Tag Archives: Rajni

இராசாளி – ஜெயிலர்

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு. அந்தக் கழுகைப் போலவே நாலைந்து போலிப் பறவைகள் உண்டு,

கழுகைப் போலவே உலா வரும். Prairie Falcon (Falco mexicanus), Red-Tailed Hawk (Buteo jamaicensis), Turkey Vultures (Cathartes aura), Black Kite (Milvus migrans) என நால்வரை உடனடியாக நினைவு கூறலாம். பருந்து, ராசாளி, கூளி, சுவணம் எனத் தமிழில் சொல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும் முன்னே பின்னே கேட்காதவருக்கு அனைத்தும் கத்தல் சப்தம்.

உயரப் பறக்கும் கழுகிற்கும் இராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என்று இப்பொழுது ஏன் ஆராய வேண்டும்?

ஏன் என்றால், தலைவர் ஏதோ கழுகு, காகம் உவமேயம் சொல்லியிருக்கிறார் அல்லவா!?

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
6.18.109 (௧௦௯)

–கம்பராமாயணம், நாகபாசப் படலம்–இந்திரஜித், இலக்குவன் போர்.

பொருள்:– இநத்திரஜித், கழுகின்‌ சிறகுகளையுடைய அம்புகள்‌ ஒரு கோடியைக்‌ கைகளால்‌ தொடுத்து விரைந்து எய்தான்‌ ; இளவலாகிய இலக்ஷ்மணனும்‌ கழுகின்‌ சிறகுகளையுடைய ஒரு கோடி அம்புகளைத்‌ தொடுத்து அவ்வம்புகளைத்‌ தடுத்தான்‌ ; அரைச்சந்திரன்‌ போன்ற முகப்பினையுடைய கோடி அம்புகளை இலக்குவன்‌ ஆராய்ந்து இந்திரசித்தின்மேல்‌ விட்டான்‌ ; இந்திரசித்தும்‌ அரைச்சந்திர அம்புகளை கோடி தொடுத்து அவ்வம்புகளை அறுத்தான்‌.

குறிப்பு: – கங்கம்‌ – கழுகு. பத்திரம்‌ – சிறகு. கழுகின்‌ சிறகுகள்‌ பொருந்திய அம்புகள்‌ கங்கபத்திரம்‌ எனப்பட்டன. பாதிமதி போன்‌.ற முகப்பினை உடைய அம்புகள்‌ என்பார்‌, ’திங்களில்‌ பாதி’ என்றார்‌. இதுகாறும்‌ இந்திரசித்து விடுத்த அம்புகளை மட்டுமே அறுத்துக்‌ கொண்டிருந்த இலக்குவன்‌ இப்போது திங்களிற்‌ பாதியை ஒத்த அம்புகளை இந்திரசித்தின்மேல்‌ விடுத்தான்‌ என்றவாறு. தீர்த்தல்‌ – அழித்தல்‌.

விக்ரம் படத்தில் கமல் விதவிதமானத் துப்பாக்கிகளை வைத்து சுட்டுத் தள்ளுவார். அவருக்கு சளைக்காமல் ஜெயிலரில் ரஜினியும் ‘மனிதன்’ போல் ரகரகமாக குண்டு போடுகிறார்.

நடுவில் எதற்கு கம்பராமாயணம் என்று கேட்கிறீர்களா?

1993ல் ’கலைஞன்’ படத்தில் இந்திரஜித் என்னும் கதாபாத்திரத்தில் கலைஞானி நடிக்கிறார். அந்தக் கலைஞன் விக்ரமில் விட்ட அம்புகளை சமாளிக்க இளவல் ஜெயிலரில் எய்கிறார். இதைத்தான் அன்றே கம்பர் பாடியிருக்கிறார். அந்த கங்கபத்ரம் = பின் நுனியில் கழுகின் சிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகளை (பத்ரம் என்றால் சிறகு) இசை வெளியீட்டு விழாவில் குறிப்பால் உணர்த்துகிறார் இரஜினி.

அதெல்லாம் இருக்கட்டும்? படத்தை ரசித்தேனா? மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறதா? தமிழ் சினிமாவின் மைல் கல்லா? ரஜினியின் நடிப்பிற்கு சிகரமா? அடுத்த ஆர்.ஆர்.ஆர். மாதிரி ஆஸ்காருக்கு அனுப்பலாமா?

அகாடெமி விருதுகளில் புதியத் தலைப்பாக ‘செயற்கையாக தானியங்கியாக உருவாக்கிய உயிர் போன்ற இயக்கம் காட்டும் படங்களுக்கான விருது’ ஒன்றை வழங்கினால், அது நிச்சயம் ஜெயிலருக்குக் கிடைக்கும்!

சொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்

சொல்வனம் பத்திரிகைக்கு என் கண்டனங்கள்!

தமிழரின் நாயகன், தமிழ் மக்களின் இதயத் துடிப்பான ரஜினியை புகைக்கு அடிமையானவர் போல் சித்தரித்து அதை அவர்களின் சிகரெட் கட்டுரைக்கு படமாகப் போட்டிருக்கிறார்கள்.

