ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..
யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !
ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக
வந்ததொரு காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலையும் கொண்டு சென்றதேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
நன்றி: Song of the Day: kaNNil paarvai from naan kadavuL: “‘கண்ணில் பார்வை’ ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்.”
oOo
கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம் !
ஓ தெய்வமே ! இது சம்மதமோ ?
முந்தைய பதிவு: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்
மேலும்: Amma Un Pillai naan – Nan Kadavul பாடல் : இசை « Karthik’s Perception
ஸ்நாப் ஜட்ஜில் நான் கடவுள் வாரமா?:)
அதற்கும் முந்திய வாரம், ‘மருதன்/ஆனந்த விகடன்’ வாரம் கொண்டாடினேன் 😀
பிங்குபாக்: நான் கடவுள் - அஹம்ப்ரம்மாஸ்மி « Snap Judgment