Tag Archives: Sujatha

யார் தெரியுமா? நான்தான்!

கேள்வி: “முதலில் கதை எழுதலாமா? கட்டுரை எழுதலாமா?”

கல்கி பதில்: “கதை எழுதுவதை விடக் கட்டுரை எழுதுவதுதான் நல்லது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஏனென்றால், கதை எழுதுவது கஷ்டம். கதை எழுதுவதற்கு முதலாவது கதை ஒன்று வேண்டும். அது கிடைப்பது லேசல்ல. பிறகு அதை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக எழுத வேண்டும். கொஞ்சம் காது மூக்கு வைக்கலாமே தவிர, கதையின் மத்திய சம்பவத்தை விட்டு அதிக தூரம் போக முடியாது. இன்னொரு பெரிய தொந்தரவு இருக்கிறது. கதையென்றால் ‘நன்றாயிருக்கிறது. இல்லை’ என்பதாகச் சுலபமாய்ப் பத்திரிகையாசிரியர் தீர்மானித்து விடுவார். பத்திரிகாசிரியர் மீது பழி வாங்கும் விருப்பம் உனக்கிருந்தால் கட்டுரை எழுதுவதுதான் நல்லது. அது சுலபமும் கூட…

கட்டுரை எழுதுவதற்கு வரம்பு ஒன்று வைத்துக் கொள்வது அவசியம் இல்லை. எதிலேயோ பிடித்து, எதிலேயோ முடிக்கலாம். கட்டுரையின் தலைப்புக்கும், கட்டுரையின் விஷயத்திற்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய அவசியமில்லை. இந்தச் சம்பந்தம் எவ்வளவுக்குக் குறைவாயிருக்கிறதோ, அவ்வளவுக்கு நன்றாயிருப்பதாய் ஜனங்கள் எண்ணிக் கொள்வார்கள். அத்தகைய கட்டுரைகளைப் பார்க்கும் பத்திரிகாசிரியர்களும் கொஞ்ச தூரம் படிப்பதற்குள் குழப்பமடைந்து விடுவார்கள். அதைப் படிக்கும் தொல்லையை விடப் பிரசுரித்து விடுவது நல்லதென்று தீர்மானித்து விடுவார்கள்!”

*

தமிழில் சிறு பத்திரிகைகள்: வல்லிக்கண்ணன்

கேள்வி: “பத்திரிகாசிரியர்களுக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்?”

கல்கி பதில்: “கீழே சில நகல் கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். அவைகளில் ஏதேனும் ஒன்றைத் தழுவிக் கடிதம் எழுதலாம்:

* இது என் ஆயுளிலேயே நான் முதன் முதலாக எழுதியது. ஆதலால், இதில் குற்றங்குறைகள் இருந்தாலும் சீர்திருத்தி வெளியிட்டு ஊக்கமளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

* அன்பீர்! சென்ற முப்பத்திரண்டு வருஷ காலமாய் நான் பல தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விஷயதானம் புரிந்து வைத்திருக்கிறேன் என கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகள் எல்லாம் மாண்டு போயின. நான் மட்டும் உயிரோடிருக்கிறேன். ஆகையால், இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையைத் தவறாது வெளியிடவும்.

* என் வாழ்நாளில் ஒரு கட்டுரையாவது எழுதிப் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென்பது என் ஜீவிய மனோரதம். ஆகையால், இந்தக் கட்டுரையை அடுத்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இதழில் அவசியம் வெளியிட்டு என் மனோரதத்தை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

* மானேஜர் அவர்களுக்கு, நான் உங்களுடைய 17,235-வது சந்தாதாரர். இந்தக் கதையை நீங்கள் வெளியிட்டால், எங்கள் சிநேகிதர்களிடம் சொல்லி, அவர்களையும் சந்தாதாரராகச் செய்வேன்.

