Monthly Archives: மார்ச் 2008

தானம் – இனம் – குழு – சார்பு

“It’s really unfair to expect people to choose. It’s like asking to be loyal to one parent or the other.”
SHAFIA ZALOOM, who is Asian and white, on being asked to pick a racial identity

வாசிக்க: Who Are We? New Dialogue on Mixed Race – New York Times


Race and the Social Contract – New York Times: “Europeans support a big welfare state because they believe the money will probably go to other white Europeans. In America, support for social spending among respondents to General Social Survey polls increased in tandem with the share of welfare recipients in the area who were in their own racial group…. all-white congregations become less charitably active as the share of black residents in the local community grows.”

வடை ஒரு அணா

சந்திரகாசி(அ.தி.மு.க.): கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் ரூ.100 கோடியில் நூலகம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டிலும் ரூ.100 கோடியில் நூலகம் என்று கூறப்பட்டுள்ளது. இது எந்த ஆண்டு நிதியில் இருந்து கட்டப்படுகிறது.

அமைச்சர் அன்பழகன்: வடை ஒரு அணா, காராபூந்தி ஒரு அணா என்றால் எந்த அணாவுக்கு வடை, எந்த அணாவுக்கு காராபூந்தி என்று கேட்பது போல உள்ளது. நிதி ஒதுக்கீடு ஒன்று தான்.

சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில்

IPL – Cricket: Cartoons (Janasakthi)

jana-sakthy-blade-bakkiri-cartoon.jpg

நன்றி: பிளேடு பக்ரி

தொடர்புள்ள முந்தையப் பதிவு: தமிழா… தமிழா « Snap Judgment

பெண்களும் ஆண்களும் சேர்ந்து கல்வி பயிலவா? அது கலவிக்குத்தான் இட்டுச் செல்லும்?

இது நியு யார்க் டைம்ஸின் சமீபத்திய கட்டுரை:
Teaching Boys and Girls Separately – Single-Sex Public Education – Children and Youth – Schools – Gender – New York Times: “Why Gender Matters: What Parents and Teachers Need to Know About the Emerging Science of Sex Differences.”

நண்பரின் விரிவான பதிலில் சில பகுதிகள்:

மார்கரெட் அட்வுட் என்பாருடைய அரை-பெண்ணிய நாவல் ஒன்று 90களில் வந்தது என நினைவு. ‘The handmaid’s tale’ என்று தலைப்பு என நினைக்கிறேன். நல்ல நாவல். இதை ஒரு சுமார் படமாகக் கூட எடுத்தார்கள். (The Handmaid’s Tale (1990))

இந்த நாவலில் இப்படி ஒரு ஆண்- பெண் பிரித்து வாழ்ந்த சமுகம் கற்பனை செய்யப்படுகிறது. இதில் பெண்கள் கடும் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டு, உடல்கூறு வழியே பகுக்கப்படுகிறார்கள். இது முற்றிலும் பெண் வெறுப்பை மையம் கொண்ட கதை இல்லை, ஆனால் பெண்ணடிமைத்தனத்தைக் கொண்டது. கிட்டத்தட்ட மத்தியகால யூரோப்பின் பெண்கள் நிலை, இன்றைய அரபிய இஸ்லாமிச சமுதாயப் பெண்களின் நிலை, தாலிபானிய, பின்லாடனிய இஸ்லாமியச் சமுகம் இங்கு கதையில் வரும் உலகம் போன்றது.

இன்னொரு விருப்பமான எழுத்தாளர்- உர்சுலா லெ க்வின் (Ursula le Guin) இவரும் இப்படி ஆண் பெண்கள் கடுமையாகப் பிரிக்கப்பட்ட ஒரு சமுகத்தை வைத்து அருமையான நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த நாவலில் பெண்ணியப் பிரச்சார நெடி குறைவு, உளவியல் நுட்பங்கள் அதிகம்.

Vairamuthu answers – Bharathy, Tamil kavithai, Music Directors, Songs

தொடர்புள்ள பதிவு:

கவிப்பேரரசு வைரமுத்துவின் பாற்கடல் – Bharathiraja, Kamalahasan

Vairamuthu Question & Answer – Incidents, Detractors

வைரமுத்து கேள்வி பதில் – MSV, Rajaraja Chozhan

பாடலாசிரியர் வைரமுத்து lists his favorite Movie Lyrics & Songs

ப.முரளிகிருஷ்ணா, சமயபுரம்.

அப்துல் ரகுமான் _ மீரா _ நா.காமராசன் _ சிற்பி _ தமிழன்பன் _ மேத்தா இவர்கள் கவிதைகளில் நீங்கள் ரசித்த வரிகள்?

