Monthly Archives: மார்ச் 2004

மானிடரே ரிலாக்ஸ் ப்ளீஸ்…

இன்னும் கொஞ்ச நாள் வலைப்பதிவுகளுக்கும் வெகஷன். தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

அதுவரை கொஞ்சம் கொறிக்க ஜாலி அவல் + ஸ்னேஹா!

பழைய பல்லவி

மரத்தடிக்கு மணி சுவாமிநாதன் எனப்படும் ரங்கபாஷ்யம் பங்குபெற ஆரம்பித்திருக்கிறார். முன்னுமொரு காலத்தில் ராகாகியில் அவரும் இன்னும் சிலரும் பங்குபெற்ற சில சுட்டிகள்:

ஆதியிலே அவுரங்கசீப் தமிழ் எழுத்தாளர்களில் இன்று யார் ஞானபீடம் ஏறப் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்? என்று ஒரு கருத்துக் கணிப்பை ஆரம்பித்தார்.

அதற்கு சொக்கரின் பதில்.

வேறு ஒன்றுக்கு சி·பிராயரின் பதில்.

ஒட்டக்கூத்த ராயன்

உலகமாதா வாத்து: (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)

மறக்கமுடியுமா?: O.K. ராயன்

இலேசான ரிப்போட்டர்: உள்ளிவாயன் பெருங்காயடப்பா

சொரூபதாஸ¤க்கு புகாரியின் பதில்

Masks and False Faces

-/இரமணிதரன்

ஜெ,பி.: ஐகாரஸ்

இரமணியின் பதில்

கவிதா மாரிமுத்து

ஓட்டப்பந்தய ராயன்: பாபா காந்தி

வேறு பல சுவையான பரிமாறல்களையும், ராகாகியில் ரங்கபாஷ்யம் என்று தேடினால் கிடைக்கும்.

ரங்கபாஷ்யமுக்கும் ‘தென்றல்’ மணிவண்ணனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை!

எழுதியவரை சொல்லுங்கள்

பா. ராகவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எழுதிய கவிதை இது. அப்பொழுது அழ. வள்ளியப்பா அப்புசாமி குப்புசாமின்னு ஒரு தொடர் கோகுலத்துல எழுதினார். அதேமாதிரி பாரா எழுதினதை அருகில் அமர்ந்து செப்பனிட்டு எழுதியதாம். கோகுலத்திலும் வெளிவந்தது.

அழ. வள்ளியப்பாதான் எனக்கு அறிமுகமான முதல் எழுத்தாளர். குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறிப் பேசுவார். அண்ணா நகரில் அவரது வீட்டுக்கு சென்ற நாட்களும் பொழுதுகளும், அவர் எங்களைப் பார்க்க வந்திருந்த நேரங்களும் மிகவும் இனிமையானவை. நான் எழுதிய கிறுக்கல்களை முதன்முதலில் பிரசுரித்தவர். கோகுலம் இதழில் இருந்து வெளியாகும் சிறு துணுக்குகளுக்கும் சன்மானம் வருவது துள்ளிகுதிக்க வைக்கும்.

அவரை குறித்து மேலும் அறிய சந்தவசந்தம் குழுவில் நிறைய பதிவுகள் இருக்கிறது. மன்ற மையத்திலும் பேசியிருக்கிறார்கள்.

ஈஷிக்கொள்ளுதல் – மாது





“அம்மா, ஸ்கூல்ல இன்னிக்கு பரத்துன்னு ஒரு ·ப்ரெண்ட் கிடைச்சாம்மா.ரொம்ப நல்ல பையம்மா”

“அம்மா, இன்னிக்கு பரத் வீட்ல போய் ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கப் போறோம்மா”

“அம்மா, நாளைக்கு எனக்கும் சேர்த்து பரத்தே லன்ச் கொண்டு வராம்மா”

“அம்மா, இன்னிக்கு எனக்காக ராகேஷ போட்டு மொத்தி எடுத்துட்டாம்மா பரத்”

