கைமைதுனம் (masturbation) என்னும் பாடம் எட்டாவது படிக்கும்போது தமிழ் பாடப் புத்தகத்தில் இருந்தது. காலையில் வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று unscientific-ஆக நிறைய axiom-களை திரு.வி.க. சொல்லிக் கொண்டே சென்றிருந்தார். அதில் மனதில் மிகவும் பதிந்தது: ‘கைமைதுத்தனம் செய்வதால் உடல் சக்தி விரயம் (உண்மை); பிற்காலத்தில் நலக்கேடு வரும் (ஃபில்டர்ட் பொய்).
தண்டமிழ்க் கொண்டல் சுவாமிநாதனிடம் பாடத்தை நடத்தும்படி வேண்டிக் கொண்டாலும், இதை விட உங்களுக்கு சீதையின் வர்ணனை சுவாரசியமாய் இருக்கும் என்று காலாண்டுத் தேர்வுக்கு இடம்பெறாத, கம்பராமாயணத்தில் இருந்து இலக்கியரசத்துக்குக் கொண்டு போய் விட்டார்.
‘ஒரு தடவை கையடிச்சா தப்பா? வாரத்துக்கு ஏழு தபா, கண்ணாலம் கட்டிக்கற வரைக்கும் கையடிச்சா தப்பா?’ என்று அன்னியன் மாதிரி கேள்விகள் ‘டெபோனேர்’-இல் வருஷத்துக்கு எட்டு தடவை விதவிதமாக இடம்பெறும்.
கேள்விகளை நிஜங்கள் எழுதினார்களோ… உதவி ஆசிரியரே எழுதினாரோ… பதில்களை விட முக்கியமானவை.
வலையகத்துக்காக டெம்பிளேட் தேடிக் கொண்டிருந்தபோது, Why Spouses Masturbate படிக்க நேரிட்டது. தனிமடலில் கல்லூரி நண்பன் ரகுவிற்கு அனுப்பி வைத்துவிட்டு விஷயத்தை மறந்தே போனேன்.
‘இதை ஏன் நீ மொழிபெயர்க்க கூடாது’ என்றபோது ‘என்னுடையது “அப்படிப்பட்ட” பதிவில்லை‘ என்று சொல்ல மொழிபெயர்த்தே மின்னஞ்சலில் அனுப்பியும் விட்டான்:
கைமுஷ்டி ஏன் ?
பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பொதுவான சந்தேகம், சமயங்களில் ஆண்கள் தங்களுடன் உறவு வைத்துக்கொள்வதை விட ஏன் கைமுஷ்டி வேலை செய்கிறார்கள் ? என்னதான் தாங்கள் தங்கள் துணையுடன் உறவு வைத்துக்கொள்ள தயாராக இருந்தாலும் அவர்கள் கைமுஷ்டியே ஏன் நாடுகிறார்கள் ?
இப்படி குறைப்படும் பெண்கள், தங்கள் துணைவர்கள் தங்களுடன் போதுமான அளவு உறவு வைத்துக்கொள்வதாகவும், அதில் அவர்கள் திருப்தியுடன் இருப்பதாகவும் கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறார்கள். இவ்வளவு இருந்தும் கைவேலை ஏன் என்ற கேள்விக்கு அவர்களுக்கு விடை தெரியவில்லை.
இதனால் சிலர் தங்கள் துணை தங்களை நிராகரிப்பதாக நினைத்துக்கொண்டு பெரும் சோகத்திலும், மனக்குழப்பதிலும் இருக்கின்றனர்.
“என்னிடம் என்ன குறை ? என்னிடம் என்ன இல்லை ?”
“கைவேலைக்கு பதில் என்னிடம் உறவு வெத்தால் என்ன ?” போன்ற கேள்விகள் அவர்கள் மண்டையைக் குடைகின்றன.
இதற்கு ஒரே பதில் “அவர்களுக்கு விளங்காது / புரியாது”. ஏன் புரியாது … புரியாது.
பிரசவம், மாதவிடாய் பிரச்சனைகள் பற்றி ஆயுசுக்கு படித்தாலும் எப்படி ஆண்களால் அதன் வலியை புரிந்து கொள்ள முடியாதோ அதே போல் பெண்களால் கைவேலை பற்றி புரிந்துகொள்ள முடியாது.
