Monthly Archives: நவம்பர் 2016

காஸ்ட்ரோ – அஞ்சலி

வாழ்க்கைக் குறிப்பு

முப்பத்திரண்டு வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ, க்யூபாவின் பிரதம மந்திரியானார். ஒரு நல்ல அரசாங்கத்தை நிறுவும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என 1959-இல் சபதம் எடுத்தவர், தன்னுடைய சொத்துக் குவிப்பு போலவே தாடியையும் வளர்த்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சைக்காக தாடியை மாக்-3 அமெரிக்க கத்தி பதம் பார்த்து விட, 76 வயது தாடியை விட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடிக்க, தன் தம்பிக்கு வழி விட்டார். அந்த 44 ஆண்டு ஆட்சியில், மக்களுக்கு நல்லாட்சி தராவிட்டாலும், உலகின் தலைபத்து பணக்காரத் தலைவர்களில் இடம்பிடித்தார். அவரின் சொத்துக் கணக்கு: பிடல் காஸ்ட்ரொ – ஜனாதிபதி – க்யூபா – $900 மில்லியன் (6,300 கோடி ரூபாய்) செல்வம் சேர்த்திருக்கிறார்.

fidel_castro_cartoon_wilted_flower_thought_socialism

பழைய பதிவுகளில் இருந்து

1. Anna Hazare and Fidel Castro: அன்னா ஹசாரேவும் பிடல் காஸ்ட்ரோவும் | ஒன்பது ஒப்பீடுகள்

2. ஃபிடல் காஸ்ட்ரோவின் நரபலிகள் ::

ஜனவரி 1, 1959 முதல் மார்ச் 15, 2005 வரை காஸ்ட்ரோ அரசினால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்

படை வீரர்களினால் சாகடிக்கப்பட்டவர்கள் (Firing squad executions)  5,640
சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்யப்பட்டவர்கள்  1,203
சிறைச்சாலை மரணங்கள்  2,199
காணாமல் போக்கப்பட்டவர்கள்     198
மொத்தம்  9,240
“Balseros” (கடல் வழியாக தப்பிக்கும் பொழுது உயிரிழந்தவர்கள்) 77,833
மொத்தம் 87,073

cuba_castro_fidel_communism_cartoons_comics_50

சுதந்திரமாக பணத்தைக் கொள்ளையடித்து அனுபவிக்கும் எல்லோருக்கும் பிடல் சார்பாக செவ்வணக்கம்!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

கடைசியாக இந்தப் படத்தை டெண்ட்கொட்டாய் உபயத்தில் பார்த்து முடித்தேன். இப்போது இது புத்தகமாக வந்திருக்கிறது.

%e0%ae%93%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81

புத்தகம் குறித்து தெரியவில்லை. படத்தை தயவுசெய்து பார்த்துவிடாதீர்கள். ஏன்?

1. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) – கருந்தேள் ராஜேஷ் | Karundhel.com

படத்தில் நடித்திருக்கும் மிஷ்கினின் கதாபாத்திரத்தின்மீதும் சரி, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் மேலும் சரி, முதல் பாதி முடியும்வரை எந்த அட்டாச்மெண்ட்டும் வரவில்லை. படத்தின் துவக்கத்திலேயே மிஷ்கினின் பாத்திரத்தைப்பற்றி போலீஸ் மூலமாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. கதையில் ஒரு சிறிய துணுக்காக, ஒரு சமூக விரோதிக்கு சிகிச்சை செய்து போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயின் கதை இருந்தாலும், அதனால்கூட அவர் பாத்திரத்தின் மேல் எந்தவித உணர்ச்சிகளும் வரவில்லை.

2. காட்சியாக சொல்லப்பட வேண்டிய கதை எல்லாம், கடைசி ஐந்து நிமிடத்தில் டெலி ப்ராம்ப்டரைப் பார்த்து படிக்கும் மிஷ்கினால் ஓவர் ஆக்ட் செய்யப்படுகிறது. கொடுமைடா சாமீ.

3. ‘முகமூடி’ எடுத்தவரின் அடுத்தகட்ட வீழ்ச்சியாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

4. ஒரு இயக்குனருக்கு தன் போதாமைகளும், அடுத்தவரின் திறமையை சிறப்பாக வெளிக்கொணரும் ஆளுமையும் இருக்கவேண்டும். இத்தனை திறமையான பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் மிஷ்கின் தான் மட்டுமே போதும் என்னும் அகங்காரத்தில் இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார்.

5. ரேப் சீன் வைத்தால் அதில் காமம் தலைதூக்கக் கூடாது. எண்பதுகள் வரை வந்த பெரும்பாலான தமிழ்ப்படங்களில் வல்லுறவு காட்சிகள் காதல் காட்சிகள் போல் படமாக்கப் பட்டிருக்கும். அந்த மாதிரி அந்த பிச்சைக்காரியின் லட்சணமான முகம் கூட இந்தப் படத்தில் பாவப்பட வைக்காமல், ‘குழந்தை விவாகம் செய்து கொண்டாளோ?’ என பிற எண்ணங்களில் பார்வையாளரை மூழ்கடிக்கிறது.

6. தயவுசெய்து இதை திரைப்பட விழாக்களிலோ, வெளிநாட்டினருக்கு தமிழ்ப்பட அறிமுகமாகவோ சொல்லிவிட வேண்டாம். டாகேஷி கிட்டானோ, டாரன்டினோ என்றெல்லாம் டகால்டி விட்டு என்ரான் போல் மோசடியாக சீட்டுக்கட்டு ராஜாக்களைக் கொண்ட கோலிவுட் என்று தப்பாகக் கருதி, மொத்த தமிழ் சினிமாவையும் எள்ளி நகையாடிவிடுவார்கள்

7. அரிதான விஷயங்களைப் பாராட்டினால் மட்டுமே நாம் நினைவில் நிற்போம். பலரும் தூற்றும் விஷயங்களை, நாமும் கிண்டலடித்து கீழே தள்ளினால், இலக்கிய விமர்சகராக மாட்டோம். ஜாய்ஸ் குறித்தும் எலியட் குறித்தும் ஹெமிங்வே குறித்தும் அறிய நாம் எட்மண்ட் வில்சனை நாடுகிறோம்; காஃப்காவைக் குறித்து ஆராயவேண்டுமானால் வில்சனைத் தொட மாட்டோம். என்றாலும், நாம் அனுபவித்த நரகத்தை இன்னொருவரும் அனுபவிக்கக்கூடாது என்பதால், இந்தப் படத்தைப் பாராட்டாதீர்கள் என்கிறேன்.

8. போரடிக்கும் படம் என்பதால் மட்டும் விமர்சிக்கவில்லை. வித்தியாசமான காட்சியமைப்புகள் என்பதால் மட்டும் நிலைக்கூடிய படமில்லை. மேஜிக் நிகழவேண்டும். ராஜா இருக்கிறார். பூடகமான சங்கதி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அசத்துகிறார். ஆனால், அவியலில் அவியல் சுவைக்க வேண்டும். இது லட்டுவும் பாகற்காயும் பீட்சாவும் போட்ட அவியல். சகிக்கவில்லை.

9. பாடல்கள் இல்லை. ஐட்டம் சாங் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. கூடவே படமும் படமாகவில்லை.

