Monthly Archives: திசெம்பர் 2005

தமிழ் சினிமா – 2005

சிறந்த நடிகர்: பிரசன்னா (கஸ்தூரி மான் & கண்ட நாள் முதல்) விஜய் (சிவகாசி)
மோசமான நடிகர்: ஸ்ரீகாந்த் (பம்பரக் கண்ணாலே & ஒரு நாள் ஒரு கனவு)

சிறந்த புதுமுகம்: ஆர்யா (அறிந்தும் அறியாமலும்) நதீஷா (சுக்ரன்)
மோசமான புதுமுகம்: சொர்ணமால்யா (சாரி… எனக்கு கல்யாணமாயிடுச்சு)

சிறந்த நடிகை: கோபிகா (பொன்னியின் செல்வன் & கனா கண்டேன்) பின்னணிக் குரல் (வெளிமாநில இறக்குமதிகள்)
மோசமான நடிகை: நயந்தாரா (சந்திரமுகி & கஜினி)

சிறந்த வில்லன்: ‘பேய்க்காமன்’ ஷண்முகம் (மாயாவி) முரளி (மஜா)
சிறந்த வில்லி: ஜோதிகா (சந்திரமுகி) பூஜா (ஜித்தன்)

சிறந்த ஆண் நகைச்சுவையாளர்: பசுபதி (மஜா) பிரபு (சந்திரமுகி)
சிறந்த பெண் நகைச்சுவையாளர்: அமிதா (கனா கண்டேன்) அஸின் (கஜினி)

சிறந்த வசனம்: பேரரசு (சிவகாசி)
மோசமான வசனம்: கமல் (மும்பை எக்ஸ்பிரஸ்)

சிறந்த திரைக்கதை: கே ஷாஜஹான் (கண்ணாடிப் பூக்கள்)
மோசமான திரைக்கதை: கலைஞர் கருணாநிதி (கண்ணம்மா)

சிறந்த இயக்கம்: ஜீவா (உள்ளம் கேட்குமே)
மோசமான இயக்கம்: ஷரவண சுப்பையா (ஏபிசிடி)

சிறந்த தயாரிப்பாளர்: பிரகாஷ்ராஜ் (கண்ட நாள் முதல்)
ஒரு பட நடிகர்: குட்டி (டான்ஸர்)


| | |

டாப்டென் – 2005

Vikadan Sujatha Katrathum Petrathumநத்திங் சீரியஸ், ஒன்லி ·ப்ரிவலஸ்

 • சிறந்த காதல் காவியம் – சிநேகா – நாக்ரவி விவகாரம்
 • சிறந்த ‘விடாது கருப்பு’- எஸ். ராமகிருஷ்ணன் (கதாவிலாசம் முடியுமுன்னே அடுத்த விகடன் தொடர் ஆரம்பம்)
 • சிறந்த பஜனை – கற்றதும் பெற்றதும்
 • சிறந்த ஸோலோ – ஜி.கே வாசன் (பிறந்தநாள் சுய கொண்டாட்டங்கள்)
 • சிறந்த காமெடி – விஜயகாந்தின் புதிய கட்சி
 • சிறந்த பெருங்காய டப்பா – தமிழ்முரசு
 • சிறந்த குடும்பத்தலைவி – சிம்ரன்
 • சிறந்த சடையப்ப வள்ளல் – நல்லி குப்புசாமி செட்டியார் (இலக்கியவாதி விழாக்களுக்கு நன்கொடைகள்)
 • சிறந்த “ஙே” – குமுதம் (நம்பர் 1 போயாச்)
 • சிறந்த சோகக்காட்சி – தங்கர்பச்சான் மன்னிப்பு விவகாரம்
 • சிறந்த புரட்சி – குஷ்பு & கற்பு
 • சிறந்த வாரிசு அரசியல் – சு.ரா. மறைவுக்குப் பிறகு ஜெ.மோ, மனுஷ்யபுத்திரன், யுவன் etc., எழுதிய கட்டுரைகளில் விவரம் தேடலாம்
 • சிறந்த கவர்ச்சிக் கன்னி – சானியா மிர்ஸா
 • சிறந்த சம்பவம் – நடிக – நடிகையர் வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெயிடு
 • சிறந்த சைலன்ஸ் – திலகவதிக்குக் கிடைத்த சாகித்ய அகடமி
 • சிறந்த விமர்சனம் – தவமாய் தவமிருந்து (ஜூ.விகடனில் எஸ் ராமகிருஷ்ணன்)
 • சிறந்த எஸ்கேப் – துணை மேயர் கராத்தே தியாகராஜன்
 • புத்தகங்கள் – 2005

