Tag Archives: சன்

Power Star: Dr. Srinivasan

சன் தொலைக்காட்சி: பின்னணி, பிசினஸ், பாபா

செபாஸ்டியன் – பொங்கல் நிகழ்ச்சி: தேசிய நெடுஞ்சாலை

சபாஸ்டியன்: 17ஆம் அறிவு: ஆனந்தத் தொல்லை

காப்டன் டிவி: மன்னவன்

கேப்டன் டிவி: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

கலக்கல் சினிமா: லத்திகா

புதிய தலைமுறை: மலை போன்ற மனதைரியம்

விஜய் டிவி

Rajinikanth Interview on ‘Endhiran’ The Robot on Sun TV

முந்தைய ரஜினி பதிவு: Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை

On Director Shankar:

On Actress and Heroine Aishwarya Rai:

On his Spiritual Journeys to Kedarnath and Badrinath:

Why Rajni is so successful? What makes him tick?

Rajnikanth’s dance movements and Next Projects:

Booking Air Tickets for Travel within India (from Abroad)

”புனே… ரெண்டு டிக்கெட் கொடுங்க மேடம்”

செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்; தாதர் எக்ஸ்பிரஸ்; முன்னாடி இருபத்தி ஏழு பேர் நிற்கும் க்யூவில் காத்திருந்து, அதன் பின் உங்கள் வாய்ப்பு வரும்போது பதினேழு நிமிட காபி இடைவேளைக்கு ஒற்றைக்கால் மாற்றி தவமிருந்து, சரியான சில்லறை சரி பார்த்து, ஜேப்படி திருடர்களிடமிருந்து அந்த சில்லறை பணத்தைப் பாதுகாத்து, ரெனால்ட்ஸ் ஓசி வாங்கும் சாக்கில் நடுவில் நுழையும் கல்லுளிமங்கனை – விடாக்கண்டராக துரத்தி அடித்து, கடன் கொடுத்த பேனாவை திரும்பப் பிடுங்கி பத்திரபடுத்தி ஒளித்து வைத்து…

இந்த மாதிரி ஒத்த கவலை கூட இல்லாத இண்டெர்நெட் யுகம் இது.

கூகிள் திறந்தோமோ… India domestic Flights தேடினோமா… புக் செய்தோமா… என்று முடிய வேண்டிய இரண்டு நிமிட காரிய உலகம். கலிகாலம்.

முதலில் மேக் மை ட்ரிப்.காம் வந்தது.

விமானம் தேர்ந்தெடுத்து, ஊர்/பேர்/விலாசம்/பிறந்த நாள், நட்சத்திரம், லக்கினத்தில் மாந்தியை அங்காரங்கன் பார்ப்பதையும் நீச பங்க ராஜயோகத்தையும் சொல்லி முடித்தபிறகு, கிரெடிட் கார்ட் கேட்டார்கள்.

கேட்ட விவரம் எல்லாம் கொடுத்தாலும் செக்யூர் ஸ்வீட்.நெட் அனுப்பி வைத்தார்கள்.

பெயரைப் பார்த்தால் கொள்ளையர் கூட்டம் மாதிரி தெரிகிறதே என்று காபந்து கலந்த முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக பின்புல ஆராய்ச்சி செய்ய ஆசை. முகப்பு பக்கம் சென்றால் ’எங்கள் உள்ளம் வெள்ள மனசு’ என்று வெத்துப் பக்கமாக காட்டினார்கள்.

‘இது யாருடைய தளம்?’ என ஹூ – இஸ் இட்டுப் பார்த்தால்

Registrant:
cyota
yaron shohat

சர்வ நிச்சயமாகத் திருடர்கள் என்பதை ஓஜே சிம்ஸனிடம் கேசி அந்தோனி உரைப்பது போல், `கோ’வின் அம்ஜலைப் பற்றி ஜீவாவிடம் போஸ் வெங்கட் பிட்டு வைப்பது போல் குழப்பமாக உளறியது.

’உங்கள் நேரம் காலாவதியாகிவிட்டது’ என்று கொடுத்த கெடுவிற்குள் காரியத்தை முடிக்க துப்பில்லையே என நிராகரித்தும் விட்டது.

அடுத்து யாத்ரா.காம்

இணையம் வேஸ்ட். மக்களுடன் பேசுவோம். வேண்டியதை சொல்வோம். புரிந்து கொள்வார்கள். எனவே, 1-888-4MY-YATRA சுழற்றினேன்.