10. திரைப்படங்களில் லாஜிக் பார்ப்பவன் நானில்லை. ஆனால், அந்தந்தப் படங்களில் நம்பவியலாத விஷயங்கள் நம்பக்கூடிய முறையில் உருவாக்கப்பட வேண்டும். ’ஜோக்கர்’ படம் தலைப்பில் ஜோக்கடித்தாலும் படு சீரியசாக செல்லும்; ஆனால், இந்தப் படம் முழுக்க காமெடியாக எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஆதார முடிச்சான — மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்பு ஏன் தேவை?

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
பதிப்பாளர்: பேசாமொழி பதிப்பகம்
எழுதியவர்: திரைப்படத்தின் இயக்குநர் மிஷ்கின்
விலை: ரூ.600.00

சவரக்கத்தி படமாவது திருப்தி செய்ய வேண்டுகிறேன்.

%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf_chavara_kathi_savara_kathy

சவுதி அரேபியாவின் ஏற்றுமதி

mecca_holy_ruler_king_saudi_arabia_jeddah

வாட்ஸாப் தகவலாக இந்த துணுக்கு வந்திருந்தது:
கீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை.
1. சதுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால்
2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால்
3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால்
4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால்
5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்!

இதே போல்தான் சவுதி அரேபியா குறித்த எந்தத் தகவல் வந்தாலும் எல்லோருமே நகைச்சுவையாக புறந்தள்ளி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆயிரம் செய்திகள் இருந்தாலும் எடுத்துக்காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போம்: இரு டஜன் முஸ்லீம் குடும்பத்திற்காக ஆயிரக்கணக்கான வங்களிகளின் துர்கா பூஜை முடக்கப்பட்டது. (இந்தியா டுடே) ஜார்கண்ட் மாநில எல்லைக்கு அருகில் வங்காளத்தின் பிர்பூம் (Birbhum) மாவட்டத்தில் கங்லாபஹரி (Kanglapahari) கிராமம் இருக்கிறது. இங்கே நான்கு ஆண்டுகளாக நவராத்திரியை முன்னிட்டு கொண்டாடப்படும் துர்கா பூஜா நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே நிரந்தரமாக கட்டப்பட்ட கோவில் கூட கிடையாது. சும்மா நாலு பந்தக்கால் நட்டு ஒரு திருவிழா நடத்த முடியாமல், தங்கள் பண்டிகையை சகஜமாக அனுசரிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். சிலருக்காக பலரின் பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படுகின்றன. அதே சமயம் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் பலருக்காக, சிலரின் எல்லா வாழ்க்கைமுறையும் மாற்றி வைக்கப்படுகின்றன.

durga_puja_half_done_bengal_festival_unfinished-idols

பாதி முடித்த நிலையில் முடங்கி நிற்கும் துர்கா பூஜை சிலைகள்

இதுவோ இந்தியாவில் நடக்கும் செய்தி. இதற்கும் சவுதி அரேபியாவிற்கும் என்ன சம்பந்தம்?

2050ல் உலகத்தில் மிக அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ம் நாடு எதுவென்று கேட்டால், அது ”இந்தியா” என்னும் விடையாக இருக்கும். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 350 மில்லியன் இந்தியர்களாக அப்போது உயர்ந்து இருக்கும். எண்ணிக்கையில் அதிகம் இருப்போரை வஹாபியர்களாக மாற்ற சவூதி எல்லா ஏற்பாடுகளையும் இப்பொழுதில் இருந்தே நிறைவேற்றி வருகிறது. இஸ்லாமிய சட்டப்படி (ஷரியா) முஸ்லீம் அல்லாதவர்கள் திம்மிக்கள் (இரண்டாம் தர குடிமக்கள்). திம்மிகளுக்கென்று ஜிசியா வரி விதித்து அவர்களை அச்சுறுத்தி வைக்க வேண்டும். மாட்டையும் சூரியனையும் சந்திரனையும் பின்பற்றுவர்களைக் காஃபிர் எனக் கருதிக் கொல்ல வேண்டும் என்பது ஐஸிஸ் அறிக்கை. (ஃபர்ஸ்ட்போஸ்ட்)

  • 13ஆம் நூற்றாண்டில் உலகத்தின் உச்சமாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தில் புத்த பிட்சுக்களையும் அங்கிருந்த ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மூன்று மாதமாக சிரமமெடுத்து எரித்தவர்களுக்கு இந்த மாதிரி காரியங்கள் எம்மாத்திரம்?
  • 250 ஆண்டு கால மொகல் ஆட்சியில் தற்போது அமைதிப்ப்புறாக்கள் என சொல்லப்படும் அக்பரும் அவரின் பேரன் காதல் பேரரசர் ஷாஜஹானும் எண்பது மில்லியன் இந்தியர்களைக் கொன்றார்கள். மொகலாயர்கள் இடித்துக் குவித்த கலைப் பொக்கிஷங்களையும், அமைதி என்னும் பெயரில் அவுரங்கசீப் நடத்திய கொன்றொழிப்புகளையும் போல் இன்னொன்றை தடுப்பது எம்மாத்திரம்?
  • இன்றைய பாரதத்தில் 840 மில்லியன் இந்துக்கள் இருக்கிறார்கள். அகண்ட பாரதத்தில் (இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில்) 502 மில்லியன் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டு துவங்கும்வரை ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லாத இந்த தேசத்தில் எப்படி இவ்வளவு பேரை மாற்றினார்கள்? எவ்வளவு இந்துக்களைக் கொன்று குவித்தார்கள்? அதேபோல் மற்றுமொன்றை நடத்த ஐம்பதாண்டுகளாகமுஸ்தீபுகள் தொடங்கிவிட்டன
  • தங்களுடைய சொந்தங்களைக் கொல்வதில் முன்னணியில் நிற்பவர்கள் வெறியூட்டப்பட்ட இஸ்லாமியர்கள். உலகில் நடக்கும் 91% ஆணவக்கொலைகளுக்கு முஸ்லீம் சமூகமே மூலக்காரணியாக இருக்கிறது. மதமாற்றத்திற்காக இந்தச் செய்கை நீளாது என்பது எம்மாத்திரம்?

உங்களிடம் யாராவது சவுதி அரேபியா எதை ஏற்றுமதி செய்கிறது என்று கேட்டால் “எண்ணெய்” என்று விடை சொல்லிவிட்டு பெருமிதமாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வீர்கள். ஆனால், சவுதியின் மிகப் பெரிய ஏற்றுமதி என்பது இஸ்லாமில் வஹாபியிஸத்தை உலகெங்கும் நிலைநாட்டுவது மட்டும்தான். அதற்கு கச்சா எண்ணெய் என்பது சில்லறை வியாபாரம். ஐஸிஸ், அல் க்வெய்தா, தாலிபான் என்பதெல்லாம் கிளை நிறுவனங்கள்.

பாகிஸ்தானில் மட்டும் 24,000 மதராஸாக்களை துவக்கி நடத்த சவுதி அரேபியா முடுக்கி விட்டிருக்கிறது. (எகனாமிக் டைம்ஸ்) இந்தப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கு இரண்டே இலக்கணம்:

அ) வஹாபி அல்லாதவர்கள் மீது வெறுப்பு வரவழைப்பது
ஆ) தீவிரவாதிகளை உருவாக்குவது

இந்த 24,000 மதராஸா பள்ளிகளில் ஆயிரக்கணக்கானோர் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஒரே ஒரு குழந்தையை மட்டும் பார்ப்போம்: பதினைந்து வயதே ஆன சிறுவன் தன் கையை தானே வெட்டிக் கொண்ட சம்பவத்தை பிபிசி பதிவு செய்திருக்கிறது. இறைத்தூதரின் பிறந்தநாளைக் கொண்டாட மசூதிக்கு சென்றிருக்கிறான்.

