-
-
அண்மைய பதிவுகள்
- மந்திரவாதியும் மணி ரத்தினமும் – பொன்னியின் செல்வன் இரண்டு
- வனபோசனம்
- சொல்வனம் 294ம் இதழ்
- ஆத்தி… இது வாத்துக் கூட்டம்!
- பொன்னியின் செல்வன் – இரண்டாம் பாகம்
- புதிய தமிழ்க் கதைகள் – 293
- சிறார் கதைகளும் ஆன்மிகமும் சற்றே ஜோதிடமும் – ஆர். பொன்னம்மாள்
- சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்
- Solvanam Stories – 292nd Issue
- Invitation: Articles for Solvanam
- Tamil Podcasts: Novels, Classics and Literature for Listening
- பேட்ட (அ) பட்டினம்
- கல்கி: பொன்னியின் செல்வன் 2
- மயில்சாமி – அஞ்சலி
- மிகவானுள் எரி தோன்றினும் குளமீனொடுந் தாட்புகையினும்
காப்பகம்
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி
- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை
- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Monthly Archives: மே 2004
ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)
நந்தினி காரை கிளப்பின போது காலை ஐந்து மணி இருக்கும். நான் பல சமயங்களில் தூங்க ஆரம்பிக்கும் நேரம் அது. அன்று, நான்கு மணிக்கு அலாரம் அடிப்பதற்கு அரை மணி முன்பே எழுந்து, அவளையும் எழுப்பிவிட்டேன். அவ்வளவு ஆவலும் எங்களது கல்லூரிக்கு ஒரு புனித யாத்திரை செய்யத்தான்.
அமெரிக்காவில் இருந்து நான் வருவதற்கு பல மாதங்கள் முன்பே ஒரு மெல்லிய இழையில் ஆரம்பித்த திட்டம். பல ஈமெயில்களுக்குப் பிறகு செயல் வடிவம் பெற்று, இப்பொழுது ஆறு மணி தூரத்தில் இருக்கிறது.
நந்தினியின் கணவரும் எங்களுக்கு நல்ல ஊக்கமாக இருந்தார். எங்களுடன் வாருங்களேன் என்ற அழைப்பையும் மறுத்து விட்டார். அவரும், என் குடும்பமும் வந்திருந்தால் இது ஒரு வழக்கமான சுற்றுலாவாக இருந்திருக்கும். இப்போது இந்த பயணத்தின் நோக்கமே வேறாகிப் போனது.
கடந்த இளமையை மீண்டும் சுவாசிக்கப் போகிறோம். இருந்த இடங்களில் மீண்டும் தொலைந்து போகப் போகிறோம். இனிமையான, வருத்தமான, வழக்கமான நினைவுகளில் உலா வரப் போகிறோம். வெறுமனே அசை போடாமல் இளமைக்குத் திரும்பப் போகிறோம்.
நந்தினி கல்லூரி காலத்தில் எங்களுக்குப் பிடித்த “சின்ன சின்ன ஆசை”யைப் போட்டு விட்டிருந்தாள். எதிர்காலம் என்னவென்று தெரியாத கல்லூரி காலம் போன்ற டில்லியின் முன்பனி, சாலையையும் சூரியனையும் காணாமல் செய்திருந்தது.
“நந்து… மஹேனும் பத்மாவும் ஒரே இடத்தில் வேலைக்கு சேர்ந்தார்களே? கல்யாணம் ஆயிடுத்தா?”
“ரெண்டு பேரும் சேர்ந்து கம்பெனி ஆரம்பிச்சுட்டா. உனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் ஆள் தேவைன்னா சொல்லுபா. அவங்ககிட்ட கேக்கலாம்”.
ரமேஷின் பி.எச்டி. எங்கு உள்ளது, கீர்த்தி தேர்தலில் நிற்கிறானா, அடுல் கிரிக்கெட் அணியில் இருக்கின்றானா என்று எங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பேசுவதே காலை உணவாகிப் பசியாற வைத்தது.
