பெயர் பட்டியல்
அசல் தலைப்பு: தலைவன் இருக்கின்றான்
ஹிந்தி ஒரிஜினல்: ஏ வெட்னெஸ்டே
தெலுங்கு டப்பிங் பதிப்பு: ஈநாடு
இசை: ஸ்ருதி கமல்ஹாசன்
பாடலாசிரியர்: ‘உயிர்மை‘ மனுஷ்யபுத்திரன்
திரைக்கதை & வசனம்: இரா முருகன்
தகவல், வதந்தி
உன்னைப் போல் ஒருவனில் அரசு உயர் அதிகாரியாக தலைமைச் செயலாளர் கதாபாத்திரம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் லட்சுமி நடிக்கிறார்.
இந்தியில் ஜிம்மி ஷெர்கில் நடித்த வேடத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சக்ரி டொலேடி, இயக்குகிறார். இவர், அமெரிக்காவில் உள்ள புளோரிடா திரைப்பட கல்லூரியில் படித்தவர். `சலங்கை ஒலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
50 ஆண்டு பொன்விழா
கேள்வி:- நீங்கள் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறதே. இதை விழாவாக கொண்டாடுவீர்களா?
பதில்:- உன்னைப்போல் ஒருவன் படம் மே மாதத்தில் முடிந்து விடும். என்றாலும் ஆகஸ்டு 12-ந் தேதி வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். ஆகஸ்டு 12-ந் தேதிதான் என் முதல் படம் `களத்தூர் கண்ணம்மா’ வெளிவந்தது. பொன்விழா ஆண்டையொட்டி வரும் இந்த படத்தையும் அதே தேதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். இதை பெரிய விழாவாக எடுக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
உன்னைப் போல் ஒருவன் – நிருபர் சந்திப்பு:
கமல் மேற்கோள்
i) ‘அரசியல் பேசுவதாக இருந்தால் காரணமில்லாமல் (நிருபர்களை) சந்திக்கலாம்; நான் சினிமா எடுக்கும்போதுதான் மீட் செய்வேன்.’
ii) ‘சில பேர் ரொம்ப கெட்டிக்காரங்களா இருப்பாங்க! ஆனா, அவங்களோட வேல செய்யுறது ரொம்ப சிரமம்.’
விளம்பரத் தட்டி, போஸ்டர், பேனர்
எ வெட்னெஸ்டே
Naseeruddin Shah’s interview to HT : NAACHGAANA:
“Question: Kamal Haasan is remaking A Wednesday in Tamil and will be playing your part.
Answer: Okay, but why just mine? (Laughs) He should be playing all the parts.”
விமர்சனங்கள், பார்வையாளர் எண்ணங்கள், ஹிந்தி திரைப்படம்
1. ந. உதயகுமார் :: கற்றதும் சிந்தித்ததும் !!: எ வெட்னெஸ்டே – ஹிந்தி திரைப்படம்
2. அம்பி :: அம்மாஞ்சி: ஏ வெட்னெஸ்டே
3. இட்லிவடை :: IdlyVadai: “நேற்று – எனக்குள் ஒருவன் , இன்று – உன்னைப்போல் ஒருவன்”
இரா முருகன்
- நடிகர்கள் சீமான்,
- டாக்டர் பரத்,
- கணேஷ்,
- தெலுங்கு திரைப்பட இயக்குனர் நீல்கண்டன் (பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றியவர்),
- வசன கர்த்தா ரமாதேவி,
- படத்தின் உதவி இயக்குனர்கள்
– எல்லோரோடும் யூனிட் உணவை உண்டு, ஒரு சேரப் பொழுது கழித்துப் பழகியது மறக்க முடியாத அனுபவம். — பற்றி எல்லாம் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் – Sight at Shoot.
- முக்கியமாக நண்பர் சிவாஜி (இயக்குனர் சந்தானபாரதியின் சகோதரர் – அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜை ‘தெய்வமே’ என்று புகழும் கான்ஸ்டபிள் சம்பந்தம் இவர்தான்). நல்ல நகைச்சுவை உணர்வும் இலக்கியப் பரிச்சயமும் உள்ள சிவாஜி பற்றி,
- நண்பர் ஜாஃபர் பற்றி (பிரதாப் போத்தனின் படங்களில் உதவி இயக்குனர் இவர்),
- ஒளிப்பதிவு நிபுணர் மனோஜ் சோனி பற்றி,
- கலை இயக்குனர் தோட்டா தரணி பற்றி,
- ஒப்பனைக் கலைஞர் செல்வி சாரு குரானா பற்றி,
ஹைதராபாத்தில் ஒரு வாரக் கடைசி விடாமல் போன, இருந்த, திரும்பியது குறித்து எல்லாம் விவரமாக எழுத வேண்டும்.
நண்பன் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியை (ஒலிப்பதிவில் இன்னொரு ரசூல் பூக்குட்டி சதி லீலாவதி கமல் மகனாக வந்த இந்தச் ‘சிறுவன்’) எப்படி மறக்க முடியும்?
க்ளைமாக்ஸ் காட்சிக்காக புதிதாக எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் 14 மாடி கட்டிடத்தில் (போக 280 படி, திரும்ப வர இன்னொரு 280) எல்லோரும் ஏறி இறங்கிய நாட்கள் பற்றியும் எழுதியே ஆகவேண்டும். தினம் 10 தடவை – 5600 படி ஏறி இறங்கி முதல் சில நாள் கால் யானைக்காலாகி அப்புறம் இயல்பு நிலைக்கு வந்தது. காலையில் ஆறரை மணிக்கு படியேற ஆரம்பிக்கும்போது பார்த்தால் இரண்டு படி முன்னால் ஓடிக் கொண்டிருப்பார் கமல். அவர் முகத்தில் உறக்கச் சுவடோ, களைப்போ இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட கண்டதில்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்த போது எதிர்பாராத விதமாக (ரிகர்சலில் செய்யாத ஒன்று) அவர் சட்டென்று சில வினாடிகள் வசனமின்றி தன் பாத்திரத்தை வெளிப்படுத்திய விதத்தைக் கண்டு ‘கட்’ சொன்னதும் முழு யூனிட்டுமே கைதட்டியது. ஆரம்பித்து வைத்தவன் இதை எழுதுகிறவன்.
‘That was an one-man symphony, kamal-ji’ – I told. He just smiled.
Era Murugan and Manushya Puthiran (MP) are behaving like cheap courtesans in the palace of a petty king. Such coutesans will praise the petty king as lord of the universe and ruler of all beings in the universe. Why is that S.Ramakrishnan, Jeya Mohan,(JM) Era.Murukan and MP behave the same way when they get a chance to work in films. JM wrote as if he was the official PRO for Naan Kadavul. Even Bala would not have defended that stupid film as JM did. Do they have any self-respect left by now.
பிங்குபாக்: Unnai Pol Oruvan: Music Reviews: Twitter, Tamil Blogs « Snap Judgment
பிங்குபாக்: ஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல் ஒருவன்: ஒலி அனுபவம் « Snap Judgment
பிங்குபாக்: தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட் | Snap Judgment