ஷாலினி சிங் – **/4

சிட்டி காலத்திற்கு ஏற்ற பாய்ஸ் ‘டேட்டிங்’ ஆகவும் இல்லாமல், முதல் மரியாதை எசப்பாட்டாகவும் முடியாமல் தவிக்கும் பாடல்.

‘ஆம்பளைக்கு எப்பவுமே கை கொஞ்சம் நீளம்

கூட்டத்தில் பொண்ணு இருந்தா சீண்டிப் பார்க்க தோணும்

பொம்பளைக்கு எப்பவுமே வாய் ரொம்ப அதிகம்

ஆம்பளையக் கண்டா எப்பவுமே ஜாடை பேசத் தோணும்’

‘மின்னலே’ ஹாரிஸ் ஜெயராஜும் தெரியவில்லை; ‘சாமி’யும் ஆடவில்லை. இந்த ஒலி நாடாவைக் கேட்காவிட்டால் பெரிதாக ஒன்றும் தவறவிடப்போவதில்லை. கவிதைக்கெல்லாம் கஷ்டப்படாத பாடல் வரிகள். ஆனால், எனக்கு ‘கில்லி’யின் பாடல்கள் கூட பெரிதாக ரசிக்கவில்லை. சிலர் இப்பொழுது ரம்மியமான பாடல்கள், புத்திசை கானங்கள் என்று விமர்சிக்க, படம் ஹிட்டானதால் ‘கொக்கரக்கோ’வை நூற்றியெட்டு முறை கேட்டதாலும் குழப்பத்தில் உள்ளது போல், இந்தப் பாடல்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றி: தமிழோவியம்

யாஹு க்ரூப்ஸ்

சில தமிழ் சார்ந்த யாஹு குழுமங்களும் அவற்றில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளும்:

ஆதி மரத்தடி – 72

அகண்ட பாரதம் – 276

அகத்தியர் – 516

தினம் ஒரு கவிதை – 1800

எறும்புகள் – 29

ஈ-சுவடி – 272

ஈ-உதவி – 178

பெட்னா – Federation of Tamil Sangams of North America – 1646

க்ளோபல் தமிழ் – 1262

இந்திய மரபுகள் – 518

கலைச்சொல் – புதிய சொல்லாக்கம் – 81

கலைவாணி – 239

மரபிலக்கியம் – 42

மரத்தடி – 379

மெய்கண்டார் – 243

மதுரை திட்டம் – 309

பொன்னியின் செல்வன் – 405

பொ.செ.-வரலாறு – 86

புத்தகப்புழு – 60

ராயர் காபி க்ளப் – 255

ஆர்.கே.கே – கோப்புகள் – 218

சந்தவசந்தம் – 75

தமிழில் அறிவியல் – 36

தமிழ்ல் தொழிற்நுட்பம் – 21

தமிழ்-உலகம் – 541

தமிழ்-ஆராய்ச்சி – 2038

தமிழ்ப் பாடல்கள் – 4822

தமிழ் வலைப்பதிவாளர்கள் (ஆங்கிலம்) – 34

தமிழ் வலைப்பதிவாளர்கள் – 95

தமிழ் லீனக்ஸ் – 427

பாடல் வரிகள் – 1103

சிறுகதை விவாதகளம் – 57

தினம் ஒரு திரைப்பாடல் – 142

தமிழக மீனவர்கள் – 6

தமிழா! உலாவி – 90

‘தென்றல்’ – அமெரிக்காவில் வெளிவரும் மாத இதழ் – 1273

துளிப்பா – 106

உண்மை – 25

உயிரெழுத்து – 140

வாலி – தமிழ்ப்பாடல் வரிகள் – 582

‘ழ’ கணினி – தமிழ் பிசி திட்டம் – 69

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்…

காலச்சுவடு கண்ணன்:

தமிழ் சத்திரம் | நேசமுடன் – தமிழோவியம்வலைப்பூக்கள்

தமிழ்வலை சுற்றி: நா கண்ணன் | உதயா | காசி ஆறுமுகம் | அருணா ஸ்ரீநிவாஸன்எனக்குப் பிடித்த கதைகள் – பாவண்ணன்

