மீண்டும் ஏன்?


மீண்டும் மகள். இன்னொரு கேள்வி.

‘அப்பா… நம்ம லாஸ்ட் நேம் ரொம்பப் பெருசா இருக்கு. அம்மா மாதிரி சின்னதா வச்சிருக்கலாம் இல்லியா..’

ஏதோ பதிவில் பின்னூட்டிக்கொண்டே ‘ஹ்ம்ம்’

‘அதெப்படிப்பா… நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கடைசி பெயர்? அம்மாவுக்கு மட்டும் வேற பெயர்?’

‘அப்பாவின் கடைசிப் பெயர்தான் குழந்தைகளுக்கும் வைக்கிறோம். கல்யாணம் செஞ்சதுக்குப்புறம் அம்மா கூட பெயர் மாத்திக்கறேன்னு சொன்னா… நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.’

‘நீ ஏம்ப்பா உன் பெயர மாத்திக்கல?’

8 responses to “மீண்டும் ஏன்?

 1. பொண்ணுக்கு திருஷ்ட்டி சுத்திப் போடுங்கய்யா 🙂

 2. பெரியார் பண்ண விஷமம்…John Smith (தொழில்) இல்ல வழக்கமா நம்ம ஆந்திர மாநிலத்துல வெக்கிர மாதிரி ஊர் பெயர் வெக்கனும். Last name என்பது முகவரி, இதுல சாதியும் அடக்கம். அப்பா பெயர வெக்கிர வழக்கம் நம்ம ஊருல மட்டும் தான்.

 3. பிரகாஷ்… 🙂

  முரளி… பெரியாருக்கும் முல்லை பெரியாருக்கும் முடிச்சுப் போடற மாதிரி தலை சுத்துதுங்க 😛

 4. எனக்கும் என் பையனுக்கும் பிற்காலத்தில் ஏதாச்சும் தகராறு வருமென்றால் அது அவன் கடைசி பெயர் சம்பந்தமாய்த்தான் இருக்கும். 🙂 இப்படி எல்லா பாரத்திலும் விரிவு படுத்த வேண்டுமென்று தெரியாமல் அவன் தாத்தா பேரையும் இனிஷியலில் சேர்த்துத் தொலைத்து அவனும் நானும் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே என் பெயரை வாடிக்கையாளர் சேவை தொலைபேசிகளில் சொல்லி முடிப்பதற்குள் பல முறை நான் மூர்ச்சையடைந்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் அவன் பேரை மாற்றிக் காட்டா விட்டால் என் பேர் சத்யராஜ்குமார் இல்லை :-))

 5. Bala
  I changed my name after marriage only because it is ahort. prior to that my name was so long, my professors begged me to change. I found it easier to spell a 5 letter name than a 16 letter last name!! My son’s name has my name as well:))

  personally I just think it should be short, easy, and does not matter who keeps whose name. But once muthulakshmi had an interesting view on that and blogged on it.

 6. என் பாஸ்போர்ட்டில் surname என்ற இடத்தில் ஒரு குறுக்குக்கோடு போட்டு அடித்திருக்கும். பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவன்கூட சண்டைபோட்டு, எங்க ஊர்ல surname கிடையாது, எங்கப்பா பெயர் எங்கப்பா பெயர்தான், அதை நீ என்னோட surnameஆ மாற்றுவதற்கு உனக்கு உரிமை கிடையாதுன்னு சண்டைபோட்டதால், தொல்லைவிட்டதுன்னு ஒரு குறுக்குகோடு போட்டுக் கொடுத்திட்டான். என்னையே கேட்டுக்கேட்டு எனக்கு எப்படி வேண்டுமோ அப்படியே எழுதிக் கொடுத்தான். என் மற்ற சான்றிதழ்களெல்லாம் அப்பா பெயரை இனிஷியலாகக் கொண்டு, புள்ளிக்கப்புறம் என் பெயர் முழுமையாக இருந்தபடியால், அப்படியே இருக்கவேண்டுமென்று (to keep all the documents under the same name) விரும்பி, அப்பா பெயரின் முதல் எழுத்து, புள்ளி, என் பெயர் முழுமையாக என்று வரும்படி பாஸ்போர்ட் வாங்கிக் கொண்டேன். வெள்ளைக்கார உலகில் என் பெயர் என் surnameஆக மாறிப் போனது. 😦 விட்டேனா பார், யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக என்று, பாலனின் surname பாலன் என்றாக்கிவிட்டதோடு, என் surnameஐயும் மாற்றி, எங்கள் குடும்பப் பெயர் உருவாக்கி The Balans என்றாகிவிட்டோம். 🙂

  அப்பாக்களின் பெயர்களை வைத்து ஆரம்பித்ததுதான் மேற்கத்தியவரின் surnameகளும். Mathew Johnson என்றால் Johnஇன் மகன் மேத்யூ என்று பொருள்.

  எங்கள் ஊரில் சில குடும்பங்களை அவர்களின் பூர்வீக ஊர் சொல்லி மேற்கோள் காட்டுவோம். அதேபோல், மேற்கத்தியவர்களும் சிலர் தங்கள் ஊர் பெயர்களை surnameஆக வைத்துக்கொண்டார்கள்.

  கிராமங்களில் சிலரை அவர்கள் செய்யும் தொழில் சொல்லி அவர்கள் குடும்பத்தை மேற்கோளிடுவதும் வழக்கமே. (மிலிட்டரிக்கார் குடும்பம்) அதே போல்தான் மேற்கத்தியவர்களில் சிலரும் தொழில்முறை surname வைத்துக் கொண்டார்கள் (Tayler, Smith).

  ஜாதிப் பெயரை surnameஆக வைத்துக் கொள்வது இந்தியாவில் வடநாட்டவரின் பழக்கம். நம் ஊரிலும் (தமிழ் நாட்டிலும்) சிலர் அப்படியே.

  (இதில உங்களுக்குத்தெரியாத எதாவது சொல்லியிருக்கேனா, என் சொந்த விவகாரம் தவிர்த்து? 🙂 )

 7. ‘நீ ஏம்ப்பா உன் பெயர மாத்திக்கல?’

  ‘பாஸ்டன் பாலான்னு மாத்திட்டேனேம்மா’

  🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.