‘‘நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது’’
அப்துல் ரகுமான் (பால்வீதி)

‘‘பூங்கொடியே உனக்குப்
பூ வாங்கி வருகிறேன்
முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக் கதவைத்
தட்டியது மாதிரி’’

மீரா (‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ தொகுப்பில் விடுபட்ட கவிதை ஒன்று)

வானவில்
‘‘இந்தப் பொல்லாத வானம்
மழையையும் தூறிக் கொண்டு
துணியையும் உலர்த்துகிறது’’
நா.காமராசன் (கறுப்பு மலர்கள்)

‘‘ஐந்து புலன்களும்
கால் பந்து விளையாடும்
மைதானம் உடல்
விதிகள் தெரிந்தால்
விளையாட்டு
ஆழம் தெரியாமல் ஆடினால்
பேய் மணல்’’
சிற்பி (இறகு)

‘‘அம்பு கூர்மையாய்
இருந்தென்ன
பார்வை?’’
ஈரோடு தமிழன்பன் (ஒரு வண்டி சென்ரியு)

காதல்
‘‘இரண்டு கண்களும்
இரண்டு கண்களும்
எதிர்ப்பட்டுக்கொள்ள
நான்கும் குருடானபின்
நடக்கும் நாடகம்’’
மு.மேத்தா (அவர்கள் வருகிறார்கள்)

கே.சுந்தரேசன், உத்தமதானி.

பாரதியார் கவிதைகளை அவர் எழுதிய காலத்தில் யாரும் விமர்சித்தது உண்டா?

உண்டு.

கண்ணன் பாட்டில் _

‘‘தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி _ பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்’’ என்று எழுதினார் பாரதி.

வக்கீல் நண்பர் ஒருவர் கேட்டார்: ‘‘நீங்கள் எழுதியது கண்ணன் பாட்டு, கண்ணன் கதை நிகழ்ந்த காலம் முற்காலம்; தில்லிக்குத் துருக்கர் வந்தகாலம் பிற்காலம். கண்ணன் பாட்டில் துருக்கர் பற்றிய குறிப்பு வருவது காலமுரண் இல்லையா?’’

கண்சிவந்த பாரதி அள்ளி வீசினார் அனல் வார்த்தைகளை : ‘‘ஏங்காணும்… பணியாரம் கொடுத்தால் ருசி பார்த்துச் சொல்வீரா… மாவு எங்கிருந்து வந்தது, யார் சுட்டது என்று கேட்பீரா? கவிதையைக் கவிதையாய்ப் பாரும் ஓய்…’’

ஆவேசத்தின் சிகரங்களிலிருந்து காட்டாறாய் இறங்கி வருகிறது கவிதை. அதில் நுரை பார்க்கும் கூட்டம் நதி பார்க்காது.

என்.பார்கவி, தேவகோட்டை.

ஓர் ஆணோ பெண்ணோ அதிகபட்சம் எத்தனை குழந்தைகள் பெற முடியும்?

18ஆம் நூற்றாண்டில் மொரோக்கோவை ஆண்ட மன்னர் மொர்லே இஸ்மாயிலுக்கு 500 அந்தப்புரப் பெண்கள். அவர்கள் மூலம் அவர் பெற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 888.

1816 முதல் 1872 வரை ரஷ்யாவில் வாழ்ந்த வாசிலெட் என்ற பெண்மணிதான் அதிக குழந்தைகள் பெற்றவர். 27 முறை கர்ப்பம் தரித்திருக்கிறார். பதினாறு பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள்; ஏழு பிரசவத்தில் மும்மூன்று குழந்தைகள்; நான்கு குழந்தைகள் வீதம் நான்கு பிரசவம். மொத்தம் 69 குழந்தைகள்.

இனவிருத்திக்கான ஆற்றல் இயங்க முடிந்த எல்லாருக்கும் உண்டு.

மதம் அரசு என்ற நிறுவனங்களாலும், நாகரிகம் பண்பாடு என்ற கருத்தியல்களாலும் நம் சக்தி நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.

க.ஞானசேகரன், கதிராமங்கலம்.

நீரைப் பிரித்துப் பாலை உண்ணும் அன்னப் பறவைதானே பறவைகளில் அறிவாளி?

அதே அன்னப் பறவையை முட்டாள் என்கிறான் பர்த்ருஹரி.

இரவில் குளத்தில் தெரியும் நட்சத்திரங்களை ஆம்பல் முனை என்று கடித்து ஏமாந்து போகும் அன்னம், பகலில் நட்சத்திரம் என்று கருதி ஆம்பலைக் கடிக்காமல் பட்டினி கிடக்குமாம். மதி அன்னங்களும் உண்டு மட அன்னங்களும் உண்டு மனிதர்களைப் போலவே.

பி.புகழேந்திரன், மேலவழுத்தூர்.

பல இசையமைப்பாளர்கள் இசையமைத்ததில் உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல்…

நீண்…..ட பட்டியல். உங்கள் பொறுமையை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்.