ரஜினி இப்பொழுதெல்லாம் பொதுவில் புகை பிடிப்பதே இல்லை. சினிமாவில் கூட எந்திரனாக நடிக்க ஆரம்பித்து விட்டதால் அவரிடம் இருந்து புகை வந்தால் அது மின் கோளாறினால் மட்டுமே.

நடிகனையும் கதாபாத்திரத்தையும் நாம் நிஜத்தோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. ராணி முகர்ஜியை முத்தம் கொடுக்கிறான் என்று பார்க்காமல், தன் மனைவியை சாகேத் ராம் உதட்டோடு உதடு கவ்வுகிறான் என்று பார்க்க வேண்டும். இது எப்போது தமிழ இலக்கியகர்த்தாக்களுக்கு உதயமாகி மனதில் நிலை நிற்குமோ?

எம் எஸ் சுப்புலஷ்மி வாயில் தம் வைத்துக் கொண்டிருப்பதாக காட்சியளித்தாரே… சிவாஜி எத்தனை படங்களில் இப்படி வந்தார்! அதை எல்லாம் முன்னுதாரணமாக இந்தப் பத்தியின் ஆசிரியர் துணை கொள்ளவில்லை. இதற்கு ஆசிரியர் குழு முழு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வ்வொரு படத்திற்கு அடியிலும், எந்த வருடன் வந்த திரைப்படம், யாராக நடித்த படம் என்று போட வேண்டும்.

மேலும் இந்தப் பதிவில் “எலி” போன்ற சமீபத்திய படங்கள் குறித்த பதிவுகளும் இல்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது. அதில் வடிவேலு சிகரெட் கடத்தல்காரர்களை எம்ஜியார் போல் துரத்திப் பிடிப்பார். அது தமிழ் சினிமாவின் மைல்கல். கருத்தும் சித்தாந்தமும் கொண்ட கோலிவுட் காவியம். அதை ஏன் ஆசிரியர் இருட்டடிக்கிறார்?

”பத்த வச்சுட்டியே பரட்ட” என்பவர் கவுண்டமணி.

மாணிக்கம் புகை பிடித்ததில்லை; பாட்ஷா என்பது அவரின் மாற்று உருவம்; அதாவது இருமுனை சீர்குலைவு.பந்தயத்திற்காக வெறுமனே வாயில் பத்து முறை தூக்கிப் போட்டு பிடித்தவர் ”நினைத்தாலே இனிக்கும்” Roald Dahl – அதைக் காப்பியடித்த கே பாலச்சந்தர்.பொங்குவோம்! பொங்க வைப்போம்!!

அது கூட மற்றவர்கள் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே: “சார்… நீங்க அந்த வெண்குழல் சாம்பல் கூட்டை உதிர்ப்பதே அழகு”னு சொல்பவர்களுக்காக மட்டுமே – அவர் உதட்டை வத்தி தொடுவதில்லை. போதையும் உள்ளே செல்வதில்லை.

சுருக்கமாக பரமானந்தம்! பரபிரும்மம்!!

எண்பதுகளில் வறுமையின் காரணமாக பீடி பிடிப்பவரை குறிவைக்காதது ஏன்?

ரஜினி என்பவர் காசுக்காக புகை பிடிப்பவர்! காசு கொடுத்து புகை பிடிக்கும் ஒபாமாவை ஏன் சொல்லவில்லை?

சார்மினார், வில்ஸ் என்று விளம்பரத்திற்காக ஆடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்களை ஏன் குறிவைக்கவில்லை…

கண்டிப்போம்!

கதாநாயகிகள் கால் மீது கால் போட்டுக் கொண்டு புகை பிடிப்பதை “லைட்ஸ் ஆன்” வினோத் என்றோ எழுதியிருக்கிறார். இந்த மாதிரி சரித்திர துணுக்குகளும் இந்தப் பதிவில் இல்லை. இப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்பட வேண்டும். என் வக்கீல்களை உசுப்பி விட்டிருக்கிறேன். அவர்கள் உங்கள் சார்பாக ஒவ்வொரு நாட்டிலும் இப்பொழுதே மானநஷ்டம் கோருவார்கள்.

ரவி நடராஜன் இவ்வாறு பரிந்துரைத்தார் என்றால் அவருக்கும் என் கண்டனங்கள். ரஜினி ரசிகர் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். அனைவரும் பொங்குங்கள். கொதித்தெழுங்கள். கறுப்புக் கொடி காட்டுங்கள். எங்கே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்? வாருங்கள்.

காலா என்னும் ராமர் – ரஜினியாயணம்

சமீபத்தில் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் இன்னொரு பகுதி வந்தது. அதில் எல்லா வீரர்களும் வந்திருந்தார்கள். வொண்டர் வுமன், ப்ளாக் பாந்தர், எறும்பு மனிதன், ஹல்க் என்று முந்தைய பகுதிகளில் தனித்தனியாக வந்த அனைத்து அடிதடி சூரர்களும் தோன்றினார்கள். அந்தப் படத்தில் கதையும் கிடையாது; லாஜிக்கும் கிடையாது. ஜாலியாக பார்க்கலாம். அந்த மாதிரி ஒரு படம் காலா.