பன்னிரெண்டு நாழிகை இன்னிசைக்குப் பிறகு, தூக்கக் கலக்கத்தோடு மனிதக் குரல் கேட்டது.

“எனக்கு புனே போக ரெண்டு டிக்கெட் வேணும்”

“மத்தியானம் நாலு மணிக்கு போட்டுரவா?”

“இல்ல… கார்த்தால ஒரு ஸ்பைஸ் ஜெட் இருக்கே? அதில கிடைக்குமா?”

“மத்தியானம் நாலு மணிக்கு போட்டுரவா?”

“இப்பத்தான் உங்க சைட்டில பார்த்தேன். ஸ்பைஸ் ஜெட்டில் செஞ்சு தர முடியுமா?”

“முடியாது”

“ஏன்?”

“அவங்க இப்ப மூடிட்டாங்க. நாளைக்கு சண்டே. அதற்கப்புரமாத்தான் செய்யலாம்.”

“உங்க வெப்சைட்டில் செய்யப் பார்த்தேன்…”

டொக்.

இந்தியாவில் கஸ்டமர் சர்வீஸ் எப்படி என்பதை அங்காடித் தெருவும் சரவணா ஸ்டோர்சும் உணர்த்தி இருந்தாலும், டாட் காம் உலகில் 9 டு 5 உத்தியோகம் அமையப்பெற்ற பாக்கியவான்களை எண்ணி மகிழ்வதா அல்லது நானே பிசினஸ் அமைக்கும் திறவுகோலை ஆராய்ந்து பயனடைவதா என்னும் சிந்தனையை செல்பேசி சிணுங்கிக் கலைத்தது.

“ஹலோ?”

“நாங்க சிடி பேங்கில் இருந்து கூப்பிடறோம். நீங்க இந்தியாவில் இருக்கீங்களா?”

“இல்லை. ஆனா…”

“உங்க கார்டில் இருந்து சந்தேகாஸ்பமான விஷயங்கள் நடக்குது. எல்லாத்தையும் தடுத்துட்டோம்”

“ஒரு நிமிஷம்…”

“ஒண்ணும் கவலப்படாதீங்க”

“மேடம்…”

டொக்

திரும்ப சிட்டி வங்கியின் தவணை அட்டைப் பிரிவை அழைத்து ‘அது நாந்தான்; அந்தக் குயில் நான் தான்; அந்த விமானத்தில் பறக்க நினைத்தது நாங்கதான்’ என்று உணர்த்துவதற்குள் ஏழரை ஹாரி பாட்டர் புத்தகங்களை வாசித்தும், அதன் பின் நெட் ஃப்ளிஸ் ‘இன்ஸ்டண்ட் ப்ளே’வில் பார்த்தும் விடலாம் என்னும் அனுபவம் பெற்றிருந்ததால், அந்த நீண்ட நெடிய பயணத்தைத் துவக்கவே இல்லை.

என் பி ஆர் திருகினேன்.

முப்பத்தைந்து டாலருக்கு திருட்டு கடன் அட்டை விற்கப் படுவதை விவரித்தார்கள்.

எட்டு லட்சத்து நாற்பத்தி மூவாயிரத்து எழுநூற்றி இருபத்தி ஆறு பேரின் க்ரெடிட் கார்டுகளின் எண், ரகசியச் சொல், கடவு வார்த்தை இன்ன பிற களவாடப் பட்டதை செய்தியாக்கினார்கள்.

ஓட்டல்களில் பில் கட்ட அனுப்பும் வினாடித் துளிகளிலும், பெட்ரோம் பங்க் ரசீதுகளிலும், ஒட்டுக் கேட்டு, எட்டிப் பார்த்து திருடும் நுட்பங்களையும் அடுக்கினார்கள்.

திருடரை எல்லாம் சுதந்திரமாக விட்டுவிட்டு, விட்டு விடுதலையாகி சுதந்திரமாகத் திரிய விரும்புபவனின் வான் சிறகை முறிப்பதில் குறியாக இருந்தால் எகானமியும் நகராது; வயலாருக்கும் வருவாய் வராது.

விஜய தசமி வாழ்த்துகள் – ஆயுத பூஜை கொண்டாட்டம்

Some people have the mistaken notion that they create reality with their thinking and speaking.
David K. Reynolds
American psychologist and writer (b.1940)

கலைஞர் டிவி வெள்ளைக்காரன் காலத்தில் இருக்கிறான். விடுமுறை விழாக் கொண்டாட்டம் என்கிறான்.

கலைஞர் மாதிரியேதான் வெள்ளைக்காரியும் யோசிக்கிறாள்.