– – – – – – – – – – – – – – – — – –

– — – – – – – – – – – – – – — — –

– – – – – – – – – – – – – – — – – –

– – – – – — – – – – – – — — – –

“என்னடா கொஞ்ச நாளா பரத் பேச்சய கானோம்”

“ஒன்னுமில்லம்மா”

“ஏதோ மறைக்கிற சொல்லு…ஏன் கண்ணுல தண்ணி”

“பரத் ரொம்ப மோசம்மா, அவன் என்ன செஞ்சான் தெரியுமா…………………”

“தெரியும் நீ அப்படி போய் ஈஷிண்ட போதே தெரியும். அளவா வெச்சுக்கோன்னு அப்பவே சொன்னேன் கேட்டயா”




நாம் வளர்ந்தும் சிறுவர்களாகவே இருக்கிறோம். யாராவது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, பழக்கம் நெறுக்கமாகும் போது போய் ஈஷிக்கொள்கிறோம். மற்றவர்களின் குறைகளை மறந்து விடுகிறோம். நிறைகளின் மொத்த உருவமாக மற்றவரைக் காண்கிறோம். மற்றவரும் மனிதர் என்பதை மறந்து விடுகிறோம். நமது கற்பனைகளைக் கொண்டு மற்றவரின் நிழலை உருவாக்கிக் கொள்கிறோம். நிழலுடன் உறவாடுகிறோம். வெளிச்சம் பட்டு நிழல் மறையும் போது வேதனையுறுகிறோம். இந்த விளையாட்டு நடந்து கொண்டேதான் இருக்கிறது. பாடங்கள் கற்றுக் கொண்டோமா என்று தெரியவில்லை.

என்.டி.டி.வி. கருத்து கணிப்புகள்

கருத்து கணிப்புகள்:

அனைத்திந்தியா
என்.டி.ஏ. 287-307
பிஜேபி 190-200
காங். கூட்டணி 143-163
காங். 95-105
பிறர் 90-100

தொகுதிகள் வெற்றிபெறக் கூடியவை 2004-இன் மாற்றம்
பிஜேபி காங். மூன்றாவது அணி மற்றவர்கள் பிஜேபி காங். மூன்றாவது அணி மற்றவர்கள்
ஆந்திரா 42 34 7 0 1 -2 2 0 0
அஸ்ஸாம் 14 4 7 0 3 2 -3 0 1
பீஹார் 40 26 13 0 1 -4 4 0 0
சட்டிஸ்கர் 11 11 0 0 0 3 -3 0 0
குஜராத் 26 24 2 0 0 4 -4 0 0
ஹரியானா 10 2 6 2 0 -8 6 2 0
கர்நாடகா 28 21 5 2 0 11 -13 2 0
கேரளா 20 0 14 6 0 0 3 -3 0
தமிழ் நாடு 39 5 34 0 0 -21 21 0 0
முக்கிய மாநிலங்கள் 509 273 142 77 17 -11 11 6 -6
மற்ற மாநிலங்கள் 34 15 9 0 10 0 0 0 0
அனைத்திந்தியா 543 288 151 77 27 -11 11 6 -6

மாநிலவாரியான முழுப் பட்டியல்

ஆவியுலக அனுபவங்கள்

எனக்கு ஆவிகளுடனான பழக்கம் மிகவும் குறைச்சல். ஆனால், நிறைவானது. முதன் முதலாக எனக்குப் பேய்களை அறிமுகம் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தினமும் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் விவிதபாரதி கேட்கும் நல்ல வழக்கம் இருந்தது. ‘வேப்பமர உச்சியில் நின்னு… பேயண்ணு ஆடுதுன்னு சொல்லிவைப்பாங்க! உன் வீரத்தைக் கொழும்பிலேயே கிள்ளி வைப்பாங்க!’ என்று அவ்வப்போது பாடுவார். அவரின் மற்ற பாட்டுக்களான ‘தூங்காதே… தம்பி தூங்காதே…’ மாதிரி இந்தப் பாடலிலும் மெட்டை ரசித்துவிட்டு எதிர்ப்பதத்தை எடுத்துக் கொண்டோம்.