கே.வி.மகாதேவன் _வானம் எங்கே முடிகிறது (பாய்மரக்கப்பல்)

எம்.எஸ்.விஸ்வநாதன் _ கண்ணான பூமகனே (தண்ணீர் தண்ணீர்)

இளையராஜா _ பொன்மாலைப்பொழுது (நிழல்கள்)

சங்கர் கணேஷ் _ மேகமே மேகமே (பாலைவனச்சோலை)

கங்கை அமரன் _நீ தானா நெசந்தானா (நாளெல்லாம் பௌர்ணமி)

சந்திரபோஸ் _மனிதன் மனிதன் (மனிதன்)

ஷியாம் _ ஆனந்த தாகம் (வா இந்தப் பக்கம்)

வி.எஸ்.நரசிம்மன் _ ஓடுகிற தண்ணியில (அச்சமில்லை அச்சமில்லை)

ஆர்.டி.பர்மன் _ அடடா வயசுப்புள்ள (உலகம் பிறந்தது எனக்காக)

லட்சுமிகாந்த் பியாரிலால் _ தேனூறும் ராகம் (உயிரே உனக்காக)

சக்கரவர்த்தி _ சமையல் என்பதொரு தத்துவம் (தேன்கூடு)

மனோஜ் கியான் _ அழகான புள்ளிமானே (மேகம் கறுத்திருக்கு)

அம்சலேகா _ சேலைகட்டும் பெண்ணுக்கொருவாசம் உண்டு (கொடிபறக்குது)

சம்பத் செல்வம் _ சந்தனப் பூவச் சம்மதம் கேட்கப்போறேன் (ஓடங்கள்)

தேவா _ புல்வெளி புல்வெளி தன்னில் (ஆசை)

தாயன்பன் _ ஸ்ரீராமனா (அன்று பெய்த மழையில்…)

ஜெர்ரிஅமல்தேவ் _ என் கண்மணி (நினைவோ ஒரு பறவை)

வித்யாசாகர் _ மலரே மௌனமா (ஜெய்ஹிந்த்)

ஏ.ஆர்.ரஹ்மான் _ சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

தேவேந்திரன் _ மாட்டுவண்டிச் சாலையிலே (வேதம் புதிது)

எஸ்.பி.பாலசுப்ரமணியம் _ வண்ணம் கொண்ட வெண்ணிலவே (சிகரம்)

எல்.வைத்திய நாதன் _உழுதானே உழுதானே(ஏர்முனை)

சங்கீத ராஜன் _ நாடு நாடு (பூவுக்குள் பூகம்பம்)

ரவீந்திரன் _மனமே மயங்காதே (லட்சுமி வந்தாச்சு)

மரகதமணி_ ஜனகணமன (வானமே எல்லை)

எஸ்.ஏ.ராஜ்குமார் _ இன்னிசை பாடிவரும் (துள்ளாத மனமும் துள்ளும்)

பரத்வாஜ் _ சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் (அமர்க்களம்)

பாலபாரதி_தாஜ்மஹால் தேவையில்லை (அமராவதி)

ஆதித்யன் _ ஒயிலா பாடும் பாட்டுல (சீவலப்பேரிபாண்டி)

சிற்பி _ கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை)

மகேஷ் _ பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் (நம்மவர்)

ஆனந்த்_அச்சு வெல்லமே(சக்தி)

சுரேஷ் பீட்டர் _ பூப்பூவாப் பூத்திருக்கு பூமி (கூலி)

விஜய்ஆனந்த் _ தேவி தேவி (நான் அடிமை இல்லை)

சிவாஜி ராஜா _ சின்னச் சின்ன மேகம் (காற்றுக்கென்ன வேலி)

இனியவன் _ அருவிகூட ஜதியில்லாமல் சுதியில் பாடுது (கௌரி மனோகரி)

சௌந்தர்யன் _ கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை (சிந்து நதிப் பூ)

ரஞ்சித் பரோட் _ மின்னல் ஒரு கோடி (வி.ஐ.பி.)

ஹாரீஸ் ஜெயராஜ் _ மூங்கில் காடுகளே (சாமுராய்)

மணிசர்மா _ மெல்லினமே (ஷாஜகான்)

தினா _ அன்பே அன்பே (கண்ணும் கண்ணும்)

சபேஷ்முரளி _ விளக்கு ஒன்று அணைந்து போனால் (அடைக்கலம்)

தேவி ஸ்ரீ பிரசாத் _ மண்ணிலே மண்ணிலே (மழை)

ஷிவா _ என்ன அழகு எத்தனை அழகு (லவ் டுடே)

விஜய் ஆண்டனி _ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் (டிஷ்யூம்)

ஸ்ரீகாந்த் தேவா _ பொட்டுவைத்த முகத்தை (சிலநேரங்களில்)

டி.இமான் _ ஏ.தமிழா ஏ.தமிழா (தமிழன்)

பால்ஜே _ பேனாக்காரன் வருகிறேன் (தலைமகன்)

ஜி.வி.பிரகாஷ் _ நீயே சொல் (பொல்லாதவன்)
எஸ்.மகாலட்சுமி, வல்லக்கோட்டை.

பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்?