நந்தினியின் கணவன் போட்ட ஸ்டார்பக்ஸ்ஸை மிஞ்சும் காபி குடித்துக் கொண்டே ரெஹ்மானிடமிருந்து “உன்னை நான் அறிவேன்… எனையன்றி யார் அறிவார்” ராஜாவுக்கு மாற்றி விட்டேன்.
கல்லூரியில் செய்வதற்கு நந்தினி பத்து அம்ச திட்டம் வைத்து இருந்தாள். அதில் நாகர்ஜியின் பெட்டிக்கடையில் ‘ரப்ரி’ சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தது. வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி ஒட்டகத்துப் பாலில் போட்டுத் தருவார். பரிட்சை பேப்பர் தந்த சோகத்தையும், கவுன்சிலில் சுட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தையும் தூக்கி எறிய சரியான மருந்து அது. கூடவே சமோஸாவும் கிடைத்தால் சொர்க்கம் வசப்படும். எனக்கு இப்போது செரிக்குமா என்று ஒரு பயம் எட்டி பார்த்தது.
“ஆட்டமா.. தேரோட்டமா” என்று ராஜா அதிரடி செய்து கொண்டிருந்தார். பஜார் தெருவில் ‘பான்ங்’ அடிக்க வேண்டும். கிடைக்காவிட்டால் பியராவது குடிக்க வேண்டும். மீரா பவன் என்னும் பெண்கள் விடுதிக்குள் சென்று ஜென்ம சாபல்யம் அடைய வேண்டும். எங்களுடைய பத்து அம்சத் திட்டத்தில் நிறையவே பொருத்தம்.
“புது ரூட்டுலதான்” என்ற ராஜாவின் அரசாட்சியில் மெய்மறந்து, செய்து பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் அலசி முடிப்பதற்குள் காவிக்கொடித் தாங்கிய பலகை எங்களை கல்லூரி வளாகத்திற்கு வரவேற்றது.
நாங்கள் மட்டும் மாறவில்லை. எங்களுடைய கல்லூரியும் உரு மாறி இருந்தது. பத்து அம்ச திட்டத்தில் பல நிறைவேற்ற முடியாது. ராஜஸ்தானில் மதுவிலக்குக் கிடையாது. அதற்குள் இருக்கும் எங்கள் கல்லூரி ஊரில் பியரும் கிடைக்காது; ‘பான்ங்’கும் கிடைக்கவில்லை. வகுப்புகளில் எங்கள் நினைவுகளை ஆரம்பித்தோம்.
“ஹேய் நந்து… இங்கேதான் முதல் முதலாக உன்னை ஃப்ரெண்ட் பிடிச்சேன்”?
“ஆமாண்டா… பக்கத்தில் உட்கார்ந்து நல்லா உரசுவே”.
“போடீ… மூணு பேர் பெஞ்சியில், அஞ்சு பேர் உட்கார்ந்தா அப்படித்தான்”.
இருவருக்கும் நல்ல பசி. முதல் ஆர்வம் தீர்ந்து விட்டதால் வயிறு நினைவூட்ட ஆரம்பித்தது. நேராக கடைத்தெருவுக்கு வந்தோம். பல தெரிந்த உணவு விடுதிகள் மறைந்து STD/ISD/PCO க்களும், Xerox கடைகளும் நிறைந்து இருந்தது.
தப்பித்த உணவு விடுதிக்குள் புகுந்து, மெனுவில் ஆறு வித்தியாசங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.
“இங்கேதான் என்னுடைய வாழ்நாள்லேயே முதன்முதலாக பிறந்த தின கேக் வெட்ட வெச்சேடா. ரொம்ப தாங்க்ஸ்பா”!
“நான் என்ன செஞ்சேன் நந்து? எல்லாம் தீபாவோட ப்ளான். ‘பம்ஸ்’ கொடுத்தது மட்டும் என்னோட திட்டம்.”
