இயக்குநர்களுக்கு ஐடியா பஞ்சம். நாபிக்கமலத்தில் முட்டை தோசை, பம்பரம், விட்டபிறகு புதிய காட்சியமைப்புகளுக்காக சில யோசனைகள்.
- ஆண்களின் பார்வை அதிகமாக செல்லும் இடமாக தொப்புள் அமைகிறது. கண்களையும் முகத்தையும் பயோமெட்ரிக் சோதனை செய்யும் கருவிகளை தொப்புளில் அமைத்திருக்குமாறு காட்சி அமைக்கலாம். ‘புதிய முகம்’ மாதிரி செட்டப்பையும் கெட்டப்பையும் மாற்றிக் கொண்ட வில்லன் அல்லது ஹீரோ என்றால் சத்யராஜ், தொப்புளை பார்த்துவிட, உண்மையான அடையாளம் வெளிப்பட்டு விடும்.
சாதனங்களைப் பொருத்தும்போது மற்றும் நாயகன் நோக்கும்போது என்று எக்ஸ்ட்ரீம் க்ளோசப்கள் வைக்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.
- ஆப்பிளின் ஐ-பாட் கொடுக்கும் — முன்பு, பின்பு செல்லும் பொத்தான்களையும் சுழற்றல் விசைகளையும் நாயகியிடம் பொருத்தலாம். ரகசியமாய் பேச்சை பதிவு செய்வதற்கும், கவர்ச்சி நடனம் ஆடும்போது பின்னணி ஒலிக்கவும் பயன்படும்.
- ஒரு ‘நாவெல்’-இன் கதை. கதாநாயகியின் தொப்புள் அவலட்சணமாய் இருப்பதால், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய நாயகன் எண்ணுகிறான். ப்ளாஸ்டிக் சர்ஜெரிக்காக பணம் சேர்ப்பதற்கு கஷ்டப்படுவதை பார்த்து வருந்தும் ஹீரோயின், ஹீரோவின் தொப்புளையும் சிதைத்து அவளை மாதிரியே செய்து விடுகிறாள்.
- மனசாட்சி பேசுவது போல் தொப்புளுடன் தனிமையில் பேசும் பழக்கம் உடையவள் ஆகிறாள் நாயகி. ‘பிப்ரவர் 14’ படத்தில் பரத்துடன் உரையாடுவது போல் தன்னுடைய அந்தரங்கத் தோழியாக பாவித்து ஆலோசனைகள் பெறுபவளாக தொப்புளை படம் நெடுக பேசவைக்கலாம்.
- பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை தொப்புளை மூட மறந்து விடுவாள். இந்த வியாதிக்கு பெயர் ‘ஷார்ட் டேர்ம் சாரி லாஸ்’. இதை மூடுவதற்கென்று, மிடி, மினி ஸ்கர்ட், தாவணி, டேங்க்ஸ், டாப்ஸ் என்று விதவிதமாய் எடுத்த தொப்புள் புகைப்படங்களுடன் சுற்றுகிறாள். இந்த நிழற்படங்களை எடுத்தவனை கண்டுபிடிப்பதுதான் கதை.
- ரயிலில் ஒரு கொலை நிகழ்கிறது. அதைப் பார்த்த நேரடி சாட்சி ஒருத்தி, கொலையை செய்தவள் ஒரு பெண்மணி என்றும், அவளின் தொப்புளில் கடிகாரம் கட்டியிருப்பதாகவும், எங்கு பார்த்தாலும் தொப்புளை அடையாளம் காட்டக்கூடுமாக சொல்கிறாள். படம் நெடுக கொலைகளும், தொப்புள்களுமாக சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையறாவில் கொண்டு செல்லலாம்.
தொப்புளுக்குள் அணுகுண்டு வைத்துக் கடத்திக்கொண்டு போகும் த்ரில்லரை விட்டுவிட்டீர்களே? 😉
from boston to kollywood via a n(o)avel route :). BB are you really trying for a break in kollywood 🙂
தொப்புள் கதைகள் எனத் தனி புத்தகமே போடுவீர் போல.
:))
நடிகைகள் தொப்புள் அழகாகத் தெரிய (?!) தொப்புளுக்கு வெளியே உள்ள பகுதியெல்லாம் சிவந்த வெளுப்புடன் கூடிய வண்ணமும், தொப்புள் உள்ளே கறுப்பு வண்ணமும் அடித்துக் கொள்வதாக ஒரு சினிமா பத்திரிக்கையில் படித்தேன். அது உங்கள் இணைப்பு படத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கும்போது சட்டென விளங்கியது.
நன்றி.
:)))
–தொப்புளுக்குள் அணுகுண்டு —
உச்சகட்ட காட்சியிலும் வாய்ப்பு இருக்கா :-))
—are you really trying for a break in kollywood —
ஏதோ சார்… பி க்ரேட் பட அழைப்புதான் வரும் போலிருக்கு 😛
—உள்ளே கறுப்பு வண்ணமும்–
இது டிப்ஸ்! நன்றி 😉
மிக அருமை. தமிழ் இயக்குனர்களுக்கு நிறைய கிளு கிளுப்பான கதைகள் கிடைத்து விட்டன என்று எண்ணுகிறேன்.
இதனையும் அவற்றுடன் இணைக்கலாம்:
கதையின் நாயகி கடத்தல் கூட்டதிற்கு தலைவியாக இருக்கிறாள். அவளது கடத்தல் வழிமுறையே உச்சம். போதை பொருட்களை அவள் தனது தொப்புளில் மறைத்து கடத்துகிறாள். நாயகன் சுங்கத்துறை அதிகாரியாக இருக்கிறான். ஒருமுறை அவனிடம் நாயகி கடத்தல் பொருட்களுடன் பிடிபடுகிறாள். நாயகன் அவளை நீதியின் முன் நிறுத்துகிறான். அதனால் நாயகன் மீது நாயகி கோபம் கொள்கிறாள்.
பின்னொரு நாள் நாயகன், நாயகியை சந்தித்து தனது சூழ்நிலையை புரிய வைக்கிறான். பகை காதலாக மாறுகிறது. நாயகன், இவ்வளவு நாட்கள் கடத்தலுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த நாயகியின் தொப்புளில் ஆம்லெட் போட்டு டூயட் பாடுகிறான். படம் நிறைவடைகிறது.