  • மதிக்கப்படுவதை;
  • தனக்குள்ளிருக்கும் ஆளுமை ஆராதிக்கப்படுவதை;
  • நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கப் படுவதை;
  • தன் பலவீனங்களைக் கண்டு கொள்ளாத கண்களை;
  • தன் பலத்தைக் கொண்டாடும் குணத்தை;
  • ஒலி உயராத குரலை; நான் உனக்கு மட்டும் தான் என்னும் உயிரழுந்தும் ஸ்பரிசத்தை.
  • சபையில் கொடுக்கும் கௌரவம் தனிமையிலும் கொடுக்கப்படுவதை;
  • தாம்பத்யம் முடிந்த தருணங்களில் ‘குளியல் அறைக்கு முதலில் நீ போ’ என்று வழங்கப்படும் முன்னுரிமையை.

 எஸ். உஷாராணி,  துவாக்குடி.

எம்.ஜி.ஆர். அறிவாளியா? புத்திசாலியா?

சாமர்த்தியசாலி.

ஒரு படப்பிடிப்புக் கூடத்துக்குள் நடித்துக் கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். ஒரு லாரியில் வந்து இறங்குகிறது ரசிகர் கூட்டம். தேநீரும் வடையும் தந்து உபசரிக்கிறார். கையெடுத்துக் கும்பிட்டும் வந்த கூட்டம் கலைவதாகத் தெரியவில்லை. நெருக்கமான காதல் காட்சி வேறு. வரவர ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்கமுடிய வில்லை. அவர்களை வெளியேற்றவும் முடியவில்லை. என்ன செய்வதென்று எம்.ஜி.ஆர். யோசிக்கிறார். வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த உதவி இயக்குநரை அழைக்கிறார்; அவர் வைத்திருந்த வசனத் தாளை வாங்குகிறார். என்னவோ எழுதுகிறார். கூடியிருந்த கூட்டம் கும்மி கொட்டி ஆரவாரிக்கிறது.

‘‘வசனகர்த்தாங்கறவன் சும்மா, வாத்தியார் படத்துக்கு வாத்தியார்தாண்டா எழுதுறாரு வசனத்த’’ என்று பெருமை பேசுகிறது கூட்டம். கொஞ்ச நேரத்தில் ஒரு சிறிய போலீஸ் பட்டாளம் வருகிறது; ரசிகர்களைக் கலைக்கிறது; லாரி புறப்படுகிறது.

இப்போது வசனத்தாளை எம்.ஜி.ஆர். மீண்டும் வாங்குகிறார். தான் எழுதிய வரிகளை அவரே அடிக்கிறார்.

‘‘போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்து அத்தனை பேரையும் மென்மையாக அப்புறப்படுத்தவும்.’’

வெளியே லாரிக்காரர்களின் கோஷம் சாலையைக் கிழிக்கிறது: ‘எம்.ஜி.ஆர். வாழ்க!’

ஆர். ரூபநாதன், சின்ன காஞ்சிபுரம்.

இந்திய வாழ்க்கை என்பது…?

கடைசி ஐந்து வருடத்தைத் தனக்குப் பிடித்தமாதிரி வாழ்வதென்னும் போராட்டத்தில் தனக்குப் பிடிக்காத மொத்த வாழ்க்கையை வாழ்ந்து தொலைப்பது.

பி. நேருதாசன், பல்லாவரம்.

தலைவர்கள் யாரைப்பார்த்து அஞ்சுகிறார்கள்?

பத்திரிகைக்காரர்களைப் பார்த்து,

பிரதமரான பிறகுதான் பண்டித நேரு முதன் முதலில் அமெரிக்கா சென்றார்.

‘‘எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையாளர்களிடம் மட்டும் கவனமாயிருங்கள்’’ என்று அறிவுறுத்தி அனுப்பினார்கள்.

அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பு. எல்லாக் கேள்விகளும் ஓய்ந்த பிறகு கடைசியாகக் கேள்வி கேட்கிறார் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் லிப்மேன்:

‘‘இந்தியப் பிரதமருக்கு அமெரிக்காவின் இரவு விடுதிக்குச் செல்லும் எண்ணம் உண்டா?’’

நேரு சிரித்துக் கொண்டே திருப்பிக் கேட்டார்.

‘‘நியூயார்க்கில் இரவு விடுதி இருக்கிறதா?’’

மறுநாள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் தலைப்புச் செய்தி:

‘‘நியூயார்க்கில் இரவு விடுதி இருக்கிறதா? இந்தியப் பிரதமர் ஆவல்’’

பத்திரிகையாளர்கள் பொல்லாதவர்கள்..