ஆனால் பெண்களுக்கு சிலவற்றை சொல்லியே ஆக வேண்டும்…
பெரும்பாலான ஆண்கள், தங்கள் துணையோடு உறவு வைத்துக்கொள்ள எவ்வளவு ஏங்குவார்களோ அதே அளவு கைவேலைக்கும் ஏங்குவார்கள்.
கைவேலை தரும் திருப்தியை உறவு தர இயலாது, அதே போல் உறவின் போது ஏற்படும் இன்பம்,நெருக்கத்தை கைவேலை தர இயலாது.
இரண்டும், வெவ்வேறு வகையான இன்பங்கள். ஒன்றோடு ஒன்றை ஒப்பிட முடியாது. இவை இரண்டுமே பெரும்பாலான ஆண்களுக்கு தேவையாவைகள்.
முழுவதுமாக உறவில் ஈடுபட முடியாத ஆண்கள்தான் இது போன்ற வழிகளை தேர்ந்தெடுப்பதாக பெண்கள் கருதுகிறார்கள். இது சில சதவீதம் உண்மையென்றாலும், ஆண்களுக்கு கைவேலையில் கிடைக்கும் இன்பமே வேறு. இதைப்பற்றிய பல ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்னவென்றால், “தன் துணையுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருக்கும் ஆண்களே, உறவில் இல்லாத ஆண்களை விட அதிக அளவு கைவேலையில் ஈடுபடுகின்றனர்”.
கைவேலை செய்வதனால் ஆண்கள் தங்கள் துணையை வெறுக்கிறார்கள் என்றோ, அவர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றோ அர்த்தம் கிடையாது. அதே சமயம் அவர்களுக்கு வேறு சிந்ததையே இல்லை என்றும் கிடையாது. நல்ல கணவனாக / துணைவனாக இருப்பது வேறு இது வேறு.
முடிவாக ஆண்கள் ஏன் செய்கிறார்கள் ?
கைவேலை செய்வது ஆண்களின் தேவை. இதை சொல்லி புரிய வைக்க முடியாது, மாற்றும் சொல்ல முடியாது.
ஆக பெண்களே, உங்கள் துணையின் கைவேலை பற்றி தெரியவந்தால் அதை பெரிது படுத்தாதீர்கள். திருப்தியோடு இருக்கும் உங்கள் துணை உங்களை மேலும் ஆழமாக நேசிப்பார்.
ஆண்களே ! உங்கள் துணையோடு இது பற்றி பேசுங்கள். அவர்களுக்கு உங்கள் தேவையை விளக்க முயற்சியுங்கள்.
முடியாவிட்டால் இந்த கட்டுரையை ஒரு முறை படிக்க சொல்லுங்கள்.
திருமணத்திற்குப் பின் உறவு குறித்து முன்பு படித்தது:
மாப்பிளையின் மாமா, கல்யாணப்பரிசாக தம்பதியருக்கு ஒரு 64 அவுன்ஸ் கூஜாவைக் கொடுத்திருந்தார். பையனை தனியை அழைத்து சென்று, ஒவ்வொரு முறை உறவு வைத்துக் கொள்ளும்போதும் ஒரு கல்லை அதில் போட்டு வருமாறு சொல்லியிருந்தார்.
முதல் வருடம் கழிந்தது.
விருந்துண்ண வந்திருந்த மாமாவிடம் கூஜாவைக் காட்டினான். கற்களால் நிரம்பி, வழியும் தருவாயில் இருந்தது. ‘இனி ஒவ்வொரு முறை வச்சுக்கும்போதும் ஒரு கல்லை எடுத்து வெளியே எறிந்து வா’ என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
பத்து வருடம் கழித்து குழந்தைகளுடன் மாமாவைப் பார்க்க வந்தவன், கூஜா இன்னும் காலியாகாத சோகத்தை சொன்னான். ‘இங்கே வா’ என்று அழைத்துக் கொண்டு பாதி நிரம்பிய தன்னுடைய கூஜாவை வறட்சியாகக் காண்பித்தார் மாமா.
பேசாதப் பொருளை பேசத்துணிபவர் சிலரே, பேசினாலும் பொதுவிடத்தில் எழுத துணிபவர் மிகச் சிலரே, அப்படி எழுதுபவரை பாராட்டி பின்னூட்டமிடுபவரும் ஒரு சிலரே.