எப்பொழுது ஒன்று இல்லை என்று நிரூபிக்கவில்லையோ, அப்பொழுதே அது இருக்கிறது என்று கொள்ளப்படும் என நண்பர்கள் வேதம் ஓதப் பாடலை ஓரங்கட்டிவிட்டு பிரம்மராக்கதரையும், ஜெகன்மோகினியையும் தேட ஆரம்பித்தோம். அழகான ராட்சசிகளாகப் பாரகனில் ஜெயமாலினி ஆடினார். விட்டலாசார்யா மட்டும் ஆங்கிலப் படம் எடுத்திருந்தால் பில்லியனார் ஆகி இருப்பார். கற்பனை வளத்தில் ‘லார்ட் ஆ·ப் திரிங்ஸை’யும், கதை வளத்தில் ‘ஹாரி பாட்டரை’யும், கவர்ச்சி வளத்தில் ‘பேசிக் இன்ஸ்டிங்க்ட்’டையும் மிஞ்சும் படங்கள் மூலம் நட்புகரமான பேய்களின் அறிமுகம்.

அப்படியே ‘பட்டணத்தில் பூதம்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்று பெரிய எழுத்தாளரை சந்திக்கும் சராசரி வாசகன் போன்ற ஆவலுடன் என்றாவது ஒரு நாள் அவர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன். பேந்தப் பேந்த விழிக்கும் மோகனின் ‘பிள்ளை நிலா’ அப்பொழுது வெளிவந்தது. கல்யாணமானால் வீட்டில் ‘பேய்’ இருக்கும் என்று சிலர் சொல்லித் தெரியுமானதால், அந்தப் படம் ரொம்ப பயமுறுத்தவில்லை.

நான் வசித்த மந்தவெளி-மயிலாப்பூர் மார்க்கத்தில் புகழ்பெற்ற வதந்தி உலாவி வந்தது. ‘அட்மிரால்டி ஹோட்டல்’ என்னும் விடுதியின் வாயிலில் உள்ள மரத்தில் குட்டிப் பிசாசு இருப்பதாகவும், மரத்தை உற்றுப் பார்த்தால் விநோதமாக சிரிக்கும் என்று சக நான்காம் வகுப்பு மாணவர்கள் கிலியுடன் விவரித்தார்கள். டி. ராஜேந்தரின் கவர்ச்சிக் கன்னிகள் நடித்த திரைப்படங்கள் பார்க்கும் கபாலி தியேட்டர், பி.டி.சாமி முதல் ஜாவர் சீதாராமன் வரை உள்ள லெண்டிங் லைப்ரரி என பல அன்றாடத் தேவைகளுக்கு ட்ரஸ்ட் தெருக்களை நம்பியும், குறுக்குத் தெருவில் போதி மர வானத்தை அளந்து கொண்டும் கவலையற்றுத் திரிந்த எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது.

மிகவும் ஜாக்கிரதையாக அட்மிரால்டி ஹோட்டலை தவிர்த்து வேறு வழிகளில் சென்று வந்தேன். விதி வலிது என்பதால் நண்பர்கள் சவால் விடுத்தார்கள். மூவரும் அட்மிரால்டி ஹோட்டலுக்கு செல்வது; எதிர்ப்புறம் நின்று கொண்டு மரத்தை உற்று நோக்குவது; எவர் ஜெயிக்கிறாரோ, அவர் கோடி வீட்டு உமாவுக்கு போட்டியின்றி ஹிந்தி கற்றுக் கொடுக்கலாம் என்று முடிவாயிற்று. அட்மிரால்டிக்கு அரை கிலோமீட்டர் இருக்கும்போதே ஒருவன் ஓடிப்போனான். நானும் ராஜுவும் மட்டும் சைட்டடிக்க சென்றோம். என் கண்களுகு வாட்ச்மேன் எங்களை உற்று பார்ப்பதும் ‘என்ன வேணும்டா’ என்று குச்சியைத் தூக்கிக் கொண்டு வருவதும் தெரிய, ராஜுவைத் தேடினால் தூரத்தில் புள்ளியாக ஓடிக் கொண்டிருந்தான்.