Local maps – Chennai, Mylapore: Google vs Yahoo

யாஹூ அமர்க்களமாக இருக்கிறது:

mylapore-santhome-yahoo-maps-1.jpg

இன்னும் முக்கிய இடங்களை அடையாளம் காட்டுதல் தமிழுக்கு வரவில்லை போல:

maps-santhome-mandaveli-tamil-nadu-local-landmarks.jpg

கடைசியாக கூகிளில்:

maps-google-santhome-mylai-chitrakulam-mandaveli.jpg

நன்றி/வழி: லேஸிகீக்

எப்பொழுது கருத்து சொல்லலாம்? பார்வை ஒன்றே போதுமே

அசல் & நன்றி: தினமணிக் கதிர்

ரயில் பெட்டியின் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தான் அந்த இளைஞன். ரயில் புறப்பட்டதும் “அப்பா அப்பா மரமெல்லாம் பின்னாடி போகுதுப்பா” என்று பரபரப்பாய் ஆச்சர்யப்பட்டான். அவனருகே அமர்ந்திருந்த அவனுடைய தந்தையும் அவனுடைய ஆச்சர்யத்தை தலையசைத்து ரசித்தார்.

அதே பெட்டியில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களுக்கு இது எரிச்சலூட்டியது. இந்த வயதில் ஓர் இளைஞனுக்கு இதில் எல்லாம் ஆச்சர்யமா என்று இருந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. “அப்பா… அப்பா மழை பெய்கிறது” என்றான் இளைஞன்.

கல்லூரி மாணவன் ஒருவன் பொறுமை இழந்துபோய், “இந்த வயதில் இப்படியெல்லாமா ஆச்சர்யப்படுவார்கள்” என்றான்.

அந்த இளைஞனின் தந்தை “மன்னிக்கவும். பிறந்ததிலிருந்து இவனுக்குக் கண்பார்வை இல்லாமல் இருந்தது. இன்றுதான் பார்வை கிடைத்து மருத்துவமனையில் இருந்து ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

நீதி: அவசரப்பட்டு அபிப்ராயங்கள் சொல்லக்கூடாது.

தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்

அல்செய்மர் ஆள்வதற்கு முன் நினைவில் நின்ற முகமூடிப் பதிவர் பட்டியல்:

1. முகமூடி, அனானி, பெயரிலி என்றவுடன் நினைவுக்கு வருபவர். யாஹு குழுமங்களில் உலாவிய டிஸ்கி பாவிக்கவும். நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காமல் சுதந்திரமாக விமர்சித்தவர். இன்றும் ஏங்குவது: பதிவுக்கு பல்விதமாக செய்தி, வலைப்பூ, சிரிப்பான், இலக்கிய விமர்சனம், அமெரிக்க ஊடகம் தொட்டுக்காட்டியவர்.

2. சன்னாசி: ஆரம்பித்த புதிதில் இவரும் முந்தையவரைப் போலவே சாட்டையடி சுழற்சி சொல்லாட்சி கொண்டு சினிமா குறித்தும் கலை குறித்தும் வெளிப்படுத்திய வேகத்தில் ‘அவர்தான் இவரோ’ என்று எண்ணியது உண்டு. இன்றும் ஏங்குவது: ‘இது தேறாத கேசு’ என்று தட்டிக் கழிக்காமல் வாதம் பொறுமையாக வாதம் செய்யும் லாவகம்.

3. முகமூடி: பேசாப்பொருளை விவாத களத்தில் வைத்தவர். சுற்றி வளைத்துப் பேசுவதில் ஏற்கனவே சொல்லப்பட்டவர்களுக்கு சளைக்காதவர். இவரின் பதில் வாதங்கள் வாயடைத்துப் போக வைப்பவை.

4. குசும்பன்: புதிய குசும்பன் அல்ல. சில சமயம் அதிரடி; பல சமயம் ஊமைக்குசும்பு; அவ்வப்போது நக்கல், ஊசி குத்தல் நகைச்சுவை. அவரே பொறிப்புரை தந்தால் மட்டுமே புரியக்கூடிய பதிவும் உண்டு. இன்றும் ஏங்குவது: வண்ண வண்ணமாக வார்த்தைகளுக்குள் பூசியிருக்கும் வடிவு.

5. குழலி: பாட்டாளி மக்கள் கட்சியும் அன்புமணியும் இராமாதாசும் இணையத்திற்கு கொள்கை பரப்பு செயலாளர் நியமித்து விட்டார்கள் என்றே எண்ண வைத்தவர். இவர் வரும்வரை கடுமையான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்ட பா.ம.க., குழலிக்குப் பின் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

6. லக்கிலுக்: முந்தையவர் பா.ம.க. குறித்த எதிர்மறை எண்ணங்களை வாதத்தில் எதிர்கொண்டார் என்றால், இவர் திமுக, கலைஞர் குறித்த நேர்மறை இடுகைகளை முன்னிறுத்தினார். நாளடைவில் சகலகலா வல்லவனாலும் துவக்க மீட்டிங் கவரேஜும் நியாயப்படுத்தல்களும் ப்ராண்ட் நேமை நிலைநாட்டியது.

