Monthly Archives: பிப்ரவரி 2007

திருவிளையாடல் ஆரம்பம்

படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. வேற எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பார்த்தேன்; கேட்டேன்; ரசித்தேன்.

ஒரு துளி வசனம்:

‘அம்மா… எல்லாரும் ஹார்லிக்ஸ் போட்டு பையனை வளர்ப்பாங்க!
நீதான் போலீஸ்கிட்ட போட்டுக் கொடுத்து பையனை வளர்க்கிறே.’

படம் முழுக்கவே பளிச் மயம்.

விமர்சனம் அவசியம் படிக்க வேண்டும் என்றால் கூகிளை நாடவும். இந்த சுட்டியையும் தட்டலாம்: Arunkumar: திருவிளையாடல் ஆரம்பம் – 1

Forty Million Dollar Slaves

சென்ற வாரம். ஞாயிற்றுக்கிழமை. காலை செய்தித்தாள் புரட்டல். மிஷேலின் (Michelle Singletary) பத்தி ‘மாலை மலர்‘ பிட் நோட்டிஸ் தலைப்புடன் சுண்டியிழுக்கிறது. (படிக்க: Athletes Black and Blind)

Color of Money புத்தகக்குழுவின் பரிந்துரையாக “Forty Million Dollar Slaves: The Rise, Fall, and Redemption of the Black Athlete”ஐ சொல்லியிருந்தார். அமெரிக்காவில் ஃபெப்ரவரி மாதம் கறுப்பர் இனவரலாறு மாதமாகக் கொண்டாடுகிறார்கள். (தொடர்பான பதிவு: இந்தியாவில் இனவெறி | உள்ளும் புறமும்)

அமெரிக்க விளையாட்டுகளில் கூடைப்பந்து மிகவும் பிடித்தம். விறுவிறுப்பு நிச்சயம். எண்ணற்ற கறுப்பின வீரர்களில், மைக்கேல் ஜோர்டான் தனித்து தெரிவார். மந்தகாசப் புன்னகை. கொஞ்ச நாள் சிகாகோக் கரையோர வாசம். இவையும் காரணமாக இருக்கும்.

நைக்கி காலணி விளம்பரங்களுக்காக நிறைய சம்பளம் பெறுகிறார். சிலருக்கு வயிற்றெரிச்சல். மிஷேலுக்கு இந்தப் பணத்தை தங்கள் இனத்துக்கு மறு முதலீடு செய்யவில்லையே என்னும் வருத்தம். வில்லியம் (William C. Rhoden) புத்தகமாகவே எழுதி விட்டார்.

கறுப்பினத்தை ஏழ்மையும் வேலயில்லாத் திண்டாட்டமும் பீடித்திருக்கிறது. அவர்களில் பணம் வந்த சிலருக்கோ பதவிசு இல்லை என்கிறார் ஆசிரியர்.

காசு மட்டும் தானம் வழங்கினால் போதுமா? மேற்சென்று, கொஞ்சம் நேரம் அவர்களுக்கு ஒதுக்க வேண்டாமா? வருஷத்துக்கு சில தடவை தங்கள் இனத்தவரை சந்தித்தால் போதாது. அவர்களின் சமூக சித்தாந்தத்துக்குக் கொடி பிடிக்க வேண்டும் என்கிறார் புத்தகத்தை எழுதியவர்.

விளையாட்டு வீரர்களுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஆதிக்க முதலாளிகளின் பிடியை விட்டு ஜோர்டான்கள் வெளிவரவேயில்லை. விசுவாசத்தை விட்டுக் கொடுக்காமல் நன்றியுடன் வாலாட்ட வைக்கிறார்கள்.

மைக்கேல் ஜார்டனுக்கு இருக்கும் மதிப்பை சரிவர பயன்படுத்தலாம்.