“உன்னை பலி போடணும்டா… எவ்வளவு வலி தெரியுமா? அடுத்த நாள் பரிட்சைக்கு உட்காரவும் முடியாம… ஆம்பிளைகளுக்கு ஏன்தான் அடி உதையிலேயே புத்தி போகுதோ”?
நல்ல சாப்பாடு முடித்துவிட்டு, ஒவ்வொரு மெஸ்ஸாக நுழைந்து கிளம்பினோம். பெரிதாக ஆச்சரியப்படுத்தாத அதே திங்கட்கிழமை மெனு. கூப்பிட்ட குரலுக்கு சப்பாத்தியும் சப்ஜியும் கொணர்ந்த அதே சிப்பந்திகள். அதே நாவில் வைக்க முடியாத சுவை. இருந்தாலும் இப்போது எங்களுக்கு சுவைத்தது.
அடுத்து ஆசிரியர்களைத் தேடிப் பயணம். அப்படியே மாலைக்கு ஓடிப் போனது நேரம். சரஸ்வதி கோவிலின் ஐந்தரை மணி தீபாராதனை தவற விடக் கூடாது. செமஸ்டர் ஆரம்பத்திலும், இறுதியிலும் கூட்டம் அதிகம். நாங்கள் சென்ற போது பலர் கண்ணை மூடிக்கொண்டும், சிலர் கண்ணை மூடாமல் புது வரவுகளையும் வேண்டிக்கொண்டார்கள். குளிர்ந்தாலும் புல்வெளியில் அமர்ந்தோம். ஆங்கிலம் தெரியாதவர்களும் நயாகராவை ரசிப்பது போல புரியாத மொழியில் பாடப்பட்ட பஜன்களில் ஆழ்ந்து போனாள்.
“நந்து… மூன்றாவது வருஷக் கடைசியில் இங்கே உட்கார்ந்து விக்கி விக்கி அழுதது ஞாபகம் இருக்கா”?
“அது எப்படிடா மறக்க முடியும். அன்னிக்குத்தான் நீ வெளுத்து வாங்கினியே. ஊர் ஆயிரம் சொல்லும். ஆனால், நம்ம மனசுக்கு சரின்னு பட்டா எது வேணும்னா செய்யலாம். கழுதை மேல் போனவன் கதையா உலகத்துக்குப் பலவிதமான எண்ணங்கள், கருத்துக்கள். எல்லாவற்றையும் காதுல வாங்கிட்டு, முடிவை மட்டும் நாமதான் சிந்திச்சு எடுக்கணும்னு ஒரு பெரிய அட்வைஸ் இல்ல கொடுத்தே”?
“ஆமாம்பா.. என்னென்னவோ உளறிண்டு இருந்தேன் அன்று. நம்ம நட்பைக் காதலா கொச்சைப்படுத்திட்டாங்க. இன்னும் சில பேரு அவளோட எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கேன்னு கேட்டதுதான் என்னோட கோபத்தைக் கிளறிவிட்டது”.
“அது தேவலையே. கலைவிழாவில உன்னோட ரூம்மேட் ஜனா, தண்ணியப் போட்டுட்டு வந்து, அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்; சொல்ல தில் இல்லை; அதான் நான் உடைக்கிறேன்ன போது நானே நம்பிட்டேன்”!
“அப்போ உன்கிட்ட உண்மைய விளக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு”.
நன்கு இருட்டியிருந்தது. எங்களின் விருந்தினர் மாளிகைக்குத் திரும்ப ஆரம்பித்தோம். அங்கேயே சாப்பிட்டு, சீக்கிரமாய் தூங்கி, காலையில் டில்லி திரும்பலாம் என்பதுதான் திட்டம். ரொம்ப நாளாய் பார்க்காத சந்திரன். முக்கால்தான் இருந்தார். இருந்தாலும் பௌர்ணமி போல் தோன்றியது எனக்கு. மெள்ளக் கையைக் கோர்த்து கொண்டு “பெஹ்லா நஷா…” பாடிக்கொண்டே வந்து சேர்ந்தோம்.