7. இலவசகொத்தனார்: முன்னவரைப் போலவே ஆரம்பத்திலேயே பலநாள் பதிவுகள் இட்ட மெச்சூரிட்டியும் சுவாரசியமான இடுகையின் சூட்சுமமும் அறிந்தவராய் வந்தார். தமிழ்மணத்தின் மறுமொழிப் பெட்டியைஹைஜாக் செய்தவர். இவரின் பின்னூட்ட எண்ணிக்கை கின்ன்ஸ், லிம்கா சாதனை.

8. சர்வேசன்: வெறும் கருத்துக்கணிப்பு என்று ஆரம்பித்தாலும் கருத்துகளை அவ்வப்போது பதிவாக இடுபவர். கதைப் போட்டி, புகைப்பட போட்டி, பதிவர் போட்டி என்று தொடர்ச்சியாக பல நல்ல மாற்றங்களை உருவாக்கியவர். இன்னும் முகமிலியாக உலா வருவது குறிப்பிடத்தக்க அதிசயம்.

9. தருமி: இயல்பாய் எதார்த்தமாய் உள்ளே வந்து தக்க சமயத்தில் வெளிப்படுத்தி முகமிலி இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் வைத்துக் கொள்ளலாம்.

10. ஞானபீடம்: அவ்வப்போது வருவார்; கொஞ்ச நாள் கழித்து நெடு விடுமுறை எடுப்பார். தமிழ்மணம் சார்ந்த அரசியல்நெடிப்பதிவுகள் பாட்டு, குத்துடன் நிறைய இருக்கும்.

11. அப்பிடிப்போடு: அரசியல் கிடைக்கும். அதிகம் படித்ததில்லை. தற்போது காணவில்லை.

12. யோசிங்க: எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. To the point. அம்புட்டுதான். வினாவாக இருக்கட்டும்/சிந்தனையாக தோன்றட்டும்… ஷார்ட்டா முடிப்பார்.

13. இட்லி – வடை: இவ்வளவு காலமாகத் தாக்குப்பிடிப்பது மலைக்க வைக்கும் ரகசியம். இவரா, அவரா, மரத்தடியில் இருக்கிறாரா, சென்னையா, வயதானாவரா, நுட்பம் அறிந்தவரா, இலக்கியவாதியா, இருவரா என்றெல்லாம் தெளிவாகக் குழப்புபவர்.

14. ரோசாவசந்த்: சொந்தப் பதிவில் எழுதுவதில்லை. என்ன பெயரில் எங்கிருக்கிறாரோ!

15. அனாதை ஆனந்தன்: ரோசா என்றவுடன் ஏனோ நினைவுக்கு வருபவர். இன்றும் அவ்வப்போது தெளிவாக, முக்கியமான கருத்துகளுடன் மாற்று சிந்தனை என்றால் எப்படி/என்ன/ஏன் என்று உணர்த்துபவர்.

16. பொறுக்கி: அனாதை போலவே வித்தியாசமான விஷயங்களை நேரடி மொழியில் பதிபவர். அனுபவத்தையும் வாசிப்பையும் அவசரமில்லாமல் நேர்மையாகப் பகிர்வதில் தனித்து தெரிபவர்.

17. விசிதா: வாடிக்கை மறந்ததும் ஏனோ? இந்த மாதிரி பதிவர்கள் அமுத விருந்தை நிறுத்தியதும் ஏனோ?

18. டிஜே தமிழன்: பதிவுகள் மையத்தில் முதலில் படித்தது. இன்றளவும் சுடும் விவாதப் பொருளையும் இலக்கியத்தையும் தவறவிடக்கூடாத முறையில் கொடுக்கிறார்.

19. நேசகுமார்: முதன்முதலாக கொலை மிரட்டல் பெற்றவர்.

20. வவ்வால்: நவீன திருவிளையாடலில் சுவாரசியம் குறையாமல் இருக்க வைப்பவர். ‘இவர் யார்?’ என்பது புரிந்து கொள்ள முடியாத ரகசியம்.

இன்னும் நிறைய பேர் இருப்பார்கள்… விடாது கருப்பு, இரவுக்கழுகு, பெடியன்’கள், இளவஞ்சி, பச்சோந்தி – வண்ணக்குழப்பம், கல்வெட்டு, கொழுவி, ஈழநாதன், ஜொள்ளுப்பாண்டி, சனியன்…

இன்றைக்கு சட்டென்று தோன்றியவர்கள் இவர்கள் மட்டும்தான்

சாகரனும் கூடத்தான்.

'வெள்ளை' மனதும் வெள்ளை மனதும்.

ஒபாமாவின் தீராத் தலைவலியாக வந்திருப்பது அவர் சார்ந்திருந்த சிகாகோவின் ட்ரினிட்டி சர்ச்சின் போதகர் ஜெரமாயா ரைட்டின் அமெரிக்க எதிர்ப்புக் முழக்கங்கள். (படிக்க: பராக்கின் வாடர்லூ..?). பராக் ஒபாமாவின் சமன் செய்யும் முயற்சியான வரலாற்று சிறப்புமிக்க அவரது இனப்பிரச்சனை பேருரையும் அவர் மீது தனிப்பட்ட நன்மதிப்பை வளர்த்துள்ளதே தவிர ஜெரமையா ரைட்டின் பிரச்சனை மக்களின் மனதை விட்டு எளிதில் அகலப் போவதில்லை. ஒபாமாவின் செல்ல மாமாவாகத் திகழ்ந்துவந்த அமெரிக்க ஊடகங்களும் இந்தப் பிரச்சனைக்குப்பின் அவருக்கு மிட்டாய் வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது.