வளவ.துரையன் | ஜெயஸ்ரீ

தீராநதி & குமுதம்தீராநதி: அந்த ஆளைப் பார்த்தால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஜேப்படிக்காரன் போல இருக்கிறது’’ என்று ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த பாராளுமன்ற அங்கத்தினர் ரேணுகா சவுத்தரி சொன்னதாக ஒரு தேசிய ஆங்கில மொழி நாளேட்டில், ‘இவர்கள் சொன்னார்கள்’ பகுதியில் வெளி வந்தது. அந்த ஆள் யார் என்று இன்றைய இந்திய அரசியல் பரிச்சயம் உடையவர்கள் கூறி விட முடியும்; சந்திரபாபு நாயுடு. ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர். இதை அரசியல் விமரிசனம் என்பதைவிட வசை பாடல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தால் ரேணுகா சவுத்தரிக்கு ஒரு பிரதி அனுப்பலாம். பஸ் நிறுத்தங்களில் நிற்பவர்கள் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படக்கூடும்.ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம், ஒரு பாராளுமன்ற அங்கத்தினர் பஸ் நிறுத்தங்களைக் கவனித்திருக்கிறார்!அரசு பதில்கள்

முரு. ராமலிங்கம், திருப்பத்தூர்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்பதற்கு சமீபத்திய உதாரணம்?

யானையிறவு யுத்தத்தில் எதிரிகளைச் சிதறடித்தவர் அவர். பிரபாகரனின் சொந்த ஊரை ராணுவம் சூழ்ந்தபோது கிழக்கிலிருந்து மாபெரும் படையுடன் புறப்பட்டு வந்து முற்றுகையை உடைத்தெறிந்தவர். கொரில்லா போர் முறையில் கில்லாடியான வீரர். இன்று…? எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்னதான் நடந்தது?

குடிநீர்த் தட்டுப்பாடு நீங்க நிரந்தர வழி – ப.மு.நடராசன்

கட்டுரையாளர்: முன்னாள் துணை இயக்குநர் (நிலவியல்), நீர் ஆய்வு நிறுவனம்.

இந்திய நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்தபடியாக நீர்வளத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலம் தமிழகம் ஆகும். தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வழிகள்:

மழைநீர் சேகரிப்பு: தமிழகத்தின் 70 ஆண்டுகளின் சராசரி மழையளவு 925 மில்லி மீட்டர் ஆகும். இந்த மழை நீரை வீட்டுக் கூரைகள் அல்லது செயற்கை முறை நிலநீர்ச்செறிவு ஆகிய வழிகளில் சேகரிக்க முடியும். தமிழகத்தில் பெய்யும் எல்லா மழைநீரையும் சேகரித்தால் 4,57,900 கோடி கனஅடி தண்ணீர் பெற்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நபருக்கு நாள் ஒன்றிற்கு 5,730 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். தற்பொழுது இங்கு சராசரியாக வழங்கப்படும் 70 லிட்டரைவிட இது 82 மடங்கு கூடுதலாகும்.

தமிழகத்தில் பெய்யும் மழை நீரைச் சேகரிப்பதால் பெரும் பயன் விளைவது உண்மை. ஆனால் தமிழகத்தின் வீட்டுக்கூரையின் பரப்பளவு இம்மாநிலத்தின் பரப்பளவில் சுமார் 5 விழுக்காடு. எனவே 1,850 கோடி கனஅடி நீரைத்தான் வீட்டுக்கூரைகளின் மூலம் சேகரிக்க முடியும். இத்தண்ணீரைக் கொண்டு தமிழக மக்களின் அன்றாட ஆண்டுத் தேவைக்குத் தேவைப்படும் 5,604 கோடி கனஅடி நீரில் சுமார் 33 விழுக்காடு தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

செயற்கை நிலநீர்ச் செறிவு: சுமார் 30 வகைப்பட்ட செயற்கை நிலநீர்ச் செறிவுமுறைகளால், தமிழகத்தின் நிலநீர்ச் செறிவை மேற்கொள்வதன் மூலம் கூடுதலாக 37,500 கோடி கனஅடி நிலநீரைப் பெருக்க முடியும்.

* தமிழகத்தின் மொத்த ஆண்டு நீர்வளம் 1,67,400 கோடி கனஅடி.

* கி.பி. 2025 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த்தேவை 2,42,300 கோடி கனஅடி.

* நீர் இருப்பிற்கும் பற்றாக்கு றைக்கும் உள்ள இடைவெளி 74,900 கோடி கனஅடி – அதாவது 47.74 விழுக்காடு பற்றாக்குறை.

* கி.பி. 2050 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவைக்கும் இருப்பிற்கும் உள்ள இடைவெளி 1,49,900 கோடி கனஅடி – அதாவது 89.55 விழுக்காடு பற்றாக்குறை.