  மலரும் பட்டியல்களில், 2005(?)-இன் வாங்கி/படிக்க வேண்டிய பு(து)த்தகங்கள்:

 • தமிழகத்தில் அடிமைமுறை – ஆ சிவசுப்பிரமணியன் : ரூ. 80. @ காலச்சுவடு
 • எதிர்ப்பும் எழுத்தும் : துணைத்தளபதி மார்க்கோஸ் – எ பாலச்சந்திரன் (தொகுப்பு/தமிழாக்கம்) : ரூ. 350. @ விடியல்
 • சோளகர் தொட்டி – ச பாலமுருகன் : ரூ. 100. @ வானம்
 • தமிழரின் தத்துவ மரபு – அருணன் (2 பாகங்கள்) : ரூ. 100. @ வசந்தம்
 • விந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் : (தொகுப்பு – மு பரமசிவம்) : ரூ. 160. @ சாகித்திய அகாதெமி
 • தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் 2005: தொகுப்பு – எல் அந்தோணிசாமி : ரூ 50. @ சிடா அறக்கட்டளை
 • தொலைகடல் & யாரும் யாருடனும் இல்லை – உமா மகேஸ்வரி : ரூ. 45. & 130. @ தமிழினி
 • புத்தம் சரணம் – அ மார்க்ஸ் : ரூ. 50. @ கறுப்புப் பிரதிகள்
 • மணல் கடிகை – எம் கோபாலகிருஷ்ணன் : ரூ. 255. @ யுனைடெட் ரைட்டர்ஸ்
 • உயிர்மை இதழ் தொகுப்புகள் (1 & 2) : ரூ. 200. @ உயிர்மை

  தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:

  1. நத்தார் தின விழைவுப் பட்டியல்
  2. புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
  3. புத்தகக் குறி (மீமீ)
  4. சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்
  5. செப். 2005


  | | |

 • திரைப்பாடல்கள் – 2005

  இனிய பத்து
  1. சுட்டும் விழிச் சுடரே – கஜினி (ஹாரிஸ் ஜெயராஜ்)
  2. தாய் சொல்லும் உறவை வைத்தே – கனாக் கண்டேன் (வித்யாசாகர்)
  3. காற்றில் வரும் கீதமே – ஒரு நாள் ஒரு கனவு (இளையராஜா)
  4. ஒரு முறைதான் – தவமாய் தவமிருந்து (சபேஷ் – முரளி)
  5. வெண்ணிலா – பொன்னியின் செல்வன் (வித்யாசாகர்)
  6. நல்ல வாழ்வு – சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி (இளையராஜா)
  7. அத்திந்தோம் – சந்திரமுகி (வித்யாசாகர்)
  8. கண்ணும் கண்ணுந்தான் – திருப்பாச்சி (மணி ஷர்மா)
  9. அந்த நாள் ஞாபகம் – அது ஒரு கனாக் காலம் (இளையராஜா)
  10. வோ கிஸ்னா ஹை – கிஸ்னா (இஸ்மாயில் தர்பார் – ஹிந்தி)