“டேய்… நான் குளிச்சுட்டு வந்துடறேன். கார்த்தாலே டைம் இருக்காது” என்று நந்து புகுந்து விட்டாள். ஆண்கள் சோம்பிக்காமல் டிவி சேனல் மாற்றுவது போல பெண்கள் அனைவருமே குளியலறையில் நேரம் செலவழிக்கிறார்கள்.
கல்லூரியின் பழைய செய்தித்தாள்களை அழகாக அடுக்கி இருந்தார்கள். பல வழக்கமான நிகழ்வுகள். புரட்டியதில் பெண்களின் கூடைப்பந்தாட்டம்தான் விளையாட்டு விழாவில் அதிகம் பேர் நுழைவு சீட்டு வாங்கிய நிகழ்ச்சி என்றிருந்தார்கள். ஒரு பெண், ஆண்கள் விடுதியில் மாட்டிக் கொண்டு நீக்கப்பட்டது செய்தியாக மிரட்டியது. கலைவிழாவில் கல்லூரிக்கு விடுமுறை அளிக்காதது பற்றி முறையிட்டிருந்தார்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் இந்த செய்திகள் மாறுமா என்பது சந்தேகமே.
நந்தினி நைட்டியில் தூங்கி இருந்தாள். எனக்கும் காலையில் விழித்தது, கண்ணை சொக்கியது. விளக்கை அணைத்து, மனைவி இல்லாத ஒருத்தியுடன், ஒரே கட்டிலில் முதல் முறையாக படுக்கை. கண்ணை மூடிக் கையைப் போட்டேன். அவளின் போர்வைக்குள் நுழைந்தபோது விளக்கைப் போட்டாள் நந்தினி.
“கிளம்பலாமா? இப்பவே கிளம்பினா நாளைக்கு என் அச்வினை வகுப்புக்கு வழியனுப்பலாம்”.
தூக்கம் கலைந்து எழுந்த நான் “டைம் என்னாச்சு?” என்று கேட்டு பதில் வராமல் இரண்டு அடித்து பத்து மணித்துளிகள் என்று அறிந்தபோது சூரிதாருக்கு மாறி இருந்தாள்.
“தோழா…தோழா… தோள் கொடு தோழா”வை கத்தவிட்டு உள்ளூர் தேனீரோடு வண்டியைக் கிளப்பினாள்.
“நந்து ‘ரோஜாக்கூட்டம்’ பார்த்தியா? தமிழ் சங்கத்தில் போட்டார்களா”?
“இல்லேப்பா… நான் ‘ஃபைவ் ஸ்டார்’தான் லயிச்சு பார்த்த கடைசிப் படம்”.
அதன் பிறகு நான் தூங்கி போனேன். அவள் விழித்திருந்து என்னை மீண்டும் டெல்லியில் ‘கந்தர் சஷ்டி கவச’த்துடன் நுழைத்தாள்.
-பாலாஜி
பாஸ்டன் – (ஃபெப். – 2 – 2003)
Posted in Uncategorized
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
- விடுமுறை: அமெரிக்காவில் போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூறும் தினம். அதை முன்னிட்டு புத்தாண்டுக்குப் பிறகு முதல் விடுமுறை. இந்தியாவாக இருந்தால் பொங்கல், சுதந்திர தினம், அம்பேத்கார் நாள், குரு கோபிந்த் பிறந்த நாள், மே தினம் என்று சன் டிவியும் இன்ன பிற நிகழ்ச்சிகளும் களிக்கலாம். ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பதால், இங்கு ஊர் சுற்ற கிளம்புகிறோம். சூது என்னைக் கவ்வியதா… நான் சூதை கவ்வவிட்டேனா என்பதை லாஸ் வேகாசில் இருந்து திரும்பிய பிறகு சொல்கிறேன்.