ராஜுவுக்கும் எனக்கும் ஒரு வாரம் காய்ச்சல். அவன் எனக்கு பேய் பார்த்த வைபவத்தையும் அது கண்ணை மலங்க மலங்க விழித்ததையும், பின் அவனைப் பார்த்து அழ ஆரம்பித்ததையும் விவரித்தே எனக்குக் காய்ச்சல்; கொஞ்சம் வாட்ச்மேனின் கைங்கர்யமும் இருக்கலாம். அந்தப் பேய் சின்னக் குழந்தையாம்; ராஜுவிடம் சாக்லேட்டும் வீடுவீடாக வந்து விற்கப்படும் பிஸ்கட்டுகளும் கேட்டதாம். இடுப்புக்குக் கீழ் ஒன்றும் தெரியவில்லையாம். He is either a great story-teller or a master decptionist.

வீட்டில் ஒரு நாள் இறந்த பாட்டியைக் கூப்பிட்டுப் பேசலாம் என்றார்கள். முதலிரவுக்குத் தயாராகும் போன-தலைமுறை தமிழ் கணவன் போல் ஒரு வித ஆர்வம் நிறைந்த தேடல் தோன்றியது. ஆசையாக தரையில் சாக்பீஸால் சதுரம் போட்டோம். சதுரத்துக்குள் A டு Z எழுதி எண்களும் எழுதி, கற்பூரம் ஏற்றி, தம்ளர் கவிழ்த்து, ·பேன் அணைத்து, மூவர் சத்தமாகக் கூப்பிட, ஒரு விரல் மட்டுமே தொட்ட லோட்டா அதுவாக விடுவிடுவென நகர்ந்தது. இதுதான் ஹிப்னோடிசமா, கடவுள் சக்தியா, சூட்சும உணர்வா, மனோபலமா என்று குழப்பமும் மிகுந்தது. பத்தாவது வகுப்பின் அறிவு கொண்ட அறிவியலின் கூறுகளைக் கொண்டு விதிகளையும் விடைகளையும் நிர்ணயிக்க முயன்றேன்.

என் மனதின் உட்கூறுகளில் ஒளிந்திருப்பதை எழுதிக் காட்டியது. உட்கார்ந்திருந்த அனைவரின் மனத்திரைகளையும், அவர்கள் உள்ளத்தில் உதித்தக் கேள்விகளுக்கு விடையும் தந்தது. ஆனால், சொர்க்கம், நரகம், மறுபிறவி, பாவம், புண்ணியம், அவர்கள் உலகத்தின் விவரிப்புகள், நெறிமுறைகள், வாழ்க்கை வகைகள் ஒன்றை குறித்தும் பதிலளிக்கவில்லை. மகாத்மாவும் ம.கோ.ரா.வும் அடுத்த லோகத்துக்கான கட்டத்தில் இருக்கிறார்களாம். தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும். தினமும் பிரதோஷ காலத்தில் அனைவருக்கும் அட்டெண்டன்ஸ் என்று வாய் தவறியோ தவறாமலோ தொடர்ந்த பேச்சுவார்த்தைகளில் மூலம் கொஞ்சம் கறக்க முடிந்தது. கிட்டத்தட்ட இதே கருத்துகளைத் தாங்கி வந்த ‘Defending Your Life’ படத்தைப் பார்த்த பிறகு இயக்குநர் ஆல் ப்ரூக்ஸ் ஆவிகளைக் கலந்தாலோசித்து இருப்பார் என்றேத் தோன்றியது.

