- வெறுமனே புத்தாண்டு வாழ்த்தாக பதிவிடாமல், படிப்பவருக்கு ஏதாவது பிரயோசனப்படுமா என்றும் யோசித்து பதிவிடவும். (உதாரணம்: பத்ரி: புத்தாண்டு உறுதிமொழி
- நிறைய வாசிக்கவும். (உ.: How to be picky with blog posts? – Primer for selective reading)
- டிப்ஸ் கொடுக்கவும். (உ.: பா ராகவன்: திருவிழாவுக்குத் தயாராகுங்கள்!)

- பதிவொன்றுக்கு படமொன்று இடவும்.
- மொக்கையோ, கருத்தோ, அனுபவத்தை அணு அணுவாகப் பகிர்தலோ: 250 வார்த்தைகளுக்கு மிக வேண்டாம். (உ.: வேர் இஸ் தி பார்ட்டி – பொழிப்புரை)
- 250 வார்த்தைக் கோட்டைத் தாண்டுபவர், உயிரோசைக்கோ திண்ணை போன்றவற்றுக்கோ எழுதி எழுத்தைக் கூர்மையாக்கிக் கொள்ளவும். இரண்டிலும் உன் எழுத்து வெளியாகாவிட்டால், மனுஷ்யபுத்திரனை நேரில் சந்தித்து நட்பு கொள்ளலாம் (அ) அடுத்த புல்லட் பாயின்ட்டை படிக்க.
- இந்தப் பதிவைப் போல் புள்ளி புள்ளியாகப் பிரித்து 1,2,3 என்று இடுக.
- அப்படியே 250ஐத் தாண்டுமென்றால் அடுத்தவரைக் குறித்த ருசிகரத் தகவலோ, லாவகமான மொழிப்பிரவாகமோ, ஏதோவென்று உள்ளேயிருந்து கிச்சுகிச்சு மூட்ட வேண்டும். (உ.: ஜெயஸ்ரீ: பரித்ரானாய ஸாதூனாம்… – Part 2)
- புத்தகமெழுதிய மனிதரெல்லாம் பதிவரில்லை; பதிவு வைத்திருக்கும் மனிதரெல்லாம் புத்தகம் எழுதத் தகுதியானவரில்லை. பதிவு நடை என்பது வேறு; புத்தக ஆக்கம் என்பது வேறு. (இரட்டை குதிரை சவாரிக்கு உ.: முகில்: அகம் – புறம் – அந்தப்புரம்)
- முன்பே எழுதியதைத் திரும்ப திரும்ப வேறு வேறு விதமாக சொல்ல அஞ்ச வேண்டாம். (உ.: வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டி)
- புதிய வாசகர் தினந்தோறும் சேரும் காலமிது. எனவே, பழம்பாடல் ரீமிக்ஸாக (பதிவுக்குள்ளேயே) சொன்னதை சுவைபட மாற்றி மாற்றி எழுதிப் பதிவாக்கு. (உ.: லக்கிலுக்/யுவகிருஷ்ணா: தமிழ் வலையுலக மார்க்கெட்டிங் உத்திகள்!)
- அதற்காக, ஒரே சப்ஜெக்டில் அடுத்தடுத்து தொடர்ந்து எழுத வேண்டாம். (உ.: 2008ன் கலக்கல் பதிவர்)
- சிவனின் அடிமுடி கொண்டவராக ஒரு சப்ஜெக்டில் ஆழமான அறிவு இருப்பின், அதை மட்டும் முன்னிலை நிறுத்த தனிப்பதிவு துவங்கலாம். (உ.: தமிழில் புகைப்படக்கலை: PiT Photography in Tamil)
- எளிமையான வார்ப்புரு வைத்திரு. உன் பதிவுக்கு எவ்வளவு பேர் எப்படி வந்தார் என்பது எனக்குத் தேவையில்லாத தகவல். உலாவியில் சீக்கிரம் வருகிறதா என்பது மட்டுமே முக்கியம்.(டெம்பிளேட் உ.: கூடுதுறை)
- பாட்டு கேட்க வேண்டுமானால், எனக்கு விருப்பமானதை மனதிற்கு உவந்த முறையில் (ரேடியோ, எம்பி3, ஐபாட்) என்று கேட்டுக் கொள்வேன். தானியங்கியாக சத்தத்தை அலற விடாதீர்.(காதுக்கு கேடு உ.: தமிழ்த்துளி)
- பதிவின் நடுவில் பொருத்தமாக அடுத்தவருக்கு சுட்டுவதை பெருக்கவும்: chrisbrogan.com: 27 Blogging Secrets to Power Your Community
- உன் பதிவிற்கும் பொருத்தமான இடங்களில் தாராளமாக உரல் இடவும். (உ.: வலைப்பதிவரின் வாழ்க்கைச்சுழல் & வலைப்பூ வைரஸ்)
- பதிய நினைத்தால் பதியலாம்; வழியா இல்லை பூமியில்? (உ.: இராயர் காப்பி கிளப்: வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?
- அரசியல், சினிமா, சமூகம் ஆகியவை குறித்து மட்டுமே தொடர்ந்து அரியணையில் இருந்து முத்து உதிர்க்கப் போவதாக இருந்தால் ட்விட்டர் மட்டுமே உங்களுக்குப் போதுமானது. (உ.: ட்விட்டர்: எளிய அறிமுகம்)
- 250 ஆகிவிட்டது. முற்றும்.
Posted in Blog, Blogger, Bloggers, Blogs, Blogspot, Critic, Criticism, Customer
குறிச்சொல்லிடப்பட்டது 2009, Advice, ஆலோசனை, கில்லி, டிப்ஸ், தமிழ்ப்பதிவுகள், துப்பு, பட்டியல், பதிவு, விருப்பம், விழைப்பட்டியல், விழைவு, Blogs, Gilli, Link, Posts, Resolutions, Self, Suggestions, Tamil, Templates, Tips, Tricks, Wishes
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 2008, 2009, அழகரி, ஆண்டு, கனிமொழி, கருணாநிதி, கருத்துப்படம், கலைஞர், கார்ட்டூன், சத்யா, சோ, டிவி, துக்ளக், தொலைக்காட்சி, புத்தாண்டு, முக, ஸ்டாலின், Calendar, Cho, DMK, Kalainjar, Karunanidhi, MK, Sun, TV, Year
செய்தி: 'Safest' seat remarks get Muslim family kicked off plane – CNN.com
- அவர்கள் குடும்பம் கொஞ்சம் பெரியது. எட்டு உறவினர்களும் நண்பரொருவரும் சேர்ந்து சென்றார்கள்.
- எல்லோரும் சேர்ந்து உட்கார விரும்பினார்கள். விமானத்தின் வால் பாகத்தில் அமர விரும்பவில்லை.
- முஸ்லீமாக இருப்பதினால் பயணம் தடைப்பட்டது கூட பிரச்சினையில்லை என்கிறார் இர்ஃபான். ஆனால், தடையாகிய பயணத்தை, வேறு வழியில் பிறிதொரு நேரத்தில் தொடர்வதிலும் ஏர் – ட்ரான் இவர்களைப் படுத்தியெடுத்து வருகிறது.
- இவர்களை இறக்கியனுப்பிய பிறகு, சக விமானப்பயணிகள் அனைவரும் மறுபடியும் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளான கொடுமை தனிக்கதை.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, இஸ்லாம், முஸ்லீம், CIA, FBI, Flights, Islam, Life, Muslim, News, Panic, Security, Terrorism, Travel, US, USA