ஆனால் கூரை மழைநீர் சேகரிப்பு, செயற்கை நிலநீர்ச் செறிவு ஆகிய வழிகளில் 39,350 கோடி கனஅடி நீரைத்தான் சேகரிக்க முடியும். எனவே இக்கூடுதல் நீர்வளத்தைக் கொண்டு கி.பி. 2025 ஆம் ஆண்டு மற்றும் கி.பி. 2050 ஆம் ஆண்டின் தமிழக நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது.

இந்திய நதிகளில் ஒவ்வொரு நல்ல பருவமழைக் காலத்திலும் சுமார் 52,54,800 கோடி கனஅடி நீர் கடலில் வீணாகின்றது. கிழக்கு நோக்கிப் பாயும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய தென்னக நதிகளில் நல்ல மழைப் பருவத்தில் சுமார் 2,51,600 கோடி கனஅடிநீர் கடலில் வீணாகின்றது.

* தமிழகத்தின் கி.பி. 2025 ஆம் ஆண்டின் நீர்த்தேவையில் சுமார் 39 மடங்கும்,

* கி.பி. 2050 ஆம் ஆண்டின் நீர்த் தேவையில் சுமார் 25 மடங்கும் இந்திய நதிகளில் வீணாகின்றது.

இதைப்போல மேலே கூறியுள்ள மூன்று தென்னக நதிகளில் தமிழகத்தின் கி.பி. 2050 ஆம் ஆண்டின் நீர்த்தேவையில் சுமார் இரு மடங்கு தண்ணீர் கடலில் வீணாகின்றது. எனவே நதிகள் இணைப்பின் வாயிலாகத் தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை முற்றிலுமாகப் போக்க முடியும்.

கடல்நீரைத் தூய்மைப்படுத்திப் பயன்படுத்துவது ஒன்றே தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை நிரந்தரமாகத் தீர்க்கக்கூடிய மாற்று ஏற்பாடு ஆகும். பல மத்திய கிழக்கு நாடுகள், அவற்றின் தண்ணீர்த் தேவைகளை கடல்நீரைத் தூய்மைப்படுத்தும் பல்வேறு வழிகளில் நிறைவேற்றி வருகின்றன. இவற்றில், குறைவெப்பப் பல்வழி காய்ச்சி வடிக்கும் முறையில் (Low Temperature Multi Effect Distillation Process – MED) ஒரு லிட்டர் கடல்நீரைத் தூய்மைப்படுத்த ஐந்து பைசா செலவாகின்றது. தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க இவ்வழியே மிகவும் சிறந்ததாகும்.

கடல்நீரைத் தூய்மைப்படுத்தி தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகத் தேவைப்படும் 3,000 கோடி கனஅடி தண்ணீரைப் பெற ரூ. 4,248 கோடி செலவு செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் 8 கோடி கனஅடி நீரைப் பெற ரூ. 12 கோடி கூடுதலாகச் செலவு செய்து கடல்நீரைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

சென்னை நகரின் குடிதண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தெலுங்கு கங்கைத் திட்டத்திற்குச் சுமார் 1000 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. காவிரியில் தண்ணீர் இருந்தால்தான் வீராணம் திட்டம் வெற்றி பெறும். சென்னையில் தற்பொழுதுள்ள வறட்சியைப் போக்க 700 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனாலும் நிரந்தரத் தீர்வு காண முடியாது. ஆனால் மேலே கூறியுள்ள மொத்தச் செலவையும் கடல்நீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்தினால், 1,734 கோடி கனஅடி நீர்வளத்தைப் பெருக்கி, நபருக்கு நாள் ஒன்றிற்கு 245 லிட்டர் வீதம் சென்னை மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியும்.

நன்றி: தினமணி – 27-04-2004

ஈ-தமிழில் இப்போது நடக்கும் கருத்து வாக்கெடுப்பு

எது இல்லாமல் இருக்கவே முடியாது?

1. செல்ஃபோன்

2. புத்தகம்

3. இணையம்

4. இசை

5. டிவி

நம்மால் பல விஷயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. மாலை நேரத்து இஞ்சி டீ, காலையில் ‘கௌசல்யா சுப்ரஜா’, குளித்தவுடன் ஊதுபத்தி ஏற்றுவது, அப்படியே மூணு நிமிஷம் கண் மூடியோ, தலையில் குட்டிக் கொண்டோ ‘இந்த நாள் இனிய நாளாக’ கடவுளிடம் வேண்டுகோள், பிபிசி செய்திகளின் மின் மடல், நான்கு மணிக்குக் கொறிக்க முந்திரி பக்கோடா, இத்தாலிய ஓட்டல்களில் வாயில் கரைவதற்காக செய்யப்படும் பதார்த்தங்கள், பர்ஸில் வைக்க மயிலை ஆஞ்சநேயர், சில்லறையாக சில பணத்தாள் என்று ஆளாளுக்கு மாறுபடும்.