இந்த பதிவு பெண்கள் ஆண்களின் சுய இன்பம் பற்றி தெரிந்து கொள்வதற்காக எழுதியிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. நல்ல பதிவு
நட்சத்திரப் பதிவுக்கு ரொம்ப அவசியம்!
—நட்சத்திரப் பதிவுக்கு ரொம்ப அவசியம்—
அது என்னங்க நட்சத்திரப் பதிவு… வால் முளைச்சிருக்குமா 😉
——
கோவி. கண்ணன்… நன்றி.
ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப விளக்கமான பதிவுங்க:-))
தாதுபுஷ்டி லேகிய வியாபாரிகள் போஸ்டன்லயும் இருக்காங்கனு தெரியுது.(பழனி லயன் டாக்டரின் அமெரிக்க பிரதிநிதி நீங்க தானா?)
கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதாம்பா உங்களுக்கு…
சுய இன்பம் ஆண் பெண் இரண்டுபேருக்குமே பொதுவானதுதானே?
தைரியமான முயற்சிக்கு பாராட்டுக்கள். அடுத்து ஒரு பயனர் கையேடும் போட்டீங்கன்னா நல்லாருக்கும். 🙂
ஒருவகையில் இந்தப் பதிவும் டெபொனேர் ஸ்டைல் விடையைத்தான் தருகிறது.
இதப் பாத்தீங்களா?
http://theyn.blogspot.com/2006/06/pg18.html
துணிச்சலே உன் பெயர் பாலாவா?
‘அப்படிப்பட்ட’ என்ற வார்த்தை உம்மை உசுப்பிவிட்டது என்று எண்ணுகிறேன்.
இந்தச் சரித்திரப்புகழ் வாய்ந்த பதிவில் என் சுட்டியும் பங்கெடுத்து சாதனை படைத்ததற்கு தங்களுக்கு என் நன்றி
🙂
பாலா எந்த வருஷம் எட்டாப்பு படிச்சீங்க?
—தாதுபுஷ்டி லேகிய வியாபாரிகள்—
:-))
—துணிச்சலே உன் பெயர் —
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு; இளங்கன்று பயமறியாது; துணிவு வேறு… அசட்டு தைரியம் வேறு… என்று சதாய்க்காத வரைக்கும் சரி சாரே ;-))
—வார்த்தை உம்மை உசுப்பிவிட்டது —
உசுப்பி விடாமல் (அதாவது in a +ve way) எந்தப் பதிவுமே இருக்கக் கூடாது என்பது என் பாலிசி 😛
பாடையில் போறவன் பையில் பான் பராக் வைக்கிறது மாதிரி எழுதினால், படிக்க வருகிறவர்கள் தூங்கிடப் போறாங்க!
—எந்த வருஷம் எட்டாப்பு —
எனக்கு டெண்டுல்கர் வயசு ஆவுதுங்க 😀
நான் செல்லும்போது இந்த மாதிரியெல்லாம் யாரும் போஸ் கொடுக்கறதில்லையே! எல்லாம் க்யூலியானி செஞ்ச வேலையா இருக்கும் 🙂
சிறிது மாற்றம் செய்து தேன்கூடு போட்டிக்கு அனுப்பி கலக்கவும்.
🙂
பயத்துடன்,
பச்சோந்தி.
நல்ல பதிவு பாபா.
பொஸ்டன் பாலா சாரு…..பெண்களும் புருசரை தொழில் நிமித்தமாய் கொழும்பு அனுப்பிய பின் தங்கள் கை விரலுக்கு வேலை வைத்கிருக்கிறார்களென்று..தீ சடங்கு போன்ற நாவலில்… …பொ என்ற எழுத்தாளர் கூறி இருக்கிறார்…
மிக நல்ல பதிவு.
இந்த மாதிரி விஷயங்களில் தெளிவு இல்லாததால்தான், பலர் போலிமருத்துவர்களிடம் போய் பணத்தையும் மன நிம்மதியையும் இழக்கிறார்கள்.
எங்களேட எட்டாவது புத்தகத்திலேல்லாம் இப்படிப்பட்ட விசயங்கள்லாம் இல்லையே, நீர் எங்கு படித்தீர்?
ரியோ, குமரன்… நன்றிகள்.