ஜெரமையா ரைட் கறுப்பின விடுதலை இறையியலை (Black liberation Theology) பின்பற்றுபவர். அமெரிக்காவின் பல கறுப்பின திருச்சபைகள் இந்த கறுப்பின விடுதலை இறையிலை பின்பற்றுபவைகளே. ஜெரமையா ரைட்டின் போதனைகளில் பல எதிர்-அமெரிக்க கூற்றுக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை கருப்பினத்தவர்கள் மீது ‘வெள்ளை’ அமெரிக்க அரசின் “‘திட்டமிட்ட’ அடக்குமுறைகளை, அரசியல் சமூக இரட்டை நிலைகளைச்” சாடுவதும், அமெரிக்காவின் போர் முயற்சிகளைச் சாடுவதுமாய் அமைந்துள்ளன. கறுப்பினத் திருச்சபைகளில் போதகர்கள் எளிதில் கைகொள்ளும் விதயங்கள் இவை என்றபோதும் ஜெரமைய ரைட்டின் ‘God damn America’ போன்ற கடுஞ்சொற்களை ஜீரணிக்க இயலாமல் ஒபாமாவின் தீவிரத் தொண்டர்களும் தடுமாறுவதைக் காணமுடிகிறது.

கறுப்பினத்தவர் மீது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட அடக்குமுறை தொடர்கிறது என்பதே அடித்தட்டு கறுப்பின மக்களிடம் நிலவும் பரவலான கருத்து. இதையே அவர்களின் திருச்சபை முதலிய அதிகார அமைப்புக்களும் பிரதிபலிக்கின்றன. இந்த நம்பிக்கையின் பின்னணியிலிருந்து எழுபவை வெறும் எதிர்ப்புக் குரல்களும் விமர்சனங்களும் மட்டுமல்ல சில கான்ஸ்பிரசி தியரிகளும்கூட.
HIV வைரஸ் கறுப்பினத்தவர்களை ஒழிக்க உருவாக்கப்பட்டது, ‘அமெரிக்க அரசு கறுப்பினத்தவர்களுக்குப் போதைப் பொருட்களைத் தருகிறது’, 9/11 அமெரிக்காவின் சொந்தச் செயல் என்பது முதலிய பல கான்ஸ்பிரசி தியரிகள் கறுப்பினத்தவர்களின் மத்தியில் நிலவுகின்றன. ஒரு மதபோதகர் இவற்றை போதிப்பது அதிகாரபூர்வ அங்கீகாரத்தை வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது.

ஒபாமா, பாஸ்டர் ரைட்டின் பேச்சுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தபோதும், பாஸ்டர் ரைட்டின் போதனைகளையும், அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளையும் தாண்டிய மனஎழுச்சியூட்டும் நற்செயல்களை செய்யக்கூடிய ஒரு ஆளுமையை அவருள் தான் கண்டுள்ளேன் எனக் கூறினாலும், மக்கள் மனதை விட்டு ‘God damn America’ என அலறும் ஜெரமையா ரைட்டின் முகம் மறைய மறுக்கிறது.
ஜெரமையா ரைட்டின் குரல் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்களிடம் காணப்படும் அமெரிக்கா குறித்த அதிருப்தியின் குரல் என்பதை ஒபாமா ஒப்புக் கொள்கிறார். கறுப்பினத்தவரை எப்படி நான் விட்டுத்தர (Disown) இயலாதோ அவ்வாறே ஜெரமையா ரைட்டையும் என அவர் கூறுவதன் பின்னணி இதுதான். ஆயினும் இந்த எதிர்ப்புக் குரல், பிரிவினைகளை முன்வைத்து எழக் கூடாது என்பதே அவரின் கொள்கை. 

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் நிலமை இன்றளவும் அடிமட்டத்திலேயே இருப்பதன் பின்னணியில் திட்டமிட்ட சதிகள் இருக்கின்றன என சந்தேகங்களும் எதிர்குரல்களும் எழ முகாந்திரங்கள் இருப்பதை சிலராலேயே ஏற்றுக்கொள்ள இயல்கிறது. அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் கூட கோவில் போன்ற பொது இடங்களில் அக்குரல்கள் ஒலிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