‘மனுசன் கண்டுபிடிச்சத மனுசனே தொழலாமா?’

கொலுவிற்கு வந்தால், நல்ல மதுவருந்தினோமா, சுவைத்து சாப்பிட்டோமா என்று சம்பிரதாயத்திற்குள் அடங்காமல், கேள்வி கேட்டாள்.

‘சோதனைக் குழாய் குழந்தை கண்டுபிடிப்பிற்கு நோபல் வழங்குவது போல் இந்த ஆயுத பூஜையே கொண்டாட்டம் இல்லியா? எவரோ ஒரே ஒருவருக்கு மட்டும், பல்லேடியம்னு பல்லை உடைக்கும் மொழியில் மில்லியன் கொடுப்பதை விட, கோடிக்கணக்கானோர் பாராட்டுகள் எத்தனை மில்லியன் தகும்?

Thanksgiving கும்பிடு சாப்பாடுடன் விடுமுறை வழக்கம். மனிதர்களின் அறிவியல் சாதனைகளை மகிழ்ந்து கும்பிடுவது சரஸ்வதி பூஜை.

ரம்சான் பசியின் வலியை பணம் படைத்தோருக்கு உணர்த்தும். உபகரணங்களின் உபயோகத்தை உணர்த்தும் விழா விஜயதசமி.

“இவ்வே பீலியணிந்து மாலை சூடிக்
கண்திரள் நோன் காழ்திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியனகரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ “

அதியமான் அரசை தொண்டைமான் கைப்பற்ற நினைக்கிறான். சண்டையைத் தடுக்க ஔவையார் விரும்புகிறார். தொண்டைமானின் ஆயுதக் கிடங்கை பார்த்து பிரமிப்புடன் சொல்கிறார்: “உன்னிடம் இருப்பதெல்லாம் புதிதாக பளபளப்புடன் மின்னுகிறது. அந்த அதியமானின் கொல்லறையில் எல்லாம் ரிப்பேர். சண்டைக்குப் போய் போய், எதிரிகளைக் கொன்று கொன்று, எல்லாம் முனை மழுங்கி இருக்கிறது.’

வாளும் அம்பும் கத்தியும் போருக்கு சென்று சக உயிர்களைக் குத்திக் கொல்லாமல் இருப்பதற்காக வணங்கினோம். இராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் புனிதப் போர் தொடுப்பவர்களுக்கு ஆயுத பூஜையை விளங்கிக் கொள்வது சாத்தியமற்றதுதான்.

சரஸ்வதி பூஜைக்காக ப்ளாக்பெரியை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்து சோஷியல் நெட்வொர்க்கை மறந்து, குடும்பத்தை ஆன் செய்வது மனுசத்தனம். காதில் செல்பேசி, கண்ணில் கலைஞர் டிவி, கருத்தில் கணினி என்றாக மாறிப்போவது மெஷின் தனம். நாங்க எல்க்ட்ரானிக்சை கும்பிடுவோம். ஆனால் இயந்திரமயமாக மாட்டோம்.’

சான்ஸ் கிடைத்த சொற்பொழிவை முடித்துக் கொண்டேன்.

‘திருமலா திருப்பதி டிவி போடுடா… சுப்ரபாதம் காண்பிப்பா! பெருமாளக் கண்ணார பார்க்கலாம்’ டிவியை கும்பிடும் பாட்டியைப் பார்த்துவிட்டு கேள்வி ஏதும் கேட்காமல் நகர்ந்தார் நண்பர்.

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா?

சன் டிவியில் செய்திகள். சர்வக்ஞர் சிலை திறப்பு விழா. மகள் படித்த புத்தகம் குறித்தும் குமான் குறித்தும் விசாரித்துக் கொண்டே அரைக் கண்ணில் தொலைக்காட்சியிலும் பார்வை. சட்டென்று ‘சூப்பர் ஸ்டார்’ மின்னி மறைகிறார்.

உணர்ச்சி வேகத்தில், ‘அது யாரு தெரியுதா?’ என்று மகளையும் பார்த்தாலே பரவசமாக்குபவரைக் கேட்கிறேன்.

அரை நம்பிக்கையுடன் ‘ரஜினியா?’

‘ஆமாண்டி… ஆமா!’

‘எங்கே?’

DVR இயங்கத் துவங்குகிறது. திரும்ப அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்கிறேன்:

Rajinikanth-Kalainjar-Sarvaknjar-Valluvar-Statue-Events-RM-Veerappan

‘இவர்தானே?’ சந்தேகாஸ்பதமாக சுட்டுகிறாள்.

