Daily Archives: திசெம்பர் 9, 2005

படித்தவை

  • சான் ஃப்ரான்சிஸ்கோ காவலர்களின் கேலி கேளிக்கைகள்: உள்வட்டத்தில் பழகும்போது ஆழ்மனதில் இருப்பவை வெளிவந்ததா அல்லது விளையாட்டாக செய்த நக்கல்களா?

  • எகிப்தில் தேர்தலும் வன்முறையும்: சுதந்திரத்திற்கான தேர்தல் என்று ஹோஸ்னி முபாரக் அறிவித்தாலும் அடக்குமுறை வெளியாகிறது. Muslim Brotherhood-க்கு வாக்களிப்பவர்களை கொன்றாலும் தடுத்தாலும் 15 –> 88 ஆக தங்கள் பாராளுமன்ற பலத்தை அதிகரித்திருக்கிறார்கள்.

  • சீனாவில் துணை மேயர் மறைவு: சமீபத்திய எண்ணெய் நச்சுக்கசிவு ஆபத்தில்லாதது என்று வாக்களித்த துணை மேயர் மர்மமாக இறந்து போனார். நூறு டன்னுக்கு மேலாக பென்சீனும் இதர நச்சுக்கசிவுகளும் சோங்குவா நதியில் கலந்தததால் சீனா பெரும் பாதிப்புக்குள்ளானது.


    | |

  • சிரியானா

    முன்பு ட்ராஃபிக் எழுதிய ககன் எழுதி இயக்கியிருக்கிறார். ப்ரென்சில் இருந்து ஃபார்ஸி வரை எல்லா மொழியும் உருளுகிறது. பிபிஎஸ்-ஸின் செய்தி அலசல்கள் போல் வறட்சியாகவும் இல்லாமல், சிஎன்என் போல் மூலச் சலவையும் ஆகாமல் இருப்பதற்கு உகந்த படம்.

    வாரயிறுதியில் பார்க்க உத்தேசித்துள்ளேன்.

    இன்ஷா ஆயில்…
    வெள்ளித்திரை கிட்டுமா என்று தெரியவில்லை.

    1. நியு யார்க் டைம்ஸ் பக்கம்

    2. Syriana :: நல்லவர், கெட்டவர் என்று யாரையுமே சொல்ல முடியாது. படத்தின் முடிவில் மங்களம் கிடையாது. முடிவில்லாமல் படத்தை நிறுத்தி விடுவதன் மூலம், விடை தெரியாத கேள்விகள் உங்கள் மனதில் தங்கிப் போகிறது.

    3. அமேசான் :: ராபர்ட் பேயரின் தீயதை தரிசிக்காதே

    4. ராபர்ட் பேயர் :: பிபிஎஸ் நேர்காணல் – இந்தியாவையும் பாகிஸ்தானையும் நம்பமுடியாது.

    5. ஈரான் குறித்த பிபிஎஸ் நிகழ்ச்சித் தொகுப்பு

    6. ஈரானிய தலைவரின் நேற்றைய பேச்சு – இஸ்ரேலை விட்டுவிட்டு யூதர்கள் ஐரோப்பாவுக்கே திரும்பவேண்டும்.

    போகிற போக்கை பார்த்தால் அடுத்த படையப்பாவை புஷ் தயார் செய்துவிட்டுத்தான் பதவி விலகுவார் என்று தெரிகிறது.


    | |

    Rivolta Briefs 

    Rivolta Briefs Posted by Picasa

    குட்டிமொழி

    Rivolta Briefsபழமையானதால் பழமொழி
    தலை சொன்னால் பன்ச் மொழி
    குட்டித்திரையில் சொன்னால் குட்டிமொழி

    ‘நாலு லார்ஜ் அடிச்சாலும் ஸ்டெடியா நிற்பேன் என்று சொல்வது தன்னம்பிக்கை;

    நாலு லார்ஜ் அடிச்சாலும் நான் மட்டும்தான் ஸ்டெடியா நிற்பேன் என்று சொல்வது தலைக்கனம்.’

    கேட்ட இடம்: இளமை புதுமை (சன் டிவி)


    |