குருவியின் முட்டை பொரித்தவுடன் இருக்கும் சின்னஞ்சிறு குஞ்சுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கண் திறந்திருக்காது. உடம்பில் வாய் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஒரு சிறிய கூட்டில் மூன்று/நான்கு குட்டிகள் இருக்கும். எப்பொழுதும் தன் வாயைத் திறந்து வானத்தைப் பார்க்கும். அம்மா குருவி அவ்வப்போது வந்து அதற்கு தீனி போடும். எவ்வளவு தீனி போடவேண்டும், எந்தக் குஞ்சிற்கு போட வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த அம்மாவிற்குத் தெரியும். ரசிகக் குஞ்சுகளுக்கு ரஜினி அவ்வாறு தீனி போடுகிறார்.

ரஜினி எப்பொழுதும் கருப்பு ஆடை அணிந்து வருவதால் ‘காலா’ என்று பெயர் வைத்திருப்பார்களோ என சந்தேகப்படும் அளவு, கரிகாலனின் குடும்பத்தினர்கள் எல்லோரும் ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளை நிற சருமத்தைப் பாதுகாக்கிறார்கள்.

சமீபத்திய ஹிந்திப்படம் ஏதாவது நீங்கள் பார்த்தீர்களா? மாயாவி என்னும் வித்தியாசமான பெயர் கொண்ட “ஐயாரி”, திக்குவாயையும் தலித் சிறுவர்களையும் மையப் படுத்திய “ஹிச்சிகி”… அவ்வளவு ஏன்? திரையில் பிரும்மாண்டத்தையும் பார்ப்பனீயத்தையும் போட்டுத் தாக்கிய “பத்மாவத்” எனப்படும் பத்மாவதி? அதன் பிறகும் தமிழில் இன்னும் எண்பதுகளிலேயே வாழும் படங்களை ரசிப்பவர்களைக் காலா குறிவைக்கிறது.

“Power is my life” போன்ற தலைவலி வரவழைக்கும் வசனங்களுக்குக் கூட உயிர் கொடுக்கிறார் நானா படேகர். கல்லூரியில் “பரிந்தா” பார்த்த போதில் இருந்து இவரைப் பார்த்து வியந்து வருகிறேன். ரொம்ப வருடமாக இளைய தளபதி விஜய் போன்றோர் இவரை விட்டு வைத்தது தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

இராமரையும் இராவாணனையும் வைத்து படத்தின் உச்ச கட்ட காட்சியில் என்னவோ சொல்ல வந்தார்கள். நானா படேகர் என்பவர் ராமருக்கு எதிரில் இருக்கிறார். ராவணன் என்பவர் ராமனுக்கு எதிரில் இருந்தார். எனவே, நானா படேகர் என்பவர் ராவணனின் குறியீடு.

ராமனின் திருமணம் முடிந்து ஊர் திரும்பும்போது ராமனின் தந்தை தசரதர் கொல்லப்படுகிறார். இங்கும் “வேங்கையன்” அவ்வாறே இறக்கிறார். எனவே, தசரதரின் மகன் ராமனாக, ரஜினி வேடம் கட்டுகிறார் என புரிந்து கொள்ள வேண்டுமா?

அல்லது சீதையின் அக்னி பிரவேசம் மாதிரி, கரிகாலன் அக்னி பிரவேசம் செய்து “ஜரீனா” மீது உள்ள காதலை தூயப்படுத்தி, தான் களங்கமற்றவர் என நிரூபிக்க நினைக்கிறாரா?

அனுமன் தோள் மீது சவாரி செய்யும் ராமர் போல், கரிகாலன் காலாவிற்கும் பைக் ஓட்டுகிறார் ஒருவர். அந்த பைக் வானரத்திற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் வானர சேனையா?

ராமனுடன் எப்போதுமே கூட இருப்பவர் இலஷ்மணர். இங்கே சமுத்திரகனி கூட துணை நிற்கிறார்.

இவ்வளவெல்லாம் யோசிக்க வேண்டாம்… இந்தப் படத்தைப் பாருங்கள்:

இப்போது இதைப் பாருங்கள்:

 

கபாலியை முன் வைத்து…

Kabali

ஆடையை முன் வைத்து…

Knights of the Round Table – Simple English Wikipedia, the free encyclopedia

ஆர்த்தர் அரசரின் வட்டமேஜையில் பன்னிரெண்டு பேர் இருந்தார்கள். கபாலி அழைக்கப்பட்ட விருந்துகளில் எத்தனை பேர் இருந்தார்கள்?

  1. கபாலியும் தலித் அரசியலும்
  2. Kabali (2016) – Tamil | Karundhel.com
  3. கபாலி – கனவுக்கும் நனவுக்கும் இடையே / கவின் மலர் – | malaigal.com

”ஒரு ரெண்டு வருஷம் இது மாதிரி வீட்டில் நாம வாழ்ந்திருப்போமா?” என்று கேட்கும் கபாலியிடம் குமுதவல்லி இத்தனை ஆண்டுகள், இத்தனை மாதங்கள், இத்தனை நாட்கள் எனத் துல்லியமாய்க் கூறுகிறார். சிறையில் இருக்கும் கபாலிக்குத்தான் நேரம் அதிகம். கம்பி எண்ணுவதோடு சேர்த்து இந்த நாட்களையும் எண்ணும் வாய்ப்பு அவருக்கு அதிகம் இருக்கிறது. ஆனாலும் இது ஓர் ஆண் மனோபாவம்.