* ஐயா! நான் ஒரு ஜரிஜனன். உங்கள் பத்திரிகை ஹரிஜனங்களுக்காகப் பாடுபடுவது உண்மையானால், நான் அனுப்பி இருக்கும் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டியது. இல்லாவிட்டால், உங்களுடைய குட்டு வெளியாகிவிடும்!

*

– ஆனந்த விகடன்
15.01.1933
‘யார் தெரியுமா? நான்தான்!’ என்னும் தலைப்பில் வெளியானது

Letters to the Author: Importance of sending mails to Writers and Editors

புத்தகம் படிப்பதோடு நிற்காமல் எழுதியவருக்கு மடல் போடவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பத்து வயதில் கோகுலம் ஆசிரியரான அழ. வள்ளியப்பா பதில் போட்டது என்னை ஊக்குவித்தது. அப்புறம் பதில் போடாத சுஜாத இன்னும் நிறைய.

வாழ்க்கையினால் ஏதாவது உபயோகம் இருக்க வேண்டும். என்னுடைய உயிரினால் ஏதாவது பலன் இருக்க வேண்டும்.

எழுத்தாளரை வாசிப்பதால், பிறருக்கும் தம் எண்ணங்களைப் பகிரவேண்டும். வெறுமனே கருத்துகளை உறிஞ்சிக் கொண்டு இருக்கக் கூடாது. கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சாலிட்டேர் மட்டும் விளையாடுவது போல் தனிமையைக் கொண்டாட, எதற்காக குழுமத்தில் இருக்க வேண்டும்?

கன்ஃபூசியசு சொன்னது: ‘reading without thinking gives one a disorderly mind; thinking without reading makes one flighty’

ஜெயமோகன்.காம் மட்டும் படித்துவிட்டு, அவருடைய குழுமத்தில் பதில் போடாவிட்டால் அலட்சியம் கலந்த சோம்பேறித்தனம் பெருகிவிடும். புத்தகம் வாசித்து முடித்தவுடன் எழும் எண்ணங்களைத் தொகுத்து அஞ்சல் செய்யாவிட்டால் எதிர்வினையாற்றவே பயம் நிறைந்த அசிரத்தை தோன்றிவிடும்.

உங்கள் பதிவுகளுக்கு சாதாரணமாக யார் பதில் போடுகிறார்கள்? இரண்டு மூன்று வரிகளுக்குள்ளேயே பதில் எழுதிப் போடுவதால், மறுமொழி எழுத அயர்ச்சி ஏற்படுகிறதா? எழுதுபவரை விமர்சித்து காயப்படுத்துவதற்கு பதிலாக, மௌனம் காப்பது சிறந்ததா?

ரஜினியின் எந்திரன்- தி ரோபோ

Sujatha: Printing & Spelling Mistakes

அச்சுப்பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது.

‘சம்போ கந்தா’ என்பதை ‘சம்போகந் தா’ என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகர் ஆகிறார்.

சென்ற இதழில் சில சுவாரசியமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்த்கம் சுமையுள்ள புத்த்கம் ஆனது. தன் கட்டுரையில் உள்ள அச்சுப் பிழைகளைக் கணக்கிட்ட பேராசிரியர் அப்படியே அசந்துபோய்விட்டதார் என்று கேள்வி!

“அத்தா! உனை நான் கண்டுகொண்டேன்”, என்ற ஆழ்வார் வரி, ‘அத்தான் எனை நான் கண்டுகொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது!

அப்புறம் அட்டையில் அறிவித்த பி.எஸ். ஐயா என்பவர் எழுதிய சிறுகதையை உள்ளே தேடு தேடு என்று தேடினேன்.

நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கே. அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள கடினத்தை நான் அறிவேன்.

ஜனவரி, 1967

முந்தைய சுஜாதா « 10 Hot

‘சீறுநீர்’

மொரார்ஜி பிரதமராக இருந்தபோது சுஜாதா எழுதிய வெண்பா –

‘மீசா’ மறைந்து ‘எமர்ஜென்ஸி’ விட்டுப்போய்த்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
………….. குடிக்க வாரும்.