- வலைப்பதிவில்லையேல் வாழ்க்கையில்லை: திருமண நாளைக் கொண்டாட சென்ற விடுமுறையில் கூட பலரும் ஆர்வமாக வலைப்பதிவதை இன்றைய நியு யார்க் டைம்ஸ் அலசுகிறது. சில வித்தியாசமான பதிவுகளை அறிமுகம் செய்தும், குணாதிசங்களை நினைவுகூர்ந்தும் வழக்கமானவற்றை எழுதியிருக்கிறார்கள். வலைப்பதிவாளர் ஒருவர் சொல்வது போல் கிட்டத்தட்ட போதை பழக்கம்தானா இதுவும்?
- அவசியமில்லாத தகவல்: Trisha’s official tamil site என்று தேடினால் தலை பத்தில் என்னுடைய இங்கிலிஷ் பதிவு வருகிறது.
- கண்டுக்கினாங்க: இன்னொருவர் ஏதோ நல்லா இருக்குப்பா என்று சொல்லும்போது வரும் சந்தோஷமே தனி. அப்படி இவர் சொன்னதும் மகிழ்ச்சி பிறந்தது.
- ஏக் நஜர்: 7-G ரெயின்போ காலனி பாடல்கள் பிடித்திருந்தது. அது குறித்து கச்சிதமான விமர்சனம் + அறிமுகம் பார்த்தேன். ட்ரெயிலர் பார்க்க சினிசவுத் போகலாம்.
- விகடன் கிசுகிசு: மிஸ்டர் மியாவ்: தெலுங்கிலும் தமிழிலுமாகத் தயாரான அந்தப் ‘புது’ப் படம் முதலில் தெலுங்கில் ரிலீஸானது. அங்கே எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால் கொஞ்சம் கலங்கிப் போனாராம் பிரகாசமான டைரக்டர்.. ஆனால், தமிழில் படம் தப்புப் பண்ணாது என்ற பேச்சு இருப்பதால் தெம்பாக இருக்கிறார். (சிம்ரன் நடிச்ச கடைசிப் படம் என்பதால் மக்கள் அனைவரும் கனிவோடு விமர்சிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்)
- சியாமளன் மேட்டர்: 1978 முதல் மே மாதம் ஆசியர்களின் மாதமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Black History Month-க்காக சிறப்புத் திரைப்படங்கள், பேட்டிகள், குறும்படங்கள், துணுக்கு செய்திகள் என்று கலக்கும் தொலைகாட்சிகள் ‘Crouching Tiger…’ஐக் கூட உலகத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக்கவில்லை.
- நிரபராதிகள் மேல் அபாண்டம்: குற்றமற்ற வினிதாவின் மேல் போலிப் புகார் தொடுத்ததாக தீர்ப்பு வந்திருக்கிறது. காவல்துறையை கண்டித்த முக்கியமான விஷயத்தை குறித்து யாருமே வலைப்பதியவில்லை.
- மலரோடு மலர் இங்கு…: ‘பம்பாய்’ படம் போல் தோன்றினாலும் ஒன்பது வருட காத்திருப்புக்குப் பிறகு உஜாலாவும் ஆசாத்தும் மணமுடித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒருபால் திருமணத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். இந்தியாவிலோ இன்னும் இரு பால் திருமணமே ததிங்கிணத்தோம் போடுகிறது. அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் பிபிசியில், இந்த நிகழ்ச்சி எப்போது வரும்?
- ஒளியிலே தெரிவது?: தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், சென்னை-மைலாப்பூரில் இருபத்தி நான்கு மணி நேரமாக மின்சாரம் இல்லாததை அறிவிக்காமலும் எப்பொழுது வரும் என்பதை தெரிவிக்காமலும் உள்ளது. பாவம்… இற்றைப்படுத்துவதற்கு அவர்களுக்கும் மின்சாரம் இல்லையோ… என்னவோ?
Posted in Uncategorized
ரசிக்கும் எழுத்துக்கள்
- பூக்கடை காவல் நிலையம் துவங்கி, துறைமுகம் வரையிலான முதலாளி மீனாட்சி சுந்தரத்தின் சமஸ்தானத்தில் வீசும் காற்று, அடிக்கும் வெயிலில் நேரும் மாறுதல்கள் கூட அவர் கவனத்திலிருந்து பிசகாது.