பெரும்பாலான ஆண்களுக்கு தேதி மறப்பதும், இப்படியான காலம் எவ்வளவு என்பதை மறந்துவிடுவதுமாக இருப்பார்கள். பெண்கள் ஒவ்வொரு தேதியையும் நினைவு வைத்துக்கொண்டு இருப்பதும், அடுத்து காதலனையோ கணவனையோ எப்போது சந்திக்க முடியும் என்று நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதும், சேர்ந்திருந்த நாட்களை கணக்கிட்டுக் கொள்வதுமாக கூடுதலான காதலில் திளைக்கும் பெண் மனதை மிக இயல்பாகச் சொல்கிறது இவ்வசனம். இயக்குநர் ரஞ்சித் ரொமான்ஸ் காட்சிகளை உணர்வுபூர்வமாக அமைப்பதில் மூத்த இயக்குநர்களுக்கு இணையானவராக இருக்கிறார். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என அனைத்துப் படங்களிலும் அவை மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளன.

சென்னைக்கு வரும் கபாலியும் மகளும் விடுதி அறையில் தங்குகையில் உடன் வரும் கறுப்பான மனிதரான விஷ்வந்த்தை (அட்டகத்தியில் தினேஷின் அண்ணனாக நடித்தவர்) சந்தேகப்படும் மகளிடம் “முகத்தை வைத்து முடிவு செய்யாதே…” என்கிறார். ஆனால் அவர்தான் இறுதிவரை உதவுகிறார்.

 

clothing_Invisiblia_Sunglasses_Protect_Insulate_Dress_Change

குளிராடியை முன் வைத்து…

Scientists Explain How Clothes Can Make You Smarter : Shots – Health News : NPR

பள்ளி வகுப்பில் அச்சுறுத்தியவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள குளிராடியை அணிந்தவனின் வாழ்க்கை சம்பவங்கள் –

  1. கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து | செங்கொடி
  2. சின்ன சின்ன சினிமா: கபாலி – ஓர் அலசல்
  3. கபாலி – சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்
  4. வாழிய வாழியவே: ரஜினி.
  5. Paradesi @ Newyork: நியூயார்க்கில் கபாலி !!!!!!!!!!
  6. மின்னற் பொழுதே தூரம்: ஆங் லீயும் டோங் லீயும்: மிஸ் பண்ணின முருகதாஸ்
  7. திரை விமர்சனம்: கபாலி – தி இந்து
  8. அதிரடிக்காரன்: கபாலிக்கு பறக்கத் தெரியாதா?!!
  9. சினிமா சினிமா: கபாலி (2016) – முழுமையான் படம்

பாலய்யாவை முன் வைத்து…

Rajni_Kabaali_Baliah_My_Father_Dalit

பாலய்யா டா! – தி இந்து

 

One_Out_of_Many

பலரில் ஒருவரை முன் வைத்து…

“That my life will be of interest to readers I dare not assume. But it is an unusual one, and for that reason alone, record should be made of it.”
~ from Allison Amend’s Enchanted Islands

 

purusharthas

புருஷார்த்தத்தை முன் வைத்து…

இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம், பொருள், இன்பம், வீடு – என்பன.

  1. இவற்றுள் அறமாவது கடமை. அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும், பிறருக்கும் நீ செலுத்த வேண்டிய கடமை. “பிறர்’ என்பதனுள் வையகம் முழுவதும் அடங்கும். தொழில்களெல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும்.
  2. பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும், புகழும் நிறைந்திருத்தல், நல்ல மக்களைப் பெறுதல், இனப்பெருமை சேருதல், இவையெல்லாம் செல்வம். இந்த செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.
  3. இன்பம் என்பது இனிய பொருட்களுடன் உயிர் கலந்து நிற்பது. பாட்டு, கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது. இவ்வின்பங்கள் எல்லாம், தமிழா, உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. நீ எப்போதும் இன்பம் எய்துக.
  4. வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. “வீடு’ என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். மேல் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோருக்கு ஈசன் தானாகவே வீட்டு நிலையருள் செய்வான். தமிழா, உனது புருஷார்த்தங்கள் கைகூடுக!
    – சி.சுப்பிரமணிய பாரதி

kabai-posters-Style_da

மலேசியாவை முன் வைத்து…

தமிழ்நேசன், தமிழ்மாறன், வீரசேகரன் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவும், கபாலி தாழ்த்தப்பட்ட வகுப்பினராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டு.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறக்கூடாது என்று இதர பிற்படுத்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள் என்பதையே கபாலியின் கதாபாத்திரம் எடுத்துரைக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

“நீங்கள் ஆண்ட பரம்பரைடா, இனி நாங்கள் ஆளப் பிறந்தவங்கடா” என்ற வசனம், தமிழக அரசியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்றே குற்றம் சாட்டப்படுகிறது.