ஸ்லம்டாக் ஷாரூக்

ஸ்வீட் ஷா(ரூ)க்! சுஜாதா (கற்றதும் பெற்றதும்: ஆனந்த விகடன்)

1லிருந்து 100 வரை எத்தனை முறை 9 வரும்?

எஸ்ஆர்கே-யின் கேபிசி-யில் அமிதாபுடன் ஒப்பிடுவதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார் ஷாரூக்கான். ‘பவுஜ்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலில் தலையைக் காட்டி, சினிமாவுக்குப்போய் வென்று முழுவட்டமாக மறுபடி தொலைக்காட்சிக்கு ஒரு சூப்பர் ஸ்டாராக வந்திருக்கிறார். அடிக்கடி கட்டிக்கொள்கிறார்; கண்ணடிக்கிறார்; உம்மா கொடுக்கிறார்; ஜோக் அடிக்கிறார்.

அது சிலருக்கு உவப்பதில்லை. குறிப்பாக, சென்ற வாரம் ஒரு பள்ளி ஆசிரியை ஆள் காட்டி விரல் காட்டி அதட்டியே சொல்லிவிட்டார், ‘என்னைக் கட்டிக் கொண்டால் அடிப்பேன்’ என்று. ஆனால், ஷாரூக் அசரவில்லை. ஆசிரியையின் அம்மாவைக் போய்க் கட்டிக்கொண்டு, செக்கை அவரிடம் கொடுத்தார்.

ஷாரூக் செய்த சில காரியங்கள் இன்ப அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கும். ஒண்ணேகால் லட்சம் வரை ஜெயித்து விட்டு, ஒரு தப்பான பதிலால் இருபதாயிரத்துக்குச் சரிந்து விட்டவருக்கு ஆறுதலாகத் தன் கைக் கடிகாரத்தைக் கழற்றிக் கொடுத்தார்.

‘‘உனக்குக் கல்யாணமானாலும் பரவாயில்லை; உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பு கிறேன்’’ என்று சொன்ன இளம் பெண்ணிடம், ‘‘என் மனைவியிடம் கேட்டேன். யாராவது என் கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டால் சரி என்றாள்’’ என்றார்.

வெல்டன் ஷாரூக்!

(‘கோன் பனேகா குரோர்பதியில் கேட்ட கேள்விக்கு விடை 20)

சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”

cholas-pallava-brahmins-history-culture-research-society-booksபர்டன் ஸ்டைனின் ‘பெஸன்ட் ஸ்டேட் இன் மெடீவல் ஸௌத் இண்டியன்’ (Peasant State and Society in Medieval South India By Burton Stein)

ஹவாய் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியராக இருக்கும் ஸ்டைன் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகளிலிருந்து முற்றிலும் புதிய முடிவுகளுக்கு வந்திருக்கிறார். அதே கல்வெட்டுக்கள்தாம், செப்பேடுகள்தாம்; ஆனால் முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவை.

சோழப் பேரரசு என்பதெல்லாம் ரீல். நாடு, கூற்றம் என்ற பிரிவுகளில் விவசாயிகளும் பிராமணர்களும் ஏறக்குறைய தன்னிச்சையாகப் பரிபாலனம் செலுத்திவந்த நிலப் பகுதிகளின் இறுக்கமற்ற சேர்க்கைதான் சோழ மண்டலம் முழுவதும். சோழ மன்னர்களுக்கு அவர்கள் ஒன்றும் அப்படியே சரண் அடையவில்லை. திறை செலுத்தினாலும் சுதந்தரமாகத்தான் இருந்தார்கள் என்று ஆணித்தரமாகக் காட்டுகிறார்.

அவர் சொல்வது நிசமென்றால் நாம் இதுவரை சோழ ராஜாக்கள் பற்றி எழுதியிருக்கும் சரித்திரக் கதைகள் அனைத்தும் ரீல். எல்லாம் கான்ஸல்!