மேலதிகத் தகவல் சொன்ன சின்னக்குட்டி… முதல்ல போணி செஞ்சிருக்கீங்க __/\__
—எங்களேட எட்டாவது புத்தகத்திலேல்லாம் —
என்னோட புத்தகமெல்லாம் தூக்கிப் போட்டதில்லை. பேப்பர் பூச்சி சாப்பிட்டது போக மிச்சமிருப்பதை (அடுத்த தடவை இந்தியா போகும்போது) ஒளிவருடி இட்டு விடுவேன்.
உடல்நலம் பேணுவது போன்ற தலைப்பில் தேக ஆரோக்கியம், பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி என்று பல துணைத் தலைப்புகளில் பத்து பக்கங்களுக்கு மேல் நீளும் கட்டுரை. (எட்டாம் வகுப்பு என்பது தவறாக இருக்கலாம்?! பத்தாம் வகுப்புக்கு முன் என்பது 101% நிச்சயம் 🙂
பொஸ்டன் பாலா சார்…..நாங்க படிக்கிற காலத்திலை நம்ம பசங்கள் ஒன்றாக இருக்கும் போது…சும்மா தமாசுக்கு ஒருவன் சொல்லுவான் …கரமைதுனம் போடுறவனுக்கெல்லாம் கையிலை மயிர் முளைக்குமென்று … எல்லாரும் உடனடியா கையை பார்ப்பாவுனுக…… இதிலையிருந்து என்னங்க தெரியுது சார்.. எல்லாரும் போடுறானுங்கோ… ஆனா கம்மென்னு இருக்காங்கோ…
நல்ல பதிவு பாலா.நன்றி
அறிவை வளர்க்கும் ,மாயையை விலக்கும் மிக நல்ல பதிவு !
இதை என் கசமுசாவில் இணைக்க அனுமதி வேண்டும் !
அடேங்கப்பா! ஜலபுலாஜல்ஸில் இணைத்ததற்கு சிறப்பு நன்றி. த்ரிஷா சொக்காய் அமர்க்களமா இருந்தது 🙂
—கையிலை மயிர் முளைக்குமென்று—
இந்த மாதிரி ரேகிங் எல்லாருக்கும் கரெக்டா போய் சேர்ந்திருக்கிறது :-)) சத்யராஜை வைத்துக் கொண்டு சீரியஸாக நிறையக் கதைத்து விட்டிருக்கிறார்கள்.
செல்வன்… வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்! 🙂
Wonderful Masturbation.
– Suresh Kannan
பிரேமலதா, ஏழு எட்டு வகுப்பில் படிச்ச நினைவு இருக்கு, ஆனா இந்த மேட்டர் இல்லை. (ஒரு வேளை புரியலை என்றும் நினைக்கிறேன்)
காலையில் மூக்கு துவாரங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று படித்தது, அதை செவ்வன சில நாட்கள் கடைபிடித்ததும் நினைவில் நிழலாடுகிறது.
intelectual(y) masturbation!! :))
—ஏழு எட்டு வகுப்பில் படிச்ச நினைவு இருக்கு—
படிச்சதை ஞாபகம் வச்சிருக்கிறவங்க யாருமே இல்ல என்று நெனச்சேன்.. இன்னொருத்தரும் இருக்காங்க போல :P)
சுரேஷ் & ஷங்கர் __/\__
Balaji
//படிச்சதை ஞாபகம் வச்சிருக்கிறவங்க யாருமே இல்ல என்று நெனச்சேன்.. இன்னொருத்தரும் இருக்காங்க போல :P)//
எனக்கும் எல்லாப் பாடமும் நல்லா ஞாபகம் இருக்கு! வேணும்னா ஒரு செய்யுள் மனப்பாடப்பகுதி ஒப்பிச்சுக்காட்டவா?
சூடையின்மணி கண்மணி யொப்பது, தொன்னாள்
ஆடையின்கண் இருந்தது பேரைடையாளம்,
நாடி வந்தென தின்னுயிர் நல்கிய நம்பா
கோடியெனக் கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்.
என்னான்னு கண்டுபுடிங்க பார்ப்போம்?
//ஆனா இந்த மேட்டர் இல்லை. //
உஷா, (பாலாஜியும் சேர்ந்துக்கங்க),
அநேகமா சாய்ஸ்ல விடச்சொல்லிட்டு பாடம் நடத்திருப்பாங்க.