  குத்து பத்து(-1)
  1. தீப்பிடிக்க – அறிந்தும் அறியாமலும் (யுவன் ஷங்கர் ராஜா)
  2. தேவுடா தேவுடா – சந்திரமுகி (வித்யாசாகர்)
  3. ரண்டக்க ரண்டக்க – அன்னியன் (ஹாரிஸ் ஜெயராஜ்)
  4. நீ எந்த ஊரு – திருப்பாச்சி (தினா)
  5. ஐயாரெட்டு நாட்டுக்கட்ட – மஜா (வித்யாசாகர்)
  6. வாடா வாடா தோழா – சிவகாசி (ஸ்ரீகாந்த் தேவா)
  7. என் அன்பே ஆருயிரே – அ… ஆ… (ரெஹ்மான்)
  8. கும்பிடப் போன தெய்வம் – திருப்பாச்சி (தினா)
  9. ஏ புள்ள – லவ் டுடே (வித்யாசாகர்
  – தெலுங்கு
  )

  இளம் பத்து
  1. கண்ணும் கண்ணும் நோக்கியா – அன்னியன் (ஹாரிஸ் ஜெயராஜ்)
  2. அண்ணனோட பாட்டு – சந்திரமுகி (வித்யாசாகர்)
  3. காலங்கார்த்தாலே இம்சை பண்ணாதே – சின்னா (இமான்)
  4. ரங்கோலா – கஜினி (ஹாரிஸ் ஜெயராஜ்)
  5. நீ வரும் போது – மழை (தேவி ஸ்ரீபிரசாத்)
  6. சப்போஸ் உன்னைக் காதலிச்சு – சுக்ரன் (விஜய் ஆண்டனி)
  7. நீ என் விழியில் – தாஸ் (யுவன் ஷங்கர் ராஜா)
  8. நெஞ்சம் என்னும் ஊரினிலே – ஆறு (தேவி ஸ்ரீபிரசாத்)
  9. கோயம்புத்தூர் – ஜித்தன் (ஸ்ரீகாந்த் தேவா)
  10. மாட்டேங்குது – 6’2″ (இமான்)

  ஹிந்தி பத்து
  1. மதுரா நகர்பதி – ரெயின்கோட் (தேப்ஜ்யோதி மிஷ்ரா)
  2. (அனைத்தும்) ப்ளாக் ஃப்ரைடே – இந்தியன் ஓசியன்
  3. பல் பல் ஹை பாரி – ஸ்வதேஸ் (ரெஹ்மான்)
  4. தொம் தன தினேன – இக்பால் (ஸுக்விந்தர், சலீம், சுலைமான்)
  5. ஜனம் ஜனம் – பேமிலி (ராம் சம்பத்)
  6. (அனைத்தும்) ப்ளாக் – மான்ட்டி
  7. வோ சல்லியா ஓ ரஸியா – மங்கள் பாண்டே (ரெஹ்மான்)
  8. அட்ரெனலின் நைட்ரேட் – தஸ் (விஷால் – சேகர்)
  9. தும்ஸே தில் க்யா லகா லியா – சாத்தி (நிகில் வினய்)
  10 போலோ தோ – ஷப்த் (விஷால் – சேகர்)


  | | |

  பிரச்சினைகள் – 2005

  தமிழ் வலைப்பதிவுகளில் பெரிதும் பதியப்பட்ட அல்லது விவாதிக்கப்பட்ட பத்து:

  1. குஷ்பு + சுகாசினி கலைஞர் கற்பு
  2. சினிமா + புகை ரஜினி
  3. ஜெயேந்திரர் = இருள்நீக்கி & சுப்பிரமணியம் * அனுராதா ரமணன் @ காஞ்சி
  4. சானியா வெற்றி ==> இஸ்லாம் & பாவாடை
  5. அமெரிக்கா = புஷ் + ஈராக் ஆதாரம் – மரணம்
  6. சாப்பல் – கங்குலி = தேர்வுக் குழு
  7. சென்னை = மழை + வெள்ளம் – நிவாரணம்
  8. அனானி + போலி – மறுமொழி = நட்சத்திரம் % தமிழ்மணம் = கருத்து – நீக்கம்
  9. ஜெயகாந்தன் பேச்சு ==> ஞானபீடம் & சுந்தர ராமசாமி – விருது
  10. தீபாவளி & பொங்கல் & புத்தாண்டு & கிறிஸ்துமஸ் & நினைவு நாள் = வாழ்த்துகள்

  தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படாத அல்லது அடிபடாத பத்து:

  1. லஞ்சம் & கேள்வி = எம்.பி. :: கோப்ராபோஸ்ட்
  2. நானாவதி ==> சீக்கியர்
  3. ஹீரோ ஹோண்டா @ டெல்லி = வேலை நிறுத்தம் ==> போலீஸ் தடியடி
  4. சென்னை = மழை + வெள்ளம் – நிவாரணம்
  5. போலி நடிகை ==> செக்ஸ் வீடியோ
  6. எம்.பி.3 = தமிழ் திரைப்பாடல் & திருட்டு விசிடி = தமிழ்ப்படம்
  7. 9000 >>> பங்கு ? எவை, எப்படி, எப்பொழுது
  8. சன் / ஜெயா = நெடுந்தொடர் + செய்தி
  9. …….
  10. மாற்று ஊடகம் அச்சு

  | |

  Traffic Rank

  அலெக்ஸா-வின் பார்வையில் பிரபலமான வலையகங்கள்

  வலையகம்
  tamil.sify.com: சிஃபி: 1,077
  webulagam.com: “வெப் உலகம்.காம்: 29,782”
  andhimazhai.com: “அந்திமழை: 38,836”
  tamilcinema.com: “தமிழ் சினிமா.காம்: 64,189 “
  thamizmanam.com: “தமிழ்மணம்: 122,366”
  suratha.com: “சுரதா.காம்: 489,378”
  thatstamil.com: “தட்ஸ்தமிழ்.காம்: 1,294,286 “

  நாளிதழ்
  dinamalar.com: “தினமலர்: 12,909 “
  dinakaran.com: “தினகரன்: 23,152 “
  dinamani.com: “தினமணி: 24,550”
  dailythanthi.com: “தினத்தந்தி: 34,441 “
  thinaboomi.com: “தினபூமி: 226,029 “

  வார/மாத வலையிதழ்
  thisaigal.com: “திசைகள்: 516,643 “
  ambalam.com: “அம்பலம்: 594,472 “
  aaraamthinai.com: ஆறாம்திணை: 674,777
  thinnai.com: “திண்ணை: 1,505,910 “
  appusami.com/: “அப்புசாமி: 1,588,706”
  tamiloviam.com: “தமிழோவியம்: 1,732,629 “
  e-sangamam.com: “ஈ-சங்கமம: 2,731,780 “

  மாலை தினசரி
  maalaimalar.com: “மாலை மலர்: 36,205 “
  tamilmurasu.in: “தமிழ் முரசு: 369,323 “
  maalaisudar.com: “மாலை சுடர்: 2,049,587 “

  அச்சு இதழ்
  kumudam.com: “குமுதம்: 46,214 “
  vikatan.com: “விகடன்: 50,559 “
  kalkiweekly.com: “கல்கி: 417,300 “

  வானொலி
  ta.chinabroadcast.cn: “சீன வானொலி நிலையம்: 649 “
  oli.sg: “சிங்கை ஒலி 96.8: 552,028”
  merina.com: “மெரினா அமெரிக்க தமிழோசை: 783,742 “
  thendral.com: “அமெரிக்க தமிழ் வானொலி: தென்றல்: 902,584 “


  | |

  2006

  வலைப்பதிவுகளில், தமிழ்ச்சூழலில், வலையகங்களில், 2006-இல் என்ன நடக்கலாம்?