மதபோதகர் கேள்விகளால், பார்வையாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். “உங்களில் யார் நபியின் வழி செல்கிறீர்கள்?”. எல்லோரும் கை தூக்குகிறார்கள்.

“உங்களில் யார் நபியின் போதனைகளை நம்பவில்லை” என்று கேட்டதற்கு தூக்கக்கலக்கத்தில் கையை உயர்த்திவிடுகிறான். நூற்றுக்கணக்கானோர் அவனைப் பார்வையால் அவமானப்படுத்துகின்றனர். எள்ளி நகையாடுகின்றனர். கூனிக்குறுகி தன்னுடைய கையை அறுத்துவிட்டான்.

1956-ல் வெறும் 244 மதராஸாக்கள் மட்டுமே பாகிஸ்தானில் இயங்கி வந்தன. இன்று இவை கிட்டத்தட்ட நூறு மடங்கு பல்கிப் பெருகியுள்ளன. ஒரு ஒப்புமைக்கு ஜனத்தொகைப் பெருக்கத்தை கணக்கெடுத்துப் பார்ப்போம். 1950களில் 244 மதராஸாக்கள் நாற்பது மில்லியன் மக்களை சென்றடைந்தது. இன்று இது நான்கு மடங்காக 160 மில்லியன் பாகிஸ்தானியர்களாக மக்கள்தொகை உள்ளது. மக்கள்தொகை நான்கு மடங்கேப் பெருகியிருந்தாலும், மதராஸா போதனை மற்றும் மூளைச்சலவை மையங்கள் மட்டும் நூறு மடங்காக உயர்ந்துள்ளது. இப்பொழுதெல்லாம் கணினியிலும் இந்தக் கொலை பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.

இன்னொரு ஒப்புமையைப் பார்ப்போம். 1920 முதல் 1991 முடிய கம்யூனிஸக் கொள்கைகளைப் பரப்ப வெறும் ஏழு பில்லியன் டாலர்களை அன்றைய சோவியத் ரஷியா செலவழித்துள்ளது. ஆனால், 1960களில் மட்டும் நூறு பில்லியன் டாலர்களை வஹாபி மற்றும் சலாஃபியிஸ இஸ்லாமியக் கொள்கைகளை நடைமுறையாக்க சவுதி அரேபியா செலவழிக்கிறது. செலவு என்பதை விட அழிக்கிறது என்னும் வார்த்தை இங்கே பொருள்படுகிறது.

24000_madrassas_saudi_wahabbism_pakistan

இது பாகிஸ்தானில்தானே? அங்கே இருந்து வரும் தீவிரவாதிகளைதான் தடுத்துவிடுகிறோமே? இந்தியாவில் என்ன பிரச்சினை?

காஷ்மீரில் நடப்பவை வெளிச்சம் காண்கின்றன. ஆனால், உத்தர பிரதேசத்திலும் கர்னாடகாவின் ஷிமோகாவிலும் நடப்பதில் ஒன்றிரண்டை என்.டி.டிவி இங்கே விவரிக்கிறது. என்.ஜி.ஓ.க்களில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் அவர்களை சரிவர கண்காணிக்க முடியாத சூழலையும் இந்தக் கட்டுரை வெளிச்சத்தில் கொணர்ந்தது: வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள் – ஆர்.வைத்தியநாதன். அதன் நீட்சியாக எண்டிடிவி செய்திக்கட்டுரையை வாசிக்கலாம்.

சவுதியில் இருந்து சென்ற வருடங்களில் மட்டும் 55 கோடிகள் உத்தர பிரதேச மசூதிகளுக்கு வந்து சேருகின்றன.
1) ஷியா பிரிவினரை ஒடுக்குவது,
2) சலாஃபி பிரிவு இஸ்லாமை முன்னிறுத்துவது,
3) இந்திய முஸ்லீம்களின் சூஃபி பிரிவை நசுக்குவது
என்று பலவழியில் இதை பிரச்சாரகர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இங்கே நன்கொடை அள்ளிவழங்கும் அந்த அல் ஃபரூக் (Al Farooq) குழுமத்தின் மூலகர்த்தா உலக இயக்கங்களினால் தீவிரவாதி என தேடப்படுபவர். ஷேக் ஈத் பின் மொகம்மது அல் தானி அறநல நிறுவனம் (Sheikh Eid Bin Mohammad Al Thani Charitable Association) அல் க்வெய்தாவுடன் பயங்கரவாதத்தை வளர்த்தற்காக தடை செய்யப்பட்டிருக்கிறது.

அமீரகத்தில் (எமிரேட்ஸ் – ஷார்ஜா, அபுதாபி) இருந்தும், கத்தாரில் இருந்தும் குவைத்தில் இருந்தும் இதே போல் பணம் குவிகிறது. இவர்கள் இஸ்லாமிய மரபுவழி மீட்டுயிர்ப்பு சங்கத்தை (Revival of Islamic Heritage Society) சேர்ந்தவர்கள். நிறுவனங்களைத் துவக்கியவரின் முகவரியை ஆராய்ந்தால் அல் குவெய்தாவில் போய் முடிகிறது. அமெரிக்க நிதித்துறையினால் நிரூபணமாகி தலைமறைவாய் இயங்கும் அங்கத்தினர்களைக் கொண்டு தீவிரவாதத்தை எண்ணெய் ஊற்றி வளர்க்கும் இன்னொரு தொண்டு நிறுவனமாக இது இருக்கிறது.

இதே போல் இன்னொரு அமைப்பு உலக முஸ்லீம் லீக் (Muslim World League). இவர்களினால் ரபிதா நம்பிக்கை நிதியம் (Rabita Trust) இயக்கப்படுகிறது. இந்த நிதியம் கொண்டுதான் 9/11 உலக வர்த்தக மையத் தாக்குதல்கள் முடிக்கப்பட்டன. இந்த அமைப்பின் துவக்கத்தில் இருந்து உயிர்நாடியாக செயல்படும் ஜுலய்தான் (Wa’el Hamza Julaidan) என்பவரை 9/11 தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா தேடி வருகிறது. இவர்கள் ஷிமோகா மாவட்டத்திற்கு மட்டும் 38 கோடிகளைக் கொடுத்து மதராஸாக்களை சவுதி பீரங்கியாக செயல்பட வைக்கிறார்கள்.

இவர்கள்:
1. மதீனத் அல் – அலூம் கல்வி அறக்கட்டளை – Madeenath Ul-Uloom Education Trust
2. ரபியா பஸ்ரி ரஹமத் – உல்லா – ஹி – அல்லாயாஹ் நன்கொடை அறக்கட்டளை – Rabiya Basri Rahamat-Ulla-Hi-Allayha Charitable Trust
3. சதியா கல்வி மற்றும் நன்கொடை அறக்கட்டளை – Sadiya Educational and Charitable Trust

அப்படி இந்த சலாஃபியிஸத்தினால் என்னதான் சிக்கல் வரப்போகிறது?