முதமுத இந்த விசயம் எனக்கு பாலன் மூலமா வந்துச்சு. அப்போ பயங்கர ஆச்சரியத்தோட கேட்டுக்கிட்டேன். கண்டிப்பா எட்டாவதுல (பத்தாவது இல்ல பாலாஜி எப்பவுமே நடத்தல) இந்தப் பாடம் நடத்தல.
—என்னான்னு கண்டுபுடிங்க பார்ப்போம்—
நான் திண்ணை பள்ளிக் கூடத்தில் ஸ்லேட்டில் எழுதியது ஆரம்பித்து நேற்று வெளிவந்த ஸ்பெக் வரை கரைத்துக் குடித்தவனாக்கும் 😛
இது ‘சீதை சூடாமணியை அனுமனிடம் கொடுத்தல்’ [கம்பராமாயணம் – சுந்தர காண்டம் :: சூடாமணிப் படலம்]
உங்களிடமிருந்து மறுமொழி பெற்ற எனக்கு ஏற்ற எசப்பாட்டு:
தொழுது வாங்கினன்; சுற்றிய தூசினன், முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து,
அழுது, மும்மை வலம் கொடு இறைஞ்சினன்; அன்போடு,
எழுது பாவையும், ஏத்தினள்; ஏகினன் இப்பால்
என்பதை நினைவு கூர்கிறேன் ;-)))
—-கண்டிப்பா எட்டாவதுல (பத்தாவது இல்ல பாலாஜி எப்பவுமே நடத்தல) —
நாங்க அவுட் ஆஃப் சிலபஸ் படிச்சு வளர்ந்தவங்க (மீண்டும் :-D)
இப்படிக்கு,
– பிட் அடிப்பதில் வல்லவன்
//[கம்பராமாயணம் – சுந்தர காண்டம் :: சூடாமணிப் படலம்]//
ங்கொக்காமக்க! இந்தா புடி பொன் முடிச்சு.
//எனக்கு ஏற்ற எசப்பாட்டு:
தொழுது வாங்கினன்; சுற்றிய தூசினன், முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து,
அழுது, மும்மை வலம் கொடு இறைஞ்சினன்; அன்போடு,
எழுது பாவையும், ஏத்தினள்; ஏகினன் இப்பால்
என்பதை நினைவு கூர்கிறேன் ;-)))
//
ஏய், எவெண்டா அவேன், ஏம்பாட்டுக்கு எசப்பாட்டு பாடறது!
(bow you, btw. 🙂 )
ஏஏஎஏறாத மலமேல எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு,
ஏறி உலுப்பட்டுமா….
சே, (தலய ஒரு உலுக்கு உலுக்கு). got carried away. :))
btw, இன்னொரு பாட்டு கொஞ்சம் மறந்து போச்சு. தெரிஞ்சா கொஞ்சம் correct பண்ணிவிடுங்க, please.
கொங்குசேர் வாழ்க்கை அம்சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீய நட்பின் செறிஎயிற்று
அரிவை கூந்தலின் அரி(றி?)யவும் உளவோ
நீ அறியும் பூவே.
இட்டாலிக்ஸ்ல இருக்கிற லைன் தப்பு.
—bow you—
நான் தலைவணங்குவது ரஜினிக்கும் கூகிளுக்கும் மட்டுமே (அந்தப் பாட்டு சென்னை நெட்வொர்க் உபயம் [கூகிள் வழியாக]. எல்லாப் புகழும் கூகிளை மட்டுமே சேரும் 🙂
Sangam landscape – Wikipedia, the free encyclopedia
குறிஞ்சி – தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.
ஓ, அதான் பிட் அடிச்சதா!
மரமண்ட நானு. 😦
it is not அஞ்சிறை, it is அம்சிறை,
அம் என்றால் அழகு. அம் இங்க மாறாமத்தான் வரும்.
//(அந்தப் பாட்டு சென்னை நெட்வொர்க் உபயம் [கூகிள் வழியாக]. எல்லாப் புகழும் கூகிளை மட்டுமே சேரும் 🙂 //
cheating 😦
(btw, how? )
—btw, how—
நீங்கக் கஷ்டப்பட்டு எழுதியதை அப்படியே எடுத்துக்குங்க…
‘கூகிள்’ தேடல் பக்கத்தில் காபி/பேஸ்ட் செய்யுங்க…
தேடுங்க
😀
சூடையின்மணி – Google Search
http://www.chennainetwork.com – website about chennai
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க!
