Monthly Archives: ஜூலை 2009

Kamal’s ‘Unnai Pol Oruvan’: Preview

பெயர் பட்டியல்

அசல் தலைப்பு: தலைவன் இருக்கின்றான்

ஹிந்தி ஒரிஜினல்: ஏ வெட்னெஸ்டே

தெலுங்கு டப்பிங் பதிப்பு: ஈநாடு

இசை: ஸ்ருதி கமல்ஹாசன்

பாடலாசிரியர்:உயிர்மைமனுஷ்யபுத்திரன்

திரைக்கதை & வசனம்: இரா முருகன்

தகவல், வதந்தி

உன்னைப் போல் ஒருவனில் அரசு உயர் அதிகாரியாக தலைமைச் செயலாளர் கதாபாத்திரம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் லட்சுமி நடிக்கிறார்.

இந்தியில் ஜிம்மி ஷெர்கில் நடித்த வேடத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சக்ரி டொலேடி, இயக்குகிறார். இவர், அமெரிக்காவில் உள்ள புளோரிடா திரைப்பட கல்லூரியில் படித்தவர். `சலங்கை ஒலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

50 ஆண்டு பொன்விழா

கேள்வி:- நீங்கள் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறதே. இதை விழாவாக கொண்டாடுவீர்களா?

பதில்:- உன்னைப்போல் ஒருவன் படம் மே மாதத்தில் முடிந்து விடும். என்றாலும் ஆகஸ்டு 12-ந் தேதி வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். ஆகஸ்டு 12-ந் தேதிதான் என் முதல் படம் `களத்தூர் கண்ணம்மா’ வெளிவந்தது. பொன்விழா ஆண்டையொட்டி வரும் இந்த படத்தையும் அதே தேதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். இதை பெரிய விழாவாக எடுக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் – நிருபர் சந்திப்பு:

கமல் மேற்கோள்

i) ‘அரசியல் பேசுவதாக இருந்தால் காரணமில்லாமல் (நிருபர்களை) சந்திக்கலாம்; நான் சினிமா எடுக்கும்போதுதான் மீட் செய்வேன்.’

ii) ‘சில பேர் ரொம்ப கெட்டிக்காரங்களா இருப்பாங்க! ஆனா, அவங்களோட வேல செய்யுறது ரொம்ப சிரமம்.’

விளம்பரத் தட்டி, போஸ்டர், பேனர்

Unnai-pol-Oruvan-Kamal-Hassan-Shruthi-Mohanlal-UPO-Wednesday

எ வெட்னெஸ்டே

Naseeruddin Shah’s interview to HT : NAACHGAANA:
Question: Kamal Haasan is remaking A Wednesday in Tamil and will be playing your part.

Answer: Okay, but why just mine? (Laughs) He should be playing all the parts.”

விமர்சனங்கள், பார்வையாளர் எண்ணங்கள், ஹிந்தி திரைப்படம்

Unnai-pol-Oruvan-Kamal-Hassan-A-wednesday-UPO-Hindi-films-banners
1. ந. உதயகுமார் :: கற்றதும் சிந்தித்ததும் !!: எ வெட்னெஸ்டே – ஹிந்தி திரைப்படம்

2. அம்பி :: அம்மாஞ்சி: ஏ வெட்னெஸ்டே

3. இட்லிவடை :: IdlyVadai: “நேற்று – எனக்குள் ஒருவன் , இன்று – உன்னைப்போல் ஒருவன்”

இரா முருகன்

  • நடிகர்கள் சீமான்,
  • டாக்டர் பரத்,
  • கணேஷ்,
  • தெலுங்கு திரைப்பட இயக்குனர் நீல்கண்டன் (பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றியவர்),
  • வசன கர்த்தா ரமாதேவி,
  • படத்தின் உதவி இயக்குனர்கள்

– எல்லோரோடும் யூனிட் உணவை உண்டு, ஒரு சேரப் பொழுது கழித்துப் பழகியது மறக்க முடியாத அனுபவம். — பற்றி எல்லாம் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் – Sight at Shoot.