ஒரு நாட்டினரை இன அழித்தொழிப்பில் இரக்கமின்றி செலுத்த ஹிட்லருக்கு நாஜியிஸம் உதவியது. அவ்வாறே, ஒரு மதத்தை தீவிரவாத இயக்கமாக எப்படி மாற்றலாம் என்பதற்கு சலாஃபியஸம் உதவுகிறது.

உதாரணமாக டெல்லியில் இருந்து வெளியாகும் நயி துனியா (புதிய உலகம் – Nai Duniya) என்னும் வாரப்பத்திரிகையைப் பார்ப்போம். இதில் நஸீம் ஹிஜஸி என்பவரின் தொடர் வெளியாகிறது. தொடரின் பெயர் – அவுர் தல்வார் டூட் கயீ (அதன் பிறகு கத்தி உடைந்தது). இந்தத் தொடரைப் படித்தால் எவ்வாறு இந்திய முஸ்லீம்களை வெறியூட்டி, எழுத்தின் மூலம், படித்தவர்களையும் ஜிஹாத் மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம் என்பது புலனாகும். இது சலாஃபியிஸம். இதே பத்திரிகை தன்னுடைய பிரத்தியேக செய்தியாக, புலனாய்வு அறிவிப்பாக இந்தக் கற்பனையை அதிகாரபூர்வமாகச் சொல்கிறது: ‘நம் புனித நகரமான மெக்காவின் மீது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குண்டு வீசி அழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்’. இது சலாஃபியஸப் பிரச்சாரம்.

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு வீரவணக்கம் செய்யச் சொல்வது சலாஃபியஸம். பேச்சினால் வாதத்தை எதிர்கொள்ளாமல், மாற்றத்தினால் மதக் கொள்கைகளை தற்காலத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளாமல், கற்கால வழக்கங்களிக்ல் தேங்கிப் போய் பேராசிரியர் டி. ஜே ஜோசஃபின் கையை வெட்டுவது சலாஃபியிஸம்.

இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் தலையாயவன என்று நான்கைச் சொல்லலாம். அரசியல் மற்றும் தத்துவ இஸ்லாம் ஒரு முக்கிய அங்கம். தனி நபர் முனைப்பெடுத்து முன்னெடுத்த தீவிர சமயப் பிரச்சாரம் இன்னும் இரண்டு உண்டு. நான்காம் பிரிவாக ஜிஹாதி இஸ்லாம். இவற்றையெல்லாம் கலந்தால் தற்கால சலாஃபியஸம் கிடைக்கும். அரசியலிலும் ஈடுபட முடியும். அதே சமயம் சக முஸ்லீம்களிடம் கூட சண்டை போட்டு கொலைகளும் செய்ய முடியும். புனிதப் போர் தொடுத்து அதில் தற்கொலை தீவிரவாதமும் அரங்கேற்ற முடியும். போருக்குப் பின் நடந்த அழிவில் நற்பணி அறக்கட்டளையும் நடத்த முடியும். இது இன்றைய சிரியா போன்ற நாடுகளில் இஸ்லாமை முன்னகர்த்தும் சலாஃபியஸ அணுகுமுறை.

சவூதி அரேபியாவிற்கு எவ்வாறு இப்படி நூறு மில்லியன் டாலர்களை அள்ளிவிட முடிகிறது? எப்படி அதை நிறுத்தலாம்?

saudi_ndtv_india_uttar_pradesh_karnataka_funding_isis_islam_muslim_ngo_madrasas

அடுத்த பகுதியில் பார்ப்போம்.

முந்தைய பதிவு: கச்சா எண்ணெய்யும் கசக்கிப் பிழியும் அரேபியாவும்

வலம் – பத்திரிகை

valam_vinayaga_murugan’வலம்’ என்னும் பெயரில் விநாயக முருகன், நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அகராதியில், இந்த பொருள்கள் இருக்கின்றன:

வலம்

  1. சூழ்போதல்: To go round from left to right, as in temple; வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).
  2. பரிவேட்டி: Circumambulation from left to right; வலம் வருகை. தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத். உலா, 93).
  3. முழுவலயம்: prob. id. + வலம். Victory; வென்றி. (யாழ். அக.); வெற்றி. மணவாள ருடனே வழக்காடி வலது பெற்றேன் (அருட்பா, vi, தலைவிவருந். 12). 3. Skill;
  4. வலக்கட்டாயம்: Compulsion, force; பலவந்தம்.
  5. வலக்காரம்: Right hand; சிறுவலக்காரங் கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227).
  6. வலங்கொள்ளுதல்: To win a victory; வெற்றி யடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8).–tr. 1. See வலம்வா-. கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்
  7. வலப்பாரிசம்: 1. Army; சேனை. (W.) 2. Strength, power; வலி.
  8. வலம்படுதல்: 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one’s path from left to right; இடப்பக்கத்தி லிருந்து
  9. வலவன்: Capable man; சமர்த்தன்.
  10. வலக்காரம்: Falsehood; பொய். (நாமதீப. 655.); வலனாக வினையென்று (கலித். 35).; மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).

இவ்வளவு அர்த்தங்களும் சொல்லிவிட்டு அராபிய மொழி விளக்கத்தை விட்டுவிடலாமா?

By Allah (Arabic: Wallah, وَٱللّٰه) is an Arabic expression meaning “[I promise] by God” used to make a promise or express great credibility on an expression. It is considered a sin among Muslims to use this phrase and follow it up with a lie.

எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

பொருள்: எவனுடைய பெயருடன் வானத்திலும் பூமியிலும் எவ்வித தீங்கும் ஏற்படாதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் பெயரால் துதிக்கிறேன். அவன் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்:

valam_1_tamil_magazine_right_rounds

 

இதழைக் குறித்த எண்ணங்களைப் பதிவு செய்து வைக்கலாம். உள்ளடகத்தில் படித்த மட்டும்:

