சுய சோதனை

இணையத்தில் பரிச்சயமான ஒருத்தர் எனக்காக ஸ்பெஷலாக மூன்றாண்டுகளுக்கு  முன்பு எழுதிக் கொடுத்த அறிமுகம் இது.

“ஒரிஜினல்” குங்குமம் ஸ்டைல்

கடைசியாக வந்த “டப்பா” ரஜினி படத்தின் பெயர் அவருக்கு. இருட்டுகடை அல்வாவுக்கு பிரசித்தி பெற்ற ஊரிலிருந்து, கபாலி கோவில் சந்தில் லகு ஷங்கா பண்ணிட்டூ , இப்போது வரலாற்றில் டீ பார்ட்டி கொடுத்த ஊரில் இருக்கிறார்.

ஊருக்கேற்றார் போல் உபசாரமாக பேசுவார். ஒரு நாளைக்கு ஆறேழு முறை துப்புவார். அது இலக்கியமென்று தானே நினைத்துக் கொண்டு பலக்கத் துப்புவார். தானே துப்புவது அபூர்வம்தான். எவனாவது ஏற்கனவே துப்பி வத்திருப்பதை உறிஞ்சி எடுத்து வந்து மறுபடி துப்புவது தான் அதிகம்.

எழுத ஏதும் கிடைக்காவிட்டால் சக துப்பர்கள் வீட்டு புழக்கடை பாத்திரங்களை உருட்டி அங்கே கிடைக்கும் கழிவுகளை உறிஞ்சி மறுபடியும் தன்னிடத்தில் துப்புவார்.

வேறு வேலை இல்லை என்றால் , இவன் இந்துநேசன்; இவன் விருந்து; இவன் பருவகாலம்; இவன் திரைச்சித்ரா; என்று கம்பேரிசன் ஸ்டேட்மெண்டு விட்டுக் கொண்டிருப்பார். “தமிழில் படம் போடும் குழு”வுக்கு எழுத ஆள் பிடிப்பது உப வேலை. அப்போதுதான் தான் சுய சாசனமாகவும், கொலைப் பையனாகவும், கொங்கை இல்லாத வேசியாகவும் முடியும் என்பது அவருக்குத் தெரியும்.

அவ்வப்போது மற்றவர்களிடம், “உன் வீட்டுச் சுவரில் என் அட்ரஸ் எழுதேன். நாலு பேர் பார்க்கட்டும்” என்று கேட்பார் மானமில்லாமல். எங்காவது தீ எரிந்தாலோ, வெள்ளக்காடானாலோ இறங்கி தன்னாலானதை பண்ண மாட்டார். எல்லாம் முடிந்த பிறகு “மணி”யாட்டிக் கொண்டு வந்து, எத்தனை தலை விழுந்தது; எப்படி விழுந்தது என்று அரிசியும், சேப்பங்கிழங்கும் தட்சிணையோடு வாங்கிக் கொள்ள வருவார் வாயில் தெவச மந்திரத்தோடு.

எழுதிப் பேர் வாங்க குறைந்த பட்ச தேவை ஏதாவது சொந்தமாக எழுத வேண்டும் என்ற அடிப்படை உண்மை கூட புரியாமல் ஊரில் உள்ள எழுத்தாளனுக்கெல்லாம் “வால்” பிடித்து நீவி விட்டுக் கொண்டிருப்பார். கூடவே அதை மற்றவர்க்கும் உபதேசஞ் செய்வார்.

தற்போதைக்கு காப்பி ஆற்றிக்கொண்டிருக்கும் இந்த இணைய இலக்கியவியாதி, ‘ஹிட் ரேட் வேணுமின்னா செக்ஸ் சைட் ஆரம்பிச்சிருப்பேன்” எனச் சொல்லிக்கொண்டே பலான படங்களை தூவி, கூவிக் கூவி அழைப்பார்.

நீங்கள் மிதித்தாலும் கவலை இல்லை அவருக்கு..ஏனெனில் உங்கள் காலோடு சேர்ந்திருக்கும் பின் தனங்களை என்றாவது முத்தமிட வேண்டியிருக்கும் என்ற பயம் அவர்க்குண்டு.

என்னை முதல் முறையாக இப்படி கிசு கிசு எழுத வைத்த “புண்ணியத்துக்கும்” சேர்த்து அவர் அடுத்த ஜன்மத்தில் அவராகவே பிறக்கட்டும். ஏனெனில் இதற்கு மேல் இழிந்த பிறப்பு அவருக்கு இருக்க முடியாது.