இந்தப் புத்தகத்தைப் பற்றி நம் தமிழறிஞர்கள் எதுவும் கண்டுகொள்ளாதது வியப்பாகவே இருக்கிறது. ஆழமான ஆராய்ச்சியுள்ள புத்தகம்.

இதில் இருக்கும் அடிக்குறிப்புக்களை நோக்கும் போது கலிபோர்னியா, சிகாகோ போன்ற எத்தனையோ அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிலம்பிலிருந்தும் சங்கத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டி எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது.

மற்ற பேராசிரியர்கள் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கும்போது இங்கு ஒரு கோஷ்டி லெமூரியா சரடு விட்டுக்கொண்டிருக்கிறது.

(ஆகஸ்ட் 1989)

முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு): சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்

Table of Contents
cholas-pandiyans-kings-books-research-history-culture-tn-tamil-naduIntroduction
I South India: The Region
II Formation of the Medieval Agrarian Order Brahman and Peasant in Early South Indian History
III Peasant Micro Regions: the Nadu
IV The Coromandel Brahmadeya Village
V Right and Left Hand Castes (valaṅgai and iḍaṅgai)
VI The Transition to Supra-local Integration in the Twelfth and Thirteenth Centuries
VII The Chola State and the Agrarian Order
VIII The Vijayanagara State and Society

From Books Reviews (Excerpts)

1. Stein’s characterization of the Chola empire (and by extension of other traditional Indian kingdoms) as a “pyramidal segmentary state” with a king whose principal function is more ritual than executive has not been universally accepted, it has come to constitute the central focus of subsequent discussion of the subject.

2. In a usage borrowed from Aiden Southall, Stein portrays the medieval South Indian state as an organic structure that gained its power and cohesion directly from local society. The basic units of the state were not administrative divisions, but peasant microregions (nadus – நாடுகள்).

Within these areas of intensive rice agriculture, dominant peasant Sudra cultivators with powerful Brahmin priestly groups ruled by means of local assemblies (நாட்டார் – nattaar).

Within each naadu or ‘discrete social universe’, the respectable Vellalas, Kammas and Reddys patronized Brahmin-managed temples, individual priests and most strikingly the large Brahmin-landlord-run villages (brahmadeyas – பிரம்மதேசங்கள்).

The dominant Sudras gained legitimacy and ritual purity in return.

The Pallava-Chola states rose by agglomerating or ‘massing’ several hundred nuclear or core areas, but these medieval rulers did not use vast royal standing armies to conquer and destroy local institutions. Nor did they deploy vast numbers of paid royal officials to integrate their empire – in contrast to the older view K.A. Nilakanta sastri and other historians. To be sure, within the “circumscribed core territories of their capitals’, the Pallava-Chozha monarchs exercised “compelling coercive power’ (p. 24). Beyond the Kaveri River Zone, however the king ruled by ‘ritual hegemony’ rather than executive authority, that is (following A.M. Hocart’s theory of ‘sacral kingship’), by the recognition of the monarch’s superior royal dharma on the part of local notables.

Each Pallava or Choza ruler buttressed this claim by constructing and endowing huge temple complexes, by patronizing Brahmins and by furthering the royal Siva cult.

3. The ‘segmentary model’ was applied to the Chola state in South India by Burton Stein in his influential work, Peasant State and Society in Medieval South India (New Delhi, 1980). Stein has been severely criticized by several historians, in particular, R. Champakalakshmi, ‘Peasant State and Society in Medieval South India – A Review Article’, IESHR, 18, 3–4 (July–December 1981), 411–26; B. D. Chattopadhyaya, ‘Political Processes and the Structure of Polity in Early Medieval India’, presidential address, (Ancient India) PIHC, 44 session (Burdwan, 1983), New Delhi, 1984, 25–63; and James Heitzman, ‘State Formation in South India, 850–1280’, IESHR, 24 (1987), 35–61.

சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்

பாலிண்ட்ரோம் (Palindrome) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இடம்வலம் வலம் இடமாகப் படித்தால் மாறாத வார்த்தைகள் வாக்கியங்கள்.

தமிழில்

  • மோருபோருமோ
  • தேருவருதே
  • விகடகவி

இவை மூன்றைத் தவிர வேறு உதாரணங்களை நான் பார்த்ததில்லை.

ஆங்கிலத்தில் இவைகளை அமைப்பது சுலபம். New American Writing பத்திரிகையில் ஒரு கவிதை வரிகள் அனைத்தும் ‘பேலின்ட்ரோம்’ வடிவத்தில் இருந்தன. உதாரண வரி:

But no repaid diaper on tub!

தமிழில் இவ்வாறு நீண்ட சொற்றொடர்கள் அமைப்பது எழுத்தாளனாகிய எனக்கு சவாலாக, ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.

  1. வா தாத்தா வா!
  2. மாவடு போடுவமா?
  3. மாலா போலாமா?
  4. யானை பூனையா?
  5. யானையா பூ யானையா?
  6. போ வாருவா போ.

கொஞ்சம் சந்திப்பிழைகளை அனுமதித்தால்:

  1. மாமர சில சிரமமா?

முழுசாக அர்த்தம் வேண்டும் என்று கட்டாயமில்லாவிட்டால் மிக நீண்ட வாக்கியங்கள் அமைக்க இயலும்

  1. ஓர் பாயை தின வானதியை பார் ஓ!
  2. துவள் கொடி மரவுரி பரிவிர மடிகொள்வது!

வாசகர்கள் முயற்சி பண்ணி எனக்கு எழுதினால் இந்தப் பகுதியில் வெளியிடுகிறேன்

மே 1990

முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு)

The following poem, which Lydia presented in class, was based on an assignment to create your own form. Maxine Chernoff and I (Paul Hoover's Poetry Blog: Lydia Tomkiw) published it in one of the first issues of New American Writing, and it was also included in the first edition of The Best American Poetry [1988], ed. David Lehman and John Ashbery. The poem consists entirely of palindromes, some of which she must have created to suit the poem, for instance the next to last line:

Six of Ox Is

O, no iron, o Rio, no
red rum murder;
in moon: no omni
devil-lived
derision; no I sired
Otto,
a
drab bard,
Bob,
but no repaid diaper on tub.
O grab me, ala embargo
emit time,
Re-Wop me, empower
Eros’ Sore
sinus and DNA sun is
fine, drags as garden if
sad as samara, ruff of fur, a ram; as sad as
Warsaw was raw.

ராபர்ட் ஃப்ராஸ்ட்: சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கங்கள்)

நான் ஒரு கவிஞனில்லை. கவிதையை மொழிபெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது. இருந்தும் ஃப்ராஸ்டின் கவிதைகளைப் படிக்காதவர்களை ஃப்ராஸ்ட்டுக்கு அழைக்க இந்த மொழிபெயர்ப்பு உதவும் என நம்புகிறேன்.

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது — நீயும் வாயேன்
oOo
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்
அதன் அம்மாவின் பக்கத்தில்
நின்றுகொண்டிருக்கிறது – ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது
தடுக்கி விசுகிறது
அதிக நேரம் ஆகாது — நீயும் வாயேன்

– ஆகஸ்ட் 1975

அசல்:

The Pasture by Robert Frost

I’m going out to clean the pasture spring;
I’ll only stop to rake the leaves away
(And wait to watch the water clear, I may):
I sha’n’t be gone long.—You come too.

I’m going out to fetch the little calf
That’s standing by the mother. It’s so young,
It totters when she licks it with her tongue.
I sha’n’t be gone long.—You come too.

கொசுறு: The Death of the Hired Man by Robert Frost

நடிகர் நம்பியாரா இப்படி செய்தார்? – வதந்தி

முன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:

“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.

முதல் முறை ‘என்ன சார்! நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல?’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.

கோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”

பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.

இப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.