அன்று கற்றுக் கொண்ட வித்தை கல்லூரியிலும் இன்று அன்றாட நிஜ வாழ்விலும் விதவிதமான பலன்களைக் கொடுத்திருக்கிறது. கல்லூரியில் நடிகர் முத்துராமனையும், கவிஞர் கண்ணதாசனையும், கூப்பிட்டு வித்தைகாரனாய பணிபுரிந்தேன். தோழிகளின் மறைந்த உறவினர்களை வரவழைத்து உரையாட வாய்ப்பு கொடுத்து புது ஸ்னேஹிதம் பிடித்துக் கொண்டேன். திருத்தப்பட்ட தாள்களின் மதிப்பெண்களை உடனுக்குடன் அறிவிப்பு கொடுத்து ஹாஸ்டல்வாசிகளின் நிம்மதியை இரண்டொரு நாள் முன்பே குறைத்து வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டேன். (சோகத்தைத் தீர்க்க ‘ஜான்’ டேனியலும், ஜானி வாக்கரும் அப்ஸொல்யூட்டாகக் கை கொடுக்க வந்தது தனி கதை).

சமீபத்தில் விபத்தில் காலமான கணவரை, மனைவியுடன் பேச வைத்தது, கல்லூரி கால லூட்டிகளுக்கு நல்ல பிராயசித்தம். மகனும் மகளும் மனைவியும் தன் தந்தையுடன் கிட்டத்தட்ட இருப்பதை போலவே உணர்ந்தார்கள். அவருக்கு மட்டுமே தெரிந்த எ·ப்.டி., பங்குச் சந்தை போன்ற நிதி விவகாரங்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கணினியிலும், நோட்டுப் புத்தகங்களுமாக சிதறியிருந்த தகவல்களைத் எளிதில் திரட்ட முடிந்தது.

ஒவ்வொரு முறையும் எண்ணையும் எழுத்தையும் சாக்பீஸால் எழுதுவது, அவை பாதி பேச்சில் பாதி காணாமல் போவது என்று சில தொல்லைகள் உண்டு. இன்னும் கொஞ்சம் அவர்களுடன் நெருங்கி விட்டால் இரவு தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு கதைப்பார்கள் என்று சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். இணையத்தில் நான் மேய்வது போல் இதற்கு அடிமையாகும் அபாயமும் உண்டு. போர்டுக்கு அடுத்தபடியான தனக்குள்ளே அழைத்துக் கொள்ளல், பேப்பரில் எழுத வைத்தல் போன்றவற்றின் தாக்கம் இன்னும் அதிகம் என்றும் பயமுறுத்துகிறார்கள்.

நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே போர்டு வாங்கிக் கொள்ளலாம் என்று கூகிளில் தேடியபோது, ‘ஆவிகளுடன் பேசுவதற்கான போர்டு’ என்று டாய்ஸ் ஆர் அஸ் விற்றது கண்ணில் பட்டது. ஆறு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு உகந்ததல்ல என்னும் எச்சரிக்கையுடன் இது குழந்தைகளுக்காக விற்கப்படுகிறது. ‘Please grow up’ என்று மனைவி சொல்ல தற்போது ஆவியுலகத் தொடர்புகள் அறுந்து போயின.

– பாஸ்டன் பாலாஜி

நன்றி: தமிழோவியம்

(சில) சக்ஸஸ் சக்கரவர்த்திகள் – ரஞ்சன்

1. ஜே. ஆர். டி. டாடா

2. ·ப்ரெட் டிலூகா – சப்வே உணவகம்

3. டை வார்னர் – பீனி பேபி பொம்மைகள்

4. கெமன்ஸ் வில்லியம்ஸ் – ஹாலிடே இன் விடுதி

5. மைக்கேல் லீ சின் – அங்காடி

6. கிரெக் மெக்கா – தொலைதொடர்புத்துறை

7. சுங் ஜூ யுங் – ஹ்யுண்டாய் கார்

8. சம்மர் ரெட்ஸ்டோன் – பாரமவுண்ட்: திரை/ஊடகங்கள்

9. ஜார்ஜ் சோரஸ் – பங்குச் சந்தை முதலீட்டாளர்

10. பரல் – விளம்பரத்துறை

11. டெபி ·பீல்ட்ஸ் – லிட்டில் டெபி என்னும் கேக்-வகைகள்

நன்றி: குமுதம்.காம்

(குசும்பு) பிகு: இந்தப் பதிவிற்கும் கீழேயுள்ள பதிவிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை 😛