  1. விகடன் கவர்-ஸ்டோரியாக வலைப்பதிவாளர் ஆகலாம். குறைந்தபட்சம், பதிவுகளில் வருபவைகளில் சிலதாவது பத்திரிகை column-ஆக மறுபதிப்பாகலாம்.
  2. பதிவுகளை விட பின்னூட்டங்கள் சுவாரசியமாகும் காலம் இது. மறுமொழிகளை சேகரித்து தருவதற்கென்றே தமிழ்மணம், தேன்கூடு, கூகிள் ரீடர் போல் ஒரு திரட்டி உருவாகலாம்.
  3. கிரிக்கெட்டைத் தொடர்ந்து தமிழ் சினிமா, செய்தி, கிண்டல் போன்றவற்றுக்கு கூட்டு வலைப்பதிவு வரலாம்.
  4. கூகிள் விளம்பரங்களை விட, விற்பனையாளர்களே வலைப்பதிவர்களை நேரடியாக அணுகுவார்கள். விமர்சனங்களும், அறிமுகங்களும் product positioning செய்யப்படும்.
  5. விகடனைப் போல் குமுதமும் சந்தா கட்டி படிக்கும் தளமானாலும், வெற்றிகரமாக வாசகர்களைத் தக்கவைத்து கொள்ளும்.
  6. வலைப்பதிவர்களின் குறிப்புகள் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டு அச்சேறலாம்.
  7. வலைப்பதிவுகளில் ஏற்கனவே எழுதிவிட்டதாகவோ அல்லது திருடி விட்டதாகவோ, ஏதாவதொரு பிரபலமான எழுத்தாளருக்கு தர்ம அடி கொடுக்கப்படும்.
  8. அனுமதியின்றி வலையேற்றியதாகவோ, தரக்குறைவாக எழுதியதாகவோ பதிவர் மீது வழக்குத் தொடரப் படலாம்.
  9. தமிழ்மணம், தேன்கூடு, போன்ற தமிழ் வலைதிரட்டிகளில் இணைத்துக் கொள்ளாமல் தனிபட்ட சுற்றில் வலைப்பதிபவர்கள் அதிகம் ஆவார்கள்.
  10. தேர்தலுக்கு பின் ‘ஏன் ஜெயித்தார்கள்? எப்படி தோற்றார்கள்’ அலசல்களும், ‘சிவாஜி’ வெளிவந்து ஒரு மண்டலம் முடிந்தவுடன் போஸ்ட மார்ட்டங்களும், உலகக் கோப்பை விமர்சனங்களும், அமெரிக்காவிற்கான வசவுகளும் நிறையும்.

  உங்கள் ஊகங்களையும் ஹேஷ்யங்களையும் எழுதி வையுங்கள்.


  | |

  சு.ரா. – சென்னை

  நாடக வெளி சார்பாக எழுத்தாளர் சுந்தரராமசாமிக்கு அஞ்சலி
  சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம்

  1. சீதை மார்க் சீயக்காய்த்தூள் (சிறுகதை)
  நாடகத் தயாரிப்பு: கூத்துப்பட்டறை

  2. சவால் (கவிதை)
  இயக்கம்: சந்திரா

  3. ஜே.ஜே. சில குறிப்புகள் (நாவலின் தேர்ந்தெடுத்த சில பகுதிகளின் நாடக வாசிப்பு)
  ஜெயராவ் (தியேட்டர் லேப்)
  கவிஞர் தமிழச்சி
  ஒருங்கிணைப்பு: வெளி ரங்கராஜன்

  4. ஒரு புளிய மரத்தின் கதை நாவலின் திரைப்பட வடிவம் குறித்து: ஓவியர் கிருஷ்ணமூர்த்தி

  இடம்: டேக் செண்டர் (சங்கரா ஹால் எதிரே)
  36, டிடிகே சாலை ஆழ்வார்பேட்டை
  டிசம்பர் 25, 2005
  ஞாயிறு மாலை 6:30 மணி

  நன்றி: Thinnai & காலச்சுவடு


  | |

  Indira Parthasarathy from Thinnai 

  Indira Parthasarathy from Thinnai Posted by Picasa

  Shivaji (Rajini) – The Boss by Sankar & A.R. Rahma…

  Shivaji (Rajini) – The Boss by Sankar & A.R. Rahman
   Posted by Picasa