எனக்குத் தோன்றிய ஐந்தை வைத்து ஒரு கருத்துகணிப்பு தொடங்கினேன். இப்பொழுது விழுந்திருப்பது என்னவோ ஏழு வோட்டுதான். அதில் நால்வர் ‘புத்தகம்’ என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களை பனி கொட்டும் பாஸ்டனில் பின்னிரவு இரண்டு மணிக்கு ஓடாத காரில், புத்தகத்தை மட்டும் கொடுத்து காத்திருக்க செய்ய வேண்டும். செல்பேசி இருந்தால் உற்றாரை கூப்பிட்டு நிலையை விளக்கலாம். இணையம் இருந்தால் மின்மடல் அனுப்பியோ, யாஹுவில் யாராவது மாயாவியாக இருக்கிறார்களோ என்று தேடலாம். டிவி இருந்தால் எப்போது பனி நிற்கும் என்பதையாவது அறிந்து கொள்ளலாம்.

கேள்வியின் குறிக்கோள் அது அல்ல என்றே இப்போது தோன்றுகிறது. கொஞ்ச நேரம் நமக்கே நமக்காக கிடைத்தால், வேறு எதுவும் செய்ய முடியாத சமயத்தில் செல்பேசியை எடுத்து யாரையாவது கூப்பிட்டு கதைப்போமா, புத்தகத்தை எடுத்து வாசிப்போமா, இணையத்தில் புகுந்து புரட்டுவோமா, ஜாகிர் உசேன் தபலாவையோ, ‘ஜாகீர் உசேன் தபலா இவள்தானா’வையோ ஒலிப்போமா, டிவி முன் டாகுமெண்டரியையோ திரைப்படத்தையோ ரசிப்ப்போமா என்பதே கேள்வியின் குறிக்கோள் என்று தோன்றுகிறது.

இல்லை வெறுமனே உட்கார்ந்து விட்டம் பார்த்துக் கொண்டிருப்போமா?

விமர்சனத்திற்கு பதில்

Dear Sri Balaji,

I was rather disappointed at the review since it somehow seemed to emphasize the negatives a lot more than the positives.

Our whole effort is geared to(a) keeping the Tamil drama alive here with local talent to the maximum extent possible;

(b) to help deserving non-profit organizations to raise funds; and

(c) to have some fun in the wonderful company of our fellow Stage Friends.So far, we have raised well over $50K for various such organizations including several Tamil Sangams and temples in the USA and institutions serving the poor and needy in India. As you probably are made aware, this year’s entire collections go to Sindanai Sirpigal a non-profit that is building infrastructure in several villages in Tamilnadu.

Our team members spend countless amount of time (e.g. rehearsals each weekend involving signficant travel, building sets, lugging an audio system, etc.) voluntarily and expecting nothing in return besides some solid appreciation and support from the community. All of them have a full time job too.

Thus, while I understand your disappointments with the play and are equally aware of the need “to raise the bar” for ourselves, unfortunately it does not happen overnight, and we ARE trying.

As for the quote, it is from the book “Memoirs of a Mediocre Man” by S.Y. Krishnaswamy who was an ardent lover of the arts and music. The book itself is very readable and humorous and you may find it in India. I will try to find the publisher info for you if I can locate my copy.

The words I quoted were stated in the context of music critics who sometimes concentrate too much on minor lapses of sruti etc in a concert that otherwise is grand and thereby stifle creative attempts and extempore improvisations. He has several pages on them, and in one place he says that a critic who concentrates too much on the negatives is often like a sanitary inspector, who though he has the privilege to enter and roam around grand mansions, is yet condemned to spend most of his time inspecting only the sewers. Nothing would prevent him from enjoying the grandeur of the mansion’s other parts.

Ennoda Mookkuthaan; Neelathai KuraikkanumOf course, it goes without saying that his inspection is absolutely essential too. I only wish you had enough positives to balance out the negatives.

Sometime soon, I will send you a copy of an article I myself wrote titled “A crique of critics and criticisms” which was also published in Sruti, the Indian magazine for music and dance. Perhaps, you would remember it while writing your future reviews. Your balanced response to my note indicates you are a thoughtful person quite capable of that.

Hope we will meet some day.

Sincerely,

Ramaswami