கண்ட கண்ட பசங்கள – தேவன்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், எஸ்.என் சுரேந்தர்

Devanகண்ட கண்ட பசங்கள எல்லாம்

மேல ஏத்தும் கடவுளே

கெட்ட கெட்ட பசங்கள எல்லாம்

மேல ஏத்தும் கடவுளே

எங்களையும் கொஞ்சம் மேல ஏத்துங்க

உங்க ஓரக் கண்ணால் பார்த்து வச்சு லேசாத் தூக்குங்க

மேல இருக்கிறவனை இறக்க வேணாங்க

அட… எங்களப் போட்டு தரைக்குக் கீழே அமுக்க வேணாங்க

நாயரு மேயராகும் எழுத்து மாறினா

லோயரும் அப்பருதானே எழுத்த மாத்தினா

சின்னச்சின்னத் தலையில் நீ எழுதும் எழுத்தில

என்னன்னமோ நடக்குதிங்கே ஒண்ணும் புரியலே

பென்ஸ் கேக்கலே

டொயோடா காரு கேக்கலே

ஜிப்ஸி கேக்கலே

சாண்ட்ரோ கார் கேக்கலே

டிவிஎஸ்ஸு சுஜுகி தந்தா இடஞ்சலாகுமா

இந்த உலகத்தில உனக்கு எதுவும் குறைஞ்சிப் போகுமா?

இடஞ்சலாகுமா

உனக்கு என்னா குறஞ்சிப் போகுமா?

பத்து மாடி வீட்டுக்குள்ள ஏஸி ரூமு கேக்கவில்ல

பொறந்த நாளுக்கெல்லாம் கேக்குகளும் கேக்கவில்ல

என்னாப்பா கேட்டோம்

நாங்க ஹவுஸிங் போர்டா கேட்டோம்

ஒத்தக் குடிச அவுட்டரிலும் கொடுக்கலியே எங்களுக்கு

—-

யாரு யாரையோ சினிமா ஹீரோ ஆக்கறே

வெத்து வேட்டையும் எம்.எல்.ஏ மந்திரி ஆக்கறே

டிவியில சீரியலு நடிக்க மாட்டோமா

ஒரு கவுன்சிலரா ஆகிப்புட்டா அடிக்கமாட்டோமா

நடிக்க மாட்டோமா

நாங்க எதுவும் அடிக்கமாட்டோமா

உசந்து போனவனும் ஆடுறான் பேயாட்டத்தில்

வசமா மாட்டிக்கிட்டோம் வாழ்க்கையென்னும் போராட்டத்தில்

நீ எழுதி வச்ச கணக்கா

இது உனக்கு நல்லா இருக்கா

நீ எங்கள மட்டும் கழிச்சுவிட்டு

கூட்டிவிட்டா கணக்கா?

இந்தப் பாடல் ஏனோ பிடித்திருக்கிறது. சொல்லப்பட்டிருக்கும் கருத்து, வார்த்தைகளின் எளிமை, எண்பதுகளின் இளையராஜா ட்ரேட்மார்க் இசை, சென்னை மொழி, உன்னிகிருஷ்ணன் குரல், அதிகமாக சன் டிவியில் ஒளிபரப்பாமை, என எல்லாமே சரி விகிதாசாரத்தில் அமைந்த பாடல். ராகா.காமில் கூட கிடைக்காமல் இருப்பது வருத்தம்தான்.

பாடலைக் கேட்க

நெஞ்சில் நிற்கும் உணர்வை பாதிக்கும் வலைப்பதிவு தொடர்?

என்னுடைய அடுத்த கருத்துக் கணிப்பு, வலைப்பதிவில் தங்களின் சிந்தனையைத் தூண்டி உள்ளத்தை மகிழ்வித்தத் தொடர் எது என்பதை தெரிந்து கொள்ளச் செய்யும்.