  1. கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்
    • இந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது. கொஞ்சம் சிந்திக்கவும் கற்றுத் தருகிறது. சுருக்கப்பட்ட வடிவம் என்கிறார்கள் – அந்த மாதிரி கத்திரி போட்டதே தெரியாமல் செய்ததற்கு வலம் ஆசிரியர் குழுவைப் பாராட்டலாம். ஆனால், ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை, மீண்டும் அச்சில் ஏற்றாமல் அடுத்த இதழ்களில் இருந்து புதியதாக மட்டுமே தரப் பார்க்கலாம்.
  2. நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
    • போன கட்டுரை — எடிட்டிங் நல்ல முறையில் தொகுப்பதற்கான அத்தாட்சி என்றால், இந்தக் கட்டுரை மோசமான முறையில் வெட்டுவதற்கான அத்தாட்சி. குதறியிருக்கிறார்கள்.
  3. வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சிசொல்வனம் ரவிஷங்கர்
    • சிறப்பான கட்டுரை. நான் முப்பது பைசா (அமெரிக்க டாலர் மதிப்பில்) போட்டு  இந்த நூலை வாசித்தேன். கொடுத்த பணத்திற்கு நல்ல வரும்படி என்று இதைக் கொணர்ந்ததற்கே சொல்லி விடலாம். அவசியம் வாசிக்கப் பட வேண்டிய எண்ணங்கள்
  4. மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
    • சமகால வரலாற்றை சொல்லியிருக்கிறார். என்னைக் கவரவில்லை. ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமான விஷயம் என்பதால் போரடித்தது ஒரு பக்கம். இணையத்து நடை என்பதும் சிறு பத்திரிகையின் காத்திரத்தன்மைக்கு சற்றே பத்தரை மாற்றுத் தங்கம் குறைந்து,  ‘குங்குமம்’ சுஜாதா கட்டுரை போல் இருந்ததும் இன்னொரு பக்கம் அலுக்க வைக்கிறது.
  5. இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? லக்ஷ்மணப் பெருமாள்
    • இன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் குவிமையத்தை நோக்கி விரிவான வாதங்களை வைத்தும் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை. தகவல்களும் அலைபாய்வுகளும் கவனத்தை சிதறடிக்கின்றன
  6. அருகி வரும் யானைகள்பி.ஆர்.ஹரன்
  7. மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு
    • ஒரு கட்டுரைக்கு ஒரேயொரு இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் போன்ற சாதாரணர்களின் சிந்தையில் தெளிவாகப் பதியும். எடுத்த காரியத்தை பொருத்தமான குறிப்புகளோடு கில்லியாகக் குறி பார்த்து சஞ்சலமின்றி எடுத்துரைக்கும் பாங்கும் சமகால எம்.ஜி.ஆர் போன்றோரோடு ஒப்பிடும் பார்வைகளும் – அபாரம். கடந்த இரண்டு/மூன்று கட்டுரைகள் படித்து கடுப்பான சமயத்தில், ‘பத்திரிகை பரவாயில்லை!’ என்று சொல்லவைக்கும் பதிப்பு.
  8. பழைய பாடல் (சிறுகதை) – சுகா
    • ஆப்பிள் மாக்புக் என்னும் கணினியையும் விண்டோஸ் கணினியையும் ஒப்பிட்டால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சொல்லப் போனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணிபுத்தகங்கள் கொடுக்கப்படும் விலைக்கும் அதன் தரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், சல்லிசாக இருக்கும். அந்த மாதிரி வலம் இதழை சடாரென்று ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து அறிமுகம் செய்வது மாதிரி சுகா ஜ்வலிக்கிறார். கதாபாத்திரங்களின் கச்சிதமான அறிமுகம் முதல் உலா வரும் மாந்தர்களை கனவிலும் நிழலாட வைக்கும் சாதுர்யமான செதுக்கல் வரை – எல்லாமே அக்மார்க் எழுத்தாளரின் முத்திரை. இவரை படித்த பிறகு நூலை மூடிவைத்துவிட்டேன். பாக்கியை இன்னொரு நாள்தான் படிக்கணும்.
  9. ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
  10. காந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்
  11. சிவன்முறுவல் (கலை) – ர. கோபு
  12. சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா
  13. கனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.

valam-october-2016_first_issue_tamil_vesaa_venkat_saminathan_images_opening_special

saroja_valam_mag

 

ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்

அக்னி: மனித குலத்துக்கும் இறை உலகுக்குமான இணைப்பாக செயல்படும் தன்மை. அக்னி சத்தியத்தின் குறியீடும் கூட. அக்னி நீரில் இருப்பதாகக் கூறும் வேத உருவகத்தை எடுத்துக் கொள்ளலாம். மிக எளிமையாக இது சூரியன் உதித்து வரும் காட்சி எனக் கொள்ள முடியும். இரவில் சூரியன் நீரில் வசிப்பதாக எளிய மனம் உருவகப்படுத்துவதன் விளைவாக இருக்கலாம். ஆனால் நீர் என்பது புராதன தொன்ம உருவாக்கத்தில் ஆதி-ஒழுங்கின்மையின் குறியீடு. ஆதி ஒழுங்கின்மைக்குள் இருக்கும் சிருஷ்டி ஆற்றலினை உருவகப்படுத்த தொல்-கவிகள் பயன்படுத்திய ஒரு உருவகமாக அது வளர்கிறது. அக்னி பிறகு அனைத்து படைப்பாக்க செயலுக்குமான குறியீடாக வளர்கிறது.

ஆழி பெரிது!

anee_visit1

முதன் முதலாக எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனை சந்திக்க ஆயத்தமான போது வந்த வழக்கம் இது. இன்னாரை நேரில் கண்டு உரையாடப் போகிறோம் என்றால், அவர்களின் எழுத்தில் மூழ்கி அமிழ்தலைத் துவங்குவேன். ஒருவரைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தால் ஒரு வாரத்திற்குள் அவரின் பெரும்பாலான புத்தகங்களையும், இணையத்தில் எழுதிக் குவித்ததையும், விமர்சனங்களையும், வம்புகளையும் படித்து முடித்துவிடுவேன். ஒருமுறை பிரும்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் முடியையும் காலையும் பார்ப்பதற்கு முயற்சி செய்தபோது அதில் சிவபெருமானின் தலையை பிரும்மா பார்த்து விட்டதாக பிரம்மாவிற்காக பொய் சாட்சி கூறிய தாழம்பூ கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த மாதிரி தாழம்பூ எதுவும் கிடைக்காததால் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று எழுதிக் குவித்த வஸ்தாதுகளைக் கூட இந்த சட்டகத்தினுள் அடக்கி, ஒரு பருந்துப் பார்வை பார்த்து, அந்த ஒரு துளி அரிசியில் இருந்து முழு சோறும் எப்படி வெந்து இருக்கும் என்பதை உணர்ந்தாவது விடுவேன்.

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பாள் ஔவை. பதினைந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட புறத்திரட்டு நூலில் இறைமாட்சி அதிகாரத்துக்கு அடுத்த இடத்தில் கல்வியை வைத்துள்ளனர். ‘விளக்கை விலை கொடுத்துக் கொள்வார்கள். ஆனால், என்ன பொருளைக் கொடுத்தும் இருளைக் கொள்ளமாட்டார்கள்’ என்கிறது பழமொழி நானூறு. ”கல்வி கரை இல, கற்பவர் நாள் சில” என்பது நாலடியார்.

‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்கிறது புறநானூறு.

முழுப்பாடலின் பொருள்: ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட குலத்தாருள்ளும் கீழ்க்குலத்தில் உள்ள ஒருவர் கல்வி கற்றவராக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவர் அவரிடம் (கல்வி கற்கச்) செல்வார்.
எட்டுத்திக்கும் வழிகாட்டி கட்டுரையில் நாஞ்சில் நாடன்

எல்லோருக்கும் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று உணரும் நேரம் வரும். அது அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா வருகிறார் என்றவுடன், அவரின் எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவும் தேடவும் அவர் கொடுக்கும் மேலதிக விபரங்களுக்குக்கான குறிப்புகளின் ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதிலும் நேரம் செலவிட ஆரம்பித்தவுடன் ‘கற்றது ஒரு விரலின் நகமே உள்ளது; கல்லாதது இந்த புவனம்’ என்று புரியும் தருணம் வந்தது.

அரவிந்தன் நீலகண்டனுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களையும் கருத்துலக மோதல்களையும் ரத்தபீஜன் எனலாம். தன் மாமன்மார்களைக் கொன்றவர்களைப் பழி தீர்த்தே தீருவேன் என்று பெரும் அசுர சேனையுடன் வந்தவன் இரத்த பீஜன். இன்றைய ரத்தபீஜர்கள் தங்கள் சொந்தங்களை கபளீகரம் செய்ய சீனாவில் இருந்து இறக்குமதியான சித்தாந்தங்களோடும், சவுதியில் இருந்து வரும் பணவளத்துடனும் நம்மை நசுக்க ஊடகபலத்துடனும் விளம்பரவுலகின் பீடங்களுடனும் வருகிறார்கள். சப்தமாதர் படை அவனுடன் போரிட்டது. ஆனால், அவனை அவர்களால் வெல்ல முடியவில்லை. காரணம் அவன் பெற்றிருந்த ஒரு விசித்திரமான வரம்.