ரஜினிகாந்த் என்று அவள் நினைத்தவர்: (மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன்)

Rajniganth-Madras-Sarvakjar-Statue-Pictures-highlights

சன் நியூசில் ஏனோ கமல் கலந்துகொண்டதைக் காட்டவில்லை.

பொன்விழா ஆண்டிலும் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க:

Kamal-Vairamuthu-Sarwakjar-Veerapandi-aarumugam-Ki-Veeramani-Chennai-Functions-Photos


சர்வக்ஞர்

1. தினமணி :: சர்வக்ஞர் கூறும் அறம் « தமிழ்ச்செல்வி

2. தமிழ்ஹிந்து :: த்ரிபதி சர்வக்ஞர் & வள்ளுவர் « ஜடாயு » வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: “”

3. புகைப்படங்கள்: என்வழி

ரஜினியின் எந்திரன்- தி ரோபோ

Sprite Ads

இந்தியா:

முன் கதவும் பின்னங்கதவும்: பாகிஸ்தான் – யே ஹை ஹிந்துஸ்தான் மேரி ஜான்: சீதி பாத்; நோ பக்வாஸ்

உலகம்:

ஜொள்ளுப்பாண்டி

சூப்பர்பௌல்

மகளைப் பார்த்துக் கொள்ளும் தந்தை

தமிழ்:

ஸ்ட்ரெயிட் ஃப்ரம் தி ஹார்ட்டு; நோ உடான்சு

இந்தி:

துள்ளிசைப் பாட்டுடன் மசாலா ஃபைட்

என்பிஏ: லெப்ரான் ஜேம்ஸ்

கழுத்தை முறுக்கி நரம்பு சவுண்ட் எஃபக்ட்

அமெரிக்கா:

மூன்று விளம்பரத் தொகுப்பு

பூச்சிகொல்லி

நச்சுப் பொருள் இருந்தா எனக்கென்னா போச்சு?

வர்ஜின் மொபைல்

இந்தக் கால ஜெனரேசன் என்னமா யோசிக்குது!

கேடி – டிவித்திரை விமர்சனம்

Ilianaஇந்தப் படத்தை சமீபத்தில் சன் டிவியில் போட்டிருந்தார்கள். பார்த்த பலரும், வேண்டிய அளவு பயமுறுத்தியிருந்ததால், மிகக் குறைந்த எதிர்பார்ப்புடனே பார்க்க ஆரம்பித்தேன்.

கேர்ஃப்ரீ வாங்குவதகு கூச்சப்படும் கல்லூரி மாணவி எண்பதுகளுக்கு முந்தைய எஃபெக்டை கொடுத்தது. மற்றபடிக்கு முதல் பாதி தேவலாம். இரண்டாம் பாதி போகப் போக நெளிய வைத்து, இறுதிக்காட்சியில் இது வரை பார்த்தவர்கள் படித்து படித்து சொல்லியிருந்த எச்சரிக்கைகளை உறுதியாக்கியது.

தமண்ணாவை மொத்தமாக வில்லியாகவே நடமாட விட்டிருக்கலாம். கடைசியில் தியாகி ஆக்குவது ஹீரோ மேல் பரிதாபம் வரவைக்காமல், இலியானாவையும் கோமாளியாக சித்தரித்தது.

‘ஆதிவாசி’ பாடலில் பூச்சிகளை எல்லாம் தொப்புளில் ஊறவிடுவது தமிழகத்தில் காவேரி போன்ற கற்பனை.

சராசரி மாணவனை சாதனை மாணவனாக்குவதை ‘காதலன்‘ சொல்லியது. ரவியின் முந்தைய படம் செவன் ஜி, பத்ரி போன்ற வெற்றி பெறக்கூடிய ஃபார்முலாதான். காதலுக்காக போட்டியில் கலந்து கொள்வது; வீழ்ந்து கொண்டிருப்பவன் உந்தப்படுவது என்று ரொம்ப சுவையான, நிச்சயம் வென்றிருக்கக் கூடிய சமாச்சாரங்கள்.

கூடவே இலியானா, தமண்ணா.

கதையே இல்லாமல் ‘எனக்கு 20; உனக்கு 18’ கொடுத்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இனிமேல் இந்த மாதிரி திரைக்கதைகளை சொதப்பாமல் சொல்லத் தெரிந்து கொண்டால், அப்பா ஏ ஏம் ரதனத்திற்கு ‘பீமா’ கடனை மீட்கலாம்.

தொடர்புடைய தமிழோவியம் விமர்சனம்: KD / கேடி