கீழே சிலர் எழுதிய (என்னுடைய நினைவில் நிற்கும்) தொடர்களை குறிப்பிட்டுள்ளேன். ஒருவரிடமிருந்து ஒரு தொடர் மட்டுமே கணிப்பில் சேர்த்துக் கொள்ள ஆசை. தொடர் என்பதற்கு அடையாளமாக மூன்று பகுதிகள் அல்லது நாலு கிலோபைட்டாவது வந்திருத்தல் அவசியம்.

எனக்கு உதவியாக பின்னூட்டங்களின் மூலமோ bsubra at india . com என்னும் மின்னஞ்சல் மூலமாகவோ நான் தவறவிட்டவர்களையும், ஒன்றுக்கு மேல் சுவையான தொடரை எழுதியவர்களிடமிருந்து எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சொன்னால் சௌகரியமாக இருக்கும். தங்களின் உதவிக்கு எனது நன்றிகள்.

(ஒன்றுக்கு மேல் வலைப்பதிந்தவர்களில், என்னுடைய தேர்ந்தெடுப்பு (**) என்பதன் மூலம் சுட்டப்பட்டுள்ளன.)

1. அருண்

– தராசு

– நச் பூமராங்

– நெத்தியடி (**)

– பாகிஸ்தானில் இந்தியா: ஒரு நாள் போட்டி பதிவுகள்

2. பத்ரி

– சட்டமன்ற உரிமை மீறல்

– ஜெயலலிதா வழக்குகள்

– கிரிக்கெட் லஞ்சம்

– தொலைதொடர்பு நிறுவனங்கள்

– ஸ்டார் நியூஸ்

– தமிழில் வலைப்பதிவு

– தமிழ் இணையம் 2003

– நீதித்துறையில் சீர்திருத்தங்கள்

– குருமூர்த்தியின் கட்டுரைகள் பற்றிய கருத்துகள் (**)

– ப. சிதம்பரம் தொடரின் விமர்சனங்கள்

– விளம்பரங்கள் பற்றிய பதிவுகள்

– சங்கம்: மாலன் சந்திப்புகள்

– தமிழ் இலக்கியம் 2004 மாநாடு

– பத்திரிகை சுதந்திரம்

– பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்

– திசைகள் இயக்கம்: இலக்கியச் சந்திப்பு

– தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள்

– திறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம்

– ழ கணினி அறிமுகம்

3. பாலாஜி – பாரி

– நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்

4. கண்ணன்

– வைகைக்கரை காற்றே!

5. காசி

– அமேரிக்க சாலைப் போக்குவரத்து அனுபவங்கள்

– வலைப்பதிவுகள் பற்றி ஒரு தொடர்

– என் பைக்கணினி அனுபவங்கள்

– சில விளக்குகள், சில வழிகாட்டிகள் (**)

– திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள்

– கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு

6. மதி

– வேம்படி மகளிர் கல்லூரி விடுதி (**)

– Inuit (இனுயிட்)

– நேரமோ நேரம்

7. மீனாக்ஸ்

– உனக்கு அல்வா; எனக்கு அவள்

8. முத்து

– தேடுங்கள் கிடைக்கும்.. கூகிள். …

9. பரி

– விளையாட்டாக ஒரு பாடம்

10. பவித்ரா

– அலைபாயுதே………..ஏஏஏஏஏஏ!

11. பா. ராகவன்

– திசைகள் இயக்கம்: இலக்கியச் சந்திப்பு

– பாகிஸ்தான்: முஷர·ப் (**)

– தமிழ் இலக்கியம் 2004 மாநாடு

– பாரதிய பாஷா பரிஷத்: பதிவுகள்

12. வே.சபாநாயகம்

– நினைவுத் தடங்கள்

13. செல்வராஜ்

– “இனிய தோழி சுனந்தாவிற்கு…!”