வரத்தின்படி ரத்தபீஜன் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் பூமியில் சிந்தினாலும் அந்த ரத்தத்திலிருந்து ஆயிரம் ரத்தபீஜரர்கள் தோன்றி அவனுக்குத் துணையாகப் போராடுவார்கள்! இந்த ஆயிரக்கணக்கான குட்டி ரத்தபீஜனை வெட்டவெட்ட அவன் உடலிலிருந்து ரத்தம் வழிந்து பூமியில் சொட்ட, சொட்ட, ஆயிரம் ஆயிரமாய் லட்சக்கணக்கில் ரத்தபீஜன்கள் தோன்றி சப்தமாதர் படைகளை துவம்சம் செய்தனர். அப்போது அம்பிகை வெகுண்டு எழுந்தாள். உடனே தன் தோளிலிருந்து மகா உக்கிரம் பொருந்திய அரவிந்தன் நீலகண்டனைத் தோற்றுவித்து ‘ஏ அநீ! நீ சென்று அந்த ரத்தபீஜனை வெட்டி சாய். அப்போது அவர்கள் இடமிருந்து வெளிப்படும் கோடிக்கணக்கான பொய்களையும் புரட்டுகளையும் போலி வார்த்தைகளையும் துளிக்கூட பூமியில் சிந்தாமல் உன் கைகளால் ஏந்தி மூளையாலும் செயலாற்றாலும் சிந்தனைத் திறமையாலும் வாதவலிமையாலும் குடித்து விடு!’ என்று ஆணையிட்டு இருக்கிறார். அரவிந்தனும் பல்லாயிரம் கரம் கொண்டு பலகோடி புத்தகங்களின் சாறு பிழிந்து மொழி வலிமையோடு எல்லா ஊடகங்களிலும், அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஒவ்வொரு அசுரனாய் கட்டுடைக்கிறார்.

anee_visit2

அவர் சென்ற வாரம் பாஸ்டன் பக்கம் வந்திருந்தார். ஓட்டுநராக சில மணி நேரம் அவருடன் பயணிக்க முடிந்தது. லட்சோபலட்சம் நூல்கள் குவிந்து இருப்பதில் இருந்து நவரத்தினங்களை கண்டுபிடிப்பதைப் பார்த்து பொறாமைப்பட முடிந்தது. நான் நேம் டிராப்பிங் வித்தகன். ஆனால், அநீ, பெயர்களை மட்டும் சொல்வதில்லை. அந்தந்தப் பெயர்களின் ஆராய்ச்சிகளைச் சொல்கிறார். அவர்களின் போதாமைகளை எவ்வாறு கண்டுணர முடிகிறது என்று விளக்குகிறார். வனூச்சி, பேபிஎஸ் ஹால்டேன் என்றெல்லாம் பெயர் விழுந்தவுடன் பதின்ம வயதில் ஃபோர்ட்ரான், பாஸ்கல், கோபால், சி++ என்று நிரலி மொழிகளைக் கண்ட அச்சம் எழுந்தது. ‘இதெல்லாம் குறித்து நான் எழுதியிருக்கிறேனே! அதையெல்லாம் நீங்கள் வாசித்ததில்லையா?’ என்றபொழுது ஃபேஸ்புக்கில் வெட்டியாக கழித்த நேரங்கள் நிழலாடின.

மிக முக்கியமாக, இந்தப் பெயர்களை இந்தியச் சிந்தனையாளர்களுடன் இணைக்கிறார். மேற்கத்திய தத்துவத்தையும், அயல்நாட்டு புரிதலையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதை ஸ்ரீ அரவிந்தருடனும், அம்பேத்காருடனும், பி.ஸ்ரீ.யுடனும், விவேகானந்தருடனும், காந்தியுடனும், பாரதியுடனும், சித்தர்கள் மரபிலிருந்தும் எவ்வாறு ஒருங்கிணைப்பது, அவர்களின் சிந்தையில் இருந்து எப்படி இதை நோக்குவது என்பதையும் உணர்த்துகிறார். அவருடன் உரையாடியவர்கள் சொன்ன ஆராய்ச்சியாளர்களையும் விவரித்த கருத்தாளர்களையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரைக்கு கொஞ்சம் கனம் கிடைக்கும். அதை விட அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதை கர்மசிரத்தையாக வாசித்தால் நம் அறிதல் முறையில் தெளிவு கிடைக்கும்.

நாகர்கோவில்காரர்களின் தமிழை முதல் முதலாகக் கல்லூரியில்தான் கேட்கப் பெற்றேன். அவர்களின் தமிழைக் கேட்டபோது மையை அச்சுத்தாளில் தெறித்தது போல் பரபரப்பு தெரிந்தது. சாலையில் கார்கள் விரைந்து கொண்டிருந்தாலும், எந்தவித அவசரமுமின்றி, தன் பாட்டுக்கு சாலையின் எதிர்ப்பக்கம் செல்லத் துணியும் அணிலைக் கண்டிருப்பீர்கள். அது கொஞ்சம் மெள்ள நடக்கும். இரண்டடி எடுத்துவைத்தபின் பின் வாங்கும். அதன் பின் மீண்டும் நான்கடி தவழும். சாலையைக் கடப்பதற்குள் ஏதோவொரு காரில் அடிபடுவதற்கான சகல விஷயங்களையும் மிக மெதுவாக மேற்கொள்ளும். இதற்கு நாகர்கோவில்காரர்கள் நேர் எதிர். படபடவென்று பாய்வார்கள். வந்த காரியத்தை முடிப்பார்கள். அரவிந்தன் நாகர்கோவில்காரர். இன்க் ஜெட் அச்சுப்பொறி என்பது மைத்தாரையாகக் கொட்டும். இவரின் பேனாவும் கணிவிசைப்பொறியும் சிந்தைகளாகப் பொழிகிறது. மை தெளிப்பு பதிப்பு எத்திரம் எவ்வாறு பல்வேறு நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் மூலமாக அண்டத்தில் உள்ள 64 கோடி வண்ணங்களை உருவாக்குகிறதோ அரவிந்தனும் அவ்வாறே அறிவியலும் வரலாறும் சமூகவியலும் கொண்டு உலகத்தின் அத்தனை விஷயங்களின் வண்ணங்களையும் சுட்டுகிறார். பீடத்தில் இருந்து கொண்டு உரையாடலில் ஈடுபடாமல், இதுதான் என் இறுதி வாக்கு என்று அறைகூவாமல், தன்னோடு பேச அனைவரையும் ஆதுரமாக வரவேற்று தொடர்ச்சியாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தன்னடக்கத்தோடு தன் தரப்பை தெளிவாக சாமனியனுக்கு விளங்க வைத்துக் கொண்டே தடிமனான நூல்களையும் எழுதித் தள்ளுகிறார்.