அதேபோல், “நாங்கள் கோட்சூட் போட்டால் உங்களுக்குப் பிடிக்காதா, முன்னேறினா உங்களுக்குப் பிடிக்காதுன்னா சாவுங்கடா” என்ற வசனமும், ஒரு தாழ்த்தப்பட்டவர் இதர பிற்படுத்தப்பட்டோரைப் பார்த்தே சொல்லப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

Kabaali_graphics

ரஜினியை முன் வைத்து…

Rajkumar_Muthuveeran

Kabali-shooting-spot-still1-1

கபாலியை முன் வைத்து…

Hatred is the most accessible and comprehensive of all the unifying agents. Mass movements can rise and spread without belief in a God, but never without belief in a devil. -Eric Hoffer, philosopher and author (25 Jul 1902-1983) – The True Believer

Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்

தமிழராக இருப்பதற்காக இரண்டு பேரை மரியாதையுடன் பாராட்டத் தோன்றும். ஒருவர் சாங் முதற்கொண்டு எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இயக்கும் சாங்கர் எனப்படும் இயக்குநர் ஷங்கர். இவரோடு ரஜினிகாந்த் இரண்டு படம் செய்திருக்கிறார். இரண்டாவது விமர்சனத்தில் கறார்தன்மையும் அந்த மாதிரி விமர்சனம் தன்னிடம் வராமல் இருக்க செதுக்கும் ஸ்வச்ச எழுத்துக்காரர் ஜெயமோகன். இவருடன் மணிரத்னம் படம் செய்திருக்கிறார்.

அதன் பிறகு “கோச்சடையான்” போன்ற ஆக்கங்களும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்றன.

கதை மட்டும் வெகு சிரத்தையாக முழுமையாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் வைத்தால் அசைப்படம் (அனிமேஷன்) சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், அந்த நுட்பம் ஓரளவாவது பார்க்க சகிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதில் அசிரத்தையா? அலட்சியப் போக்கா? அறியாமையா? என விவாதிக்க வைக்கிறார்கள்.

“வேட்டையாடு விளையாடு” படம் பார்த்தவுடன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் சி.எஸ்.ஐ. போன்ற எந்த போலீஸ் சீரியலும் நம்பகத்தன்மையிலும் கதாம்சத்திலும் பரபரப்பிலும் “வே… வி.”ட்டை விட பன்மடங்கு சிறப்பாக இருக்குமே என தமிழ்ப்படங்களின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்தது. அதே போல் சாதாரண டிவி அனிமேஷன் கூட உயிர்ப்போடும் உள்வாங்க வைக்கும் விவரங்களோடும் சூழலின் தீர்க்கமான துல்லியமான விவரணைகளுடனும் அமைந்திருக்கும். அந்த அளவு தர உந்துதல் கூட இல்லாத அசிரத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கோச்சடையானில் மின்னுகிறது.

வெறும் ரஜினிகாந்த் பெயரை வைத்து கல்லா கட்டலாம் என மகள் நினைக்கிறார். அதற்கேற்ப அரங்குகளும் அகிலமெங்கும் நிறைகிறது. எவருக்கும் மோசமானப் படைப்பை பார்க்கிறோம் என தர்மசங்கடம் எழவில்லை. படம் உருவாக்கியவருக்கும் அல்ப பவிஷுடன் பழுதான பொருளை சந்தையில் தள்ளுகிறோம் என்னும் மனக்கிலேசமும் எழவில்லை. இப்படியான அரசியல், கலை, விளையாட்டு, சூழலில் இயங்க இந்தியாப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒன்றரைக்கண். அவர்களின் பின்புலத்தில் படு கேவலமான கிராபிக்ஸ். நடுவில் சலனப் பதிவு சல்லியடிப்பு. தீபிகா படுகோனேயை ஒரு கோணத்தில் பார்த்தால் ஐஷ்வர்யா ராயைப் போல் இருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சிரிக்கும் முகபாவனை. காதலனை சிறையில் போட்டாலும் அதே சிரிக்கும் முகபாவம். அசப்பில் ரானா (ரஜினி கதாபாத்திர)த்தின் தங்கையைப் போலவே இருக்கிறார். இருவருக்கும் ஆடை மட்டுமே வித்தியாசம்.

“அரவான்” ஆதியைப் பார்த்தால் ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்தில் வரும் நட்சத்திரங்கள் போல் முகமற்று சொரணையற்று பாவமற்று பூசி மெழுகின களிமண் சிற்பம் போல் இருக்கிறது. டிஸ்னி படங்களில் வரும் வர்ணஜாலம் வேண்டாம். டோரா போல் கொஞ்சமாவது மினுக்கியிருக்கலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு சலனப் பதிவு அசைவூட்டப் படம் எடுப்பதற்கு பதிலாக அசல் ரஜினியை வைத்து எடுத்திருந்தாலே படம் பாந்தமாயிருந்திருக்கும்.

Rajinikanth Interview on ‘Endhiran’ The Robot on Sun TV

முந்தைய ரஜினி பதிவு: Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை

On Director Shankar:

On Actress and Heroine Aishwarya Rai:

On his Spiritual Journeys to Kedarnath and Badrinath:

Why Rajni is so successful? What makes him tick?

