பாலிண்ட்ரோம் (Palindrome) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இடம்வலம் வலம் இடமாகப் படித்தால் மாறாத வார்த்தைகள் வாக்கியங்கள்.
தமிழில்
- மோருபோருமோ
- தேருவருதே
- விகடகவி
இவை மூன்றைத் தவிர வேறு உதாரணங்களை நான் பார்த்ததில்லை.
ஆங்கிலத்தில் இவைகளை அமைப்பது சுலபம். New American Writing பத்திரிகையில் ஒரு கவிதை வரிகள் அனைத்தும் ‘பேலின்ட்ரோம்’ வடிவத்தில் இருந்தன. உதாரண வரி:
But no repaid diaper on tub!
தமிழில் இவ்வாறு நீண்ட சொற்றொடர்கள் அமைப்பது எழுத்தாளனாகிய எனக்கு சவாலாக, ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.
- வா தாத்தா வா!
- மாவடு போடுவமா?
- மாலா போலாமா?
- யானை பூனையா?
- யானையா பூ யானையா?
- போ வாருவா போ.
கொஞ்சம் சந்திப்பிழைகளை அனுமதித்தால்:
- மாமர சில சிரமமா?
முழுசாக அர்த்தம் வேண்டும் என்று கட்டாயமில்லாவிட்டால் மிக நீண்ட வாக்கியங்கள் அமைக்க இயலும்
- ஓர் பாயை தின வானதியை பார் ஓ!
- துவள் கொடி மரவுரி பரிவிர மடிகொள்வது!
வாசகர்கள் முயற்சி பண்ணி எனக்கு எழுதினால் இந்தப் பகுதியில் வெளியிடுகிறேன்
– மே 1990
முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு)
The following poem, which Lydia presented in class, was based on an assignment to create your own form. Maxine Chernoff and I (Paul Hoover's Poetry Blog: Lydia Tomkiw) published it in one of the first issues of New American Writing, and it was also included in the first edition of The Best American Poetry [1988], ed. David Lehman and John Ashbery. The poem consists entirely of palindromes, some of which she must have created to suit the poem, for instance the next to last line:
Six of Ox Is
O, no iron, o Rio, no
red rum murder;
in moon: no omni
devil-lived
derision; no I sired
Otto,
a
drab bard,
Bob,
but no repaid diaper on tub.
O grab me, ala embargo
emit time,
Re-Wop me, empower
Eros’ Sore
sinus and DNA sun is
fine, drags as garden if
sad as samara, ruff of fur, a ram; as sad as
Warsaw was raw.