  • முக்கியமாக நண்பர் சிவாஜி (இயக்குனர் சந்தானபாரதியின் சகோதரர் – அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜை ‘தெய்வமே’ என்று புகழும் கான்ஸ்டபிள் சம்பந்தம் இவர்தான்). நல்ல நகைச்சுவை உணர்வும் இலக்கியப் பரிச்சயமும் உள்ள சிவாஜி பற்றி,
  • நண்பர் ஜாஃபர் பற்றி (பிரதாப் போத்தனின் படங்களில் உதவி இயக்குனர் இவர்),
  • ஒளிப்பதிவு நிபுணர் மனோஜ் சோனி பற்றி,
  • கலை இயக்குனர் தோட்டா தரணி பற்றி,
  • ஒப்பனைக் கலைஞர் செல்வி சாரு குரானா பற்றி,

ஹைதராபாத்தில் ஒரு வாரக் கடைசி விடாமல் போன, இருந்த, திரும்பியது குறித்து எல்லாம் விவரமாக எழுத வேண்டும்.

நண்பன் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியை (ஒலிப்பதிவில் இன்னொரு ரசூல் பூக்குட்டி சதி லீலாவதி கமல் மகனாக வந்த இந்தச் ‘சிறுவன்’) எப்படி மறக்க முடியும்?

க்ளைமாக்ஸ் காட்சிக்காக புதிதாக எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் 14 மாடி கட்டிடத்தில் (போக 280 படி, திரும்ப வர இன்னொரு 280) எல்லோரும் ஏறி இறங்கிய நாட்கள் பற்றியும் எழுதியே ஆகவேண்டும். தினம் 10 தடவை – 5600 படி ஏறி இறங்கி முதல் சில நாள் கால் யானைக்காலாகி அப்புறம் இயல்பு நிலைக்கு வந்தது. காலையில் ஆறரை மணிக்கு படியேற ஆரம்பிக்கும்போது பார்த்தால் இரண்டு படி முன்னால் ஓடிக் கொண்டிருப்பார் கமல். அவர் முகத்தில் உறக்கச் சுவடோ, களைப்போ இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட கண்டதில்லை.

கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்த போது எதிர்பாராத விதமாக (ரிகர்சலில் செய்யாத ஒன்று) அவர் சட்டென்று சில வினாடிகள் வசனமின்றி தன் பாத்திரத்தை வெளிப்படுத்திய விதத்தைக் கண்டு ‘கட்’ சொன்னதும் முழு யூனிட்டுமே கைதட்டியது. ஆரம்பித்து வைத்தவன் இதை எழுதுகிறவன்.

‘That was an one-man symphony, kamal-ji’ – I told. He just smiled.

முழுவதும் வாசிக்க :: Eramurukan.in

ஃப்ளோரிடாவில் ஜெயமோகன்

ஒளிப்படங்களில் உடன் இருப்பவர்: தேன் / cyrilalex.com | Cyril Alex (cvalex) on Twitter

சிறிலிடமிருந்து கிடைத்த ட்விட்நடை குறிப்பு: We did Jet skiing, Kayaking, swimming, snorkeling and para sailing.

கயாக்: சிறிய படகில் துடுப்பு கொண்டு அலைகளை எதிர்கொள்வது. நதியில்தான் பெரும்பாலும் கயாக்கிங் செய்கிறார்கள். கடலிலும் படகோட்டலாம்.

ஜெட் ஸ்கீ: தண்ணீரின் மேல் ஸ்கூட்டர் போன்ற சாதனத்தைக் கொண்டு வேகமான விசைப்படகு போல் வளைந்து நெளிந்து பறப்பது. கோவாவில் கூட கிடைக்கும். நமது பின்னால் சிறுவர்களையோ, தனியாக செல்ல முடியாதவர்களையோ டபுள்ஸ் வைத்துக் கொள்ளலாம்.

ஸ்னார்க்கல்: பவளப் பாறைகள் நிறைந்த இடங்களில் ஸ்னார்கலிங் கொண்டு, இயற்கையை நெருங்குகிறார்கள். ‘ஃபைன்டிங் நீமோ’ படத்தை நேரில் பார்ப்பது போல் கோரல் ரீஃப் மீன்களோடு ஒட்டி உறவாடலாம்.

பாரா செயில்: வானத்தில் ஊஞ்சல். உங்களை மோட்டார் படகில் கட்டிவிட்டு, அந்தப் படகு வேகமாக செல்லும். எண்பதடி உயரத்தில் இருந்து காற்றடிக்கும் திசையில் திரும்பி, பறவையாகலாம்.

A Muttulingam is free! But, why?