 • பதின்ம வயதுக்கு வந்தவுடன் சீர்திருத்தப் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுபவர்களுக்காக…
 • கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக…
 • டோப்பு விற்று பாழாய்ப் போகும் சிறார்களுக்காக…
 • சரியான வழிகாட்டி இல்லாமல் தறுதலையாய் சுற்றுபவர்களுக்காக…
 • கழுத்தில் காசுமாலை, கையில் தோட்டாவுடன் நாகரிகத்தைப் பின்பற்றுபவர்களுக்காக…
 • பள்ளிப் படிப்புக்கு தூண்டுகோல் இல்லாமல், குடும்ப அமைப்பிலும் பின்புலம் கிடைக்காதவர்களுக்காக…

அணியில் ஆடும்போது கைகோர்த்து வெற்றியை எட்டுகிறார்கள். மைதானத்தை விட்டு வந்தவுடன் விளையாட்டாக நினைத்து தங்கள் குழுவிற்காக குரல், காசு, கொடுக்கலாமே!

அசல் விமர்சனம்

Tomato Potato Onion

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: சிறந்த புகைப்பட வித்தகர் – போட்டிக்காக இந்த மாதிரி படம் எடுத்தால் நிராகரிக்கப்படும். அனைத்து ஆக்கங்களிலும் ‘வேறு ஐட்டமும் படத்தில் இருக்கவே கூடாது.’

1. employed in canning (ha)

2. organic veg delivery 28.09.06

3. Friday night dinner

4. Tomatoes, Onions and Potatoes, Cochin

5. Salade niçoise

6. Orsett Show 2005

அனைத்துப் படங்களையும் சுட்டினால், அசலாக எடுத்தவரின் ஜாகைக்கு இட்டு செல்லும்.

HBO Ads for Hollywood in Hindustani – Today’s Email Forward

5 glorious years of bringing Hollywood to India.
HBO simply the best.

Agency: DDB Mudra Communications, New Delhi, India
Art director: Nabha Shetye
Copywriter: Talha Bin Mohsin
Photographer: Nagendra S Chikkara

இந்தியாவின் விளம்பரங்கள் அமெரிக்கா வந்த பிறகு இன்னும் பிடித்திருக்கிறது. ‘கண்ணைப் பார்! சிரி’ என்று அமெரிக்கா மிரட்டும். இந்தியாவோ, ‘என்னைப் பார்; என் அழகைப் பார்!’ என்று பல் இளிக்காமல், டச் செய்பவை.

எல்லாமே ரத்தினங்கள்தான்: இந்தியா | Ads of the World

Eelam Today

1. ஆயுதக் கடத்தல்: போராளிகளுக்காகக் கடத்தப்படவிருந்த 5,000 கிலோ இரும்பு குண்டுகள் & பலகோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்

அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வந்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதிகள் இதைத் தெரிவித்துள்ளனர். சண்டையில் ஈடுபடுபவர்கள் சாதாரண மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, தாக்குதல் நடத்துகின்றனர்.

2. விடுதலைப்புலிகள் கஞ்சா வளர்த்ததாகக் காண்பிக்கும் காட்சிகள் காட்டப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ படங்களை, இலங்கை பாதுகாப்புத் துறையினர் செய்தியாளர்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள்.

3. ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார். அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார்.

முழுமையான ஈழ செய்திகளுக்கு: Puthinam.com

இந்திய தினசரிகளில் ஈழம் குறித்த செய்திகளின் தொகுப்பு: LTTE :: Tamil News

முந்தைய டுடே பதிவு: Hinduism Today

Today’s Email Forward

கற்பனை நன்றாக வேலை செய்திருக்கிறது

இது புரியவில்லை

இது புரியாத மாதிரி புரியுது

It happens only in a Democrazy

சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு- சுயேச்சை வாபஸ் ஆகிறார்

எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மதிமுக இத் தேர்தலைப் புறக்கணிப்பதால் அக்கட்சிகள் சார்பில் யாரும் இத்தேர்தலில் மனுத் தாக்கல் செய்யவில்லை. பதவி விலகிய மேயர் மா. சுப்பிரமணியன் 140-வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கடைசி நேரத்தில் சுப்பிரமணியன் என்பவர் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுக & மதிமுகவை எதிர்க்கட்சி என்று இந்த செய்திக்குறிப்பு அடைமொழி தருவது தவறு. ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிடாவிட்டால், அவர்களும் மைனாரிட்டி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறார்கள்.