ஒரு நூலின் தரம் என்பது என்னைப் பொருத்த மட்டிலும் இரண்டு விஷயங்களில் அடங்கி இருக்கிறது. ஒருவர் எத்துணை வெளிப்படையாக எங்கேயிருந்து தன் எழுத்திற்கு ஆதாரங்களும் தன்னுடைய நூலுக்கு மேற்கோள்களும் பெறப்பட்டிருக்கின்றன என்பதை வெளிப்படையாக புத்தகத்திலேயே குறிப்பிடுவது அதில் முதன்மையானது. இந்திய அறிதல்முறைகள் நூலின் இறுதிப் பக்கங்களில் நூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட உசாத்துணை புத்தகங்களையும் அந்தப் புத்தகங்களில் எந்த இடங்கள் தன் கருத்திற்கு வலிமை சேர்க்கின்றன என்பது குறித்தும் துணைப்பட்டியலை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இரண்டாவதாக இப்படி 150+ நூல்களை மேற்கோள்களாகச் சொல்லும் எழுத்துக்களில் ஒரு பேராசிரிய அணுக்கமின்மை வந்துவிடும். அத்துணை ஆராய்ச்சிகளை உட்கொண்டதாலோ அல்லது அந்த மாதிரி ஆராய்ச்சியாளர்களுக்காக எழுதுவதாலோ, அவர்களின் எழுத்து உட்புக முடியாததாக வாசித்துப் புரிந்துகொள்ளவியலாத நிலையில் வந்து நிற்கும். இந்தப் பிரச்சினை இல்லாமல், அதே சமயம் வாசகனை விகடன் போல் பேதையும் ஆக்காமல், சரிநிகராக வைத்து தோல்மேல் கைபோட்டு விளக்குகிறார் அரவிந்தன். அவரின் எழுத்து உள்வாங்கியதை திறம்படத் தொகுத்து, இந்தியச் சூழலுக்கு அந்தக் கருத்தாக்கத்தை உணர்ந்து விவரிக்கிறது.

சென்ற வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகளுக்கானப் படங்களின் பரிந்துரைப் பட்டியலைப் பார்ப்போம். பிக் ஷார்ட் என்பது பொருளாதாரக் கொள்கை குறித்தும் நிதியியல் குறித்தும் பேசும் படம். பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் என்பது இரண்டாம் உலக்ப் போரின் எச்சங்களாக விளைந்த பனிப்போர் குறித்தும் யூதர்கள் குறித்தும் அவர்களின் அறம் குறித்தும் பேசும் படம். ப்ரூக்ளின் என்பது வந்தேறிகள் குறித்தும் அயல்நாட்டில் குடிபுகும் ஏழைப் பெண்ணின் நிலை குறித்தும் பேசும் படம். இவற்றில் இருந்து மேட் மாக்ஸ் என்பது முற்றிலும் வித்தியாசப்படுகிறது: அது போர் குறித்தும் அறிபுனை கற்பனை குறித்தும் வருங்கால உலகம் குறித்தும் சிந்திக்கிறது. மார்ஷியன் என்பது முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமாக நம்பவியலா விஷயங்களை எளிமையாக விளக்கி செவ்வாய் கிரகப் பயணம் குறித்து புனைகிறது. ரிவெனண்ட் என்பது அமெரிக்காவில் மூதாதையரான பழங்குடி இந்தியர் குறித்தும் அவர்களை மேற்கத்தியர் எவ்வாறு ஆக்கிரமித்தனர் என்பது குறித்தும் நிஜத்தை நாடகமாக்குகிறது. ரூம் என்பது சிறைவைக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. இறுதியாக ’ஸ்பாட்லைட்’: கிறித்துவ பாதிரியார்கள் எவ்வாறு சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு ஆக்கினார்கள் என்பதையும் அவ்வாறு கீழ்த்தரமான செய்கையில் ஈடுபட்டாலும் சட்டத்தின் பிடியில் இருந்து எவ்வாறு தப்பிக்க வைக்கப்பட்டார்கள் என்பதையும் இதில் வாடிகன் பாப்பரசர் எவ்வாறு நேரடியாக சம்பந்தப்பட்டு குழந்தைகளை வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்பதையும் பாஸ்டன் க்ளோப் நாளிதழில் நிஜத்தில் நடந்த துப்புதுலக்கலைச் சொல்கிறது.

இவற்றுக்கும் அரவிந்தன் நீலகண்டனுக்கும் என்ன சம்பந்தம்?

இத்தனை படங்களையும் ஒரே நூலில் ஒரே ஆசிரியர் எழுதிப் படித்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘ஆழி பெரிது’ அல்லது ‘இந்திய அறிதல்முறைகள்’. ஆயிரம் சிந்தை கொண்டிருந்தாலும் கவனம் சிதறாமல் ஒரு தலைப்பில் ஒரு அத்தியாயத்தில் இந்த மாதிரி முக்கியமான பலதரப்பட்ட விஷயங்களை வெறுமனே மொழிபெயர்த்து வாந்தியெடுக்காமல் தன் புரிதலின் மூலமும் தன்னுடைய சுய அறிதலின் மூலமும் பாரதவாசிகளுக்கு ஏற்ற மாதிரி பக்குவமாக எடுத்து எழுதுகிறார். அது வீடியோ கேமாக இருக்கட்டும்; செயற்கை அறிவை கணினியில் நுழைப்பதாக இருக்கட்டும்; முப்பரிமாண அச்சு இயந்திரமாக இருக்கட்டும்; கொல்லும் ரோபோவாக இருக்கட்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகட்டும்; இராட்சத யந்திரம் கொண்டு கண்காணிப்பு ஆகட்டும் – இதெல்லாம் குறித்து உங்களை யோசிக்க வைக்க உங்கள் எண்ணங்களைக் கிளற ஒருவர் தேவை என்றால் மட்டுமே நீங்கள் அரவிந்தனை வாசிக்க வேண்டும்.

’ஒற்றைப் பரிமாண மனிதன்’ என்னும் நூலில் மார்க்சிய அறிஞர் மார்க்கியூஸ் இவ்வாறு எழுதுகிறார்:

நாம் அன்னியப்பட்டு இருக்கிறோம். முழுக்க முழுக்க அடிமைத்தனத்தில் மூழுகியிருக்கிறோம். ஒரு பொருளாக மாறிவிட்டோம். கருவியாக செயல்படுகிறோம். நாம் புத்திசாலியாக இருந்தாலும் ஒன்றையும் உணர்வதில்லை. பேருரைக்கும் செயலாற்றலுக்கும் வித்தியாசம் தெரியாமல் நம் சௌகரியங்களில் திளைத்து மூழ்குகிறோம்.

அதில் ஒற்றைப் பரிமாணத்தில் எல்லாவற்றையும் பார்ப்பதை ப்ளாட்டோவின் வழி வந்த மார்க்ஸின் அடிச்சுவட்டில் பயணித்த மார்குஸ் சாடியிருந்தார். இன்று அரவிந்தன் நீலகண்டன், அதே வழியில் அறிவியலின் தத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். மொழியியலின் தத்துவத்தை நுணுக்கி ஆராய்கிறார். தத்துவ ஆராய்ச்சியின் தன்மையையே திறனாய்வு செய்து தருகிறார். சமூக அறிவியலை கண் திறந்து பார்க்க வழிகாட்டுகிறார். முதலியம் ஆகட்டும்; மார்க்ஸியம் ஆகட்டும்; இந்துத்துவம் ஆகட்டும் – குதிரைக்கண் போல் எல்லாபக்கமும் பார்த்து, திரைகளை விலக்குகிறார். கலை, கவிதை, இலக்கியம் என எல்லாவற்றையும் திறந்த மனத்தோடு அணுகக் கோருகிறார். உணர்வதை யோசிக்கவும், யோசித்ததை உரையாடவும், உரையாடியதை செயல்படுத்தவும் அழைக்கிறார். கனவுகளைக் கற்பனையாக்கி, கற்பனைகளுக்கு செயல்பாதை அமைக்க வழியமைக்கச் சொல்கிறார். விளம்பரங்களினால் கட்டமைக்கப்படும் உலகு என்பது ஒன்று. நம் மொழியினாலும் பகுத்தறிவினாலும் கட்டமைக்கப்பட வேண்டிய உலகு மற்றொன்றாக இருக்கிறது. உங்கள் புத்திக்கு உரைப்பட்டதை திறம்பட எடுத்துரைக்க ஆயிரம் அரவிந்தன்கள் தோன்ற வேண்டும்.