அ.முத்துலிங்கம் கதைகள்: http://noolaham.net/project/01/46/46.pdf

அக்கா: http://www.noolaham.net/project/13/1210/1210.pdf

அங்க இப்ப என்ன நேரம்: http://noolaham.net/project/01/47/47.pdf

திகட சக்கரம்: http://noolaham.net/project/01/85/85.pdf

மகாராஜாவின் ரயில்வண்டி: http://noolaham.net/project/02/132/132.pdf

வடக்குவீதி: http://noolaham.net/project/01/87/87.htm

வம்சவிருத்தி: http://noolaham.net/project/01/86/86.pdf

இவற்றை நூலகம்.நெட்டில் வைத்திருப்பது நல்ல விஷயம். ஏன்?

1. இணைய வாசகர்கள் எதையும், எந்தக் காலத்திலும் காசு கொடுத்து வாங்கப் போவதில்லை. அங்கொரு சண்டை, இங்கொரு பின்னூட்டம் இட்டவரின் கதை, சுஜாதா புத்தகம் என்று நின்றுவிடுபவர்கள். அவர்கள் ஹார்ம்லெஸ். டவுன்லோடுவார்கள்; வினியோகிப்பார்கள். முன்னுரையின் முதல் அட்சரம் கூட வாசிக்க மாட்டார்கள். Downloaders are non-readers; book-keepers.

2. அ. முத்துலிங்கம்னு ஒருத்தர் இருக்கிறார். அவருடைய கதைகள் நமக்குப் பிடிக்கிறது. வாசிக்க உகந்ததாக இருக்கிறது என்று தெரியவரும். Evaluation and expectation leads to buying books with money.

3. திருட்டு விசிடி, தமிழ்ட்யூப், டெக் சதீஷ் என்று உலா வருபவர்கள்தான் அதிகம். அதையே இன்னும் பன்மடங்கு பலம் கொண்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்களாலும் விநியோகஸ்தளர்களாலும் நிறுத்த முடியவில்லை. Stealing is inevitable.

4. விஷயதானம் தருவது இன்றைய நாகரிகம். மேற்கத்திய ஊடகங்களில் பல சிந்தனையாளர்கள் இந்தக் கருத்தை முன்வைத்து ஆதாரபூர்வமாக நியு யார்க்கரில் எழுதி வெளியிட்டதை இங்கே i, ii, iii என்று மேற்கோளிடலாம். ஜெயமோகன் 3K+ கட்டுரைகளை வலையகத்தில் தருவதாகட்டும், சாரு நிவேதிதாவின் பெரும்பாலான புதுத்தகங்கள் அவருடைய பதிவில் இட்டுவிட்டு பின் அச்சாவதாகட்டும், இந்தக் கருத்தியலை முன் வைத்துதான். சேமிக்க வேண்டும் என்று எண்ணமிருப்பவர்களும், அவரின் பிற புத்தகங்கள் (இவ்வாறு கிடைக்காத நூல்) வேண்டுமென்பவர்களும் காசு கொடுத்து வாங்கும் தூண்டில். Serves as a gentle reminder to habitual readers and real bookworm.

ரஜினியின் எந்திரன்- தி ரோபோ

ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன்

அனைத்துப் புகைப்படங்களும்: DhooL.com :: View topic – SOTD #551: Vishvesh Obla | சொல்வனம் » ஓப்லா விஸ்வேஷ்

நியு யார்க்கில் ஜெயமோகன்: ஒளிப்படங்கள்

அனைத்துப் படங்களும் ஆக்கம்: கணையாழி வோர்ட்ப்ரெஸ் – நாராயணன்

Nizhalil-Jayamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NY-USA-America-Authors-Tamil

மெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆஃப் ஆர்ட் :: நியு யார்க் கலை, வரலாறு அருங்காட்சியகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்

Jeyamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NYC-US-America-Writers-Tamil

Writer Jeyamohan visit in America

My quick takes on his personality, style, discussion topics :: சொல்வனம்

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

முழுவதும் வாசிக்க :: அமெரிக்காவில் ஜெயமோகன்


ஜெயமோகனின் அமெரிக்க வருகை தொடர்பான முந்தைய பதிவுகள்:

July 25 Jeyamohan meet in Washington DC

DC-Writer-Jeyamohan-Meet-Washington-Writers-Tamil-Sangam-FETNA

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”