நீங்களும் லதாவும் செய்யுள் எல்லாம் எழுதி வேற தூள் பறத்துரீங்க!!!
சிரில் அலக்ஸும் சின்னக்குட்டியும் சொன்னதும் உண்மை ஒரு விதத்தில – கொஞ்சம் வித்யாசம் உண்டு பெண்கள் செய்கயில – மனசில நினக்கிறது ஜாஸ்தி! வெரலெல்லாம் ரொம்ப காமன் இல்லங்க … எங்க வீட்டுக்காரர்கூட சொல்லீருக்காங்க – மனசில நினக்கிறது ஜாஸ்தி – கையால செய்றது கம்மி… மனசு லெவெல்ல ஸேமாத்தான் இருக்கணும் – பெண்ணுக்கும் ஆணுக்கும் – அதனாலதான் – கை வெச்சு என்ன செய்ரான்னுட்டு எங்களுக்கு ஒரு குடுகுடுப்பு!!!
மனசில எல்லாரும் கள்ளிதானுங்க. புருஷன் புரிஞ்சிக்க மாட்டன்னுட்டு சொல்லமாட்டேன்றாங்க- இப்பிடியாப்போயி போயி ரெண்டு பக்குத்துக்கும் ஒண்ணும் புரியாம போயிறுச்சுங்க. கண்ணகி சிலையத்தானங்க தூக்கி தூக்கி வெச்சுக்ககிராங்க … என்னத்தச் சொல்றது.
அப்புறம்,
நறியவும் தெரியும், அரிவை எழுதிட்டு, தூக்கத்துல அரி(றி?)யவும் னு எழுதியிருக்கிறேன். 😦
அப்புறம், அனான்,
நீங்க நமக்கு நல்லா தெரிஞ்ச பெண்குலம்னு தெரியுது, “லதா”ன்னு கூப்பிடறதிலேர்ந்தே. 🙂 உங்க தமிழ் தடுமாறியிருக்கே ஏன்? 🙂
அனானா இல்லாம பேர போட்டு கொஞ்சம் தைரியத்த மத்தவங்களுக்கும் கொடுக்கலாம்ல? 🙂 பாருங்க, நானு, உஷால்லாம் இருக்கோம் சப்போர்ட்டுக்கு. 🙂
அடிப்பாவி பிரேம்ஸ், என்ன எதுக்கு இழுக்குறே :-))))))
நானு பயந்தாங்குள்ளியாக்கும்
( கண்ணுல பூச்சி பறக்குது)
ப்ச்ச்ச், பாவம் உஷா ரெம்ப பயந்த சுபாவம். 😉
இந்த பதிவில கால வைக்க தெகிரியம் வந்துச்சே அத சொன்னேன். 🙂
ஏதாவது செய்யுள எடுத்துவிடுங்க. இந்த பாலாவ உண்டு இல்லன்னு பார்த்துடுவோம். நல்லா படிச்சதெல்லாம் ஞாபகம் இருக்குன்னு சொல்லிட்டு கூகிள்லேர்ந்து எடுத்துப்போடறார். cheating!.
பிரேமலதா… உங்களுக்காக ஒரு பாட்டு: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த… – Music India OnLine
—ஏதாவது செய்யுள எடுத்துவிடுங்க—
திருக்குறளில் முக்கா பங்குதானே படிக்க விட்டாங்க 🙂
அந்த சைட்டு டவுனு. 😦
//திருக்குறளில் முக்கா பங்குதானே படிக்க விட்டாங்க 🙂 //
திருக்குறள்ல பெரிசா ஒண்ணுமில்ல. மூணாம்பாகம் ஆரம்பிச்சேன். கண்ணப்பாரு அதுல ஒளியப்பாருன்னு முத ரெண்டு அதிகாரம் (சரிதான?) (அதாவது 20 குறள்), போடாங்…ன்னு வந்துட்டேன்.
ஒருவேளா அதுக்கப்புறம் விசயத்துக்கு வர்றாரோ என்னவோ. மறுபடியும் ஆரம்பிக்கணும்.