திருச்சபையும் அரசாட்சியும் தனித்தியங்க வேண்டும் என்பது அமெரிக்க அரசியலமைப்புக் கொள்கை. (Separation of Church and State). ஆனால் கறுப்பினத்தவரின் சமூகப் பிரதிநித்திகளாக அவர்களின் திருச்சபையே விளங்குகிறது. மார்ட்டின் லூத்தர் துவங்கி ஜெசி ஜாக்சன் வரை கறுப்பின சம உரிமைக்கானப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் பலரும் மதபோதகர்களே என்பது குறிப்பிடத் தக்கது. கறுப்பினத்தவர்களுக்கு எதிரான முக்கிய அடக்குமுறையாக கறுப்பினத்தவரின் கோவில்கள் எரிக்கப்பட்டன. கறுப்பின திருச்சபை என்பது வெறும் வழிபாட்டுக் கூடமாய் மட்டுமின்றி அவர்களின் சமூகக் கூட்டுக் குரலாகவும் விளங்குவதன் அடிப்படையில் அவை ஒபாமா போன்ற ‘விடுதலைபெற்ற’ மேல்தட்டு மக்களின் குரலாக மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஒலிக்கின்றன. இது குறித்த புரிதல்களை உருவாக்கும் வேண்டுதல்கள் ஒபாமாவின் இனப்பிரச்சனை உரையில் பரவிக் கிடக்கின்றன.

எதிர்-அமெரிக்கக் கருத்துக்கள் உலவும் ஒரு பின்னணியிலிருந்து வரும் எந்தத் தலைவரையும் அமெரிக்க மெஜாரிட்டி வெள்ளையினத்தவர் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். முன்பு ஒபாமாவின் நேர்மையை நம்பிய மக்கள் இன்று ஒபாமாவின் வார்த்தையை விட அவரது போதகரின் வார்த்தைகளை முன்வைத்து முடிவுகளை எடுக்க ‘இனம்’ தவிர்த்த போதுமான காரணங்கள் இல்லை. சுய முனைப்பின் மூலம் அமெரிக்கர் யார் வேண்டுமானாலும் தங்கள் கனவை எட்ட முடியும் எனும் கூற்றொன்று இங்கு பிரபலம். ஆயினும் கறுப்பினத்தவர்களால் சிகரங்களை எளிதில் எட்ட இயலுவதில்லை. இதை வெறும் சோம்பேறித் தனத்துடனேயே பொருத்திப்பார்க்கும் பல அமெரிக்கர்களும் ‘இனப் பிரச்சனை’ அமெரிக்காவில் இல்லை என்றே நம்புகிற நிலையும் உண்டு.
கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஆவதில் இருக்கும் அதி முக்கிய பிரச்சனை அவரது கறுப்புப் பின்னணியை அவர் முற்றிலும் மறைத்து ‘வெள்ளை’ மனதுடையவராக ஆகிவிட வேண்டும் எனும் எதிர்பார்ப்பே. இந்த ஞானஸ்னானம் பெறாத கறுப்பினத் தலைவர் அமெரிக்க அதிபராவது இயலாது. ஒபாமாவிடம் தற்போது மக்கள் எதிர்பார்ப்பதுவும் இதுவே. இது அடிப்படையில் ஜனநாயகத்தின் மெஜாரிட்டிகே வெற்றி எனும் கொள்கையில் அமைந்திருந்தாலும் இது ‘இனம்’ சார்ந்த பிரிவினையாக இருப்பது வருந்தத்தக்கது. ஒபாமா இதனை எதிர்கொள்ளத் தன் தாய்வழி வெள்ளை இனப் பின்னணியை முன்வைக்க நேர்ந்ததுவும் குறிப்பிடத்தக்கது.

ஒருவரின் வார்த்தைகள் உள்ளோடும் உணர்வுகளை வெளிக்கொணர்கிறதென்றால் ஒபாமாவின் வார்த்தைகளை நம்புவதே அவரைக் குறித்த மதிப்பிடலுக்கு சரியான அளவுகோலாகும். ஒபாமாவின் நிலை இதில் என்ன என்பதையும் அவர் கறுப்பினத்தவரின் கோபத்தின் அடிப்படையில் இதுவரை என்ன செய்திருக்கிறான் என்பதைத் தேடினால் ஒன்றுமில்லை என்றே கூற இயலும். அமெரிக்க கறுப்பினக் கோபத்தை அவர் முழுமையாக உணர்ந்திருக்கவும் முடியாது, ஏனெனில் அவரது கறுப்பு பின்னணி சந்தேகத்துக்குரியது. அவரை முழுமையான கறுப்பினத்தவர் என கறுப்பினத்தவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒபாமா கறுப்பு, வெள்ளை எனும் இரு பின்னணிகளையும் கொண்டவர். இவர்களை இணைக்கும் புள்ளியாக திகழ்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு ஆனால் அவர்கள் மெஜாரிட்டி இல்லை. ஒபாமா இந்த சர்ச்சையிலிருந்து தற்போது மீண்டாலும் பொதுத் தேர்தலின்போது இந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் என்பது உண்மை.

பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

ஓல்ட் இஸ் கோல்ட்… புதிதாக சேர்க்கப்பட்ட குறிச்சொற்களுடன்

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு!” என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று தொடர்ந்தது.