- கஸ்டம்ஸ்காரனை சமாளிச்சிடலாம்; கட்டினவ பிராண்டி எடுத்துருவா. பேரின்பம் வேணும்னா பெண்ணாசையை விடுன்னு சொல்வாங்க இல்ல? நா சொல்றேன், சிற்றின்பம் வேணும்னாலும் பெண்ணாசை கூடாது.
- கடவுளை வணங்கலாமே தவிர, புரிஞ்சிக்க முயற்சி பண்ணக் கூடாதுடா!
- கசாப்புக் கடை பக்கம் ஐயமாரு வூடு கட்னாலும் காலு எது, ஈரல் எதுன்னு கவுச்சு திங்கறவனுக்குத்தானேடா தெரியும்!
- சுவாரசியமாடா முக்கியம்? சில்லறைதான் முக்கியம்! சில்லறைதான் சுவாரசியம் தர்ற விஷயம். சில்லறை கிடைக்கிற எல்லா தொழிலும் சுவாரசியமானதுதான்.
- யார் நிஜ முதலாளிகள் என்று யாருக்குமே தெரியாது.
- பசி, தாகம், புரட்சி. இது மூணும் இல்லாத மனுஷனே கிடையாது.
- எப்பவுமே கீழ்மட்டத் தொடர்புகளை விட்றாம வெச்சிருக்கணும்; அதே சமயம், மேல்மட்டக் காரியங்களையும் கவனமா முடிக்கணும்!
- பணக்காரர்களின் காசையெல்லாம் ஹார்ட் அட்டாக் வடிவத்தில் கறந்து விடுவது என்று கலி புருஷன் முடிவு செய்து விட்டானோ?
- செய்வதெல்லாம் குற்றம்தான். எனினும், அதைக்கூட ஒரு கலை உணர்வுடன் ரசிக்கிற லாகவம். தன்னை மாதிரி எத்தனை குற்ற நாட்டுகளை நட்டு, நீரூற்றி வளர்த்து வாழ வைக்கிறார்.
- ஃபுல் டைம் பொறுக்கியானாலும் பாசம் மறந்துடுமாடா?
- பெற்றவர்கள் எதிர்பார்ப்பது காசை மட்டும் அல்ல என்பது அவன் அறியாததல்ல. ஆனாலும், அதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்து விட முடியாது என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது.
- எவனோ ஒருத்தன் நமக்கு வேலை தரான். நமக்குத் தெரிஞ்ச வேலை. நம்ம திறமைக்கேத்த கூலி அதுல கிடைக்கப் போகுது. அவ்ளோதானே? அது அமைச்சரா இருந்தா என்ன? எம்.எல்.ஏ.,வா இருந்தா என்னா? அட, பாகிஸ்தான்காரனாவே இருந்தாத்தான் என்ன?
- தொழில் சற்று வளர்ந்தால் இன்னும் ஆள் எடுத்துக் கொள்ளலாம். பர்மா பஜாரில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற விஷயம் அது ஒன்றுதான்.
- குரு ப்ரம்மா, குரு விஷ்ணு… அப்புறம் என்ன? என்னமோ இழவு… சினிமாவில் பார்த்தது, மறந்து விட்டது.
- இந்த விஷயம் உண்மையாயிருக்கும் பட்சத்தில் ஓர் ஆறுதலும் நிம்மதியும் கிடைக்கக்கூடும். கோப வெறிக்கு ஒரு குறுக்கு வடிகால், குரூரத்தின் இயற்கை வெளிப்பாடு.
- சே! ஒரு நிமிஷத்துக்கும் அடுத்த நிமிஷத்துக்கும் எத்தனை பெரிய நிம்மதி வித்தியாசம்!
தூணிலும் இருப்பான் – பா. ராகவன்
சபரி / ரு. 55
Posted in Uncategorized