Rajnikanth’s dance movements and Next Projects:

2012 Thuglaq Events: Political Speech: Photos, Talks. Coverage: Chennai & Cho S Ramasamy

ரிப்போர்ட் இங்கே: http://idlyvadai.blogspot.com/2012/01/42-live.html

வாயில் விரல் பொத்தி ஆச்சரியப்படுபவர்கள் இங்கே:

தினமணி

அதிமுகவுக்குத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால் குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும் என்றார் பத்திரிகையாளர் சோ.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

“எந்த ஊழலிலிருந்தும் காப்பாற்றக் கூடியவராக பிரதமர் மன்மோகன் சிங் மாறியுள்ளார். யார் என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் நல்லவர்தான் என்று கூறுபவர் அவர்.

இப்படிப்பட்டவரின் தலைமையில் செயல்படும் மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்ற ஒரு நல்ல காரியத்தை செய்ய முனைந்து கொண்டிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள் எதிர்க்கின்றபோதும், அது நல்ல விஷயம்.

போட்டி காரணமாக கலப்படம், எடைக் குறைப்புகள் ஒழிய மத்திய அரசின் இந்த முயற்சி முக்கியக் காரணமாக அமையும். ஆனால், இதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் மத்திய அரசு செய்துவிடவில்லை.
தேர்தலின்போது கறுப்புப் பணத்தை 100 சதவீதம் ஒழிப்போம் என மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், இப்போது வியாபாரம் போய்விடும் என்பதால், வெளிநாட்டில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிடத் தயங்குகின்றனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழலுக்கு மேல் ஊழலுக்கு உடந்தையாக மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் கொடுக்க முடியும். அதேநேரம் பாஜகவிலும் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.

காங்கிரஸ் என்றால் சோனியாவை நம்பித்தான் கட்சியே உள்ளது. இதுபோல் ஜெயலலிதா இல்லையெனில் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்காது.
அவருக்கு முன்னர் எம்.ஜி.ஆர்.தான் அதிமுக என்றிருந்தது. ஆனால் பாஜகவில் நிலைமை வேறு. தகுதியான நபர்கள் முன்னிலைக்கு வந்துகொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தலைவர். இந்த சுதந்திரம் காரணமாக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி உள்ளது. இதுதான் பாஜகவின் பிரச்னை.

குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, தனது திறமையை அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார்.
அதற்குப் பிறகும் கூட அகில இந்திய அளவில் அவரை அங்கீகரித்துக் கொள்ளவில்லையெனில் அது நமது முட்டாள்தனம். நரேந்திர மோடியை இந்திய அளவில் அங்கீகரிக்க வைக்கும் முயற்சியை மூத்த தலைவர் அத்வானியால்தான் செய்து முடிக்க முடியும். ஏனெனில், அவரால்தான் பாஜகவையும் வழிநடத்த முடியும்.

பிரதமர் வேட்பாளரை முதலில் அறிவிக்க வேண்டும். அதுவே, வாக்காளர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். ஆனால், அதுவே மிகப் பெரிய பிரச்னையையும் பாஜக-வுக்குள் ஏற்படுத்திவிடும்.
இதுபோன்ற காரணங்களால், பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல், பாஜக ஆதரவு ஆட்சிதான் மத்தியில் அமையும் என்றால், முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அதற்குத் தேவையான தேசப் பற்றும், அர்ப்பணிப்பும் அவருக்கு உள்ளது.

இலவசங்களைப் பற்றிக் கவலைப்படாத அளவுக்கு மக்களை வளர்க்க வேண்டும்.

ஆனால், இலவசங்கள் அறிவிக்கப்படாவிட்டால், திமுகவை அகற்ற முடியாத நிலை தமிழகத்தில் நிலவியது. அதன் காரணமாகத்தான் அதிமுகவும் இலவசங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

சசிகலா மற்றும் அவருடைய கூட்டாளிகளைக் கட்சியிலிருந்து நீக்கியது, ஒரு தவறு நடக்கிறது என்றால் அதன்மீது முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு தெளிவான, தைரியமான நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்கான சிறந்த உதாரணம்.

குஜராத்தைவிட சிறந்த ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது. ஆனால், தொடர்ந்து ஆட்சிசெய்ய வாய்ப்பு கிடைக்காததுதான் தமிழக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.

எனவே, தொடர்ச்சியாக 10 ஆண்டு ஆட்சி வாய்ப்பு அதிமுக-வுக்குக் கொடுத்தால், குஜராத்தைத் தமிழகம் மிஞ்சிவிடும்’ என்றார் சோ.

தினமலர்

“”அ.தி.மு.க., எங்கள் இயல்பான கூட்டணிக் கட்சி,” என, பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி கூறினார். அவரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் நேற்று சென்னை வந்தனர். அத்வானி, தனியார் விமானம் மூலம் டில்லியிலிருந்து நேற்று மதியம் 2.00 மணிக்கு வந்தார். மோடி, தனி விமானம் மூலம் ஆமதாபாத்திலிருந்து 2.45க்கு வந்தார். அவரை, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். சமீபத்தில் காலமான, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நம்பியார் வீட்டுக்குச் சென்ற இருவரும், அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினர். அங்கிருந்து கிளம்பி, “துக்ளக்’ ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அத்வானி பேசியதாவது: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்கும் நிலையில், சோவுடைய நிகழ்ச்சியில் அத்வானியும், மோடியும் கலந்து கொண்டால், கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது. பார்லிமென்டில் பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில், அ.தி.மு.க., எங்களுக்கு எந்தக் குறைவுமற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அ.தி.மு.க.,வும், நாங்களும் இயல்பான கூட்டணியாக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய, மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் பொதுவான கொள்கைகள் நிறைய இருக்கின்றன. மற்றபடி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இவ்வாறு அத்வானி பேசினார்.

நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை, மத்திய அரசு, பழி வாங்கும் போக்கில் நடத்துகிறது. மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆண்டால், அவர்களை சகல வித்தைகளையும் கையாண்டு பழி வாங்குகிறது. சமீபகாலமாக, தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி, அவர்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதற்கு முக்கிய சாட்சியமாக நான் திகழ்கிறேன். சி.பி.ஐ., வருமான வரித்துறை, நீதித்துறை என, தங்களின் கட்டுப்பாட்டில் எத்தனை துறைகள், முகமைகள் இருக்கின்றனவோ, அத்தனையையும் பயன்படுத்தி தொந்தரவு கொடுத்துப் பார்க்கிறது. வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள், நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறியிருக்கின்றன. பயங்கரவாதத் தடுப்பு, வளர்ச்சிப் பாதை, பொருளாதார முன்னேற்றம் என, அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்த அரசாக, மத்திய அரசு திகழ்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.

“துக்ளக்’ ஆசிரியர் சோ பேசுகையில், “”எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின், புதிய மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை வழங்கும் தகுதி, பா.ஜ.,வுக்கு மட்டுமே இருக்கிறது. ஒருவேளை, அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ., ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு, விமானம் மூலம் அத்வானி டில்லிக்கும், மோடி ஆமதாபாத்துக்கும் சென்றனர். முன்னதாக, இருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்துப் பேசுவர் என செய்திகள் வெளியாகின. ஆனால், அத்தகைய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.

Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை

தமிழ் இந்தியா டுடே - ரஜினிகாந்த் சிறப்பிதழ்நான் ரஜினியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் நிழலாடுகிறார்.

ராஜாதி ராஜா. அவரின் ஒவ்வொரு சொல்லும் இ.பி.கோ. சட்டமாக பின்பற்றும் அடிப்பொடிகள் கொண்ட இராஜாங்கம். ’ஏதாவது முத்து உதிர்க்க மாட்டாரா?’ என்று ஏங்கும் கூட்டம். அவருக்கு திக்குவாய்.

இந்தியாவின் ஜனாதிபதியை விட ஒப்புக்கு சப்பாணியான இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு எதிராக ஒலித்த குரலாக இருந்தவர். மாட மாளிகையில் வசித்தாலும் போர் வீரனின் சின்னமாக பாட்டாளியின் குறியீடாக முன்னிறுத்தப்பட்டவர். பட்டதரசராக சாமுத்ரிகா லட்சணங்கள் கொண்ட அண்ணன் இருந்தும் ராஜாதி ராஜா ஆனவர்.

ரஜினியை விட திறமையான நடிகர்கள் இருந்தும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனவர். வெறுமனே திரையில் தோன்றும் ஹீரோவிற்கு ‘ரஜினி வாய்ஸ்’ பிராண்ட் கொடுத்து, ராஷ்டிரபதியின் ராஜாங்கமாக தமிழகத் தேர்தலை மாற்றிய பெருமை பிபிசி ஊடகங்களுக்கு உண்டு. சமயத்திற்கேற்ப ஹிட்லர் ஜெயலலிதா, ஸ்டாலின் கருணாநிதி என்று முழங்குவதும் உண்டு.

பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளுக்கும் முப்படைகளுக்கும் அரசராக இருந்தவருக்கு திக்கு காட்ட இயலாத இயல்பு; ரேடியோவில் பேசுவதற்கான மைக்ரோஃபோனைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார் என்பதை ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ திரைப்படம் சித்தரிக்கிறது.

தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர், முரட்டுக் காளை, ஊர்க்காவலன் என்று போஸ்டரில் ரசிகர்கள் உறுமும் தளபதியும்; தனிக்காட்டு ராஜாவாக, பாயும் புலியாக அதிகாரத்தை நோக்கி சொடக்குப் போட்டு கேள்வி கேட்கும் இராணுவன் வீரனும் தனி மனிதராக பேப்பர் புலியாக இருந்திருக்கிறார். ‘முதல்வன்’ படத்தில் நடிக்கும் தில்லு கூட இல்லாத பயந்தாங்கொள்ளியாக அடங்கிப் போயிருக்கிறார். திருமண மண்டபத்திற்காக சகல சக்திகளிடமும் சரணாகதி அடைந்திருக்கிறார்.

பண்ணையாரை எதிர்க்க எனக்கு திராணி கிடையாது. பணக்காரர்களை எதிர்கொள்ள அன்னா ஹசாரேவாக, அன்று எனக்கு ரஜினி கிடைத்தார்.