சுந்தர ஆவுடையப்பன் சமீபத்தில் ‘வணக்கம் தமிழக’த்தில் அவருக்குப் பிடித்த மூன்று காமத்துப்பால் குறள்களை சுவையாகப் பகிர்ந்து கொண்டார். நேரம் கிடைக்கும்போது ஒலிப்பதிவாக இணைக்கிறேன்.
(ஃபெட்னாவில் ஏற்கனவே சொன்னதைத்தானே இங்கும் ரி-சைக்கிளிருப்பார் என்று தேடிப் பார்த்ததில் இந்தப் பதிவு அம்புட்டது:
——
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI
பிரபஞ்சன்கூட ஒருத்தர் வந்திருந்தார். கேட்டிருக்கீங்களா?
பி.கே. சிவகுமார்: இந்த… ரேடியோ ஸ்டேஷன்ல வொர்க் பண்றார். பேரு மறந்து போச்சி.. (சற்று யோசித்தபின்) ஆவுடையப்பன் (இன்னும் சிலரும் ஆவுடையப்பன் என்கிறார்கள்.)
சு.ரா.: சார், ஒரு செகண்டுக்கு ஒரு ஹியூமர் சொல்றார். நானே சிரிக்கறேன்.
முருகானந்தம்: அடுத்த மீட்டிங்லயும் அதே ஹியூமர்தான் சொல்லுவார்.
சு.ரா.: சொல்லிட்டுப் போகட்டும். நான் பல்லைக் கடிச்சிண்டு சிரிக்கக் கூடாதுன்னு இருக்கறேன். (கூட்டத்தில் சிரிப்பு) இவர் பேசறதுக்கு சிரிக்கக் கூடாதுன்னு. ஆனா, within five minutes சிரிக்க ஆரம்பிச்சாச்சி. சொல்றார் அவர். ஆனா, அவர் வந்தார்னா, இந்தக் கூட்டத்துல நாம இவ்ளோ பேசறோம் இல்லை, இதுல எதுவுமே பேச முடியாம ஆயிடும். அப்படி ஆக்குறவங்கள நமக்குத் தெரியாது.
ராஜாராம்: அது, அவர் இயல்பா இருக்கற மாதிரி இருக்கார் அவர்.
சு.ரா.: இருக்கார் மட்டுமில்லை. அந்தக் கூட்டத்திலே அவ்வளவுமே சிடுமூஞ்சிகள். அவ்வளவுமே சிடுமூஞ்சிகள். படிச்ச சிடுமூஞ்சிகள் வந்திருக்கு. அவர் போயி கொஞ்சம் கலகலப்பா ஆக்கிட்டேன்னு சொல்லுவார். So, எல்லாத்துக்கும் நீங்க ரீசன் சொல்ல முடியாது. எவ்வளவோ தந்திரங்கள் இருக்கு. மொதல்ல தமிழ்நாட்ல இருக்கக் கூடிய தந்திரங்கள் அளவுக்கு – எனக்குத் தெரிஞ்சி – மத்த லிட்டரேச்சர்ல… வேர்ல்ட்ல எதுவுமே கிடையாது. ஒரிஜினல். தந்திரங்கள் இருக்கு இல்லையா? தமிழ்ல இவன்தான் முதல்ல கிரியேட் பண்றான். அது கொஞ்சம் கொஞ்சமா மத்த தேசங்களுக்குப் பரவுது. (கூட்டத்தில் சிரிப்பு) விளையாட்டுக்குச் சொல்லல சார்.
Too late comment for // த்ரிஷா சொக்காய் அமர்க்களமா இருந்தது //
In April 1997, French Connection began branding their clothes “fcuk” (usually written in lowercase). Though they insisted it was an acronym for French Connection United Kingdom, its similarity to the word “fuck” caused controversy.[2] French Connection fully exploited this and produced an extremely popular range of t-shirts with messages such as “fcuk this”, “hot as fcuk”, “mile high fcuk”, “fcuk me”, “too busy to fcuk”, “fcuk football”, “fcuk fashion”, “fcuk fear”, “fcuk on the beach” and more. The company recently announced that the “fcuk” label is to be phased out.
for details http://en.wikipedia.org/wiki/Fcuk
Thanks
Jeen