‘ஜீ நியூஸ்’ தொலைக்காட்சி, நிருபருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

குஜராத்தில் கீழ்நீதிமன்றங்களில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து வெளிப்படுத்த, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில், ஆமதாபாத் கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பி.சிங் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியை ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

Counsel for Gujarat said a committee appointed by the Gujarat High Court exonerated the magistrate and he was reinstated in service.

லஞ்சம் பெற்றுக்கொண்ட விபச்சாரி நீதிபதி குற்றமற்றவர். குற்றத்தை வெளிக்கொணர்ந்தவர் மேல் வழக்கு.

100 Days of Kindergarten – Final Project Details

பத்து பொருட்களை எடுத்துக் கொள்வது. ஒவ்வொன்றிலும் பத்து பத்தாக சேர்ப்பது என்று முடிவானது. சாப்பாடு அயிட்டங்கள் முன்னிலை வகித்து, சாக்லேட், cereal என்று தொடங்கியது. திடீரென்று பாதை மாறி விளையாட்டு காய்களைக் கோர்க்கலாம் என்று முடிவானது.

முதலில் செட் சேர்க்கும் சீட்டாட்டம்

இன்னொரு வகை சீட்டுக்கட்டு – ஃபிஷ் என்னும் கண்டுபிடிப்பு விளையாட்டு

சிறிய பொம்மை பலூன்கள்

குட்டி அடுக்குமாடி கட்டிட செங்கல்

அலைபாயுதே படப்பாடல் ஞாபகத்துக்கு வரலாம்

ஜெம் என்பதற்கு அகரமுதலியைப் புரட்டி அர்த்தம் பார்க்க வைத்தாள்

வண்ண வண்னக் கோலங்கள்

செக்கர்ஸ் காய்கள்

சதுரங்கம் இல்லை… அது மாதிரி இன்னொரு ஆட்டம்

எல்லாவற்றையும் ஒட்டும் படலம்

வெற்றிகரமான நூறாவது நாள்

முந்தைய பதிவு: E – T a m i l : ஈ – தமிழ்: Help – 100 days of Kindergarten : Ideas Required

எண்ண மழையாகக் குவித்து எங்களுக்கு உதவிய இலவசக்கொத்தனாருக்கும், ஆதிரை, சிந்தாநதி, பொன்ஸ், செந்தழல் ரவி, பாலராஜன்கீதா, சர்வேசன், ஜி, பத்மா அர்விந்த், சேதுக்கரசி & மற்றவர்களுக்கும் வணக்கங்கள்.

The 48 Laws of Power

 1. Never Outshine the Master
 2. தலைவனின் தோள் மட்டுமே வளர்
  உங்களுக்கு மேல் இருப்பவர் அந்த இடத்திலேயே வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களைக் கவரும் நோக்கத்தோடு அதீதமாக செயல்பட்டால், ‘பெரியவர்’களுக்கு வயிற்றைக் கலக்கும். மேலதிகாரிகளை புத்திசாலியாகக் காட்டி வைத்திருப்பதுதான் சாமர்த்தியம்.

 3. Never put too Much Trust in Friends, Learn how to use Enemies
 4. நண்பர்களை நம்பாதே. எதிரிகளை உபயோகிக்க அறி
  தோழர்கள் பொறாமை பிடித்தவர்கள். முதுகில் குத்திவிடும் ஆபத்தும் உண்டு. கொஞ்ச நாள் முன்னாடி பகைத்துக் கொண்டவனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள். பழைய பகையை ஆற்றுப்படுத்தும் பயம் கொண்ட கடமை உணர்ச்சியுடன் செயல்படுவான். உனக்கு எதிரியே இல்லை என்றால், எப்படி சம்பாதிப்பது என்பது குறித்து யோசி.