படிக்காதவனாக வாழும் ஓட்டை வீட்டுக்காரர்களுக்கு ராஜா வாழ்க்கை கிடைக்காது. எங்களையும் ரஜினி ஓவர்நைட்டில் பணக்காரன் ஆக்கினார்.

இன்றைய தேதியில் ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்று காந்தி முழங்கினால் கூட கேட்க ஆளில்லாத முன்னெடுக்க முடியாத முன்னாபாய் சமூகத்தின் சின்னமாக ரஜினி இருக்கிறார். எனவே, நானும் ரஜினிதான்.

Tamil India Today - Rajni Special Issue

 

2010 in review

The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Wow.

Crunchy numbers

Featured image

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 160,000 times in 2010. If it were an exhibit at The Louvre Museum, it would take 7 days for that many people to see it.

 

In 2010, there were 39 new posts, growing the total archive of this blog to 4509 posts. There were 50 pictures uploaded, taking up a total of 13mb. That’s about 4 pictures per month.

The busiest day of the year was June 16th with 961 views. The most popular post that day was ரஜினியின் எந்திரன்- தி ரோபோ .

Where did they come from?

The top referring sites in 2010 were digg.com, snapjudge.blogspot.com, iphone5g.net, who-will-win-fifa-worldcup-2010.com, and legal5ounds.com.

Some visitors came searching, mostly for எந்திரன் தி ரோபோ, பலான படங்கள், பொது அறிவு வினா விடை, யூ ட்யூப், and பலான.

Attractions in 2010

These are the posts and pages that got the most views in 2010.

1

ரஜினியின் எந்திரன்- தி ரோபோ July 2009
51 comments

2

யூ ட்யூப் x பலான படம் – தீவினையின் தோற்றுவாய் எது? April 2008
4 comments

3

செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள் August 2009
20 comments

4

வினாடி வினா: உலகமயமாக்கல் பொது அறிவு கேள்விகள் March 2009
8 comments

5

செத்தான் பிரபாகரன் September 2009
53 comments

எந்திரனும் நானும்

ரொம்ப நாள் கழித்து ‘மச்சீ’ என்றழைக்கும் உரிமையை கல்லூரி செஷன்ஸ் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்த தோழர் அழைத்திருந்தார்.

“எந்திரன் பார்த்தாச்சாடா?”

“இனிமேல் ‘பாபா’ குறித்த பயம் போயாச்சு. அப்படியே ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’னு பல்லவி பாடும் ஷாஜி பிள்ளையாண்டர்களுக்கும் புதுசா ஒண்ணு சேர்ந்துகிடுச்சு.”

எந்திரன் பிரச்சாரங்களை பட்டியல் போட்டால்:

  1. சன் டிவி அராஜகம்: மாறன் சகோதரர்களின் அசுர பலம்
  2. ஐஸ்வர்யா ராஜ் சிலாகிப்பு: எப்பொழுது, எங்கே முத்தம்
  3. சூப்பர் ஸ்டார் பன்ச்: ரோபோ நடிக்கும் அற்புதம்
  4. ஷங்கர் அரசியல்: பெண்ணியம் முதல் காறியுமிழும் புணர்ச்சி
  5. சுஜாதா சுட்டார்: அறிபுனை கதை அணிவகுப்பு ஜெராக்ஸ்
  6. ரெஹ்மான் நாதம்: டமார மொழி
  7. பெரும் பொருட்செலவு: சிறுவியாபாரிகளை நசுக்கும் பட்ஜெட்
  8. ரசிகரடிப்பொடி மனநிலை: பா.ம.க., பாஜக + தமிழக அரசியல்

இப்படியாக தமிழிலிருந்தே தமிழுக்கு காப்பியடிக்கும் விமர்சகச் சூழலில் எந்திரமயமான பயம் தொற்றிக் கொண்டது.

  1. சன் டிவி ரோபாட்: சீரியலுக்கு வசனம் முதல் சீரிய சிந்தனை வரை
  2. ஐஸ்வர்யா ராஜ் எந்திரம்: நாட்டுக் கட்டை
  3. சூப்பர் ஸ்டார் சக்கரம்: தன்னைத் தானே எறித்துக் கொள்ளும் சூரியன்
  4. ஷங்கர் பொறி: பணம் செய்யும் மெஷின்
  5. சுஜாதா சூத்திரம்: ஏற்கனவே தமிழ் எழுத்துலகத்தை ஆக்கிரமிக்கும் எழுத்து சுனாமி
  6. ரெஹ்மான் கருவி: இயந்திரமே இயந்திரத்தை இயற்றும் மீட்டும்
  7. பொருட்செலவு விறிசு: என் இனிய இயந்திராவிற்கு அடுத்து ஜீனோ
  8. ரசிகரடிப்பொடி உபகரணம்: இது மட்டும் ரோபோ அல்ல

எந்திரம் பத்திரம். கூடிய சீக்கிரமே எந்திரக் குழந்தையும் ‘இந்தப் பாடலைப் பாடுபவர் உங்கள் எந்திரனின் வாரிசு’ என்று வெள்ளித்திரையில் வலம் வரும்.

சற்றே தொடர்பிருந்திருக்கக் கூடிய குரல் பதிவு: Conquering A Fear Of Robots : NPR