14. சுபா

– Recollecting my teaching experiences

– Penang

– Travelog – Seoul, S.Korea

– மலேசியா

– JK’s Letters to the Schools (**)

– ஜெர்மனி

15. சுந்தரவடிவேல்

– எங்கம்மாவின் பழமொழிகள்

16. தங்கமணி

– பொய்ச்சாத்திரப் பேய்கள்

17. வெங்கட்

– ஜப்பானிய பழக்கவழக்கங்கள்

– காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (**)

– மின்புத்தகங்கள்

– அறிவியலில் மொழியின் தேவை

– மைக்ரோஸாப்ட் பதிவுகள்

– மூன்றாவது வலை

– முழு நீலத் தமிழ்ப் படங்கள்

(என்னுடைய செவ்வாய் இரவு – இந்தப் புதிய கருத்துக் கணிப்பு வலையேறும். அதற்கு முன்

மறுமொழிகள் மூலம் விட்டுப்போனவர்களை சொல்பவர்களுக்கு என்னுடைய நன்றி 🙂

நட்சத்திர லைப்ரரி – பாலகுமாரன்

தொகுப்பு : சந்துரு

விஸ்வநாதனின் மனிதநேயம் என்ற கவிதைப்புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. புதுக்கவிதை என்று சொல்லப்பட்டாலும் மரபுக்கவிதை ஒட்டிய அவருடைய எழுத்தில் நல்ல சுவையிருக்கும்.

Baalakumaran‘‘ஏசு நாதரும் விஸ்வ நாதரும்

நேசம் வைத்த நம்

நெஞ்சின் உணர்வுதான்

கன்னி மேரியோ கன்யா

குமரியோ

தன்னை அறிந்தவர் கண் ணில் ஒன்றுதான்

பொய்யை மட்டுமே

போற்றும் வாழ்க்கையில்

தெய்வ உண்மைகள்

தெரிவதில்லைதான்

மண்டைக் காட்டிலே

மனித சக்திகள்

சண்டை போடவா சமயம்

வளர்ந்தது?

பெண்டு பிள்ளைகள் துண்டம்

துண்டமாய்க்

கொண்டு போகவா கோவில்

வைத்தது?

மத வளர்ச்சியா? மனித நேயமா?

எது உயர்ச்சியாய் இவர்க்குப் பட்டது!’

கவிஞர் விஸ்வநாதனுக்குத் தனியாக கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்குப் பதில் இதோ, இங்கேயே அதைப் பற்றி எழுதி விட்டேன்.

‘சமரசம்’ என்று ஒரு இஸ்லாமிய மாத இதழ் எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் விடாது படிப்பது வழக்கம். சமீபத்திய சமரசத்தில், ‘ஹாஜிகளே என்ன கொண்டு வந்தீர்கள்?’ என்று பாகிஸ்தானிய சிந்தனையாளர் எழுதிய கட்டுரை ஒன்றை தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். எல்லா சமயத்திலும் இடித்துரைப்பு நிகழத்தான் வேண்டும் என்பதை எனக்கு அந்தக் கட்டுரை தெளிவாகச் சொல்லியது.

படிப்பது ஒரு பெரிய சுகம். அது நல்ல ஒரு காதற் பெண்ணோடு கைகோர்த்து சுற்றித் திரிவதுபோன்ற இதம்.

நன்றி: குமுதம்.காம்

வேலை கெட்ட வேலை :)

எனக்கு வேற வேலையே கிடையாது என்பது போல் தோன்றியதால், இன்னுமொரு சுய பரிசோதனைச் சாவடி பக்கம் நுழையச் சொன்னார். நிறைய கேள்வி, நடுநடுவே அதை இன்ஸ்டால், இதை நிறுவவா, என்ற சில தொல்லைகளுக்கு ‘NO’வும், மற்ற சுவாரசியமான சிந்திக்க வைத்த ரசனையான கேள்விகளுக்கு உண்மையான பதிலும் கொடுத்த பின்னர் வந்த முடிவுகள்:



HELPER WHO FINDS MISSING CHILDREN OVER THE INTERNET



(Submissive Introvert Concrete Feeler )

Like just 10% of the population you are a HELPER WHO FINDS MISSING CHILDREN OVER THE INTERNET (SICF). You are very tentative in the world and introverted with people–which means you are the shy and silent type. Hence the Internet. But behind your reserved exterior lies a dedicated person with a passion for the concrete truth who wants to, in his heart of hearts, help find missing children.

God bless you.