 5. Conceal your Intentions
 6. நோக்கங்களை புதை
  ஆழ் எண்ணங்களை மறை. செயல்களின் பின்னிருக்கும் காரணங்களை வெளிக்காட்டாதே. நீ என்ன செய்யப் போகிறாய் என்று அவர்களுக்கு விளங்காவிட்டால், எப்படி உன்னுடன் சண்டைக்கு வரமுடியும்? முடிந்தவரை தவறான பாதையில் இட்டுச் சென்று, புகை மண்டலத்தில் இருத்தி வைத்திருந்தால், அவர்களுக்கு தெளிவு பிறப்பதற்குள், உன் காரியம் கடையேறியிருக்கும்.

 7. Always Say Less than Necessary
 8. சுருங்க சொல்
  புரியாத சொற்றொடர்களை கையாள். எல்லா இடத்திலும், ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டிருந்தால், உனக்குக் கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். வெட்டு ஒன்று; துண்டு இரண்டாக போட்டு உடைக்காமல், கழுவுகிற மீனில் நழுவும் பாணியில் எழுது. ஆதிக்கவாதிகள் வாயைத் திறந்தால், முத்து உதிர்வது போல் குறைவாகப் பேசுபவர்கள்.

 9. So Much Depends on Reputation – Guard it with your Life
 10. கீர்த்தியை கா
  ஆளுமையின் முக்கிய அங்கம் சமூகத்தில் நற்பெயர். நல்ல பெயர் எடுத்திருப்பதனாலேயே, பிறரை மிரட்டி அடக்கலாம். துளி கீறல் விழுந்தாலும், காற்றில் பறக்கும் பஞ்சு கூட பேப்பர் வெயிட்டாக கல்லெறிந்து ஏளனம் செய்துவிடும். சேறு அடிக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கவனித்து, அதற்கேற்ப காய்களை நகர்த்து. எதிரிகளுக்கு அபகீர்த்தி வருமாறு சேறு அடி. அடித்தபிறகு அவர்களின் மதிப்பு சந்தி சிரிப்பதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்.

மற்றவற்றையும் அறிய: The 48 Laws of Power | The 48 Laws of Power – Wikipedia

News Stories of Interest

கருத்தைக் கவர்ந்த செய்திகள்:

 1. பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு

  குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.

 2. புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?

  சோனியாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தார்களே! அந்தப் படத் துணுக்காக இருக்கப் போகிறது?

 3. அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

  ‘மிஸ்… என்னை அடிச்சுட்டான் மிஸ்’ என்னும் சச்சரவுகளையே டீச்சர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தால், எப்பொழுது அனைத்து மக்களுக்கும் உடல்நலன் என்னும் ‘பாடம்’ எல்லாம் கவனிக்க முடியும்?

 4. 6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்

  படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45.

 5. உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

  சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

  மற்ற 75 விழுக்காடு இடங்களில் வழமை போல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் தலைவர்.

 6. ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்

  செப்டம்பரில் கல்யாணம் நடந்தது. வேகமான தயாரிப்பு.

 7. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

  மாற்றி மாற்றி அறிக்கை, போராட்டம் அரங்கேறுகிறது. சொற் சிலம்பம் முடியும்போது, அணை கட்டி திறப்பு விழாவுக்கு மத்திய பா.ம.க., வைகோவும் உள்ளூர் ஆளுங்கட்சியும் செல்லலாம்.

 8. கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை

  ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

  “ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது.

 9. வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

  “மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன” என்று கேள்வி கேட்கப்பட்டது.

  இதற்கு ஹேமமாலினி “அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்” என பதிலளித்திருந்தார்.