மேற்கோளோடு ஆரம்பித்த குறிப்பை மேற்கோளோடு முடிக்கிறேன்:

ஃப்ரான்சுவா மௌரியாக் (François Mauriac) சொல்கிறார்:

ஆள் அரவமற்ற அனாதரவான அரண்மனைகளைப் போன்று பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். அதன் அரசர்கள் மூளையின் ஒருசில அறைகளை மட்டுமே உபயோகிப்பார். அந்த பெரிய அரசவையின் பல்வேறு பாதைகளையும் இருப்பிடங்களையும் மூடிவைத்து தன் இறக்கைகளை விரிக்க துணியார்.

அரவிந்தன் நீலகண்டன் வல்லாளகண்டர். அவர் மூளை என்பது மாட மாளிகை என்றால் சிந்தை என்னும் அரசவை கொண்டு அதன் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆலாலம் உணர்த்தி உங்களுடைய குச்சில் வீட்டை கூட திறக்கவைப்பார்.

வாழ்க்கைக் குறிப்பு
அரவிந்தன் நீலகண்டன், நாகர்கோயிலைச் சேர்ந்தவர். உளவியலிலும் பொருளியலிலும் பட்டம் பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் களப்பணியாளராக சேவை செய்கிறார். நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர். சமூகவியல், அறிவியல், இந்துமதம், வரலாறு, உளவியல், சூழலியல் ஆகிய பன்முகப்பட்ட துறைகளிலும் ஆழ்ந்த வாசிப்பும், புலமையும் கொண்டவர். அரசியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருவதுடன், அறிவியல், தத்துவம், சூழலியல், வரலாறு, சமூகவியல், திரைப்படம், ஆன்மிகம் சார்ந்து நானூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். நாளைய தலைமுறைக்கான தேவைகளை உணர்ந்து தனது எழுத்துகள் மூலம் ஒரு மௌனமான தனிநபர்ப் போராட்டத்தை இடைவிடாது மேற்கொண்டு வருபவர். ராஜீவ் மல்ஹோத்திராவுடன் இணைந்து இவர் எழுதிய “உடையும் இந்தியா?” உலகளாவிய அரசியல் சித்தாந்தங்களால் இந்தியாவிற்கு நேரிடும் அபாயங்களைக் குறித்த ஆதாரபூர்வமான விவாதத்தை முன்வைத்ததது. மனைவி பான்ஷியா நீலகண்டன். மூன்று குழந்தைகள்.

அநீ.யைக் குறித்து பாரா
நாகர்கோயிலில் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மாடியில் ஒரு பெரிய ஹாலின் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். மூச்சடைத்துவிட்டது. தமிழகத்தின் எந்த ஒரு அரசு / தனியார் நூலகத்தில் உள்ள சிறந்த நூல்களின் சேகரத்தைக் காட்டிலும் அரவிந்தனின் நூலகம் சிறப்பானது என்று தயங்காமல் சொல்லுவேன். புராதனமான அறிவியல் பத்திரிகைகளின் தொகுப்புகள், என்சைக்ளோபீடியா வால்யூம்கள், ஹிந்துத்துவ, இஸ்லாமிய, கிறித்தவச் சிந்தனையாளர்களின் புத்தகங்கள், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் [நல்லவேளை, கவிதைத் தொகுப்புகள் கண்ணில் படவில்லை], வேளாண்மை தொடர்பான நூல்கள், மானுடவியல், வரலாறு, விஞ்ஞானம் என்று துறை வாரியாகப் புத்தகங்கள். தன் வாழ்நாள் சம்பாத்தியம் முழுதையும் ஒருவர் புத்தகங்கள் வாங்க மட்டுமே செலவிட்டாலொழிய அப்படியொரு நூலகம் அமைப்பது அசாத்தியம்.

ஒரு சார்லஸ் பேபேஜ் காலத்து கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு அத்தைப்பாட்டி பாக்கு இடிப்பது மாதிரி டைப் செய்துகொண்டும் வாசித்துக்கொண்டும் இடையிடையே போன் பேசிக்கொண்டும் இருந்தார்.

அரவிந்தன், இந்தத் தலைமுறையின் மிக முக்கியமானதொரு சிந்தனையாளர். புத்தி விருத்தியில் நாட்டமுள்ளவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய எழுத்தாளர்.

அவர் எழுத்துகளை வாசிக்க:
1. சொல்வனம்

2. தமிழ் பேப்பர்

3. வலைப்பதிவுகள்:

4. தினமணி ஜங்ஷன் :: அறிதலின் எல்லையில்

5. ஜெயமோகன் தளம்

6. திண்ணை

7. ஸ்வராஜ்யா (ஆங்கிலம்)

8. சூத்ர ஜர்னல் (ஆங்கிலம்)

9. தமிழ் ஹிந்து

10. ஹிந்துத்துவ சிறுகதைகள்

11. சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி

12. விவேகானந்தம் 150

நூல்கள்

aravindhan_neelakandan_nilakandan_aravithan_books

  1. கடவுளும் நாற்பது ஹெர்ட்ஸும், அறிவியல் கட்டுரைகள், தமிழினி பதிப்பகம், 2004
  2. The Wonder Fern Azolla, டாக்டர். கமலாசனன் பிள்ளையுடன் இணைந்து எழுதிய கையேடு, தமிழ், ஆங்கிலம், இந்தி, விவேகானந்த கேந்திர வெளியீடு, 2009
  3. ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம், இந்துத்துவ பதிப்பகம் 2010
  4. நம்பக்கூடாத கடவுள், கட்டுரைத் தொகுப்பு, கிழக்குப் பதிப்பகம், 2010
  5. சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம், ஜடாயு, பனித்துளி ஆகியோருடன் இணைந்து எழுதியது, இந்துத்துவ பதிப்பகம், 2010
  6. உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அன்னியத் தலையீடுகளும், ராஜீவ் மல்ஹோத்ராவுடன் இணைந்து எழுதியது., கிழக்குப் பதிப்பகம், 2011 (Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines by Rajiv Malhotra, Aravindan Neelakandan):

    இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர்.

  7. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம், கிழக்கு பதிப்பகம், 2012
  8. ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா), மதி நிலையம், 2014
  9. நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர், கிழக்கு பதிப்பகம், 2014
  10. கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம், மதி நிலையம், 2014
  11. இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள; சாந்தினிதேவி ராமசாமியுடன் இணைந்து எழுதியது., கிழக்கு பதிப்பகம், 2016 – ரா.கிரிதரனின் அறிமுகம்